பொருள்முதல்வாதமும் அனுபவவாத விமர்சனமும் ஓர் தேடல்-

 நாம் மார்க்சிய லெனினியத்தை பேசும் பொழுது இங்குள்ள மார்க்சியவாதிகளே இந்திய தத்துவங்கள் பற்றி பேச மறுக்கும் அல்லது மயக்கத்திலிருக்கும் பகுதியை பேசியே ஆக வேண்டும் ஏனெனில் பலர் இந்திய தத்துவங்கள் பற்றி தேடியும் எழுதியும் கொண்டுள்ளனர் அதனை வரவேற்கும் நான் அந்த ஆய்வுகளின் நோக்கம் சமூகத்தில் புறையோடி போயிருக்கும் அழுக்குகளை நீக்கி மனித சமூக விடுதலைக்காக அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்பதே. அதனால்தான் இதனூடாக சில.

தத்துவஞானம் என்றால் என்ன?

இயற்கையை எதிர்த்து மனிதன் நடத்திய போராட்டத்தில் உருவானதே தத்துவஞானம். இயற்கை, மனிதன், சமுதாயம், சிந்தனை ஆகியவற்றின் உறவுகளையும் அதன் தன்மைகளையும் ஆராய்வதே தத்துவஞானம்.

எனவே தத்துவ சர்ச்சையை அறிவுஜீவிகளிடம் விட்டு விட்டு சாதாரண மக்கள் ஓதுங்கிவிட முடியாது. இன்று வளர்ந்துள்ள விஞ்ஞான உலகில். உலகின் மூலைமுடிக்கெல்லாம கிடக்கும் தகவல்களை நாம் பெற்று ஆய்வு செய்துகொள்ள முடியும். அதற்கு அன்றைய இலக்கியங்களும் இதிகாசங்களும் துணையாகிறது.

தத்துவம் தோன்றிய வரலாற்றுப் பின்னணி

மனித சமுதாயத்தின் வளர்ச்சியின் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் தனிச் சொத்துடமை ஏற்பட்டது. உற்பத்திக் கருவிகளின் வளரச்சியின் காரணமாக உழைப்பவனும் அடுத்தவன் உழைப்பில் வாழ்பவன் என்ற உழைப்பு பிரிவினை தோன்றியது. மனித சமுதாயத்தில் வர்க்கப் பிரிவினை தோன்றிய பின்னணியில்தான் தத்துவமும் தோன்றியது. இரண்டு வர்க்கங்களின் போராட்டத்தை ஆம் வர்க்க பகைமையை தனிக்க அதற்கான ஒழுங்குமுறை உருவாக்க ஆளும்(ஆதிக்க) வர்க்க சித்தாந்திகளால் உருவாக்கப்பட்டதே அன்றைய தத்துவங்கள். அதே நேரத்தில் கலகக்குரல் ஒலிக்காமல் இல்லை அன்று இதனை எதிர்த்த தத்துவங்களும் தோன்றிதான் உள்ளது.

விஞ்ஞானத்தில் இயற்பியல், வேதியியல், கணிதவியல், பொருளாதாரம் போன்றே சமூகவியல் வரலாற்றியல் போன்ற பொதுக் கோட்பாட்டுகள் போன்றே தத்துவமும் அந்த குறிப்பிட்ட நிலையில் உலக பார்வையே தத்துவம் எனலாம்.

சிந்தனைக்கும் வாழ்வுக்கும் உள்ள உறவு என்ன என்ற கேள்வி, தத்துவஞானம் தோன்றிய காலத்திலிருந்தே எழுப்பப்பட்டு வரும் கேள்வி. இக்கேள்விகளுக்கு விடையளித்த தத்துவஞானிகளில் இரு பிரிவினர். ஒரு பிரிவினர் பொருள் இயற்கை பொருளியல் வாழ்க்கை இவைகளே முதன்மையான இவைகளின் பிரதிபலிப்பே உணர்வென்றனர். இன்னொறு பிரிவினர் ஆன்மா, சிந்தனைதான் முதன்மையானது அவற்றின் பிரதிபலிப்பே பொருள், இயற்கை, வாழ்க்கை என்றனர்.

முதல் பிரிவினர் பொருள்முதல்வாதி என்றும் இரண்டாம் பிரிவினர் கருத்துமுதல்வாதி என்றும் பிரிக்கப்பட்டனர்.

