சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி? லியுஷாவோகி-பாகம் 1

 தோழர்களே!

“கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் தம்மைத் தாமே வளர்த்துக் கொண்டுதிடப்படுத்திக் கொள்வது எப்படி என்பதைப் பற்றியே நான் உங்களுடன்விவாதிக்க உள்ளேன். கட்சியைக் கட்டியமைத்து உறுதிப்படுத்தும் பணியைஎதிர்கொள்ளும் இத்தருணத்தில் இந்த விவாதம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.” - லியுஷாவோகி.

கம்யூனிஸ்டுகள் என்றாலேயே கம்யூனிசத்தைப் பற்றியும் மார்க்சியலெனினியத்தைப் பற்றியும் தெளிவாக அறிந்திருப்பார்கள் என்று இங்குபலரும் கருதுகிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை. கம்யூனிசஅமைப்பில் செயல்படும் பலருக்கும் இத்தகைய மார்க்சிய அறிவுகுறைவாகவே உள்ளது என்பதுதான் உண்மையாகும். சீனாவில் புரட்சிநடப்பதற்கு முன்பே உருவான சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து 1939ஆம் ஆண்டில் லியுஷாவோகி இந்த நூலை எழுதினார். அதில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தம்மை தாமே வளர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார் என்றால் அங்குள்ளகம்யூனிஸ்டுகள் தங்களது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டிய நிலையிலேயே இருந்தார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்அல்லவா? நாம் இன்னும் தெரிந்துகொள்ள வேண்டியது அதிகம் உள்ளதுஎன்று நாம் கூறுவதாலேயே கம்யூனிஸ்டுகள் சோர்வடைந்துவிடுவார்களா?அல்லது நம்பிக்கை இழந்துவிடுவார்களா? அப்படியானால் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவரான லியுஷாவோகி இந்த நூலை எழுதிகட்சி உறுப்பினர்களுக்கு சோர்வை ஏற்படுத்தினாரா? உற்சாகம் ஊட்டினாரா?இந்தப் புத்தகத்தைப் படித்த சீனக் கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்கள்தான்ஒவ்வொருவரும் தனது சொந்த மார்க்சிய அறிவை வளர்த்துக்கொண்டு புரட்சியை நடத்தி முடித்தார்கள் என்பது வரலாறாகும். ஆகவே இங்குள்ள கம்யூனிஸ்டுகள் ஒவ்வொருவரும் தனக்கு எல்லாம் தெரியும் என்று இறுமாப்பு கொள்ளாமல் நம் ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளது என்பதை உணர்ந்து அதனை தெரிந்துகொள்ள முயல வேண்டும். நாம் தெரிந்துகொள்ள வேண்டிய பல விஷயங்களைப் பற்றி மார்க்சிய ஆசான்கள் ஏராளமான போதனைகளை நமக்கு வழங்கியுள்ளார்கள். அந்த போதனைகளை நாம் படித்துப் புரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். அந்த வகையில் லியுஷாவோகி எழுதிய சிறந்த கம்யூனிஸ்ட் ஆவது எப்படி என்ற நூலை நாம் படித்து புரிந்துகொள்வோம். அன்றைய சீனாவைப் போலவே இங்கும் கம்யூனிஸ்ட்கட்சியை கட்டியமைத்து உறுதிப்படுத்தும் நிலையிலேயே நாம் உள்ளோம். மேலும் கம்யூனிஸ்டுகள் பல பிரிவாக பிரிந்திருக்கும் நிலையிலேயே நாம் உள்ளோம். ஆகவே இத்தகைய மோசமான நிலையிலுள்ள நாம் ஒவ்வொருவரும் நமது மார்க்சிய லெனினிய அறிவை வளர்த்துக் கொள்வதும் அதனை திடப்படுத்துவதும் மிகமிக அவசியம் என்பதை நாம்ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

சுய - வளர்ப்புப் பயிற்சியை கம்யூனிஸ்டுகள் ஏன் மேற்கொள்ளவேண்டும்? உயிர் வாழ்வதற்காக மனிதன் இயற்கையை எதிர்த்துப் போராடவும் பொருளாயத செல்வங்களை உற்பத்தி செய்வதற்காக இயற்கையைப் பயன்படுத்திக் கொள்ளவும் வேண்டியதாக இருக்கிறது. எல்லாக் காலங்களிலும் எல்லா நிலைமைகளிலும் பொருளாதய செல்வங்களை உற்பத்தி செய்யும் மனித செயல்பாடு சமூகத் தன்மை கொண்டதாகவே இருக்கிறது. இதிலிருந்து நாம் அறிவது என்னவெனில், சமூக வளர்ச்சியின்எந்தவொரு கட்டத்திலும், மனிதர்கள் உற்பத்தியில் ஈடுபடுகையில்தமக்கிடையில் குறிப்பிட்ட சில உறவுகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர்என்பதே. இயற்கையுடனான இடையறாத போராட்டத்தில் ஈடுபடும் மக்கள்,இயற்கையை இடையறாது மாற்றியமைக்கும் அதே வேளையில், தம்மையும் தமக்கிடையிலான உறவுகளையும் மாற்றி அமைக்கின்றனர்.

மனிதர்களும், அவர்களிடையிலான சமூக உறவுகளும், அவர்களின் சமூகஅமைப்பினுடைய வடிவங்களும், சமூக உணர்வுகளும் இன்றுள்ளதுபோலன்றி மாறுபட்டவையாகவே இருந்தன; எதிர்காலத்திலும் அவைமாறுபட்டவையாகவே இருக்கப் போகின்றன.மனிதர்கள் உயிர் வாழ்வதற்காக இயற்கையை எதிர்த்துப்போராடிக்கொண்டு இருக்கிறார்கள். உதாரணமாக மின்னல் தாக்கி பல உயிர்மற்றும் பொருள் சேதங்களிலிருந்து பாதுகாக்க மின்னலைப் பற்றியவிஞ்ஞான அறிவை வளர்த்து மனிதர்கள் இடிதாங்கியியை அமைத்துதங்களை பாதுகாத்துக் கொள்கிறார்கள். சிலர் சொல்வது போல மனிதர்கள்இயற்கையோடு இயைந்தே மனிதர்கள் வாழ வேண்டும் என்றால், அதாவதுஇயற்கையை எதிர்த்து மனிதர்கள் போராடக் கூடாது என்றால் இயல்பாகஏற்படும் இடி மின்னல்களுக்கு மனிதர்கள் பலியாக வேண்டுமா? ஆகவேஇடி மின்னலிருந்து மனிதர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள,மனிதர்களைத் தாக்கும் இடி மின்னலின் இயல்பை எதிர்த்துப் போராடியேதீர வேண்டும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். போராட்டமேமனிதர்களின் வாழ்க்கையாகும். அதாவது மனிதர்கள் மகிழ்ச்சியாக வாழவேண்டுமானால் இயற்கையை எதிர்த்தும் தீங்கு செய்யும் மனிதர்கள்மற்றும் சமூகத்தை எதிர்த்தும் போராடியே தீரவேண்டும். மேலும்இயற்கையில் சமூகத்திலும் நமக்கு கிடைக்கும் நல்லவற்றை நாம்பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உதாரணமாக நமக்கு இயற்கையில்கிடைக்கும் நெல் போன்ற உணவு வகைகளையும் சமூகத்தில் நமக்குகிடைக்கும் உரிமைகளையும் நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.அதுவே விஞ்ஞான முறையாகும்.

