நமது நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட்டுகள் நடவடிக்கைகளை தொகுத்தால் கீழ்காணும் சில தலைப்பில் அடக்கலாம்.
1). பாராளுமன்ற பங்கேற்பா எதிர்பா?
2). குறுங்குழுவாதம் தீரா நோய்
3). திட்ட பிரச்சினை பற்றி
4). பொதுவுடமையாளர்களின் பணி
5). அரசு பற்றி பிரச்சினையில் பாராமுகம்
6). தத்துவத்தில் மார்க்சியமா கலவை வாதமா?
7). உழைக்கும் மக்களின் நிலை என்ன? அவர்களை பற்றிய மதிப்பீடு என்ன?
8). பொதுவுடமையாளர்கள் எதன் அடிப்படையில் ஒன்று படுவது?
9).தேசிய இனப்பிரச்சினை குறித்து
10). சாதி பிரச்சினை குறித்து
இதனை புரிந்துக் கொள்ள நமக்கான ஒரு கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதனை லெனின் மிகத்தெளிவாக விளக்கியுள்ளார் அப்படிபட்ட ஒரு பாட்டாளி வர்க்க கட்சி வேண்டும்.
இந்த கட்சி பணியினை செய்து முடிக்க மார்க்சியம் என்ற தத்துவத்தை இறுக்க பிடித்திருக்க வேண்டும்.
இங்கு நம் முன் பல்வேறு பிரச்சினை உள்ளன அவை நம் சமூக பிரச்சினையே அதற்கான காரணம் நமது அரசதிகாரத்தால் கட்டி காக்கப்படுகிறது. ஆக நமக்கான அரசை உருக்க வேண்டும் அப்பொழுதே பல்வேறு பிரச்சினைக்கு காரணமான சூத்திரதாரியை அறிவதோடு இல்லாதொழிக்க நமது ஆசான்கள் போதித்துள்ளனர்.
பாட்டாளி வர்க்கமானது சுரண்டலை எதிர்க்கக்கூடிய வர்க்கமாகும், மேலும் அதற்கு பிறரை சுரண்ட வேண்டிய அவசியமில்லை, கம்யூனிஸ்டுக் கட்சியானது பாட்டாளி வர்க்கத்தை பிரதிநித்துவப்படுத்தும் கட்சியாகும். ஆகவே கம்யூனிஸ்டுக் கட்சியானது புரட்சியில் வெற்றிபெற்ற பின்பு கறாரான கட்டுப்பாட்டைக் கொண்ட கம்யூனிஸ்டுக் கட்சியையும் பாட்டாளிவர்க்க அரசையும் கட்டியமைத்து உழைக்கும் மக்களைத் திரட்டி சுரண்டலுக்கும் ஊழலுக்கும் எதிராக தொடர்ந்து பாடுபடுவதன் மூலம் கட்சிக்குள் உள்ள சீரழிந்த பேர் வழிகளையும், ஊழல்வாதிகளையும், எதிர்த்துப் போராடி களையெடுக்கும். இவற்றின் மூலம் கட்சி மற்றும் பாட்டாளி வர்க்க அரசின் தூய்மையைப் பாதுகாக்கும். இத்தகைய கட்சி வரலாற்றில் உருவானதில்லை என்கிறார் லியுஷாவோகி. எனினும் பரந்துபட்ட மக்களின் ஆதரவோடு புரட்சி வெற்றி பெற்றிருந்தாலும் கம்யூனிஸ்டுகள் வெற்றிக்குப் பின்பும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும், அவர்களது விழிப்புணர்வை கூர்மையாக்கிக் கொள்ள தொடர்ந்து கம்யூனிஸ்டுகள் சுய-வளர்ப்புப் பயிற்சியில் ஈடுபட்டு மாறுகின்ற சூழல்களைப் புரிந்து கொண்டு அவ்வப்போது தமது கடமைகளை உணர வேண்டும். மேலும் அவ்வப்போது ஏற்படும் மாற்றத்தின் காரணமாக கம்யூனிஸ்டுக் கட்சிக்குள்ளே இருப்பவர்களில் சிலர் கம்யூனிச கொள்கைகளையும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் அவசியத்தையும் கைவிட்டுவிட்டு மார்க்சியத்துக்கு எதிரான முதலாளித்துவப் பாதைக்கு மாறிச் செல்பவர்களையும் அவர்களது திருத்தல்வாதக் கொள்கைகளையும் இனம் கண்டு முறியடிக்கும் வலிமையை கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்களும் மக்களும் வளர்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறான வலிமையை ரஷ்ய, சீனக் கம்யூனிஸ்டுக் கட்சி உறுப்பினர்களும் மக்களும் வளர்த்துக் கொள்ள தவறியதால்தான் அந்தக் கட்சிக்குள் குருஷேவ், டெங்சியோபிங் போன்ற சுயநலவாதத் தலைவர்கள் அந்த கட்சியை குட்டி முதலாளித்துவ அதிகாரவர்க்க கட்சியாக மாற்றினார்கள். மேலும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஒழித்துவிட்டு அதிகார வர்க்கத்தின் ஆட்சியாக மாற்றினார்கள். ஆகவே கம்யூனிஸ்டுகளும் வெற்றிபெற்ற பின்பு சுயநலவாதிகளாக மாறுவதற்கு வாய்ப்புள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். இங்கேயும் கூட புரட்சிக்காக ஓர் அடிகூட எடுத்துவைக்காத நிலையில் கம்யூனிச அமைப்புக்குள் சுயநலவாதிகள் காணப்படுகிறார்கள். இத்தகைய சுயநலவாதிகளை கட்டுப்படுத்தவும், ஒழித்துக்கட்டவும் கம்யூனிஸ்டுகளாகிய நாம் ஒவ்வொருவரும் சுய - வளர்ப்பு பயிற்சியில் ஈடுபட்டு நமது மார்க்சிய லெனினிய அறிவையும் அதனை பயன்படுத்தும் திறமையையும் வளர்த்துக் கொண்டு நாம் ஒன்றுபட்டு போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. இதற்கு மாறாக கம்யூனிஸ்டுகள் ஒவ்வொருவரும் தமது அறிவையும் திறமையையும் வளர்த்துக் கொள்ளவில்லை என்றால் கம்யூனிச அமைப்பிற்குள் சுயநலவாதிகளின் வளர்ச்சியையும் அவர்களே கட்சியை கைப்பற்றிக் கொள்வதையும் தடுக்க முடியாது.
ரஷ்யாவில் கம்யூனிஸ்டுகள் புரட்சியை நடத்துவதற்கு முன்பு அங்குள்ளபெரும்பாலான உழைக்கும் மக்கள் வறுமையில் பல்வேறுவிதமான துன்பங்களை அனுபவித்து வாழ்ந்து வந்தனர். அவர்களது இந்த இழிவான வாழ்நிலையிலிருந்து மீண்டு வரவேண்டும் என்று விரும்பினர்.வாழ்நிலைதான் சிந்தனைக்கு அடிப்படை என்ற இயக்கவியல் பொருள்முதல்வாதத் தத்துவ விளக்கத்தின் அடிப்படையில் ரஷ்யஉழைக்கும் மக்களின் இழிவான வாழ்நிலை காரணமாகவே அந்த இழிவைப் போக்குவதற்கு விரும்பினர். இதனை புரிந்துகொண்ட ரஷ்ய போல்ஷ்விக்கட்சியானது ரஷ்ய மக்கள் சந்திக்கும் பிரச்சனைக்கு காரணமான ஜாரின்எதேச்சாகார ஆட்சியை ஒழித்துவிட்டு பாட்டாளிகள் மற்றும் விவசாயிகளின் ஆட்சியை உருவாக்க வேண்டும் என்ற கொள்கையைமக்களிடம் பரப்பினார்கள். இழிவான வாழ்நிலையை ஒழிக்க விரும்பியமக்கள் போல்ஷ்விக்குகளின் கொள்கை யானது அவர்களது விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு பொருத்தமான கொள்கை என்று அதனை ஏற்றுக் கொண்டு போல்ஷ்விக்குகளின் பின்னால் அணிதிரண்டனர்.
போல்ஷ்விக்குகளின் தலைமையில் போராடி தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசை உருவாக்கினார்கள். மக்களால் போல்ஷ்விக்குகளின் தலைமையில் உருவான சோவியத்து அரசு சிறிது காலத்துக்குள்ளேயே மக்களின் வாழ்க்கை துன்பங்களிலிருந்து மீட்டெடுத்து அவர்களுக்கு வளமான வாழ்க்கை கிடைக்கச் செய்தது.
அதனால் இங்குள்ள பிரச்சினைக்கு அடிப்படையான அரசு அதன் அதிகாரம் பற்றி சற்று தேடுவோமே!