தத்துவமற்ற நடைமுறை குருட்டுத்தனமானது: நடைமுறையற்ற தத்துவம் மலட்டுத்தனமானது”- என்றார் தோழர் ஜே.வி. ஸ்டாலின்.

மார்க்சுக்கு முந்திய 2000 ஆண்டுகளில் கருத்துமுதல்வாதத்தை எதிர்த்து எண்ணற்றோர் பலியாயினர் மதத்திற்கும் மரபுகளுக்கும் எதிராகப் பேசி இளைஞர்களைத் தூண்டிவிடுவதாகக் குற்றம் சாட்டி சாக்ரடீசை நஞ்சூட்டிக் கொன்றனர்.

பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது சூரியன் பூமியை அல்ல என்ற கோபர்னிக்கசின் கண்டுபிடிப்பை ஆதரித்ததற்காக கலீலியோவை சிறையிலடைத்துக் கொடுமைப்படுத்தினர். கோப்பர்னிக்கசின் கருத்தே சரியானது என்று கூறிய காரணத்திற்காக ஜார்டானோ ப்ரூனோ என்ற மதபோதகர் 1800-ஆம் ஆண்டில் கம்பத்தில் கட்டி வைத்து எரிக்கப்பட்டார். பூமி சூரியனைச் சுற்றி வலம் வருகிறது என்று கண்டுபிடித்த விஞ்ஞானி கோப்பர்னிகஸ் தன் கண்டுபிடிப்புகளை வெளியிட அஞ்சினார். 1543-ஆம் ஆண்டு வாழ்நாள் இறுதியில் மரணப்படுக்கையில் கிடந்த சமயத்தில்தான் அவற்றை வெளியிடும் தைரியம் அவருக்கு வந்தது.

போப் இரண்டாம் ஜான்பால் இவ்வாறு மதபீடங்கள் விஞ்ஞானிகளை 16-ஆம் நூற்றாண்டில் கொடுமைப்படுத்தியது தவறு என கி.பி. 2001 துவக்கத்தில் ஏற்றுக் கொண்டார். இந்தியாவில் லோகாயதத்தின் பிதாமகன் சார்வாகரை உயிரோடு எரித்தார்கள். புத்த மடாலயங்களும், சமணப் பள்ளிகளும் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் கழுவேற்றப்பட்டனர். தலைகள் அறுக்கப்பட்டன. பதினெண் சித்தர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

பொருள்முதல்வாத, விஞ்ஞான நூல்கள் எரிக்கப்பட்ட நலந்தா பல்கலைக்கழகம் நான்குமுறை தீக்கிரையாக்கப்பட்டது. விக்ரமசீலா இடித்துத் தகர்க்கப்பட்டது. பொருள்முதல்வாதம் பேசினால் இங்கு கொலைதான் நடப்பாக இருந்தது. புத்தரும் மகாவீரரும் அரசர்களாதலால் பொருள்முதல்வாதம் பேசிய அவர்கள் உயிர்தப்பினர். மகத்தான கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய டார்வினும் ஐன்ஸ்டீனும் தங்கள் மதங்களிடம் சரணடைந்தனர். மார்க்ஸ் தனது மூலதனம் நூலை டார்வினுக்குச் சமர்ப்பிக்க விரும்பினார். ஆனால் அதை டார்வின் ஏற்க மறுத்தார். அது தனது குடும்பத்தாரின் கிறிஸ்தவ மத உணர்வுகளைப் புண்படுத்தி விடும் என்று கூறி மறுத்தார்.

விஞ்ஞானத்தின் முக்கியமான கண்டுபிடிப்புகள் புரட்சிகரமான மாற்றங்களை, அடிக்கடி தோற்றுவிக்கின்றன. இதனால் பழைய கண்டுபிடிப்புகளை சரி செய்யவோ. மறு பரிசீலனை செய்யவோ நேருகிறது. இயற்கை விஞ்ஞானம் அவ்வளவு ஆழ்ந்த புரட்சிக் கொந்தளிப்புக்கு ஆளாகி வருகிறது. அது தத்துவவியல் கருத்தோட்டமின்றி இருக்கவே முடியாது - என்றார் லெனின், பல்வேறு விஞ்ஞானங்களின் அறிவு பரவலாகி உறுதி பெற்று, ஆழமுறுகிறது. அதேபோல் தத்துவஞானமும் செழுமையுற்றுச் செம்மை பெற வேண்டும். இவ்வாறு தத்துவ ஞானம் வளர விஞ்ஞானங்கள் துணை புரிகின்றன. மனிதன் என்ன செய்ய வேண்டும். என்ன செய்யக் கூடாது என்பதற்கு விடை காண தனது மனவுலகை மட்டுமே நம்ப வேண்டும் - எதார்த்த உலகை நம்பக் கூடாது என்பது இருத்தலியல் வாதம் (எக்சிஸ்டென்சியலிசம்) ஆகும். இந்தக் கண்ணோட்டத்தை மார்க்சியம் நிராகரிக்கிறது.

