தொடர் விவாதம் இவை 3 மற்றும் திறந்தநிலை மார்க்சியம் தொகுதி 2 மீதான விவாதம்.
திறந்தநிலை மார்க்சியவாதிகளின் முன்னெடுப்பு இவை"நடைமுறையில் இருக்கும் கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் மூலதனம் நூல் உள்ளிட்ட மார்க்சின் மூலதனம்படைப்புகளை கற்க வேண்டும். அவற்றை 21-ம் நூற்றாண்டின் நடைமுறையுடன் பொருத்தி கற்பதற்கு தத்துவார்த்த அணுகுமுறையும் அவசியம். அந்தவகையில் மார்க்சியம் பற்றிய ஆரம்பக் கல்வி தந்தசட்டகங்களை தாண்டி, வறட்டுச் சூத்தரங்களைஉடைத்து, இயக்கவியல் பொருள்முதல்வாத அணுகு முறையை கற்பதற்கான முக்கியமான நூல்களாகவெளிவருகின்றன திறந்தநிலை மார்க்சியத்தின் ((Open Marxism) நான்கு தொகுதிகள்".
எப்படி பேசுகின்றனர் கேளுங்கள்,"இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை ஆதரித்து புரட்சிகரப் பாதையில் பயணிக்கவும், கோட்பாட்டில் தேக்கத்தை உடைத்து புரட்சிகர நடைமுறையை உயிரோட்டமானதாக்கவும், பின்நவீனத்துவத்தையும், வரலாற்றின் முடிவு என்ற முனைவையும் மார்க்சியத்தின் மீதான முதலாளித்துவ கொச்சை விமர்சனத்தையும் மார்க்சிய தத்துவரீதியாக எதிர்கொள்ளவும், மார்க்சியத்தை அறிவியலாகப் பயிலவும், பின்னை மார்க்சியம், ஃபிராங்க்ஃபர்ட் பள்ளி போன்ற மார்க்சிய பள்ளிகளை விமர்சன பூர்வமாக அணுகவும்வாசகர்களுக்கு வழிகாட்டுவதாக உள்ளன".
நூலுக்குள்ளே சென்றால் மார்க்சுக்கு சமூகம் பற்றியோ வரலாற்று பொருள்முதவாதம் பற்றியோ தெளிவில்லை எனும் வாதத்தை அல்தூசரின் வாததிற்கு பதிலளிக்க துணிந்த இதன்ஆசிரியர்கள் இறுதியில் மார்க்சுக்கு மார்க்சியம் கற்றுக் கொடுக்கும் பணியில் இறங்குகின்றனர் அதனை அம்பலப்படுத்தியே கீழ்காணும் விளக்கவுரை உள்ளன வாசிக்க கருத்திட அழைக்கிறேன் தோழர்களே...
இந்த விவாதம் சிறப்பாக இருக்க இவர்கள் பேசுவது சரிதான என்பதனை புரிந்துக் கொள்ள ஓர் தேடல்
வரலாற்றுப் பொருள் முதல் வாதம் என்பது என்ன? சமுதாயத்தின் பொருளாயத நிலைமைகள் என்பதற்கு பொருள் என்ன? வரலாற்று பொருள் முதல் வாதக் கண்ணோட்டத்தின் படி இவற்றின் பொருள் என்ன?
1. சமுதாயத்தை சூழ்ந்துள்ள இயற்கை பூகோள சூழ்நிலை முதலில்
அடங்கும். ஆனால் அது முதன்மையான சக்தியாக இல்லை. அது சமுதாய வளர்ச்சியின் மீது தாக்கம் செலுத்தி அதை துரிதப்படுத்தவும்
தடுக்கவும் செய்கிறது. ஆனால் வளர்ச்சியை நிர்ணயிக்கும்படியான செல்வாக்கு அதற்கு
இல்லை.
