தோழர்களுக்கு வணக்கம்,
தாங்கள் மெத்த படித்த மேதை எனும் இவர்கள் எந்த வகையான கண்ணோட்டத்தில் உள்ளனர் என்று ஆராய்ந்தால் இவர்கள் கதம்பவாத கருத்துகளை மார்க்சியம் என்கின்றனர். மார்க்சியம் மட்டுமேதான் இங்குள்ள எல்லா பிரச்சினைக்கும் தீர்வாகும் எனும் நாங்கள் இவர்களின் குறைகளை களைய இவர்கள் மார்க்சிய தத்துவ அடிப்படைகளை கற்றுதேர்ந்தால் மட்டுமே இவர்களிடம் உள்ள மார்க்சியம் அல்லாத பிற்போக்கு கருத்துகள் விட்டொழியப்படும் இல்லையேல் தங்களுக்கேற்ற வகையில் ஆளும் வர்க்க கட்சிகள் பின் அணிசேர்ந்துக் கொண்டே இவர்கள் காலம் ஓட்ட வேண்டியதோடு உழைக்கும் மக்களுக்கு துரோகம் செய்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். ஆகையால் சற்று மார்க்சியம் கற்று விவாதித்தால் நன்றாக இருக்கும்.
நாம் ஒன்றுபடுவதற்கு நம்மிடையே ஒரு பொதுவான கண்ணோட்டம் அவசியமாகும். கண்ணோட்டத்தை, அடிப்படையில் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று விஞ்ஞானக் கண்ணோட்டம், மற்றொன்று விஞ்ஞானத்துக்கு எதிரான கண்ணோட்டமாகும். விஞ்ஞானக் கண்ணோட்டத்திலிருந்து பிரச்சனைகளை ஆய்வு செய்தால், பிரச்சனைகளை நம்மால் புரிந்துகொண்டு அதனை தீர்க்கவும் உறுதியாக முடியும். இதற்கு மாறாக விஞ்ஞானக் கண்ணோட்டத்தை மறுத்துவிட்டு விஞ்ஞான எதிர்ப்பு கண்ணோட்டத்தோடு பிரச்சனைகளைப் பார்த்தால் பிரச்சனைகளை நாம் புரிந்துகொள்ளவும் முடியாது அதனை தீர்க்கவும் முடியாது. அத்தகைய சமூக விஞ்ஞானக் கண்ணோட்டம்தான் மார்க்சியம் ஆகும். ஆகவே ஒன்றுபட விரும்பும் நாம் அனைவரும் மார்க்சிய சமூக விஞ்ஞான கண்ணோட்டத்தை ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையிலேயே சிந்தித்து கருத்துக்களை பரிமாறவும் விவாதிக்கவும் வேண்டும். இந்த அடிப்படையில் ஒத்த கருத்துள்ளவர்களால் மட்டுமே ஒன்றுபட முடியும். இதற்கு மாறாக வெவ்வேறு கண்ணோட்டம் கொண்டவர்களால் ஒன்றுபட முடியாது. அவ்வாறு ஒன்றுபட்டாலும் அந்த ஒற்றுமை நீடிக்காது. மார்க்சியக் கண்ணோட்டத்திலிருந்தே பிரச்சனைகளை அணுகுவதற்கான பயிற்சி பெறவேண்டும். இல்லை என்றால் நமக்கிடையே ஒற்றுமை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை, அப்படியே ஒற்றுமை ஏற்பட்டாலும் அது நீடிக்காது. ஆகவே நாம் ஒன்றுபடுவதற்கு மார்க்சிய கண்ணோட்டத்தை வளர்த்துக்கொள்வதில் நாம் ஒவ்வொருவரும் உறுதியாக இருக்க வேண்டும்.
சரி புரட்சி பற்றி மார்க்சிய வழிமுறை
முதலில் மார்க்சிய
ஆசான்கள் புரட்சி பற்றி என்ன கூறியுள்ளனர் பார்ப்போம்:-
புரட்சியைப்
பற்றிய மார்க்சிய தத்துவ அடிப்படை பற்றிய பொதுவான கருத்து அடிப்படையே வரலாற்று பொருள்முதல் வாதமாகும்.
பொருளாயத
வாழ்க்கையின் உற்பத்தியும் மறுஉற்பத்தியுமே சமூக வாழ்க்கை மற்றும் அதன் வரலாற்று
நிகழ்வு போக்கின் அடிப்படை என்பதை மார்க்சிய ஆசான்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.
சமூக
பொருளாதார அமைப்புகளின் வளர்ச்சி மற்றும் மாற்றத்தின் இயற்கையான நிகழ்ச்சிக்கு
போக்குதான் வரலாறு. உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்கும் இடையில் ஒரு
குறிப்பிட்ட சமுதாயத்தின் உற்பத்தி முறைக்கும் அதன் வடிவங்களுக்கும் இடையே உள்ள
ஒரு நிலையான முரண்பாடு வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் அந்த சமூகத்தில்
வாழ்க்கையில் தீவிரமான மாற்றங்களுக்கு, சமூகப் புரட்சிக்கு இட்டுச்
செல்கிறது.
இந்த
முரண்பாடு புரட்சியின் பொருளாயத அடிப்படையாக அமைகிறது. பழைய அமைப்புக்குள் புதிய
அமைப்பின் முன் நிபந்தனைகள்
படிப்படியாக முதிற்ச்சி அடைகின்ற நிகழ்ச்சிக்கு புரட்சி பூர்த்தி
செய்கிறது. புதிய உற்பத்தி சக்திகளுக்கும் பழைய உற்பத்தி
சக்திகளுக்கும் இடையில் உள்ள முரண்பாடு தீர்க்கப்படுகிறது. காலாவதியான
உற்பத்தி உறவுகளையும் அதனை கட்டிக்காக்கும் அரசியல் மேற்கட்டுமானத்தையும் நொறுக்கி
உற்பத்தி உறவுகளின் கூடுதல் வளர்ச்சிக்கு பங்காற்றுகிறது.
வரலாற்று
நிகழ்வு போக்கின் புறநிலையான தன்மையை
வலியுறுத்துகின்ற பொழுது மார்க்சியம் வளர்ச்சி அடைந்த புரட்சிகரத் தத்துவத்தின் மகத்தான பாத்திரத்தை
வலியுறுத்தி வர்க்கங்கள், கட்சிகள்,
கோஷ்டிகள் மற்றும் தனி நபர்களின் உணர்வுப் பூர்வமான நடவடிக்கைகளும் மாபெரும் முக்கியத்துவம் அளிக்கிறது.
வரலாற்றில் மக்களுடைய பாத்திரத்தை பற்றிய மார்க்சியத்தின் அடிப்படை கோட்பாடுகள் மிக முக்கியமானவை பெருந்
திரளான மக்கள், உழைக்கும் மக்கள் தொழிலாளர்களும்
விவசாயிகளும் சமூகத்தில் மிக முக்கியமான உற்பத்தி சக்தியாக இருக்கின்றனர். அவர்கள் தமது உழைப்பின் மூலம் பொருளாதார செல்வங்கள் அனைத்தையும் படைக்கிறார்கள், அவர்களே வரலாற்றை உண்மையாகப் படைப்பவர்கள். உற்பத்தி
கருவிகளைனைத்துலுமே ஆகமிகப் பெரிதான உற்பத்தி சக்தி புரட்சிகரமான தொழிலாளி வர்க்கமே ஆகும்.( மெய்யறிவின்
வறுமை நூலிலிருந்து 1885 ஜெர்மன் பதிப்புக்கு எழுதிய முன்னுரை).