இது வரை தத்துவ ஞானிகள் உலகைப் பற்றி விளக்கம் மட்டுமே கூறி வந்தனர். ஆனால் விஷயம் என்னவெனில் உலகை மாற்ற வேண்டும் என்பதுதான் என்கிறார் மார்க்ஸ் மார்க்கக்கு முந்திய தத்துவஞானிகள் உலகின் நுன்பங்களை வியாக்கியானம் செய்தார்கள். அழுது புலம்பினார்கள். ஆனால் மார்க்ஸ்தான் உலகை மாற்றியமைக்கும் தத்துவத்தை உருவாக்கினார்.

நாம் எதை அடைய வேண்டும் - அதற்கு எதார்த்தத்தை எப்படி அணுக வேண்டும். என்ற கேள்விக்கு விடை தருகிறது தத்துவம், வர்க்கங்களாய் பிளவுபட்டுள்ள ஒரு சமூகத்தில், இரண்டு வேறுபட்ட வர்க்க நலன்களை தத்துவம் வெளியிடுகிறது. கருத்துமுதல்வாதத்திற்கும் பொருள்முதல்வாதத்திற்கும் இடையே நடக்கும் போராட்டம் வர்க்கப் போராட்டமாகவே இருந்தது - இன்றும் இருக்கிறது. இந்த எதிரும் புதிருமான இரு போக்குகளில் எந்தப் பக்கம் என்பதில் தத்துவ ஞானத்தின் சார்புநிலை வெளிப்படுகிறது.

தத்துவதிகளின் முன்புள்ள பிரச்சனை என்ன? ஒருபுறத்தில் பொருள்கள்உள்ளன, மறுபுறத்தில் சிந்தனை அல்லது கருத்து இருக்கிறது.இவ்விரண்டுக்கும் இடையிலான உறவை ஆய்வு செய்து முன்வைக்கும்முயற்சியில் தத்துவவாதிகள் இரண்டு முகாம்களாகப் பிரிந்தார்கள்.

ஒருமுகாமைச் சேர்ந்தவர்கள் பொருள்கள்தான் முதன்மையானது கருத்துஎன்பது இரண்டாவது தன்மையானதாகும் என்றனர், இவர்களேபொருள்முதல்வாதிகள் ஆவார்கள். இரண்டாவது வகையினர் கருத்தேமுதன்மையானது என்றும் பொருள் இரண்டாம்பட்சமானது என்றனர்,

இவர்களே கருத்துமுதல்வாதிகள் ஆவார்கள்.உலகில், சரி என்றும் தவறு என்றும் இரண்டு எதிர்மறைகள் இருப்பதுபோல, ஒன்று விஞ்ஞானமாகவும் மற்றொன்று விஞ்ஞானத்தை மறுக்கும்எதிர் மறையாக இருப்பது போலவே தத்துவத்திலும் ஒன்று சரியானஉண்மையான தத்துவமாக பொருள்முதல்வாதம் இருக்கிறது இதற்குநேர்எதிராக பொய்யான மற்றும் தவறான தத்துவமாக கருத்துமுதல்வாதம்இருக்கிறது. இதனை தவிர்த்து மூன்றாவது வகையான தத்துவத்தைபடைப்பதாகச் சொன்னவர்கள் யாரும் மூன்றாவது தத்துவத்தைபடைத்ததில்லை, மாறாக மேலே குறிப்பிட்ட தத்துவத்தில் ஒரு வகையேமூன்றாவது தத்துவமாக படைத்தார்கள். அதில் பெரும்பாலும்கருத்துமுதல்வாத தத்துவத்தையே புதிய முறையில் முன்வைத்து மூன்றாவது தத்துவமாக காட்டினார்கள்.

