தோழர்களே நாம் இயக்கவியல் பொருள்முதல்வாதிகள் சமூக இயக்கத்தை வரலாற்று பொருள்முதல்வாத கண்ணோட்டத்தோடு அணுகும் திறன் படைத்தவைர்கள். சமூகத்தில் பல பிரச்சினை உள்ளன அதன் ஒவ்வொரு பிரச்சினைக்கும் அடிப்படை இந்த சமூக அமைப்புதான் என்ற தெளிவு வேண்டும்.
அதற்கான அறிவு நமக்கு இல்லையேல் நாம் எப்படி மார்க்சியவாதியாக முடியும் தோழர்களே?
மார்க்சியத்தை அறிந்தவர்கள் கற்று தேர்ந்தவர்கள்தான் மார்க்சியவாதியாக முடியும் அதாவது ஒரு மருத்துவனோ அல்லது எஞ்ஜினியரோ அவர்களின் கல்விக்கு பிறகான நடைமுறையில் சாதிக்கும் பொழுதே அவர்கள் உண்மையான மருத்துவன் தொழிற்துறை வல்லுனராக இருப்பது போல்... சமூக விஞ்ஞானம் ஆம் நம் சமூக இயக்கத்தை கற்று தேர்பவனே கம்யூனிஸ்ட் அதனை விடுத்து சமூகத்தில் உள்ள சில பிரச்சினைகள் மட்டுமே பிரச்சினையாக பார்த்து ஒட்டு மொத்த பிரச்சினைக்கு காரணமான சமூக இயக்கத்தை புரிந்துக் கொள்ளாதவர்கள் எப்படி கம்யூனிஸ்ட் ஆவர் தோழர்களே?
அதற்கான அறிவு நமக்கு இல்லையேல் நாம் எப்படி மார்க்சியவாதியாக முடியும் தோழர்களே?
நம் சமூகத்தில் சாதி பிரச்சினை, தேசிய இனப்பிரச்சினை, மொழிப்பிரச்சினை, பெண் ஒடுக்குமுறை, சிறுபான்மையினர் ஒடுக்குமுறை இன்னும் பல்வேறு வித ஒடுக்குமுறை இந்த வர்க்க சமூகத்தில் நிகழ்ந்துக் கொண்டுதான் உள்ளது. தனித்தனியான பிரச்சினைக்கு தனித்தனியான தீர்வல்ல. இந்த ஒட்டுமொத்த பிரச்சினைக்கும் காரணம் நாம் வாழும் சமூக அமைப்புதான். அதில் எவ்வகையில் நம்மை நிர்வகிக்க இந்த அதிகார வர்க்கம் நினைக்கிறோத அதனை தன் வலிமையான அதிகார பலத்தால் புகுத்துகிறது. அதற்கான அறிவு நமக்கு இல்லையேல் நாம் எப்படி மார்க்சியவாதியாக முடியும் தோழர்களே? முதலில் சில பின்னர் சாதி பிரச்சினை பார்ப்போம். நான் சாதிய இன்றைய இருப்பும் அன்றைய தோற்றம் அறிய பல நூல்கள் தெடி எழுத பயன்பட்டத்தை நேரம் உள்ள பொழுது எழுதுகிறேன் தோழர்களே.
இவர்கள் முதலில் மார்க்சிய ஆசான்கள் காட்டியுள்ள வழிமுறைகளை முழுமையாக உள்வாங்கவில்லை. அடுத்து ஒரு புரட்சிகர கட்சி புரட்சிக்கான பணியில் செய்ய வேண்டிய பணி இவை என்பதனையும் மறந்து விட்டனர். இங்கு ஆளும் வர்க்க கட்சிக்கு பின் அணி சேர்ந்து புரட்சி பேசும் இவர்களை என்ன சொல்ல? ஆக இவர்கள் முதலில் மார்க்சிய ஆசான் களை சற்று கற்று தேறுங்கள் என்பேன் தோழர்களே....
தேசிய இன பிரச்சனையானது வரலாற்று ரீதியில் மூவகையாக தீர்க்கப்பட்டுள்ளது இதனை பற்றி மார்க்சிய ஆசான் ஸ்டாலின் தொகுப்பு நூல் தொகுப்பு 5ல் காண்க.