பொருளாயதா உற்பத்தி விதிகள் மற்றும் உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகளின் இயங்கியலை
ஆராய்ந்த மார்க்சும் எங்கெல்சும் வர்க்கங்களாக பிரிந்திருக்கும் எல்லா சமூகங்களின் வளர்ச்சியின் பிறப்பிடம் இயங்கு சக்தி வர்க்கப் போராட்டமே என்பதை விளக்கினர். சமூகத்தின் வாழ்க்கையில் ஏற்படுகின்ற ஒவ்வொரு அரசியல், சமூக மற்றும் இதர மாற்றங்களுக்கு பின்னாலும் வர்க்கங்களுக்கு இடையிலான போராட்டம்,
சுரண்டப்படுபவர்களுக்கும் சுரண்டுவர்களுக்குக்கும் இடையில்
நடைபெறுகின்ற போராட்டம் முக்கியமான காரணியாக இருப்பதை
பார்க்கும்படி மார்க்சியம் நமக்கு போதிக்கிறது. பகைநிலையான சமூக அமைப்புகளில் இந்த போராட்டத்தின்
முடிவு நிலைகளாக சமூகப் புரட்சிகள் இருக்கின்றன. ஒடுக்குவோம் ஒடுக்கப்படுவோரும்
ஒருவருக்கொருவர் தீராப்பகை கொண்டோராய்
ஒரு நேரம் மறைமுகமாகவும் ஒரு நேரம்
பகிரங்கமாகவும் இடைவிடாப் போராட்டம்
நடத்தி வந்தனர். இந்த போராட்டம் சமுதாயம் முழுவதும்
புரட்சிகர புத்தைமைப்பிலோ அல்லது போராடும் வர்க்கங்களின் பொதுஅழிலோதான் எப்போதும் முடிவுற்றதாயிற்று (மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் 1 பக்கம் 190-191)
சமூகப்
புரட்சிகள் சமூகத்தில் உயர்ந்த வளர்ச்சி கட்டத்துக்கு ஒரு புதிய சமூக பொருளாதார
அமைப்புக்கு வளர்த்து செல்கின்றேன் என்ற உண்மையில் மட்டும் அவற்றின் மாபெரும்
வரலாற்று முக்கியத்துவம் அடங்கியிருக்கவில்லை;
அவை சமூக அரசியல் முன்னேற்றத்தை வலிமையானமுறையில்
விரைவுப்படுத்துகின்றன என்ற உண்மையில் அவற்றின் முக்கியத்துவம் அடங்கியிருக்கிறது
என்பதை மார்க்சும் எங்கெல்சும் எடுத்து காட்டினர். பிரான்சில்
வர்க்க போராட்டம் என்ற நூலில் புரட்சிகளை வரலாற்றின்
இன்ஜின்கள் என்று வர்ணித்தனர். வளர்ச்சி வேகத்தை மிகவும் அதிகமான அளவுக்கு
விரைவுப்படுத்துகின்றன, மக்களின் வன்மையான படைப்பு சக்திகளை
கட்டவிழ்த்து விடுகின்ரன என்றனர்.
சாதாரண நிலைமையில் பல பத்தாண்டுகள் அல்லது நூறு ஆண்டுகள் கூட அவசியமாக இருக்கின்ற
வேலைகளை புரட்சிகளை மூலம் சில மாதங்களில் அல்லது சில வருடங்களில் நிறைவேறுவது
சாத்தியம் அதை ஒடுக்கப்படுபவர்கள், சுரண்டப்படுபவர்களின் விழாவாகும். பெருந்திரளான
மக்கள் புரட்சிகளின் போது சமூக ஒடுக்குமுறைகளை படைப்பதில் அதிகமான அளவுக்கு சுறுசுறுப்பாக பாடுப்படுவதை போல் வேறு
எப்போது ஈடுபடுவதில்லை.
பாட்டாளி
வர்க்க புரட்சியே முதலாளித்துவ சமூகத்தை மாற்றி அமைப்பதற்கு சாத்தியமான ஒரே
வழியாகும்.
முந்தைய
புரட்சி எதுவுமே மனிதனை மனிதன் சுரண்டுவதை ஒழிக்கவில்லை அதன் வடிவங்கள் மட்டுமே மாறின. பாட்டாளி வர்க்க புரட்சி எல்லா விதமான சுரண்டலையும் ஒழிக்கிறது, உறபத்திக் கருவிகளின்
பொதுவுடமையை கொண்டு வருகிறது- மற்ற
புரட்சிகளுக்கும் இதற்கும் உள்ள
அடிப்படையான வேறுபாடு இதுவே.
மூலதானத்தின்
ஏகபோகம் அதனோடு சேர்ந்து அதன் கீழ் பிறந்து மலர்ந்துள்ள உற்பத்தி செய்முறைக்கு
பூட்டியதோர் விலங்காகிறது. உற்பத்தி
சாதனங்கள் மையப்படுத்துவதும் உழைப்பு சமுதாய ரீதியாகவும்
அவற்றின் முதலாளி ஒட்டுக்கு பொருந்தி வராத ஒரு கட்டத்தில் கடைசியில் எட்டுகின்றன. இவ்வாறு ஓடு உடை தெரியப்படுகிறது
முதலாளித்துவத் தனிசொத்தின் சாவு மணி ஒலிக்கிறது. பரிமுதல்காரர்கள் பரிமுதல் செய்யப்படுகின்றனர்.
அடிப்படையான
உற்பத்தி சாதனங்களின் பொதுவுடமை நிறுவும் போது சோசலிச புரட்சி மொத்த சமுதாயத்தையும் மாற்றியமைக்கிறது என்று மார்க்ஸ் வலியுறுத்துகிறார். புறநிலையான பொருளாதார
விதிகளின் தன்னில்பான குருட்டுத்தனமான நடவடிக்கை பதிலாக அவை
உணர்வு பூர்வமாகப்
பயன்படுத்தப்படுகின்றன; சமுதாயத்தின் ஒவ்வொரு உறுப்பினர்
மற்றும் சமூகம் முழுவதும் நன்மைக்காகவும் சமூக உற்பத்தி திட்டமிட்ட முறையில்
ஒழுங்குபடுத்தப்படுகிறது.
முதலாளித்துவ வீழ்ச்சி தவிர்க்க முடியாதது என்று மார்க்சிய
விஞ்ஞானம் ரசிய சோசலிசப் புரட்சி மூலம் நிரூபித்துக்காட்டிவிட்டது.
முதலாளிதுவதிற்கு எதிராக தொழிலாளி வர்க்கத்தின்
போராட்டம் அதன் சொந்த விடுதலை மட்டும் நோக்கமாக கொண்டிருக்கவில்லை; அதன் நலன்கள் உழைக்கும் மக்களின் மிக விரிவான பகுதியை நலமுடன் பொருந்தியிருக்கின்றன.
முதலாளித்துவத்தின் கீழ் விவசாய வர்க்கத்தின் நகரக் குட்டிமுதலாலித்துவ வர்க்கத்துக்கும் நலிவையும்
அழிவையும் தவிர வேறு எந்த வழியும் இல்லை; மூலதனத்தின் ஆட்சியைத் தூக்கியெறிகின்ற போராட்டத்தில் பாட்டாளி வர்க்கத்துடன் அணிவகுப்பதே
அவர்களுக்கு உரிய ஒரே வழியாக இருக்கும்.
பாட்டாளி
வர்க்கம் சமூக மற்றும் தேசிய அடிமைதனத்தின் எல்லா வடிவங்களையும் நிரந்தரமாக ஒழிக்காமல் அதன் மூலம் சமூக
முழுவதையும் விடுவிக்காமல் தன்னை விடுவித்துக் கொள்ள முடியாது. அதனால் தான் தனக்கு சொந்த உடைமை இல்லாத இந்த வர்க்கம் முதலாளித்துவ சமூகத்தில் கேந்திரமான நகரங்களில்
குவிக்கப்பட்டு இருக்கும் இந்த வர்க்கம், ஒன்று சேர்ந்து, அமைப்பு ரீதியாகபட்டு அடிப்படையான நலன்களை நன்கறிந்த இந்த வர்க்கம் முழு சமுதாயம் விடுதலைக்கும் சோசலிச மற்றும் கம்யூனிசதிற்கு நடைபெறுகின்ற போராட்டத்தில்
எல்லா உழைக்கும் மக்களின் முன்னணி தலைவனாகவும் இருக்கிறது
இப்பொழுது பன்முறை நடைமுறையில் நிரூபிக்கப்பட்டு இருக்கிறது வரலாற்று
எடுத்துக்காட்டுகிறது.
அவர்களுடைய பணியை அதாவது மூலதனத்துக்கு எதிரான புரட்சிகர போராட்டத்தில் முதலில் கிளர்ந்தெழ வேண்டும். இந்த போராட்டத்தில் அனைத்து உழைக்கின்ற மக்களையும் சுரண்டுப்படுகின்ற மக்களையும் தன்னை சுற்றி திரட்ட வேண்டும் என்பதை சுட்டிக்காட்டியது மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகியோரின் மாபெரும் வரலாற்று சிறப்பாக என்று லெனின் கூறுகிறார்.
அடுத்து அரசு பற்றிய தெளிவு வேண்டும்.