இந்த வகையில் அனுபவவாத விமர்சர்கள் என்று தங்களைச் சொல்லிக்கொள்ளும் அனுபவவாத தத்துவவாதிகள், அனுபவவாதம் என்ற தத்துவத்தைப் படைத்து, அந்த தத்துவமானது பொருள்முதல்வாத தத்துவத்தையும், கருத்துமுதல்வாதத் தத்துவத்தையும் மறுத்து விஞ்ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட மூன்றாவது வகையான தத்துவம்தான் அனுபவவாதத் தத்துவம் என்று பறைசாட்டிக்கொண்டார்கள். இவர்கள் வெளிப்படையான அகநிலை கருத்துமுதல்வாதிகள் இல்லை. அதாவது இவர்கள் வெளிப்படையாக அகநிலை கருத்துமுதல்வாதத்தை ஆதரிப்பதில்லை. மாறாக விஞ்ஞானத்தை ஏற்றுக்கொள்வதாகவும், அனுபவத்தை ஏற்றுக்கொள்வதாகவும் பாவனை காட்டிக்கொண்டு அனுபவம் என்றால் புலனறிவு என்றும் அந்த புலனறிவு மட்டுமே அனுபவத்துக்கு அடிப்படை என்றும் புலனறிவுக்கும் புறநிலையிலுள்ள பொருள்களுக்கும் இடையிலான உறவை புறக்கணித்துவிட்டு, புறநிலையிலுள்ள பொருள்களின் இருப்பையே மறுத்துவிடுகிறார்கள். இவ்வாறு அனுபவவாத தத்துவவாதிகள்விஞ்ஞானத்தை ஏற்றுக்கொள்வதாக சொல்லிக்கொண்டே விஞ்ஞானத்தை மறுத்துவிடுகிறார்கள். மேலும் இவர்கள் நேரடியாக இல்லாமல் மறைமுகமாக அதாவது சந்தர்ப்பவாதமாக அகநிலை கருத்துமுதல்வாத தத்துவத்தை ஆதரிக்கிறார்கள். இந்த வகையில் இவர்கள் தத்துவத்துறையில் சந்தர்ப்பவாத தத்துவவாதிகளாக இருக்கிறார்கள்.

இவர்களால் முன்வைக்கப்பட்ட அனுபவவாத தத்துவமானது சந்தர்ப்பவாத தத்துவமாகவே இருக்கிறது.

ஒருவர் கருத்துமுதல்வாதத் தத்துவத்தை முன்வைப்பது பிரச்சனைஇல்லை, உதாரணமாக சங்கிகள் கம்யூனிசத்தை எதிர்ப்பது பிரச்சனைஇல்லை. ஏனென்றால் அவர்கள் கம்யூனிசத்துக்கும் மக்களுக்கும் எதிரிகள்என்பது கம்யூனிசத்தை விரும்புபவர்கள் அனைவருக்கும் தெளிவாகவேதெரியும். ஆனால் கம்யூனிசத்தை ஆதரிப்பதாகச் சொல்லிக்கொண்டேகம்யூனிசத்தை சதித்தனமாகவும், தந்திரமாகவும் எதிர்க்கும்சந்தர்ப்பவாதிகள் மிகவும் ஆபத்தானவர்கள் அல்லவா. அது போலவே இந்தஅனுபவவாத தத்துவவாதிகள் பொருள்முதல்வாதத்தையும்கருத்துமுதல்வாதத்தையும் எதிர்ப்பதாகச் சொல்லிக்கொண்டு,பொருள்முதல்வாத தத்துவத்தை எதிர்ப்பதில் உறுதியாக இருந்தார்கள்.

ஆனால் கருத்துமுதல்வாதத்தை எதிர்ப்பது போல நாடகமாடிக்கொண்டு கருத்துமுதல்வாதத்தை ஆதரிக்கும் சந்தர்ப்பவாதிகளாக இருந்தனர். அந்த வகையில் இந்த சந்தர்ப்பாத தத்துவவாதிகள் வெளிப்படையான கருத்துமுதல்வாதிகளைக் காட்டிலும் மிகவும் ஆபத்தானவர்கள் என்று லெனின் உணர்ந்தார். ஆகவேதான் அனுபவவாத தத்துவவாதிகள் என்று சொல்லப்படும் சந்தர்ப்பவாதத் தத்துவவாதிகளை அம்பலப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலேயே பொருள்முதல்வாதமும் அனுபவவாதமும் என்ற நூலை எழுதினார். இந்த நூலில் அகநிலை கருத்துமுதல்வாதத்தை லெனின் எதிர்த்தார் என்பது உண்மைதான் என்றாலும் அது முழு உண்மையில்லை, தத்துவத் துறையில் சந்தர்ப்பவாதிகளையும் அவர்களது சந்தர்ப்பவாத தத்துவத்தையும் அம்பலப்படுத்தினார் என்பதே முழுஉண்மையாகும்.

