ரஷ்யாவில் சமூக - ஜனநாயகத்தின் வளர்ச்சியுடன் ஒட்டி வெகுஜன தொழிலாளர் இயக்கத்தில் ஏற்பட்டிருக்கும் வளர்ச்சியானது மூன்று இடைக்கால கட்டங்களால் குறிக்கப்பட்டிருக்கிறது. குறுகிய பிரச்சாரக் குழுக்களிலிருந்து பொதுமக்களிடையிலான விரிவான பொருளாதாரக் கிளர்ச்சிக்கு மாறிச்சென்றது முதலாவது கட்டமாகும். பெரிய அளவிலான அரசியல் கிளர்ச்சிக்கும் தெருக்களில் பகிரங்க ஆர்ப்பாட்டங்களுக்கும் மாறிச்சென்றது இரண்டாவது கட்டமாகும். மூன்றாவது கட்டம், நடைமுறையிலான உள்நாட்டுப் போருக்கு, நேரடி புரட்சிப் போராட்டத்துக்கு, ஆயுதமேந்திய வெகுஜன எழுச்சிக்கு மாறிச் சென்றதாகும். இந்த இடைக்காலக் கட்டம் ஒவ்வொன்றும் ஒரு புறத்தில் பிரதானமாக ஒரே திசையில் செயல்பட்டு வந்த சோசலிச சிந்தனையாலும், மறுபுறத்தில் தொழிலாளி வர்க்கத்தின் வாழ்க்கை நிலைமைகளிலும் அதன் மனப்பாங்கு முழுவதிலும் ஏற்பட்ட ஆழ்ந்த மாறுதல்களாலும், மற்றும் தொழிலாளி வர்க்கத்தின் மேலும் மேலும் விரிவான பகுதிகள் உயர்ந்த உணர்வு படைத்த முனைப்பான போராட்டத்தில் இறங்கும்படி உந்திவிடப்பட்டு வந்த நிலமையாலும் தயாரிக்கப்பட்டதாகும். சில நேரங்களில் இம்மாறுதல்கள்கண்ணுக்கு புலப்படா வண்ணம் ஏற்பட்டு வந்தன; பாட்டாளி வர்க்கம் அமளி எதுவுமின்றி திரைமறைவில் தனது சக்திகளை ஒன்றுதிரட்டிக் கொண்டது.
ஆகவே அறிவுத்துரையினரிடையே இந்த வெகுஜன இயக்கம் நிலையானதுதானா, ஜீவசக்தி கொண்டதுதானா என்று அடிக்கடி சந்தேகம் எழுந்தது. பிறகு ஒரு மாற்றம் ஏற்படும், திடுமென நடைபெறுவதாகத் தோன்றும்படி புரட்சி இயக்கம் முழுவதும் கிளர்ந்தெழுந்து மேலும் உயர்வான ஒரு புதிய கட்டத்தை அடைந்துவிடும். பாட்டாளி வர்க்கமும் அதன் முன்னணிப் படையான சமூக ஜனநாயகமும் புதிய நடைமுறைப் பணிகளை எதிர்நோக்க வேண்டியதாகிவிடும். இப்பணிகளை நிறைவேற்ற ஏதோ தரைக்கடியிலிருந்து வெடித்துவிட்டது போலத் தோன்றும் புதிய சக்திகள், இந்த மாற்றத்துக்கு சற்று முன்புவரை யாரும் நினைத்துக்கூட இருக்க முடியாத புதிய சக்திகள் உதித்தெழும். ஆனால் இவை யாவும் திடுதிப்பென நிகழ்ந்தவை அல்ல; சமூக - ஜனநாயக இயக்கத்தினுள் ஊசலாட்டங்களின்றி, போக்குகளுக்கு இடையிலான போராட்டமின்றி, நெடுங்காலத்துக்கு முன்னரே இறந்தொழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட காலாவதியான கருத்தோட்டங்களை நோக்கி ஏற்படும் சரிவுகளின்றி நிகழ்ந்தவை அல்ல.
ஊசலாட்டங்களுக்குரிய இத்தகைய ஒரு காலக்கட்டத்தில்தான் ரஷ்யாவில் சமூக ஜனநாயகம் மீண்டும் இப்பொழுது கடந்துகொண்டு இருக்கிறது. சந்தர்ப்பவாதத் தத்துவங்களை உடைத்துக்கொண்டு அரசியல் கிளர்ச்சி தனக்கு வழிவகுத்துச் செல்ல வேண்டியிருந்த காலம் ஒன்று இருந்தது. புதிய பணிகளை நிறைவேற்றும் திறன் நம்மிடம் இல்லை என்பதாய் அப்பொழுது அச்சம் தெரிவிக்கப்பட்டு வந்தது. பாட்டாளி வர்க்கத்தின் கோரிக்கைகளுக்குப் பின்நங்கிய நிலையில் சமூக ஜனநாயகவாதிகள் சென்று கொண்டிருந்ததற்கு நியாயம் கற்பிப்பதற்காக அப்பொழுது “வர்க்கம்”என்னும் உரிச்சொல் மிதமிஞ்சி திரும்பத் திரும்ப உபயோகிக்கப்பட்டது. அல்லது வர்க்கத்தின் பால் கட்சியின் போக்கு பற்றிய வால்பிடிப்பாளரது வியாக்கியானம் பயன்படுத்தப்பட்டது. கிட்டப்பார்வையால் விளைந்த இந்த அச்சங்களையும் பிற்பட்ட கருத்தோட்டங்களையும் இயக்கத்தின் வளர்ச்சியானது தூர விலக்கித் தள்ளிவிட்டது. இப்புதிய எழுச்சியுடன் கூடவே, காலங்கடந்துவிட்ட குழுக்களுக்கும் போக்குகளுக்கும் எதிரான போராட்டமும் வேறொரு வடிவத்தில்தான் எனினும் மீண்டும் நடைபெறுகிறது. ரபோச்சியெதியேலொவாதிகள் புதிய இஸ்கராவாதிகளின்9, வடிவில் திரும்பவும் உயிர்பெற்று எழுந்துள்ளனர். புதிய பணிகளுக்கு ஏற்ப நமது செயல்தந்திரத்தையும் நமது நிறுவன அமைப்பையும் தகவமைத்துக் கொள்வதற்காக நாம் “உயர்ந்த வகை ஆர்ப்பாட்டம்” (ஸெம்ஸ்த்வொ இயக்கத்துக்கான திட்டம்10) அல்லது “வளர்ச்சிப் போக்காகிய ஒழுங்கமைப்பு” என்பதான சந்தர்ப்பவாதத் தத்துவங்களுடைய எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது. எழுச்சிக்கு “காலம் நிர்ணயிப்பது” பற்றிய பிற்போக்குவாத அச்சத்தை அல்லது பாட்டாளி வர்க்கம் மற்றும் விவசாயிகளின் புரட்சிகர ஜனநாயகச் சர்வாதிகாரத்தைப் பற்றிய பிற்போக்குவாத அச்சத்தை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கிறது.
