முந்தைய பகுதியின் தொடர்ச்சியாக
திறந்தநிலை மார்க்சியம் யாருக்கான மார்க்சியம்- பகாம்-2
நாம் முந்தைய பகுதியில் “பொருள்முதல்வாதமும் அனுபவாத விமர்சனமும்” நூலின் பகுதியில் லெனின் அன்றைய தத்துவப்போராட்டத்தை குறித்து பேசியிருந்தோம். அவை எந்தளவு இந்த நூலை எழுதியவர்களும் ஏன் மொழி பெயர்தவர்களும் வாசித்திருப்பர் என்பது கேள்வியாக உள்ளது. ஆகையால் அவர்களின் நூலிலிருந்தே விவாதத்தை தொடங்கலாம் இந்தப்பகுதியில்.
திறந்தநிலை மார்க்சியம் தொகுதி-1 இயக்கவியலும் வரலாறும் பற்றி பேசியுள்ளனர். உண்மையில் அவர்கள் மார்க்சியத்தை உள்வாங்கி பேசியிருக்கிறார்களா? அல்லது அவர்களின் ஆராய்ச்சியின் நோக்கம் என்னவென்று தெரிந்துக் கொள்ள வேண்டுமெனில் அவர்களின் நூலில் இழையோடிக்கிடக்கும் பகுதியின் முன்னோடிகளின் நிலைப்பாட்டையும் வரலாற்று சூழலையும் அறிந்திருந்தால் நமது ஆய்வுக்கு பயனளிக்கும்.
மேலும் இவர்களின் நூலில் மார்க்சியத்தை தேட மார்க்சிய ஆசான்களின் தத்துவ அரசியல் தேடலுக்கு உதவிய முன்னோடிகளிடமிருந்து தேடல் ஆரம்பிக்கும் பொழுது இவர்களின் நோக்கம் உண்மையில் மார்க்சியத்தை வளர்க்க அல்ல, என்பது புரிந்தாலும். நாம் இவர்களின் எழுத்தின் உண்மைகளை அம்பலப்படுத்த; நமது ஆசான் மார்க்ஸ் எப்படி அவருக்கு முந்தைய முன்னோடிகளை விமர்சன பூர்வமாக ஏற்றுக் கொண்டதுடன் அவர்களின் கருத்துகளை அப்படியே வழிபடவில்லை. அவை தமது தேடலின் படிகட்டாக, தனது ஆய்வு தேவையை புரிந்து அதிலிருந்து தனகானதை விரிவுபடுத்திக் கொண்டார் என்பதனை தொடர்ந்து பார்ப்போம்.
அதனை அடுத்து திறந்தநிலை மார்க்சியவாதிகளின் ஆசிரியர்கள் யார் அவர்களின் வரலாற்று பாத்திரம் என்ன என்பதனையும் அறிந்து நமக்கான புரிதலுக்கு வருவோம் தோழர்களே.
ரஷ்யாவில் 1905-ம் ஆண்டு புரட்சி தோல்வி கண்ட போது பலர் புரட்சிகர சிந்தனையில் இருந்து ஓட்டம் பிடித்தனர். அத்துடன் நில்லாது மார்க்சியம் குறைபாடுடையது, அதனை சரிப்படுத்த வேண்டும் என்று விமர்சித்தனர். இவர்கள் இதனை மார்க்சியத்தின் பேரிலேயே செய்தனர். அவர்கள் போன்றோரே இவர்களும்.
திறந்தநிலை மார்க்சியம் யாருக்கானது?. ஏனென்றால் அதற்கும் மார்க்சியத்துக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை, உண்மையில் அது மார்க்சியத்துக்கு எதிரானதாகும். முதலாவதாக, இவர்களின் நூல் இயங்கியல் பொருள்முதல்வாதத்துடன் ஒப்பிடப்பட வேண்டும். அப்படி நோக்கும் பொழுது இவர்களின் நூல் முற்றிலும் பிற்போக்குத்தனமான தன்மையை வெளிப்படுத்துகிறது, இது இலட்சியவாதம் மற்றும் அஞ்ஞானவாதத்தின் பழைய பிழைகளை மறைக்க புதிய கலைகள், விதிமுறைகள் மற்றும் நுணுக்கங்களைப் பயன்படுத்துகிறது. பொதுவாக மெய்யியல் பொருள்முதல்வாதத்தின் தன்மை மற்றும் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் இயங்கியல் முறையின் தன்மை பற்றிய முழுமையான அறியாமை மட்டுமே.
இரண்டாவதாக, இவர்கள் நவீன தத்துவத்தில் நிபுணர்களாக பல்கலைக் கழகத்தில் பேராசியர்களாக உள்ளனர். ஆனால் இவர்கள் பேசுவது மார்க்சியம் அல்ல! மார்க்சியம் என்பது மார்க்சால் படைக்கப்பட்ட ஒன்று மட்டுமே ஆகும். அதனைத்தான் லெனினால் வளர்க்கப்பட்ட லெனினியம் ஆகும். இதற்கு மாறாக மார்க்சிய விரோதிகளாலும் துரோகிகளாலும் சொல்லப்படுபவைகள் எல்லாம் மார்க்சியம் அல்ல. அவற்றிற்கும் மார்க்சியத்துக்கும் தொடர்பே இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எனவே இவ்வாறு பல்வேறுவிதமான கருத்துக்களை மார்க்சியம் என்று பேசுபவர்கள் மக்களின் விரோதிகளே, துரோகிகளே என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
ஹெகல் கான்ட் உடன் தொடங்கிய இவர்களின் தேடுதல்கள் இயக்கவியலையோ பொருள்முதல்வாதத்தை நோக்கி அல்ல, மாறாக எதிர் திசையில், பெர்க்லியை பாதிரியை நோக்கி சென்றுள்ளனர்.
