மார்க்சிய ஆசான் எங்கெல்ஸால் எழுதப்பட்ட கூலிமுறை என்ற நூலின் சிலபக்கங்கள் உங்களின் வாசிப்புக்காக கீழே தருகிறேன்.
தொழிற் சங்கம் தோற்றம் அதன் வளர்ச்சியில் ஏற்பட்ட அன்றைய வரலாற்று நிகழ்வுகளை ஆசான் பேசி இருப்பார் இதனை இங்குள்ளவர்கள் இதுவரை கவனத்தில் கொள்ளவில்லையோ என்று எனக்கு தோன்றும் அதனால் சில விவாதிக்கதான் இதனை பகிர்கிறேன் தோழர்களே.
தோழரின் முகநூல் பதிவு அப்படியே கீழே:-
இங்கிலாந்து புதிய பிரதமரின் வலதுசாரி வரலாறு!
இங்கிலாந்து நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியை (பழமைவாதக் கட்சி) வீழ்த்தி கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான லேபர் கட்சி (தொழிலாளர் கட்சி) வெற்றி பெற்றுள்ளது. மொத்த முள்ள 650 நாடாளுமன்ற தொகுதிகளில் 412 தொகுதிகளில் வென்று அதீத பெரும்பான்மையுடன் ஆட்சி யில்அமர்கிறது லேபர் கட்சி.
இந்த தேர்தலில் லேபர் கட்சியின் முன்னாள் தலைவராகவும் இங்கிலாந்து எதிர்க் கட்சி தலைவராகவும் இருந்த ஜெர்மி கோர்பின் பாலஸ்தீன ஆதரவு மற்றும் முற்போக்கு கொள்கைகளை முன் வைத்தார். இதன்காரணமாக அக்கட்சியின் புதிய தலைவரான ஸ்டார்மர், அவருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பை மறுத்ததுடன் கட்சியை விட்டும் நீக்கினார்.
தொழிலாளர் கட்சி எனப் பொருள்படும் லேபர் கட்சி, பெயரில் தொழிலாளர் கட்சி என்று இருந்தாலும், அது ஒரு முதலாளித்துவக் கட்சியே ஆகும். அதில், கோர்பின் போன்ற இடதுசாரி முற்போக்கு சிந்தனையாளர்கள் ஒரு தரப்பு இருந்தனர். அவர்களை அக்கட்சியில் உள்ள பெரும் பணக்கார அதிகார வர்க்க ஆதரவாளர்கள் ஒழித்துக் கட்டினார்கள்.
கடந்த நான்காண்டு காலத்தில், தொழிலாளர் கட்சிக்குள் இருந்த இடது சாரிகளை ஒழித்துக் கட்டுவதில் முனைப்புடன் செயல்பட்டவர்தான் தற் போது பிரதமராக பொறுப்பேற்கப் போகிற அக்கட்சியின் தலைவர் ஸ்டார்மர். ஜெர்மி கோர்பின் போன்றே, லேபர் கட்சியில் உள்ள மேலும் சில முற்போக்கு நபர்களுக்கும் போட்டியிட அனுமதி வழங்காமலும் கட்சியில் செயல்பட விடாமலும் லேபர் கட்சியின் திசையை மாற்றினார் ஸ்டார்மர்.
ஜெர்மி கோர்பின் மகத்தான வெற்றி!
இந்நிலையில், ஜெர்மி கோர்பின் இஸ்லிங்டன் வடக்கு தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு லேபர் கட்சியின் மிகப்பெரும் இந்திய வம்சாவளி கோடீஸ்வரரான பிரஃபுல் நர;குனை வீழ்த்தி மகத்தான வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. இவரது வெற்றி மிகப்பெரும் வெற்றியாக சர்வதேச அளவில் பாராட்டப்படுகிறது.
தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து பிரதமரும் கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவருமான ரிஷி சுனக் ராஜினாமா செய்துள்ளார். ஸ்டார்மர் புதிய பிரதமராக அடுத்த வாரம் பதவியேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இது லேபர் கட்சிக்கு சிறந்த வெற்றியாக பார்க்கப்படுகிறது. எனினும் ஏகாதிபத்திய நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தில் இக்கட்சி வியத்தகு மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்புகள் இல்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பாக, இஸ்ரேல் ஆதரவு, பாலஸ்தீனத்திற்கு அங்கீகாரம் மறுப்பது, போர் பொருளாதாரம், நேட்டோ ஆதரவு, இஸ்லாமிய வெறுப்பு, அதிதீவிர தனியார்மயமாக்கல், தொழிலாளர் விரோதப் போக்கு, புலம்பெயர்ந்தோர் வெறுப்பு என அனைத்திலும் இங்கிலாந்தின் கன்சர்வேடிவ் கட்சி, லேபர் கட்சி, தாராள ஜனநாயகவாதிகள் ஆகியோருக்கு இடையே பெரிய வேறுபாடுகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இடது பக்கம்:
இங்கிலாந்தின் புதிய பிரதமர் Kein Stammer
வலது பக்கம்:
தொழில் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட இடதுசாரிப் போக்காளர் Jeremy Corbyn
No comments:
Post a Comment