இவை தொடர்ந்து எழுதிக் கொண்டிர்ப்பவைதான் ஆனால் இதுவரை இதற்கான பணி நிறைவடையவில்லை அதனால் தொடர வேண்டி தேவை...
இந்திய கம்யூனிஸ்டுகள் செய்ய வேண்டியவை
இடதுசாரி கம்யூனிசம் - இளம் பருவக் கோளாறு என்ற நூலில் ரஷ்ய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் ரஷ்யப் புரட்சியின் அனுபவத்திலிருந்து ஒரு நாட்டில் புரட்சிகரமான கம்யூனிஸ்டுக் கட்சியை கட்டுவதற்கு மார்க்சிய சித்தாந்த அறிவை நாம் பெற வேண்டிதன் அவசியம் குறித்து கூறியுள்ள தையும், ரஷ்யாவில் கம்யூனிஸ்டு கட்சி உருவாகி வளர்ந்து புரட்சியை சாதித்த வரலாற்றிலிருந்தும் மார்க்சிய சித்தாந்த அறிவை நாம் பெற வேண்டியதன் அவசியம் குறித்து நாம்புரிந்து கொள்ள முயற்சி செய்வோம். இடதுசாரி கம்யூனிசம் - இளம் பருவக்கோளாறு எனும் நூலில் லெனின் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்.
“1917-20-ல் முன்பின் கண்டிராத மிகக் கடினமான நிலைமைகளில் போல்ஷ்விசமானது மிகவும் கண்டிப்பான மத்தியத்துவத்தையும் உருக்கு உறுதி வாய்ந்த கட்டுப் பாட்டையும் நிறுவி அவற்றை வெற்றிகரமாக கட்டிக்காக்க முடிந்ததற்கு ரஷ்யாவின் வரலாற்றுச் சிறப்பியல்கள் பலவும் தான் காரணம்.
ஒருபுறத்தில், மார்க்சியத் தத்துவம் எனும் உறுதி மிக்க அடித்தளத்தின் மீது 1903-ல் போல்ஷ்விசம் உதித்தெழுந்தது. இந்தப் புரட்சிகரத் தத்துவம் பிழையற்றதாகும் என்பது, இது ஒன்று மட்டும்தான் பிழையற்றதாகும் என்பது, பத்தொன்பதாம் நூற்றாண்டு முழு வதிலுமான உலக அனுபவத்தால் மட்டுமின்றி, இன்னும் முக்கியமாய் ரஷ்யாவில் புரட்சிகரச் சிந்தனையின் விசாரங்கள், ஊசலாட்டங்கள், தவறுகள், ஏமாற்றங்கள் ஆகியவற் றின் இந்த அனுபவத்தாலும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ரஷ்யாவில் மிகவும் கொடிய, மிகவும் பிற்போக்கான ஜாரிசத்தால் ஒடுக்கப்பட்டு வந்த முற்போக்குச் சிந்தனை சுமார்அரை நூற்றாண்டாய் -- கடந்த நூற்றாண்டில் ஏறத்தாழ நாற்பதாம் ஆண்டுகளிலிருந்து தொண்ணூறாம்ஆண்டுகள்வரையில் --பிழையற்ற புரட்சிகரத் தத்துவத்தை ஆவலுடன் தேடி வந்தது; இத்துறையில் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும்;இறுதி முடிவாகக் கருதக் கூடியவை ஒவ்வொன்றையும் கண்ணும் கருத்துமாய், தளர்வில்லா ஊக்கத்துடன் கவனித்து வந்தது. ஈடிணையற்ற துன்பமும் தியாகமும்,ஈடிணையற்ற புரட்சிகர வீரமும், நம்புதற்கரிய முனைப்பும், அயராத தேடலும், ஆராய்ச்சியும், நடைமுறைச் சோதனையும், ஏமாற்றமும், சரிபார்த்தலும், ஐரோப்பிய அனுபவத்துடனான ஒப்பிடலும் நிறைந்த அரை நூற்றாண்டுக்காலத்தில் அனுபவித்த வேதனையின் வாயிலாய் ரஷ்யாவானது, பிழையற்ற ஒரேயொரு புரட்சித் தத்துவமான மார்க்சியத்தை வந்தடைந்தது.
மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டபுரட்சிகரத் தத்துவம் பிழையற்றதாகும் என்பதும், இது ஒன்று மட்டும்தான் பிழையற்றதாகும் என்பதும், பத்தொன்பதாம் நூற்றாண்டு முழுவதிலுமான உலக அனுபவத்தால் மட்டுமின்றி, இன்னும் முக்கியமாய் ரஷ்யாவில் புரட்சிகரச்சிந்தனையின் விசாரங்கள், ஊசலாட்டங்கள், தவறுகள், ஏமாற்றங்கள் ஆகியவற்றின் இந்த அனுபவத்தாலும் நிரூபிக்கப் பட்டிருக்கிறது என்கிறார் லெனின்.
உருவாக்கப்பட்ட புரட்சிகர தத்துவம் (திட்டம், போர்த்தந்திரம், செயல் தந்திரம் அமைப்புக் கோட்பாடுகள்) பிழையற்றதாகும் என்றார் லெனின். அது பிழையற்றது என்பதுஉலகம் முழுவதிலுமுள்ள பல நாடுகளின் அனுபவத்திலிருந்தும், ரஷ்யாவின் அனுபவத்திலிருந்தும் நடைமுறையில் நிருபிக்கப்பட்டுவிட்டது என்கிறார் லெனின். மேலும் ரஷ்யாவில் இந்ததத்துவத்திற்கு எதிராக போராடியவர்கள், ஊசலாடியவர்கள்,தவறு செய்தவர்கள், மக்களை ஏமாற்றியவர்களின் எதிர்ப்பிரச்சாரங்களாலும் இந்த தத்துவத்தை தோற்கடிக்க முடியவில்லை என்கிறார் லெனின். இதன் மூலம் அங்கு உருவாக் கப்பட்ட திட்டமானது மார்க்சியம் பற்றியதெளிவான கண்ணோட்டத்திருந்து உருவாக்கப்பட்டதால் அந்த திட்டம் பிழையற்றதாக இருந்தது என்பதையே லெனின் இதன் மூலம் நமக்கு எடுத்துக்காட்டுகிறார். ரஷ்யாவில் மிகவும் கொடிய, மிகவும் பிற்போக்கான ஜாரிசத்தால் ஒடுக்கப்பட்டு வந்தமுற்போக்குச் சிந்தனை சுமார் அரை நூற்றாண்டாய் --கடந்த நூற்றாண்டில் ஏறத்தாழ நாற்பதாம் ஆண்டுகளிலிருந்து தொண்ணூறாம் ஆண்டுகள் வரையில் --- பிழையற்ற புரட்சிகரத் தத்துவத்தைஆவலுடன் தேடி வந்தது என்கிறார் லெனின் அதாவது ஜாரின் கொடூரமான சர்வாதிகார ஆட்சி நடந்து கொண்டிருக்கும் போதுதான் ரஷ்யா விலுள்ள தொழிலாளர்களும், அறிவுஜீவிகளும், சமூகத்தை மாற்றுவதற்கான முற்போக்கு சித்தாந்தத்தை ஆவலுடன் தேடிக்கொண்டிருந் தார்கள் என்கிறார் லெனின். அத்தகைய முற்போக்கான தத்துவம்தான் மார்க்சியம் என்பதை அவர்கள் புரிந்து கொண்டார்கள் என்றும் அதற்காக பல காலம் அவர்கள் எடுத்துக் கொண்டார்கள் என்கிறார் லெனின்.
