இந்தியாவின் 2024-25 பட்ஜெட் என்ன சொல்கிறது?

தோழர்களே நம் முன் நம் நாட்டின் வரசெலவு அறிக்கை உள்ளது இதனை சமர்பித்த மந்திரி மக்களுக்கு பதில் சொல்லும் கடமை இல்லை அந்த திமிர்தானே? மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் மாநிலதிற்கு உரிய பங்களிப்பு இல்லை என்று குற்றச்சாட்டோடு அவர்களின் போராட்டம் முடிந்து விடுகிறது.

உண்மையில் ஜி.எஸ்.டி என்ற பெயரில் 10.62 லட்சம் கோடியை திருடும் பொழுதோ அல்லது வரியாக மட்டும் பல்வேறு பெயர்களில் மொத்தமாக (ஜி.எஸ்.டியையும் சேர்த்து) 38.40 லட்சம் கோடியை வசூலிக்கும் பொழுது அந்த உழைக்கும் மக்களிடமும்தானே வசூலிக்கிறீர்கள் ஆனால் அந்த மக்களுக்கான எந்த பயனும் இல்லாத பட்ஜெட்டை வெளியிட்ட நிதி அமைச்சரையோ ஏன் இந்த ஆட்சியாளர்களையோ அந்த மக்கள் என்ன செய்ய முடியும்? இவைதான் ஆட்சியின் மகிமை. யாரோ வாழ வரி கட்டி சாகும் அவலம் விழிப்படையாவிட்டால் இப்படியே உழைத்து உழைத்து உருகுழைந்து வாழ வேண்டியதுதான்.

பட்ஜெட் என்ன? சற்று பார்ப்போம்- இந்த ஆண்டிற்கான் வரவு செலவு 48,20,512 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இவை முந்தைய ஆண்டின் 44,90,486 லட்சம் கோடியிலிருந்து 16.9% அதிகரித்துள்ளதாக அறிக்கை கூறுகிறது.

பயனுள்ள மூலதன செலவு, '15,01,889 கோடி' லட்சம் கோடி என்றும் 2024-25 பட்ஜெட்டில் 18.2 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.

2022-23 நிதியாண்டின் மதிப்பீட்டை விட ரூ.4,82,766  லடசம் கோடி அதிகம் ...

இன்னும் சில

வரவு

ஜி.எஸ்,டி                                     - 10.62 லட்சம் கோடி

மற்ற வரிகள்                            - 25.84 லட்சம் கோடி

மொத்த வரி                              - 38.40லட்சம் கோடி

நிதி பற்றாகுறை                    -16,13லட்சம் கோடி
(அதை சரிகட்ட)  லோன்    -11.63லட்சம் கோடி
 மற்ற                                            -4.50லட்சம் கோடி

செலவு
நிர்வாக செலவு- சமபளம்            -1.62லட்சம் கோடி
                                        பென்ஷன்     -2.43 லட்சம் கோடி
                                        மற்ற                - 3.79 லட்சம் கோடி
நடுவன் அரசின் செலவுக்கு      - 14.91லட்சம் கோடி
லோனிக்கான வட்டி                       -11.63லட்சம் கோடி
மாநிலங்களுக்கு கொடுக்க        - 5.24 லட்சம் கோடி
பொருளாதார உதவி (மத்திய)   -7.85 லட்சம் கோடி
பொதுவான உதவிக்கு                    - 2.15லட்சம் கோடி
சமூக சேவைக்கு                                - 0.56 லட்சம் கோடி
தள்ளுபடி அல்லது உதவி பல்வேறு -4.28லட்சம் கோடி
உரம் மானியம்                                      -1.64லட்சம் கோடி
உணவுக்கு                                                - 2.05லட்சம் கோடி
மற்ற உதவிக்கு                                      -0.46லட்சம் கோடி

இதனை பற்றி இந்த படங்களில் உள்ளன் விரிவாக பார்க்க முழு விவரங்களை ஆவணங்களை வாசித்து பின்னர் எழுதுகிறேன்....




No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்