காரல்மார்க்ஸ் மற்றும் எங்கெல்சால் படைக்கப்பட்டு, லெனின் ஸ்டாலின் மாவோ போன்ற கம்யூனிச தலைவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்ட தத்துவம், அரசியல் பொருளாதாரம் மற்றும் சோசலிசம் பற்றிய அவர்களின் எழுத்துகளையே மார்க்சியம் என்கிறோம். ஏகாதிபத்திய காலக்கட்டத்தில் மார்க்சியமானது லெனினால் வளர்க்கப்பட்டு மார்க்சிய லெனினியமாகியது என்கிறோம். அதாவது ஏகாதிபத்திய காலக்கட்டத்தின் மார்க்சியமே லெனினியம் என்கிறோம். ஆனால் இத்தகைய மார்க்சியத்தை ஏற்க மறுக்கும் மார்க்சிய விரோதிகளான முதலாளித்துவ அறிவாளிகளும், கம்யூனிச அமைப்புக்குள்ளேயே இருந்துகொண்டு செயல்படும் துரோகிகளும் பல்வேறுவிதமான மார்க்சியம் உள்ளதாகப் பேசி, பிரச்சாரம் செய்து மக்களை குழப்புகிறார்கள். பிராங்பாட் மார்க்சியம், ஆங்கில மார்க்சியம், ஹெகலிய மார்க்சியம், கட்டமைப்புவாத மார்க்சியம், இயக்கவியல் மார்க்சியம், விமர்சனப்பூர்வ மார்க்சியம், திறந்தநிலை மார்க்சியம் என்று பல்வேறுவிதமான மார்க்சியம் இருப்பதாக கூச்சலிடுகிறார்கள். இவர்களோடு கூடவே டிராட்ஸ்கியவாதிகள் டிராட்ஸ்கிய மார்க்சியம் என்று ஒன்று இருப்பதாகப் பிரச்சாரம் செய்கிறார்கள். இத்தகைய மார்க்சியத்தை அதாவது இவர்களாகவே உருவாக்கி உள்ளத்தைப் பற்றி விமர்சனம் என்ற பெயரில் உளரிக்கொண்டு மார்க்சால் உருவாக்கி கம்யூனிஸ்டுகளால் வளர்க்கப்பட்ட மார்க்சியத்தின் மீது தாக்குதல் தொடுப்பதோடு எதுதான் மார்க்சியம் என்பதை மக்கள் புரிந்துகொள்ள விடாமல், மக்களை குழப்பிக்கொண்டு இருக்கிறார்கள். இந்தக் கயவர்களின் நோக்கம் என்ன? உழைக்கும் மக்கள் மார்க்சிய லெனினியக் கோட்பாடுகளைப் புரிந்துகொள்ளக் கூடாது, அதனை புரிந்து கொண்டு சமூகப் பிரச்சனைகளை மார்க்சியத்தின் அடிப்படையில் புரிந்துகொண்டு, சமூகத்தை மாற்றியமைப்பதற்கான வழிமுறைகளை அறிந்துகொண்டு அதன் அடிப்படையில் செயல்பட்டு சமூகத்தில் மாற்றம் கொண்டுவந்துவிடக் கூடாது என்பதுதான். ஏனெனில் சமூகத்தில் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டால் சுரண்டும் வர்க்கங்களும் அவர்களை அண்டிப் பிழைக்கும் பிழைப்புவாதிகளும் சுகபோகமான வாழ்க்கையை இழக்க நேரிடும். ஆகவேதான் இந்தக் கயவர்கள் மக்களிடம் மார்க்சியத்தைப் பற்றிய குழப்பமான பிரச்சாரம் செய்துகொண்டு இருக்கிறார்கள். ஆகவேதான் மார்க்சியவாதிகளாகிய நாம் மார்க்சால் படைக்கப்பட்டு லெனின் போன்ற கம்யூனிஸ்டுகளால் வளர்க்கப்பட்ட கம்யூனிச கோட்பாடுகளை ஆழ்ந்து படித்து புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் மார்க்சியம் என்ற பெயரில் மார்க்சியத்தின் எதிரிகள் மற்றும் துரோகிகளால் முன்வைக்கப்படும் கருத்துக்கள் எப்படி பொய்யானது, மக்களின் நலனுக்கு எதிரானது என்பதை புரிந்துகொள்ள முடியும். ஆகவே மார்க்சியம் என்பது மார்க்சால் படைக்கப்பட்ட ஒன்று மட்டுமே ஆகும். அதனைத்தான் லெனினால் வளர்க்கப்பட்ட லெனினியம் ஆகும். இதற்கு மாறாக மார்க்சிய விரோதிகளாலும் துரோகிகளாலும் சொல்லப்படுபவைகள் எல்லாம் மார்க்சியம் அல்ல. அவற்றிற்கும் மார்க்சியத்துக்கும் தொடர்பே இல்லை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எனவே இவ்வாறு பல்வேறுவிதமான கருத்துக்களை மார்க்சியம் என்று பேசுபவர்கள் மக்களின் விரோதிகளே, துரோகிகளே என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். தொடர்ந்து மேலே செல்வோம்.
மார்க்சிய தத்துவம் தோற்றம் அறிவோம்
தத்துவத்தில் பொருள்முதல்வாதம்,கருத்துமுதல்வாதம் என இரண்டு பிரிவுகள்தான் உண்டு.எந்த பெயர்களில் எந்த தத்துவம் எழுந்தாலும் இந்த இரண்டுக்குள் தான் அடக்கம். எனவே ஒருபுறம் பொருள்முதல்வாதம் எனில் மற்றொருபுறம் “அனுபவவாத விமர்சனம்”என்ற பெயர் கொண்டாலும் அது கருத்துமுதல்வாதம்தான். ஆனால், அனுபவவாத விமர்சன தத்துவ ஆசிரியர்கள் தங்களை கருத்துமுதல்வாதிகள் என்று ஏற்றுக் கொள்ளவில்லை.எனினும், அவர்களுடைய வாதங்கள் அனைத்தும் பழைய கருத்துமுதல்வாதமே என்று லெனின் நூலில் ஆணித்தரமாக நிறுவுகிறார். புலனறிவு,பொருளின் இருப்பு, அறிவு போன்ற அடிப்படை தத்துவார்த்த பிரச்னைகளில் மார்க்சியத்தின் பார்வையையும் அனுபவாதிகள் விமர்சித்துள்ளனர். ஒவ்வொரு கருத்தையும் அலசி ஆராய்ந்து தகர்க்க முயலுகின்றார் ஆனால் லெனின் இவர்களது பித்தலாட்டங்களை தோலுரித்து அம்பலப்படுத்தினார்.ஆக ஆசான் மார்க்சின் ஆராய்ச்சி பணியை புரிந்துக் கொள்வோம். உலகில் தோன்றிய தத்துவ மேதைகளும் அறிஞர்களும் எல்லோருமே அற்புதமானவர்களே. ஆழமான அறிவும், பெரும் ஆற்றலும் கொண்டவர்கள். இவர்கள் அனைவரிடமிருந்தும் மார்க்ஸ் வேறுபடுகிற இடம்தான், அவருக்கான தனி இடமாக இருக்கிறது. அத்தனை தத்துவங்களும், கண்டுபிடிப்புகளும், கலைகளும் மனித சமூகத்திற்கே பலனளிக்கக் கூடியவையாக இருந்த போதிலும் அதிகார அமைப்பும், ஆளும் வர்க்கமும் அவைகளை இன்றுவரை தங்களுக்கு சாதகமானவைகளாக அனுபவித்துக்கொள்ள முடிந்திருக்கிறது.