அந்த காலங்களில் மார்க்சும் எங்கெல்சும் முதலாளித்து சமூக அமைப்பை ஆய்வு செய்து மார்க்சியதத்துவத்தை படைத்திருந்தார்கள். அந்த மார்க்சிய தத்துவமானது ஐரோப்பிய நாடுகளில் மக்களின் செல்வாக்கைப் பெற்றுக் கொண்டு இருந்தது. ரஷ்யாவிலும், மார்க்சிய தத்துவங்களை ரஷ்யமொழியில் மொழி பெயர்த்து தொழிலாளர்களிடமும், அறிவுஜீவிகளிடமும் தோழர் பிளக்னோவால் பரப்பப் பட்டுக் கொண்டு இருந்தது.
இந்த சூழலில்தான், ஐரோப்பாவில் இந்த தத்துவத்தை செயல்படுத்திய அனுபவத்தில் ஏற்பட்ட வெற்றி மற்றும் தோல்விகளிலிருந்தும், இதனை சோதிக்க எடுத்த முயற்சிகளிலிருந்தும், ரஷ்யாவில் இதற்காக நடந்த போராட்டங்கள், தியாகங்கள், போன்றவற்றிலிருந்தும் புரட்சிகரமான தத்துவமான மார்க்சியத்தை புரிந்து கொண்டோம் என்கிறார் லெனின். ஆகவே ரஷ்ய கம்யூனிஸ்டுக் கட்சியின் வரலாற்றில் ஜாரின் எதேச்சிகாரத்தை மீறியும், அதன் கொடுமைகளை தாங்கிக் கொண்டும் ரஷ்யாவிலுள்ள புரட்சிகர சக்திகள் மார்க்சியத்தின் அடிப்படைகளை பல காலம் முயற்சி செய்து பாடுபட்டுக் கற்றுக்கொண்டார்கள் என்பதை லெனின் இங்கே சுட்டிக்காட்டுகிறார். இதுபோன்ற வரலாற்று அனுபவம் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சிக்கோ, இங்குள்ள புரட்சிகர சக்திகளுக்கோ இதுவரை இல்லை என்பதே இந்திய கம்யூனிச இயக்கத்தின் வரலாறாகும். அதற்கு காரணம் என்ன? தொடரில் பார்ப்போம். ஜாரிசத்தால் அரசியலாளர்கள் நாடுகடத்தப்பட்டு வந்ததன் விளைவாய், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் புரட்சிகரரஷ்யா, வேறு எந்த நாட்டுக்கும் இல்லாத அளவுக்கு வளமான சர்வதேசத் தொடர்புகளும், உலகப் புரட்சி இயக்கத்தின் வடிவங்களையும் தத்துவங்களையும் பற்றிய அருமையானதகவல் ஞானமும்பெறலாயிற்று என்கிறார் லெனின்.
அதாவதுஜாரிசத்தின்கொடுமையால் ரஷ்யாவிலுள்ள புரட்சிகர சக்திகள் பலர் நாடுகடத்தப்பட்டார்கள். அதன் காரணமாகவேபல்வேறுநாடுகளுக்குச் சென்ற புரட்சியாளர்கள் பல நாடுகளின் அனுபவங்களைப் பெற்றனர். இத்தகைய அனுபத்தை பெற்ற நாடு உலகில் வேறு எங்கும் அப்போது இல்லை. உலகம் முழுவதிலுமுள்ள புரட்சிகர அனுபவத்தினாலும், பல்வேறு தத்துவங்கள் பற்றிய புரிதல் மூலம், இறுதியாக மார்க்சிய தத்துவ அறிவில் நல்ல வளர்ச்சியைப் பெற்றார்கள். இது ரஷ்யாவிலுள்ள புரட்சியாளர்களுக்கு ஒரு சிறப்பான கம்யூனிஸ்டு கட்சியை உருவாவதற்கு சாதகமாகிற்று.
இந்த மார்க்சிய தத்துவ கருங்கல் அடித்தளத்தின் மீதுதான் ரஷ்ய கம்யூனிஸ்டுகட்சி 1903ல் கட்டப் பட்டது. அதற்குப் பின்பு அதாவது 1903லிருந்து 1917வரை கட்சியானது பலபோராட்டங்களை நடத்தி, அதன் மூலம் கிடைத்த அனுபவங்களை மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையில் அலசி ஆராய்ந்து சிலவேளைகளில் ரகசியமாக செயல்படுவது சில வேளையில் பயிரங்கமாக செயல்படுவது போன்ற பல்வேறுவிதமான முறைகளை கையாண்டு இறுதியில் ஜார் அரசாங்கத்தையும், அதற்குப் பின்பு உருவான கெரன்சிக்கின் ஆட்சியையும் வீழ்த்தி தொழிலாளி வர்க்க அரசு உருவாக்கப்பட்டது. இந்த சாதனைக்கு முதன்மையான காரணம்,ரஷ்யகம்யூனிஸ்டுக் கட்சி ஊழியர்களும், தலைவர்களும் மார்க்சியத்தை கற்றுத் தேர்ந்ததே ஆகும்.
அவர்களுக்கு மார்க்சிய அறிவும் சர்வதேச புரட்சி இயக்கங்களின் வரலாற்று அறிவும் இல்லை என்றால் அவர்களால் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்க முடியாது.
ரசியாவில் புரட்சிகர கட்சியை கட்டுவதற்க்கு முன்பே பல்வேறு புரட்சிகர குழுக்கள், மார்க்சிய வாசகர்வட்டங்கள்தோன்றியிருந்தன, 1895-ல்தொழிலாளர் விடுதலைக் கான போராட்ட குழு லெனினால் தோற்றிவிக்கப் படுகிறது. பல குழுக்கள் ஏதேசதிகாரத்தை தனித் தனியாக போராடி ஒன்றும் சாதிக்க முடியாது் என்றும் ஒன்றுபட்ட ரசிய புரட்சிகர கட்சியால் மட்டுமே சாதிக்க முடியும் என்றும் முடிவுக்கு வரும் லெனின், பலம் வாய்ந்த கட்சியை கட்ட புரட்சிகர குழுக்கள் சமூக ஜன நாயக சக்திகள் இவ்வாறு பல்வேறு குழுக்களை ஒற்றுமை படுத்த நிலவும் முரண்பாடுகளையும் குழப்பங்களையும் தீர்த்து , சித்தந்த ஒற்றுமை என்பது கட்சியின் வேலை திட்ட அடிப்படையில் அடைய வேண்டும்., என்று கூறுகிறார் லெனின். கட்சி கட்டப் பட்ட பின்னரே கட்சிக்குள் பல்வேறு போக்குகள் வருவதை தடுக்க லெனின் மேற்கொண்ட நடவடிக்கை பற்றி நாம் பேசுகிறோம். ஆனால் இங்கோ இன்று வரை அந்த வகையில் கட்சி கட்டப் பட்வேயில்லை.
