சாதி அன்றும் இன்றும் மார்க்சிய பார்வையில் நூல் அறிமுகம்.

 

அன்பார்ந்த தோழர்களே,

சாதி அன்றும் இன்றும் மார்க்சிய பார்வையில் நூல் பிரிண்டாகி விட்டது அறிமுக கூட்டம் பல காரணங்களால் விலகி போவதால் பொதுதளத்தில் அதுவரை முன்வெளியீட்டு திட்டத்தில் அறிவித்தது போலவே 225 ரூபாய் நூலை கோரியர் செலவுடன் 150 விற்பனை செய்ய முடிவு செய்துள்ளோம். அதன் படி நூல் தேவைப்படுவோர் நூலுக்கான தொகையாக ₹ 150 (கோரியர் செலவு உட்பட) 9095136356 என்ற எண்ணிற்கு அனுப்பி வைபதோடு உங்களின் விலாசம் இதே எண்ணிற்கோ அல்லது 7010134299 என்ற வாட்சாப் எண்ணிற்கோ அனுப்பினால் உங்கள் விலாசத்திற்கு நூல் கோரியர் மூலம் அனுப்பி வைக்கபடும் தோழர்களே.





இதுவரை 31 நூல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.  பல்வேறு தோழர்களுக்கு நேரடியாக 50கும் மேற்பட்ட நூல்கள் கொடுத்துள்ளேன். அறிமுக கூட்டம் அனேகமாக அடுத்த மாதம் நடக்கலாம் என்று பதிப்பாளர் (வெளியீட்டாளர்) கூறியுள்ளார். அதனால் காலதாமதம் ஏற்படவுள்ளதால் இந்த சிறப்பு விற்பனை அறிவிப்பு. 

சாதியை பற்றிய தேட நான் பல நூல் ஆதாரங்கள் மற்றும் சமூக விஞ்ஞான புரிதலுக்கு தொல்லியல் ஆய்வுகள் இலக்கிய ஆய்வுகள் அடிப்படைகளுடன் வரலாற்றில் உள்ள சரி தவறுகளையும் தேட முனைந்துள்ளேன் எல்லாம் மதம் என்பதும் வேதகாலம்தான் என்பதும் பல நூல் ஆதாராங்களுடன், சாதி சமூகத்தில் எப்பொழுது தோன்றியது சாதியின் தேவை என்ன? இன்று சாதி இருபதற்கான காரணம் என்ன அதில் அம்பேத்கர் மற்றும் பெரியார் பாத்திரம் சாதி தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் பங்களிப்பென்ன? அவர்களின் போராட்டம் எந்தளவு வெற்றி கண்டது?

மார்க்சிய வழியில் சாதியின் தோற்றம் முதல் அதனை இல்லாதொழிப்பது வரை எவ்வகையான முறையில் சாத்தியம் என்பதனையும். நம் மத்தியில் இன்றுள்ள சாதி சண்டைகள் ஏன் அவை இல்லாதொழிக்க மார்க்சியம் என்ன சொல்கிறது அதே நேரத்தில் பல்வேறு சாதி ஒழிப்பு பேசுபவர்கள் என்ன சொல்லிக் கொண்டுள்ளனர் என்பதனை விரிவாக தெளிவாக விளக்கியுள்ளேன்.

வர்க்கப் பகைமைகள் முழுமையாக மறைந்தொழியது அவ்வடிவங்களும் கருத்துகளும் முற்றிலுமாக மறைந்து போக முடியாது. (கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை). 

உழைக்கும் மக்களின் விடுதலை உற்பத்தி சக்திகளின் தேவையும், வளர்ச்சியும் சமூக தேவையும் சட்ட வடிவில் ஆட்சியாளர்களின் பங்களிப்பிலும் தீண்டாமை நடைமுறை ஒழிப்பு சாத்தியமானதே அவை அரசு இயந்திரம் முயன்றால்.- இவை ஜப்பான் படிப்பினை அங்கே உழைப்பாளரின் தேவை அச்சமூகதிற்கு வேண்டியதாக இருந்தது, அதனால் சமூகத்தின் ஒரு பிரிவினர் தீண்டாமையின் காரணமாக ஒதுக்கப்படுவது அந்நாட்டின் உற்பத்திக்கு பெரும் இழப்பாக இருந்ததனால் அரசே முன் வந்து இந்த தீண்டாமை கொடுமைகளுக்கு முடிவு கட்டி எல்லோரும் உழைப்பில் ஈடுபட வழிவகை செய்தது. இங்கே செய்ய முடியும் ஆனால் அதிகாரத்தில் உள்ளவர்கள் செய்ய தயார் இல்லை.

