நேற்றைய விவாதம் அதனை பற்றிய எனது குறிப்புகள்தான் இந்தப்பகுதி.
தோழர்களே, வகுப்பை ஒலி வடிவில் கேளுங்கள் மேலும் எனக்கான தயாரிப்புக்கு தேவை பட்டவற்றை எழுத்து வடிவில் தருகிறேன் நீங்களும் வாசித்து விவாதிக்க பயனளிக்கும் அதனால்தான்.
நமது ஆசான் லெனின், "பல எழுத்தாளர்கள், வருங்கால மார்க்சிஸ்டுகள், இந்த ஆண்டு மார்க்சிச தத்துவத்திற்கு எதிராக ஒரு உண்மையான பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர். அரையாண்டுக்கும் குறைவான காலத்தில், இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் மீதான தாக்குதல்களுக்கு பிரதானமாகவும் ஏறத்தாழ பிரத்தியேகமாகவும் அர்ப்பணிக்கப்பட்ட நான்கு புத்தகங்கள் வெளிவந்துள்ளன" என்று அனுபவ வாதிகள் பற்றிய 1908ல் எழுதிய விமர்சன பகுப்பாய்விலிருந்தே தொடங்குவோம்..
மார்க்சும் எங்கெல்சும் தமது தத்துவஞானக் கருத்துக்களை இயக்கவியல் பொருள் முதல்வாதம் என்று பலமுறை அழைத்ததை இவர்கள் அனைவரும் அறியாதவர்களாக இருந்திருக்க முடியாது. ஆயினும் இவர்களெல்லோரும், தமது அரசியல் கருத்துக்களில் கூர்மையான வேறுபாடு இருந்தபோதிலும், இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின்பால் தமது பகைமையில் ஒன்றுபட்டு, அதே போது தத்துவஞானத்தில் தங்களை மார்க்சியவாதிகள் என்று உரிமை கொண்டாடிக் கொள்கிறார்கள்! -லெனின் வார்த்தையை இங்கே அப்படியே பொருந்தும்.
மேலும் ஆசான் லெனின் மேற்கோள்தான்,""நவீன அறிவுக் கோட்பாடு", "அண்மைக்கால மெய்யியல்" (அல்லது "அண்மைய நேர்க்காட்சிவாதம்"), "நவீன இயற்கை விஞ்ஞானத்தின் தத்துவம்" அல்லது "இருபதாம் நூற்றாண்டின் இயற்கை விஞ்ஞான மெய்யியல்" ஆகியவற்றைப் பெருமையுடன் குறிப்பிடும் நமது துணிச்சலான போர்வீரர்களால் பொருள்முதல்வாதம் மறுக்கப்படுவதைக் காணலாம். "இந்த அண்மைக்கால கோட்பாடுகள் என்று கூறப்படுபவை அனைத்தின் ஆதரவுடன், இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை அழிக்க துணிந்த இவர்கள் அச்சமின்றி அப்பட்டமான மதவாத(நான் மொழிபெயர்பில்) விசுவாசத்தை நோக்கி செல்கின்றனர்".
