நாட்டின் நுகர்பொருள் கலாச்சாரம் அதிகரித்திருப்பது, ஒரு சிறு பிரிவினருக்கு சேவைத் துறையில் வளமான வேலைகள் கிட்டியிருப்பது, ஒரு புதிய மேல் நடுத்தர வர்க்கம் உதித்தெழுந்திருப்பது, நவீன மின்னணுப் பொருட்கள் மற்றும் மோட்டார் வாகனங்களின் சந்தை விரிவடைந்திருப்பது மற்றும் இவற்றின் பயன்பாடு அதிகரித்திருப்பது உள்ளிட்டவைகளைச் சுட்டிக்காட்டும் இவர்கள், புதிய பொருளாதாரக் கொள்கைகளை விதந்தோதுகிறார்கள். அம்பானி வீட்டு திருமணம் உட்பட.
144 கோடி மக்கள் வாழும் நாட்டில் உலக பணக்காரரில் ஒருவரின் திருமண செலவில் ஏற்பட்ட அனுபவங்களை தொகுப்பது பயன் ஏன் என்று சிலர் நினைக்கலாம், உண்மையில் அந்த முதலாளி தன் பணத்தில் செலவளித்திருந்தால் நமக்கு பிரச்சினையே இல்லை. அவன் மக்களின் பணத்தைதான் செலவளித்துள்ளான் அதனால்தான் நாம் பேச வேண்டும். நாட்டில் அடுத்த வேளை உணவிற்கே வழி இல்லாதவனிடமும் வரி என்ற பெயரில் புடுங்கும் இதே அரசுதான் அவனுக்கு வரி சலுகை வாரிவழங்கியுள்ளது. தொழில் நடத்த பல லட்சம் கோடிகளை கடனாக கொடுத்துள்ளது இன்று அவன் நடத்தும் தொழில்முறை ஒட்டு மொத்த பயனார்களையும் சுரண்டி விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரின் பகட்டுக்காக வக்கிரம் பிடித்த இந்த கோலாகாலம் திருமணம் எதை குறிக்கிறது?. உண்மையில் நாட்டில் 44 கோடி பேருக்கு மேல் தினம் வயிறார சாப்பிட முடியாத அவல நிலையில் வாழும் பொழுது, இந்த வக்கிரம் பிடித்த கூட்டம், கோடிக் கோடியாக மக்கள் பணத்தை விரயம் செய்தனால் இந்த சமூகதிற்கு என்ன பயன்? தனிஉடமையின் சக்கடையை கடைபரப்பி இதன் நுகர்வு வெறியை மக்களிடத்தே திணிக்கும் அபாயத்தை தவிர வேறொன்றும் இல்லை என்பேன்.
இனி செய்தி மட்டுமே அப்படியே....முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, அவரது வருங்கால மனைவி ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய விழா ஜாம்நகரில் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்திருக்கிறது. மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க், பிரபல பாடகி ரிஹானா, முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவாங்கா உள்ளிட்ட வெளிநாட்டு முக்கியஸ்தர்கள் மட்டுமின்றி பாலிவுட் திரைக்கலைஞர்கள், கிரிக்கெட் நட்சத்திரங்கள் என பலரும் ஜாம்நகரில் ஒன்றுகூடினர்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழின் ஆசிரியருமான பிரதாப் பானு மேத்தா, இந்தத் நிகழ்ச்சி குறித்து "திருமணம் நம்பர் ஒன்" என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.”பணக்காரர்கள் சிலரிடம் தொழிலால் குவிந்த பணம், சிலரிடம் அதிகாரம் தெரிகிறது. ஜாம்நகரில் இவை அனைத்தும் ஒரே இடத்தில் காணப்பட்டன. இங்கு பெரிய திரைப்பட தயாரிப்பாளர்கள் திரைப்படங்களாக மாறினர், கேளிக்கைத் துறையைக் கட்டுப்படுத்துபவர்கள் இங்கு பொழுதுபோக்காக மாறினர், செய்திகளின் உரிமையாளர்கள் தாங்களாகவே செய்திகளாயினர் என குறிப்பிடும்” பிரதாப் பானு.மேலும்”பணம் படைத்தவனுக்கு அதிகாரம், பெரிய மூலதனம் என்ன செய்ய முடியும் (என்பதனை நாம் புரிந்துக் கொள்ள முடியும்) வரையறை மாறிவிட்டது. பெரிய சுத்திகரிப்பு நிலையங்கள், வேகமாகக் கட்டமைக்கும் துறைமுகங்கள், மலிவான(யாருக்கு) தொலைத்தொடர்பு ஆகியற்றுக்கு 'பெரிய மூலதனம்' மட்டுமே ஒரே வழி. அம்பானியின் விஷயத்தில், உலகம் முழுவதிலும் இருந்து கத்தாரின் ஷேக் முதல் ரிஹானா வரை பல பிரபலங்கள் திரண்டதை உலகமே இந்தியாவில் கவனித்துக் கொண்டிருந்தது. இந்தியா ஒரு பணக்கார நாடாக இல்லாவிட்டால் என்ன செய்வது, குறைந்தபட்சம் அது உலகின் பணக்காரர்களைக் கொண்டுள்ளது. மக்கள் நலனுக்கான அர்ப்பணிப்பும் வெளிப்பட வேண்டும். இதைக் காட்ட ஒரு சரியான முதலாளித்துவ பண்பட்ட குடும்பத்தைவிட வேறு என்ன இருக்க முடியும்” என தமது கட்டுரையில் பிரதாப் பானு எழுதியுள்ளார்.முன்னதாக, அம்பானியின் மகள் இஷாவின் திருமணம் 2018ஆம் ஆண்டு நடைபெற்றபோது, அது இந்தியாவின் மிகவும் ஆடம்பரமான திருமணம் என பேசப்பட்டது. தோராயமாக 700 கோடி ரூபாய் செலவானதாக நம்பப்படுகிறது. மும்பையில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் அமெரிக்க பாடகி பியான்ஸ் உள்பட பலவேறு முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர். ஆக பெரும் பணக்காரர்கள் சுரண்டி வாழ ஒரு நாடும் நாட்டு மக்களும் வேண்டும் அல்லவா இதனை இந்த கட்டுரையாளர் மறந்தே போய்விட்டார்.
No comments:
Post a Comment