மூன்றாம் அகில வழிகாட்டுதல் படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அகிலத்தின் வழிகாட்டுதலை அதாவது ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணி, ஏகாதிபத்திய பிற்போக்கு சக்திகளை தூக்கி எறிந்து மக்கள் ஜனநாயக அரசை நிறுவும்படியும், அதற்க்கு உடனடியாக பிரிந்து கிடக்கின்றகம்யூனிச குழுக்களையும், தனிநபர்களையும் இணைத்து பலம் வாய்ந்த ஒன்று பட்ட கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவும்படி திரும்ப திரும்ப வலியுறுத்தியது. ஆனால் இன்றுவரை இந்தப் பணி நிறைவேறவில்லை. இந்தியாவின் இடதுசாரி ஒருபிரிவானது கம்யூனிசத்தின் அடிப்படை அரசியல் கோட்பாடுகளை புறகணித்து, அதாவது மூன்றாம் அகிலத்தின் நிலைப்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டன;அதாவது அகிலத்தின் வழி காட்டுதலை புறகணித்தது. பொருளாதார போராட்டங்களும், முதலாளித்துவ தேர்தலுக்கு மட்டுமே தயாரிப்பு செய்வதாகும். இவர்கள் மக்களை அரசியல் படுத்தாமல் வெறும் ஓட்டு சீட்டிற்க்காக என்பதாகி போனது.
இன்னொறுபுறம் மார்க்சியத்தின் புரட்சிகர ஆன்மாவை மீண்டும் நிகழ்ச்சி நிரலில் வைத்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு புரட்சிகர கட்சியின் தலைமையளிக்க முன்னெடுத்த இயக்கம். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை உயர்த்திப் பிடித்து, புரட்சியின் மூலம் சுரண்டும் வர்க்க அரசைத் தகர்ப்பது, சோசலித்துக்கான அமைதிவழி மாற்றத்தை நிராகரித்து, புரட்சிகரபலாத்காரத்தை ஏற்றல், பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படையாக கம்யூனிஸ்ட் கட்சியை மாற்றியமைத்தல்,புதிய ஜனநாயகப் புரட்சி, தொழிலாளி, விவசாயிகள்கூட்டணி அமைத்தல் போன்ற அரசியல் நிலைப் பாடுகளை அங்கீகரித்தது. ஆனால் வலது திருத்தல்வாத போக்குகளுக்கு சித்தாந்த ரீதியில் பலத்த அடி கொடுக்காமலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் இயங்கு வதற்கான நெறிமுறைகள் மூன்றாம் அகிலத்தினால்உருவாக்கப் பட்டத்தை கவனத்தில் கொள்ளாமலும் கட்சி தொடங்கிய காலத்தில் குருச்சேவ் திருத்தல்வாதத்தை எதிர்த்து சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவப் போராட்டமான மாபெரும் விவாதத்தின் நிலைப்பாடுகளை கிரகித்துக் கொள்ளாமலும் கட்சி கட்டப் பட்டது. கொரில்லாப் போரைத் தவிர மற்ற எல்லா போராட்ட வடிவங்களும் அமைப்பு வடிவங்களும் நிராகரிக்கப்பட்டன. இடது குறுங்குழுவாதத்தை புரட்சி வழியாக உயர்த்திப் பிடிக்கப்பட்டது. இன்று ஒரு கட்சிக்கு பதிலாக பல குழுக்கள்இயங்கிக் கொண்டிருக் கின்றன. அனுபவத்தின் வாயிலாகவும், அரைகுறையாக கோட்பாடுகளை கிரகித்துக் கொண்டதன் மூலம் இன்று அறியப் படும் நிலைப்பாடுகள்.
ஒருகம்யூனிஸ்டுக் கட்சி செய்ய வேண்டிய பணிகளின் பன்முகத் தன்மையை புரிந்துகொள்ளாமல் இன்றுவரை செயல்பட்டுக் கொண்டு இருப்பதுதான் தவறானது என்று கருதுகிறோம். கட்சியைகட்டிய பிறகாவது ரஷ்ய கம்யூனிஸ்டு கட்சி கடந்துவந்த பாதையைப் புரிந்துகொண்டு மார்க்சிய கல்வியை கட்சிக்கு போதித்து கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்களை மார்க்சிய சித்தாந்தவாதிகளாக வளர்த்திருக்க வேண்டும். அதனை இந்திய கம்யூனிஸ்டுகள் செய்யவில்லை. நமது நோக்கம் ரஷ்யாவில் நடந்தது போல் ஒரு புரட்சியின் மூலம் உழைக்கும் வர்க்கத்தின் அரசை உருவாக்க வேண்டும் என்பதாகும். அத்தகைய புரட்சியை நடத்திட உழைக்கும்மக்கள்ஒரு கொள்கையின் கீழ் திரட்டப்பட வேண்டும். அத்தகைய ஒரு கொள்கையை உருவாக்க புரட்சிகர சக்திகளுக்கு இடையே கருத்துப் போராட்டம் நடத்தி ஒரு பொதுக் கருத்தை நாம் வந்தடைய வேண்டும். அத்தகைய பொதுக்கருத்தை வந்தடைவதற்கான கருத்துப் போராட்டம் நடத்துபவர்களுக்கு மார்க்சிய லெனினிய தத்துவ அறிவை வளர்க்க வேண்டும், அதன் மூலம் மட்டுமே அவர்கள் சரியாக கருத்துப் போராட்டத்தை நடத்த முடியும்.இத்தகைய தத்துவ அறிவை வளர்ப்பது மட்டுமே நமது பணி என்று செயல்பட கூடாது.
இந்திய பொதுவுடமை இயக்க வரலாறின் இன்றைய நிலை அதற்கு அனுமதிக்காது. ஏனெனில் புறநிலையில் கம்யூனிச இயக்கத்தின் வளர்ச்சியை கணக்கிலெடுத்தால், மார்க்சியம் பற்றிய கல்வி போதனை மிகமிக அவசியம் என்ற போதிலும் மேலும் பல பணிகளை செய்வதன் மூலமே இங்கே ஒன்றுபட்ட கம்யூனிஸ்டு கட்சியை கட்ட முடியும். தத்துவங்களை போதனை செய்வது, சமூகத்தைப் பற்றிய அரசியல் பொருளாதாரஆய்வுகள் செய்வது, வர்க்கங்களைத் திரட்டிப் போராடுவதன் மூலம் வர்க்கங் களைப் பற்றிபுரிந்து கொள்ளவது, புரட்சிகர கலை இலக்கியங் கியங்களைப் படைப்பது, தேர்தல்களில் பங்கேற்று இந்த பாராளுமன்ற போலி ஜனநாயகத்தை அம்பலப் படுத்துவது, அவ்வப்போது ஆட்சியாளர்கள் மக்களின் மீது நடத்தும் தாக்குதல்களிலிருந்து மக்களை பாதுகாப்பது,இதுபோன்ற பல பணிகளை செய்து அதில் கிடைக்கும் அனுபவங்களையும் கணக்கில் எடுத்து மார்க்சிய கண்ணோட்டத்திலிருந்து ஒரு விஞ்ஞானப் பூர்வமான திட்டத்தை பலவகையான புரட்சிகர சக்திகளிடமும் விவாதித்து ஒரு பொதுக் கருத்தை உருவாக்கி, ஒரு காங்கிரசின் மூலம் ஒரு ஒன்றுபட்ட கம்யூனிஸ்டு கட்சியை நாம் உருவாக்க வேண்டும்.