இதுவரை மனித சமூகம் கடந்து வந்த பாதையில் அரசு தோன்றிய பிறகு அதன் அதிகாரம் கொண்டு உலகையே ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து சுரண்ட எத்தனிக்கும் ஏகாதிபத்தியம் ஆகட்டும் அன்று நாடு பிடிக்க ஓடிய கூட்டம் ஆகட்டும் தங்களின் வாளின் வலிமையினால் எல்லோரையும் அடக்கி ஒடுக்கி சுரண்டினர். ஆக தேவை அரசதிகாரம்தான் அதனைதான் நமது ஆசான்கள் மிகத் தெளிவாக பேசியுள்ளனர்.
அரசை பற்றி பேசுவதுதான் அரசியல் எந்த அரசு உழைக்கும் மக்களுக்கு விடுதலை தரும் என்று நமது ஆசான்கள் பேசியுள்ளதை செவி மடுத்துள்ளீரா? அல்லது அதற்காக குரல் கொடுத்துள்ளீரா? உள்ள அமைப்பு முறையின் ஓர் அங்கமான பாராளுமன்ற அமைப்புமுறை மீறி என்ன பேசுகின்றீர்கள்?
இதுகாறும் மனிதகுலம் கடந்த பாதை வேட்டை, கால்நடை ஆகிய சமூக அமைப்புகளைவிட வேளாண் சமூக அமைப்பு அடிப்படையில் வேறுபட்டது என்பதையும், முந்தைய சமூகங்களில் காணப்படாத அளவிற்கு இச்சமூக அமைப்பில் தனிஉடமையும், வர்க்க வேறுபாடும் தோன்றிவிட்டன என்பதையும் வர்க்கங்களுக்கிடையிலான உழைப்பும், ஓய்வும் வேறுபட்டன என்பதையும் அறிகிறோம்.
முதன்முதலாக வர்க்கங்களின் தோற்றத்தோடு அரசின் தோற்றத்தையும் ஒப்பிட்டு விளக்கியவர்கள் மார்க்சும், எங்கெல்சும் ஆவர். “வர்க்க பேதங்களைக் கட்டுப்பாட்டலும், தன் ஆதிக்கத்திலும் வைத்திருக்கவேண்டிய தேவையில் கருவான அரசு, வர்க்க மோதல்களில் செழுமை பெற்று உருவானது. பொருளாதார மேலாதிக்கமும் அதனால் அதிக வலிமையும் பெற்ற வகுப்பார் அரசியல் நிலையிலும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கி, உடமைகளையும் கருவிகளையும் கையகப்படுத்தி வர்க்கச்சுரண்டலைத் தோற்றுவித்தனர்.” எனும் எங்கெல்சின் கருத்து வர்க்க மோதலால் அடக்குமுறை கருவியாக உருவான அரசின் தோற்றத்தை விளக்குகிறது.
வர்க்கங்கள் நிலவுகின்ற வரையில் தூய ஜனநாயகம் பற்றி பேச முடியாது. வர்க்க ஜனநாயகம் பற்றி மட்டுமே பேச முடியும். தூய ஜனநாயகம் என்பது உழைக்கும் ஏழை எளிய மக்களை ஏய்க்கும் மிதவாதிகள் பயன்படுத்தும் ஒரு பொய்யான தொடராகும் என்கிறார் லெனின். ஆக இங்குள்ள இடதுசாரி கட்சிகள் குறித்தும் அதன் மார்க்சிய விலகலை குறித்தும் தனிக்கட்டுரை எழுத இடமில்லை அதனை, சமரசங்கள் குறித்த கட்டுரையும் அரசும் புரட்சியும் கட்டுரை நிறைவு செய்யும். இனி வரும் விவாதங்களை ஒட்டியே அடுத்த கட்டுரை எழுதும் அதே வேளையில் நடைமுறை விசியங்கள் பற்றிய எழுத்தாளர்களின் கருத்தின் மீது தங்களின் விமர்சனம் கோருகிறது இலக்கு தோழர்களே.
