மனித வரலாற்றில் முதலாவது முன் தேவை எப்படியும் மனிதர்கள் வாழ வேண்டும். அதன் பொருள் அவர்கள் உண்ண வேண்டும், உடை அணிய வேண்டும், குடி இருக்க வேண்டும். அவர்களது முதலாவது வரலாற்று செயல் இந்த வாழ்க்கை தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய சாதனங்களை உற்பத்தி செய்வதாக இருந்தது.
மனித செயல்பாட்டிற்கு இரண்டு அம்சங்கள் இருக்கின்றன : உற்பத்தி மற்றும் சமூக கூட்டுறவு.
பொருளாயத உற்பத்தி மனிதனுடைய சமுதாய வரலாற்றில் தொடக்கத்தை குறிக்கிறது. இதுதான் மனிதனை மிருகத்திலிருந்து வேறுபடுத்தி காட்டுகிறது. இதை மார்க்ஸ் " மனிதர்களை மிருகங்களிலிருந்து உணர் நிலையில் மூலம் மதத்தின் மூலம் இன்னும் நீங்கள் விரும்பிய எல்லா விஷயத்தின் மூலமும் வேறுபடுத்தி காட்ட முடியும். அவர்கள் வாழ்க்கைக்கு தேவையான சாதனங்களை உற்பத்தி செய்வதற்கு தொடங்கிய உடனேயே அவர்கள் தாங்களாகவே மிருகத்திடமிருந்து வேறுபட்டு காணத் தொடங்கி விட்டார்கள் ". (மார்க்ஸ் ஏங்கெல்ஸ் தேர்வு நூல் பாகம் 1 பக்கம் 20 ).
இலக்கு 51 இதழில் பேசப்பட்டுள்ள கட்டுரைகள்
1). நாட்டு நடப்பும் இடதுசாரிகளின் பணியும்
2). ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகத்தின்இரண்டு போர்த்தந்திரங்கள் - லெனின். பாகம் 6.
3). திறந்தநிலை மார்க்சியம் யாருக்கான மார்க்சியம்
4). நிலப்பிரபுத்துவத்திலிருந்து முதலாளித்துவத்திற்கு மாறிச்செல்வதற்கான இரண்டுபாதைகள்.(ஆய்வுக்கட்டுரை)
இலக்கு 51 இதழ் PDF வடிவில் உள்ளதை இங்கே தொட்டு பதிவிறக்கம் செய்துக் கொண்டு வாசிக்கலாம் தோழர்களே
No comments:
Post a Comment