ஆகவே நாம் செய்ய வேண்டிய பல பணிகளை வேலைப்பிரிவினையாக எடுத்துக்கொண்டு,ஒவ்வொரு பணி செய்யக்கூடிய தகுதிபடைத்தவர் களை இனம் கண்டு, அவர்களைக் கொண்டு தனிதனியாக குழுக்களை உருவாக்கி இந்தப் பணிகளை செய்வதன் மூலம் நம்மால் ரஷ்யாவில்கட்டப்பட்டது போன்ற கம்யூனிஸ்டு கட்சியை இங்கே கட்டமுடியும். ஆனால் இங்கே பல குழுக்களாகவும் கட்சிகளாகவும் பிரிந்து நிற்பவர்கள், ஒரு ஒன்றுபட்டகட்சியை கட்டமுடியாது என்று நம்பிக்கை இழந்துள்ளனர். இன்னும் சிலர் இங்கே பாசிச ஆட்சிநடக்கிறது என்றும் அதனை வீழ்த்திவிட்டு ஒரு சமூக நல அரசை கொண்டுவந்தால் மட்டுமே இங்கே ஒன்றுபட்ட கம்யூனிஸ்டு கட்சியை கட்ட முடியும் என்கிறார்கள். இவர்கள் ரஷ்யாவில் கொடூரமான ஜாரின் சர்வாதிகார ஆட்சி நடந்துகொண்டிருந்த போதுதான் அங்கு கட்சிகட்டப்பட்ட வரலாற்றை மறந்து விடுகிறார்கள். ஆகவே இங்கே ஒரு ஒன்றுபட்ட கம்யூனிஸ்டு கட்சியை கட்டுவதற்கான பல பணிகளை செய்வதற்கு முயற்சி செய்வோம், அதில் மிகவும் முதன்மையான பணியானது கம்யூனிசத்தின் அடிப்படை கொள்கை கோட்பாடு களை மக்களிடம் கொண்டு சென்று கல்வி புகட்டுவதாகும்.
மார்க்சிய தத்துவம் எனும் கருங்கல் அடித்தளத்தின் மீது ரஷ்யாவில் கம்யூனி்ஸ்டு கட்சிகட்டப்பட்டதால், அங்குள்ள முன்னணிகளுக்கு மார்க்சிய தத்துவ அறிவு கொடுத்து வளர்க்கப் பட்டிருந்ததனால், மார்க்சியத்தின் அடிப்படையில் லெனினால் வைக்கப்பட்ட கருத்துக்களை மக்கள் ஏற்றுக் கொண்டு புரட்சி நடத்தினார்கள். போல்ஷ்விக்குகளும் எவ்விதமான பிளவுகளையும் சந்திக்காமல் ஒற்றுமையாக இருந்து தங்களை பலப்படுத்திக் கொண்டார்கள். அதே வேளையில் டிராட்ஸ்கி, மற்றும் மென்ஷ்விக்குகளின் கருத்துக்கள் மார்க்சியத்தை அடிப்படையாக கொள்ளாததை புரிந்துகொண்டு மக்களும் முன்னணிகளும் அதனை புறக்கணித்தார்கள். இந்த வரலாற்று உண்மையிலிருந்து மார்க்சிய தத்துவ கல்வியின் அவசியத்தை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
இதற்கு மாறாக இந்திய கம்யூனிஸ்டுகளின் வரலாற்றில் கம்யூனிஸ்டுகள் மார்க்சிய கல்வி போதனைக்கு முக்கியத்துவம் கொடுக்க தவறியதன் விளைவாக கம்யூனிச அமைப்புகள் பல குழுக்களாக சிதறிவிட்டது. மேலும் மார்க்சியத்திற்கு அன்னியமான, பின்நவீனத்துவம்,அடையாள அரசியல், டிராட்ஸ்கியம் போன்ற பிற்போக்குசித்தாந்தங்கள்கம்யூனிஸ்டு கட்சிக்குள் புகுந்து விளையாட வழி ஏற்பட்டுவிட்டது. மக்கள் பிரச்சினையை தீர்க்க முடியாத ஆட்சியாளர்கள் மக்களின் போராட்டத்தை திசைத்திருப்ப பல வழிகளை கண்டுபிடித்து விட்டனர். அவர்களுக்கு சாதகமாக பல்வேறு ஏகாதிபத்திய தொண்டு நிறுவனங்கள் செயல்படுவதோடு தினம் தினம் புதுபுது பெயர்களில் தொடங்கும் கட்சியும் நோக்கமும் போராட்ட களத்தை திசைத்திருப்பி ஆளும் வர்க்க சேவை செய்யதானே? இன்று அரசு கொண்டு வரும் மக்கள் விரோத சட்டங்களையோ திட்டங்களையோ கண்டுக் கொள்ளாத இடதுசாரிகட்சிகள் கண்துடைபிற்கான போராட்டம் மட்டுமே அவை உழைக்கும் மக்களை தக்கவைக்க!.இவை நமக்கு கிடைத்த படிப்பினைகள். அப்படி எனும் பொழுது கட்சி என்றால் என்ன?
ஒரு புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சி நமக்கு ஏன் வேண்டும்?. ஒரு கம்யூனிஸ்டு கட்சியானது புரட்சிகர கட்சியாக இருக்க வேண்டிய அவசியம் என்ன?. உலகத்தில் வாழம் உழைக்கும் மக்களுக்கு எதிரிகள் உள்ளனர். அவர்கள் உழைக்கும் மக்களை ஒடுக்குகின்றனர்.அம்மக்கள் எதிரியினுடைய ஒடுக்குமுறையினைத் தூக்கியெறிந்திடவேவிரும்புகின்றனர். முதலாளியமற்றும் ஏகாதிபத்திய காலகட்டத்தில் கம்யூனிஸ்டு கட்சி போன்ற ஒரு கட்சியே தற்போது தேவைப் படுகிறது. அதனைப் போன்ற ஒரு கட்சியில்லாமல் எதிரியின் ஒடுக்குமுறையை மக்களால் தூக்கியெறிந்திட முற்றிலும் சாத்தியமற்றதாகும். நாம் கம்யூனிஸ்டுகள். எதிரியைத் தூக்கியெறிவதில் மக்களுக்கு வழிகாட்ட விரும்புகிறோம். ஆகவேநமதுபடையின் அணிவகுப்புகளைச் சிறந்த நிலையில் வைத்தாக வேண்டும். நாம் ஒழுங்காக அணிவகுத்துச் சென்றாக வேண்டும். நமது துருப்புகள் அதாவது நமது கட்சி உறுப்பினர்களைதேர்ந்தெடுத்து அது தேர்ந்தெடுக்கப்பட்ட துருப்புகளாக இருக்க வேண்டும். நமது ஆயுதங்களும் சிறந்த ஆயுதங்களாக இருக்க வேண்டும். அதாவது நமது கொள்கைகள் மற்றும் கோட்பாடுகள்விஞ்ஞான முறையின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். அத்தகைய தத்துவஆயுதம்தான் நமது ஆயுதமாகும். இந்த நிலைமைகள் இல்லாமல் எதிரியை நம்மால்தூக்கியெறிய முடியாது. -மாவோ-
கட்சி என்பது ஒரு வர்க்கத்தின் அரசியல் ரீதியான உணர்வு பெற்ற வளர்ச்சி அடைந்த பிரிவாகும்; இது அந்த வர்க்கத்தின் முன்னணி படையாகும். அந்த முன்னணி படையின் வலிமை அதில் உள்ளவர்களின் எண்ணிக்கையை காட்டிலும் ஒரு 100 மடங்கு அதிகமானதாகும்.... நூறு மடங்கு அதிகமானதாகும்.(லெனின்தொகுப்பு நூல்கள் தொ 19. ப 406 ).
