ஆணாதிக்க சமூகத்தில் பெண்ணின் இடம் என்னவென்று நான் சொல்ல தேவையில்லை! அவை தெரிந்துக் கொள்ள சற்று சமூக விஞ்ஞானம் அவசியம்
மேலும், இங்கு அவள் என்ன செய்ய வேண்டும் யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் யார் கூட பழக வேண்டும் என்பது சமூக அமைப்பான ஆண் ஆதிக்கம்தான் தீர்மானிக்கிறது. இதில் அந்த குறிப்பிட்ட பெண் வீட்டார் மட்டுமல்ல இந்த சமூக அமைப்பின் நியதியாக இதனை கடைபிடிக்கும் பொழுது அந்த தனிமனிதர்களை தண்டிப்பதனால் தண்டனை தடுக்கப்பட்டு விடுமா? இந்த கேடுகெட்ட ஆணாதிக்க சமூகம் இல்லாதொழிக்க வேண்டி உள்ளது அதனை ஒழிப்பதை பற்றி பேசாமல் நல்ல வசதி படைத்த பையன் நல்ல சம்பளம் கல்யாணத்தில் என்ன பிரச்சினை என்று கேட்கும் சமூகத்தில் தனக்கான இடம் தேடும் மாறாநிலைவாதிகளே குறிப்பிட்டவர்கள் தான்வாழ மட்டும் நினைக்கும் இந்த கூட்டம் மற்றவர்கள் உழைத்து உழைத்து செத்துக் கொண்டிருக்கிறார்களே அவர்களை பற்றி என்ன சொல்கிறது?
இந்த விடயத்தில் அந்த பையனின் அப்பா சொல்லும்வாதம் சரியாக படலாம், சுர்ஜித் குடும்பத்தின் வெறிச்செயலை விட மோசமானது இல்லையா?. கோவத்துல உன் மகளத்தானே வெட்டி இருக்கனும் ஊரான் வீட்டு புள்ளைய ஏன்டா வெட்டுறனு தானே அவரின் வாதம். இவை எவ்வகையிலும் தீர்வில்லை.
நம் சமூக அமைப்பை ஒரு அங்குலம் கூட மாற்றமல் உள்ளதில் தேடும் வேலைதான் இவை.
அதனால் இதுவரை நடந்த ஆணவ படுகொலை பற்றி சற்று தேடுவோம்!
திவ்யா இளவரசன் திருமணம் அதற்கு பிறகான சம்பங்கள் முழுமையாக இந்த இணைப்பில்
கௌசல்யா சங்கர் காதல் திருமணத்தில் சங்கர் படுகொலை அதன் புரிதலை
2016இல் இருவரும் சாதி மறுப்பு திருமணம் செய்தனர். சாதி மறுப்பு திருமணம் செய்ததுதான் இந்தக் கொலைக்கு காரணம் எனக் கூறும் கெளசல்யா, சாதியின் குருதிவெறிக்குப் பலியான சங்கரின் இழப்பு இன்றும் தன்னை வாட்டுவதாகக் கூறினார்.சங்கர் கொல்லப்பட்ட வழக்கில், கெளசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாயார் அன்னலட்சுமி, தாய் மாமன் பாண்டித்துரை, மற்றும் கூலிப்படையைச் சேர்ந்த எம். மணிகண்டன், எம்.மைக்கேல், பி செல்வக்குமார், பி.ஜெகதீசன், தன்ராஜ், தமிழ் கலைவாணன், கல்லூரி மாணவர் பிரசன்ன குமார், மற்றொரு மணிகண்டன் என 11 பேரை உடுமலைப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.
கெளசல்யாவின் தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை மற்றும் பிரசன்னா ஆகியோர் மீதான குற்றத்தை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கத் தவறியதால், அவர்கள் மூன்று பேரும் விடுவிக்கப்பட்டனர்.குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட எட்டு பேரில், கெளசல்யாவின் தந்தை சின்னச்சாமி, கூலிப்படையைச் சேர்ந்த ஜெகதீஷ், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மைக்கேல், ஆகிய ஆறு பேருக்கு தூக்கு தண்டனையும், தன்ராஜ் என்பவருக்கு ஆயுள் தண்டனையும், கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த மணிகண்டனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
அப்போது, வழக்கின் முதன்மைக் குற்றவாளியான சின்னச்சாமியை குற்றவாளியாகக் கருத போதிய ஆதாரங்கள் இல்லை என விடுவித்த நீதிமன்றம், மற்றவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையையும், ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.