2. மூவாயிரம் ஆண்டுகளில் பூகோள சூழ்நிலை பெரிய அளவில் மாறுபடா
விட்டாலும் ஐரோப்பாவிலும் ரஷ்யாவிலும் உலகின் பல பகுதிகளிலும் சமுதாய அமைப்புகள்
பெருமளவு மாறியிருக்கின்றன. பூகோளச் சூழ்நிலைகள் மாறுவதற்கு
கோடிக்கணக்கான ஆண்டுகள் பிடிக்கும் ஆனால் மனித சமுதாயத்தின் முக்கிய மாறுதல்கள்
சில நூறு ஆண்டுகளில் அல்லது ஆயிரம் ஆண்டுகளில் நடந்து விடுகின்றன.
3. மக்கள் தொகை வளர்ச்சியும் மக்கள் தொகை அடர்த்தியும் இதில்
அடங்கும். ஆனால் இதுவும் முதன்மை சக்தியாக இல்லை. சமுதாய வளர்ச்சியை எளிதாக்குகிறது அல்லது தடுக்கிறது என்றாலும் வளர்ச்சிக்கான
அடிப்படை காரணமாக மக்கள் தொகை இருக்க முடியாது.
அடிமை சமூகம், நிலப்பிரபுத்துவ சமூகம், முதலாளித்துவ சமூகம் போன்ற மாற்றங்களுக்கு மக்கள் தொகை பெருக்கம் மட்டும்
காரணம் என்று சொல்ல முடியாது. மக்கள் தொகை அதிகமாக இருக்கும்
இடத்தில் சமுதாய வளர்ச்சி அதிகமாக இருக்க வேண்டும். அமெரிக்காவை விட சீனாவின் மக்கள் அடர்த்தி அதிகமாக இருந்தாலும் அமெரிக்கா சமூக
வளர்ச்சியில் முன்னணியில் இருக்கிறது. பெல்ஜியம் அமெரிக்காவை விடவும்
சோவியத் யூனியனை விடவும் 20 மடங்கு அதிகம் மக்கள் அடர்த்தி
கொண்டிருந்தும் அமெரிக்க சமூக அமைப்புக்கோ, சோவியத் யூனியனின் சமூக அமைப்புக்கோ மாறுவதற்கு அதற்கு பல காலம் பிடிக்கும்.
4. சமுதாய மாற்றங்களுக்கு முதன்மை காரணமாக இருக்கும் சக்தி எது? ஒரு சமுதாய அமைப்பிலிருந்து மற்றொரு அமைப்புக்கு மாறி செல்வதை ஏற்படுத்தும்
சக்தி எது?
அ. உற்பத்தி முறைதான் இந்த
மாற்றங்களின் அடிப்படை காரணி என்று வரலாற்று பொருள் முதல் வாதம் சாதிக்கிறது. உணவு, எந்திரங்கள், நுகர்வு பொருட்கள் இவற்றை உற்பத்தி செய்ய சமுதாயத்தில்
கடைப்பிடிக்கப்படும் முறைகளில் ஏற்படும் மாற்றங்கள்தான் சமுதாய மாற்றங்களையும்
சமுதாய நிலைமைகளில் வேறுபாடுகளையும் தோற்றுவிக்கின்றன என்று வரலாற்று பொருள்
முதல்வாதம் சொல்கிறது.
மக்கள் வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்யவும்
உற்பத்தி செய்வதற்கு தேவையான கருவிகளை செய்து அவற்றை பயன்படுத்த கற்றுக் கொள்வதும்
அடிப்படையானவை.
இயற்கை வளங்கள், உற்பத்தி கருவிகள், அவற்றை பயன்படுத்தும் மக்கள் இவைதான் உற்பத்தி சக்திகள். உற்பத்தி சக்திகள் உற்பத்தி முறையின் ஒரு அம்சம் மட்டும்தான். அதன் இன்னொரு முக்கிய பகுதி உற்பத்தி உறவுகள். மனிதர்கள் உற்பத்தி சக்திகளை பயன்படுத்தி உற்பத்தி செய்வதற்கு திட்டமான
உறவுகளை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். உற்பத்திக்கா இயற்கையோடு மக்கள்
போராடுவதோடு சக மக்களோடு சேர்ந்துதான் உழைக்கிறார்கள். உற்பத்தி என்பது எல்லா காலங்களிலும் சமூக ரீதியான உற்பத்தியாகத்தான்
இருக்கிறது. உற்பத்தி முறையில் மக்கள் ஒருவருக்கொருவர் உறவுகளில் ஈடுபடுகின்றனர். அது சுரண்டல் உறவாக இருக்கலாம் அல்லது ஒத்துழைப்பு உறவாக இருக்கலாம்.