பாட்டாளி வர்க்கத்தின் அவசரத் தேவைகளுக்கு சமூக ஜனநாயகம் பின்தங்கி சென்றுகொண்டிருப்பதற்கு நியாயம் கற்பிப்பதற்காக மீண்டும் “வர்க்கம்” என்னும் சொல் மிதமிஞ்சி அசட்டுத்தனமாக திரும்பத் திரும்ப உபயோகிக்கப்படுகிறது. வர்க்கம் சம்பந்தமாகக் கட்சிக்குள்ள பணிகள் சிறுமைப்படுத்தப்படுகின்றன. மெய்யான சமூக ஜனநாயக சுயேச்சை செயற்பாட்டின் உயர் வடிவங்களை, பாட்டாளி வர்க்கத்தின் மெய்யான புரட்சிகர முன்முயற்சியை அலட்சியப்படுத்திவிட்டு, செயற்பாட்டின் கீழ்தர வடிவங்களைவணங்குவோர் திரும்பவும் “தொழிலாளர் சுயேச்சை செயற்பாடு” எனும் கோஷத்தை தவறான முறையில் பயன்படுத்தி வருகிறார்கள். காலங்கடந்துவிட்ட உயிரற்ற கருத்துக்களின் இந்த மீத மிச்சங்களை வளர்ந்துசெல்லும் இயக்கமானது தூர விலக்கி ஒதுக்கிவிடும் என்பதில் இம்மியும் சந்தேகமில்லை. ஆனால் இவ்வாறு விலக்கி ஒதுக்கப்படுவதானது, பழைய தவறுகளை நிராகரிப்பதுடன் மட்டும் நின்றுவிடுவதாகக் குறுகலாக்கப்பட்டுவிடக் கூடாது; அதற்கு மாறாக, ஒப்பிடற்கரிய அளவு முக்கியமாக, புதிய பணிகளை நடைமுறையில் நிறைவேற்றும் திசையிலான, பெருந்திரள்களின் புரட்சி அரங்கிற்கு வந்துகொண்டிருக்கும் புதிய சக்திகள் நமது கட்சிக்குள் வரும்படி கவர்ந்திழுத்து அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளும் திசையிலான ஆக்கப்பூர்வமான புரட்சி வேலையின் வடிவத்தைப் பெற்றாக வேண்டும்.
ஆக்கப் பூர்வமான புரட்சி வேலை பற்றிய இந்தப் பிரச்சனைதான் வரப்போகும் மூன்றாவது காங்கிரசில் பிரதான விவாதப் பொருளாக இருக்க வேண்டும். நமது கட்சி உறுப்பினர்கள் எல்லோரும் தமது ஸ்தலவேலைகளிலும் பொது வேலைகளிலும் இந்தப் பிரச்சனைகளில்தான் தமது கவனத்தை ஒன்றுகுவிக்க வேண்டும். நம்மை எதிர் நோக்கும் புதிய பணிகளைப் பொறுத்தவரை பொதுப்பட இவை குறித்து நாம் பன்முறை கூறியிருக்கிறோம். இவை யாவன: நகர, கிராம ஏழைகளைச் சேர்ந்த புதிய பகுதிகளிடையே நமது கிளர்ச்சி வேலையை விரிவாக்குதல்: மேலும் பரவலான, நெளிவுசுழிவான, வலிமைவாய்ந்த நிறுவனத்தை கட்டியமைத்தல்: எழுச்சிக்குத் தயாரித்தல், மக்களை ஆயுதபாணியாக்குதல், இந்த நோக்கங்களுக்காகப் புரட்சிகர ஜனநாயகவாதிகளுடன் உடன்பாடு செய்துகொள்ளுதல், இந்தப் பணிகளை நிறைவேற்றப் புதிய சக்திகள் உதித்தெழுந்திருப்பதை ரஷ்யா எங்கும் நடைபெறும் பொது வேலைநிறுத்தங்களைப் பற்றிய தகவல்களும், இளைஞர்களிடத்தும் பொதுவாக ஜனநாயக அறிவித்துறையினரிடத்தும் மற்றும் முதலாளி வர்க்கத்தின் பல பகுதிகளிடத்திலுங்கூட எழும் வேலைநிறுத்தங்களையும், அவர்களிடையே காணப்படும் புரட்சி மனப்பாங்கையும் பற்றிய தகவல்களும் கண்கூடாக்குகின்றன. இந்தப் பிரமாண்டமான புதிய சக்திகள் இருந்துவரும் உண்மையும், தொழிலாளி வர்க்கத்திடமும் விவசாயிகளிடமும் தீ பிடித்து எரியக் கூடியனவாக ஏராளமாக இருக்கும் பொருள்களில் ஒரு சிறு பகுதி மட்டுமே முன்பின் காணாதவாறு தற்போது ரஷ்யாவில் கிளர்தெழும் கொந்தளிப்பால் இதுகாறும் பாதிக்கப்பட்டுள்ளது என்னும் மறுக்க முடியாத உண்மையும் இந்தப் புதிய பணிகள் தவறாமல் நிறைவேற்றப்பட முடியும் நிறைவேற்றப்பட செய்யும் என்பதற்குரிய நம்பகமான உத்தரவாதங்களாகும். தற்போது நம்மை எதிர் நோக்கும் நடைமுறைப் பிரச்சனை இதுவே: முதலாவதாக, இந்தப் புதிய சக்திகளைப் பயன்படுத்திக் கொள்வதும் வழிநடத்திச் செல்வதும் ஒன்றுபடுத்துவதும் ஒழுங்கமையச் செய்வதும் எப்படி: முதலாளித்துவ சுரண்டல் உலகு நீடிக்கும் வரையில் தொடர்ந்து நம்முன் உள்ள இந்தப் பணிகள் நம்முன்னிருக்கவே செய்யும். பழைய சாதாரண வகைப் பணிகளைக் கணப்பொழுதும் மறந்துவிடாமல், இன்றைய புதிய உயர் வகைப் பணிகளில் சமூக - ஜனநாயக வேலை ஒன்றுகுவியும்படிச் செய்வது எப்படி? இந்த நடைமுறைப் பிரச்சனை குறித்து அனுசரிக்கப்படும் சில வழிகளையும் சுட்டிக்காட்டும் பொருட்டு, தனிப்பட்ட ஒன்றாயினும் நமது கருத்துப்படி மிகவும் குறிப்பிடத்தக்க இயல்புடையதான ஓர் உதாரணத்திலிருந்து தொடங்குகிறோம். சிறிது காலத்துக்கு முன்பு, புரட்சி வெடித்தெழவிருந்த ஒரு தருணத்தில், மிதவாத முதலாளித்துவ (பூர்ஷ்வா) வெளியீடான அஸ்வொஷ்தேனியே (அஸ்வொஷ்தேனியே “விடுதலை” ரஷ்ய மிதவாத முதலாளித்துவ வர்க்கத்தாரின் பத்திரிக்கை, வெளிநாடுகளில் 1902 ஜூலை முதல் 1905 அக்டோபர் வரை வெளிவந்தது. அதன் அடிப்படையில் “சயூஸ் அஷ்வொபஷ்தேனியா” “விடுதலைக்கழகம்”என்பது தோற்றுவிக்கப்பட்டது. இக்கழகம் காடேட்டுக் கட்சிக்குக் கருவாக அமைந்தது.) இதழ் 63 இல் சமூக ஜனநாயகவாதிகளின் நிறுவன ஒழுங்கமைப்பு வேலை பற்றிய பிரச்சனையைக் குறிப்பிட்டது. சமூக ஜனநாயகத்திலிருந்துவரும் இரு போக்குகளுக் கிடையிலும் நடைபெறும் போராட்டத்தை உன்னிப்பாக கவனித்துவரும் அஸ்வொபஷ் தேனியே,“பொருளாதாரவாதத்தை” நோக்கி புதிய இஸ்கரா சரிந்து பின்செல்வதை மீண்டும் மீண்டும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பை கைநழுவ விடாமல் “பொருளாதார வாதத்தின்” பால் தனக்குள்ள கோட்பாட்டு ரீதியான ஆழ்ந்த அனுதாபத்தை (தொழிலாளி வாய்ச்சவடால் சம்பந்தமாக) வலியுறுத்தியது. புரட்சிகர சமூக ஜனநாயகத்தின் பாத்திரத்தை தவிர்க்க முடியாதவாறு மறுப்பதாகவே அல்லது குறைத்துச் சிறுமைப் படுத்துவதாகவே இந்தப் பிரசுரம் அமைந்திருக்கிறது. என்பதை (இப்பிரசுரம் குறித்து வ்பெரியோத்தின் இதழ் 2ஐப்பார்க்கவும்) (வ்பெரியோத் - “முன்னேற்றம்” சட்ட விரோத போல்ஷ்விக் வாரப் பத்திரிக்கை. 1904 டிசம்பர் முதல் 1905 மேவரை ஜெனிவாவில் வெளிவந்தது). இந்த மிதவாத வெளியீடு சரியாகவே சுட்டிக் காட்டியது. சம்பிரதாய மார்க்சிஸ்டுகள் வெற்றி பெற்ற பிறகு பொருளாதாரப் போராட்டம்அலட்சியப்படுத்தப்பட்டிருப்பதாக இந்தத் தொழிலாளி முற்றிலும் தவறானபடி அடித்துப் பேசுவது குறித்து அஸ்வொபஷ்தெனியெ பின்வருமாறு எழுதுகிறது.