இன்று தமிழகத்தில் சாதி தீண்டாமை சம்பங்கள் ஆங்காங்கே ஏதோ ஒருவகையில் நிகழ்வதை காண்கிறோம். அது வேங்கைவயல் மட்டுமல்ல பல பகுதிகளில் வெவ்வேறு வழிகளில் தீண்டாமை கொடுமைகள் நடப்பது காலனிய ஆட்சியில் அல்ல, இன்று நம்மவர் நம்மை ஆளும் இவர்களின் ஆட்சியில்தான் பாராமுகமாய் பல நிகழ்வுகள் நடந்தேறிக் கொண்டுள்ளன. தமிழகத்தில் 341 க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீண்டாமை கொடுமை தலைவிரித்தாடுகின்றன என்பது செய்தி தகவல். உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்கிச் சுரண்டும் ஆளும் வர்க்கம் சாதியை ஓட்டு வங்கிகளாக சாதி கட்சிகளை ஆதரிப்பதுதான் ஆட்சியாளர்களின் கொள்கையாக உள்ளது தெளிவாக தெரிகிறது.

1990 க்கு பிறகான உலகமய, தனியார்மய கொள்கையால்; இலவச கல்வி, அரசு வேலை வாய்ப்பு அரிதாகி விட்டது. அரசு அறிவித்துள்ளது போல், இடஒதுக்கீடு அதாவது சாதிகளுக்கான இடஒதுக்கீட்டின் அடிப்படையில் கல்வி, வேலை வாய்ப்பு அரசு வழங்க முடியாத நிலையில் உள்ளது. தன் இயலா நிலையை மூடிமறைக்க செய்யும் கூத்துகள் பல.

அந்தந்த சாதிகளுக்கு கொடுக்க வேண்டிய இட ஒதுக்கீட்டை வழங்க முன்வராத அரசு; அந்தந்த சாதி கட்சிகளுக்கு தூபம் போடுகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இவ்வளவு இடஒதுக்கீடு செய்வோம் என்பது ஒருபுறம், மற்றோருபுறம் சாதிக் கட்சிகள் ஒவ்வொன்றும் தங்களின் இடஒதுக்கீட்டை கொடு எனும் அதேநேரத்தில் இன்னொரு சாதியால்தான் தம் இடஒதுக்கீடு கல்வி, வேலை வாய்ப்பு பறித்துவிட்டது என்று கூறி ஒரு சாதிக்கு எதிராக இன்னொரு சாதியை நிறுத்தும் மோசடி.

உலக மக்கள் சமுதாய வரலாற்றை ஆராயும் பொழுது, சாதிய முறையானது உலகில் பல நாடுகளில் தோன்றி மறைந்தது தான். மார்க்சியம் போதிக்கும் சமூக விஞ்ஞான அடிப்படையில் சமுதாய வரலாற்றை புரிந்து கொள்வர்களால் மட்டுமே இதை விளங்கிக் கொள்ள முடியும்.