மார்க்ஸ் : உற்பத்தியில் ஈடுபடும்
மனிதர்கள் இயற்கையின் மீது மட்டும் ஆதிக்கம் செலுத்துவதில்லை. ஒரு மனிதன் இன்னொரு மனிதனை கொண்டுதான் வேலை செய்கிறான். உற்பத்தி செய்யும் மட்டும் தம்மிடையே குறிப்பான உறவுகளை ஏற்படுத்திக்
கொள்கின்றனர். இந்த உறவுகளின் அடிப்படையில்தான் உற்பத்தி நடக்கிறது. (கூலியுழைப்பும் மூலதனமும்)
உற்பத்தி முறை என்பது உற்பத்தி சக்திகளையும் உற்பத்தி
உறவுகளையும் உள்ளடக்கியது.
ஆ. உற்பத்தி முறை மாறிக் கொண்டே
இருக்கிறது. உற்பத்தி முறையில் ஏற்படும் மாற்றம் சமுதாய கருத்துக்கள், கண்ணோட்டங்கள், நிறுவனங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. சமுதாயத்தின் ஒவ்வொரு வகையிலும் உற்பத்தி முறையும் வாழ்க்கை முறையும்
வெவ்வேறாக இருக்கின்றன. அடிமை சமூகத்திலும், நிலப்பிரபுத்துவ சமூகத்திலும், முதலாளித்துவ சமூகத்திலும்
உற்பத்தி முறைகள் வெவ்வேறாக இருக்கின்றன. இந்த உற்பத்தி முறைகள்தான்
சமூகத்தின் நிறுவனங்களையும் மேல் கட்டுமானத்தையும் தீர்மானிக்கின்றன. மனிதனின் வாழ்க்கை முறை எப்படி இருக்கிறதோ அப்படித்தான் அவனது சிந்தனையும்
இருக்கிறது. இது தனி மனிதருக்கும் பொருந்தும், சமூகத்துக்கும் பொருந்தும்.
சமுதாய வளர்ச்சியின் வரலாறு என்பது உற்பத்தி முறை எப்படி
வளர்ந்தது என்பதன் வரலாறுதான். உற்பத்தி சக்திகளும் மக்களிடையே
உற்பத்தி உறவுகளும் எப்படி எல்லாம் பலப் பல நூற்றாண்டுகளின் காலப் போக்கிலே மாறி
வந்திருக்கின்றன என்பதை பற்றிய வரலாறுதான்.
வரலாற்றை அறிவியல் ரீதியாக கற்க வேண்டுமானால் தளபதிகளின், அரசர்களின் , மாவீரர்களின் செயல்களை மட்டும் அதை குறைத்து விட முடியாது. பொருளாயத செல்வங்களை உற்பத்தி செய்கிற உற்பத்தியாளர்களரின் உழைப்பாளி மக்களின்
வரலாற்றைக் கற்பதில் கவனம் செலுத்த வேண்டும். மனிதனின் எண்ணங்களையும், கண்ணோட்டங்களையும், கருத்துக்களையும் மட்டும் துருவிப் பார்த்துக் கொண்டிராமல் அந்த குறிப்பிட்ட
கால கட்டத்தில் சமுதாயம் எந்த உற்பத்தி முறையைக் கொண்டிருந்ததோ அந்த உற்பத்தி
முறையை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
உதாரணமாக சோழர் குலத்தின் வரலாற்றை ஆய்வு செய்யும் போது, இராஜஇராஜ சோழன் தஞ்சையில் பெரிய கோவிலை கட்டினான் என்று படிப்பது வரலாறு ஆகாது, அந்த காலத்தில் நிலவிய சமூக உற்பத்தி உறவுகள், உற்பத்தி சக்திகள் இவற்றில் நிகழ்ந்த மாற்றங்களைப் பற்றி படிப்பதுதான்
அறிவியல் பூர்வமான வரலாறு ஆகும். பாட்டாளி வர்க்க கட்சி
உற்பத்தியின் வளர்ச்சி விதிகளைப் பற்றியும் சமுதாயத்தின் பொருளாதார வளர்ச்சி
விதிகளைப் பற்றியும் அறிவு பெற்றிருக்க வேண்டும்.