"எதில் இன்றைய ரஷ்ய சமூக ஜனநாயகத்தின் மனப் பிரமை அடங்கியிருப்பது? அறிவுப்போதப் பணி குறித்து, சட்டப்பூர்வமான வழிகள் குறித்து, “பொருளாதாரவாதம்” குறித்து தொழிலாளர் இயக்கத்தின் அரசியல் அல்லாத வடிவங்கள் எனப்படுகிறவை குறித்து அதற்குள்ள அச்சத்திலும், அறிவுப்போதப் பணியாலும் சட்டப்பூர்வமான, அரசியல் அல்லாத வடிவங்களாலும் மட்டுமே புரட்சி இயக்கம் என்று அழைக்கப்படுவதற்குரிய மெய்யான தகுதியைப் பெறுவதற்கு வலிவும் போதுமான விரிவும் கொண்டஓர் அடித்தளத்தை தொழிலாளி வர்க்க இயக்கத்துக்குப் படைத்திட முடியும் என்பதை அதைப் புரிந்துகொள்ளத் தவறுவதிலும்தான் அதன் மனப்பிரமை அடங்கியிருக்கிறது.”சமூக ஜனநாயகத்தை எதிர்த்தல்ல. அதனுடன் சேர்ந்து நின்று “ தொழிற்சங்க தொழிலாளர் இயக்கத்தைக் கட்டுவதற்கு முன்முயற்சி எடுத்துக் கொள்ளும்படி” அஸ்வொபஷ்தேனியெ தன்னைப் பின்பற்றுவோரை வலியுறுத்துகிறது. இந்தச் சூழ்நிலை முன்பு சோசலிஸ்டுகளுக்கு எதிரான விஷேச சட்டம் செயல்பட்டபோது (சோசலிஸ்டுகளுக்கு எதிரான விஷேச சட்டம்:- ஜெர்மனியில் தொழிலாளர் இயக்கத்தையும் சோசலிஸ்டு இயக்கத்தையும் எதிர்ப்பதற்காக பிஸ்மார்க் அரசாங்கம் 1878இல் பிறப்பித்த சட்டம். இந்த சட்டத்தின்படி சமூக ஜனநாயகக் கட்சியும் தொழிலாளர்களுடைய வெகுஜன நிறுவனங்கள் யாவும் தொழிலாளர் பத்திரிக்கைகளும் சட்டவிரோதமாக ஆக்கப்பட்டன. பெபல், லீப்க்னெஹ்ட் ஆகியோரைச் சுற்றி ஒன்றுதிரண்டு ஜெர்மன் சமூக ஜனநாயகவாதிகளில் சிறந்தோர் சட்டவிரோதமான நிலைமைகளில் வேலையைத் தொடங்கினர்:அதன் காரணமாக தொழிலாளர் திரளினரிடையே கட்சியில் செல்வாக்கு குறையாமல் உயர்ந்தது. 1890இல் நடைபெற்ற ரைஹ்ஸ்டாக் தேர்தல்களில் சமூக ஜனநாயகவாதிகள் சுமார் 15 லட்சம் வாக்குகளைப் பெற்றனர். அதே 1890இல் மக்களின் நிர்பந்தம் காரணமாகவும் வளர்ந்து ஓங்கிவிட்ட தொழிலாளர் இயக்கம் காரணமாகவும் சோசலிஸ்டுகளுக்கு எதிரான விஷேச சட்டம் ரத்து செய்யப்பட வேண்டியதாயிற்று). ஜெர்மன் தொழிலாளர் இயக்கத்தில் நிலவிய சூழ்நிலைக்கு இணையானதாகும் என்று குறிப்பிடப்படுகிறது.
முற்றிலும் தவறான இந்த ஒப்புமையைப் பரிசீலிப்பதற்கு இதுவல்ல தக்க இடம். யாவற்றுக்கும் முதலாக, தொழிலாளர் இயக்கத்தின் சட்டப்பூர்வமான வடிவங்கள் குறித்து சமூக ஜனநாயகவாதிகளின் போக்கு பற்றிய உண்மையை மீண்டும் இங்கு வற்புறுத்துவது அவசியமாகும். “சோசலிசம் அல்லாத, அரசியல் அல்லாத தொழிலாளர் சங்கங்கள் ரஷ்யாவில் சட்ட வடிவம் பெறத் தொடங்கி விட்டன” என்று என்ன செய்ய வேண்டும்?என்பதில் 1902இல் எழுதப்பட்டது. இனி நாம் “இந்தப் போக்கை கவனியாது விட முடியாது” இதை நாம் கவனிக்க வேண்டியது எப்படி? - இந்தக் கேள்வி அங்கே எழுப்பப்பட்டு விடை கூறப்படுகிறது. ஸூபாத்தவ் தத்துவங்களை மட்டுமல்லாது “வர்க்க ஒத்துழைப்பு” பற்றிய எல்லா இசைவான, மிதவாதப் பேச்சுக்களையும் அம்பலப்படுத்துவது அவசியம் என்பது சுட்டிக்காட்டப்பட்டு, இந்தக் கேள்விக்கு விடை கூறப்படுகிறது. (சமூக ஜனநாயகவாதிகளை ஒத்துழைக்கும்படி அழைப்பதன் மூலம் அஸ்வொபஷ்தேனியே முதலாவது பணியை முழுமையாக அங்கீகரிக்கிறது, ஆனால் இரண்டாவதனை உதாசீனம் செய்துவிடுகிறது.) “தொழிலாளர் இயக்கம் சட்ட வடிவம் பெறுதல் காலப் போக்கில் நமக்கு அனுகூலமாக இருக்குமேயன்றி ஸூபாத்தவ்களுக்கு அல்ல என்பதை மறந்துவிடுவதாக ஒருபோதும் இதற்கு அர்த்தமில்லை.” என்று இந்தப் பிரசுரம் மேலும் தொடர்ந்து கூறுகிறது.