எல்லாக் காலங்களிலும், இனிவரும் காலங்களிலும் மனிதர்கள்பொருளுற்பத்தி நடவடிக்கையில் ஈடுபட்டே ஆகவேண்டும். அந்தஉற்பத்தியில் ஒரு தனி மனிதன் மட்டும் ஈடுபட முடியாது, மாறாக பலமனிதர்கள் உற்பத்தியில் ஈடுபட வேண்டியதுதான் அவசியமாக உள்ளதுஎன்பதை நாம் அனைவரும் அறிவோம். இதனையே சமூகத் தன்மைகொண்ட உற்பத்தி என்பார்கள்.ஆகவே மனிதர்கள் பொருளுற்பத்தியில்ஈடுபடும் போது இயற்கையோடு மட்டுமல்லாமல்லாமல் மனிதர்களுக்குஇடையிலும் உறவுகளை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். இயற்கையோடுஉறவு கொள்ள மனிதர்களுக்கு உழைப்புக் கருவிகள் பயன்படுகின்றன.

இந்தக் கருவிகளின் மூலமே மனிதர்கள் இயற்கையோடு உறவுகொள்கிறார்கள். மேலும் இந்த உறவானது எப்பொழுதும் ஒரே மாதிரியாகஇருப்பதில்லை. அதில் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறது.உதாரணமாக ஆரம்பகால விவசாயத்தில் மனிதர்கள் கற்களையும்,கம்புகளையும் பயன்படுத்தினான் அதன் காரணமாக விளைச்சல் மிகமிகக்குறைவாக இருந்தது, பின்பு ஏர்கலப்பையைப் பயன்படுத்தினான் அதனால்விளைச்சல் சற்று கூடியது, பின்பு டிராக்டர் என்ற இயந்திரத்தைப்பயன்படுத்தினான் மேலும் விளைச்சல் அதிகரித்தது. இவ்வாறுஇயற்கையோடு மனிதன் கொண்டிருக்கும் உறவில் ஏற்பட்ட மாற்றமானதுஇயற்கையையும் அதன் மூலம் கிடைக்கும் பலன்களிலும் மாற்றம்ஏற்பட்டுக்கொண்டே இருப்பதை நாம் காணலாம். அதே போலவேஉற்பத்தியில் ஈடுபடும் மனிதர்களுக்கு இடையிலும் உறவுகளை மனிதர்கள்ஏற்படுத்திக் கொள்கிறார்கள், இயற்கையுடனான இடையறாதபோராட்டத்தின் போது மனிதர்களுக்கு இடையிலான உறவுகளையும், தம்மையும் மனிதர்கள் மாற்றிக் கொள்கிறார்கள். அதாவது இயற்கையைப்பற்றியும் சமூகத்தைப் பற்றிய அறிவையும் மனிதர்கள்வளர்த்துக்கொள்கிறார்கள், மேலும் மனிதர்களுக்கு இடையிலான உறவுகளையும், உதாரணமாக ஆரம்ப காலத்தில் உற்பத்திக் கருவிகள்வளராத நிலையில் உற்பத்தி குறைவாக இருந்த போது மனிதர்கள்அனைவரும் கூட்டமாகச் சென்று வேட்டையாடுவதும் அதன் பலனைகூட்டாகப் பகிர்ந்துகொள்ளும் முறையைப் பின்பற்றி தங்களுக்கு இடையில்எவ்விதமான வேறுபாடும் இல்லாத சகோதர உறவு முறையைப்பின்பற்றினார்கள். அதன் பின்பு உற்பத்தி கருவிகளில் முன்னேற்றம்ஏற்பட்டு உற்பத்தி பெருகியபோது உபரி உற்பத்தியை சிலர் கைப்பற்றிஅதனை தனக்குச் சொந்தமாக மாற்றினார்கள். இவ்வாறு தனியுடமைதோன்றியதும் செல்வத்தை உடமையாகக் கொண்டவர்கள் ஒருபுறம்இருந்துகொண்டு உடமையற்ற மற்றவர்களை அடிமைப் படுத்தினார்கள்.இப்போது அடிமைகள் மற்றும் ஆண்டைகளுக்கான உறவு நிலையை மனிதர்கள் அடைந்தார்கள். மேலும் உற்பத்திக் கருவிகளில் ஏற்படும்மாற்றங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கும், அதன் பயனாக உற்பத்தியிலும்மனிதர்களுக்கு இடையேயான சமூக உறவுகளிலும் மாற்றங்கள்ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். ஆகவே சிலர் கருதுவது போல இன்றைய சமூகத்தில் உள்ள மனிதர்களுக்கு இடையிலான உறவுகளும் சமூகஅமைப்பு முறையிலும் மாற்றங்களே இருக்காது என்பது உண்மையல்ல.

நிச்சயமாக மாற்றங்கள் தவிர்க்க முடியாதவையாகும். உதாரணமாகஇந்தியாவில் சாதி அமைப்பில் ஒவ்வொரு சாதிப் பிரிவினரும் பிறப்பின்அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டு ஒவ்வொரு சாதியினரும் அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட சாதிக்கான தொழிலில்தான் ஈடுபடவேண்டும் என்ற முறை தற்போது ஒழிக்கப்பட்டுவிட்டது. தற்போது எந்த சாதிப் பிரிவினரும் எந்தத் தொழிலையும் கற்றுக்கொண்டு எந்தத் தொழிலும் ஈடுபடலாம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டதை நாம் காணலாம்.