சரியான கொள்கைகளை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்றால் கட்சி
உற்பத்தியின் வளர்ச்சியைப் பற்றிய விதிகளிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும். பொருளாதார வளர்ச்சியைப் பற்றிய விதிகளிலிருந்துதான் ஆரம்பிக்க வேண்டும்.
இ. மனிதர்கள் உழைக்கும் போது
உற்பத்தி சக்திகளில் உருவாக்கும் மாற்றங்கள் மேம்படுத்தல்கள்தான் அடிப்படையான
இயக்கவியல் காரணி. உற்பத்தி சக்திகள்தான் உற்பத்தியில் மற்ற எல்லாவற்றையும்
விட புரட்சிகரமானதாக இருக்கிறது. புரட்சிகரமானது என்பதன் பொருள், தன்னைத் தானே வளர்த்துக் கொண்டு அடுத்தடுத்து கட்டங்களை அடைவது என்பதாகும். உற்பத்தி கருவிகள், மனித திறமையில் ஏற்படும்
மாற்றங்கள்தான் அடிப்படையானவை. இப்படி உற்பத்தி சக்திகள் மாறும் போது அவை உற்பத்தி உறவுகள் மீது, சமூகத்தின் மேல் கட்டுமானம் மீது தாக்கத்தை செலுத்துகின்றன. இதுதான் முதன்மையான மாற்றத்துக்கான காரணம்.
குறிப்பிட்ட காலத்தில் நிலவும் உற்பத்தி உறவுகள் உற்பத்தி
சக்திகள் மீது தாக்கத்தை செலுத்துவதும் உண்மைதான். அவை உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியை தடை செய்யவோ துரிதப்படுத்தவோ செய்கின்றன. ஆனால் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி உற்பத்தி உறவுகளை சார்ந்திருப்பதில்லை. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கேற்ப உற்பத்தி உறவுகள் மாறாமல் நீண்ட காலம்
இருக்க முடியாது. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின் மட்டத்துக்கும்
தன்மைக்கும் ஏற்ப உற்பத்தி உறவுகள் முன்னேறி தீர வேண்டியிருக்கிறது. அப்படி உற்பத்தி உறவுகள் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கேற்ப மாறாமல்
இருந்தால் உற்பத்தி சக்திகள் அழிக்கும் நிலைமை
ஏற்படுத்தப்படும். மேல் கட்டுமானமாக விளங்கும் அரசுகளுக்கிடையே நடக்கும்
போர்கள்
உற்பத்தி சக்திகள் அழிவதில் போய் முடிகின்றன. பிரெஞ்சு புரட்சியை தடுக்க முயன்ற பழைய உற்பத்தி உறவுகள் ஏராளமான உற்பத்தி
சக்திகளின் அழிவுக்கு வழி வகுத்தது.
அதே போல மதங்கள் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கேற்ப தம்மை
மாற்றிக் கொள்வதையும் நாம் பார்த்திருக்கிறோம். கிருத்துவ மதம் முதலாளித்துவத்திற்கேற்ப புராட்டஸ்டன்ட் மதமாகவும், இந்து மதம் கார்பொரேட் உலகத்துக்கு ஏற்றபடி கார்பொரேட் சாமியார்களை
ஏற்படுத்தியதையும் இப்படிப்பட்ட மாற்றங்களுக்கு உதாரணமாக பார்க்கலாம். ஆனால், அடிப்படையான மாற்றம் உற்பத்தி சக்திகள் பழைய மேல் கட்டுமானங்களை முழுமையாக
தூக்கி எறிந்து தமது வளர்ச்சிக்கு ஏற்றபடியான உற்பத்தி உறவுகளை ஏற்படுத்திக்
கொள்வதன் மூலம்தான் ஏற்படும்.