சட்டப்பூர்வமான கூட்டங்களில் ஸூபாத்தவியத்தையும் மிதவாதத்தையும் அம்பலம் செய்வதன் மூலம் நாம் பயிரிலிருந்து களையை பிரித்து ஒதுக்குகிறோம். “பயிர் என்று கூறும்போது நாம் தொழிலாளர்களில் மிகவும் பிற்பட்ட பகுதிகளும் அடங்கலாய் மேலும் மேலும் அதிகஎண்ணிக்கையானோரின் கவனத்தை சமூக, அரசியல் பிரச்சனைகளைக்குக்கவருதலையும், புரட்சியாளர்களாகிய நாம் சாராம்சத்தில் சட்டப்பூர்வமான வேலைகளிலிருந்து (சட்டப்பூர்வமான வினியோகித்தல், பரஸ்பர உதவி முதலான வற்றிலிருந்து) விடுவிக்கப்படுவதையும் குறிப்பிடுகிறோம்”.சட்டப்பூர்வமான வேலைகள் ஓங்குவதன் மூலம் கிளர்ச்சிக்காக நமக்கு மென்மேலும் கூடுதலான விவரங்கள் தவிர்க்க முடியாதவாறு கிடைக்கும்.இயக்கத்தின் சட்டப்பூர்வமான வடிவங்கள் குறித்தான “அம்சத்தைப்” பொருத்தவரை “மனப்பிரமையால்” பீடிக்கப்பட்டிருப்பது ஏதேனும் இருப்பின், அது அஸ்வொபஷ்தெனியே தான் என்பது மேற்கூறியதிலிருந்து தெளிவாகப் பெறப் படுகிறது. புரட்சிகர சமூக ஜனநாயகவாதிகள் இவ்வடிவங்கள் குறித்து அஞ்சவில்லை என்பது மட்டுமல்ல,அவர்கள் இவற்றினுள் பயிருடன் கூடகளைகளும் இருத்தலை தெளிவாகச் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஆகவே அஸ்வொபஷ்தெனியேயின் வாதங்கள் புரட்சிகர சமூக ஜனநாயகமானது மிதவாதத்தின் வர்க்கச் சாரப் பொருளை அம்பலப்படுத்தி விடுமென்று மிதவாதிகளுக்கு இருக்கும் மெய்யான (ஆதாரப்பூர்வமான) அச்சத்தை மூடிமறைக்கும் வாதங்களே அன்றி வேறல்ல.
ஆனால் இன்றைய பணிகளின் கண்ணோட்டத்திலிருந்து நமக்கு மிகவும் கவனத்துக்கு உரியதாக இருப்பது புரட்சியாளர்களை அவர்களுடைய வேலைகளில் சிலவற்றிலிருந்து விடுவிக்க முடியும்படியான பிரச்சனைகள்தான். தற்போது நாம் புரட்சியின் தொடக்கத்தைக் கண்ணுற்று வருகிறோம் என்பது இப்பிரச்சனையை மிகவும் அவசியமானதாகவும் மிகவும் பரவலான முக்கியத்துமுடையதாகவும் செய்துவிடுகிறது.ஆகவே அஸ்வொபஷ்தெனியேயின் வாதங்கள் புரட்சிகர சமூக ஜனநாயகமானது மிதவாதத்தின் வர்க்கச் சாரப் பொருளை அம்பலப்படுத்தி விடுமென்று மிதவாதிகளுக்கு இருக்கும் மெய்யான (ஆதாரப்பூர்வமான) அச்சத்தை மூடிமறைக்கும் வாதங்களே அன்றி வேறல்ல.
ஆனால் இன்றைய பணிகளின் கண்ணோட்டத்திலிருந்து நமக்கு மிகவும் கவனத்துக்கு உரியதாக இருப்பது புரட்சியாளர்களை அவர்களுடைய வேலைகளில் சிலவற்றிலிருந்து விடுவிக்க முடியும்படியான பிரச்சனைகள்தான். தற்போது நாம் புரட்சியின் தொடக்கத்தைக் கண்ணுற்று வருகிறோம் என்பது இப்பிரச்சனையை மிகவும் அவசியமானதாகவும் மிகவும் பரவலான முக்கியத்துமுடையதாகவும் செய்துவிடுகிறது.”நமது புரட்சிப் போராட்டத்தை எவ்வளுக்கு எவ்வளவு நாம் மும்முரமாக நடத்திச் செல்கிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு தொழிற்சங்க வேலைகளில் ஒரு பகுதியைச் சட்டப்பூர்வமானதாக்கும் படி அரசாங்கம் கட்டாயப்படுத்தப்படும்.
இவ்வழியில் நமக்குள்ள வேலைச் சுமையில் ஒரு பகுதியிலிருந்து நாம் விடுவிக்கப்படுவோம்.”என்று என்ன செய்ய வேண்டும் என்பதில் நாம் எழுதினோம். ஆனால் மும்முரமான புரட்சிப் போராட்டம் நமது”வேலைச் சுமையில் ஒரு பகுதியிலிருந்து” நம்மை இதனின்றி வேறு பல வழிகளிலும் விடுவிக்கின்றது. தற்போதைய சூழ்நிலை முன்பு தடைவிதிக்கப்பட்டிருந்தவற்றில் பலவற்றையும் “சட்டப்பூர்வமான தாக்கியதுடன்” மட்டும் நின்றுவிடவில்லை.
அது இயக்கத்தை விரிவுபடுத்தியும் இருக்கிறது. அரசாங்கச் சட்டங்கள் எப்படி இருப்பினும் புரட்சியாளர்களின் கைக்கு மட்டுமே எட்டும்படியானவையாகக் கருதப்பட்டு, உண்மையில் அப்படிப்பட்டவையாகவே இருந்து வந்தவை பலவும் இப்பொழுது பொதுமக்களின் நடைமுறை அரங்கினுள் பிரவேசிக்கும்படியும், அவர்களுக்கு வழக்கமானவையும் எட்டக்கூடியவையும் ஆகி விடும்படியும், அது இயக்கத்தை அந்த அளவுக்கு விரிவுபடுத்தியிருக்கிறது. சமூக ஜனநாயக இயக்கமானது எல்லா இடையூறுகளையும் எதிர்த்து நின்று, ஜாரிச சட்டங்களையும் போலீஸ் நடவடிக்கைகளையும் மீறி, தனக்கு கூடுதலான செயல் சுதந்திரத்தை வென்றுள்ளது. இது சமூக ஜனநாயக இயக்கத்தின் வரலாற்று வழியிலான வளர்ச்சிப் போக்கு முழுவதற்குமுரிய சிறப்பியல்பாகும். புரட்சிகர பாட்டாளி வர்க்கமானது, தொழிலாளி வர்க்கத்திடமிருந்தும் மற்றும் பிற வர்க்கங்களிடமிருந்தும் (இவ் வர்க்கங்கள்தொழிலாளர் ஜனநாயகத்தின் கோரிக்கைகளில் ஒரு சிறு பகுதியை மட்டும் ஒத்துக்கொள்கின்றன என்றாலும்) கிடைக்கும் அனுதாபத்தாலும்ஆதரவாலுமான ஒருவகைச் சூழலை அரசாங்கத்தால் நினைக்கவும் முடியாத இந்தச் சூழலைத் தனக்கு உண்டாக்கிக் கொள்கிறது. இயக்கத்தின் ஆரம்பக் கட்டங்களில் சமூக ஜனநாயகவாதி பெருமளவுக்கு அறிவுப்போதப் பணியாய் அமைந்த மிகுதியான பல வேலைகளைச் செய்ய வேண்டியிருந்தது, அல்லது அனேகமாகப் பொருளாதாரக் கிளர்ச்சியில் மட்டுமே ஈடுபட வேண்டியிருந்தது. இப்பொழுது ஒவ்வொன்றாக இந்த வேலைகள் புதிய சக்திகளின், இயக்கத்தினுள் திரட்டப்படும் முன்னிலும் விரிவான பகுதிகளின் கரங்களுக்கு உரியனவாகி வருகின்றன.