அரசின்றி மக்கள் தங்களது பிரச்சனைகளை தீர்க்க முடியாது என்பது நடைமுறை உண்மையாகும். இதனை யாராலும் மறுக்க முடியாது. இந்திய பெருமுதலாளிகளிடம் மூலதனம் இருக்கலாம் ஆனால் அவர்கள் மேலும் மேலும் பணக்காரர்கள் ஆவது இந்த அரசின் துணையோடுதான் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. இந்த அரசும், அரசாங்கமும் பெருமுதலாளிகளுக்கு சேவை செய்வது போல பெரும்பான்மையான மக்களுக்கு சேவை செய்வதில்லை, மாறாக மக்களுக்கு எதிராகவே நடந்துகொள்வதை நாம் பார்க்கிறோம். ஆகவே பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட மக்களை பிரச்சனைகளிலிருந்து விடுவிப்பதற்கு நமக்குத் தேவை புதிய வகையான அரசாகும். அத்தகைய அரசு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து தேசியப் பிரச்சனையை முதன்மைப் படுத்துபவர்களும், சாதிப் பிரச்சனையை முதன்மைப் படுத்துபவர்களும் பிற பிரச்சனைகளை முதன்மை படுத்துபவர்களும் அவர்களது பிரச்சனையைதீர்ப்பதற்கு எவ்வகையான அரசு வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்து முன்வைத்து விவாதங்கள் நடத்தி ஒரு குறிப்பிட்ட அரசுமுறையை உருவாக்குவதற்கான ஒத்த கருத்தை வந்தடையும் நோக்கம் கொண்டிருப்பவர்களிடத்தில் ஒற்றுமை ஏற்படுவது சாத்தியமாகும். அதாவது நாம் ஒன்றுபடுவதற்கு நம்மிடையே ஒரு பொதுவான லட்சியம் அவசியமாகும். இதற்கு மாறாக வெவ்வேறு லட்சியம் கொண்டவர்களால் ஒன்றுபட்டு ஒரு ஜனநாயக மத்தியத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சியை கட்ட முடியாது. ஆகவே அரசு பற்றிய பிரச்சனையில் தீர்வு கண்டு ஒரு ஒத்த கருத்தின் அடிப்படையில் ஒன்றுசேர்வோம். அரசு பற்றிய பிரச்சனையை படிப்பது, விவாதிப்பது, புரிந்துகொள்வது, தற்போதைய அரசின் தன்மை என்ன? என்பதை தகவல்களின் அடிப்படையில் ஆய்வு செய்து புரிந்துகொள்வது, தற்போதைய அரசு எந்தப் பிரிவினருக்காக சேவை செய்கிறது, எந்தப் பிரிவினருக்கு எதிராக செயல்படுகிறது என்ற விவரங்களை சேகரித்து மக்களிடம் இந்த அரசையும், அரசாங்கத்தையும் அம்பலப்படுத்துவது, மக்களின் பிரச்சனைகளை நேர்காணல் மூலம் ஆய்வு செய்து அவர்களது பிரச்சனைகளை தீர்ப்பதற்கான அரசு எப்படி இருக்க வேண்டும், அதன் நிறுவன வடிவங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதையெல்லாம் ஆய்வு செய்து ஒரு புதிய வகையான அரசமைப்பு குறித்து ஒத்த கருத்தை வந்தடைவதை லட்சியமாக கொள்ள வேண்டும். அத்தகைய லட்சியவாதிகளால் நிச்சயமாக ஒன்றுபட முடியும்.
முதற்கண் நாம் நமக்கான இலக்கை அடைய ஒருங்கிணைப்பு எந்த கண்ணோட்த்தின் அடிப்படையில் இருக்க வேண்டும்? அதனை தீர்மானியுங்கள்.
தோழர்களே தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட எல்லை விட்டும் மேலே நகர முடியாமைக்கு காரணம் நாம் நமது எவ்வகையான கண்ணோட்டத்தில் இருந்து செயல்படுவது என்பதில் உள்ள குழப்பம் தான்.
உலகில் இதுவரை பல்வேறு விதமான தத்துவங்கள் கண்ணோட்டங்கள் உள்ளன. மார்க்சியத்தை தவிர மற்ற எல்லா தத்துவங்களும் நாம் வாழும் சமூக அமைப்புகுள்ளேயே வாழ வழி தேட சொல்லுகிறது!
மார்க்சியம் மட்டும்தான் இந்த ஏற்றத்தாழ்வான வர்க்க சமூகத்தின் அடிப்படைகளை தெள்ளத் தெளிவாக கூறியதோடு அல்லாமல் இந்த ஒவ்வொரு பிரச்சனைக்கும் காரணமான சமூக அமைப்பை விளக்குவதோடு மட்டுமல்லாமல் இந்தப் பிரச்சினையின் அடிப்படையான சமூக அமைப்பை தகர்த்து ஏற்றத்தாழ்வற்ற சுரண்டல் முறையற்ற ஒரு சமூகத்தை படைக்க சொல்லுகிறது. அவை இங்குள்ள வலிமை படைத்த ஏகாதிபத்தியங்கள் மற்றும் இந்நாட்டு ஆளும் வர்க்கத்திற்கு எதிரான போராட்டத்தை கோருகிறது. இவை சாதாரணமானவை அல்ல. அதற்கான பணி நீண்டநெடிய உள்ள அரசுக்கு எதிரான போராட்டம். அதனை பற்றி தெரியாதவர் உண்டோ?
புரட்சியில் ஈடுபடுவது என்பது லெனின் கூறியது போல் கரடு முரடான பாதையில் செங்குத்தான பாறையில் ஏறும் செயல்படும் திறன் கொண்டவர்களால் மட்டுமே முடியும் என்கிறார். அதேபோல் லெனின் தன் நாட்டில் இருந்த பல்வேறு விதமான கருத்தாக்கங்களை தகர்த்தெறிந்து ஒரு புரட்சிகர கட்சியை கட்டி அமைத்து புரட்சியை சாதித்துக் காட்டினார். அவரின் வழியை பின்பற்றி பல நாடுகளில் புரட்சியும் சாத்தியப்பட்டது.
புரட்சிக்குப் பின்னர் உழைக்காமல் அடுத்தவர் உழைப்பிலே வாழ்ந்திருந்து சொகுசான ஒரு கூட்டம் அதிகாரத்திலிருந்து துரத்தப்பட்டது.அதன் பிறகான சில பத்தாண்டுகளில் ரசிய மற்றும் சீன படிப்பினைகள் அவர்களுடைய வரலாற்று நூல்களில் நாம் காண்கிறோம்.
ரசியாவில் ஆரம்பத்தில் பல்வேறு உள்நாட்டு கலகங்களும் வெளிநாட்டுப் போர்கள் மூலமும் புரட்சிக்குப் பின்னர் ஏகாதிபத்தியங்கள் கூட்டு சேர்ந்து அழிக்க முயற்சித்தது அந்தக் கொடூரமான போர்கள் மக்கள் மத்தியில் அவர்கள் அம்பலப்பட்டு நிற்க செய்தது. இதனை புரிந்துக் கொண்ட ஏகாதிபத்தியம் கத்தியை தீட்டுவதை விட்டுவிட்டு புத்தியை தீட்டுவது என்பார்களே அந்தப் பணியை ஏகாதிபத்தியம் மிகத் தெளிவாக சிறப்பாக செய்து முடித்தது.
அவை தான் மார்க்சியத்தின் பெயரில் மார்க்சியம் அல்லாத போக்குகள் மார்க்சிய தத்துவத்தை குழப்பி பல்வேறு முதலாளித்துவ கருத்துக்களை மார்சியமாக கடை பரப்பியது. ஏகாதிபத்தியம் தங்களின் நீண்ட வாழ்விற்காக அதற்கான பணி தொடர்ந்து செய்து கொண்டுள்ளது.
இவைதான் நம்பிக்கைவாதம் அல்லது மாறாநிலைவாதம் இதனை ஆளும் வர்க்கம் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள பல வேலைகளை செய்கிறது. அதில் ஒன்று எதிர்புரட்சிகர நிலை எடுக்கும் ஆளும் வர்க்க சேவை புரிவோர் செய்யும் பணி! புரட்சியை மறுத்து சீர்திருத்தவாதத்தை ஏற்பது மார்க்சியத்தை மறுத்து சீர்திருத்தவாதிகள் பின் அணி சேர்வது.