ஆயினும் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸை நோக்கிய அவர்களின் அணுகுமுறை
குறித்த ஒரு வெளிப்படையான வரையறை என்று வரும்போது, அவர்களின் அனைத்து
தைரியமும் அவர்களின் சொந்த நம்பிக்கைகள் மீதான அவர்களின் மரியாதையும் உடனடியாக மறைந்து
விடுகின்றன. செயலில் - இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை, அதாவது மார்க்சியத்தை
முற்றிலுமாக கைவிடுவது; வார்த்தையில் சொல்வதானால், முடிவற்ற சூழ்ச்சிகள், பிரச்சினையின்
சாராம்சத்தைத் தட்டிக்கழிப்பதற்கான முயற்சிகள், அவற்றின் பின்வாங்கலை
மூடிமறைப்பதற்கான முயற்சிகள், பொதுவாக பொருள்முதல்வாதத்தின் இடத்தில் ஏதோவொரு பொருளை அல்லது மற்றொன்றை வைப்பது, மற்றும் மார்க்ஸ்
மற்றும் ஏங்கெல்ஸின் எண்ணற்ற பொருள்முதல்வாத பிரகடனங்களை நேரடியாக
பகுப்பாய்வு செய்ய தீர்மானகரமாக மறுப்பது. இது உண்மையிலேயே
"மண்டியிட்டு நிற்கும் கலகம்" ஆகும்.இது வகைமாதிரியான
மெய்யியல் திருத்தல்வாதமாகும், ஏனென்றால் திருத்தல்வாதிகள் மட்டுமே
மார்க்சியத்தின் அடிப்படைக் கண்ணோட்டங்களில் இருந்து விலகிச் சென்றதன் மூலமும், தாங்கள் கைவிட்ட
கண்ணோட்டங்களுடன் வெளிப்படையாகவும், உறுதியாகவும்
மற்றும் தெளிவாகவும் "கணக்குத் தீர்க்க" அவர்களின் அச்சம் அல்லது இயலாமையின்
மூலமாகவும் தமக்கென ஒரு வருந்தத்தக்க அவப்பெயரைப் பெற்றனர். மார்க்சின் சில பழங்கால
கருத்துக்களுக்கு எதிராக வைதீக மார்க்சியவாதிகள் பேச சந்தர்ப்பம் கிடைத்தபோது, (உதாரணமாக, மெஹ்ரிங் சில
வரலாற்று முன்மொழிவுகளை எதிர்த்தபோது) அது எப்போதுமே மிகத் துல்லியமாகவும், முழுமையாகவும்
செய்யப்பட்டதால், அத்தகைய இலக்கியக் கூற்றுகளில் தெளிவற்ற
எதையும் எவரும் ஒருபோதும் கண்டதில்லை.
மற்றபடி, மார்க்சிய மெய்யியல்
ஆய்வுகளில் உண்மையை ஒத்த ஒரு சொற்றொடர் உள்ளது. இது லூனாசார்ஸ்கியின் சொற்றொடர்:
"ஒருவேளை நாம் [அதாவது, ஆய்வுகளின் அனைத்து ஒத்துழைப்பாளர்களும்
வெளிப்படையாக] வழிதவறிவிட்டோம், ஆனால் நாங்கள் தேடுகிறோம்" (பக்.
161). இந்தச் சொற்றொடரின் முதல் பாதியில் ஒரு முழுமையான
உண்மையும், இரண்டாவது பாதி ஒப்பீட்டு உண்மையும் அடங்கியுள்ளன
என்பதை இந்த நூலில் சூழ்நிலைக்கு ஏற்ப விளக்க முயல்கிறேன். நமது தத்துவவாதிகள் மார்க்சியத்தின்
பெயரால் பேசாமல் ஒரு சில "தேடும்" மார்க்சியவாதிகளின் பெயரில் பேசியிருந்தால், அவர்கள் தங்களின்
மீதும் மார்க்சியத்தின் மீதும் அதிக மரியாதை காட்டியிருப்பார்கள் என்பதை மட்டுமே இந்த
நேரத்தில் நான் குறிப்பிடுவேன்.
என்னைப் பொறுத்தவரை நானும் தத்துவத்தில் ஒரு "தேடுபவன்"தான். அதாவது, மார்க்சியம் என்ற போர்வையில் நம்பமுடியாத அளவிற்கு குழப்பமான, பிற்போக்குத்தனமான ஒன்றை முன்வைக்கும் இந்த மக்களுக்கு எது முட்டுக்கட்டையாக இருந்தது என்பதைக் கண்டுபிடிப்பதே இந்த விமர்சனங்களில் எனக்கு நானே அமைத்துக் கொண்ட பணியாகும். - விளாடிமிர் லெனின். செப்டம்பர் 1908.(தொகுக்கப்பட்ட படைப்புகள், (see Collected Works, present edition, Vol. 37, p. 395).