அனுபவவாத தத்துவவாதிகள் அவர்களது தத்துவத்தை நியாயப்படுத்தி எழுதும்போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக அவர்களதுவாதங்களை முன்வைத்தார்கள். அவர்களின் வாதங்களையே லெனின்முன்வைத்து முன்னுக்குப் பின் முரணாக அவர்கள் வாதம் புரிவதை லெனின் தெளிவாகச் சுட்டிக்காட்டி அனுபவவாத தத்துவவாதிகளின் முகமுடிகளை கிழித்து அவர்களது எழுத்துகளிலிருந்தே அவர்களை லெனின் அம்பலப்படுத்தினார்.

அனுபவவாதம் என்பது வேறு, அனுபவவாத விமர்சனம் வேறு என்று சிலர் கருதுகிறார்கள், ஆனால் அது உண்மையில்லை. தத்துவம் என்ற சொல்லுக்குப் பதிலாக விமர்சனம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார்கள்.

பொருள்முதல்வாதம் என்றாலே பொருள்முதல்வாதத் தத்துவம் என்று நாம் புரிந்துகொள்கிறோம் அல்லவா? அதுபோலவே கருத்துமுதல்வாதம் என்றாலே கருத்துமுதல்வாதத் தத்துவம் என்று புரிந்துகொள்கிறோம் அல்லவா, அதுபோலவே அனுபவவாதம் என்றாலும் அனுபவவாத விமர்சனம் என்றாலும் அனுபவவாத தத்துவம் என்று நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதில் எவ்விதமான குழப்பமும் இல்லை. லெனின் எழுதிய நூலின் நோக்கமே அனுபவவாத தத்துவம் என்பது பொய்யான சந்தர்ப்பவாத தத்துவம்தான் என்ற உண்மையை எடுத்துச் சொல்லி, அனுபவவாத தத்துவத்தை அம்பலப்படுத்துவதுதான் என்ற உண்மையை நாம் புரிந்துகொண்டால் அனுபவவாதம் என்ற சொல்லுக்கும் அனுபவவாத விமர்சனம் என்ற சொல் பற்றியும் குழப்பம் அடையத் தேவையில்லை.

அனுபவவாதம்” “அனுபவவாத விமர்சனம்” ஆகியவை இரண்டும்தனித்தனித் தத்துவப் பள்ளியைச் சேர்ந்தவை, என்கிறார்கள். இரண்டும்வெவ்வேறான தத்துவம் என்று நாம் புரியும்படி சொல்வதற்குப் பதிலாகதனித்தனித் தத்துவப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்று நமக்குப் புரியாதமொழியில் பேசி நம்மைக் குழப்புகிறார்கள். அதென்ன தத்துவப் பள்ளி?தத்துவம் என்று சொன்னால் நம்மால் புரிந்துகொள்ள முடியுமே. நம்மைகுழப்புவதற்கே இவர்கள் புதிய வகையான மொழி நடையில் அவர்களதுகருத்துக்களை முன்வைக்கிறார்கள். அதன் நோக்கம் அவர்களை பெரியஅறிவாளிகளைப் போலக் காட்டிக்கொண்டு நம்மை குழப்புவதுதான்அவர்களது நோக்கமாக இருக்கிறது. பின்நவீனத்துவவாதிகள், அடையாளஅரசியல்வாதிகள் ஆகிய பிழைப்புவாத அறிவாளிகளின் எழுத்து நடைஇதுபோலவே இருப்பதை நாம் காணலாம். இருந்த போதும் இவர்கள்முன்வைக்கும் கருத்து, அனுபவவாதம் என்பதும் அனுபவவாதவிமர்சனமும் வெவ்றான தத்துவம் என்பதுதான். 