சாதி இல்லாத காலமும் ஒன்று இருந்தது என்பதனை முதலில் தெளிவடைய வேண்டும். சாதி பிரிவினை தோன்றி 2500 ஆண்டுகள் ஆகலாம் என்று கணக்கிட்டாலும்; சாதிய சமூகமாக செயல்பட தொடங்கி 2000 ஆண்டுகள் ஆனாலும்; சாதி ஆதிக்கம் சமூகத்தில் கோலோச்ச தொடங்கியது சோழர் ஆட்சிகாலம் தொடக்கம் என்றாலும் சாதி முழுமையாக செயல்பட தொடங்கி 1600 ஆண்டுகள் கூட ஆகவில்லை. ஆகையால் சாதியின் இன்றைய இருப்பையும் அதன் ஒழிப்பையும் அதன் தோற்றம் முதல் பல்வேறு தகவல்கள் மற்றும் சமூக இயக்கவியல் அடிப்படையில் தேடியுள்ளேன். சாதி இருப்பிற்கான சமூகம் உடைத்தெறியப்படவில்லை, சாதிய ஏற்றதாழ்வை கட்டிகாக்கும் முறைகளை இன்றைய வர்க்க அரசு தொடர செய்கிறது. அதில் ஒன்றுதான் சாதிகட்சிகளை ஊக்கிவிப்பதும், சாதி சங்கங்களை வளர செய்வதும் ஆகும். இன்னொன்று சாதி சான்றிதழ்கள் வழங்கும் பழக்கத்தை ஆங்கிலேய காலனிய ஆட்சியாளர்கள் தொடங்கினர். அன்று அவர்கள் சாதியால் ஒதுக்கபட்ட ஒடுக்கப்பட்டுள்ள மக்களுக்கு கல்விக்கற்கவும் எல்லோரும் வேலை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இடஒதுக்கீட்டை தொடங்கினர் என்றே வைத்துக் கொண்டாலும், அந்த நோக்கம் முழுமையடையவில்லை. உண்மையில் எத்தனை சதவீத மக்களின் கல்வி வேலை வாய்பிற்கு உத்தரவாதம் அளித்தது என்றால், இடஒதுக்கீட்டால் சில பிரிவு மக்களின் சிலருக்கு சிறிது உயர வழிவகை செய்தது. எல்லோரும் அந்த நிலையை அடைய வழி செய்யவில்லை. ஆனால் அதனால் பல பின் விளைவுகள் இன்றும் நம் சமூகத்தில் காணலாம். அவைதான் சாதி அடையாளங்களை தாங்கி பிடிக்கும் சில போக்குகள்.

தனிப்பட்ட முயற்சிகள் - ஒவ்வொருவரும் தங்கள் அன்றாட வாழ்வில் சாதி பாகுபாடுகளை எதிர்க்க வேண்டும். சாதி அடிப்படையிலான நடைமுறைகளில் பங்கேற்காமல் இருத்தல் (எ.கா., சாதி பெயர்களை கேட்டல், சாதி அடிப்படையில் திருமணம் செய்தல் போன்றவை).

சாதி தீண்டாமை ஒரு நாளில் மாறிவிடக்கூடிய பிரச்சினை அல்ல. ஆனால், கல்வி, சட்டம், சமூக முன்னேற்றம் மற்றும் தனிப்பட்ட முயற்சிகள் வழியாக இதை படிப்படியாக ஒழிக்க முடியும். ஒரு சமத்துவமான மற்றும் நீதியான சமூகத்தை உருவாக்குவதே இறுதி இலக்காக இருக்க வேண்டும்.

"மனிதர் அனைவரும் சமம்; சாதி, மதம், இனம் எதுவாக இருந்தாலும் மரியாதை மற்றும் சமத்துவம் அனைவருக்கும் உரியது."

இந்த முறைகளை நாட்டின் பல முன்னோடிகள் பலவகையில் முயன்றவைதான், இருந்தும் இவை அரசினால் முழு வீச்சில் செயல்படுத்தாமல் மெத்தனம் காட்டுவதும். சாதி தீண்டாமைகளை போதிக்கும் மத-சாதிய நிறுவனங்களை அரசே தடை செய்யாமல் ஏற்று நடத்துவதே இன்று சாதி தீண்டாமை மற்றும் பல்வேறு கொடுமைகள் நடந்தேறுவதற்கு காரணமாக உள்ளது. ஆகையால் நமக்கான வழிமுறை மார்க்சிய லெனினியம் எனும் புரட்சிகர தத்துவ வழிபட்ட நடைமுறையில்தான் இந்த ஏற்ற தாழ்வை ஒழிக்க முடியும். அதனை பற்றி தொடர்ந்து விரிவாக புரிந்துக் கொள்வோம்.

வர்க்க சமூகத்தை மறுக்கும் சாதி எதிர்ப்பு போக்குகள்.

இந்திய சமுதாயம் என்பது கார்ல் மார்க்ஸ் குறிப்பிடுவது போல வர்க்க சமுதாயம் அல்ல, என்று தொடங்கும் சிலர். இங்கு சாதிய சமுதாயம் தான், ஆகையால் இங்கு முதலில் சாதி ஒழிப்பு போராட்டம் தான் நடத்த வேண்டும் என்கின்றனர்.