வரலாற்றில்தனக்குரிய பாத்திரத்தை உணர்ந்து கொள்கிற பாட்டாளி வர்க்கம், மற்ற சுரண்டப்படும் வர்க்கங்களின் முன்னணி படையாக தன்னை அமைத்துக் கொள்கிறது. இந்த வர்க்கங்களில் முதன்மையானது குட்டி முதலாளி வர்க்கமாகும். பாட்டாளி வர்க்கம் அவ்வர்க்கங்களுக்குரிய தலைமையை வழங்குகிறது; அவர்களது ஆதரவை வென்றெடுக்கிறது அதேவேளை அந்த வர்க்கங்கள் தம்முடன் இயக்கத்துக்குள் கொண்டு வரும் ஊசலாட்டங்களையும் திசை விலகல்களையும் எதிர்க்கிறது. பாட்டாளி வர்க்கமே ஒரு சுதந்திரமான பாட்டாளி வர்க்க கட்சியின் தலைமையின் கீழ் அமைப்புக்குள்ளாக்கப்பட்டு இருந்தால் தான் அதை சாதிக்க முடியும். (லெனின் தொகுப்பு நூல்கள் தொ 7 , ப 415 ).
முன்னணி படை என்ற வகையில் தன் கடமையை நிறைவேற்று வதற்காக கட்சியானது பாட்டாளி வர்க்கத்துக்கும் குட்டிமுதலாளி வர்க்கத்திற்கு உள்ள பல்வேறு பிரிவுகளுக்கும் இடையே உள்ள உறவுகளையும் பாட்டாளி வர்க்கத்திற்கு உள்ளே இருக்கிற பல்வேறு பிரிவுகளுக்கு இடையே உள்ள உறவுகளையும் சரியாக கையாள தெரிந்திருக்க வேண்டும். (லெனின் தேர்வு நூல்கள் தொ 31, ப 74 ).
இன்று நம் முன் உள்ள சவால்
பல்வேறு நாடுகளில் வலதுசாரி முதலாளித்துவ கட்சிகள் போல் இடதுசாரி கட்சிகளும் ஆட்சிக்கு வந்துள்ளன. தென் அமெரிக்க நாடுகள் சிலவற்றில் இடதுசாரி கட்சிகள் ஆட்சிக்கு வருவதும் இவை பற்றிய மார்க்சிய ஆசான்கள் வழியில் புரிந்துக் கொள்வதோடு, வலதுசாரி ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமாவதும் நடந்தாலும் அவை உலக அளவிலான மாற்றை முன் வைக்க அல்லது பிற நாட்டு புரட்சிகர சக்திகளுக்கு முன் உதாரணமாக இல்லை அதற்க்கான பங்களிப்பு ஒன்றுமில்லை என்பதே கண்முன் காணகிடைக்கிறது.
அமெரிக்க மேலாதிக்கத்தை எதிர்த்து நிற்கும் சீனா, ரசியா ஆகிய இரண்டு நாடுகளும் தத்தமது நாட்டு நலன்களை மையமாக வைத்து வெளிப்படையான முதலாளித்துவ அமைப்பாகதான் செயல்படுகின்றன.சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஆட்சி உள்ளது அவை என்ன செய்துக் கொண்டுள்ளது?. சீனஅரசு, சோசலிசத்தை கட்டியமைப்பதாக சொல்லிக் கொள்கிறது. 1949-ல் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நடந்த புரட்சிக்குப் பிந்தைய 70 ஆண்டுகளில் சீனா உலகின் மிகப்பெரிய அரசியல் பொருளாதார சக்தியாக வளர்ந்துள்ளது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் அமெரிக்க மேலாதிக்கத்துக்கு சவால் விடும் வகையில் வளர்ச்சியடைந்துள்ளது. இவை எவ்வகையான பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சி அங்கு ஒரு சிலரின் கையில் உடைமைகள் குவிந்துள்ளது தனி உடைமை இல்லையா? இப்படியாக சீனா கம்யூனிச கட்சி யாரின் தலைமையில் யாரின் தேவைக்காக பாடுபடுகிறது என்பதனை புரிந்துக் கொண்டு தெளிவடைய வேண்டும் நாம்.
உண்மையான ஒரு கம்யூனிஸ்ட் கட்சியும் சோசலிச நாடும் கடைப்பிடிக்க வேண்டிய பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்ற கோட்பாட்டைக் கடைப்பிடிக்காத, தன் நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கான சர்வதேச உறவுகளின் மீது மட்டுமே சீன அரசு அக்கறை காட்டுகிறது ஆக அவை பாட்டாளி வர்க்க நிலையிலிருந்து நலுவி விட்டதென்றால் அவை பற்றி விமர்சினங்கள் பின் பார்ப்போம்.
இவ்வாறாக, உலகெங்கிலும் உள்ள புரட்சிகர சக்திகளுக்கு கோட்பாட்டு ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் வழிகாட்டும் அல்லது ஆதரவு அளிக்கும் சர்வதேச சோசலிச முகாம் எதுவும் இல்லாத நிலை உள்ளது.
நான்காவது அகிலம் முதலான பெயர்களில் செயல்படும் பல்வேறு டிராட்ஸ்கிய குழுக்கள் மார்க்சிய லெனினியத்துக்கு எதிரான கோட்பாட்டு அரசியலை அடிப்படையாகக் கொண்டுள்ளன இவை மார்க்சியத்தை குலைக்கும் வேலையை செய்துக் கொண்டுள்ளது அப்படி என்னும் பொழுது இதன் பங்களிப்பு என்பது பாட்டாளி வர்க்க சர்வதேசியம் அல்ல ஏகாதியபத்திய உலகமயம் மற்றும் விரிவாக பின் பார்ப்போம்.நேபாள மாவோயிஸ்டு கட்சி சர்வதேச அகிலம் ஒன்றை துவங்குவதற்கான முனைப்புடன் உலகின் பல்வேறு புரட்சிகரக் கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கான முன்முயற்சி எடுத்தது. ஆனால் அக்கட்சியின் உள்முரண்பாடுகளாலும் உள்நாட்டு அரசியல் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்தாக வேண்டிய நிலையாலும் அப்பணியானது அடுத்த கட்டத்திற்கு நகராமல் தேக்க நிலையை அடைந்து செயலிழந்து விட்டது.
மொத்தத்தில், இன்றைக்கு சர்வதேச அளவிலும் சரி இந்திய அளவிலும் சரி பிற்போக்கும் எதிர்ப்புரட்சியும் கோலோச்சுகின்றன, அவற்றை எதிர்த்த இடதுசாரி கட்சிகளின் அரசியல் முதலாளித்துவத்தின் எல்லைக்குள் செயல்படும் வகையில் பலவீனமாக உள்ளது என்றால் மிகையாகாது.