1905-07 புரட்சியின் தோல்விக்குப் பின்னர் மார்க்சிசத்தை விட்டு வெளியேறிய கட்சி புத்திஜீவிகளின் ஒரு பிரிவினரிடையே பிற்போக்குத்தனமான காலகட்டத்தில் எழுந்த "கடவுளைக் கட்டியெழுப்புதல்" என்று அழைக்கப்படும் மார்க்சிசத்திற்கு விரோதமான ஒரு மத-மெய்யியல் போக்கை லெனின் குறிப்பிடுகிறார். "கடவுளை உருவாக்கியவர்கள்" (ஏ.வி. லூனாசார்ஸ்கி, வி.பஸாரோவ் மற்றும் பலர்) மார்க்சியத்தை மதத்துடன் சமரசம் செய்யும் முயற்சியில் ஒரு புதிய "சோசலிச" மதத்தை உருவாக்க உபதேசித்தனர். ஒரு காலத்தில் ஏ.எம்.கார்க்கி அவர்களை ஆதரித்தார். இங்குள்ள திறந்தநிலை மார்க்சியவாதிகள் கோட்பாட்டு உருவாக்கம் என்ற பெயரில் பௌதத்தை தழுவ சொல்வதும் உள்ள அமைப்புமுறையில் இடம் தேடுவதும் ஆளும் கும்பலிடம் தனக்கான இடம் கோரியும் நடந்துக் கொண்டிருக்கும் முறைமைகள் கவனத்தில் கொளல் அவசியம் ஆகும்.
திறந்தநிலை மார்க்சியம் பேசுவோர்,"அனுபவத்திற்கு வெளியே" மற்றும் நமது அறிவுக்கு வெளியே, சிந்திக்க முடியாத மற்றும் அறிய முடியாத ஒன்றை "தங்களுக்குள்ளேயே உள்ள விஷயங்களை" அங்கீகரிக்கின்றனர் என்று நமக்குச் சொல்லப்படுகிறது.
"அனுபவம்" மற்றும் அறிவின் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒன்று இருப்பதை ஒப்புக்கொள்வதன் மூலம் அவர்கள் உண்மையான மாயாவாதத்திற்குள் நழுவிவிடுகிறார்கள். இவர்கள் "அறியப்படாத" சூன்யத்தை தங்கள் அடிப்படையாக எடுத்துக்கொள்கிறார்கள். நமது உணர்வுகள் ஒன்றே அறிவின் ஊற்றுக்கண் என்று அவர்களே அறிவிக்கவில்லையா? இவர்கள் "கான்ட்டியனிசத்திற்குள்" நழுவிச் செல்கிறார்கள் (பிளெக்ஹானோவ், "தங்களுக்குள்ளேயே" உள்ள விஷயங்கள், அதாவது, நமது நனவுக்கு வெளியே உள்ள விஷயங்கள் இருப்பதை அங்கீகரிப்பதன் மூலம்); அவர்கள் உலகத்தை "இரட்டிப்பாக்குகிறார்கள்" மற்றும் "இருமைவாதத்தை" போதிக்கிறார்கள், ஏனென்றால் பொருள்முதல்வாதிகள் தோற்றத்திற்கு அப்பால் தனக்குள்ளேயே பொருள் இருக்கிறது என்று கருதுகிறார்கள்; உடனடி புலன் தரவுகளுக்கு அப்பால் வேறு ஏதோ இருக்கிறது, ஏதோ ஒரு "சிலை", ஒரு முழுமையான, அறிவின் ஆதாரம்? "தனக்குள்ளேயே விஷயங்கள்" இருப்பதை அங்கீகரிப்பதன் மூலம்; உடனடி புலன் தரவுகளுக்கு அப்பால் வேறு ஏதோ ஒன்று இருக்கிறது, இவ்வாறான குழப்பமான பகுதிகள் வாசித்து புரிந்துக் கொள்வதில் பெரும் சிரமத்தை தருகிறது இருந்தும் தொடர்ந்து இந்த நூலை விமர்சிக்க உள் செல்வோம் தோழர்களே...