முதல் பதிப்பின் முன்னுரையிலிருந்து பக்கம் 21லிருந்து 23 வரை:-(அப்படியே ஆங்கில மூலம் கீழே )

மார்க்சும் எங்கெல்சும் தமது தத்துவஞானக் கருத்துக்களை இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்று பலமுறை அழைத்ததை இவர்கள் அனைவரும் அறியாதவர்களாக இருந்திருக்க முடியாது. ஆயினும் இவர்களெல்லோரும், தமது அரசியல் கருத்துக்களில் கூர்மையான வேறுபாடு இருந்தபோதிலும், இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின்பால் தமது பகைமையில் ஒன்றுபட்டு, அதே போது தத்துவஞானத்தில் தங்களை மார்க்சியவாதிகள் என்று உரிமை கொண்டாடிக் கொள்கிறார்கள்! எங்கெல்சின் இயங்கியல் என்பது "மாயவாதம்" என்கிறார் பெர்மன்

 

எங்கெல்சின் கருத்துக்கள் "பழமையானவையாகிவிட்டன" என்று பஸாரோவ் சர்வசாதாரணமாக குறிப்பிடுகிறார், அது ஒரு வெளிப்படையான உண்மை என்பதுபோல். இவ்வாறாக, "நவீன அறிவுக் கோட்பாடு," "அண்மைய மெய்யியல்" (அல்லது "அண்மைய நேர்க்காட்சிவாதம்"), "நவீன இயற்கை விஞ்ஞானத்தின் மெய்யியல்" அல்லது "இருபதாம் நூற்றாண்டின் இயற்கை விஞ்ஞானத்தின் மெய்யியல்" ஆகியவற்றைப் பெருமையுடன் குறிப்பிடும் நமது துணிச்சலான போர்வீரர்களால் பொருள்முதல்வாதம் மறுக்கப்படுவதையும். அண்மைக்காலக் கோட்பாடுகள் என்று சொல்லப்படுபவை அனைத்தின் ஆதரவுடன், இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை அழிப்பவர்களான இவர்கள் அச்சமின்றி அப்பட்டமான நம்பிக்கை கொள்கையை(Fideism- ஃபிடெயிசம் என்பது அறிவுக்கு பதிலாக நம்பிக்கையை மாற்றும் ஒரு கோட்பாடு, அல்லது பொதுவாக நம்பிக்கைக்கு முக்கியத்துவம் அளிக்கிற கோட்பாடு. -லெனின்) நோக்கிச் செல்கிறார்கள்.

ஆயினும் மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரிடம் அவர்கள் கொண்டிருந்த அணுகுமுறை பற்றிய வெளிப்படையான வரையறை என்று வரும்போது, அவர்களுடைய துணிச்சலும், தங்களுடைய சொந்த நம்பிக்கைகள் மீதான மரியாதையும் உடனடியாக மறைந்து விடுகின்றன. செயலில் - இயக்கவியல் பொருள்முதல்வாதத்தை, அதாவது மார்க்சியத்தை முற்றிலுமாக கைவிடுவது; வார்த்தையில் சொல்வதானால், முடிவற்ற சூழ்ச்சிகள், பிரச்சினையின் சாராம்சத்தைத் தட்டிக்கழிப்பதற்கான முயற்சிகள், அவற்றின் பின்வாங்கலை மூடிமறைப்பதற்கான முயற்சிகள், பொதுவாக பொருள்முதல்வாதத்தின் இடத்தில் ஏதோவொரு பொருள்முதல்வாதம் அல்லது மற்றொன்றை வைப்பது, மற்றும் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸின் எண்ணற்ற பொருள்முதல் பிரகடனங்களை நேரடியாக பகுப்பாய்வு செய்ய தீர்மானகரமாக மறுப்பது. இது ஒரு மார்க்சியவாதி நியாயமாக கூறுவதுபோல். இது உண்மையிலேயே "மண்டியிட்டு நிற்கும் கலகம்"(“mutiny on one’s knees,”-கையாலாத கலகம்) ஆகும், இது வகைமாதிரியான மெய்யியல் திருத்தல்வாதமாகும், ஏனென்றால் திருத்தல்வாதிகள் மட்டுமே மார்க்சியத்தின் அடிப்படைக் கண்ணோட்டங்களில் இருந்து விலகிச் சென்றதன் மூலமும், தாங்கள் கைவிட்ட கண்ணோட்டங்களுடன் வெளிப்படையாகவும், பகிரங்கமாகவும், உறுதியாகவும் மற்றும் தெளிவாகவும்   "கணக்குத் தீர்க்க" அவர்களின் அச்சம் அல்லது இயலாமையின் மூலமாகவும் தமக்கென ஒரு வருந்தத்தக்க அவப்பெயரைப் பெற்றனர். மார்க்சின் சில பழங்கால கருத்துக்களுக்கு எதிராக (உதாரணமாக, மேஹ்ரிங் சில வரலாற்று முன்மொழிவுகளை எதிர்த்தபோது) பழைய மார்க்சியவாதிகள் உச்சரிக்க சந்தர்ப்பம் கிடைத்தபோது, அது எப்போதும் மிகத் துல்லியமாகவும் முழுமையாகவும் செய்யப்பட்டது, அத்தகைய இலக்கியக் கூற்றுகளில் தெளிவற்ற எதையும் யாரும் ஒருபோதும் கண்டதில்லை.