நாம் வாழும் சமூகத்தில் பல்வேறு விதமான கண்ணோட்டங்களும் நடைமுறையும் உள்ளன. அவை தான் மக்கள் மத்தியில் பேசு பொருளாகவும் வழிகாட்டியாகவும் உள்ளது. இவையெல்லாம் சமூகத்தின் ஆளுவோரின் கருத்துகளே கண்ணோட்டங்களே. எப்படி மத அடிபடைகளுக்கு புராண இதிகாசங்கள் துணை நிற்கின்றதோ அதுபோல் மார்க்சியவாதிகளுக்கு மார்க்சிய ஆசான்களின் வழிகாட்டுதலை ஆதாரங்களை அடிப்படையாக கொண்டு செயல்படுவதே மார்க்சிய நடைமுறை கண்ணோட்டம். இதனைத் தான் மார்க்சியம் மிகத் தெளிவாக தனக்கான கண்ணோட்டத்தையும் அதற்கான நடைமுறையும் வெளிச்சமிட்டு காட்டியுள்ளது. அதனை நடைமுறைப்படுத்தியது ரஷ்யாவும் சீனாவும் இன்னும் சில சோசலிச நாடுகளும் அதன் புரட்சியின் வழியில். இதனைத் தான் லெனின் தன் நாட்டின் புரட்சியின் நான்காம் ஆண்டு நினைவு நிகழ்ச்சியில் தெளிவுபடுத்தி இருப்பார்.
இதற்கு முன் நடந்தேறியே பல்வேறு நாட்டில் நடந்தேறிய சமூக மாற்றங்கள் புரட்சிகள் பற்றி தெளிவுபடுத்தும் அவர் பழைய சமூகத்தின் பிற்போக்கு சமூக மிச்சங்களை அவர்கள் அழித்தொழிக்கவில்லை அதனை தங்களின் சுரண்டலுக்காக கட்டிக் காக்கும் நிலையை காணலாம். இதனை முழுமையாக துடைத்தெறிந்ததாக ரஷ்ய புரட்சியை பற்றி லெனின் விளக்கி கூறுவார்.
ஆகவே சமூக மாற்றம் விரும்பும் ஒவ்வொருவரும் இங்குள்ள பிற்போக்கு முந்தைய சமூக முடைநாற்றம் பிடித்த குப்பைகளை இல்லாது ஒழிக்க மார்க்சிய லெனினிய தத்துவத்தின் அடிப்படையில் நடைபெறும் புரட்சியால் மட்டுமே சாத்தியம் என்பது தான் என்று நடைமுறையில் நிறுவியதை ஏற்பவர்கள்தான் மார்க்சிய லெனினிய தத்துவவாதிகளின் கண்ணோட்டம். ஆக அந்தக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் நடைமுறை காணுவது தான் உண்மையாலுமே புரட்சி நேசிப்போரின் பணியாக இருக்கும். நமது கண்ணோட்டம் மார்க்சிய தத்துவ அடிப்படையில் இருந்தால் மட்டுமே விவாதம் சரியான பாதையில் செல்லும். மார்க்சிய லெனினிய தத்துவ அடிப்படையில் செய்யாததன் விளைவு தான் இங்கு நம் இடையே காணப்படும் பல்வேறு விதமான போக்குகள் உள்ளன. இன்னும் நம் சமூகத்தை புரிந்துக் கொள்வதில் பல்வேறு விதமான குழப்பங்கள் நீடிக்கிறது. இதன் தொகுப்பாக காணுமிடத்து. மார்க்சிய லெனினிய தத்துவத்தை புரிந்துக் கொள்வதில் எங்கோ பிரச்சினை என்று நினைத்து அடிப்படையில் மார்க்க்சிய லெனினிய தத்துவத்தை கற்றுதேர்வது அவசியம் என்பதே எங்களின் கருத்து தோழர்களே.
கம்யூனிஸ்ட்டுகள் கம்யூனிசத்தை கற்றறிய வேண்டும் அதற்கு மார்க்சிய ஆசான்களிடமிருந்து கற்று தேற நிறையவே உள்ளன, அவற்றை கற்றுதேறுவதோடு நடைமுறைபடுத்துவதற்கான நமக்கான அறிவை அவர்களிடமிருந்தே நாம் பெற்றால் மட்டுமே சிறப்பாக இருக்கும்.
அவைதான் சரியானவையாகவும் இருக்கும். அவையின்றி இரவல் வாங்கும் முதலாளித்துவ தத்துவங்கள் உழைக்கும் மக்களை ஏய்க்க மட்டும்தான் உதவும் மக்களின் துன்பதுயரங்களுக்கு அவர்கள் மீது இழைக்கும் கொடுமைகளுக்கு விடுதலை தராது.
தற்போது உலகில் நடைபெறும் யுத்தங்கள் அனைத்தும் ஏகாதிபத்தியவாதிகளின் பின்புலத்தில் இருந்தே நடக்கின்றது. இது பற்றி லெனின் 100 ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கியுள்ளார். உலகம் முழுவதும் உள்ள மக்களை நிதி மூலதனம் ஆதிக்கம் செய்கிறது. இதுதான் உலகில் நடந்து கொண்டிருக்கும் மிக மிக முக்கியமான பிரச்சினையாகும் என்றார் லெனின். இதுவரை வரலாற்றில் இரண்டு ஏகாதிபத்திய உலக யுத்தங்கள் நடந்து விட்டது. ஆனாலும், யுத்தங்கள் உலகில் இன்னும் முடிவுக்கு வரவில்லை. தற்பொழுதும் காசாவின் மீது யூத இனவெறியர்கள் நடத்தும் யுத்தம், அதற்குப் பின்புலமாக அமெரிக்க ஏகாதிபத்தியம் இருக்கிறது. அதைப்போலவே இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடந்த யுத்தம் இதற்குப் பின்புலமும் அமெரிக்க ஏகாதிபத்தியமே இருக்கிறது. ஏகாதிபத்தியங்கள் தனது நிதிமூலதன செல்வாக்கின் காரணமாக உலகம் முழுவதும் இருக்கின்ற பின்தங்கிய நாடுகளையும் பின்தங்கிய தேசங்களையும் சுரண்டிக் கொண்டிருக்கிறது. அத்தகைய சுரண்டலுக்கு பின்தங்கிய நாட்டின் ஆட்சியாளர்கள் அடிபணிந்து அனுமதித்து விட்டால் அங்கு யுத்தம் இல்லை. அதற்கு மாறாக பின்தங்கிய தேசங்களின் ஆட்சியாளர்கள் நிதி மூலதனத்தின் ஆதிக்கத்தை எதிர்த்தால் அவர்கள் ஒரு போரை நடத்தி அந்த நாட்டையே அடிமைப்படுத்துவார்கள், உதாரணமாக சதாம்உசேனது ஈராக். ஆனால் முன்பு போல அடிமைப்படுத்திய நாட்டை நேரடியாக இவர்கள் ஆள்வதில்லை. மாறாக இவர்கள் ஒரு பொம்மையை உருவாக்கி அந்த பொம்மையின் மூலமாகவே ஆட்சி செய்கிறார்கள். தற்போது உலகில் நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்துவதும் ஒவ்வொரு தேசங்களின் மீதும் ஆதிக்க செலுத்துவதும் சாதாரணமான ஒரு விஷயமாக நடந்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் முன்னேறிய நாடுகள் அல்லது முன்னேறிய அரசுகள் பின்தங்கிய அல்லது வளர்ந்து வரும் நாடுகளை கொள்ளை அடிப்பது சூறையாடுவது போன்றவற்றை மிகவும் வெளிப்படையாகவே செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஆக நாம் பேசும் இந்திய புரட்சியா தமிழக புரட்சியா என்பது மார்க்சிய அடிப்படைகளை, புரட்சியின் விதிகளை புரிந்துக் கொள்ளாத வாதம் எனலாம். புரட்சியை பற்றி மார்க்சிய ஆசான்கள் மிகத்தெளிவாக விளக்கியுள்ளனர். அதனை உள்வாங்கிக் கொண்டால் இதற்கான விடை காணுவது எளிது.
பாட்டாளி வர்க்க புரட்சியே முதலாளித்துவ சமூகத்தை மாற்றி அமைப்பதற்கு சாத்தியமான ஒரே வழியாகும். முந்தைய புரட்சி எதுவுமே மனிதனை மனிதன் சுரண்டுவதை ஒழிக்கவில்லை அதன் வடிவங்கள் மட்டுமே மாறின. பாட்டாளி வர்க்க புரட்சி எல்லா விதமான சுரண்டலையும் ஒழிக்கிறது, உறபத்திக் கருவிகளின் பொதுவுடமையை கொண்டு வருகிறது- மற்ற புரட்சிகளுக்கும் இதற்கும் உள்ள அடிப்படையான வேறுபாடு இதுவே.