''ஆகவேதான் மார்க்சியத்தை நேரடியாக முதலாளித்துவவாதிகளால் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்த முடியவில்லை. எனினும் மார்க்சியத்தை திருத்தி அதற்கு தவறான விளக்கங்கள் கொடுத்து மார்க்சியத்து எதிரான கருத்துக்களை உருவாக்கி அதனையே மார்க்சியம் என்று பொய் சொல்லி தவறான கருத்தை மக்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதற்கு பாடுபடுகிறார்கள் மார்க்ஸின் தத்துவமும், ஆராய்ச்சியும் மட்டுமே அவர்களால் வெல்ல முடியாத சக்தியோடு விளங்குகிறது. அது அடக்கப்பட்டவர்களுக்கும், ஒடுக்கப்பட்டவர்களுக்கும் மட்டுமே கருவியாக ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. கற்பனையிலும், குருட்டு நம்பிக்கையிலும் கிடந்தவர்கள் மத்தியில் அடிமை மக்களின் விலங்குகளை உடைத்தெறிய சிந்தித்தவர் மார்க்ஸ்.
தன் நிழலையும், வேர்களையும் நிலப்பரப்பு முழுவதும் நீட்டி உலகையே விழுங்கிவிட வளர்ந்து கொண்டிருக்கும் முதலாளித்துவம் என்ற விசமரத்தை சாய்த்து புது வெளிச்சம் எங்கும் பாய்ந்திட வாழ்நாளெல்லாம் சிந்தித்தவர் மார்க்ஸ்.
வாழ்வின் துயரங்களையும், புதிர்களையும் அனுபவம் செறிந்த தத்துவஞான தளத்தில் நின்றே அறிவு வென்று வருகிறது. சவால்களை சந்திக்கிற திடசித்தம் வேண்டியிருக்கிறது. மார்க்ஸின் பயணம் இதுதான். காலத்தை சுமந்து சென்ற பயணம். மனிதகுல விடுதலைக்கான மகத்தான காரியம்.
இந்த தத்துவப் போராட்டங்களோடு பயணப்பட்டுக் கொண்டிருந்த மார்க்ஸ் படிப்பை முடித்து நியு ரெய்னீஷ் ஜிட்டாங் என்னும் பத்திரிக்கையில் ஆசிரியராக இப்போது இருக்கிறார். கருத்து முதல்வாதத்திற்குள் நின்று ஹெகலை தாண்டிச்செல்ல முடியாது என்பதை மார்க்ஸ் புரிந்து கொண்டார். கூர்மையான, ஒளி வீசும் இயக்கவியல் என்னும் வாளை வைத்துக் கொண்டு ஹெகல் அரூபங்களின் நிழல்களோடு யுத்தம் நடத்திக் கொண்டு இருப்பதை காணமுடிந்தது. பாயர்பாஹின் பொருள் முதல் வாதத்தையும் , ஹெகலின் இயக்கவியலையும் ஒன்றிணைத்தார். ஹெகலின் பிடிதளர்ந்தது. நதியின் கதைகள் கேட்கின்றன. காற்றின் புலம்பல்கள் கேட்கின்றன. நெருப்பின் தகிப்புகள் கேட்கின்றன. அதுவரை கேட்காததெல்லாம் இப்போது கேட்கின்றன. புதிர்கள் எல்லாம் இப்போது தெளிவாகின்றன. தீர்க்கமான பதில் இப்போது மார்க்சிடமிருந்து வெளிப்பட்டது. "இது வரை வந்த தத்துவவாதிகள் அனைவரும் உலகை பலவழிகளில் விளக்கி விட்டார்கள், இப்போது செய்ய வேண்டியது உலகை மாற்றுவது”. காலம் இப்படியொரு பதிலை தன் வாழ்நாளில் முதன்முதலாக கேட்கிறது. அந்தக் குரல் காலவெளியெங்கும் எதிரொலிக்கிறது. மலையைத் தாண்டி மார்க்ஸை காலம் கொண்டுவந்து சேர்த்தது. மாபெரும் தத்துவ மேதை ஹெகல் அப்போதுதான் இறந்திருந்தார்.உயிர்களின் தோற்றத்தில்தான் முதன்முதலாக இந்த பூமண்டலத்தில் மெல்ல அசைய ஆரம்பித்தது. அதன் கனவாயிருந்த மனிதன் உருப்பெருவதற்கு பல லட்சம் ஆண்டுகள் காத்திருந்தது. ஆதிமனிதனின் குகைகளுக்குள் கேட்ட இதயத் துடிப்புகளோடு காலம் நகரத் தொடங்கியது. வானத்துப் பரப்பில், பசும்புல்வெளிகளில், அடர்ந்த கானகத்தில், நதிகளின் கரைகளில் ஒரு பறவையாய் காலம் நெளிந்து பறந்து திரிந்த பொழுதுகள் அவை. மனிதர்கள் தங்கள் வாழ்வுக்காக இயற்கையோடு, போராடிக் கொண்டிருந்தனர். அந்த சமூகத்தில் பெண்மக்களே தலைமை தாங்கினர். யாரும் யாருக்கும் அடிமையில்லை. நதிகளின் ஓட்டத்தில் நாகரீகம் அரும்பியது. உழைப்பின் அனுபவத்தில் அறிவு பரிணாமம் பெற்றது. கற்கள், வில்லும் அம்புமாயின. பின் உழவுக்கான கருவிகள் வந்தன. விலங்குகளைப் பழக்கி மேய்க்க தொடங்கினர்.