சோவியத் யூனியன், கம்யூனிச சீனா போன்ற
சமூகங்களில் உற்பத்தி முறையின் சமூக தன்மைக்கு பொருத்தமாக உற்பத்தி சக்திகள் சமூக
உடமையாக இருப்பது பொருளாதார நெருக்கடிகளையும் உற்பத்தி சக்திகளின் அழிவையும்
தவிர்த்தது.
உற்பத்தி முறையில் உற்பத்தி சக்திகள்தான் மிகவும் நிலையற்ற
புரட்சிகரமான அம்சமாக இருப்பதோடு உற்பத்தியின் வளர்ச்சியையே நிர்ணயிக்கும்படியான
அம்சமாக விளங்குகின்றன. எந்த உற்பத்திக் கருவிகளை
பயன்படுத்தி மனிதர்கள் தங்களுக்குத் தேவையான பொருளாயத செல்வங்களை உற்பத்தி செய்து
கொள்கின்றனர் என்ற கேள்விக்கு பதில் அளிப்பது உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி நிலை. உற்பத்தி சாதனங்கள் யாருக்குச் சொந்தமாயுள்ளன என்ற கேள்விக்கு பதில் தருவது
உற்பத்தி உறவுகளின் நிலை. உற்பத்தி சக்திகள் தனி
மனிதர்களின் உடமையாக இருந்து அவர்கள் மற்றவர்களை சுரண்டும் நிலை இருக்கிறதா அல்லது உற்பத்தி சக்திகள் சமூக உடமையாக இருக்கிறதா
என்று பார்க்க வேண்டும்.
மனித வரலாற்றில் உற்பத்தி கருவிகள் எப்படி வளர்ச்சி அடைந்தன
என்று பார்க்கலாம்.
1. ஆரம்பத்தில் ஒழுங்காக செதுக்கப்படாத கல் ஆயுதங்கள்
2. வில்லும் அம்புகளும்
3. வேட்டை வாழ்விலிருந்து கால் நடை வளர்ப்பு
4. கல் ஆயுதங்களிலிருந்து உலோக ஆயுதங்கள் கண்டு பிடிப்பு
5. அவற்றை பயன்படுத்தி நிலத்தை பண்படுத்தும் முறை
கண்டுபிடிப்பு
6. விவசாயம்
7. தாதுப் பொருட்களை பயன்படுத்தி உலோக ஆயுதங்களை
மேம்படுத்தியது.
8. கொல்லனின் துருத்தி, மண்பாண்டத் தொழில்
9. கைத்தொழில் வளர்ச்சி
10. சுயேச்சையான கைத்தொழில் வளர்ச்சி
11. பட்டறைத் தொழில் வளர்ச்சி
12. இயந்திரங்களும் இயந்திரத் தொழில் முறையும்
இந்த உற்பத்திக் கருவிகளை மேம்படுத்தியது அவற்றை
பயன்படுத்திய மனிதர்கள்தான். உற்பத்தி சக்திகளாகிய கருவிகளை
மாற்றுவதில் மனிதன் பங்காற்ற, இந்த மாற்றப்பட்ட கருவிகளை
பயன்படுத்தி மனிதனின் அறிவும் வளர்ந்தது. தொழில் அனுபவம், வேலைத்திறன், கருவிகளை பயன்படுத்தும் திறமை முன்னேறியது. இந்த உற்பத்தி சக்திகளில் ஏற்பட்ட மாறுதல்களுக்கு ஏற்பவே உற்பத்தி உறவுகளும், பொருளாதார உறவுகளும் மாறின.
வரலாற்றில் நிலவிய உற்பத்தி உறவுகளை பின் வருமாறு
பிரிக்கலாம். இவை வெவ்வேறு காலங்களில் வெவ்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் கூட
நிலவியிருக்கலாம்.