குறுங்குழுவாதம்:- இங்குள்ள பெரிய நோய் இதனை பற்றி விரிவாக பேசுவோம்
அமைப்பிற்குள் தன்னை ஏற்றுக் கொண்டவர்களை மட்டுமே அங்கீகரிப்பார், தன்னை ஏற்றுக் கொள்ளாதவர்களை ஒழித்துக் கட்டுவதிலேயே குறியாக இருப்பார். அதன் காரணமாக இவர் எப்போதும் அமைப்பிற்குள் ஒற்றுமைக்கு பாடுபட மாட்டார். தனது கருத்துக்களோடு முரண்படுபவர்களை விரட்டியடிப்பதன் மூலம் அமைப்பிற்குள் பிளவை ஏற்படுத்துவார். இத்தகைய தனிவுடமை முதலாளித்துவ கண்ணோட்டத்திலிருந்து ஒரு உழைக்கும் வர்க்க அமைப்பிற்குள் செயல்படுபவர்களையே குறுங்குழுவாதி என்கிறோம்.
ஒரு கம்யூனிஸ்டானவர் மக்களையும், அவரது அமைப்பிலுள்ள தோழர்களையும் மதிக்க வேண்டும், நேசிக்க வேண்டும். மக்களை சமமாக மதிக்க வேண்டும் என்று மார்க்சியம் போதிக்கிறது. ஆனால் கம்யூனிஸ்டு என்று தன்னை சொல்லிக்கொள்பவர்கள், மக்களையும் தனது அமைப்பைச் சேர்ந்த தோழர்களையும் சமமாக மதிப்பதில்லை. மாறாக மக்களைக் காட்டிலும் தன்னை சிறந்தவராகக் கருதி கர்வம் கொள்கிறார்கள். மக்களை இகழ்ச்சியாகப் பார்க்கிறார்கள். அதன் மூலம் மக்களை மறுக்கவோ, வெறுக்கவோ செய்கிறார்கள்.
மக்களிடமோ, தமது அமைப்பைச் சார்ந்தவர்களிடமோ இருக்கும் நல்ல அம்சங்களை பார்க்க மறுத்து மக்களை வெறுக்கவோ, ஒதுக்கவோ செய்கிறார்கள். இத்தகைய பண்பானது ஒரு கம்யூனிஸ்டிடம் இருக்கக் கூடாத குறுங்குழுவாதப் பண்பாகும் என்று மார்க்சியம் போதிக்கிறது.
சில மார்க்சிய நூல்களை படித்தவுடன், தன்னடக்கம் உள்ளவர்களாக மாறுவதற்குப் பதிலாக அகந்தை கொண்டவர்களாக சிலர் மாறுகிறார்கள். தங்களது அறிவு அரைகுறையானது என்பதை உணராமல், தங்களது அறிவை மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று உணராமல், அதாவது கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு என்ற பழமொழியை உணராமல், தான் எல்லாவற்றையும் கற்றுத் தேர்ந்துவிட்டோம் என்று இறுமாப்பு கொண்டு மற்றவர்களை மதிக்காமல் மற்றவர்களை ஒதுக்கு கிறார்கள். இத்தகைய பண்பு கொண்டவர்கள் குறுங்குழுவாதிகளே. மார்க்சியத்தால் வகைப்படுத்தப்படும் மார்க்சியவாதிகள் இல்லை.
கம்யூனிஸ்டு கட்சி சாராத மக்களோடு ஒப்பிடுகையில் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர்கள் மிகவும் சிறுபாண்மை யினர்தான். நூறுகோடி மக்கள் இருக்கும் நாட்டில், ஒருகோடி பேர் கம்யூனிஸ்டு உறுப்பினர்களாக இருந்தாலும் மொத்த மக்கள் தொகையில் கம்யூனிஸ்டுகளின் எண்ணிக்கையான ஒரு சதவீதம்தான். இங்கே பலம்வாய்ந்த ஒரு ஒன்றுபட்ட கம்யூனிஸ்டு கட்சி இல்லாத நிலையில் நிலவுகின்ற கம்யூனிச குழுக்களிலுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கையானது மிகமிக குறைவாகவே உள்ளது. இவ்வாறு குறைவானவர்களால் சமூகத்தை மாற்றிவிட முடியுமா?முடியாது என்பதை சாதாரண மக்களும் அறிவார்கள். இந்தச் சூழலில் மிகப்பெருவாரியான மக்களோடு இந்த சிறு குழுவினர் இணைந்து செயல்பட வேண்டியது மிகமிக அவசியம் ஆகும். மக்களோடு இணையாமல் நாம் எதையும் சாதிக்கமுடியாதல்வா.ஆனால் இந்த சிறிய குழுவிலுள்ள அகம்பாவம் பிடித்த குறுங் குழுவாதிகளால் அகந்தை மனோபாவம் கொண்டு செயல்படுவதன் மூலம்இந்த குழுக்கள் மக்களோடு இணைந்து செயல்படுவதற்கு தடையாக இருக்கிறார்கள். ஆகவே இந்த குறுங்குழுவாத சிந்தனைமுறை நம்மை மக்களோடு இணைந்து செயல்படுவதற்கு தடையாக இருக்கிறது, மேலும் மற்ற கம்யூனிச குழுக்களோடு தோழமையாக இருக்கவும் குழுக்கள் ஒன்றினையவும் தடையாக இருக்கிறது.
நம்மோடு இணைந்து செயல்பட விரும்புபவர்களை, இணையப் போகிறவர்களை பொறுத்தமட்டில் நமது ஒரே செயல் அவர்களோடு இணைந்து செயல்பட அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதுதான். அவர்களை புறக்கணிப்பதற்கு நமக்கு எந்த உரிமையும் இல்லை. ஆனால் நம் தோழர்களில் ஒருசிலர் இதனை புரிந்துகொள்ளாமல், நம்மோடு இணைந்து செயல்பட முன்வருபவர்களை இழிவாகப் பார்க்கிறார்கள். அவர்களோடு நாம் இணைந்து செயல்பட முடியாது என்று பார்க்கிறார்கள். அவர்களின் கொள்கையும் நோக்கங்களும் தவறானவை என்றும், அவர்களிடத்தில் மாற்றங்களே ஏற்படாது என்று முடிவு செய்கிறார்கள். நம்மோடு இணைந்து செயல்பட முன்வருபவர்களிடம் இருக்கும் குறைகளை சுட்டிக்காட்டி பேச்சு வார்த்தையின் மூலமாக தீர்த்துக் கொள்வதற்கு முயற்சி செய்யாமலேயே அவர்களோடு இணைவது கூடாது என்று முடிவு செய்கிறார்கள். அதற்குக் காரணம் அவர்களோடு சித்தாந்தப் போராட்டத்தை நாம் நடத்துவதற்கு போதுமான சித்தாந்த அறிவு நமக்கு இல்லை என்பதையும், அத்தகைய சித்தாந்த அறிவை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று இவர்கள் பார்ப்பதில்லை. ஆகவே மற்றவர்களுடன் இவர்கள் இணைவதற்கு மறுக்கிறார்கள். இணைவதற்கான முயற்சியில் ஈடுபடுவதில்லை.
