இலக்கு 52 இணைய இதழ் PDF வடிவில்

 மார்க்சிய லெனினிய கல்விக்கான முயற்ச்சியின் தொடர்ச்சியாக வெளிவரும் இணைய இதழ்.

இதழை PDF வடிவில் பதிவிறக்கம் செய்து கொள்ள இந்த லிங்கை அழுத்தவும்

நாட்டின் நுகர்பொருள் கலாச்சாரம் அதிகரித்திருப்பது, ஒரு சிறு பிரிவினருக்கு சேவைத் துறையில் வளமான வேலைகள் கிட்டியிருப்பது, ஒரு புதிய மேல் நடுத்தர வர்க்கம் உதித்தெழுந்திருப்பது, நவீன மின்னணுப் பொருட்கள் மற்றும் மோட்டார் வாகனங்களின் சந்தை விரிவடைந்திருப்பது மற்றும் இவற்றின் பயன்பாடு அதிகரித்திருப்பது உள்ளிட்டவைகளைச் சுட்டிக்காட்டும் இவர்கள், புதிய பொருளாதாரக் கொள்கைகளை விதந்தோதுகிறார்கள். அம்பானி வீட்டு திருமணம் உட்பட.

நமது தோழர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள சில கருத்துகளை முன் வைத்தே எமது கட்டுரைகள் எப்பொழுதும் இருக்கும் இந்த இதழில் பேசப்பட்டுள்ளவை பார்ப்போம்.
1.வெகுஜனங்களிடையே கட்சிப் பணி. - லெனின். பாகம் - 1.
2.இங்கிலாந்தின் பொருளாதார வளர்ச்சி
3.சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி? லியுஷாவோகி-பாகம்1
4.சோசலிசமும்‌ முதலாளிய மீட்சியும்‌(SOCIALISM AND CAPITALIST RESTORATION) -பகுதி 1

5.பாட்டாளி வர்க்க கட்சி

முதல் கட்டுரையின் சாரம். வெகுஜன இயக்கம் நிலையானதுதானா, ஜீவசக்தி கொண்டதுதானா என்று அடிக்கடி சந்தேகம் எழுந்தது. பிறகு ஒரு மாற்றம் ஏற்படும், திடுமென நடைபெறுவதாகத் தோன்றும்படி புரட்சி இயக்கம் முழுவதும் கிளர்ந்தெழுந்து மேலும் உயர்வான ஒரு புதிய கட்டத்தை அடைந்துவிடும். பாட்டாளி வர்க்கமும் அதன் முன்னணிப் படையான சமூக ஜனநாயகமும் புதிய நடைமுறைப் பணிகளை எதிர்நோக்க வேண்டியதாகிவிடும். இப்பணிகளை நிறைவேற்ற ஏதோ தரைக்கடியிலிருந்து வெடித்துவிட்டது போலத் தோன்றும் புதிய சக்திகள், இந்த மாற்றத்துக்கு சற்று முன்புவரை யாரும் நினைத்துக்கூட இருக்க முடியாத புதிய சக்திகள் உதித்தெழும். ஆனால் இவை யாவும் திடுதிப்பென நிகழ்ந்தவை அல்ல; சமூக - ஜனநாயக இயக்கத்தினுள் ஊசலாட்டங்களின்றி, போக்குகளுக்கு இடையிலான போராட்டமின்றி, நெடுங்காலத்துக்கு முன்னரே இறந்தொழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட காலாவதியான கருத்தோட்டங்களை நோக்கி ஏற்படும் சரிவுகளின்றி நிகழ்ந்தவை அல்ல.