ஆகவே எந்த சமூகமும் மாறாமல் அப்படியே இருக்காது என்பதை நாம் ஆழமாகப் புரிந்துகொள்ள வேண்டும். மேலும் இந்த மாறுதல்களை நாம் புரிந்துகொண்டு சமூகத்தின் வளர்ச்சிக்காகவும் சமூகத்திலுள்ள தீமைகளைஒழிப்பதற்காகவும் அதனை விரைவில் செயல்படுத்துவதற்கு நாம் என்ன

செய்ய வேண்டும் என்பதை புரிந்துகொண்டு போராடுவதன் மூலமே தீமைகளை ஒழித்து சமூகத்தை முன்னேற்ற முடியும் என்பதை நாம்புரிந்துகொள்ள வேண்டும்.

மனித இனமும் மனித சமுதாயமும் வரலாற்றினுடைய வளர்ச்சிப் போக்கில் மாறிக்கொண்டே - இயங்கிக் கொண்டே இருக்கின்றன. வரலாற்றில், மனித சமுதாயம் குறிப்பிட்டதொரு வளர்ச்சிக் கட்டத்தை அடைந்த போது, வர்க்கங்களும் வர்க்கப் போராட்டங்களும் உருவாயின. வர்க்க சமுதாயத்தினுடைய ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தைச் சேர்ந்தவறாகவே வாழ்கிறார்; குறிப்பிட்டதொரு வர்க்கப்போராட்ட சூழ்நிலைமைகளிலேயே வாழ்கிறார். மனிதனுடைய சமூகநிலைமையே அவனது சிந்தனையைத் தீர்மானிக்கிறது. வர்க்கச் சமுதாயத்தில், ஒவ்வொரு வர்க்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்களின் சித்தாந்தமும் வேறுபட்ட நிலைகளைப் பிரதிபலிப்பதாகவும் வேறுபட்டவர்க்க நலன்களை வெளிப்படுத்துவதாகவும் உள்ளன. வெவ்வேறு நிலைபாடுகளையும், நலன்களையும், சித்தாந்தங்களையும் கொண்ட இந்த வர்க்கங்களுக்கு இடையிலான வர்க்கப் போராட்டம் இடையறாதுநடந்தவாறே இருக்கிறது. இயற்கைக்கு எதிரான போராட்டத்தில் மட்டுமல்லாது சமுதாயத்திலுள்ள வர்க்கங்களுக்கு இடையிலானபோராட்டத்திலும் ஈடுபட்டவாறுதான் மனிதர்கள் இயற்கையைமாற்றுகின்றனர். சமுதாயத்தையும் மாற்றுகின்றனர்; அதே வேளையில் தாமும் மாறுதலுக்கு உள்ளாகின்றனர்.மனிதர்களும், குடும்பங்களும், சமூகமும் மாறிக்கொண்டே இருக்கிறது. முன்பு இருந்தவாறு இன்றைய மனிதன் இல்லை. தனி மனிதர்களிடம்அவர்களின் சிந்தனை முறையிலும் பழக்க வழக்கங்களிலும் நடைமுறைவாழ்க்கையிலும் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளதை நாம் பார்க்கிறோம். முன்பெல்லாம் குடும்பங்களை அமைத்துக்கொள்வதற்கு இரத்த உறவை அடிப்படையாகக் கொண்டார்கள். குறிப்பாக நமது நாட்டில் சாதியை அடிப்படையாகக் கொண்டார்கள். ஆனால் தற்போது சமூகத்தின் வளர்ச்சியின் காரணமாக இரத்தஉறவு, மற்றும் சாதி தனது ஆதிக்கத்தை இழந்து கொண்டிருக்கிறது, அதனிடத்தில் பணத்தின் ஆதிக்கம் முதன்மையான பங்குவகிப்பதை நாம் பார்க்கிறோம். ஆகையால்குடும்பத்தை அமைத்துக்கொள்ள சாதியை மட்டும் இப்போது பார்ப்பதில்லைகூடுதலாக பணத்தை அல்லது பொருளாதார செல்வத்தையே முதன்மையாகப் பார்க்கிறார்கள் என்பதை நாம் பார்க்கிறோம். சில வேளைகளில் சாதியைக்கூட புறக்கணித்துவிட்டு பொருளாதாரத்தை மட்டும்அடிப்படையாகக் கொண்டு குடும்பங்கள் அமைக்கப்படுவதை நாம்காணலாம். மனிதர்கள் இயல்பாகவே தங்களது பொருளாதார நிலையை உயர்த்துவதற்காகவே போராடிக்கொண்டு இருக்கிறார்கள்.இதில் சாதிவேறுபாடுகள் இல்லை. அதற்கான முயற்சியில் ஈடுபடும் போது தடைஏற்படுமாயின் அந்தத் தடையை எதிர்த்து மனிதர்கள் சாதிவேறுபாடில்லாமல் அனைத்து சாதியினரும் பொருளாதாரத்துக்காகப்போராடுவதை நாம் பார்க்கலாம். இதனையே வர்க்கப் போராட்டம் என்றுமார்க்சியம் சொல்கிறது. ஆகவே பொதுவாகவே வர்க்கப் போராட்டத்தையாரும் தூண்ட வேண்டிய அவசியம் இல்லை. வர்க்கங்களுக்குஇடையிலான போராட்டமானது தன்னியல்பாகவே நடக்கும். உதாரணமாகஇங்கு அரசு ஊழியர்கள் மற்றும் விவசாயிகள் போராடினார்களேஅவர்களில் பலதரப்பட்ட சாதியினர் இருந்தார்களே, அவர்கள் நடத்தியப்போராட்டம் சாதிப் போராட்டம் இல்லையே, இத்தகையப் போராட்டங்களேவர்க்கப் போராட்டம் ஆகும். இத்தகையப் போராட்டங்கள் தொடர்ந்துநடக்கும். இத்தகைய வர்க்கப் போராட்டங்களை திசைதிருப்பவே மக்களைசாதிகளாகப் பிளவுபடுத்தி சாதிப் பிரச்சனையை சிலர் முதன்மைப் படுத்துகிறார்கள். எனினும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களை பிறசாதியினர் இழிவாகப் பார்க்கிறார்கள், மேலும் இழிவாக நடத்துகிறார்கள்என்பது உண்மையே இந்த இழிவுகளையும் தீண்டாமையையும் எதிர்த்துப்போராட வேண்டும் என்பதும் நியாயமானதே ஆகும். என்றாலும் உடமையற்ற ஏழை தொழிலாளர்களை செல்வம் படைத்தவர்கள் எப்படி நடத்துகிறார்கள்? தனது சொந்த சாதியைச் சேர்ந்த ஏழையை அதே சாதியைச் சேர்ந்த பணக்காரர் இழிவுபடுத்தவில்லையா? அத்தகைய இழிவையும் எதிர்த்துப் போராடுவது அவசியம் இல்லையா? ஆகவே இழிவுபடுத்துவது சாதி அடிப்படையில் மட்டுமல்ல, பொருளாதார அடிப்படையிலும் நடக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