எதிர்கட்சியாக இருந்தபோது, இந்த வழக்கில் எங்களுடன் துணை நிற்போம் எனக் கூறிய அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், தற்போது முதல்வர் ஆனதும் எங்களைக் கைவிட்டுவிட்டார்,” என்றார் கெளசல்யா.
எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஆணவக் கொலைக்கு எதிராக தனிச் சட்டம் இயற்றப்படும் எனக் கூறியிருந்தார். நாங்களும் அவரைச் சந்தித்து, அதற்கான சட்ட முன்வடிவத்தையும் கொடுத்து வந்தோம். ஆனால், இன்று வரை அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் இல்லை,” என்றார் கதிர்.(நன்றி பிபிசி செய்தி பிரிவு 30 டிசம்பர் 2023)
கோகுல் ராஜ்
இந்த வழக்கின் விவரத்தைப் பார்த்தால், கோகுல்ராஜ் என்ற பொறியியல் பட்டதாரி இளைஞர், கல்லூரியில் தன்னுடன் படித்து வந்த வகுப்புத் தோழியுடன் நெருக்கமான நட்பில் இருந்துள்ளார். தனது செல்போன் பழுதடைந்ததாக அந்தப் பெண்ணிடம் அவர் கூறியுள்ளார். அதற்கு, `நான் பணம் கொடுக்கிறேன்' எனக் கூறி அந்தப் பெண் வரவழைத்துள்ளார். இதையடுத்து, சேலம் மாவட்டம் ஓமலூரில் இருந்து கோகுல்ராஜ் வந்தார். இந்தப் பெண்ணும் தனது சொந்த ஊரான பரமத்தி வேலூரில் இருந்து திருச்செங்கோடு பேருந்து நிலையம் வந்துள்ளார். அப்போது, 500 ரூபாய் தாள் இரண்டை அந்தப் பெண் கொடுத்துள்ளார். அங்கிருந்து திருச்செங்கோடு மலைக்கு சாமி கும்பிடுவதற்காக இருவரும் சென்றுள்ளனர். அங்கு அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோது, தீரன் சின்னமலை பேரவையைச் சேர்ந்த யுவராஜ் தனது ஆட்களுடன் அங்கு வந்துள்ளார்'' என்கிறார். கோகுல்ராஜுடன் சென்ற இளம்பெண் கொடுத்த புகாரின் காரணமாக சங்ககிரியை சேர்ந்த தீரன் சின்னமலை பேரவையின் தலைவர் யுவராஜ், தங்கதுரை, அருள் செந்தில், செல்வக்குமார், சிவக்குமார், அருண், சங்கர் உள்பட 17 பேரை நாமக்கல் போலீஸார் கைது செய்தனர்.
கோகுல்ராஜுடன் சென்ற அந்தப் பெண், அனைத்து வகைகளிலும் வழக்குக்கு உதவி செய்தார். காவல்துறையில் அந்தப் பெண் கொடுத்த புகாரின்பேரில்தான் வழக்கே பதிவு செய்யப்பட்டது. ஆனால், நாமக்கல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த காலகட்டத்தில் அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று சிலர் மிரட்டியுள்ளனர். அவரும், `கோகுல்ராஜ் யார் என்றே தெரியாது' எனக் கூறிவிட்டார். இதனால் வழக்கிலும் சிக்கல் ஏற்பட்டது'' என்கிறார்.
தருமபுரி இலக்கியம்பட்டியில் பிரபல பிரியாணி ஓட்டல் செயல்பட்டு வருகிறது. அந்த ஓட்டலில் கிரில் மாஸ்டராக பணிபுரிகிறார், அவர் தருமபுரி வி ஜெட்டி அள்ளியை சேர்ந்த முகமது ஆசிக் (25). அவரை 2024 ஜீலை 27 -ம் தேதி பணிபுரிந்துக் கொண்டிருந்த இடத்தில் வைத்துக் கொன்றுள்ளனர். டாக்டரான பட்டியல் இன சமூகத்தை சார்ந்த பெண்ணை காதலித்த குற்றதிற்காக கொல்லபட்டா முகமது ஆசிக் பெரிய பேசுபொருளாகவில்லை!?
முழு தகவலுக்கு இந்த பகுதியை அழுத்தி பாருங்கள்
இதுபோல் பல படுகொலைகளை நாம் பேசிக் கொண்டே போகலாம் இவை ஏன் இவை சமூகத்தில் அரங்கேறுகிறது என்பதும் இதற்கான தீர்வையும் தேடாமல் பிரச்சினை பேசி என்ன பயன்?
No comments:
Post a Comment