ஊசலாட்டங்களுக்குரிய இத்தகைய ஒரு காலக்கட்டத்தில்தான் ரஷ்யாவில் சமூக ஜனநாயகம் மீண்டும் இப்பொழுது கடந்துகொண்டு இருக்கிறது. சந்தர்ப்பவாதத் தத்துவங்களை உடைத்துக்கொண்டு அரசியல் கிளர்ச்சி தனக்கு வழிவகுத்துச் செல்ல வேண்டியிருந்த காலம் ஒன்று இருந்தது. புதிய பணிகளை நிறைவேற்றும் திறன் நம்மிடம் இல்லை என்பதாய் அப்பொழுது அச்சம் தெரிவிக்கப்பட்டு வந்தது. பாட்டாளி வர்க்கத்தின் கோரிக்கைகளுக்குப் பின்நங்கிய நிலையில் சமூக ஜனநாயகவாதிகள் சென்று கொண்டிருந்ததற்கு நியாயம் கற்பிப்பதற்காக அப்பொழுது “வர்க்கம்”என்னும் உரிச்சொல் மிதமிஞ்சி திரும்பத் திரும்ப உபயோகிக் கப்பட்டது. அல்லது வர்க்கத்தின் பால் கட்சியின் போக்கு பற்றிய வால்பிடிப்பாளரது வியாக்கியானம் பயன்படுத்தப்பட்டது. கிட்டப்பார்வையால் விளைந்த இந்த அச்சங்களையும் பிற்பட்ட கருத்தோட்டங்களையும் இயக்கத்தின் வளர்ச்சியானது தூர விலக்கித் தள்ளிவிட்டது. இப்புதிய எழுச்சியுடன் கூடவே, காலங்கடந்துவிட்ட குழுக்களுக்கும் போக்குகளுக்கும் எதிரான போராட்டமும் வேறொரு வடிவத்தில்தான் எனினும் மீண்டும் நடைபெறுகிறது. 

இரண்டாம் கட்டுரையின் தேவை:-இந்தப்பகுதி வரலாற்று புரிதலுக்காக எழுதப்படுகிறது. இதன் தகவல்கள் சமூக அறிவை பெறப்பயன்படும் மேலும் நம் நாட்டில் இன்று நடந்தேறிக் கொண்டிருக்கும் கிராமிய சிக்கல்களை புரிந்துக் கொள்ள பயனளிக்கும் என்ற நோக்கத்தில். விவசாய நாடாகயிருந்த இங்கிலாந்து தொழில்மயமான நாடாக மாறியது பற்றி இந்த தேடல். பல தொழில்களும், புதிய தொழில் நுட்ப முறைகளும் பெரிதும் ஏற்பட்டு தொழிற்புரட்சியின் வேகத்தை மேலும் மேலும் அதிகரிக்கச் செய்து இங்கிலாந்தைப் பொருளாதார உச்சநிலைக்கு இட்டுச் சென்றன. இங்கிலாந்தின் பொருளாதார வரலாறு தொடக்கலிருந்து மெதுவான ஆற்று நீர்ப் போக்குப் போலிருந்தது. ஆனால், 19தாம் நூற்றாண்டுகளில் பொருளாதார நிலை முற்றிலும் மாறியது. அவற்றின் அடிப்படையிலேயே நவீனகாலப் பொருளாதார அமைப்பு முறைகள் ஏற்பட்டுள்ளன. அதன் காரணமாக ஒவ்வொரு துறையிலும் , குறிப்பாக விவசாயம் , தொழில்துறைகளில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டன .

பொருளாதார அமைப்பு பழமையிலிருந்து விடுபட்டு வியத்தகுமாறுதல்களுடன் வேகத்தையும் பெற்றது. அம்மாறுதல்களையே பிற்காலத்தில் பொருளாதார, சரித்திர மேதைகள் பெரும் புரட்சிகள் என்றனர். அவற்றின் காரணங்களையும், இயல்புகளையும், விளைவுகளையும்பற்றி ஆராய்ந்து பூரணமாகத் தெரிந்துகொள்ளுமுன், பதினெட்டாம் நூற்றாண்டின் நுழைவாயிலில் இங்கிலாந்தின் பொருளாதார நிலையானது என்பதை ஓரளவு தெரிந்து கொள்ளுதல் பொருத்தமாகும். பிரிட்டனின் பொருளாதார வரலாற்றினை ஆய்வு செய்யுங்கால் பொருளாதாரக் கோட்பாடுகளைப் பின்னணியாக வைத்துப் பார்ப்பதே இன்றியமையாததாகும்.

அடுத்த கட்டுரை:- கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தம்மைத் தாமே வளர்த்துக் கொண்டுதிடப்படுத்திக் கொள்வது எப்படி என்பதைப் பற்றியே நான் உங்களுடன்விவாதிக்க உள்ளேன். கட்சியைக் கட்டியமைத்து உறுதிப்படுத்தும் பணியைஎதிர்கொள்ளும் இத்தருணத்தில் இந்த விவாதம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.” - லியுஷாவோகி.