புரட்சிகர நிறுவனங்கள் தம் கவனத்தை மெய்யான அரசியல் தலைமைக்கான வேலையில், தொழிலாளர்களுடைய கண்டனங்களிலிருந்தும் வெகுஜன அதிருப்தியிலிருந்தும் சமூக - ஜனநாயக முடிவுகளை வகுத்தளிக்கும் வேலையில் மேலும் மேலும் ஒன்றுகுவியச் செய்துள்ளன. தொடக்கத்தில் நாம் தொழிலாளர்களுக்கு அரிச்சுவடிப் பாடம் - நேரடிப் பொருளிலும் உருவகப் பொருளிலும் - கற்றுக்கொடுக்க வேண்டியிருந்தது. இப்பொழுது அரசியல் எழுத்தறிவின் தரம் பிரமாண்ட அளவுக்கு வளர்ந்து விட்டதால், ஒழுங்கமைந்த முறையில் புரட்சிகரப் பிரவாகத்தைச் செலுத்துவதை நோக்கமாகக் கொண்ட மேலும் நேரடியான சமூக ஜனநாயகக் குறிக்கோள்களில் நமது முயற்சிகள் யாவற்றையும் ஒன்றுகுவித்திட முடியும், ஒன்றுகுவித்திடவும் வேண்டும். இதுகாறும் நாம் பெரிய அளவில் முயற்சி செலுத்த வேண்டியிருந்தது “தயாரிப்பு” வேலைகளில் மிகுதியானவற்றை இப்பொழுது மிதவாதிகளும் சட்டப்பூர்வமான பத்திரிக்கைகளும் செய்து வருகின்றன.
பலவீனமாக்கப்பட்டுள்ள அரசாங்கத்தால் இனி அடக்குமுறை செய்து தடுக்க முடியாததாகிவிட்ட ஜனநாயகக் கருத்துக்கள், கோரிக்கைகளின் பகிரங்கப் பிரச்சாரம் தற்போது அந்த அளவுக்கு மிக விரிவாகப் பரவி விட்டதால் இயக்கத்தின் முற்றிலும் புதியஇந்த வீச்சுக்கு நம்மை தகவமைத்துக்கொள்ள நாம் கற்றுக்கொண்டாக வேண்டும். இயற்கையாகவே இந்தத்தயாரிப்பு வேலைகளில் பயிரும் களைகளும் உள்ளன இயற்கையாகவே இப்பொழுது சமூக - ஜனநாயகவாதிகள் தொழிலாளர்களிடையே முதலாளித்துவ ஜனநாயகத்துக்கு இருந்துவரும் செல்வாக்கை எதிர்த்துப் போராடுவதில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் இந்த வேலையானது அரசியல் உணர்வு பெற்றிராத வெகுஜனங்களைத் தட்டியெழுப்புவதையே பிரதான நோக்கமாகக் கொண்டிருந்த நமது பழைய நடவடிக்கையைக் காட்டிலும் அதிக அளவு மெய்யான சமூக - ஜனநாயக உள்ளடக்கம் கொண்டதாய் இருக்கும்.
வெகுஜன இயக்கம் பரவப் பரவ பல்வேறு வர்க்கங்களின் மெய்யான தன்மையும் மேலும் மேலும் தெளிவாக வெளிப்படும்; நிகழ்ச்சிகளின் வாலைப்பிடித்துப் பின் செல்வதற்குப் பதிலாக வர்க்கத்துக்கு தலைமை தாங்குவதில், வர்க்கத்தின் ஒழுங்கமைப்பாளனாக ஆவதில் கட்சியின் பணி மேலும் மேலும் அவசர அவசியமானதாகிவிடும். எல்லா வகைப்பட்ட புரட்சிகரச் சுயேச்சை செயற்பாடு எங்கும் ஓங்ங ஓங்க, எல்லா வகையான கூப்பாட்டுக்காரர்களும் அத்தனை ஆர்வத்துடன் பற்றிக்கொள்ளும் ரபோச்சியேலொவாதிகளின் பொதுவான சுயேச்சை செயற்பாடு பற்றிய பகட்டுச் சொற்களின் போலித் தன்மையும் வெறுமையும் மேலும் மேலும் தெளிவாக வெளிப்படும்; சமூக - ஜனநாயகச் சுயேச்சைச் செயற்பாட்டின் உட்பொருள் மேலும் மேலும் முக்கியத்துவம் உடையதாகிவிடும். நமது புரட்சிகர முன்முயற்சி குறித்து நிகழ்ச்சிகள் எழுப்பும் கோரிக்கைகள் மேலும் மேலும் அதிகமாகி விடும். சமூக இயக்கத்தின் புதிய பிரவாகங்கள் (Trend) எவ்வளவுக்கு எவ்வளவு விரிவடைகின்றனவோ, அவ்வளவுக்கு அவ்வளவு இந்தப் பிரவாகங்களுக்குப் புதிய வாய்க்கால்கள் வகுக்க வல்ல வலுவான சமூக ஜனநாயக நிறுவனத்துடைய முக்கியத்துவம் அதிகரிக்கும்.
நம்மை அல்லாது சுயேச்சையாக நடத்தப்படும் ஜனநாயகப் பிரச்சாரமும் கிளர்ச்சியும் எவ்வளவுக்கு எவ்வளவு நமக்கு அனுகூலமாகச் செயல்படுகின்றனவோ, அவ்வளவுக்கு அவ்வளவு முதலாளித்துவ (பூர்ஷ்வா) ஜனநாயகத்திடமிருந்து தொழிலாளி வர்க்கத்தின் சுயேச்சையைப் பாதுகாப்பதற்காக சமூக - ஜனநாயகத்துக்கு ஒழுங்கமைந்த முறையில் தலைமை தாங்குவதன் முக்கியத்துவம் அதிகரிக்கிறது.