மூலதனத்தின் ஏகபோகம் அதனோடு சேர்ந்து அதன் கீழ் பிறந்து மலர்ந்துள்ள உற்பத்தி செய்முறைக்கு பூட்டியதோர் விலங்காகிறது. உற்பத்தி சாதனங்கள் மையப்படுத்துவதும் உழைப்பு சமுதாய ரீதியாகவும் அவற்றின் முதலாளி ஒட்டுக்கு பொருந்தி வராத ஒரு கட்டத்தில் கடைசியில் எட்டுகின்றன. இவ்வாறு ஓடு உடை தெரியப்படுகிறது முதலாளித்துவத் தனிசொத்தின் சாவு மணி ஒலிக்கிறது. பரிமுதல்காரர்கள் பரிமுதல் செய்யப்படுகின்றனர்.(கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை).
அடிப்படையான உற்பத்தி சாதனங்களின் பொதுவுடமை நிறுவும் போது சோசலிச புரட்சி மொத்த சமுதாயத்தையும் மாற்றியமைக்கிறது என்று மார்க்ஸ் வலியுறுத்துகிறார். புறநிலையான பொருளாதார விதிகளின் தன்னில்பான குருட்டுத்தனமான நடவடிக்கை பதிலாக அவை உணர்வு பூர்வமாகப் பயன்படுத்தப்படுகின்றன; சமுதாயத்தின் ஒவ்வொரு உறுப்பினர் மற்றும் சமூகம் முழுவதும் நன்மைக்காகவும் சமூக உற்பத்தி திட்டமிட்ட முறையில் ஒழுங்குபடுத்தப்படுகிறது.
உழைப்புக்கும் மூலதனத்துக்கும் இடையில் நடைபெறுகின்ற போராட்டத்தின் உலகு தழுவிய பரிணாமம் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் சர்வதேச தன்மையை நிர்ணக்கிறது. பாட்டாளி வர்க்கத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான நிபந்தனைகளில் ஒன்று அதன் புரட்சிகர நடவடிக்கைகள் சர்வதேசமயமாக்கப்பட வேண்டும் என்பதாக மார்க்சும் எங்கெல்சும் சர்வதேச தொழிலாளர் சங்கத்தினை நிறுவிய பொழுது, “வெவ்வேறு நாடுகளில் தொழிலாளி வர்க்கதின் விடுதலைக்காக இப்பொழுது நடைபெறுகின்ற தொடர்பில்லாத முயற்சிகளை ஒன்று கூட்டி பொதுமைப்படுத்துவது”, பாட்டாளி வர்க்க சர்வதேசிய வாதக் கோட்பாடுகளை முரண் இல்லாமல் பின்பற்றுவது அச்சங்கத்தின் நோக்கம் என்றனர். தேசியக் குறுகிய மனம் இந்த கோட்பாடுகளை புறக்கணித்தல் அல்லது மீறுதல் சர்வதேச தொழிலாளர் இயக்கத்தில் மட்டுமின்றி எல்லாவற்றுக்கும் மேலாக அதன் தனித்தனியான தேசிய பிரிவுகளுக்கு ஊறு விளைவிக்கும். இவ்வளவு நாடுகளையும் சேர்ந்த தொழிலாளர்களுக்கு இடையில் இருக்க வேண்டிய விடுதலை காண எல்லா போராட்டத்திலும் அவர்கள் ஒருவரோடு ஒருவர் உறுதியாக சேர்ந்து நிற்குமாறு தூண்ட வேண்டிய சகோதரர் பிணைப்பினை அலட்சியம் செய்வது அவர்களுடைய +தொடர்பில்லாத முயற்சிகளில் பொதுவான தோல்வியினால் தண்டிக்கப்படும் என்பதை கடந்த கால அனுபவம் எடுத்துக் காட்டி இருக்கிறது (மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் பன்னிரண்டு தொகுதிகளில் தொகுதி- 5, முன்னேற்ற பதிப்பகம் மாஸ்கோ பக். 23).
மூலதனத்தில் சர்வதேச பலத்தையும் அதன் தன்மையும் பல்வேறு நாடுகளை சேர்ந்த முதலாளி வர்க்கம் பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராக நடத்துகின்ற ஒன்றுபட்ட முயற்சிகளையும் தொழிலாளி வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமையினாலும் ஒருமைப்பாட்டினாலும் எதிர்க்க வேண்டும் அதன் வெற்றிக்கு அது அவசியமான நிபந்தனை. “தொழிலாளி வர்க்கத்தின் சர்வதேச கூட்டத்தை தவிர வேறு எதுவும் அதன் திட்டவட்டமான வெற்றியை உறுதிப்படுத்த முடியாது” (Marx Engles works 16 Berlin page 322).
கம்யூனிஸ்ட் கட்சி பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரமான உணர்வு பூர்வமான முன்னணி படை, அதன் அமைப்பாளி தலைவன் என்ற தத்துவத்தின் அடிப்படைகளை மார்க்சும் எங்கெல்சும் வகுத்தளிதனர். அத்தகைய கட்சிக்கு தலைமை தாங்கும் தொழிலாளி வர்க்கத்தின் உலகுத் தழுவிய வரலாற்றுக் கடமையை நிறைவேற்றுவதற்கு மிக அவசியமான நிபந்தனை என்பதை அவர்கள் எடுத்துக்காட்டினார்கள். அத்தகைய தலைமை இல்லாமல் புரட்சி வெற்றி பெற முடியாது புதிய சமூகத்தை மாற்றி அமைக்க முடியாது.
“தீர்மானகரமான தினத்தன்று வெற்றிபெறுகின்ற அளவுக்கு பாட்டளி வர்க்கம் வலிமையோடு இருக்க வேண்டும், அது மற்ற எல்லா கட்சிகளிலிருந்தும் வேறுவிதமான அவற்றை எதிர்கின்ற தனிக்கட்சியை உணர்வு பூர்வமான, வர்க்க கட்சியை அமைத்துக் கொள்ள வேண்டும் என்று 1847ம் வருடத்திலிருந்தே நாங்கள் வலியுறுத்தி வந்திருக்கிறோம் என்று எங்கெல்ஸ் 1889 ல் எழுதினார்.
புரட்சி வெற்றி பெற வேண்டும் என்றால் தொழிலாளி வர்க்கம் முறையாக ஸ்தாபனமாக திரட்டப்பட்டு இருக்க வேண்டும் பாட்டாளி வர்க்கம் தன்னுடைய போராட்டத்தின் இறுதி இலட்சியங்கள் எவை என்பதை உணராமலேதானாக இயங்கத் தொடங்குகிறது. இந்தப் போராட்டத்தின் இடையே தானாகவே பல்வேறு ஸ்தாபன வடிவங்கள் இருக்கின்றன. உதாரணமாக அதன் பொருளாதார நிலையை உயர்த்தப்படுகின்ற தொழிற்சங்கம் மற்றும் இதரவை அமைக்கப்படுகின்றன. தொழிலாளி வர்க்கம் தன்னைப் பின்பற்றுகின்ற சமூகப் பகுதியினருடன் விவசாயி வர்க்கம், அறிவுஜீவிகள் மற்றும் உழைக்கும் மக்களின் இதர பாட்டாளி வர்க்கம் அல்லாத பகுதியினருடன் முன்னேறிச் செல்வதற்கு உதவி புரிகின்ற புரட்சிகரமான கட்சிதான் வர்க்க ஸ்தாபனத்தின் மிக உயர்ந்த வடிவமாகும். கட்சி தொழிலாளர் இயக்கத்துக்குள் விஞ்ஞான ரீதியான உலக கண்ணோட்டத்தை கொண்டு வந்து அதன் மூலம் தன்னுடைய மாபெரும் வரலாற்றுக் கடமையை உணர்ந்த தலைவனாக சமூக சக்தியாக அதை ஆக்குகிறது.