தோழர்களுக்கு வணக்கம் இதுவரை மூன்று வகுப்பு முடித்துள்ளோம் அதில் இவை நான்காவது வகுப்பாக இன்று தொடங்குகிறோம்.
முதல் வகுப்பில் அறிமுக உரையாக இயக்கவியல் என்றால் என்ன? பொருள் முதல்வாதம் என்றால் என்ன? வரலாற்று பொருள் முதல்வாதம் என்றால்? என்ற பகுதியை விளக்கியதோடு திறந்த நிலை மார்சியம் எதைப்பற்றி பேசுகிறது என்ன விமர்சனத்தை முன் வைக்கிறது என்பதை பற்றியும் விளக்கியதோடு லெனின் எழுதிய பொருள் முதல் வாதமும் அனுபவ வாத விமர்சன நூலின் துணை கொண்டு இவர்கள் பேசுவது என்ன? இவர்களுடைய உண்மையான நோக்கம் என்ன? இவை மார்க்சியத்தை வளர்க்க பயன்படுமா? என்ற தேடலோடு இவர்களின் நோக்கம் மார்க்சியத்தை வளர்ப்பதற்கானஅல்ல அதற்கு எதிராக பேசத் துணிந்தவர்களே என்று முதல் வகுப்பு முடித்தோம்.
இரண்டாம் வகுப்பில் தொகுதி 2ல் பேசப்பட்டுள்ள இயக்கவியலும் வரலாறும் பற்றிய பகுதி பேசியதோடு இவர்கள் என்ன ஆய்வு செய்தனர் எதற்காக செய்தனர் என்பதை விளக்கி விவாதித்தோம்.
மூன்றாம் வகுப்பில் தொகுதி இரண்டில் உள்ள கோட்பாடும் செயல்பாடும் பற்றி விவாதிக்க முனைந்து; இவர்களின் நிலை என்ன? என்பதை தேடி இந்த நூல் ஆசிரியர்கள் எதனை நோக்கி பயணிக்கிறார்கள் என்பது தெளிவாக விவாதித்து முடித்தோம்.
இன்றைய விவாதத்திற்கு செல்வோம் ...
கோட்பாடும் செயல்பாடும் தொகுதி 2 என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.
இந்தப் பகுதி முந்தைய வார வகுப்பின் தொடர்ச்சிதான்
கோட்பாடும் செயல்பாடும் என்ற இரண்டாம் தொகுதியில் இடம்பெற்றுள்ள ஐந்து கட்டுரைகள் வரலாற்று பொருள் முதல்வாதம் என்ற இயக்கவிலையே விமர்சனம் என்ற பெயரில் எதை எதையோ எழுதி குழப்பி இறுதியில் மார்சியத்திற்கு மார்க்சியம் சொல்லித் தரும் பணியில் இறங்கியுள்ளார்கள். இதனைப் பற்றி விரிவாக பேசுவோம் ...
இவர்களின் நூலில், "விமர்சனவாதம் எனப்படுவது தான் பரிசீலிக்கும் நிகழ்வுகளை விமர்சிப்பதற்கு பதிலாக அந்நிகழ்வுகளையும் தொகுத்து உறுதிப்படுத்த கான்டிய புலன் கடப்பு (Transcendental)வாதத்தை பயன்படுத்திக் கொள்கிறது (பக்கம் 27) .இதற்குப் பெயர் கூறுகிறார்கள் கரணிய மார்க்சியம் எங்கின்றனர். எல்லா வரலாற்று ரீதியான பகுப்பையும் இலகுவான வகையில் இன்று அறிவிப்பு அதன் மூலமாக தன்மையே வரலாற்றின் கருணைக்கு வைத்துக் கொள்கிறது. அது தனது வரலாற்று ரீதியான பற்களைத் தானே பிடுங்கிக் கொள்கிறது என்ன பின்நவீனத்துவத்தைப் போல எப்பொழுதுமே (பக்27) வரலாற்று ரீதியான இலகுவாதங்களுக்கு எதிராக நிற்கின்றது, அது சமீப ஆண்டுகளில் வரலாற்றுடன் இணைய ஆரம்பிக்கிறது ஆனால் தத்துவ ரீதியான விளக்கங்களுக்கு வெறும் வரலாற்று ரீதியான விளக்கங்களுக்கு இடையே தெளிவின்றி நிற்கிறது (பக்கம் 28).