உழைக்கும் மற்றும் ஏழை எளிய சுரண்டப்படும் மக்கள் அனைவரையும் அவர்களின் முன்னணி படையான பாட்டாளி வர்க்கத்தின் கீழ் ஒன்று திரட்டுகிறது. பழைய முதலாளித்துவ பொறியமைவு அதிகார வர்க்கம் செல்வம் முதலாளித்துவ கல்வி சமுதாய உறவுகள் மற்றும் தனி உடமைகள் அனைத்தையும் அனைத்து மக்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. இங்கே உழைக்கும் ஏழை எளிய பாட்டாளி வர்க்கம் பெரும்பான்மையினர் அவர்களின் பத்திரிகை முதல் எல்லா சுதந்திரமும் இன்று வரை ஒடுக்கப்பட்ட இந்த மக்களின் கோணத்தில் இருந்து பிரச்சனை முன்வைக்கப்படுகிறது. பாட்டாளி வர்க்க ஜனநாயகமானது ஏழை எளிய உழைக்கும் மக்களின் ஜனநாயகமாக இருக்கிறது.இங்குள்ள ஜனநாயகமானது உழைக்கும் ஏழை எளிய பெரும்பான்மையான மக்களின் ஜனநாயமாகும். ஆக பொதுவாக வர்க்கங்கள் பற்றி பேசாமல் வெறும் ஜனநாயகம் என்பது வர்க்கத்தை மறந்து விட்டு வர்கத்துக்கு அப்பால் ஜனநாயகத்தை தூக்கி பிடிப்பதாகும்.
".... தொழிலாளி வர்க்கம் தனது வளர்ச்சிப் போக்கிலே பழைய முதலாளித்துவச் சமுதாயத்துக்குப் பதிலாக, எல்லா வர்க்கங்களையும் அவற்றின் பகைமையும் விலக்கிவிடும் ஒரு சங்கத்தை அமைக்கும், முறையாகச் சொல்லக்கூடிய அரசியல் அதிகாரம் இனி இராது,ஏனெனில் அரசியல் அதிகாரம் என்பது முதலாளித்துவச் சமுதாயத்திலுள்ள வர்க்கப்பகைமையின் அதிகாரப்பூர்வமான வெளிப் பாடாகும்."
வர்க்கங்கள் ஒழிக்கப்பட்டதும் அரசு மறைந்துவிடும் என்ற கருத்தின் இந்தப் பொதுவிளக்கத்தை, இதற்குச் சில மாதங்களுக்குப் பிற்பாடு - துல்லியமாய்க் கூறுவதெனில் 1847 நவம்பரில் - மார்க்சும் எங்கெல்சும் எழுதிய கம்யூனிஸ்டு அறிக்கையில் காணப்படும் விளக்கத்துடன் ஒப்பிடுதல் பயனுடையது.
"... பாட்டாளி வர்க்கத்தினது வளர்ச்சியின் மிகப் பொதுவான கட்டங்களை விவரித்த நாம்,தற்கால சமுதாயத்தில் ஏறக்குறைய திரை மறைவில் நடைபெறும் உள்நாட்டுப் போரை, அது பகிரங்கப் புரட்சியாய் வெடித்து, முதலாளித்துவ வர்க்கம் பலாத்காரமாய் வீழ்த்தப்படுவதன்மூலம் பாட்டாளி வர்க்க ஆட்சி அதிகாரத்துக்கு அடித்தளம் இடப்படும் நிலை வரையில் உருவரை தீட்டிக் காட்டினோம்...."
"..... பாட்டாளி வர்க்கத்தை ஆளும் வர்க்கத்தின் நிலைக்கு உயரச் செய்வதுதான், ஜனநாயகத்துக்கான போரில் வெற்றி ஈட்டுவதுதான், தொழிலாளி வர்க்கம் நடத்தும் புரட்சியின் முதலாவதுபடி என்பதை மேலே கண்டோம்...."
ஏகாதிபத்திய சூழ்நிலைமைகளில் முதலாளித்துவத்தின் முரண்பாடுகள் மிகவும் தீவிரம் அடைந்து இருந்தபோது, தொழிலாளி வர்க்கப் புரட்சி என்பது உடனடியாக நடைமுறைப்பிரச்சனையாக ஆகிவிட்டபோது, தொழிலாளி வர்க்கத்தைப் புரட்சிக்கு ஆயத்தப்படுத்தும் காலம் முடிவுற்று, ஒரு புதிய காலம் தொடங்கி விட்டபோது, அதாவது முதலாளியத்தை நேரடியாகத் தாக்க வேண்டிய காலம் தொடங்கிவிட்டபோது, லெனினியம் வளர்ந்து உருவம் பெற்றது.