இவ்வாறு பிறருடன் இணைய மறுப்பதற்கும், தன்னுடைய கருத்தை ஏற்றுக்கொள்பவர்களிடம் மட்டுமே சேர்வோம் என்று கருதுவதற்கு எவ்விதமான நியாயத்தையும் நாம் கூற முடியாது. மார்க்ஸ், எங்கெல்ஸ்,லெனின், ஸ்டாலின், மாவோ போன்ற தலைவர்கள் இவ்வாறு பிறருடன் இணையக் கூடாது என்று எங்காவது சொல்லியிருக்கிறார்களா? இல்லை. மாறாக மக்களுடன் இணைந்து செயல்படுவதற்கு நம்மை நம் ஆசான்கள் ஊக்கப்படுத்தியே வந்திருக்கிறார்கள். நாம் இணைந்து செயல்பட்டாலும் நமக்கு இடையில் கருத்து முரண்பாடுகள் வரும் என்றும் இந்த கருத்து முரண்பாடுகளை நமக்கிடையே கருத்துப் போராட்டங்கள் நடத்தி தோழமையான முறையிலேயே தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றுதான் நமது ஆசான்கள் நமக்கு வழிகாட்டியுள்ளார்கள். அதே வேளையில் நாம் ஒன்று படுவதற்கு முன்பு நாம் ஒரு தெளிவான எல்லைக் கோட்டை போட்டுக்கொள்ள வேண்டும் என்று நமது ஆசான்கள் சொல்லியிருக்கிறார்கள். ஆகவே அத்தகைய எல்லைக் கோட்டை போடுவது நமது முதன்மையான பணியாகும். அத்தகைய எல்லைக்கோட்டை நாம் போடவில்லை என்றால் அத்தகைய எல்லைக் கோட்டை போடுவது நமது முதன்மையான பணியாக இருக்க வேண்டும். அந்த பணியை ஒரு சிறிய குழுவால் செய்ய முடியவில்லை என்றால் அந்தப் பணியை பிற குழுக்களோடு இணைந்துதான் செய்ய வேண்டும்.
கம்யூனிச குழுக்களுக்கு இடையே ஏற்பட வேண்டிய ஒற்றுமையையும், கம்யூனிச குழுக்களுக்கும் பிற ஜனநாயக வாதிகளுக்கு இடையிலான ஒற்றுமைக்கும் இடையேயுள்ள வேறுபாட்டை புரிந்து கொள்ள வேண்டும். கம்யூனி குழுக்களுக்கு இடையே ஒற்றுமையின் நோக்கம் சித்தாந்த ஒற்றுமை ஏற்படுத்தி ஒரு ஒன்றுபட்ட கட்சியை கட்டுவதற்கான நோக்கமாக இருக்க வேண்டும். கம்யூனிச குழுக்களுக்கும் பிற ஜனநாயகவாதக் குழுக்களுக்கு இடையிலான ஒற்றுமை என்பது ஆளும் வர்க்கங்கள் மக்களின் மீது தொடுக்கும் தாக்குதலுக்கு எதிரான நடைமுறைக்கான ஒற்றுமையாக இருக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மக்களிடமிருந்து கம்யூனிஸ்டுகள் விலகி நிற்க வேண்டும் என்று ரஷ்ய கம்யூனிஸ்டு கட்சியோ, சீனக் கம்யூனிஸ்டு கட்சியோ எப்போதாவதோ, எங்கேயும் தீர்மானம் போட்டதில்லை. ஆனால் சில குறுங் குழுவாதிகள் தன்னுடைய குழுவைத் தவிர வேறு குழுக்களோடு இணைவதற்கு முன்வருவதில்லை. ஒரு சமயம் சீனக் கம்யூனிஸ்டுக்கட்சிக்குள் இத்தகைய குறுங்குழுவாதிகள் சிலர் இருந்தார்கள் என்றும் அவர்களால் சீனக் கம்யூனிஸ்டுக் கட்சியின் அரசியல் வழியில் தடை எற்பட்டது என்று மாவோ விளக்கியுள்ளார்.
இத்தகைய குறுங்குழுவாதத்தை முறியடிப்பதற்கு விரிவான அளவில் கட்சி உறுப்பினர்களுக்கு இடையில் கட்சிக் கல்வியை எடுத்துச் செல்ல வேண்டும் என்றார் மாவோ. இதன் மூலம் குறுங்குழுவாதத்தின் அபாயத்தையும், அதிலிருந்து விடுபட வேண்டுமானால் கட்சியின் அணிகளுக்கு மார்க்சிய போதனையின் அவசியத்தை மாவோ எடுத்துச் சொன்னார். ஒரு பலம்வாய்ந்த கட்சிக்கே ஆபத்தானது இந்த குறுங்குழுவாதமாக இருக்கின்ற போது, இந்தியாவில் நிலவுகின்ற குழுக்களில் இந்த குறுங்குழுவாதம் எந்தளவு பாதிப்பைக் கொடுக்கும் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவில் நீண்ட காலமாககம்யூனிஸ்டுகள் பிளவுபட்டு இருக்கும் சூழலில், குறுங்குழுவாதத்திற்கு இவர்கள் பழக்கப்பட்டு அது இயல்பானது என்று குறுங்குழுவாதத்தில் ஊறிப்போய்விட்டனர். அதன் விளைவாக உழைக்கும் வர்க்கம் தனது பலத்தை இழந்து மிகவும் பலவீனமான நிலையில் எதிரிகளை எதிர்த்துப் போராட முடியாமல் எதிரிகளுக்கு அடிமைகளாக இருக்கும் ஒரு பரிதாபமான நிலையை இந்த குறுங்குழுவாதிகள் ஏற்படுத்திவிட்டார்கள். அதன் காரணமாகவே பாசிஸ்டுகள் மக்களின் மீது மிகக் கடுமையாக தாக்குதல்கள் நடத்தி வருகிறார்கள். இந்த கொடுமைக்கு பாசிஸ்டுகள் மட்டும் காரணம் இல்லை. கம்யூனிச அமைப்புகளிலுள்ள குறுங்குழுவாதிகளும் ஒரு காரணமாகும். ஆகவே கம்யூனிச குழுக்கள் இந்த குறுங்குழுவாதத்திலிருந்து மீளாதவரை உழைக்கும் மக்களுக்கு வாழ்வு இல்லை. எல்லாவகையான குறுங்குழுவாதத்திற்கும் அகவயவாதமே (எண்ணமுதல்வாதமே) அடிப்படையாகும் என்றார் மாவோ. அதாவது தனது மனதிற்குப் பட்டதே உண்மையானது என்றும் பிறர் சொல்வதில் உண்மைகள் எதுவும் இல்லை என்று கருதும் சிந்தனைப் போக்குதான்இதற்கு காரணம் என்பதாகும். இத்தகைய சிந்தனை படைத்தவர்கள் பிறர் சொல்லும் கருத்துக்களை காதுகொடுத்தும் கேட்க்கமாட்டார்கள். தான் சொல்வதை மட்டுமே பிறர் கேட்க்க வேண்டும் என்று கருதுவார்கள். புறநிலை எதார்த்தத்தை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள். அதன் காரணமாகவே இவர்கள் பிறறோடு தோழமையாகப் பழக மாட்டார்கள். தனது கருத்துக்கு மாறுபட்ட கருத்துக் கொண்டவர்களை எதிரிகளாகவே பார்ப்பார்கள். இத்தகைய சிந்தனைப் போக்குள்ளவர்களால் ஒற்றுமை ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. இத்தகைய தன்மை படைத்தவர்களால் ஒரு பலம்வாய்த கட்சிக்கே கேடு விளையும் என்றால், குழுக்களின் நிலை என்னவாகும் என்பதை சிந்திக்க வேண்டும். இத்தகைய அகநிலைவாத, குறுங்குழுவாதத் தலைவர்களால்தான் இந்தியாவில் சிதறுண்ட குழுக்கள் நீண்டகாலமாக ஒன்றுபட முடியவில்லை.