இவர்கள் மேலும் கூறுகின்றனர், “பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்களுக்கு 2000 ஆண்டுகளாக கல்வி உரிமை மறுக்கப்பட்டுள்ளது, அரசியல் ஆதிக்கம் பார்ப்பனர்கள் மட்டுமே கொண்டுள்ளனர்”, என்கின்றனர்.

வரலாற்று பொருள்முதல்வாத அடிப்படையில் வர்க்க சமூக வளர்ச்சியை புரிந்துக் கொள்ளா நிலையில் உள்ளோரின் புரிதல் அற்றப்போக்கே இவை. எல்லோருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு, அரசு அதிகாரம் என்பது தோன்றி வளர்ந்து வந்தது சில நூறு ஆண்டுகளுக்கு முன்தானே. நில உடைமை சமூகத்தில் மன்னர்களும் அதன் பரிவாரங்களும் அதிகாரத்தில் உள்ள அதன் மந்திரிகளும் தந்திரிகளும் அதிகாரம் படைத்தவர்களாகவும் அங்கே கல்வி எல்லோருக்கும் இல்லை என்பதும் புரிந்து கொள்ள வேண்டும். அன்று எல்லோரும் கல்வி கற்க வேண்டிய தேவையில்லை, அவரவர் குல தொழில் சார்ந்த அனுபவ அறிவு முதன்மையாக இருந்தது. கல்வி அறிவு அதிகாரம் படைத்தவர்களுக்கும் கருத்து பரப்புவர்களும் அவசியமானதாக இருந்தது.

எல்லோருக்கும் கல்வி எல்லோருக்கும் வேலை வாய்ப்பு எல்லோரும் சமம் என்பது பிரெஞ்சு புரட்சிக்கு பிறகு உலகெங்கும் பேசுப் பொருளாகவும் நடைமுறைக்கும் வந்தது. அதற்கு முன் உடல் உழைப்பு கூட்டத்திற்கு கல்வி இல்லை உடல் உழைப்பு இல்லாத மூளை உழைப்பு கூட்டம் கல்வி கற்று உடல் உழைப்பவர்களை ஏய்த்து வாழ்ந்தது. அதில் மதத்தை முன்வைத்து கருத்தியலை பரப்பிய அன்றைய மத தலைவர்களுக்கும் மத நிறுவனங்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. அச்சமுக கடமையாக அவை இருந்தது. உழுவுத் தொழில் செய்பனும் கைத்தொழில் செய்பவனும் தனக்கான தொழில் செய்வது போல் மத ஆச்சாரங்களை வளர்க்கும்தொழில் செய்தவர்கள் அதற்கான கல்வி நிலையில் இருந்தனர். அதனை வெறும் பார்ப்பனர்களாக மட்டுமே எதிரியாக சுருக்கிப் பார்ப்பவர்கள் வர்க்க சமூகத்தின் அடிப்படைகளை புரிந்து கொள்ளவில்லை. ஆதியில் ஒன்றாக இருந்தவர்கள் தொழிலாள் பிரிந்தனர் என்ற சமூக இயக்கத்தையும் புரிந்துக் கொள்ளவில்லை.

சமுதாயத்தின் ஏற்றதாழ்வுக்கு அங்கு நிலவும் பொருளாதார சுரண்டல், சமூக அடக்குமுறையும் நிலவும் வர்க்க அரசின் தேவைக்காக நிகழ்கிறது. நம்மிடையே உள்ள பார்ப்பனர் எதிர்பாளர்கள் உண்மையான சுரண்டலாளன் ஆளும் வர்க்கத்தை விட சாதி எதிர்ப்பு முதன்மையாக காண்கின்றனர். இவை அன்றைய காலனிய் ஆட்சிகாலம் தொட்டு நடக்கும் முறையாகதான் உள்ளது. நேரடி ஆட்சி அதிகாரத்திலிருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கவில்லை அதேபோல் நிலவுடைமை சமுக இருப்பை எதிர்க்காமல் அதன் கருத்தியல் அம்சமான சனாதன எதிர்ப்பு (பார்பனர் எதிர்ப்பு), சாதி தீண்டாமை எதிர்ப்பு என்ற பிரிட்டிஷ் ஆட்சியை ஒழிப்பதை முதன்மையாக இல்லாதது போலவே அந்த அரசும் சிற்சில சீர்திருத்தங்கள் மூலம் நிலவுடைமை சமூக இழிநிலைகளை போக்க முன் வந்தது. அவை தற்காலிக பயனை ஸ்தல அளவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைத்தது. ஆனால் சுரண்டல், ஒடுக்குமுறையிலிருந்து விடுதலைதான் கிடைக்கவில்லை .