1. புராதன பொதுவுடைமை முறை
2. அடிமை சமுதாய முறை
3. நிலப்பிரபுத்துவ முறை
4. முதலாளித்துவ முறை
5. சோசலிச முறை
புராதன பொதுவுடமை சமூகத்தில் மனிதர்கள் தனித்தனியே நின்று
போராடாமல் சேர்ந்து வேலை செய்ய வேண்டியிருந்தது. விலங்குகளை வேட்டை யாடவும், மீன் பிடிக்கவும், கனிகளை சேகரிக்கவும், வீடு கட்டிக் கொள்ளவும் ஒன்று
கூடு பாடுபட வேண்டியிருந்தது. அப்படி உழைப்பு பொதுவாக இருந்த
போது உற்பத்தி கருவிகளும் பொதுவுடமையாக இருந்தன. இங்கே சுரண்டல் கிடையாது, வர்க்கங்கள் கிடையாது.
அடிமை சமுதாய முறையில் அடிமைகள் எஜமானனுக்குச் சொந்தம். உற்பத்தி சாதனங்களும் எஜமானனுக்குத்தான் சொந்தம். மேய்ச்சலும், உழுதலும், கைத்தொழிலும் உதித்த இந்த
காலத்தில் கருவிகளை வளர்த்து செல்வதற்கு தனியுடமை உதவியது. உழைக்கும் மனிதர்களும் எஜமானனுக்குச் சொந்தம். அடிமைகளை வாங்கி விற்க அல்லது கொல்லக் கூடச் செய்யலாம். அந்த காலத்திய உற்பத்தி சக்திகளுக்கு பொருத்தமாக இந்த உற்பத்தி முறை இருந்தது. கல் ஆயுதங்களுக்குப் பதிலாக உலோக ஆயுதங்கள், மேய்ச்சல், உழுதல், கைத்தொழில் போன்ற உற்பத்தித் துறைகளிடையே வேலை பிரிவினை உதிக்கின்றன. மனிதர்களுக்கிடையேயும் சமுதாயங்களுக்கிடையேயும் பரிமாற்றங்களுக்கான
சாத்தியங்களும் தோன்றுகிறது. ஒரு சிலர் கையில் செல்வமும்
உற்பத்தி சாதனங்களும் குவிகின்றன. பெரும்பான்மையினர் ஒரு
சிலருக்கு அடிமைப்படுத்தப்படுகின்றனர். இங்கு அடிமைகள் கட்டாயப்படுத்தி
வேலை வாங்கப்படுகின்றனர். இங்கு உற்பத்தி சாதனங்களும்
பயனும் தனி உரிமையாக்கப்பட்டு விட்டன. ஏழை, பணக்காரன், சுரண்டுபவன், சுரண்டப்படுபவன், உரிமைகள் அனைத்தும்
படைத்தவர்கள், எந்த உரிமைகளும் இல்லாதவர்கள், இவர்களுக்கிடையேயான வர்க்கப்
போர் இதுதான் அடிமை சமுதாய முறையின் சித்திரம்.
நிலப்பிரபுத்துவ சமூகத்தில் உற்பத்தி சாதனங்கள் அனைத்தும்
நிலப்பிரபுவுக்குச் சொந்தம். ஆனால் உழைப்பாளி முழுவதும்
சொந்தம் கிடையாது. அவரை கொல்ல முடியாது. ஆனால் விலைக்கு விற்கவோ வாங்கவோ செய்யலாம். இதுதான் நிலப்பிரபுத்துவ சமூகத்தின் உற்பத்தி உறவு. இரும்பிலான கருவிகள், கைத்தொழில் செய்பவர்கள் உருவான
காலத்திற்கு இந்த உற்பத்தி உறவு பொருத்தமானதாக இருக்கிறது.
தான் உழைக்கும் உற்பத்தித் துறையில் ஏதாவது வகையில்
அக்கறையும் முன்முயற்சியும் காட்டும்படி உழைப்பாளியை இந்த கால கட்டம் கோருகிறது. இதனால் அடிமை முறை கைவிடப் படுகிறது. பண்ணையடிமை என்ற உழைப்பு முறை
ஏற்படுத்தப்படுகிறது. பண்ணை முறைக்கு சொந்த நிலம், உற்பத்திக் கருவிகள் இருக்கிறது. தனது உழைப்பை மேம்படுத்திக்
கொண்டு தனது விளைச்சலையும் நிலப்பிரபுவின் விளைச்சலையும் பெருகச் செய்கிறான். இதன் மூலம் தனிவுடமை மேலும் வளர்ச்சியடைகிறது. சுரண்டல் மேலும் தீவிரமடைகிறது. சுரண்டுபவனுக்கும்
சுரண்டப்படுபவனுக்கும் இடையே வர்க்கப் போர் நிகழ்கிறது.