அந்தக் கால்நடைகள் இனக்குழுக்களின் சொத்துக்களாக மாறத் தொடங்கிய போதுதான், உற்பத்திக் கருவிகள் ஒரு சிலரிடம் குவிந்த போதுதான், ஆண், பெண் வேலைப்பிரிவினைகள் தோன்றிய போது தான் அந்த வர்க்க பேதம் இந்த பூமியில் முளைவிடத் துவங்கியது. மனிதர்களின் தலைக்கு மேலே ஒற்றுமை கீதம் பாடித் திரிந்த காலம் போய் வர்க்க பேதத்தால் மனிதகுலம் பீடிக்கப்பட்டது.இனக்குழுக்களின் தலைவர்கள் மன்னர்களாகவும், அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள் ராஜ்ஜியங்களாகவும், சாம்ராஜ்ஜியங்களாகவும் எழுந்தன. ஆள்கிறவர்களாகவும், ஆளப்படுகிறவர்களாகவும் சமூகத்தில் பிரிவுகள் தோன்றின. பண்டங்கள் பரிவர்த்தனை செய்யப்பட்டன. உழைத்தவர்கள் சமூகத்தின் அடியாழத்தில் நசுங்கிக் கிடந்தனர். இந்த கட்டுமானங்களை உறுதியாக்குவதற்கு மதங்கள் உருவாக்கப்பட்டன. விளைநிலங்களாக மண் பதப்படுத்தப்பட்டு நிலவுடமைச் சமுதாயம் பரிணமித்த போது அந்த வர்க்க பிரிவினை மேலும் கிளைகளை விரித்து பரவியது. அடிமைகளின் வேர்வையை உறிஞ்சி அதன் வேர் ஆழத்துக்கும் சென்றது. பேராற்றல் கொண்ட மனிதர்கள் வயிற்றுக்காக படும் துன்பங்களில் இரவுகள் எல்லாம் கதறிய காலம் அந்த வர்க்க சமூகத்தின் உச்சியில் மனித சமூகம் பல்வேறு பேதங்களில் உருச்சிதைவு அடைந்தது. தன்னை அந்த கொடுமைகளிலிருந்து மீட்க வரும் மானுடர்களைத் தேடி பல ஆயிரம் ஆண்டு கால முயற்சியில் தோற்று போயிருந்தது வர்க்க சமூகம். தீரத்துடன் புறப்பட்டவர்கள் வெட்ட வெட்ட தழைக்கும் அசுரத்தனத்தில் மருண்டு போனார்கள். 18ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் தோன்றிய தொழிற்புரட்சி இயந்திரங்களை உற்பத்தி செய்து வாணிபத்தின் எல்லைகளை விரித்தபோது காலம், மனிதர்களிடம் சுதந்திர வேட்கை தகித்ததைப் பார்த்தது. வெறி கொண்ட வர்க்க மேலாதிக்கதில் வளர்ந்த முதலாளித்துவம் விஸ்வரூபமெடுத்து உலகையே விழுங்கத் தயாரானது. ஏழு கண்டங்களிலும் நிரம்பியிருந்த மனித சமூகம், ஐரோப்பாவில் புதுவெள்ளத்தின் வேகத்தோடும், குழப்பத்தோடும் இருந்தது. சுதந்திரம், சகோதரத்துவம் பேசிய பிரெஞ்சுப் புரட்சியின் கருத்தோட்டங்கள் கனவுகளை விதைத்துக் கொண்டிருந்தன. முடியாட்சி நடைபெற்ற ஜெர்மனிக்குள் ரைன்லாந்து வழியாகத்தான் அவை நுழைந்தபடி இருந்தன.மார்க்ஸ் அங்குதான் இருக்கிறார். வித்தியாசமான பள்ளிமாணவன் அவர். உருப்போடுதலும், செரிக்காமல் வாந்தி எடுக்கிற மாதிரி ஒப்பித்தலுமான பள்ளியின் தர்மச் சுவர்களை மார்க்ஸ் தாண்டி வெளியே பார்க்கிறார். தைரியம் மிகுந்த கற்பனையும், சுயேச்சையான அணுகுமுறையும் இயல்பாயிருந்தது. மதகுருவாகவும், இராணுவ வீரனாகவும் பொன்னுலகை அடைய ஆசைப்பட்ட மாணவர்களோடு மனம் ஒட்டவில்லை.ஐரோப்பாவில் வான் நோக்கிய ஆலைகளின் குழாய்களின் வழியே மனிதர்களின் வேர்வை, கருகிய புகையாய் கரைகிறது. ஆப்பிரிக்கா இருண்டு கிடக்க வைரம் பாய்ந்த சுரங்கத் தொழிலாளிகளின் உடல்கள் மின்னிக் கொண்டு இருக்கின்றன. கண்களில் ஒளியில்லை. ரஷ்ய மன்னன் கால் கட்டைவிரலால் மக்களுக்கான சட்டங்களை வகுத்துக் கொண்டிருந்தான். இந்தியாவிலும், இன்னும் கிழக்கத்திய நாடுகளிலிருந்தும் செல்வங்களை அள்ளிக்கொண்டு கப்பல்கள் இங்கிலாந்தை நோக்கி சமுத்திரங்களில் பயணம் செய்து கொண்டிருந்தன. மாதா கோவிலின் மணியோசை காற்றுவெளியை தனது புனிதப் போர்வையால் மூடுகிறது.எப்படி இருந்த மனிதர்கள் இவர்கள். விலங்குகளைச் சுற்றி நின்று வேட்டையாடி அதை சுற்றி உட்கார்ந்து சாப்பிட்டவர்கள். ஒளித்து வைக்கவோ, திருடவோ, பொறாமை கொள்ளவோ அன்று எதுவும் இல்லை.விலங்குகளின் பசியோடும், களங்கமற்ற நீரின் இதயத்தோடும் இருந்தார்கள். உலகமே அவர்களுக்கு உரியதாய் இருந்தது. எல்லாவற்றையும் விழுங்கிக் கொண்டு இந்த முதலாளித்துவம் விஷவிருட்சமாய் நிற்கிறது. தன்னை நெருங்கவே முடியாமல் பல அரண்களை உருவாக்கி வைத்திருக்கிறது.