சாதி அமைப்பை கட்டிக்காக விரும்பும் ஒரு பிரிவு சனாத்தான ஒழிப்பு பார்ப்பன எதிர்ப்பு மட்டும் பேசுகிறது. இவர்கள் பார்ப்பனர் அல்லாவர்கள் அரசின் உயர் பதவியில், அரசின் நல திட்டங்களால் சமூகத்தில் உயர்வான நிலைக்கு வந்தவர்கள். இந்த அமைப்பு முறையினால் அதிகாரம் படைதவர்களாகவும் ஆளும் வர்க்க நலன் சார்ந்தவர்களாகவும் இருப்பர். இவர்கள் சாதிமுறை நீடித்தால் தான் தங்களுக்கான சலுகை கிடைக்கும் என்பர். சாதி ஒழிப்பதை விட சாதி இடஒதுகீடை விரும்புவர்கள். இந்த கூட்டம் சுரண்டும் கூட்டத்தின் பிரதிநிதிகளே. இவர்கள் வாழும் வாழ்க்கையும் இவர்களுக்கான சிந்தனையும் இவர்களின் வர்க்க சிந்தனையாக அமைகிறது. அதாவது இவர்கள் சமுதாயத்தில் வைக்கும் பாத்திரமும் வர்க்கத் தன்மையும் அவர்கள் சிந்தனையை தீர்மானிக்கிறது. இங்கே நாம் காண வேண்டியது அவர்கள் வர்க்கரீதியாக எந்த வர்க்கத்தின் நலனுக்காக செயல் புரிபவர்கள் என்பதே. இதன் அடிப்படையில் சாதி ஒழிப்பில் அம்பேத்கர் பெரியார் பாத்திரம் சுருக்கமாக பார்ப்போம்.

மார்க்சின் கூற்றுப்படி, இங்குள்ள அதிகார வர்க்கப் பதவிகளில் உள்ளவர்கள் சாதி கடந்து வர்க்கமாக ஒடுக்கும் வர்க்கத்தின் கருவியாக செயல்படுகிறார்கள். அவர்கள் எந்தப் பதவி வைக்கிறார்களோ அந்த பதவிக்கான பணியை ஆளும் வர்க்கத்தின் நலனில் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். அவர் பிறப்பால் எந்த சாதியாக இருந்தாலும். அவை தான் ஆளும் வர்க்கத்தின் சட்ட திட்டங்கள். இங்கே அரசின் கருவியான இவர்கள் மற்றவர்களை ஒடுக்கும் சுரண்டும் பணியை செய்கின்றனர். வர்க்கத்தால் இவர்கள் சுரண்டும் வர்க்கதினரே.

சனாதன பார்ப்பன எதிர்ப்பு பேசி அரசு பதிவிகளுக்கு வருவோர் பணி அடிப்படையில் வர்க்கமாக பார்ப்பதா சாதியாகவா? மேலும் அரசு பதவிகளுக்கு வந்து விட்டால் எல்லா சாதியினரும் சமம் ஆகி சமாதானம் வந்துவிடுமா, சனாதனம் ஒழிந்து விடுமா? அதிகார வர்க்கத்தில் தங்களுடைய பங்கு கேட்டு தாங்களும் சுரண்ட கொள்ளை அடிக்க இடம்தானே? இவை சமத்துத்தையோ சுதந்திரத்தையோ விடுதலையையோ தருமா?

இந்த சமூகத்தில் வாழ்வதற்கான கொள்ளையடிப்பதற்கான ஒடுக்குவதற்கான இடம் கேட்பது சாதி ஒழிக்க பயன்படுமா?