சேனைக்கு யுத்தகாலம் எப்படியோ அதுபோன்றதாகும் சமூக ஜனநாயகவாதிகளுக்கு புரட்சிகர சகாப்தம். நமது சேனை ஊழியர்களது எண்ணிக்கையை நாம் விரிவாக்கிச் செல்ல வேண்டும்; சமாதான காலத்துக்குரிய சேனையின் ஆள் பலத்திலிருந்து யுத்த காலத்துக்குரிய பலத்துக்கு அதை விரிவடையச் செய்தாக வேண்டும்; சேமப் படையாட்களைத் திரட்ட வேண்டும்; விடுமுறையில் சென்றோரைத் திருப்பி அழைக்க வேண்டும்; புதிய துணை படைப்பிரிவுகளையும் தொகுதிகளையும் சேவைத் துறைகளையும் நிறுவ வேண்டும். யுத்தத்தின் போது தவிர்க்க முடியாதவாறும் இன்றியமையாதபடியும் நாம் குறைவான பயிற்சியே பெற்ற புதிய வீரர்களையே சேனையில் சேர்க்க வேண்டியிருக்கும் என்பதையும், பல சந்தர்ப்பங்களில் ஆபீஸர்களுக்குப் (அதிகாரிகள்) பதிலாக சாதாரண படை வீரர்களை அமர்த்த வேண்டியிருக்கும் என்பதையும், படைவீரர்களை ஆபீஸர்களாகப் பதவி உயர்வு பெறச் செய்வதைத் துரிதப் படுத்தவும் சுலபமாக்கவும் வேண்டியிருக்கும் என்பதை நாம் மறக்கலாகாது. உருவகமின்றிக் (To put it bluntly) கூறுவோமாயின், கட்சி நிறுவனங்கள், கட்சி தொடர்புடைய நிறுவனங்கள் ஆகியவற்றின் உறுப்பினர் தொகையை நாம் வெகுவாக அதிகரிக்க வேண்டும். அப்பொழுதுதான் நூறு மடங்கு வலிமை மிக்க வெகுஜனப் புரட்சி ஆற்றலின் பிரவாகத்துடன் (ஓட்டம்) ஓரளவு உடன் செல்ல முடியும். தளராத பயிற்சியும் மார்க்சிய உண்மைகளில் முறையான போதமும் (போதனை) கவனிக்காமல் விடப்பட வேண்டும் என்பது இதன் அர்த்தம் அல்ல என்பது கூறாமலேயே விளங்கும். ஆனால் தற்போதைய தருணத்தில் பயிற்சி, அறிவு போதம் ஆகிய துறைகளில், பயிற்சி இல்லாதோருக்கு குறிப்பாகவும் முற்றிலும் நம்முடைய அர்த்தத்தில் போதமளித்திடும் இராணுவச் செயல்கள் பன்மடங்கு அதிக முக்கியத்துவம் பெறுவதை நாம் நினைவில் கொண்டிருக்க வேண்டும். மார்க்சியத்திடம் நமக்குள்ள “கோட்பாட்டு நெறியிலான” விசுவாசமானது தற்போது எங்கும் வெகுஜனங்களுக்கு கண்கூடான படிப்பினைகள் அளித்து வீறுநடை போடும் புரட்சிகர நிகழ்ச்சிகளால் உறுதியூட்டப்படுவதையும், இந்தப் படிப்பினைகள் யாவும் குறிப்பாக நமது கோட்பாட்டு நெறியை ஊர்ஜிதப்படுத்துவதையும் (நிரூபிக்கப்படுவதையும்) நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆகவே, கோட்பாட்டு நெறியை கைவிடுவதாகவோ, சிந்தனையில் தாறுமாறான அறிவுத் துறையினரிடம் வறட்டுத்தனமான புரட்சியாளர்களிடம் நமக்குள்ள நம்பிக்கை இல்லாத, சந்தேகப் போக்கை தளர விடுவதாகவோ நாம் கூறவில்லை.நேர்மாறானதையே கூறுகிறோம். கோட்பாட்டு நெறியைப் போதிப்பதற்கான புதிய முறைகள் குறித்தே இங்கு பேசுகிறோம். சமூக -ஜனநாயகவாதி இந்தப் புதிய முறைகளை மறப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும். நமது பழைய, “கோட்பாட்டு நெறியிலான”; படிப்பினைகளை, உதாரணமாக பொதுமக்களுடைய எழுச்சியுடன் நடைமுறையில் பயங்கரத்தை இணைத்துக் கொள்வது அவசியமாகும் அல்லது கல்வி அறிவுடைய ரஷ்ய சமூகத்தினருடன் மிதவாதத்துக்குப் பின்னால் நமது முதலாளி வர்க்கத்தின் வர்க்க நலன்கள் மறைந்திருப்பதைக் கண்டுகொள்ளும் திறனுடையோராக இருத்தல் வேண்டும். (இப் பிரச்சனை குறித்து சோசலிஸ்ட் - புரட்சியாளர் கட்சியினருடன் நாம் நடத்திய வாக்குவாதத்தை வ்பெரியோத், இதழ் 3இல் காண்க) என்பதான படிப்பினைகளைக் கடந்த காலத்தில் செய்தது போல் கல்விக் குழுக்களுக்கு அல்லாமல் வெகுஜனங்களுக்குத் தெரியப்படுத்தப்படும் பொருட்டு இம்மாபெரும் புரட்சிகர நிகழ்ச்சிகளின் கண்கூடான படிப்பினைகளை உபயோகித்துக் கொள்வது இன்று எவ்வளவு முக்கியமாகும் என்பது குறித்துப் பேசுகிறோம்.
ஆகவே நமது சமூக ஜனநாயகக் கண்டிப்பையும் சம்பிரதாயமான நமது விட்டுக்கொடுக்காத நிலைமையையும் தளர்த்தும் பிரச்சனை எழவில்லை. இரண்டையும் புதிய வழிகளில், புதிய பயிற்சி முறைகளைக் கொண்டு உறுதியாக்கும் பிரச்சனையே எழுகிறது. யுத்த காலத்தில் படைக்குப் புதியதாகத் திரட்டப்பட்டோர் நேரடியாக இராணுவச் செயல்களிலிருந்தே தமது பயிற்சிப் பாடங்களைப் பயில வேண்டும். ஆகவே தோழர்களே, புதிய பயிற்சி முறைகளை மேலும் துணிவுடன் கைக்கொள்ளுங்கள்!