மார்க்ஸின் முன்னால் இப்போது பாதைகள் அங்குமிங்குமாய் குழப்பங்களை ஏற்படுத்துகின்றன. சுற்றிலும் நிலவிய கருத்துக்கள், சிந்தனையோட்டங்களில் எதோ ஊனம் இருப்பதை அவர் உணரத் தொடங்கியிருந்தார். பதில்களை தேடித்தேடி அறிவு அலைந்து கொண்டிருந்தது. தான் படித்த சட்டவியலோடு நிற்காமல் பண்டைக்கால வாழ்க்கை, நாடகம், கவிதை, லேஸ்ஸிங்கின் லவொகொவோன், வின்செல்மானின் கலைகளின் வரலாறு,ரேய்மாருஸின் மிருகங்களின் கலைஉணர்ச்சிகள், லுமெனின் ஜெர்மன் வரலாறு என எல்லாவற்றையும் படித்தார். உணர்ச்சியற்று அதிர்ந்து கொண்டிருந்த கடந்த காலத்திற்குள் யாத்ரீகனாய் அலைந்தார்.
அரிஸ்டாட்டில், பிளேட்டோ, உன்னை நீ முதலில் அறிந்து கொள் என்ற சாக்ரட்டீஸ், எல்லாம் தற்செயல் நிகழ்வுகள் என்பதை நிராகரித்த டெமாக்ரட்டிஸ், ஏதென்ஸ் தோட்டத்திலிருந்து வெளியே வராத எபிகூரஸ், லுக்ரெத்யேசியஸ்,பேக்கன், காண்ட், ஹெகல் , பாயர்பாஹ் என தனக்கு முன்னால் சென்றவர்களின் பாதைகளில் எல்லாம் நுழைந்தார். தனிமனித வளர்ச்சி, சுதந்திரத்தை எல்லாம் காண்ட் தனது சிந்தனை உலகத்திலிருந்து நாடு கடத்தியிருந்தார்.
தத்துவ ஞானத்தில் சமரசமற்று இருந்த போதிலும் வெறும் கற்பனாவாதங்களில் மூழ்கியிருந்தார் ஃபிஹ்டே. பாயர்பாஹ் பொருள் முதல்வாதியாக இருந்த போதும் இயக்கவியல் அற்ற இயந்திரத்தனமான கோட்பாடுகளை முன்வைத்தார். ஹெகல் மட்டும் சற்று முன் சென்றிருப்பதாகப் பட்டது. ஒன்றின் விளைவில் இருந்து அதன் தொடர்ச்சியாக இன்னொன்று பிறக்கிற இயக்க வியல் பாதையில் அவர் எல்லோரையும் தாண்டி நின்றிருந்தார்.
இயக்கவியல் என்பது வற்றாத ஜீவநதியின் நீராய் ஓடிக்கொண்டே இருப்பது. கடலிலிருந்து நீர்த்திட்டுக்கள் மேகங்களாய் எழுவது. மழையெனப் பொழிவது. மலைகளிலிருந்து விழுந்து நதியாக பெருக்கெடுப்பது. மீண்டும் கடலை நோக்கி பயணம் செய்வது. ஒன்றுக்கொன்று தொடர்ச்சியான பயணத்தில் இந்த மண்ணில் ஏற்படுகின்ற மாற்றங்களும், புறநிகழ்வுகளும் ஏராளம். ஒவ்வொரு மாற்றத்திற்கும் காரண காரியங்கள் இருக்கின்றன. விளைவுகள் தோன்றுகின்றன. ஆராய்ந்து பார்க்கும் போது ஒரு காட்சிக்கு பின்னால் இருக்கிற உண்மைகள் அறிவின் கண்களுக்கு தெரிகின்றன. அடுத்த காட்சிக்கு முந்தைய விளைவுகளே காரணங்களாகின்றன. ஹெகலிடம் தர்க்கவியல் மூலம் தேடுகிற வெளிச்சமும் இருந்தது. மதம் குறித்த ஹெகலின் பார்வையிலிருந்துதான் மார்க்ஸுக்கு அவரோடு முரண்பாடு ஆரம்பித்தது.
மனித வாழ்க்கை மதத்தின் சுமையால் பூமிப்புழுதியில் அடிமையாகிக் கிடந்தது. இதனை எதிர்த்து எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் எபிகூரஸ் என்னும் கிரேக்கன் தலை நிமிர்ந்து சவால் விட்டு, சண்டை போட்டதை பார்த்தார். வானத்திலிருந்து மின்னல்கள் வெட்டவில்லை. கடவுளின் கதைகள் நசுக்கவில்லை. ஆனால் ஹெகலின் கைகளுக்குள் எபிகூரஸின் குரல்வளை நெறிபட்டுக் கொண்டிருப்பதை பார்த்தார். கடவுள் இருப்பதைப் பற்றிய நிரூபணங்களை ஹெகல் சொல்லிக் கொண்டிருந்தார். 'வற்றாத ஜீவகங்கை சிவனின் தலையில் இருந்து பூமிக்கு வருகிற' கருத்தே அவைகளில் ஒளிந்திருந்தது’.
இயற்கை நன்கு அமைக்கப்பட்டிருப்பதால் கடவுள் இருக்கிறார் என்றார் ஹெகல். யதார்த்தத்திலிருந்து, கண்முன் இருக்கும் நிலைமைகளிலிருந்து விமர்சனம் செய்ய முடியாத கருத்து முதல்வாத நிலையிலிருந்துதான் இந்த பார்வை வந்திருந்தது. இதையே தலைகீழாக மாற்றி வேறோரு கோணத்திலிருந்து மார்க்ஸ் பார்த்தார். இயற்கை மோசமாக அமைக்கப் பட்டிருப்பதால்தான் கடவுள் இருக்கிறார் என்று தர்க்கம் புரியும்போது அவருக்கு உண்மை புலப்பட்டது. அதுதான் மதத்தை இதயமற்றவர்களின் இதயமாகவும், உணர்ச்சியற்ற நிலைமைகளின் உணர்ச்சியாகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சாகவும் அவரை பிரகடனம் செய்ய வைத்தது.
மார்க்ஸின் கூடவே வந்த ஹெகலின் சீடர்கள் புருனோ பாவரும், பாயர்பாஹும் மதத்தை விமர்சிக்க மட்டுமே செய்தனர். கடவுளை இகழ்ந்தனர். அதன் மூலம் கடவுளின் இருப்பும், மதத்தின் பிடியும் உறுதியாவதாகவே பட்டது மார்க்ஸுக்கு. அவர் மதத்தை முழுக்க நிராகரித்தார். புனிதப் போர்வையை தூக்கி எறிந்தார்.