மேலும் அவர்களின் நூலிலிருந்தே, செயல்பாட்டிற்கும் ஐக்கியத்திற்கும் இடையிலான அணுகுமுறை குறைபாடாம் கட்டமைப்பு வாதம் பின்நவீனத் துவம் ( பக்கம் 28) இவ்வாறாக தொடர்ந்து செல்கிறது.
பல்வேறு விதமான மார்க்சிய பின்புலம் கொண்டவர்களின் எழுத்துக்களையும் நூல்களையும் விமர்சன ரீதியாக பேசுவதாக கூறும் இந்த நூல் ஆசிரியர்கள். மார்க்சின் மூலதன நூலை ஆய்வு செய்வதற்கு பதிலாக யாரோ ஒரு வரலாற்று ஆசிரியர் பேசியுள்ளதிற்கு பதிலளிக்கும் வகையில் அதற்கான பதிலாக பல்வேறு மார்க்சித்திற்கு விரோதமான கருத்துக்களை முன்வைத்துள்ளது எப்படி விமர்சனம் ஆகும். (பக்கம் 30ல் இதே நூலில் பேச பட்டவைக்கு என் பதில்).
மார்க்ஸ் சமூகக் கோட்பாட்டாளாராக பிரபலமாக அறியப்படுகிறார். அதாவது சமூகத்தை கோட்பாட்டு சிந்தனைக்கான பொருண்மையாக ஏற்றுக் கொண்ட ஒருவராக மார்க்ஸ் அறியப்படுகிறார். மார்க்ஸ் சமூக கோட்பாட்டாளர் இல்லை என்றும் அதற்கு மேலாக இந்த அர்த்தத்தில் கோட்பாட்டாளரே இல்லை என்றும் வாதிடும் இந்த கட்டுரையாளர் மார்க்ஸ் சமூகவியலாளர் இல்லை மாறாக சமூகவியலின் விமர்சகர் மார்க்சிய சமூகவியல் என்பது சொற்களில் முரணானது ... வரலாற்று பொருள் முதலாகும் மார்க்சியம் அற்றது பக்கம் 35) மார்க்சியத்தின் அடிப்படைகளை புறந்தள்ளிவிட்டு இவர்கள் அதற்கு விமர்சனமும் பொழிப்புரையும் எழுதிக் கொண்டிருப்பது கோட்பாட்டு உருவாக்கும் என்று எதற்கான கோட்பாட்டு உருவாக்குகிறார்கள் என்பதை தெளிவின்றி பேசுகிறார்கள்.