மற்றபடி, மார்க்சிய மெய்யியல் ஆய்வுகளில் உண்மையை ஒத்த ஒரு சொற்றொடர் உள்ளது. இது லூனாசார்ஸ்கியின் சொற்றொடர்: "ஒருவேளை நாம் [அதாவது, ஆய்வுகளில் பங்குபெற்ற எல்லோரும்] வழிதவறிவிட்டோம், ஆனால் நாங்கள் தேடுகிறோம்" (பக். 161). இந்தச் சொற்றொடரின் முதல் பாதியில் முழுமையான உண்மையும், இரண்டாவது பாதி ஒப்பீட்டு உண்மையும் அடங்கியுள்ளன என்பதை இந்நூலில் சூழ்நிலைக்கு ஏற்ப விளக்க முயல்கிறேன். நமது தத்துவவாதிகள் மார்க்சியத்தின் பெயரால் பேசாமல் ஒரு சில "தேடும்" மார்க்சியவாதிகளின் பெயரில் பேசியிருந்தால், அவர்கள் தங்களின் மீதும் மார்க்சியத்தின் மீதும் அதிக மரியாதை காட்டியிருப்பார்கள் என்பதை மட்டுமே இந்த நேரத்தில் நான் குறிப்பிடுவேன்.

என்னைப் பொறுத்தவரை நானும் தத்துவத் துறையில் ஒரு "தேடுபவன்"தான். அதாவது, இந்த விளக்கங்களில் நான் எனக்கு ஏற்படுத்திக் கொண்ட வேலை என்னவென்றால், மார்க்சியப் போர்வையில் இந்த நம்பமுடியாத அளவிற்கு குழப்பமான, தெளிவற்ற, பிற்போக்குத்தனமான ஒன்றை முன்வைக்கும் இவர்களுக்கு எது முட்டுக்கட்டையாக இருந்தது என்பதைக் கண்டுபிடிப்பதே ஆகும்.

1908 இல் சில "மார்க்சியவதிகளும்"

1710 இல் சில கருத்துமுதல்வாதிகளும் பொருள்முதல்வாதத்தை எவ்வாறு மறுத்தனர் (பக்கம் 28 லிருந்து)

தத்துவ நூல்களில் சிறிதளவேனும் பரிச்சயமுள்ள ஒருவருக்கு பொருள்முதல்வாதத்தை மறுப்பதில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபடாத தத்துவத்தின் (அல்லது இறையியல்) சமகால பேராசிரியரை கண்டிப்பாகத் தெரிந்திருக்க வேண்டும். பொருள்முதல்வாதிகளை அவர்கள் ஆயிரம் தடவை மறுத்துள்ளனர். ஆயினும் ஆயிரத்தோரவது தடவையும் தொடர்ந்து மறுத்து வருகிறார்கள். நமது திருத்தல்வாதிகள் அனைவரும் பொருள்முதல்வாதத்தை மறுப்பதில் ஈடுபட்டுள்ளனர், உண்மையில் அவர்கள் பொருள்முதல்வாதியான பிளெக்ஹானோவை  மறுப்பது போலவும், அல்லது பொருள்முதல்வாதி எங்கெல்ஸை அல்லது பொருள்முதல்வாதி ஃபாயர்பாக்கை அல்லது பொருள்முதல்வாதி ஜே. டிட்ஸ்ஜெனின்மறுக்காது போலவும் நடிக்கிறார்கள். மேலும் அவர்கள் "சமீபத்திய" மற்றும் "நவீன" நேர்க்காட்சிவாதம், இயற்கை விஞ்ஞானம் போன்றவற்றின் அடிப்படையில் பொருள்முதல்வாதத்தை மறுதலிக்கிறார்கள்.

