“தண்ணீரும் காற்றும் போல சுயவிமர்சனம் அவசியமானது” -ஸ்டாலின்

 “தண்ணீரும் காற்றும் போல சுயவிமர்சனம் அவசியமானது” -ஸ்டாலின்

சுரங்கத் தொழிற்சாலையில் நடைபெற்ற சதிச் செயல்கள் மற்றும் அமைப்பின் செயல்பாடுகள் பற்றி நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் உரையாற்றிய ஸ்டாலின், “தண்ணீரும் காற்றும் போல சுயவிமர்சனம் அவசியமானது” என்பதை வலியுறுத்துகிறார். “சுயவிமர்சனம் இல்லாமல் கட்சி முன்னேற முடியாது; நமது இழிகுணங்களை வெளிப்படுத்த முடியாது; நமது குறைகளைக் களைய முடியாது – நம்மிடம் குறைகள் நிறையவே உள்ளன” என்கிறார். மேலும், சுயவிமர்சனம் இருந்தால்தான் நடைமுறைப் பிரச்சினைகளைத் தீவிரமாகவும் முழுமையாகவும் சமாளிக்க கட்சியால் இயலும்” என்கிறார்.

புரட்சி நடந்து முடிந்த ரஷ்யாவிலேயே இதுதான் நிலைமை என்றால், பிற்போக்கு நிலப்பிரபுத்துவ சாதிய ஆதிக்கம் கொண்ட இந்திய சமூகத்தில் ? கலைப்புவாதிகள், அராஜகவாதிகள், திரிபுவாதிகள், சீர்குலைவுவாதிகள் உருவாகுவதற்கான சாதகமான புறநிலைமையும், அகநிலைமையும் இங்கு பிரகாசமாக இருக்கின்றன.

‘மேலிடத்து’ ஆசிர்வாதம் பெற்றவர்கள், தமக்கு முதுகு சொறிபவர்களை விமர்சன சொல்லடி படாமல் பாதுகாக்கும் ‘மேலிடங்கள்’, பரிசீலனைக்கு முழுமையாக தம்மை உட்படுத்திக் கொள்ளாத ஆதீனங்கள், அணிகளைப் பயிற்றுவிக்காமல் அவர்களை அடிவெட்டிப் பேசும் ‘அறிவுஜீவிகள்’, வார்த்தை ஜாலத்தில் ஆளை அசத்தும் தனித்துவம் பெற்ற சொல் வித்தகர்கள், துளியும் சுயவிமர்சனமற்ற ‘பரிசுத்த’ ஆத்மாக்கள் என இந்தப் பட்டியல் இன்னமும் நீளும்.

இந்தப் பட்டியலைச் சேர்ந்தவர்களில் நாமும் ஒருவராக இருக்கலாம். இந்தப் பட்டியலில் நம் கண் முன்னே இருக்கும் ‘மதிப்புமிக்க தோழர்’களும் இருக்கலாம். இப்படிப்பட்ட ’தோழர்களிடம்’ இருந்துதான் சதிகாரர்களும், சீர்குலைவுவாதிகளும், கலைப்புவாதிகளும் ‘திடீரென’ வெளிப்பட்டிருக்கின்றனர். இன்னும் பண்பு மாற்றமெடுத்து வெளிப்படாத நிலையிலுள்ள ‘தோழர்களும்’ இருக்கின்றனர்.

விமர்சன, சுயவிமர்சனத்தை விட்டொழிப்பது, வர்க்கப் பார்வையை விடுத்து புற உலகின் எதார்த்தத்தோடு கரைந்து விடுவது, சித்தாந்த ரீதியாக வளர்த்துக் கொள்ளத் தவறுவது ஆகியவைதான் தோழர்களாக இருக்கும் நாம் மேற்கண்ட ‘தோழர்களாக’ சரிந்துபோகும் நிகழ்ச்சிப் போக்கின் துவக்கப் புள்ளி!

இறுதியாக, மேலும் ஒரு பிரச்சினை. கட்சியின் தனிப்பட்ட உறுப்பினர்களின் தவிர்க்க முடியாத நேரும் விதியைப் பற்றியது. கட்சியிலிருந்து உறுப்பினர்களை வெளியேற்றும் பிரச்சினை பற்றிய அல்லது கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட உறுப்பினர்களை மீண்டும் சேர்த்துக்கொள்வது பற்றிய நமது தோழர்கள் சிலரின் வழக்கமான, இதயமற்ற, அதிகார வர்க்க மனப்பான்மை பற்றிய பிரச்சினைகளை நான் மனதில் கொண்டுள்ளேன். இதில் முக்கியமான விசயமே நமது தலைவர்களில் சிலர் மக்கள் தொடர்பாக, கட்சி உறுப்பினர்கள் தொடர்பாக, தொழிலாளர்கள் தொடர்பாக அக்கறையற்று இருக்கிறார்கள் என்பதுதான். இதைவிட அதிகமாக அவர்கள் கட்சி உறுப்பினர்களை ஆய்வு செய்வதில்லை. அவர்கள் எத்தகைய விருப்பங்களைக் கொண்டிருக்கிறார்கள், எவ்வாறு அவர்கள் வளர்ச்சி பெறுகிறார்கள் என்பதை இவர்கள் தெரிந்து கொள்வதில்லை. பொதுவாக இவர்கள் தொழிலாளர்களைப் பற்றி அறிந்துகொள்வதில்லை. அதனால்தான் கட்சி உறுப்பினர்களுக்கான மற்றும் கட்சி ஊழியர்களுக்கான தனிப்பட்ட அணுகுமுறை இவர்களிடம் இல்லை.

மேலும் தனிப்பட்ட அணுகுமுறை இல்லாத காரணத்தால் கட்சி உறுப்பினர்களையும், கட்சி ஊழியர்களையும் மதிப்பிடுவதில் வழக்கமாக அவர்கள் வெறும் தற்செயலான வழிமுறைகளில் செயல்படுகிறார்கள். ஒன்று, அவர்களை எந்த ஒரு அளவுகோலும் இன்றி ஒட்டுமொத்தமாக பாராட்டுவது அல்லது அவர்களை ஒட்டுமொத்தமாகவும், எந்த அளவுகோலும் இன்றி முழுக்கமுழுக்கப் பழி கூறுவது, கட்சியிலிருந்து ஆயிரக்கணக்கான, பத்தாயிரக்கணக்கான உறுப்பினர்களை வெளியேற்றுவது ஆகியவற்றை மேற்கொள்கிறார்கள். இத்தகைய தலைவர்கள் பொதுவாக அலகுகளைப் பற்றி கவலைப்படாமல், கட்சியின் தனிப்பட்ட உறுப்பினர்களைப் பற்றி கவலைப்படாமல், அவர்களது கதியைப் பற்றி கவலைப்படாமல் பத்தாயிரக்கணக்கானவர்களைப் பற்றி சிந்திக்க முயற்சிக்கிறார்கள். கட்சியிலிருந்து ஆயிரக்கணக்கான, பத்தாயிரக்கணக்கான மக்களை வெளியேற்றுவதை ஒரு ‘வெறும் அற்பம்’ எனக்கருதி, நமது கட்சியில் இருபது இலட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள்,

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்