முன்னேறுங்கள், மேலும் மேலும் அதிகமான படைக் குழுக்களை அமைத்து அவற்றைப் போருக்கு அனுப்புங்கள். மேலும் அதிகமாக இளம் தொழிலாளர்களைப் படைக்குத் திரட்டுங்கள், கமிட்டிகளிலிருந்து ஆலைக் குழுக்கள், தொழிற்பிரிவு சங்கங்கள், மாணவர் குழுக்கள் வரையிலான எல்லாக் கட்சி நிறுவனங்களின் வழக்கமான கட்டுக்கோப்பை மேலும் விரிவாக்குங்கள்! இந்தப் பணியைச் செய்வதில் ஏற்படும் ஒவ்வொரு கணப் பொழுது தாமதமும் சமூக - ஜனநாயகத்தின் பகைவர்களுக்கே அனுகூலமாயிருக்கும் என்பதை நினைவில் இருத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் புதிய பிரவாகங்கள் ( Trend) (ஓட்டம்) உடனடியான பாதையைத் தேடுகின்றன. அவற்றுக்கு சமூக - ஜனநாயக வாய்க்கால் கிடைக்காவிடில் சமூக - ஜனநாயகமல்லாத வாய்க்கால் ஒன்றில் உடனே அவை ஓடிச் செல்லும். புரட்சி இயக்கத்தில் நடைமுறைச் செயல் ஒவ்வொன்றும் படைக்குப் புதியதாகத் திரட்டப்பட்டோருக்குத் தீர்மானகரமாகவும் தவிர்க்க முடியாத வழியிலும் சமூக - ஜனநாயக விஞ்ஞானத்தில்தான் படிப்பினை கிடைக்கச் செய்யும். ஏனெனில் இந்த விஞ்ஞானம் பல்வேறு வர்க்கங்களுடைய சக்திகளையும் போக்குகளையும் எதார்த்த வழியில் பிழையற்றவாறு மதிப்பீடு செய்வதன் அடிப்படையில் அமைந்தது. அதே பொழுது புரட்சி எனப்படுவதே பழைய மேற்கட்டுமானங்களின் தகர்வும், ஒவ்வொன்றும் தனக்குரிய வழியில் புதிய மேற்கட்டுமானத்தைக் கட்டியெழுப்பிக் கொள்ள முனையும் பல்வேறு வர்க்கங்களது சுயேச்சை செயற்பாடுமே அன்றி வேறல்ல. ஆனால் நமது புரட்சிகர விஞ்ஞானத்தை வெறும் ஏட்டுச் சூத்திரத்தின் நிலைக்குத் தாழ்ந்து விடும்படி இழிவு படுத்தாதீர்கள். வளர்ச்சிப் போக்காக அமைந்த செயல்தந்திரம் என்பதும் வளர்ச்சிப் போக்காக நிறுவன ஒழுங்கமைப்பு என்பதுமான கேடுகெட்ட சொல்லடுக்குகளாக, குழப்பத்துக்கும் திடசித்தமின்மைக்கும் முன்முயற்சி இல்லாமைக்கும் நியாயம் கற்பிக்க முயலும் சொல்லடுக்குகளாக இந்த விஞ்ஞானத்தைக் கொச்சைப்படுத்தாதீர்கள். மிகப் பலவாறான கோஷ்டிகளும் குழுக்களும் மேற்கொள்ளக் கூடிய வெவ்வேறு வகைப்பட்ட முயற்சிகளுக்கு அதிக அளவிலான வாய்ப்பு அளியுங்கள். நமது புத்திமதியை அன்னிலும், அதைக் கருதாமலும், புரட்சிகர நிகழ்ச்சிகளின் வீறுநடையின் தனியாத வேகங்கொண்ட அவசர நிலைமைகள் இக்கோஷ்டிகளையும் குழுக்களையும் சரியான பாதையில் செல்ல வைக்கும் என்பதை நினைவில் கொண்டிருங்கள். அரசியலில் பல சந்தர்ப்பங்களில் ஒருவர் பகைவனிடமிருந்து கற்றறிந்து கொள்ள வேண்டியிருக்கும் என்பது முதுமொழி. புரட்சிகர தருணங்களில் குறிப்பிடத் தக்கவாறு அறிவு புகட்டும்படியும் அவசர முறையிலும் பகைவன் நம்மைச் சரியான முடிவுகளை ஏற்கும்படி எப்பொழுதும் நிர்ப்பந்திக்கிறான்.
தொகுத்துக் கூறுவோமாயின், நாம் நூறு மடங்கு தீவிரமடைந்து வளரும் இயக்கத்தையும், வேலையின் புதிய வேகத்தையும், முன்னிலும் சுதந்திரமான சூழ்நிலையையும், முன்னிலும் விரிந்து பரந்த செயல் அரங்கையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். வேலைக்கு முற்றிலும் மாறான வீச்சு அளிக்கப்பட்டாக வேண்டும். பயிற்சி முறைகள் சமாதானக் கால போதனைக்கு ஏற்றதாயிருப்பதிலிருந்து மாற்றப்பட்டு இராணுவச் செயல்களுக்கு உகந்ததாக்கப்பட வேண்டும். இளம் போர் வீரர்கள் மேலும் துணிவாகவும் விரிவாகவும் விரைவாகவும் ஒன்றுவிடாமல் எல்லா வகையான நமது நிறுவனங்களின் அணிகளிலும்திரட்டப்பட்டாக வேண்டும். இதன் பொருட்டு நூற்றுக்கணக்கில் புதிய நிறுவனங்கள் கணமும் தாமதமின்றி அமைக்கப்பட்டாக வேண்டும். ஆம், நூற்றுக்கணக்கில் அமைக்கப்பட்டாக வேண்டும்; உயர்வு நவிற்சியாகக் கூறப்படுவதல்ல இது. இவ்வளவு விரிவான நிறுவன ஒழுங்கமைப்பு வேலையில் இப்பொழுது இறங்க முடியாது, இதற்கு “உரிய காலம் கடந்துவிட்டது” என்பதாய் யாரும் சொல்ல வேண்டாம். ஒழுங்கமைப்பு செய்வதற்கு உரிய காலம் ஒருபோதும் கடந்ததாகி விடாது. சட்டப்படி நமக்கு கிடைத்து வரும் சுதந்திரத்தையும் சட்டத்தை மீறி நாம் பெறும் சுதந்திரத்தையும் எல்லா வகையான கட்சி நிறுவனங்களையும் பலப்படுத்துவதற்காகவும் அவற்றின் எண்ணிக்கையைப் பெருகச் செய்வதற்காகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். புரட்சியின் போக்கு அல்லது விளைவு எப்படி இருப்பினும், எந்தவொரு சூழ்நிலையாலும் எவ்வளவு முன்னதாகவே தடைப்படுத்தப்படுவதாயினும், பாட்டாளி வர்க்கம் எந்த அளவுக்கு ஒழுங்கமைந்ததாக இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் அதன் மெய்யான ஆதாயங்கள் யாவும் உறுதியுற்று நம்பகவனவையாக ஆகமுடியும்.