மேற்கூறிய நூல்களிலிருந்து மேற்கோள் காட்ட விரும்பும் எவரும் நூற்று கணக்கான மேற்கோள்களைக் காட்ட முடியும் என்றாலும் அவற்றை கூறாமலே, பஸாரோவ், போக்டனோவ், யுஷ்கேவிச், வாலண்டினோவ், செர்னோவ் [வி. செர்னோவ், தத்துவ மற்றும் சமூகவியல் ஆய்வுகள், மாஸ்கோ, 1907) ஆகியோரால் பொருள்முதல்வாதத்தை எதிர்த்துப் போராடி வரும் வாதங்களை நான் குறிப்பிடுகிறேன். நூலாசிரியர் அவெனேரியஸின் தீவிர ஆதரவாளரும், பஸாரோவ் அண்ட் குழுவை போலவே இயக்கவியல் பொருள்முதல்வாதத்தின் எதிரியும் ஆவார்] மற்றும் பிற மாக்கியர்கள்.

இந்த பிந்தைய வார்த்தையை நான் முழுவதும் "அனுபவ-விமர்சகர்" என்பதற்கு ஒத்த சொல்லாகப் பயன்படுத்துவேன், ஏனென்றால் இது சுருக்கமாகவும் எளிமையாகவும் உள்ளது, மேலும் ரஷ்ய வழகாற்றில் ஏற்கனவே அங்கீகரிக்கப் பெற்றுள்ளது. எர்னஸ்ட் மாக் இன்று அனுபவத் திறனாய்வின் மிகவும் பிரபலமான பிரதிநிதியாக இருக்கிறார் என்பது தத்துவ இலக்கியங்களில் உலகளவில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

பொருள்முதல்வாதிகள்,சிந்திக்க முடியாத, அறியாத,”தானாக இருக்கும் பொருளை” "அனுபவத்திற்கு வெளியே உள்ள பொருளை" மற்றும் நமது அறிவுக்கு வெளியே, சிந்திக்க முடியாத மற்றும் அறிய முடியாத ஒன்றை —ஏற்றுக்கொள்கின்றனர். "அனுபவதின்" எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒன்று இருப்பதை ஒப்புக்கொள்வதன் மூலம் அவர்கள் உண்மையான மாயாவாதத்திற்குள் நழுவிவிடுகிறார்கள். பருப்பொருள், நமது புலன்களின் மீது செயல்படுவதன் மூலம், உணர்வுகளை உருவாக்குகிறது என்று அவர்கள் கூறும்போது, பொருள்முதல்வாதிகள் "அறியப்படாத" சூன்யத்தை தங்கள் அடிப்படையாக எடுத்துக்கொள்கிறார்கள்; ஏனெனில், நமது உணர்வுகள் ஒன்றே அறிவின் ஊற்றுக்கண் என்று அவர்களே அறிவிக்கவில்லையா? பொருள்முதல்வாதிகள் "கான்ட்டியனிசத்திற்குள்" நழுவிச் செல்கிறார்கள் (பிளெக்ஹானோவ், "தங்களுக்குள்ளேயே" உள்ள விஷயங்கள், அதாவது, நமது நனவுக்கு வெளியே உள்ள விஷயங்கள் இருப்பதை அங்கீகரிப்பதன் மூலம்);

அவர்கள் உலகத்தை "இரட்டிப்பாக்குகிறார்கள்" மற்றும் "இருமைவாதத்தை" போதிக்கிறார்கள், ஏனென்றால் பொருள்முதல்வாதிகள் தோற்றத்திற்கு அப்பால் தானாகவே பொருள் இருக்கிறது என்று கருதுகிறார்கள்; உடனடி புலன் தரவுகளுக்கு அப்பால் வேறு ஏதோ இருக்கிறது, ஏதோ ஒரு "சிலை", ஒரு முழுமையான, , "இயக்க மறுப்பியல் தத்துவத்தின்"மூலம், மதத்தின் இரட்டிப்பு (பர்சரோவ் சொல்வது போல், "புனித விஷயம்",).என்று அவர்கள் கூறுகிறார்கள்.

பொருள்முதல்வாதத்திற்கு எதிராக மாக்கியர்கள் முன்வைத்த வாதங்கள் இவை, மேற்கூறிய எழுத்தாளர்களால் வெவ்வேறு சுரங்களில் மீண்டும் மீண்டும் கூறப்படுகின்றன.

இந்த வாதங்கள் புதியவையா என்பதையும், அவை உண்மையிலேயே "கான்ட்டியனிசத்திற்குள் தவறிவிட்ட" ஒரே ஒரு ரஷ்ய பொருள்முதல்வாதிக்கு எதிராக இயக்கப்பட்டவையா என்பதையும் சோதிப்பதற்காக.


No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்