இன்றைக்கு சாதியால் அடக்கி ஒடுக்கப்படும் மக்கள் கூடுதலான கொடூரங்களை அனுபவிக்கிறார்கள். ஆனால் இதிலிருந்து விடுதலை என்பது பெரியார் சொன்ன வழியிலோ, அம்பேத்கர் சொன்ன வழியிலோ, ஏன் தலித்தியம் பேசுவோர் கூறும் வழியிலோ, இல்லையில்லை NGO-கள் கூறும் வழியிலோ சாத்தியம் இல்லை. ஏனென்றால் சாதி ரீதியாக ஏற்படும் எல்லா துன்பதிற்கும் காரணமான இந்த சமூக பொருளாதார அரசியல் அமைப்பே, இதனை இந்த மேற்காணும் பிரிவினர் புரிந்துக் கொள்ளவில்லை, ஆகவே இவர்களால் முன்வைக்கப்படும்கொள்கைகள் இதுவரை வெற்றி பெற முடியவில்லை, இனியும் வெற்றிப் பெறப் போவதில்லை சாதிய ‘கொடுமைகளும் அவர்களின் முன்னெடுப்பால் தீர்வில்லை. தினம் தினம் மக்கள் கடந்து செல்லும் இங்குள்ள எல்லா அடக்குமுறைகளும் ஒடுக்குமுறைகளும் இந்த பிற்போக்கான நடைமுறைகளை கட்டிக்காக்கும் ஆளும் வர்க்கத்தின் அரசியல், பொருளாதார நலன்களை பாதுகாத்து வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டே நிகழ்கிறது என்கிறது மார்க்சியம். ஆகவே இந்த ஒடுக்குமுறையின் நுகத்தடியை தூக்கியெறிய சொல்கிறது மார்க்சிய லெனினிய தத்துவம். ஆனால் இதனை விடுத்து ஆளும் வர்க்கங்களுடன் கூடிக்குலாவிக் கொண்டு அவர்கள் பின்னால் அணிவகுக்க வேண்டும் என்று சந்தர்ப்பவாதிகள் சுயநலப் போக்குள்ளவர்கள் சொல்கின்றனர். இதுதான் சீர்திருத்தவாதம் பேசும் சந்தர்ப்பவாதிகளின் வழிகாட்டல் ஆகும்.

வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் போது மக்கள் சாதியை கடந்து ஒன்றுபடுகிறார்கள், சாதி ஆதிக்க சக்திகள் ஒதுக்கப்படுகிறார்கள் என்பதை அன்றைய புரட்சிகரக் கட்சியின் வழிகாட்டுதலின் கீழ் முன்னெடுத்த போராட்டங்கள் வர்க்க ஒற்றுமையை அனைத்து சாதியினருக்கும் இடையில் ஏற்படுத்தியது. சாதிமுறை உள்ளிட்ட அனைத்துவகையான பிற்போக்கு அம்சங்களும் தூக்கி எறியப்படும். அதற்கு தேவை சமூக மாற்றதிற்கான புரட்சி ஒன்றுதான் ஒரே வழியாகும் என்பதனை நிரூபித்தன. அத்தகைய புரட்சிதான் இந்த எல்லா சீர்கேடுகளையும் துடைதெறியும்.

சாதியின் தோற்றம் எப்படி அதன் சமூக தேவைக்காக உருவானதோ அந்த உற்பத்தி முறையை மாற்றி அமைக்கவும் புதிய சமூக உறவுகளிலிருந்து இந்த கேடான தீண்டாமையையும் சாதி ஒடுக்கு முறைக்கான எல்லா காரணிகளையும் ஒழிப்பதே தீர்வாகும். அதிகார வர்க்கமாக பல்வேறு சாதிகளிலிருந்து பிரதிநிதிகள் இருப்பது போல ஒடுக்குமுறைக்கு உள்ளானவர்களும் அனைத்து சாதிகளிலும் உள்ளனர். அதிகாரத்துவ சமூக அமைப்பு பேணும் சாதியத்தை தகர்க்கும் பொருட்டு வர்க்க அடிப்படையிலான பல்வேறு அரசியல் காரணிகள் ஒடுக்கு முறைக்கு ஆட்படுகிற அனைத்து சாதிகளையும் சேர்ந்த உழைக்கும் ஏழை எளிய மக்களை ஓரணியில் ஒன்றிணைத்து போராட வேண்டியுள்ளது. சாதிய உணர்வுகளை விட்டொழிந்து புத்துலகம் படைக்கும் உணர்வுடன் அனைத்து உழைக்கும் ஏழை எளிய சாதியில் உள்ளவர்கள் ஒன்றுபட்டு போராடுவது சாத்தியமானதே.

தொடரும்...





No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்