அது ஒன்றும் தானாக இங்கு வளரவில்லை. எல்லாம் இந்த மனிதர்கள் வினைகள்தான். இன்று பார் பெரும் இராட்சசனாய் வளர்ந்து கொண்டே இருக்கிறது. ஸ்பார்ட்டகஸைப் போல எத்தனையோ வீரர்கள் மின்னலாய் வாளேந்தி இதை சாய்க்க வந்தவர்கள்தான் ஆனால் வழிகள் தெரியாமல், சரியான ஆயுதங்கள் இல்லாமல் அபிமன்யூக்களாகிப் போனார்கள். அவர்களை தனது தடக்கைகளால் சிரச்சேதம் செய்து அந்த இரத்தத்தில் தன்னை குளிப்பாட்டி கொண்ட அந்த வர்க்க சமூகம் இவை நிரந்தரமானவை என்று மார்தட்டிக் கொண்டது. ஆனால் வரலாற்றில் அவை காணாமல் போய்விட்டது.
மார்க்ஸ், ஏங்கெல்ஸிடமிருந்து சோஷலிச சிந்தனை தொடங்கவில்லை. வர்க்கங்களற்ற பொதுவுடமை சமுதாயத்தைப் பற்றி கனவு கண்ட பல அறிஞர்கள் இருந்தனர். ராபர்ட் ஓவன், சான்சிமோன், ஃபூரியே போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். பதினாறாம் நூற்றாண்டிலேயே தாமஸ்பொர் எழுதிய உடோபியாவில் கம்யூனிச சமூகம் குறித்து விளக்கப்பட்டிருந்தது. அதற்குமுன்னர் அப்போஸ்தலஸ் நீதிகளில் காணமுடியும். அவையெல்லாம் கற்பனாவாத சோஷலிசமாக மட்டுமே இருந்தன. சமூக உறவுகள் குறித்த ஆழமான சிந்தனை இல்லாமல் இருட்டில் தேடுவதாகவே இருந்தது.
கற்பனாவாதிகளின் சோஷலிசத்தில் ஆயுதங்கள் இல்லை. முதலாளிகளை அறிவுரைகளின் மூலம் மாற்றிவிடலாம் என்று கனவு கண்டார்கள். முதலாளிகளும் உடனடியாக சொத்துக்களை, தங்கள் உடமைகளை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து விடுவார்கள் என்று அந்தரத்தில் மிதந்தார்கள். இந்தக் கருத்தோட்டத்தோடு இருந்த தனது பழைய நண்பர்களை விட்டு விலகி ஏங்கெல்ஸோடு சேர்ந்து தத்துவஞான வெளிச்சத்தில் வரலாற்றை மார்க்ஸ் படிக்கத் தொடங்கினார். இதுவரை நீண்டிருந்த வரலாறு வர்க்கப் போராட்ட நாட்களின் தொகுப்பாக இருப்பதையும், அரசியல் பொருளாதாரத்தால் எழுதப்பட்டிருப்பதையும் பார்த்தார்.
வர்க்கங்களும், வர்க்கப் போராட்டங்களும் இருப்பதை முதலாளித்துவ வர்க்க வரலாற்று ஆசிரியர்களான தியெர்ரி, மின்யே, கிஸோ, கூறியிருந்தார்கள். மாண்டெஸ்கியே, மக்கியவேலி, ரூஸோ ஆகியோரது சமூகத் தத்துவங்களையும் படித்தார். பண்டங்கள், பரிவர்த்தனை, மதிப்பு, தொழில், கூலி, உழைப்பு, உற்பத்தி, உற்பத்தி சக்திகளின் வழியாக சமுதாயம் கடந்து வந்த மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலான வரலாறு மறைக்கப்பட்டிருந்தது. முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தை ஆழமாக ஆராய்ந்தார்.
ஆடம்ஸ்மித், ரிக்கார்டோ, ஜேம்ஸ் மில்,ஸ்கார் பெக் இன்னும் பலரது நூல்களை ஆராய்ச்சி செய்தார். பிரெஸ்ஸல்ஸ் மார்க்ஸை துடிப்புடன் வைத்துக் கொண்டிருந்தது. கம்யூனிஸ்ட் கடிதப் போக்கு வரத்துக் குழு ஆரம்பித்து இதர நாடுகளின் புரட்சிகர சக்திகளோடு அவர் தொடர்பு வைத்திருக்கிறார். அழைப்பின் பேரில் லண்டனுக்குச் சென்று நியாயவாதிகள் சங்கத்தை கம்யூனிஸ்ட்கள் சங்கமாக புனரமைத்தார். பிரெஸ்ஸெல்ஸில் ஜனநாயக சங்கம் அமைத்தார். டியூஷி பிரெஸ்லர் ஜிட்டாங் என்ற பத்திரிக்கை ஆரம்பித்திருந்தார். இப்போது கம்யூனிஸ்ட்கள் சங்கத்திற்கு கொள்கை அறிக்கை தயாரித்துக் கொண்டிருக்கிறார். காலத்தின் கேள்விக்கான பதில் அதில் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது.
மார்க்ஸின் பயணத்தில் மிக முக்கியமான தருணங்கள் இவை. இந்த ஏழெட்டு வருடங்களில் முதலாளித்துவத்தின் கொடுங்காற்று மிகவும் சோதித்திருந்தது. அலைக்கழித்திருந்தது. ஜெர்மனியிலிருந்து பிரான்சுக்கும், அங்கிருந்து பெல்ஜியத்துக்கும் விரட்டப்பட்ட போது ஜென்னி காதல் மிகுந்த தன் ஒருவனை பின்தொடர்ந்தாள். உன்னத லட்சிய வேட்கை கொண்ட அம்மனிதனுக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தாள். மார்க்ஸ் எந்தச் சிதைவும் இல்லாமல் உறுதியாக இருந்தார். ஒவ்வொரு குறுக்கீட்டையும் தாண்டும்போது புதிய ஒளி ஏற்பட்டிருந்தது. தீட்டப்பட்டுக்கொண்டே இருந்தார்.