வர்க்கப் போராட்டத்திற்கு, புரட்சிக்கு, ஒரு புதிய சமுதாயத்தை நிர்மாணிப்பதற்குத் தலைமை தாங்கின்ற தகுதி கட்சிக்கு மட்டுமே உண்டு. “மற்ற எல்லோரையும் முன்னே உந்தித் தள்ளுகின்ற தொழிலாளி வர்க்கத்தின் மிக வளர்ச்சி அடைந்த உறுதியான பகுதியாக கட்சியை மார்க்ஸ் எங்கெல்ஸ் கருதினார்கள். (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை). கட்சியின் நோக்கங்கள் கடமைகளை வரையறுத்துக் கூறினார்கள் கட்சி தொழிலாளி வர்க்கத்துடன் பிரிக்க முடியாதபடி இணைக்கப்பட்டிருக்க வேண்டும் மிகவும் வளர்ச்சி அடைந்த தத்துவத்தை கொண்டு இருக்க வேண்டும். இயக்கத்தின் நிலைமைகளை அது புரிந்து இருக்க வேண்டும். கம்யூனிஸ்டுகள் இயக்கத்தின் எதிர்காலத்தை உயர்த்தி பிடிக்கிறார்கள். அவர்கள் தொழிலாளி வர்க்கம் முழுவதையும் மிகப் பொதுவான நலன்களை, இயக்கம் முழுவதின் நலன்களை எடுத்துரைக்கிறார்கள். கட்சி இல்லாமல் தொழிலாளி வர்க்கம் அதிகாரத்தை வென்றெடுப்பதோ அல்லது சமுதாயத்தை அடிப்படையாக மாற்றியமைப்பதோ முடியாது.
முதலாளி வர்க்கத்துக்கும் பாட்டாளி வர்க்கத்துக்கும் இடையில் வர்க்க ரீதியில் ஒத்துழைப்பு மற்றும் முதலாளித்துவம் சமாதானமுறையில் சோசலிசமாக வளர்ச்சியடைந்தால் அது சீர்திருத்தவாதமாக தொடரும் அவலங்களை மார்க்ஸ் எங்கெல்ஸ் அம்பலபபடுத்தினார்கள். வர்க்க போராட்டத்தை பற்றி புரட்சிகர தத்துவத்தை திரித்துக் கூறும் திருத்தல்வாதிகள் உண்மைக்கு பதிலாக போலியை காட்டுகிறார்கள். அவர்கள் மார்க்சிய தத்துவத்தை மார்க்சியம் அல்லாதவையாக கொண்டு நிறுத்தும் அற்ப்பதனமாக விமர்சிக்கின்றனர். அரசியல் அதிகாரத்தை வென்றெடுக்க சமாதான முறையில் வழிகாட்டுகின்றனர்.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் சோசலிச புரட்சி தத்துவத்துக்கு மையமாக இருக்கிறது. புரட்சியை பாதுகாப்பதற்கு அதன் சாதனைகளை நிலை நிறுத்துவதற்கு தூக்கி எறியப்பட்ட வர்க்கங்கள் முதலாளித்துவத்தை மறுபடியும் கொண்டுவருவதற்கு செய்கின்ற முயற்சிகளை முறியடிப்பதற்கு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அவசியமாக இருக்கிறது, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் இல்லாமல் சுரண்டுகிற வர்க்கங்களின் எதிர்ப்பை நசுக்குவது, ஒரு புதிய சமூகத்தை நிர்வாகத்திற்கு அவசியமான சமூக பொருளாதார நடவடிக்கைகளை நிறைவேற்ற இயலாது. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்றாலே புரட்சியின் முக்கியமான பிரச்சனை அதாவது அதிகாரத்தைப் பற்றிய பிரச்சனை ... பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பற்றிய கருத்து ஜெர்மன் சித்தாந்தத்தில் முதல் முதலாக வைக்கப்படுகிறது.
மேற்கண்ட ஆசான்களின் போதனைகளிலிருந்து நாம் தெரிந்துக் கொள்ள வேண்டிய விசியங்கள் என்ன?
1). கம்யூனிஸ்ட் கட்சி என்பது பாட்டளி வர்க்கதின் புரட்சிகரமான உணர்வு பூர்வமான முன்னணி படை. அதன் அமைப்பு தலைவன். அதாவது பாட்டாளி வர்க்கம் மற்றும் உழைக்கும் மக்களுக்கு நடைமுறையில் வழிகாட்ட கூடிய தத்துவ தலைமைதான் கம்யூனிஸ்ட் கட்சி. அந்த கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் முதலில் கையில் ஏந்த வேண்டிய ஆயுதம் மார்க்சிய தத்துவ ஆயுதம். இந்த தத்துவ ஆயுதத்தை கையில் ஏந்த மறுத்து விட்டு தான் தோன்றிதனமாக சிந்தித்து செயல்படுவோரை கொண்ட ஸ்தாபனம் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியாக முடியாது.
2). கம்யூனிஸ்ட் கட்சியானது பிற கட்சிகளை போல் இல்லாமல் தனித்துவம் பெற்ற கட்சியாக இருக்க வேண்டும். பாட்டாளி வர்க்க நலன்களை உயர்த்தி பிடிக்கின்ற பாட்டாளி வர்க்க உணர்வு பூர்வமான கட்சியாக இருக்க வேண்டும்.
3). கம்யூனிஸ்ட் கட்சியானது பாட்டாளி வர்க்கம் உட்பட ஒடுக்கப்பட்ட அனைத்து வர்க்கங்களையும் அனைத்து தேசிய இனங்களையும் ஒரு ஸ்தாபன தலைமையின் கீழ் ஒரே ஸ்தாபனமாக ஒன்று திரட்டப்பட்டு இருக்க வேண்டும்.
4) பாட்டாளி வர்க்க கட்சியானாது தொழிலாற் சங்கம், விவசாய சங்கம், மாணவர் சங்கம், அறிவு ஜீவிகளுக்கான சங்கம் போன்ற பல சங்கங்களைஉருவாக்கி அவற்றிக்கு தலைமை கொடுத்து வழிகாட்ட வேண்டும். இத்தகை வர்க்க ஸ்தாபனங்களுக்கெல்லாம் மிக உயர்வான ஸ்தாபனமாக கம்யூனிஸ்ட் கட்சி விளங்க வேண்டும்.
5). இந்த வர்க்க ஸ்தாபனங்களில் செயல்படும் உறுப்பினர்களுக்கெல்லாம் விஞ்ஞான ரீதியான உலக கண்ணோட்டமான மார்க்சியத்தை போதித்து அவர்களிடம் சோசலிச சிந்தனை முறையுடன் சோசலிச உணர்வையும், வளர்க்க வேண்டும்.
6). சமூகத்தில் உள்ள உழைக்கும் மக்களின் நோக்கங்கள் லட்சியங்கள் கடைமைகளை பற்றி எடுத்து விளக்கி அவர்கள் பொறுப்பாக செயல்படுவதற்கு கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட வேண்டும்.
7). இத்தகைய கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமல் தொழிலாளி வர்க்கம் அதிகாரத்தை வென்றெடுபதோ சமூதாயத்தை அடிப்படையாக மாற்றி அமைப்பதோ முடியாது.
8). முதலாளி வர்க்கதிற்கும் பாட்டாளி வர்க்கதிற்கும் இடையில் ஒத்துழைப்பு மற்றும் சமாதான முறை மாற்றம், என்பது மார்க்சியத்திற்கு எதிரான சீர்திருத்த வாதமே. அத்தகைய சீர்திருத்தவாத்தை எதிர்த்து கம்யூனிஸ்டுகள் போராட வேண்டும்.
9). மார்க்சியத்தின் புரட்சிகர தன்மையை திரித்து கூறும் திருத்தல்வாத போலி கம்யூனிஸ்டுகளை எதிர்த்தும் போராட வேண்டும்.
10). பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் சோசலிச புரட்சிகர தத்துவதிற்கு மையாமாக இருக்கிறது. சோசலிச புரட்சியின் சாதனைகளை அழிபதற்கு முயற்சி செய்யும் முதலாளித்துவ சக்திகளை முறியடிப்பதற்கு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் மிக மிக அவசியமாக இருக்கிறது. இந்த வகையில் புரட்சியின் முக்கிய பிரட்சினையாக அதிகாரம் பிரச்சினையாக பாட்டாளி வர்க்க சர்வாதிகராம் இருக்கிறது.
தற்பொழுது நடைமுறையில் மூன்று விதமான பல்தேசிய அரசுகள் நிலவுகின்றன.
1). கிழக்கு அய்ரோப்பிய நாடுகளில் உள்ள பல்தேசிய அரசுகளில் ஒரு ஒடுக்கும் தேசிய இனம் என்றும் பல ஒடுக்கப்படும் தேசிய இங்கள் என்றும் உள்ளன. இங்கு ஒடுக்கும் தேசிய இனத்திற்கு எதிராக ஒடுக்கபடும் தேசிய இனங்கள் போராடும் அதே வேளையில் ஒடுக்கும் மற்றும் ஒடுக்கபடும் தேசிய இனங்களில் உள்ள உழைக்கும் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படும் முயற்சியும் அவசியம் என்று மார்க்சியம் கூறுகிறது.
2). பல்தேசிய அரசு அமைபுக்குள் உள்ள தேசங்களுக்கு பிரிந்து போகும் சுய நிர்ணய உரிமைகள் வழங்கப்பட்டு அனைத்து தேசிய இனக்ங்களும் சுய விருப்பத்தோடு கூட்டாக ஒன்றிணைந்து கூட்டரசின் கீழ் வாழ்ந்து வருகிறார்கள் இத்தகை நாட்டிற்குள் தேசிய இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது.
3). இந்தியா போன்ற நாடுகளில் முதலாளித்துவம் உருவாகி வளர்ந்து முதலாளிதுவ தேசிய அரசுகள் உருவாவதற்கு முன்பே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் அனைத்து தேசிய இனங்களையும் அடிமைபடுத்தி ஒரு பல்தேசிய அரசை இங்கு உருவாக்கினார்கள். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளின் தலைமையின் கீழ் அமைந்த பல்தேசிய அரசானது இங்குள்ள அனைத்து தேசிய இனங்களையும் அடக்கி ஒடுக்கி சுரண்டியது. இந்த அரசுக்கு இந்தியாவில் உள்ள பெரும் முதலாளிகள் இவர்களுடன் கூட்டு சேர்ந்து ஆதரவளித்தனர் இந்த பெரும் முதலாளிகளின் அரசியல் சக்தியாக காங்கிரசும் ஆர்.எஸ்.எஸ் கும்பலும் இருந்தன. பிரிட்டிஷார் இந்தியாவை விட்டு வெளியேறும் பொழுது அர்சியல் அதிகாரத்தை காங்கிரஸ் கட்சியிடம் ஒப்படைத்தன் மூலம் இந்திய பெரும் முதலாளிகள் அரசியல் அதிகாரதிற்கு வந்தனர். இந்த இந்திய பெரும்முதலாளிகளும் நாட்டை விட்டு வெளியேறிய பிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளும் பிறஅமெரிக்கா போன்ற ஏகாதிபத்திய வாதிகளுடன் கூட்டு சேர்ந்து காங்கிரஸ் மற்றும் ஆர்.எஸ்.எஸ் கும்பலின் துணையோடு இந்தியா முழுவதும் உள்ள தேசிய இனங்களை அடக்கி ஒடுக்கி சுரண்டுகிறார்கள். இந்தியாவில் கிழக்கு அய்ரோப்பியா போன்று ஒடுக்கும் தேசிய இன ம் என்றும் ஒடூஅப்படும் தேசிய இனம் என்று இல்லை. அனைத்து தேசிய இனங்களையும் ஒடுக்கும் எதிரிகளாக தற்பொழுது உள்நாட்டு வெளிநாட்டு கார்ப்ரேட் முதலாளிகளும் அவர்களை ஆதரிக்கும் அரசியல் கட்சி தலைவர்களே உள்ளனர். மே;லும் இவர்களை பாதுகாக்கும் இந்திய அரசே தேசிய இனங்களின் எதிரிகள் ஆவார்கள். இந்த எதிரிகளை எதிரித்து அனைத்து ஒடுக்கபட்ட தேசிய இனங்களும் ஒன்றுபட்டு போராடி முறியடிக்காமல் இந்த தேசிய இனங்களுக்கு ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலிலிருந்து விடுதலை கிடைக்காது.
4). தேரிய இனங்களின் மீதான ஒடுக்குமுறை சுரண்டலிலிருந்து விடுதலை பெற ஒரு குறிப்பிட்ட தேசிய இன மக்களை மட்டும் உதாரணமாக தமிழ் தேசிய இன மக்களை மட்டும் ஒன்று திரட்டுவதற்கான கட்சியை மட்டும் தங்களால் கட்டப்படும் முடியும் என்று கருதி தமிழ் தேச மக்களை மட்டும் திரட்டி தமிழ் தேச மக்களின் மீது நடத்தப்படும் ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலை எதிர்த்து போராட முடியும் அதுதான் எங்களால் சாத்திய பட கூடியதாக இருக்கிறது என்று கருத்துபவர்களை நாங்கள் தவறானவர்கள் என்று சொல்லவில்லை. ஆனால் இந்தியா முழுவதும் கட்சி கட்டி அனைத்து தேசிய இனங்களையும் இந்த ஒடுக்குமுறையாளர்களிலிருந்து விடிவிக்க முடியாது என்று கூறுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. ஏனெனில் அத்தகைய முயற்சியில் இந்தியா முழுவதும் உள்ள தேசிய இனங்களை ஒடுக்குமுறையிலிருந்து விடிவிப்பதற்காக பாடுபடுபவர்களை தடுபதற்கும் குறை சொல்வதற்கும் இவர்களுக்கு தகுதியில்லை. தங்களது கடமையை குறுக்கிக் கொண்டவர்கள் விரிவான கடமை ஆற்றுபவர்களை தடுபதற்கு என்ன காரணம்? இவர்களது தேசங்களை விடிவிப்பதற்கான முயற்சியில் ஈடுபடும் இந்திய புரட்சியாளர்கள் இவர்களுக்கு எந்த வகையில் எதிரிகளாக இருக்கிறார்கள்? இவர்களது தேசத்தையும் விடிவிப்பதற்காகதானே பாடுபடுவார்கள். அப்படி இருக்கும் பொழுது குறுகிய தேசிய இனவாதிகள் இந்தியாவில் உள்ள அனைத்து தேசிய இனங்களையும் விடிவிக்க பாடுபடுபவர்களை எதிர்கக வேண்டிய அவசியம் ஏன்? ஆகவே தேசிய இன விடுதலை என்பது தேசங்கள் பிரிந்து போவது ஒன்றேதான் என்பது முதலாளித்துவ் தேசியவாதம் என்றே நாங்கள் கருதுகின்றோம்.
5). தேசிய இன விடுதலை என்பது தேசிய இனங்களின் மீதான ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலை எதிர்த்து போராடி முறியடிப்பதுதான் என்பதே எங்களின் நிலைப்பாடு.
6). இந்த ஒடுக்குமுறையையும் சுரண்டலையையும் எதிர்த்து போராட முன் வருபவர்கள் அனைவருமே தேசிய இன விடுதலை போராட்டத்தில் நண்பர்களே. இத்தகைய நண்பர்களை ஒருங்கிணைத்து ஒடுக்குமுறையாளர்களை எதிர்த்து போராடாமல் தேசிய இனங்களுக்கு ஒடுக்குமுறையிலிருந்து விடுதலை கிடைக்காது என்பதே எங்களது நிலைபாடாகும்.
7). தமிழ் தேசத்துக்குள் மட்டும் கட்சியை கட்டுவதும் தமிழ்தேச மக்களை மட்டும் ஒருங்கிணைத்து போராடுவதும் உங்களுது கொள்கையாக இருப்பது உங்களது விருப்பம், உங்களது விருப்படி செயல்படுவதை யாரும் தடுக்க முடியாது நாங்களும் தடுக்கவில்லை.
8). தமிழ் தேச இனத்தை ஒடுக்கும் ஒடுக்குமுறையாளர்களே இந்தியா முழுவதும் உள்ள அனைந்து தேசிய இனங்களையும் ஒடுக்கும் பொதுவான எதிரிகளாக இருகிறார்கள். இந்த பொதுவான எதிரியை எதிர்த்து போராடுவதை ஒடுக்கப்படும் அனைத்து தேசிய இனங்களும் ஒன்றுபடுவது மிகமிக அவசியம் என்பதே எங்களது நிலைப்பாடு.
அந்த ஒற்றுமையான அமைப்பு ரீதியாகவும் இருக்க வேண்டும் என்பதே சர்வதேசியவாதிகளான மார்க்சிய ஆசான்களது போதனையாகும். இந்த போதனையை மறுப்பவர்கள் மார்க்சியவாதியாக இருக்க முடியாது.