மேலும் இவர்களின் கான்ட் மேனியாவை புரிந்துக் கொள்ள நமது ஆசான்கள் எங்கெல்ஸ் மற்றும் லெலினிடம் செல்வோம், "ஆங்கிலேய பெர்க்கெலியரான ஃபிரேஸர், பொருள்முதல்வாத ஏங்கெல்ஸால் மிகத் தெளிவாக குணாம்சப்படுத்தப்பட்ட தத்துவத்தில் அதே அடிப்படை "வழிகளை" தனது முரணற்ற கருத்துமுதல்வாத நிலைப்பாட்டிலிருந்து அணுகுகிறார். லுட்விக் ஃபாயர்பாக் ஏங்கெல்ஸ் தனது படைப்பில், தத்துவவாதிகளை "இரண்டு மாபெரும் முகாம்களாக— பொருள்முதல்வாதிகள் மற்றும் கருத்துமுதல்வாதிகளாக—பிரிக்கிறார். எங்கெல்ஸ்—ஃபிரேசர் கையாண்டதைக் காட்டிலும் மிகவும் வளர்ச்சியடைந்த, பல்வகைப்பட்ட மற்றும் உள்ளடக்கத்தில் செழுமையானதாக இருந்த இரண்டு போக்குகளின் கோட்பாடுகளைக் கையாள்கிறார் பொருள்முதல்வாதிகளுக்கு இயற்கை முதன்மையானது, ஆன்மா இரண்டாம் பட்சமானது, ஆனால் கருத்துமுதல்வாதிகளுக்கு நேர்மாறாக இருக்கிறது என்ற உண்மையில் அவர்களுக்கிடையேயான அடிப்படை வேறுபாட்டைக் காண்கிறார். இந்த இரண்டு முகாம்களுக்கும் இடையில் உலகை அறிவதற்கான சாத்தியத்தை அல்லது குறைந்தபட்சம் அதை முழுமையாக அறிவதற்கான சாத்தியத்தை மறுக்கும் ஹ்யூம் மற்றும் கான்ட்டின் ஆதரவாளர்களை ஏங்கெல்ஸ் நிறுத்துகிறார், மேலும் அவர்களை அறியொணாவாதிகள் என்று அழைக்கிறார்[8]. எங்கெல்ஸ் தனது லுட்விக் ஃபாயர்பாக் நூலில் இந்தச் சொல்லை ஹ்யூமின் ஆதரவாளர்களுக்கு மட்டுமே (ஃபிரேஸர் அழைக்கும் மற்றும் தங்களை "நேர்க்காட்சிவாதிகள்" என்று அழைத்துக் கொள்ள விரும்புபவர்கள்) மட்டுமே பயன்படுத்துகிறார். ஆனால் ஏங்கெல்ஸ் "வரலாற்றுப் பொருள்முதல்வாதம் பற்றி" என்ற தனது கட்டுரையில், நவ-கான்ட்டியவாதத்தை[10] ஒரு வகையான அறியொணாவாதமாகக் கருதும் "நவ-கான்ட்டிய அறியொணாவாதத்தின்" நிலைப்பாட்டைப் பற்றி வெளிப்படையாகப் பேசுகிறார். இங்கே என்ன நடக்கிறது நீங்களே புரிந்துக் கொள்ளதான் தோழர்களே.
மேலும் தொகுதி 2 ல் இவர்களின் கோட்பாட்டு உருவாக்கம் வெற்று கோசங்களை புரிந்துக் கொள்ள நமது ஆசான்களிடம் செல்வோம்.
பொருளாதாரம் ஆகியவை பற்றிய கோட்பாட்டு உருவாக்கத்தையும் சோசலிசப் புரட்சி நடைபெற விருக்கும் சாத்தியமுள்ள நாடுகள் பற்றிய கருதுகோள்களையும் மார்க்சும் ஏங்கெல்கம் விளக்கினர். பல்வேறு வகைப்பட்ட சோசலிசங்கள் பற்றிய, கருத்துகள் நிலவிய -சூழலில், பாட்டாளி வர்க்க சோசலிசம் பற்றிய கருத்தை நிறுவி, சோசலிசம் என்பது “பொதுவுடைமைக்கு மாறிச்செல்லும் இடைக்கட்டம் என்றும் பொதுவுடைமையின் முதல் கட்டம் என்றும் விளக்கியதே மார்க்சின் பங்களிப்பில் முதன்மை வாய்ந்ததாகும். 1845 முதற் கொண்டு வெளிவந்த மார்க்சியப் படைப்புகளில் காணக் கிடைக்கும் குறிப்பகளை வைத்து பின்வருமாறு தொகுக்கலாம்.