சமுதாயத்தில் ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு ஒழிந்துவிட்டால் இழிவுபடுத்துவது என்ற பேச்சுக்கே இடமில்லை. ஆகவே சாதி இழிவை ஒழிப்பதற்கு இதைத் தவிர வேறு எந்த வழியும் இல்லை. இதற்கு மாறாக தலித்தியவாதிகள் உட்பட சாதியவாதிகள், முன்வைக்கும் சாதி மறுப்புத் திருமணமும், இட ஒதுக்கீட்டுக் கொள்கையும் சாதிய இழிவையும் தீண்டாமைக் கொடுமையையும் தீர்க்காது, இதுவரை அந்தக் கொள்கை இந்தக் கொடுமைகளை ஒழித்துக்கட்டவில்லை. ஆகவே சமுதாயத்திலுள்ள அனைத்து மனிதர்களுக்குமான தேவைகள் பூர்த்தி செய்துகொள்வதற்கான நிலைமையை ஏற்படுத்துவதற்கு நாம் பாடுபட வேண்டும். அதற்கு தடையாக உள்ள கொள்கைகளையும், அந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் அரசியல் கட்சிகளையும், இந்த அரசமைப்பையும் எதிர்த்துப் ஏழை மக்கள் அனைவரும் நடுத்தர மக்களையும் இணைத்துக்கொண்டு போராடுவதுதான் இங்கே வறுமையை ஒழிக்கவும், சாதி இழிவு மற்றும் தீண்டாமையை ஒழிப்பதற்கான விஞ்ஞானப்பூர்வமானஒரே வழியாகும்.

மார்க்சும் எங்கெல்சும் கூறியதாவது: இந்த கம்யூனிச உணர்வைப் பெருமளவில் உற்பத்தி செய்வது, கம்யூனிச இலட்சியம் வெற்றியடைவது ஆகிய இரண்டுக்குமே மனிதர்கள் பெருமளவில் மாறுதலுக்கு உள்ளாவது கட்டாயத் தேவையாகும்; ஒரு நடைமுறை இயக்கத்தில்தான், புரட்சிகரமான ஒரு நடைமுறை இயக்கத்தில்தான் இது நடந்தேறும். எனவே, புரட்சி என்பது கட்டாயத்தேவையாகிறது. ஏனெனில் புரட்சி இல்லாமல் ஆளும் வர்க்கம் தூக்கிஎறியப்பட முடியாது என்பது மட்டுமல்லாமல், புரட்சிகர வர்க்கம், தன்னைக்காலங்காலமாக பீடித்திருக்கும் அழுக்குகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்வதற்கும், அமையவுள்ள புதிய சமுதாயத்துக்கு ஏற்ப தன்னைத்தகவமைத்துக் கொள்வதற்கும் புரட்சி கட்டாயத் தேவையாகிறது.

இதனையே வேறு வார்த்தைகளில் சொல்வதானால், சமூகப் புரட்சி என்ற காலங்காலமான புரட்சிப் போராட்டங்களின் ஊடாக உணர்வுப் பூர்வமாக பயணித்துத்தான் பாட்டாளி வர்க்கம் சமுதாயத்தை மாற்றியமைப்பதுடன் தன்னையும் மாற்றி அமைத்துக்கொள்ள முடியும். உழைக்கும் மக்கள் அனைவரும் புனிதமானவர்கள் என்று நாம் கருதக் கூடாது. உழைக்கும் மக்கள் பக்கம் நியாயம் இருந்தபோதும், உழைக்கும் மக்களிடமும் பிற்போக்கான கொள்கைகளும் பழமையான நடைமுறைகளும் இருக்கும். இந்த பிற்போக்கு கொள்கைகள் மற்றும் கருத்துக்களும் நடைமுறைகளையும் அவர்கள் களைய வேண்டுமானால் உழைக்கும் மக்கள் ஒரு புரட்சிகரமான கொள்கை மற்றும்நடைமுறைகளைக் கொண்டுள்ள கட்சியில் இணைந்து புரட்சிகரமான இயக்கத்தில் ஈடுபட வேண்டியது அவசியமாகும். ஒரு புரட்சிகரமான இயக்கத்தை உழைக்கும் மக்கள் நடத்துவதன் மூலமே பிற்போக்கான அரசை தூக்கி எறிந்துவிட்டு, முற்போக்கான அரசை நிறுவ முடியும்.

இவ்வாறு உருவாக்கப்படும் ஒரு புரட்சிகரமான அரசின் மூலமே உழைக்கும் மக்களுக்கான உன்னதமான வாழ்வுக்கு உத்தரவாதம் கிடைக்கும். இவ்வாறு மக்களால் நடத்தப்படும் புரட்சியானது ஆயுதம் தாங்கிய புரட்சியாக மட்டுமே இருக்க முடியும் என்று கருதுவது தவறாகும். அந்தப் புரட்சியானது ஆயுதம் தாங்கிய வடிவிலும் இருக்கலாம், அரசியல் வடிவிலும் இருக்கலாம், பொருளாதார வடிவிலும் இருக்கலாம், சித்தாந்த வடிவிலும் இருக்கலாம். ஆகவே புரட்சிக்கான வடிவம் எப்படி இருந்த போதும் அதில் உழைக்கும் மக்களின் கூட்டு முயற்சி என்பதுதான் அடிப்படையாகும். அதாவது உழைக்கும் மக்கள் கூட்டாக ஒன்றுதிரண்டு செயல்பட்டு சாதிப்பதுவே புரட்சி ஆகும். இத்தகைய புரட்சியை உழைக்கும் மக்கள் ஒன்றுபட்டு நடத்துவதன் மூலமாகவே சமுதாயமானது புரட்சிகரமாக மாற்றியமைக்கப்படுவதோடு கூடவே சமூகத்திலுள்ள ஒவ்வொருமனிதர்களிடமுள்ள பிற்போக்கு கொள்கைகளும்பழக்கவழக்கங்களும் களையப்பட்டு புரட்சிகரமானவர்களாகஒவ்வொருவரும் மாறுதலுக்கு உள்ளாவார்கள். ஆகவே ஒருகம்யூனிஸ்டுக் கட்சியானது முதலில் ஒரு புரட்சிகரமான கொள்கையைவகுக்க வேண்டும், அடுத்து புரட்சிகரமான மக்களை ஒன்றுதிரட்டவேண்டும், மக்களை புரட்சிகரமான போராட்டங்களில் ஈடுபடுத்த வேண்டும். அதன் மூலம் சமூகத்தைப் புரட்சிகரமாக மாற்றுவதோடு மக்களையும்புரட்சிகரமான முறையில் மாற்றிட வேண்டும்.மக்கள் எந்தளவுக்கு கம்யூனிச உணர்வு ஊட்டப்படுகிறார்களோ, அதே போல் கம்யூனிச இலட்சியம் எந்தளவுக்கு வெற்றி பெறுகிறதோ அந்தளவுக்குசமூகம் மாறும்,சமூகத்திலுள்ள மக்களிடத்திலும் மாற்றங்கள் ஏற்படும்.சமூகத்தில் மாற்றம் ஏற்பட மனிதர்களிடத்தில் மாற்றங்கள் ஏற்படுவதுஅவசியமாகும். அதே போலவே மனிதர்களிடத்தில் மாற்றங்கள் ஏற்பட சமூக மாற்றம் அவசியமாகும்.இவ்விரண்டிற்கும் இடையில் இயங்கியல் உறவு உள்ளது. அதாவது ஒன்றில் ஏற்படும் மாற்றமானது பிறிதொன்றில் ஏற்படும் மாற்றத்துக்கு காரணமாக உள்ளது. இந்த இயங்கியல் உறவைப்புரிந்துகொண்டு கம்யூனிஸ்டுகள் செயல்பட்டால் அவர்களுக்கு வெற்றி நிச்சயம்.

எனவே, மாறுதல் நமக்குத் தேவை என்பதையும், நாம் மாறத் தகுதியுள்ளவர்கள் என்பதையும் நாம் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.அப்பழுக்கு அற்றவர்களாகவும், புனிதர்களாகவும், மாற்றம் தேவைப்படாதவர்களாகவும் நம்மை நாமே கருதிக்கொள்ளக் கூடாது. சமூக மாற்றத்துக்கானப் போராட்டத்தில் ஈடுபடுகையில் நம்மை மறுவார்ப்பு செய்து கொள்ளும் பணியை எதிர்கொள்வது என்பது நம்மை தாழ்த்திக்கொள்ளும் விசயமல்ல. சமூக முன்னேற்றத்தின் புறநிலை விதிகள் நமது மறுவார்ப்பை கோருகின்றன. நம்மை மறுவார்ப்பு செய்து கொள்ளாவிட்டால் நாம் முன்னேற முடியாது அல்லது சமுதாயத்தை மாற்றியமைக்கும் கடமையை நாம் நிறைவேற்ற முடியாது.

கம்யூனிஸ்டுகளாகிய நாம் எவ்விதமான குறைபாடுகளும் இல்லாத புனிதமானவர்கள் இல்லை. சாதாரணமான மனிதர்களிடமுள்ள குறைபாடுகளும் நம்மிடம் இருக்கும். ஏனெனில் சாதாரணமான மனிதர்களாகவே பிறந்து இந்த சமூகத்தில் சாதாரணமான மனிதர்ளாகவே நாம் வாழ்ந்து வந்தோம். இப்போதும் நமது வாழ்க்கையானது சாதாரணமான மனிதர்களுடன் சேர்ந்தே நாம் ஒரு பக்கம் சாதாரணமான மனிதர்களாகவே வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். அதே வேளையில் புரட்சிகரமான கம்யூனிச அமைப்பில் சேர்ந்து செயல்பட்டுக்கொண்டு இருக்கும் நாம் கம்யூனிசப் பண்புகளை கற்று அதனை புரிந்துகொண்டு கம்யூனிஸ்டுகளாக மாறிக்கொண்டு இருக்கிறோம். இவ்வாறு மாறிக்கொண்டிருக்கும் நாம், நம்மிடமுள்ள பிற்போக்கு கருத்துக்களையும் நடைமுறைகளையும் களைந்து கொண்டே புதிய வகையிலான புரட்சிகரமான கருத்துக்களையும் நடைமுறைகளையும் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய இடைக்கட்டத்திலேயே வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். ஆகவே மார்க்சியஆசான்களது போதனைகளின் அடிப்படையில் நமக்கு மாற்றங்கள் தேவை என்பதை உணர வேண்டும். மாற்றம் என்று குறிப்பிடும் போது பிற்போக்கான மாற்றத்தை நாம் குறிப்பிடவில்லை, மாறாக புரட்சிகரமான மாற்றத்தையே இங்கு குறிப்பிடுகிறோம்.

ஒரு புரட்சிகரமான அமைப்பில் சேர்ந்து செயல்படும் போது அந்த அமைப்பானது போதுமான அளவு முன்னேறவில்லை என்றால் நம்மிடம் மாற்றங்கள் தேவை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுஎன்ன வகையான மாற்றங்கள் நமக்குத் தேவை என்பதைப் பற்றி நாம் பரிசீலனை செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும். அவ்வாறு பரிசீலனை செய்து தேவையான மாற்றங்களை செய்து புதிய வழிமுறையில் செயல்பட்டால் மட்டுமே அந்த அமைப்பு முன்னேறும். தேவையான மாறுதல்களை அந்த அமைப்பு செய்யத் தவறினால்நிச்சயமாக அந்த அமைப்பு முன்னேறாது.

நம்மிடத்திலுள்ள குறைகளை களைந்துகொள்வதற்கான முயற்சியை நாம்இழிவாகக் கருதக் கூடாது. அதாவது நம்மிடம் குறைகள் உள்ளது என்பதைவெளிப்படுத்தினால் நம்மை பிறர் ஏளனமாகப் பார்ப்பார்கள் என்று கருதக்கூடாது. பிறர் நம்மை ஏளனமாகப் பார்த்தாலும் பரவாயில்லை, நமதுகுறைகளை வெளிப்படுத்தி நம்மை மறுவார்ப்பு செய்து கொள்வதன் மூலமே நாம் முன்னேறும் போது, நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் வெட்கிதலைகுனிய நேரிடும். ஆகவே நம்மிடமுள்ள குறைகளைக் கண்டு நாம்வேதனைப் படவேண்டிய அவசியம் இல்லை, அந்தக் குறைகளிலிருந்துநாம் மீண்டுவர முடியும். அதற்கான புதிய வழிமுறைகளைப் பின்பற்றிசாதிக்க முடியும் என்ற நம்பிக்கையோடு நம்மை மறுவார்ப்புசெய்துகொள்ள வேண்டும்.

நவீனகால வரலாற்றிலேயே ஆக மிக முன்னேறிய புரட்சியாளர்களாகவிளங்குவோர் கம்யூனிஸ்டுகளாகிய நாம்தான்; இந்த சமுதாயத்தையும்உலகையும் மாற்றியமைக்கும் பொறுப்பு நம் மீதுதான் சுமத்தப்பட்டுள்ளது;இந்த மாறுதலுக்கான இயக்கத்தின் இயங்கு சக்தியாக நாம்தான்இருக்கிறோம். எதிர்ப்புரட்சியாளர்களுக்கு எதிரான விட்டுக் கொடுக்கமுடியாத இந்தப் போராட்டத்தின் வாயிலாக கம்யூனிஸ்டுகளாகிய நாம்தான்சமுதாயத்தையும் உலகையும் மாற்றுகிறோம்; அதே வேளையில் நம்மைநாமே மாற்றியமைத்துக் கொள்கிறோம்.

இங்கே கம்யூனிஸ்டுகள் என்றால் யார்? என்பதை லியு ஷாவோகிவிளக்குகிறார். இதன் மூலம் ஒருவர் கம்யூனிஸ்டாக ஆக வேண்டுமானால் அவரது சிந்தனை முறையும் செயலும் எப்படி இருக்க வேண்டும் என்பதை லியு ஷாவோகியின் போதனையிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு கம்யூனிஸ்ட் சீர்திருத்தவாதியாக இல்லாமல் புரட்சியாளராக இருக்க வேண்டும். இந்த சமூகத்தையும் உலகையும் புரட்சிகரமாக மாற்றுவதற்காகப் பாடுபட வேண்டும். மாறாக நிலவுகின்ற பிற்போக்கான சமூக அமைப்பை பாதுகாக்கும் பணிகளில் ஈடுபடக் கூடாது. பிற்போக்கான சமூக அமைப்பையும், பிற்போக்கு அரசு அமைப்பையும் நொறுக்குவதற்காக மக்களைத் திரட்டிப் பாடுபட வேண்டும். பிற்போக்கான சமூக அமைப்பை மாற்றுவதற்கான கடமைதான் கம்யூனிஸ்டுகளின் கடமை என்பதை கம்யூனிஸ்டுகள் உணர வேண்டும். அந்தக் கடமையை செய்வதற்கு தியாகங்கள் புரிய வேண்டும். சமூக மாற்றத்துக்கு எதிராக சதிகள் செய்து புரட்சிக்கு எதிராக இருப்பவர்களின்கருத்துக்களையும் செயலையும் எதிர்த்து விடாப்பிடியாகப் போராட வேண்டும்.மார்க்சிய லெனினிய சித்தாந்த அரசியலுக்கு எதிரானவர்களையும் அவர்களது கருத்துக்களையும் மக்களிடம் தொடர்ந்து அம்பலப்படுத்தும் சித்தாந்தப் பணியை ஒருபோதும் கைவிடாமல் தொடர்ச்சியாக செய்ய வேண்டும். அவ்வாறு எதிர்ப்புரட்சிகர சந்தர்ப்பவாதத்தை முறியடிப்பதன் மூலமே மார்க்சிய லெனினியத்தை பாதுகாத்து மக்களை சோசலிச சிந்தனை முறையில் வளர்த்து, மக்களைத் திரட்டி கம்யூனிஸ்டுகள் புரட்சியை நடத்திட முடியும். இவ்வாறு கம்யூனிஸ்டுகள் மக்களைத் திரட்டி சமூக மாற்றத்திற்காக புரட்சிகரமாக போராடுவதன் மூலம்பிற்போக்கு சமூகத்தை கம்யூனிஸ்டுகள் மாற்றியமைப்பதோடு தங்களிடம் உள்ள பிற்போக்கு தன்மையையும் ஒழித்து தம்மைத் தாமே மாற்றிக்கொள்ள முடியும், மாற்றிக்கொள்ளவும்வேண்டும். இதுதான் ஒருவர் கம்யூனிஸ்டாக ஆவதற்கான வழி என்று லியுஷாவோகி நமக்குப் போதிக்கிறார்.எதிர்ப் புரட்சியாளர்களுக்கு எதிராக ஒவ்வொரு அரங்கிலும் போராட்டங்கள் தொடுப்பதன் மூலம் கம்யூனிஸ்டுகள் தம்மைத் தாமே மறு உருவாக்கம் செய்துகொண்டே தீர வேண்டும் என்று நாம் கூறுவதன் பொருள் என்ன?

இத்தகைய போராட்டங்களின் வாயிலாகத்தான் தாம் முன்னேறவும் தமது புரட்சிகர தரத்தையும் செயலாற்றலையும் கம்யூனிஸ்டுகள் மேம்படுத்திக் கொள்ளவும் வேண்டும் என்பதே இதன் பொருளாகும். முதிர்ச்சியுறாத ஒரு புரட்சியாளர் புரட்சிகரமான முறையில் புடமிடப்படுவதும் சுய வளர்ப்புப்பயிற்சியை மேற்கொள்ளுவதும் நெடிய மறுவார்ப்புக்கு உள்ளாவதுமானநீண்டகால வளர்ச்சிப் போக்கினூடாக செல்ல வேண்டும்; அதன் பின்னரேபுரட்சியின் விதிகளை நன்கு உள்வாங்கி தேர்ச்சியான முறையில்செயல்படுத்தும் திறனுடையவராவதும் முதிர்ச்சியும் தேர்ச்சியும் பெற்றதொரு புரட்சியாளராக வளர்ச்சி அடைவதும் சாத்தியப்படும்.

இங்கே ஒரு கம்யூனிசப் புரட்சியாளர் தன்னை தொடர்ந்து புரட்சியாளராக பாதுகாத்துக் கொள்வதற்கும், புரட்சியாளராக தொடர்ந்து வளர்த்துக்கொள்வதற்கும் ஒரு கம்யூனிஸ்ட் என்ன செய்ய வேண்டும் என்பதற்கு லியுஷாவோகி வழிகாட்டுகிறார். எதிர்ப் புரட்சியாளர்களையும் அவர்களதுகருத்துக்களையும் ஒவ்வொரு அரங்கிலும் அதாவது அரசியல் அரங்கு, பொருளியல் அரங்கு, சித்தாந்த அரங்கு, அமைப்புத்துறை அரங்கு மற்றும் பண்பாட்டுத் துறையிலும் ஒரு கம்யூனிஸ்டு எதிர்த்துப் போராட்டங்களைத் தொடுக்க வேண்டும். அதன் மூலம் எதிர்ப்புரட்சிகர அதாவது மக்களுக்கு எதிரான கொள்கைகள் மற்றும் நடைமுறையை மக்களிடம் அம்பலப்படுத்தி முறியடிப்பதோடு கூடவே நம்மிடமும் அத்தகைய தவறான கொள்கை மற்றும் நடைமுறைகளை நாம் புரிந்து கொண்டு அந்த தவறுகளை நாம் கைவிடுவதற்கான வாய்ப்பும் வழிமுறையையும் நாம் கற்றுக்கொள்வோம்.

மார்க்சிய லெனினியத்துக்கு எதிரானவர்களையும் அவர்களின் கருத்துக்களையும் நாம் எதிர்த்துப் போராடுவதன் மூலம்தான் நம்மை நாமே வளர்த்துக் கொள்ள முடியும். இங்கே சிலர் அல்லது சில அமைப்புகள் மார்க்சியத்துக்கு எதிரான கருத்துப் பிரச்சாரம் செய்பவர்களை எதிர்த்து சித்தாந்தப் போராட்டத்தை நடத்த வேண்டியதன் அவசியத்தை உணராமல், அவர்கள் செய்து செய்து பழக்கப்பட்ட வழியிலேயே செயல்பட்டு தங்களது சிந்தனையையும் நடைமுறையையும் குறுக்கிக்கொண்டு குறுகிய வட்டத்துக்குள்ளேயே சுற்றி சுற்றி வருகிறார்கள். தங்களது அணிகளுக்கும் மார்க்சிய சித்தாந்த அரசியலை போதிப்பதும் இல்லை, மார்க்சிய சித்தாந்தத்துக்கு எதிரானவற்றை எதிர்த்தும் போராடுவதும் இல்லை. அதன் காரணமாக மார்க்சியத்துக்கும் மக்களுக்கும் எதிரான கருத்துக்கள் மேலும் மேலும் வளர்ந்து ஆதிக்கம் செலுத்திக்கொண்டு இருப்பதோடு கூடவே தமது சொந்த அணிகளும் முன்னேறாமல் தேங்கியுள்ளார்கள். ஆகவே ஒரு கம்யூனிச அமைப்பிலுள்ள தோழர்கள் அனைவரும் தொடர்ந்து தங்களது சித்தாந்த அறிவை வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டும். மேலும் அதற்கான நீண்ட பயிற்சி பெற வேண்டும். அதன் மூலம் மட்டுமே அமைப்புகளிலுள்ள உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் முதிர்ச்சியும் தேர்ச்சியும் பெற்று திறமையான புரட்சியாளர்களாக வளர வேண்டும்.

ஆகவே ஒரு கம்யூனிச அமைப்பிலுள்ள தோழர்கள் எந்தளவுக்கு மார்க்சியதத்துவ அரசியலில் தேர்ச்சி பெற்றுள்ளார்களோ, அதனை நடைமுறையில்செயல்படுத்தும் திறனை வளர்த்துள்ளார்களோ அந்தளவுக்குத்தான் ஒருகம்யூனிச அமைப்பானது சிறந்த புரட்சிகரமான அமைப்பாக வளர முடியும்.இதற்கு மாறாக அமைப்பிலுள்ள தலைவர்கள் மட்டும் திறமையானவர்களாக இருந்தால் மட்டும் அந்த அமைப்பு சிறந்த அமைப்பாக இருக்க முடியாது. மேலும் அந்த அமைப்பு நிச்சயமாக சிறந்த அமைப்பாக வளரவே முடியாது. ஏனென்றால், முதலாவதாக, பழைய சமுதாயத்தில் பிறந்து வளர்ந்தஒப்பீட்டளவில் தேர்ச்சியுறாத புரட்சியாளர் பழைய சமுதாயத்தினுடைய பல்வேறு சித்தாந்தங்களின் மீதமிச்சங்களைச் (பழைய சமுதாயத்தின்தப்பெண்ணங்களையும், பழக்கவழக்கங்களையும்) சுமந்து வருகின்றனர்.

இரண்டாவதாக, அவர் நீண்டகாலப் புரட்சிகர நடவடிக்கையில்ஈடுபட்டவராக இருப்பதில்லை. இதனால், எதிரியைப் பற்றியோ மக்களைப் பற்றியோ அல்லது சமுதாய வளர்ச்சியினுடைய விதிகளைப் பற்றியோபுரட்சிப் போராட்டம் பற்றியோ போதுமான புரிதல் அவருக்கு இருப்பதில்லை. இத்தகைய பாதகமான நிலைமைகளை மாற்றுவதற்கு, கடந்தகால புரட்சி அனுபவங்களில் (புரட்சிகர முன்னோர்களின்அனுபவங்களில்) இருந்து கற்பதுடன் நிகழ்கால புரட்சி நடவடிக்கைகளில் அவர் நேரடியாகப் பங்கேற்க வேண்டும்; இந்தப் புரட்சிகர நடைமுறையில் ஈடுபடுகையில், எல்லா வகையான எதிர்ப் புரட்சியாளர்களை எதிர்த்தும் போராட வேண்டும். இவை அனைத்தையும் செய்யும் அதே வேளையில், முழுமையான ஆற்றலை வெளிப்படுத்தும் உணர்வுப்பூர்வ நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்; கடினப்பட்டு கற்பதையும் சுயவளர்ப்புப் பயிற்சியையும் உணர்வுப்பூர்வமாக மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு செயல்பட்டால்தான் ஆழ்ந்த அனுபவத்தை அவர் பெற முடியும்.சமுதாய வளர்ச்சி மற்றும் புரட்சிப் போராட்டம் பற்றிய ஆழமானப்புரிதலைப் பெற முடியும். எதிரிகளையும் மக்களையும் பற்றி ஆழமாகப்புரிந்துகொள்ள முடியும். தன்னிடமுள்ள தவறான கருத்துக்களையும் பழக்க வழக்கங்களையும் தப்பெண்ணங்களையும் கண்டறிந்து சரிப்படுத்திக்கொள்ள முடியும். இவ்வாறாக அரசியல் உணர்வு மட்டத்தைஉயர்த்திக்கொள்ள வேண்டும்; தனது புரட்சிகர உணர்வு மட்டத்தை உயர்த்திக்கொள்ள வேண்டும்.