கட்சியின் இரண்டாவது காங்கிரசில் பெரும்பான்மையைச் சேர்ந்தோர் பூரணமாக வரையறுத்து வெளியிட விரும்பிய “நிறுவன ஒழுங்கமைப்புச் செய்யுங்கள்” என்னும் கோஷம் இப்பொழுது உடனடியாகச் செயல்படுத்தப்பட்டாக வேண்டும். புதிய நிறுவனங்களை அமைப்பதில் துணிவான முன்முயற்சி காட்டத் தவறுவோமாயின், நாம் முன்னணிப் படையாகச் செயலாற்றும் எல்லா எண்ணங்களையும் ஆதாரமற்றவையாகக் கைவிட வேண்டியதுதான். சாதிக்கப்பட்ட எல்லைகளிலும், கமிட்டிகள், கோஷ்டிகள், கூட்டங்கள் குழுக்கள் ஆகியவற்றின் வடிவங்களிலும் வரம்புகளிலும் நாம் செயலற்று நின்று விடுவோமாயின், நமது ஆற்றல் இன்மையை நிரூபித்துக்கொண்டவர்களாகவே ஆவோம். நமது உதவி இல்லாமலேயே, திட்டவட்டமான எந்த வேலைத் திட்டமோ குறிக்கோளோ இல்லாமலேயே, நிகழ்ச்சிகளின் நிர்பந்தத்தின் விளைவாகவே எங்கும் ஆயிரக்கணக்கில் தற்போது குழுக்கள் உதித்தெழுகின்றன. இந்தக் குழுக்களில் சாத்தியமான அளவுக்கு அதிகமானவற்றுடன் நேரடித் தொடர்புகள் கொண்டு இத்தொடர்புகளைப் பலப்படுத்திச் செல்வதும், இக்குழுக்களுக்கு துணைபுரிவதும், தமது அறிவையும் அனுபவத்தையும் அவற்றுக்கு அளித்து உதவுவதும், தமது புரட்சிகர முன்முயற்சியைக் கொண்டு அவற்றை ஊக்குவிப்பதும் சமூக - ஜனநாயகவாதிகளுக்கு உரிய பணியாதல் வேண்டும். இப்படிப்பட்ட குழுக்களில் சமூக - ஜனநாயகம் அல்லாதவை என்பதாய்ப் பறைசாற்றிக் கொள்பவற்றைத் தவிர்த்து ஏனையவை யாவும் நேரடியாகக் கட்சியில் சேர்ந்து கொள்ளட்டும். அல்லது கட்சியுடன் தம்மை அணிசேர்த்துக் கொள்ளட்டும். பின்னது நடைபெறுகையில் நாம் அவற்றை நமது வேலைத்திட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றோ, அவசியம் நம்முடன் நிறுவன உறவுகள்கொள்ள வேண்டும் என்றோ கோரக்கூடாது. எதிர்ப்புணர்வும் சர்வதேசப் புரட்சிகர சமூக - ஜனநாயக இலட்சியத்தின்பால் அனுதாபமும் போதுமானவையாகும். சமூக - ஜனநாயகவாதிகள் முனைப்புடன் இவற்றினிடையே வேலை செய்யும் பட்சத்தில் நிகழ்ச்சிகளின் நிர்ப்பந்தத்தின் விளைவினால் அனுதாபிகளாகிய இந்தக் குழுவினர் முதலில் சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் ஜனநாயகத் துணையாளர்களாகவும், பிற்பாடு திடநம்பிக்கை கொண்ட உறுப்பினராகவும்மாற்றப்படுவார்.
பெருந்திரளான மக்கள் இருக்கிறார்கள், ஆனால் நமக்கு மக்கள் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. இந்த முரண்பாடான நிலை சமூக - ஜனநாயகத்தின் நிறுவன வாழ்வுக்கும் நிறுவனத் தேவைகளுக்கும் இடையிலான முரண்பாடுகளை நீண்ட காலமாகப் பிரதிபலித்து வந்துள்ளது.
என்றையும் விட இன்று இந்த முரண்பாடு மிகவும் பட்டவர்த்தனமாகியுள்ளது. புதிய சக்திகளுக்கான உணர்ச்சிமிக்க வேண்டுகோள்களையும், நிறுவனங்களில் ஆட்களுக்குப் பற்றாக்குறை ஆகிவிட்டது என்ற முறையீடுகளையும் எல்லாப் பக்கங்களிலிருந்தும் அடிக்கடி கேட்கிறோம். அதே பொழுது எல்லா இடங்களிலிருந்தும் எண்ணற்றோர் முன்வருகிறார்கள். குறிப்பாகத் தொழிலாளி வர்க்கத்தினரிடையே இளம் சக்திகள் வளர்ந்து பெருகுவதைக் காண்கிறோம். இத்தகைய சூழ்நிலையில் ஆட்களுக்குப் பற்றாக்குறை என்பதாய் முறையிடும் நடைமுறை ஒழுங்கமைப்பாளர், 1793இல் மாபெரும் பிரெஞ்சுப் புரட்சியின் உச்ச கட்டத்தில் பிரான்சில் முழு மனிதர்கள் இல்லை, குள்ளர்கள்தான் இருக்கிறார்கள் என்று எழுதிய ரொலான் அம்மையார் இலக்காகிய அதே மன மயக்கத்தால் பீடிக்கப்பட்டவரே ஆவார். இவ்விதம் பேசுவோர் சிறு விவரங்களால் மூழ்கடிக்கப்பட்டு பேருருவைப் பார்க்கத் தவறுவோரே ஆவார். நிகழ்ச்சிகளால் தாக்குண்டு பார்வை இழந்துவிடுகிறோம் என்பதை இவர்கள் ஒத்துக் கொள்கிறார்கள். மனத்திலும் செயலிலும் நிகழ்ச்சிகளை கண்காணிப்பது புரட்சியாளர்களாகிய இவர்கள் அல்ல.அல்ல; நிகழ்ச்சிகள் இவர்களைக் கண்காணிக்கின்றன. திக்குமுக்காடிவிழும்படிச் செய்கின்றன. இத்தகைய ஒழுங்கமைப்பாளர்கள் ஓய்வெடுத்துதூங்கிவிடுவதுதான் நல்லது. இளம் சக்திகளுக்கு இவர்கள் இடமளித்துவிலகிக்கொள்ள வேண்டும். இளைஞர்கள் அனுபவமில்லாத குறைபாட்டைஆர்வத் துடிப்பால் அடிக்கடி சரி செய்து கொண்டுவிடுகின்றனர்.
மக்களுக்குப் பஞ்சமில்லை, புரட்சிகர ரஷ்யாவில் இன்று போல என்றுமே இத்தனை பெருந்திரளானோர் இருந்ததில்லை. புரட்சிகர வர்க்கம் எதுவும் இன்று ரஷ்யப் பாட்டாளி வர்க்கத்தைப் போல், தற்காலிகக் கூட்டாளிகளையும் உணர்வுப்பூர்வமான நண்பர்களையும் தம்மை அறியாமலே ஆதரவாளர்களாய் இருப்போரையும் இவ்வளவு ஏராளமாய்ப் பெற்றிருந்ததில்லை பெரும் பெரும் திரளான மக்கள் இருக்கின்றனர், நாம்செய்ய வேண்டியதெல்லாம், வால்பிடித்துப்பின் செல்லும் கருத்துக்களிலிருந்தும் புத்திமதிகளிலிருந்தும் விடுபட்டு வெளிவந்து, முன்முயற்சிக்கும் பிரயத்தனத்துக்கும் மற்றும் "திட்டங்களுக்கும்" "ஏற்பாடுகளுக்கும்"முழு வீச்சு அளித்து, இவ்விதம் மாபெரும் புரட்சிகரவர்க்கத்தின் சிறந்த பிரதிநிதிகளாகச் செயல்படத் தகுதியுடையவர்களேஎன்று காட்டுவதுதான். இதைச் செய்வோமாயின் ரஷ்யாவின் பாட்டாளிவர்க்கம் மாபெரும் ரஷ்யப் புரட்சி முழுவதையும், அது இப்புரட்சியைத்துவக்கி வைத்த அதே வீரத்துடன் நடத்தி முடிக்கும். (1905, மார்ச் 8, அன்றுவ்பெரியோத் இதழ் 9, என்ற பத்திரிக்கையில் லெனினால் எழுதப்பட்டகட்டுரை) இக் கட்டுரையில் சொல்லப்பட்டவற்றை விளக்கி நாம்தெரிந்துகொள்ள வேண்டியவற்றை அடுத்த இதழில் தொடர்ச்சியாகப்பார்ப்போம், தொடரும். தேன்மொழி.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
No comments:
Post a Comment