சோசலிசக் கோட்பாட்டு உருவாக்கம்
1. பொருளாதரரம்
௮) உற்பத்தி சாதனங்களின் சமூகவுடைமை, இவற்நின் மீதான தனியுடைமையை ஒழித்தல். மூலதன இயல்பிலிருத்து இவற்றை விடுவித்தல். ஆ) மூதலாலிய சமூகத்தின் பொருளாதார விதிகள் சில தொடர்ந்து செயல்படும் (எ-டு. பண்டப் பரி வர்த்தனை)
இ) திறமைக்கு ஏற்ப உழைப்பு; உழைப்புக்கு ஏற்ற ஊதியம். இதனால் சமத்துவமற்றதிலை தொடரும்.
ஈ). பெருத்தொழில்களும் பெருநிலவுடைமையும் பறித்தெடுக்கப்படும். ்
௨) சிறு விவசாயிகள் தனியுடைமை உற்பத்தியிலிருந்து கூட்டுடைமை உற்பத்திக்கு மாறுதல். "இதில் பலவந்தம் கூடாது. எனினும் அரசதிகாரம் கைப்பற்றப்படும் சூழலைப் பொறுத்து" இது அமையும்.
2. அரசியல்
அ) வர்க்கங்கள் நீடிப்பதால் அரசு தேவைப் படுகிறது. இதன் வடிவம் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்.
ஆ) புரட்சிக்குப்பின் அரசை ஒழிக்க வேண்டும் என்பது அராஜக அபத்தம். முதலாளி வர்க்க எதிரிகளை அமுக்கி வைக்க பாட்டாளி வர்க்க அரசு : இல்லையெனில் மொத்த வெற்றியுமே தோல்வியில் போய் முடியும்.
கருதுகோள்
இத்தகைய சோசலிசப்புரட்சி, மிகவும் முன்னேறிய நாடுகளில்--குறிப்பாக இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்சு ஆகியவற்றில்--ஏற்படும். முன்னேறிய தாடு கள் அனைத்தும் ஒரே நேரத்தில் தாக்கப்படலாம். ஒரு தனி நாட்டில் சோசலிசப்புரட்சி சாத்தியமில்லை. மார்க்சியக் கோட்பாடு உருவாக்கமும் கருதுகோளும் உதித்த சூழல் முக்கியமானது, முதலாளிகட்கு இடையில் சுதந்திரமான போட்டி இருந்தகாலம்; முதலாளியம் தம்மை ஏகபோகமாக வளர்த்தெடுக்காத இக்காலத்தில் முதலாளிய நாடுகளில் உள் - முரண்பாடுகள் முற்றி சோசலிசப் பேரலைகள் எழும்பும் என மார்க்சு கருதினார்.
முதலாளியம் வளர்ந்தது. சுதந்திரமான போட்டி முறையில் இருந்து வளர்ச்சியுற்று 19ம் நூற்றாண்டின் இறுதியில் தம்மை ஏகபோக முதலாளியாக உருவெடுத்துக்கொண்டது. ஏகாதிபத்தியங்கள், குடியேற்ற நாடுகள் ஆகியவை உருவாகின. ஏகபோக டிரஸ்டுகள் குறித்தும் அவற்றின் (பொருளாதார அராஜகவாதம் குறித்தும் ஏங்கெல்சு எழுதியுள்ளார். (காவுட்ஸ்கிக்குக் கடிதம் 29--6_-1881) இந்தப் பொருளாதார வளர்ச்சியை ஆராய்ந்து, முதலாளியம் தன் உள் முரண்பாடுகள் முற்றி சோசலிசமாக உருவெடுக்கும் என்ற மார்க்சின் கருதகோள் தவறானது என முதிலாளிய 'விமர்சகர்கள் கருதினர். 19ஆம் நூற்றாண்டு இறுதி முதல் உள்ள இந்த நிலைகளை ஆராய்ந்து இந்த சகாப்தத்திலும் சோசலிசப்புரட்சி சாத்தியம் என லெனின் கருதுகோளை உருவாக்கினார். போட்டி என்பது இப்போது முதலாளிகட்கு இடையில் இல்லாமல் ஏகபோகங்களுக்கு இடையிலானதாக மாறிவிட்டது என்றும் உலகநாடுகள் உலகப்பொருளாதாரச் சங்கிலியின் கண்ணிகளாக மாறி, சமனற்ற வளர்ச்சி நிலையில் உள்ளன என்றும் லெனின் முடிவுகண்டார். இந்தப் பொதுவான அரசியல் பொருளாதார சூழலில் சோசலிசப் புரட்சியின் சாத்தியம் குறித்து லெனின் தம் கருதுகோள்களை முன் வைத்தார்.