சாதி பிரச்சினை குறித்து ஒருவர் கேட்கும் கேள்விக்கு பதிலாக
சாதியானது
இந்திய சமூக வளச்சிப் போக்கில் இயற்கையாய் கருக்கொண்டு சூழலுக்கேற்ப உருக்கொண்டு, உபரியை உறிஞ்சும் சுரண்டல் வடிவமாக உருபெற்றபோது
அதற்கு கோட்பாட்டு நியாயம் வழங்கி சாதியத்தின் இருதலுக்கு பங்காற்றியது சனாதனமதமான பிராமணியமே. அதன் கொடிய அம்சம் சுரண்டல் வடிவில் அடங்கியுள்ளது. பிறப்பின் அடிப்படையில் தொழில்களை ஒழுங்கமைப்பதில்
இச்சுரண்டல் அடங்கியுள்ளது.சாதியானது
இன்றும் இந்திய சமூகத்தில் ஏதோ ஒரு வடிவத்தில் வாழ்ந்துக் கொண்டுள்ளது.
இந்தியாவில் நவீனமயமாதல், வளர்ச்சி, ஜனநாயகம், நிர்வாகம் என்று என்னதான் பேசிக் கொண்டிருந்தாலும்
இன்றும் நம் சமூகத்தில் சமத்துவமின்மையும் சமூக விலக்குகளும்
பெருமளவு தொடரத்தான் செய்கிறது. சிலர் குறிபிடுவதுபோல்
சாதியானது மனித சமூகம் தோன்றிய போதே தோன்றிய
ஒன்றல்ல. அதேபோல் சாதியின் ஆதிக்கம் நிலவுடமை சமுகத்தில் கோலோச்சினாலும் அதன்
தன்மைகள் இன்றும் அன்றுபோல் இல்லை. இன்று நாம் வாழும் சமூகத்தில் சாதி ஏன் உயிர்
வாழ்கிறது என்பதனையும். அம்பேத்கார், பெரியார் போன்ற பல
தலைவர்கள் சமூக வளர்ச்சி முன்னணியில் இருந்தவர்கள் சாதி ஒழிப்பிற்கு போராடினார்கள்
என்பதோடு அவர்கள் எந்தளவிற்கு அதில் வெற்றி கண்டனர் என்பதனையும், உண்மையில்
சமூகத்தில் இந்த ஏற்றதாழ்வான நிலைக்கு முடிவுகட்டவும்
இந்த சாதி தீண்டாமை கொடுமைக்கு தீர்வு காணப்படவும்
அதற்கான தீர்வை நோக்கிய போராட்டங்கள், நமக்கான படிப்பினைகளோடு மார்க்சிய
கண்ணோட்டத்தில் சாத்தியமானவற்றை
விளக்கியுள்ளேன்.
அம்பேத்கரின் வழிவந்தவர்களில் முக்கியமானவரான கெய்க்வாட், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு,நிலப்பகிர்வுக் கோரிக்கையே முக்கியமானது என்று எடுத்துக்கொண்டு போராடினார்.
பெருந்திரளான தாழ்த்தப்பட்ட மக்களை இந்தப் போராட்டம் கவ்விப்பிடித்துக் கவர்ந்தாலும்,
மற்ற 'தலித்' தலைவர்களின் பார்வை வேறுவிதமாக இருந்தது. இந்தப் போராட்டம் கம்யூனிஸ்ட்
வழிப்பட்டது என்று கூறி, கெய்க்வாட்டின் போராட்டத்தினை ஏற்கவில்லை. அம்பேத்கரின்
செயல்திட்டத்தில் இத்தகைய போராட்டங்களுக்கு இடமில்லை என்றும், அறிவித்தார்கள்.
அரசியல் சட்டப்படியான ஆட்சியில், பொதுமக்களின் போராட்டம் என்பது அராஜகவழி.
எனவே நாடாளுமன்ற ஜனநாயகத்தில் இதற்கு இடமளிக்க கூடாது என்ற அம்பேத்கரின்
கருத்தை அவர்கள் உயர்த்திப்பிடித்தார்கள்.
வர்க்க விடுதலை என்பது புரட்சிகர கோட்பாடு புரட்சிகர நடைமுறை புரட்சிகர திட்டம் முக்கியமாக
சோசலிச அரசியல் பொருளாதார கட்டுமானத்தோடு தொடர்புடையது. இவை அனைத்தும் சுரண்டலிலிருந்து ஒடுக்குமுறையிலிருந்து விடுதலையாகும். அதற்கான நீண்ட பணி செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment