தோழர்.சுகுந்தன்

தோழர் சுகுந்தன் மறைந்து ஈராண்டு ஓடோடி விட்டது இன்று அவர் அலுவலகத்தை கடக்கும் பொழுது அவரின் வெறுமை வாட்டுகிறது.
இதுபோன்ற தியாக தோழர்களின் உயரிய பணியால் கட்சி வாழ்கிறது.
இவர்களை போன்றோரை மதிப்பதும் சரியானவற்றை போற்றுவதும் உண்மையில் அவர்களின் பணியை புரிந்து செயல்படுபவர்களின் அவசியமான பணி...

தோழருக்கு செவ்வணக்கம். 

தோழர் சுகுந்தன் (75) இன்று மதியம் 2.00 மணியளவில் கடும் மூச்சு திணறல் ஏற்பட்டு இயற்கை எய்தினார் என்பது ஏற்க முடியவில்லை.
நக்சல்பாரி இயக்கத்தில் ஆழ்ந்து ஈடுபட்ட அவர், தனது குடும்ப உறவுகளை துறந்து, மக்கள் நலன், கட்சியின் நலன் என்பது மட்டுமே தனது வாழ்நாள் பணியாக ஏற்று வாழ்ந்து மறைந்து விட்டார்.
அவரின் இறுதி நாட்களில் நான் அவருடன் விவாதிக்க என்னை ஒழுங்கு படுத்திக் கொள்ள ஆசானாக ஏற்றாலும் அவரின் கட்சியின் மீதான அனுதாபம் ஏனோ மார்க்சியத்திலிருந்து விலகியவர்களை சரிபடுத்தும் நோக்கில் இல்லாமல் போனாது.
இதற்கு முன் மூச்சு திறனல் ஏற்பட்ட பொழுது ICU வில் சேர்த்து விட்டு வந்த பொழுது அவரின் கட்சியாட்கள் நாங்கள் பார்த்துக் கொள்வோம் என்ற பின் வந்து விட்டோம். அவரின் உடல் நிலை சீராகி வெளியே வந்தாலும் திரும்பவும் அட்டாக் வரும் என்று மருத்தவர் கூறியதை அவருக்கு செவ்வாய் கிழமை கூறிய பொழுது நான் நாளை அடுகம்பாறை மருத்துவமனைக்கு செல்வதாக கூறினார். சரி நேற்று பேசவில்லை என்பதனால் காலையிலிருந்து முயற்சி செய்தோம் பேசமையால் அவருடன் இருந்தவருக்கு போன் செய்தோம் எந்த தெளிவான பதிலும் இல்லை.
என்ன சொல்ல, இப்பொழுது சென்னையிலிருந்து தோழர் கவின்மொழி தெரிவித்த பின் தெரிய வந்தது அவரின் மறைவு.
வருத்தமாக உள்ளது. சக தோழர் யாருடன் பழகினார் அவருக்கு கூட தெரிவிக்காதவர்களை நினைத்து.
கீழே அவரின் இன்றைய கட்சி விடுத்துள்ள செய்தி
தோழரின் உடல்,ஜூலை -07,2023, (வெள்ளி)
காலை முதல் ஆம்பூர் கட்சி அலுவலகத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப் பட்டிருக்கும்.
கட்சித் தோழர்கள் தொழிலாளர் தோழர்கள், காலை முதலே ஆம்பூர் அலுவலகத்தில் ஒன்று கூடி நமது அன்பு தோழருக்கு செங்கொடி தாழ்த்தி பிரியாவிடை கொடுப்போம்.! என்று லிபரேசன் மாநிலச் செயலாளர் கூறியுள்ளார்...
செவ்வணக்கம் தோழ.
உன்னை போன்ற உண்மையான தோழர்கனால்தான் இன்றும் செங்கொடிக்கு பெருமை.
கண்ணீர் சிந்துவதை தவிர என்னால் வேறு ஒன்று செய்ய முடியாத கையறு நிலையில் உன்னை தவிக்க விட்டு விட்டேனே தோழா.
ஒவ்வொரு விசியத்திலும் விவாதித்து சண்டை போட்டுக் கொள்ள இனி நீங்கள் இல்லையே தோழா!!!
உன்னை போன்றோரின் நினைவுகள் செயல்கள் எங்களை போன்றோருக்கு வழிகாட்டும் தோழா.
செவ்வணக்கம் தோழா-சிபி.

அவரை பற்றி தெரிந்துக் கொள்ள...


மீ.த.பாண்டியன் - MDPandian

70களின் பிற்பகுதியில் இகக (மா-லெ) விடுதலை அமைப்பில் இணைந்து இயங்கத் தொடங்கிய சிம்சன் தொழிற்சாலைத் தொழிலாளி சுகுந்தன் (எ) கீர்த்தி வல்லபன். தஞ்சை, மதுரை, திண்டுக்கல் நேரடிப் பொறுப்பில் பணியாற்றியவர். இகக (மா-லெ) விடுதலை 1992இல் வடபழனி வெளிப்படை மாநாட்டில் மத்தியக்குழு ஒப்புதலுடன் இருவேறு திட்ட முன்வைப்பு மோதலில் அதிகாரப்பூர்வ அமைப்பு தரப்பில் நின்றார். நாங்கள் அ.வெங்கடேசன், சிரீரரங்கன், எஸ்.அண்ணாதுரை, நமசு, பாலகிருஷ்ணன், மதிவாணன், டி.எஸ்.எஸ்.மணி, சிதம்பரநாதன், நவநீதன் உள்ளிட்டோர் குறிப்பான திட்டத்திற்காக நின்றோம்.
பின்னர் அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் AIALA தமிழ்மாநிலப் பொறுப்பாளர்களாக நாங்கள் இணைந்து இயங்கினோம்.
2005இல் மாநிலக்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது மாநிலச் செயலாளர் தேர்வில் தோழர்கள் என்னை முன்னிறுத்திய போது என்னை முன் வைத்தவர்களில் முக்கியமானவர்.
உட்கட்சிப் பழிவாங்குதலில் 2006இல் நான் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து முக்கியத் தலைவர்கள் தோழர்கள் எஸ்.அண்ணாதுரை, அ.வெங்கடேசன், ஜெ.சிதம்பரநாதன், நெய்வேலி செல்வராஜ் உள்ளிட்டோர் அமைப்பிலிருந்து ஒருவருட காலத்தில் வெளியேறினர்.
இகக (மா-லெ) மக்கள் விடுதலை உருவானது. தொடர்ந்து 2007இல் தோழர் சுகுந்தன் அமைப்பிலிருந்து வெளியேறி எங்களுடன் இணைந்தார். நாங்கள் உருவாக்கிய டிடீயூசி (DTUC) தொழிற்சங்க மையத்தின் தலைவராக வாணியம்பாடி ஏ.வி (எ) அ.வெங்கடேசன், பொதுச்செயலாளராக தோழர் சுகுந்தன், நெய்வேலி செல்வராஜ் உள்ளிட்டோர் பொறுப்பெடுத்து இயங்கினர். வாணியம்பாடி வேலைகளுக்கு தோழர்கள் சுகுந்தனும், வழக்கறிஞர் கார்க்கிவேலனும் சென்று வந்தனர். தோழர் கார்க்கி வேலன் மட்டும் குடும்பத்துடன் காட்பாடியில் தங்கி தோழர் ஏ.வி.யுடன் இணைந்து பணியாற்றினார்.
தலைவர் ஏ.வி. இழப்பு வாணியம்பாடி, ஆம்பூரில் தொழிற்சங்கப் பணியில் வெற்றிடம் உருவாகக் கூடாது எனும் வகையில் அங்கே, அப்போதே கூடிய கட்சியின் முடிவுப்படி பொறுப்பிலிருந்த நான் தலைவர்
ஏ.வி உடல் அடக்கத்திற்கு முன்பே வேலூர் மாவட்ட தோல் மற்றும் தோல் பொருள் தொழிற்சங்கத் தலைவராக தோழர் சுகுந்தனை அறிவித்தேன்.
2010இல் அமைப்புக்குள் திட்டம் தயாரிக்கும் பணியில் - வர்க்கப் போராட்டம், சாதி ஒழிப்பு, தேசியஇனப் பிரச்சினை - நிலைப்பாடு முன்னெடுப்பதில் முரண்படத் தொடங்கினார்.
2013இல் மக்கள்யுத்தக் குழுவிலிருந்து வெளியேறி இயங்கிய தோழர் பாலன் தலைமையிலான தோழர்களும் இகக (மா-லெ) மக்கள் விடுதலை தோழர்களும் ஒரே அமைப்பாக இணைவதற்கான பேச்சு வார்த்தை நடத்தும் குழுவில் தோழர் சுகுந்தனும் எங்களுடன் பங்கேற்று " கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ) மக்கள் விடுதலை, தமிழ்நாடு " அமைப்பு உருவாக்கப்பட்டது.
2014 திருவெற்றியூர் முதல் மாநாட்டின் போது கட்சியின் வாணியம்பாடி தொழிற்சங்கத்துடன் அமைப்பிலிருந்து வெளியேறினார்.
நீண்ட நாட்கள் தனித்தியங்கியவர் சில ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் இகக (மா-லெ) விடுதலையுடன் இணைந்து இயங்கினார்.
தொடர்ந்து இயங்கி மறைந்த தோழர் சுகுந்தனும் நானும் 33 ஆண்டுகாலம் இணைந்து இயங்கியுள்ளோம். இறுதியாக தலைவர் தோழர் எஸ்.அண்ணாதுரை இழப்பில் 2016இல் மாதவரத்தில் சந்தித்தது.
1983 எனது வீட்டில் டி.எஸ்.எஸ்.மணி உடன் முதல் சந்திப்பு. உடன்பாடும் முரண்பாடும் என்னோடு மோதல் போக்கும் கடுமையாகக் கொண்டவர். சென்னை மூலக்கடை பகுதியைச் சேர்ந்தவர்....
தொழிற்சங்கத் தலைவர் தோழர் சுகுந்தனுக்கு எனது இறுதி அஞ்சலி!
மூத்த தோழர்கள் தஞ்சை கலியபெருமாள், முகவூர் ஆறுமுகம், வாணியம்பாடி ஏ.வி (எ) அ.வெங்கடேசன், நெய்வேலி செல்வராஜ், தஞ்சை டி.கே.எஸ்.ஜனார்த்தனன், எஸ்.அண்ணாதுரை, பிவிஎஸ் (எ) கணேசன், தேவகோட்டை நமசு வரிசையில் சுகுந்தனுக்கு விடை கொடுப்போம்! செவ்வணக்கம்!
மீ.த.பாண்டியன், தலைவர்,
தமிழ்த்தேச மக்கள் முன்னணி
அரசியல் தலைமைக் குழு
தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-மா)

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்