ஜெர்மனியில் ரெய்னீஷ் ஜிட்டாங் பத்திரிக்கையில் ஆசிரியராய் மொசெய்ல் பகுதி திராட்சை விவசாயிகள் படும் துன்பங்களை ஆராய்ந்தபோது அவையெல்லாம் தனிப்பட்ட மன்னராலோ, பிரபுக்களாலோ, அதிகாரிகளாலோ உருவானவையல்ல என்பதையும் அந்தக் காலத்து சமூக உறவுகளின் முரண்பாடுகளால் உருவானவை என்பதையும் புரிந்து கொண்டார். அந்தக் கொடுமைகளை வெளிப்படுத்தும்போது பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்பட்டது. அரசு யாருடைய நலனை பிரதிபலிக்கிறது என்பதை மார்க்ஸ் இனம் காண முடிந்தது. ஹெகலின் "அரசாங்கம் என்பது சகல மக்களின் சின்னம்." என்பது எவ்வளவு மூடநம்பிக்கையானது என்பது தெளிவானது. அரசாங்கம் என்பது ஆளும் வர்க்கத்தின் கருவி என்றார் மார்க்ஸ். அரசியல் பொருளாதாரம் குறித்த பிரக்ஞை அவருக்குள் வளர்ந்து கொண்டிருந்தது.
மான்செஸ்டரில் ஏங்கெல்ஸ் இருந்த போது கண்ட பிரிட்டன் தொழிலாளர்கள் நிலைமைகளும், சாசன இயக்கமும் நிறைய படிப்பினைகளை தந்திருந்தன. ஜெர்மானிய கைத்தொழிலாளி களிடமிருந்தும், பாரிஸில் சந்தித்த சாதாரண தொழிலாளிகளிட மிருந்தும் சமூக மாற்றத்துக்கான அடிப்படையான விஷயத்தை மார்க்ஸ் தெரிந்து கொள்ள நேர்ந்தது. இயக்கவியல் மற்றும் வரலாற்று பொருள்முதல் வாதத்தின் மூலம் ஆராய்ந்த போது மார்க்சுக்கும், ஏங்கெல்சுக்கும் தாங்கள் எங்கே நின்றுகொண்டு இருக்கிறோம் என்பது தெரிந்தது. சோஷலிச சமுதாயமும், கம்யூனிச சமூகமும்தான் வரலாற்றின் அடுத்த அத்தியாயங்களாக இருக்க முடியும். இதை தெரிந்து கொண்டால் மட்டும் போதாது. விளக்கினால் மட்டும் போதாது. நடைமுறைக்கு கொண்டு வரவேண்டும் என்பதே மார்க்ஸின் லட்சியமானது. காலத்தின் கேள்வி அதுதான். தானே உணர்கிற உண்மையைக் கூட ஒரு போதும் ஒரு பக்கத்தில் நின்று கொண்டோ, ஒரு கோணத்தில் மட்டும் பார்த்துக் கொண்டோ ஒப்புக் கொள்ள மாட்டார் மார்க்ஸ். அனைத்து கோணங்களிலும், அனைத்துப் பக்கங்களிலும் நின்று விமர்சனங்கள் மூலமாகவும், தர்க்கவியல் மூலமாகவும் தனக்குத் தானே தெளிவு படுத்திக் கொண்டால் மட்டுமே ஒப்புக்கொள்வார்.
இவ்வாறான மார்க்சியத்தின் தோற்றம் வளர்ச்சி பற்றிய போதனைகள் ரசிய சீன சோசலிச புரட்சியின் மூலம் நடைமுறையாக்கப்பட்டது உலகின் மூன்றில் ஒரு பகுதி சோசலிசத்தை நோக்கி பயணத்தை தொடர்ந்தது. அதன் தத்துவ நடைமுறை அனுபவமின்மையால் ஏற்பட்ட தற்காலிக தொல்வியை அவை தழுவியுள்ளது அவை நிரந்தரமானவை அல்ல என்பது மார்க்சிய லெனினியத்தை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் தெரியும்.
ஆக மார்க்சியத்தை வளர்தெடுக்க மார்க்சியத்தை கற்றுதேற வேண்டும் எதிரியிடம் சரணடைவதல்ல.
தத்துவத்துறையில் பொருளின் இருப்பு மற்றும் அதன் முதன்மையை வலியுறுத்துவதோடு மார்க்சியம் நின்றுவிடவில்லை. அது முந்தைய பொருள்முதல்வாதிகள் செய்த தவறு. மார்க்சியம் பொருளின் முதன்மையை வலியுறுத்துவதோடு, பொருள் இடையறாது இயங்கிக் கொண்டிருக்கிறது என்ற கோட்பாட்டையும் வலியுறுத்துகின்றனர்.இதுவே இயக்கவியல் பொருள்முதல்வாதம். பொருளின் மாறும் தன்மையை ஏற்றுக் கொள்கிற நிலையில் நவீன அறிவியலோடு இயக்கவியல் பொருள்முதல்வாதம் ஒத்துப் போகிற தத்துவமாக விளங்குகிறது.
பல அறிவியல் கண்டுபிடிப்புக்கள் யாருடைய உணர்வையும் சிந்தனையையும் சாராமல், சுயேச்சையாக, பொருளின் இருப்பும்,இயக்கமும் இருப்பதை எடுத்துரைக்கின்றன.பொருளின் இந்த புறநிலை எதார்த்தத்திலிருந்துதான் அறிவியலுக்கு பொருளை ஆராய்ந்திட வழி ஏற்படுகிறது.
பொருளின் சுதந்திர இருப்பினை மறுத்தால் அறிவியலுக்கான் கதவுகள் மூடப்படும். அறிவியலுக்கு வாய்ப்பற்ற நிலையைத்தான் கருத்துமுதல்வாதம் ஏற்படுத்துகிறது. அதையேதான் அனுபவவாத விமர்சகர்களும் செய்கின்றனர்,ஆனால் நாசூக்காக தாங்கள் அறிவியலின் துணையோடு நிற்பதாகக் காட்டிக்கொண்டு பிற்போக்குத்தனத்தை புகுத்துகின்றனர்.
பொருளுக்கான வரையறை இல்லை என்றவர்களிடம் வாதப்போரில் ஈடுபட்ட லெனின், வாதங்களின் ஊடாக அற்புதமான,பிரசித்திபெற்ற பொருள் பற்றிய ஒரு வரையறையை வழங்கினார்; “பொருள் என்பது தத்துவரீதியான ஒரு கருத்தினம் (category).இது புறநிலையான எதார்த்தத்தை சுட்டிக்காட்டுகிறது.இந்த எதார்த்தம் மனிதரின் புலன் உணர்வுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. புலன் உணர்வுகளின் பிரதிபலிப்பால் அங்கு அது காப்பி எடுக்கப்படுகிறது; நிழல் படம் எடுக்கப்படுகிறது;(இவை அனைத்தும்)பொருள் புலன்களுக்கு அப்பால் சுயேச்சையாக இருக்கும் நிலையில் நிகழ்கிறது.”