முதலாளித்துவ முறையில் உற்பத்தி கருவிகள் முதலாளிக்குச்
சொந்தம். தொழிலாளிக்கு உற்பத்தி சாதனங்கள் எதுவும் சொந்தமில்லை. அவன் பெயரளவில் சுதந்திரமானவன், ஆனால் உயிர் வாழ்வதற்காக அவன்
தனது உழைப்பை கூலிக்கு விற்க வேண்டியிருக்கிறது. விவசாயமும் கைத்தொழில் பட்டறைகளும் இயந்திர மயமாக்கப்பட்டு பெரு முதலாளிகளுக்கு
உடமையாகின்றன. சிறு உடமையாளர்கள் படிப்படியாக பாட்டாளிகளாக மாற்றப்படுகின்றனர். இந்த புதிய இயந்திரங்களை இயக்குவதற்கு போதுமான அளவு தொழிலாளர்களுக்கு கல்வி
அறிவு அளிக்கப்படுகிறது.
உற்பத்தி சக்திகளை வளர்த்து விட்ட பிறகு முதலாளித்துவம்
முரண்பாடுகளில் சிக்கிக் கொள்கிறது. அதீத உற்பத்தி, கழுத்தை அறுக்கும் போட்டி இவற்றால் சிறு உற்பத்தியாளர்கள்
அழிக்கப்படுகிறார்கள். பெரிய தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் பெரும் எண்ணிக்கையில்
அணி திரட்டப்படுவதன் மூலம் ஒரு பாட்டாளி வர்க்க இராணுவம் உருவாகிறது. இதன் மூலம் முதலாளித்துவம் தனக்கு எதிரான சக்தியை தானே வளர்த்து விடுகிறது. ஆனால் உற்பத்தி சாதனங்கள் முதலாளித்துவ தனியுடமையாகவே இருக்கின்றன.
உற்பத்தி சக்திகளின் சமுதாயத் தன்மைக்கும் உற்பத்தி
உறவுகளுக்கும் இடையேயான முரண்பாடுகள் உற்பத்தி நெருக்கடிகளில் வெளிப்படுகின்றன. பண்டங்கள் அளவுக்கதிகமாக உற்பத்தி செய்யப்பட்டு விட்டதால் வேலையில்லா
திண்டாட்டமும் பட்டினிக் கொடுமையும் ஏற்படுகின்றன. இந்தியாவின் உணவு தானியக் கிடங்குகள் நிரம்பி வழியும் போது பல கோடி மக்கள்
ஊட்டச் சத்து போதாமல் வாடுவதை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
சமூகத்தின் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு தடை
விதிக்கும்படியாக முதலாளித்துவத்தின் உற்பத்தி உறவுகள் இருக்கின்றன. இந்த உற்பத்தி உறவுகளை மாற்றி அமைக்கும் புரட்சிக்கான கரு
முதலாளித்துவத்திலேயே உருவாகிறது. உற்பத்தி சாதனங்களின் மீது
இருக்கும் தனிவுடமையை அகற்றி விட்டு சோசலிச சமூக உடமையை உருவாக்குவதுதான் இந்த
புரட்சிக்கான நோக்கம்.