கம்யூனிஸ்டுகள் என்றாலேயே கம்யூனிசத்தைப் பற்றியும் மார்க்சியலெனினியத்தைப் பற்றியும் தெளிவாக அறிந்திருப்பார்கள் என்று இங்குபலரும் கருதுகிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை. கம்யூனிசஅமைப்பில் செயல்படும் பலருக்கும் இத்தகைய மார்க்சிய அறிவுகுறைவாகவே உள்ளது என்பதுதான் உண்மையாகும். சீனாவில் புரட்சிநடப்பதற்கு முன்பே உருவான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து 1939ஆம் ஆண்டில் லியுஷாவோகி இந்த நூலை எழுதினார். அதில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தம்மை தாமே வளர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார் என்றால் அங்குள்ளகம்யூனிஸ்டுகள் தங்களது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டிய நிலையிலேயே இருந்தார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்அல்லவா? நாம் இன்னும் தெரிந்துகொள்ள வேண்டியது அதிகம் உள்ளதுஎன்று நாம் கூறுவதாலேயே கம்யூனிஸ்டுகள் சோர்வடைந்துவிடுவார்களா?அல்லது நம்பிக்கை இழந்துவிடுவார்களா? அப்படியானால் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவரான லியுஷாவோகி இந்த நூலை எழுதிகட்சி உறுப்பினர்களுக்கு சோர்வை ஏற்படுத்தினாரா? உற்சாகம் ஊட்டினாரா?இந்தப் புத்தகத்தைப் படித்த சீனக் கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்கள்தான்ஒவ்வொருவரும் தனது சொந்த மார்க்சிய அறிவை வளர்த்துக்கொண்டு புரட்சியை நடத்தி முடித்தார்கள் என்பது வரலாறாகும்.

அடுதப்பகுதி:-முதல்‌ உலகப்‌ போரில்‌ ரசியாவிலும்‌ இரண்டாம்‌ உலகப்‌ போருக்குப்‌ பின்‌ சீனாவிலும்‌ கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும்‌ அதன்பின்‌ இந்தோசீன நாடுகளிலும்‌சோசலிசக்‌ கட்டமைப்பு உருவாயிற்று. எனினும்‌ இன்று உலகில்‌ எங்கும்‌ சோசலிச நாடுகள்‌ இல்லை என்பது கசப்பான அரசியல்‌ யதார்த்தம்‌. அதாவது நிறுவப்பட்ட சோசலிசத்‌ தளங்கள்‌ அனைத்தும்‌ தகர்ந்து விட்டன.

உலகில்‌ இப்பொழுது பொதுவுடைமைப்‌ புரட்சிகர இயக்கங்களும்‌ புரட்சிகர சிந்தனையாளர்களும்‌ மட்டுமே உள்ளனர்.

புதிய அனுபவங்களும்‌ நமக்கான படிப்பினைகளும்‌.

எந்தவொரு நாடும்‌ சோசலிசத்‌தளத்தை நிரந்தரப்‌ படுத்திக்‌ கொள்ளவில்லை, அவ்வாறு சோசலிசத்‌ தளங்கள்‌ இன்று இல்லை; வரலாற்றில்‌ பின்னடைவுக்கு உள்ளாயி உள்ளன. அப்படியென்றால்‌ வரலாற்றில்‌ பின்னடைவுக்கு உரிய அறிவியல் பூர்வமான காரணங்கள்‌ யாவை? இத்தகைய பின்னடைதல்‌ எல்லா சோசலிச நாடுகளிலும்‌ தவிர்க்க இயலாத்‌ நிகழ்வாக இருந்திருக்கத்தான்‌ வேண்டுமா? அதாவது உலகில்‌ சோசலிசத்‌ தளங்கள்‌ உருவாகி; பின்னடைவுக்கு, உள்ளாகியே தீரும்‌ என்பது பொதுவான கோட்‌பாடாகவே உருக்கொண்டுள்ளதா? சோசலிசத்‌ தளங்கள்‌ தகர்ந்தபின்‌ இனி உலகில்‌ புரட்சிக்கான இலக்கும்‌ திசைவழியும்‌ யாவை? என்பன போன்ற பலகேள்விகள்‌ எழுகின்றன.

அடுத்த கட்டுரை:-“பாட்டாளி வர்க்கக் கட்சி” என்ற தலைப்பில் ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை மார்க்சிய ஆசான்களின் நூலில் இருந்து எப்படி கற்றுக் கொள்வது என்பதை ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சியின் முக்கியத்துவம் மற்றும் தன்மைகளை மார்க்ஸ், எங்கெல்ஸ்,லெனின்,ஸ்டாலின் உள்ளிட்ட மார்க்சிய ஆசான்களின் நூல்களில் இருந்து தேடுவோம்.

இதன் மொத்தம்தான் இதழ் 52 இணைய இதழ் அதனை வாசித்து கருத்திடுங்கள் தோழர்களே.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்