இந்த விரிவான வரையறை மனிதன்,புற உலகு இரண்டுக்குமான தொடர்பினை துல்லியமாக விளக்குகிறது.பொருள் முதன்மையானது,,பொருளிலிருந்துதான் சிந்தனை தோன்றுகிறது என்ற கோட்பாடுகளை இந்த வரையறை கொண்டுள்ளது.
இந்த அறிவியல் வளர்ச்சி வரலாறும் லெனின் வாதிட்ட இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் முக்கிய கோட்பாட்டை உறுதி செய்கின்றன.இயற்கை, பிரபஞ்சத்தில் இன்னும் அறியப்படாதவை எராளமாக இருக்கின்றன;ஆனால் அவை அனைத்தும் இன்னும் அறியப்படவில்லை என்பதுதானே தவிர அறிய முடியாதது என்று எதுவுமில்லை.அனைத்தையும் அறிதல் சாத்தியம்.
இதனை புரிந்துக் கொள்ளாத திறந்தநிலை மார்க்சியம் பேசுவோர் இயக்கவியலை புரிந்துக் கொள்ள ஹெகல், காண்டிடம் தேடமுற்படுவதே இவர்களின் போதாமை இவர்களின் மார்க்சியத்தை மறுக்கும் போக்கு அம்பலமாகிறது. இருந்தும். நாம் அவர்களை ஆய்ந்தறிவோம்.
இதனை சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு நூலின் சில பகுதியிலிருந்து,
கருத்தியல் முனையிலும் (Ideological front) எதிர்ப் புரட்சிக்காரர்கள் தங்களுடைய தாக்குதல்களை தொடுத்தனர். மிக “நவ நாகரீகமான” எழுத்தாளர்கள் பலர் தோன்றினார்கள், மார்க்சியத்தை “விமர்சனம்” செய்தார்கள். அதன்பால் கண்ட “தவறான கருத்துக்களை” அம்பலப்படுத்தினார்கள். அதைத் “தவிடுபொடி”யாக்கினார்கள், புரட்சியைக் கிண்டல் செய்தார்கள், நையாண்டி செய்தார்கள், துரோகத்தைப் பாராட்டினார்கள், “அவரவருக்குத் தனியான குணவிசேசங்கள்” உண்டு என்ற முகமூடியில், காமவெறியைப் புகழ்ந்தார்கள்.
தத்துவார்த்த உலகிலே மார்க்சியத்தைக் “குறைகூறி விமர்சனம்” செய்வதற்கும், அதைத் திரிப்பதற்கும் நாளுக்குநாள் அதிகமாக முயற்சிகள் செய்யப்பட்டன. விஞ்ஞானம் கண்டிறியாதவற்றை விஞ்ஞான உண்மைகள் என்று கூறி, அந்த முகமூடியில் அநேக விதமான மதப் போக்குகள் வெளியிடப்பட்டன.
மார்க்சியத்தில் “தவறு கண்டு விமர்சனம்” செய்வது என்பது அக்காலத்திய (fashionable)” நாகரீகத் தோற்றமாயிற்று. இந்தக் கனவான்கள் பல்வேறு விதமான வர்ணங்களுடன் காட்சியளித்த போதிலும், ஒரே ஒரு பொதுவான நோக்கத்தையே எல்லோரும் பின்பற்றினர். புரட்சியிலிருந்து மக்களைப் பிரிந்து வேறு வழிக்கு இழுப்பதுவே அது.தங்களை மார்க்சியவாதிகளாக எண்ணிக்கொண்டு, ஆனால் மார்க்சியத்தின் உண்மையான நிலைபாட்டை ஒருபோதும் உறுதியாக ஏற்றுக்கொள்ளாத கட்சிப் படிப்பாளிகளிடையே ஒரு பிரிவினரே இவர்கள்.
மார்க்சியத் தத்துவத்தின் அடிப்படைகள் மீதும் (Philosophical Foundations) அதாவது இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் மீதும் சரித்திரத்தை விஞ்ஞானரீதியாக ஆராய்வது கண்ட அடிப்படையான மார்க்சிய சித்தாந்தங்கள் மீதும்- அதாவது வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் மீதும் அவர்கள் ஒரேசமயத்தில் சேர்ந்தாற்போல் தாக்குதல்களைத் தொடுத்தனர்.
சதாரண விமர்சனங்கள் போலில்லை அவர்கள் செய்த விமர்சனம். பகிரங்கமாகவும் நேர்மையாகவும் அவர்கள் தாக்கவில்லை. இதற்குப் பதில், மார்க்சியத்தின் “அடிப்படைகளைப் பாதுகாக்கிறோம்” என்று முகமூடி தரித்துக் கொண்டு மறைந்துநின்று தாக்கினார்கள். தங்களை மார்க்சிஸ்டுகள் என்று இப்பேர்வழிகள் கூறிக்கொண்டனர். ஆனால், “மார்க்சியத்தை வளப்படுத்துவதற்கு” விரும்புவதாகச் சொன்னார்கள். அதாவது மார்க்சியத்தின் அடிப்படையான சித்தாந்தங்களில் சிலவற்றை ஒழித்துக் கட்டுவதன் மூலம், மார்கசியத்தை “வளப்படுத்த” விரும்பினார்கள். யதார்த்தத்தில் அவர்கள் மார்க்சியத்தின் விரோதிகள். மார்க்சியத்தைத் தாங்கள் எதிர்க்கவில்லை என்று அவர்கள் கூறியபோதிலும், மார்க்சியத்தின் தத்துவ அடிப்படையை பலவீனப்படுத்துவதற்கு அவர்கள் முயற்சி செய்தார்கள், மார்க்சிஸ்ட் என்ற முகமூடியுடன் நடமாடுவதை நிறுத்தவில்லை.
ஆக நாம் பேச வந்தவை இனி செல்வோம்.
முழுமையாக வாசிக்க இந்த இதழுக்கு செல்லவும்நெடிய கட்டுரை வாசிக்க இந்த இணையப்பகுதிகுள் சென்று முழுமையாக வாசிக்க தோழர்களே
No comments:
Post a Comment