கட்சிசாராத மக்களுடனும், ஊழியர்களுடனும் கட்சியானது இணையாமல் சீனாவில் புரட்சி சாத்தியமில்லை என்றார் மாவோ. மாவோவின் வழிகாட்டுதல்களை இந்தியாவில் குறுங்குழுவாதத் தலைவர்கள் உள்வாங்கவும் இல்லை, அதனை பின்பற்றவும் இல்லை. அதன் காரணமாக கம்யூனிஸ்டுகள் பலவாறு சிதறிக் கிடக்கின்றனர். இவர்களால் உழைக்கும் மக்களை ஒன்றுபடுத்த முடியவில்லை என்பது நடைமுறை எதார்த்தமாகும். ஆகவே மக்களை ஒன்றுபடுத்த வேண்டுமானால் சிதறிக்கிடக்கும் கம்யூனிஸ்டுகள் ஒன்றுபட வேண்டியது அவசியம்.அதற்கு கம்யூனிஸ்டுகளிடம் இருக்கும் குட்டிமுதலாளிய உணர்வுகளைகளைய வேண்டும், குறுங்குழுவாதத்தை அறவே கைவிட வேண்டும். இந்த முயற்சிக்கு எதிராக இருப்பவர்களை எதிர்த்துப் போராட வேண்டும்.இந்த சூழலில் பாசிச பா.ஜ.க.வின் ஆட்சியை எதிர்த்து கம்யூனிச குழுக்களும் பிற ஜனநாயக சக்திகளும் ஒன்றுபட்டு நடைமுறையில் பாசிஸ்டுகளின் அடக்குமுறையை எதிர்த்துப் போராடுவதற்காக ஒரு மக்கள் முன்னணியை அமைத்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இது ஒரு வரவேற்கத்தக்க முன்னேற்றமாகும்.இவ்வாறு நடைமுறையில் ஒற்றுமை காணும்போது ஒவ்வொருவரும் தங்களுக்கென்று வெவ்வேறு கொள்கையைக் கொண்டிருந்தாலும் நடைமுறையில் பாசிச பா.ஜ.க.வை எதிர்த்துப் போராடுவது என்ற ஒரு கொள்கையில் உடன்பாடு கொண்டு ஒன்றுபடுகிறார்கள். அதனால் இவர்களது போராட்டமானது பாசிச ஆட்சியாளர்களின் தாக்குதலிருந்து மக்களை பாதுகாக்கப் பயன்படாலாம், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். ஆனால் பாசிசத்தை வீழ்த்துவதற்கு இந்த கூட்டணி போதாது. கருத்தொற்றுமையும் அதன் அடிப்படையிலான பலம்வாய்ந்த அமைப்பும், அந்த அமைப்பினால் திரட்டப்பட்ட மக்கள் திரள் அமைப்புகளும் இல்லாமல் பாசிசத்தை வீழ்த்த முடியாது.
இந்த கூட்டணியில் இணைந்துள்ள கம்யூனிசக் குழுக்கள் ஒன்றுபட்டு கருத்துப் போராட்டங்கள் நடத்தி தங்களிடமுள்ள குறுங்குழுவாதப் பார்வையை களைந்து ஒரு ஒன்றுபட்ட கொள்கை முடிவெடுத்து ஒரு அமைப்பாக, (கட்சியாக) வேண்டும். அந்த கொள்கையின் அடிப்படையில் உழைக்கும் வர்க்கங்களை வர்க்க அமைப்புகளில் திரட்ட வேண்டும். அப்போதுதான் கம்யூனிச அமைப்பு பலமாக முடியும். அந்த பலத்தின் அடிப்படையில் உருவாக்கப்படும் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணியால் மட்டுமே பாசிசத்தை வீழ்த்த முடியும்.
ஆகவே இந்த குறுங்குழுவாதத்தை எதிர்த்துப் போராடி ஒரு ஒன்றுபட்ட கட்சி கட்டவேண்டும். அதற்கு முதற்கண் அறிவுஜீவிகளோடு விவாதிப்பதும், சரியான மார்க்சிய அறிவியலை எல்லோரும் ஏற்கும் வகையில் புரியவைக்க வேண்டும். ஆகவே இலக்கு இணையதள இதழைப் பயன்படுத்தி தோழர்கள் உங்களது கருத்தை முன்வைத்து விவாதத்தில் பங்குகொள்ளுமாறு இலக்கின் சார்பில் தோழர்களை நாங்கள் அழைக்கிறோம்.
ஒரு தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கட்சியில் இணைந்து செயல்படும் பொழுது அதனை புரிந்துக் கொள்ள! தொண்டு நிறுவனம் என்பது உழைக்கும் மக்களுக்கு ஆதரவானவர்கள் போல் நடித்துக் கொண்டு, உழைக்கும் மக்களை சுரண்டி வாழும் முதலாளிகளுக்கு ஆதரவாக உழைக்கும் மக்களை ஏமாற்றும் கொள்கை கொண்டவர்கள்தான் இந்த தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள். அந்த வகையில் சில NGOகள் உழைக்கும் மக்களுக்காக பாடுபடுவது போல் நடிக்கும், உழைக்கும் மக்களை ஏமாற்றும் துரோகிதான். தற்போது உலகெங்கிலும் உழைக்கும் மக்கள் ஏகாதிபத்தியவாதிகளை எதிர்த்துப் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். ஏகாதிபத்தியவாதிகள்தான் உலகெங்கிலும் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறார்கள். இந்த ஏகாதிபத்திய ஆட்சியாளர்களால் மக்கள் சந்திக்கும் எந்தப் பிரச்சனையையும் தீர்க்க முடியாத நிலையில் உள்ளார்கள். ஆகவேதான் உழைக்கும் மக்கள் தங்களது பிரச்சனைகளை தீர்ப்பதற்கு தயாரில்லாத இந்த ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.
உதாரணமாக இந்தியாவில் விவசாயிகளின் போராட்டம், வட மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டம், தமிழ்நாட்டில் நடைபெற்ற மெரினாகடற்கரை போராட்டம், தூத்துக்குடி போராட்டம் போன்றவைகளை ஒடுக்குவதற்கு பல்வேறு முறைகளை ஆளும் வர்க்க ஆட்சியாளர்கள் கையாண்டார்கள். ஆனாலும் இந்த அடக்கு முறைகளின் மூலம் மட்டுமே உழைக்கும் மக்களை அடக்கிவிட முடியாது. ஆகவே ஆளும் வர்க்கமும் அதன் ஆட்சியாளர்களும் பல்வேறு மார்க்சிய விரோதிகளை மக்களின் துரோகிகளை கம்யூனிஸ்ட்டுகள் என்ற பெயரில் கம்யூப்னிஸ்ட் கட்சி என்ற பெயரிலும் செயல்படும் பொழுது எங்கே சரியான புரட்சிக்கான தேடல் என்பது ஒரு போராட்டம்தான். சரியானவற்றை கண்டடையும் போராட்டம்தான் அவை நமது ஆசான்கள் காட்டிய வழியில் தொடருவோம் தோழர்களே...
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
No comments:
Post a Comment