அவை: 1. முன்னேறிய முதலாளிய நாடுதளில்தான் சோசலிசப் புரட்சி ஏற்படும் என்பதில்லை. பின்னடைந்த நாடுகளிலும்- பலவீனமான கண்ணியைப் 'பொறுத்து ஏற்படலாம். உற்பத்திச் சக்திகள் வளர்ச்சியடையாமல் முதலாளி, தொழிலாளி என்று சமூதசக்திகள் "துல்லியமாக அமையாமல் இருப்பினும் புதிய வகைப்பட்ட முதலாளிய ஜனநாயகப் புரட்சியின் ஊடே சோசலிசப் புரட்சி சாத்தியமாகும். 2. வெவ்வேறு நாட்டிலும் வெவ்வறு காலங்களிலும் சோசலிசப்புரட்சி சாத்தியம். உலக முழுமையும்-- _ அல்லது ஒரு சில நாடுகளில் முழுமையும்--ஒரே நேரத்தில் சோசலிசப் புரட்சி நடந்தாக் வேண்டிய தில்லை. தனி ஒரு நாட்டிலும் சோசலிசப் புரட்சி சாத்தியம்.
இந்த மார்க்சிய -லெனினியக் கருதுகோள்கள் , இதற்கு முந்தைய மார்க்சியக் கருதுகோள்களை நிராகரித்தன இந்த நிராகரிப்பு, முன்னேறிய தன்மை யுடையது... இந்த நிராகரிபின்றி வளர்ச்சி இல்லை. சோசலிசம் குறித்த மார்க்சியக் கோட்பாடுகளை நிராகரிக்க முயன்ற முதலாளிய அறிவாளிகள் முன்னிலையில், மார்க்சியக் கருதுகோள் ஒன்றை நிராகரித்து விஞ்ஞான சோசலிசக் கோட்பாட்டை லெனின் உயர்த்திப்பிடித்தார். இவை ஏகாதிபத்தியமும் உலக சோசலிசப் புரட்சிகளும் கொண்ட லெனினிய சகாப்தத்தின் கருதுகோள்களாகும். இந்த மார்க்சிய லெனினியக் கருதுகோள்கள் இருபதாம் நூற்றாண்டில் நிரூபிக்கப்பட்டு, அரசியல் யதார்த்தமாயின. சோசலிசத்தை வரலாற்றுப்பிழை என நிரூபிக்க முயன்ற முதலாளிய அறிவாளிகள் , மீண்டும் ஒருமுறை தோற்றுப் போயினர். ரசியா, சீனா, கிழக்கு, ஐரோப்பிய நாடுகள் இந்த வரையறையின்படி சோசலிச நாடுக்ளாயின. இன்றைக்கும் உலகம் லெனின் வரையறையில். ஏகாதிபத்திய சகாப்தத்தில் _ இயங்குவதால் உலகில் கோசலிசப் புரட்சிகள்... சாத்தியம் என்பதைக் கோட்பாட்டு அளவில் மறுக்க இயலாது.
இன்னும் சில பின்னர் நான் கூற வந்தவை இந்த திறந்தநிலை மார்க்சியவாதிகள் மார்க்சிய லெனினியம் என்ற அடிப்படையை மறுக்கும் ஏகாதிபத்திய கருத்தாளர்களே என்று கூறிக் கொண்டு அடுத்த விவாதத்தில் சந்திப்போம் தோழர்களே...
No comments:
Post a Comment