9). கம்யூனிட்டுகள் சர்வதேசியவாதிகளாக இருந்தாலும் அவர்களது போராட்டமானது தேசிய போராட்டங்களிலிருந்தே துவங்க வேண்டும் என்று மார்க்சிய ஆசான்கள் கூறியுள்ளார்கள். அதன் பொருள் குறிப்பிட்ட மக்களை அடக்கி ஒடுக்கி தனது அரசின் மூலம் ஆட்சி செய்பவர்களை எதிர்த்து அந்த அரசை தகர்பதற்கான போராட்டத்தின் மூலமே துவங்க வேண்டும் என்பது பொருளாகும். அதன்படி பார்த்தால் தமிழக பாட்டாளி வர்க்கம் இந்திய அரசை தகர்பதற்கான போராட்டங்களை நடத்த வேண்டும். அதற்கு பிற தேசிய இனங்களை சேர்ந்த பாட்டாளி வர்க்கங்களையும் ஒரு அமைப்பின் கீழ் ஒன்றுபடுத்துவது மிகமிக அவசியமே என்பதுதான் மார்க்சிய ஆசான்களின் வழிகாட்டல் ஆகும். இதனை தவறாக புரிந்துக் கொண்டு இந்தியாவில் உள்ள தேசிய இனங்களை ஆட்டிபடைக்கும் அரசை புறக்கணித்து விட்டு தேசிய இனங்களின் விடுதலை போராட்டம் என்று பேசுவது திருத்தல்வாதமே ஆகும்.
10). தேசங்களின் போராட்டம் எதை எதிர்த்து? தேசங்களை ஒடுக்கும் சுரண்டலாளர்களையும் அவர்களின் அரசை எதிர்த்த போராட்டமே ஆகும். ஆனால் இவர்கள் தமிழ் தேச இனமானது அதனை ஒடுக்கும் அரசை எதிர்த்து போராட வேண்டியதை பற்றி பேசாமல் தமிழ் தேச பிரிவினை பற்றி மட்டும் பேசுவதனால் எந்த பயனும் இல்லை. தமிழ் தேச மக்களின் மீதான சுரண்டலை எதிர்த்து போராட்டாமல் தமிழ்தேச மக்களுக்கு விடுதலை இல்லை.
சில கேள்விகள் தமிழகத்தில் தேசிய இன பிரச்சினையை முன்னெடுப்போர் முன்
1). இந்தியாவின் ஆட்சி அதிகாரம் யாரின் கையில் உள்ளது?
2). எந்த வர்க்கதின் கையிலிருந்து எந்த வர்க்கத்தின் கைக்கு ஆட்சியை மாற்றுவது?
3).தமிழக புரட்சி என்றால் என்ன?
4). இந்திய அரசை எதிர்த்து போராடாமல் தமிழக விடுதலை அதாவது பிரிவினை எப்படி?
5). இந்திய தேசிய இனங்களின் மீதான ஒடுக்குமுறைக்கு இந்திய ஒற்றுமை என்ற கொள்கை காரணமா? இந்திய ஆளும் வர்க்கத்தின் சுரண்டல் காரணமா?
6). தமிழ் தேச விடுதலையில் தமிழ் கார்ப்ரேட் முதலாளிகளின் இடம் எதிரியா? நண்பனா?
7). தமிழ் தேசத்தின் மீதான ஆதிக்கம் யாரால்?
அ). பன்னாட்டு ஆதிக்கம், ஆ). இந்திய வல்லாதிக்கம், இ). நிலப்பிரத்துவ
ஆதிக்கம், ஈ). சாதி ஆதிக்கம்(பார்பனர்).
இதனை சுட்டுக்காட்டியுள்ள நீங்கள் இந்த ஒடுக்குமுறையாளர்களையும் சுரண்டலாள்ர்களையும் எதிர்த்து போராடி முறியடிப்பது பற்றி பேசவில்லையே ஏன்?
8). தேசிய இன விடுதலை போராட்டங்களை இந்தியாவிலிருந்து பிரிந்து போவதை முரணின்றி ஆதரிக்கிறோம் (பக்கம் 66 தமிழ் தேசியமும் மார்க்சியமும் தேமொழி) என்பதன் அடிப்படையில் பிரிவினையை கூறும் உங்களை பிரிவினைவாதிகள் என்று ஏன் கூறக்கூடாது?
9).ஒன்றுபட்ட இந்தியாவிற்குள்ளே தமிழ் தேச சுதந்திரத்தை அடைய முடியாதா ஏன்?
10). ஆளும் வர்க்கம், “இல்லாத இந்திய தேசத்தை உருவாக்க முயற்சிக்கிறது” அதேபோல் தமிழ் தேசிவாதிகள், “இல்லாத இந்தி தேசிய இனம்” ஒன்றை உருவாக்க முயலுகிறார்கள் அதன் நோக்கம் என்ன?
11). இவர்கள் சொல்லும் இந்தி தேசிய இன மக்கள் வெவ்வேறு தாய் மொழியை கொண்டுள்ளனர், வெவ்வேறு காலாச்சார வரலாற்றை கொண்டுள்ளார்கள் இவர் எப்படி ஒரே தேசிய இனமாக மாற முடியும்?
12). இந்த இந்தி மொழி பேசுகின்ற மக்கள் வறுமையின் காரணமாக இந்தியாவின் பல பகுதிக்கு குறைந்த கூலிக்கு வேலைக்கு செல்லுகின்ற நிலைமையில் இவர்களை ஒடுக்கும் தேசிய இனம் என்று சொல்ல முடியுமா?
13) இந்த மக்கள் தங்களின் வாழ்வுக்காக பிற தேசங்களை சார்ந்திருக்கும் பொழுது இவர்கள் பிற தேச மக்களின் மீது பகைதன்மை கொள்வார்களா?
14).அதானி, அம்பானி போன்றே சிவ் நாடார், டி.வி.எஸ் போன்ற கார்ப்ரேட்கள் தமிழ் தேசிய இனத்தைச் சேர்ந்த கார்ப்ரேட் முதலாளிகள் மாறன் குடும்பம், ஜகத் ரட்சகன் போன்ற கார்ப்ப்ரேட் முதலாளிகள், இந்தியா முழுவதிலும் சுரண்டலில் ஈடுபடுகின்றார்கள். இவர்கள் தமிழ் தேச இனத்தின் எதிரியா? நண்பனா?
தமிழ் தேசத்தின் மீதான ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலை எதிர்த்த விடுதலை போராட்டமும் இந்தியா முழுவதும் உள்ள அனைந்து தேசிய இனங்களின் மீதான ஒடுக்குமுறை மற்றும் சுரண்டலை எதிர்த்த விடுதலை போராட்டமும் ஒரே பொதுவான எதிரிகளான உள் நாட்டு வெளிநாட்டு கார்ப்ரேட்டுகள் அவர்களின் நலனுக்காக பாடுபடும் அரசியல் கட்சிகளும் அவர்களின் அரசு ஆகியவற்றை எதிர்த்த போராட்டங்களே ஆகும். ஆகவே பொதுவான எதிரியை எதிர்த்து போராடும் தமிழ் தேச விடுதலை போராட்த்தையும் இந்திய விடுதலை போராட்த்தையும் தனித்தியாக பிரிப்பதும் ஒன்றுக்கு எதிராக மற்றொன்றை வைப்பதும் மார்க்சியம் ஆகாது.இரண்டுக்கும் நோக்கம் ஒன்றே.
தமிழ் தேச விடுதலை பற்றி பேசும் நபர்களின் வலிமை அல்லது சாத்தியம் தமிழ் தேசத்துக்குள் கட்சியை கட்டுவதும் போராடுவதும் என்ற நிலையில் அதுதான் சாத்தியம் என்று அவர்கள் செயல்படட்டும். ஆனால் நடைமுறையில் பிற தேசிய இனங்களின் ஆதரவு அவசியம் என்று அவர்கள் உணர்வார்கள்.ஆகவே தமிழதேச விடுதலையா இந்திய விடுதலை என்பது கோட்பாட்டு பிரச்சினை அல்ல நடைமுறை பிரச்சினை. நடைமுறையில்தான் இவர்கள் உணர்வார்கள்.
தமிழ் நாட்டில் உள்ள சுரண்டப்படும் மக்களிடம் சுரண்டலை எதிர்த்து போராடுவதற்காக நாம் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தை பிரசாரம் செய்து கட்சி கட்ட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு.
இந்த சுரண்டலையும் ஒடுக்குமுறையையும் செயல்படுத்தும் அரசை தகர்பதும் அதற்கு மாற்றாக சுரண்டலை ஒழிக்கும் அரசுமுறையை உருவாக்கும் லட்சியத்தை அடிப்படையாக கொண்டு ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தை பிரசாரம் செய்து கட்சியை கட்ட வேண்டும். இது எங்கள் நிலைபாடாகும்.-இலக்கு ஆசிரியர்கள்
No comments:
Post a Comment