திறந்தநிலை மார்க்சியம் யாருக்கானது விவாதத்தை கேட்க இந்த லிங்கை அழுத்தவும்
மேலும் இவர்களின் நூலுக்கு நான் பேசியதற்கு விளக்கவுரையாக அமைவதை தோழர் மாவோ சுட்டிக் காட்டியிருப்பதையே கவனத்தில் கொள்வோம்:
“அகநிலைக்கும் புறநிலைக்கும் இடையிலான முறிந்த
தன்மையை கருத்துமுதல்வாதமும் எந்திர பொருள்முதல் வாதமும் சந்தர்ப்பவாதமும்
சாகசவாதமும் உடையவை; நடைமுறையிலிருந்து
அறிவு பிரிந்த தன்மையையும் உடையவை.” (நடைமுறை பற்றி)
ரஷ்யாவில் போக்டனோவும் அவரைப் போன்ற மற்ற
ஏமாற்றுக்காரர்களும் திருட்டுத்தனமாக கட்சிக்குள் உட்புகுந்த அத்தகைய
சந்தர்ப்பவாதிகள் ஆவர். லெனின் “பொருள்முதல் வாதமும் அனுபவவாத விமர்சனமும்” என்ற தனது படைப்பில் இவர்களின் தன்மையை கூர்மையாக
அம்பலப்படுத்துவதன் மீது தனது முயற்சிகளை ஒன்றுகுவித்தார். இந்த அயோக்கியர்கள் புரட்சிகர நடைமுறையை
எதிர்த்தனர். அனுபவம்
குறித்த பொருள் முதல்வாத கோட்பாட்டை மறுதலித்து உரைத்தனர். அதே சமயத்தில் புரட்சிகர கோட்பாடுகளை எதிர்க்க
வும் செய்தனர்; இயங்கியல்
பொருள் முதல்வாதத்தை “புதிர்” எனவும் “வறட்டுச் சூத்திரம்” எனவும் கயமைத்தனமாக அவதூறு செய்து பொருள்முதல்வாதத்தின்
இடத்தில் கருத்து முதல்வாதத்தையும் மார்க்சியத்தின் இடத்தில் திருத்தல்வாதத்தையும்
வைக்க தங்கள் மூளைகளை கசக்கினர்.
இந்த வகையில் அவர்கள் தனியாக இல்லை. லியுஷாவோசியும் இதர அரசியல் ஏமாற்றுக்காரர்களும்
அதையே அச்சுஅசலாகச் செய்தனர். அவர்கள் “மேதைமை” என்று அழைக்கப்படுகிற கோட்பாட்டை கொம்பூதுவதற்கு
மிகையாக செயல்படும் அதே சமயத்தில் மனிதனின் திறமை நடைமுறையிலிருந்து தோன்றுகிறது
என்ற பொருள்முதல்வாத கருத்துநிலையை எதிர்த்தனர். அதே சமயத்தில் மார்க்சியம் - லெனினியம் காலாவதியானது என அதை மூர்க்கமாகத்
தாக்கினர். மக்கள்திரள்களை
கண்காணா இடத்திற்கு வழி நடத்துவதற்கும் ஏமாற்றுவதற்கும் புரட்சிகர மக்கள் திரள்களை
புரட்சிகர கோட்பாடுகளிலிருந்து பிரிப்பதற்கு அற்பமாக எத்தனித்தனர். இவையனைத்தும் காட்டுவது என்னவெனில் நாம்
கருத்துமுதல்வாதத்திற்கும் இயங்காவியலுக்கும் ஆளாவதை தடுப்பதற்காக
சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக போராட்டங்களை தொடுத்தாக வேண்டும். அதே சமயத்தில் நாம் நடைமுறைக்கு முதல் இடம்
கொடுக்கும் கருத்துநிலையை உயர்த்திப் பிடித்து கருத்துமுதல்வாத காரண காரியவாதத்தை
எதிர்த்தாக வேண்டும். அதே
நேரத்தில் புரட்சிகர கோட்பாடுகளின் வழிகாட்டும் பாத்திரத்திற்கு முக்கியத்துவம்
அளித்து அனுபவவாதத்திற்கு எதிராக விழிப்புடன் இருந்து அதை வெற்றி கொண்டாக வேண்டும்.
"வர்க்கப் போராட்டத்தில் நடைமுறையிலிருந்தே அனுபவம் வருகிறது என மார்க்சியம் மெய்ப்பித்து நிலைநாட்டுகிறது. அந்த வர்க்கப் போராட்டமானது உற்பத்திக்கும் அறிவியல் பரிசோதனைக்குமானது ஆகும். “அனைத்து உண்மையான அறிவும் நேரடி அனுபவத்திலிருந்தே தோன்றுகிறது (நடைமுறை பற்றி). இது என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்தே உண்மை யாக உள்ளது" என்கிறார் மாவோ
தொடரும்...
No comments:
Post a Comment