தனது புரட்சிகர வேலை முறைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறான வழிமுறைகளைக் கடைபிடித்து தன்னை மறு உருவமைத்துக் கொள்ளவும் தனது அரசியல்உணர்வு மட்டத்தை உயர்த்திக் கொள்ளவும் ஒரு புரட்சியாளர் புரட்சிகர நடவடிக்கையில் பங்கேற்க வேண்டும். எந்தக் காரணத்தை முன்னிட்டும் ரட்சிகர நடவடிக்கையில் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொள்வது கூடாது. மேலும் நடைமுறை வேலையின் போதே சுய வளர்ப்புப் பயிற்சியையும் கற்றலையும் முயன்று மேற்கொள்ள வேண்டும். இவ்வாறெல்லாம் செயல்படாமல் போனால் அவர் ஒருபோதும் முன்னேறமுடியாது.

பழைய சமுதாயமும் இன்றைய சமுதாயமும் ஆகிய இரண்டும் பிற்போக்கான சமுதாயங்களே ஆகும். இத்தகைய பிற்போக்கான சமுதாயத்தில் பிறந்து வாழ்ந்துவரும் நம்மிடையே பிற்போக்கான கருத்துக்களையும், பிற்போக்கான சிந்தனை முறையையும் பிற்போக்கான பழக்கவழக்கங்களையும் இந்த சமூகத்திலிருந்தே கற்றுக்கொண்டுபிற்போக்காளர்களாகவே நாம் இருப்பது இயல்பானதாகும். இத்தகையபிற்போக்காளர்களாக நாம் இருந்த போதும், இந்த சமூகத்தால்பாதிக்கப்பட்டு இந்த சமூகத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றஉணர்வைப் பெற்று, சமூக மாற்றத்திற்காகப் பாடுபடும் கம்யூனிசஅமைப்பில் இணைந்து செயல்பட முன்வருவோம். அவ்வாறு ஒருகம்யூனிச அமைப்பில் சேர்ந்துவிட்ட உடனே நம்மிடமுள்ளபிற்போக்கானவற்றை விட்டுவிட மாட்டோம். மேலும் தற்போதுதான் கம்யூனிச அமைப்பில் சேர்ந்திருப்பதால் நீண்டகாலமாக புரட்சியில்ஈடுபட்டு அனுபவத்தைப் பெற்றிருக்க மாட்டோம். இதன் காரணமாக நமக்குமக்களின் எதிரிகளைப் பற்றியும், மக்களைப் பற்றியும், சமூகத்தின்வளர்ச்சிக்கான விதிகளைப் பற்றியோ புரட்சிகரமான போராட்டங்கள்பற்றியோ தேவையான புரிதலையும் அறிவையும் பெற்றிருக்க மாட்டோம்.

இவையெல்லாம் நமது ஆரம்ப காலங்களில் உள்ள பாதகமானஅம்சங்களாகும். இத்தகைய பாதகமான அம்சங்களை மாற்றுவதற்கு நாம்கடந்த காலங்களில் நமது முன்னோர்கள் நடத்திய புரட்சிகரமானபோராட்டங்களின் அனுபவங்களை நாம் கற்றுக்கொள்ள வேண்டும், அதன்மூலம் புரட்சியின் மீது நம்பிக்கை கொண்டு, புரட்சி நடத்திட வேண்டியதுநமது கடமை என்று உணர வேண்டும். தற்போதைய சூழலில் இங்குஎவ்வாறு புரட்சியை நடத்த வேண்டும் என்பதை பகுத்தறிய வேண்டும்.தற்போது புரட்சியை நடத்துவதற்கு ஆர்வமாக உள்ள புரட்சிகரமானஅமைப்பில் நம்மை இணைத்துக்கொள்ள வேண்டும். புரட்சிகரமானபோராட்டங்களில் நாம் ஈடுபட வேண்டும். அத்தகைய போராட்டங்களில்நாம் ஈடுபடும் போது மக்களுக்கு துரோகம் செய்யும்எதிர்ப்புரட்சியாளர்களை, மக்களிடம் அம்பலப்படுத்தி, அவர்களை எதிர்த்தும்நாம் போராட வேண்டும். இத்தகைய போராட்டங்களை நாம்உணர்வுப்பூர்வமாக செய்ய வேண்டும். இத்தகைய போராட்டங்களின் மூலம் நமக்கு கிடைக்கும் அனுபவங்களிலிருந்து புதிய வகையான கோட்பாட்டுமுடிவிற்கு நாம் வர வேண்டும். அதன் மூலம் நாம் சுயமாக கோட்பாட்டுஅறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் எதிரிகளையும்மக்களைப் பற்றியும், புரட்சி பற்றியும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும் நம்மிடமுள்ள தவறுகளையும் அதாவது நம்மிடமுள்ள தவறானகருத்துக்கள், தவறான பழக்கவழக்கங்கள், தப்பெண்ணங்களைப் புரிந்துகொண்டு அதனை களைந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் நமதுஅரசியல் உணர்வு மட்டத்தையும், புரட்சிகரமான உணர்வு மட்டத்தையும்நமது வேலை முறையையும் வளர்த்துக்கொண்டு புரட்சிகரமானபோராட்டங்களில் நாம் ஈடுபட வேண்டும். இவ்வாறு நமதுசித்தாந்தத்தையும் நடைமுறையையும் வளர்த்துக்கொண்டு செயல்படுவதன்

மூலமே நாம் ஒரு சிறந்த கம்யூனிஸ்ட்டாக வளர முடியும்…………… தொடரும்.

தேன்மொழி.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்