அவரின் வரையறைபடி தேசிய இன பிரச்சனையானது வரலாற்று ரீதியில் மூவகையாக தீர்க்கப்பட்டுள்ளது என்றும் இம்மூன்று கட்டங்களிலும் பொதுவாக ஒரு விஷயம் காணப்படுகிறது. ஜனநாயகமற்ற ஆட்சிமுறை நிலவுவதால்தான் தேசிய இனப்பிரச்சனை எழுகிறது. ஆகவே அரசை ஜனநாயக ரீதியில் சீரமைப்பைதில் அதாவது ஜனநாயகப் புரட்சியின் வெற்றியில்தான் இப்பிரச்சனையின் தீர்வு அடங்கியுள்ளது. தேசிய இனப் பிரச்சனையை புரட்சியின் வெற்றிப் பிரச்சனையிலிருந்து தனித்துப்பார்க்காமல் அப்பிரச்சனையிலிருந்து பிரிக்க முடியாத தொடர்புடையதாக புரட்சியின் பொதுவான பிரச்சனையின் பகுதியாக பார்க்க வேண்டும். விரிவாக ஆசான் விளக்கியுள்ளார்.
தேசிய இன பிரச்சனை என்றால் என்ன? அது ஏன் எழுகிறது என பார்க்கும் போது. ஒரு தேசிய இனத்தின் பொருளாதார வாழ்வு, மொழி, கலாச்சாரம் இவற்றின் தங்குதடையற்ற வளர்ச்சி அனுமதிக்கப்படவில்லையெனில் அங்கு தேசிய இன பிரச்சனை எழுகிறது. ஒரு நாட்டின் ஆளும் வர்க்கம் அங்கு ஜனநாயகத்தை அனுமதிக்கவில்லையெனில், ஜனநாயகமற்ற அரசமைப்பைக் கொண்டு சுயேச்சையான முதலாளித்துவ வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருக்கும்போது அந்நாட்டில் தேசிய இன ரீதியில் தெளிவாக வரையறுக்கப்பட்ட நிலப்பரப்புகளும் இருக்குமேயானால் அப்பொழுது அங்கு நிலவுகின்ற ஜனநாயகமற்ற ஆட்சிமுறையானது அத்தேசிய இனங்களின் சுயேச்சையான வளர்ச்சிக்கு விலங்கிடுகிறது; அதன் மூலம் அப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கே விலங்கிடுகிறது. அப்போது தேசிய இன ஒடுக்குமுறையும் அதனை எதிர்த்து தேசிய இக்கங்களும் தோன்றுகின்றன. இம்முரண்பாட்டையே தேசிய இன பிரச்சனை என்கிறோம். எனவே இம்முரண்பாட்டிற்கு அடிப்படையாக தீர்க்கமான பொருளாதார காரணிகள் இருப்பதைப் பார்க்கமுடியும். வளரும் உற்பத்தி சக்திகளுக்கு உகந்த உற்பத்தி உறவுகள் நிலவுகின்றனவா இல்லையா, அந்நாட்டின் அரசமைப்பு முறை உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு இடையுறாக இருக்கின்றதா இல்லையா என்ற விஷயங்கள் இப்பிரச்சனை தோன்றுவதற்கு அடிப்படையாக விளங்குகின்றன.
தேசம், தேசிய இனப்பிரச்சனை
ஸ்டாலின் வரையறைப்படி, "ஒரு தேசம் என்பது ஒரு பொதுவான மொழி, பொதுவான வாழும் பகுதி, பொருளாதார வாழ்வு மற்றும் மன இயல்பு ஆகிய எல்லா அம்சங்களும் ஒருங்கே அமையப்பெற்ற வரலாற்று ரீதியாக உருவாகிய நிலையான மக்கள் சமூகம்". இது மனித குல வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட வரலாற்றுக் கால கட்டத்தைச் சேர்ந்த வகையினம் - அதாவது முதலாளித்துவமும் சரக்கு உற்பத்தியும் தோன்றியபின்தான் தேசங்கள் தோன்றின. அவற்றின் வளர்ச்சியோடு சேர்ந்தே வளர்ந்தன.
ஒரே அரசின் கீழ் உள்ள பல தேசிய இனங்கள் அதே அரசின் கீழ் வாழ்வதா, பிரிந்துசென்று தனியரசு அமைத்துக் கொள்வதா என அந்தந்த இனத்து மக்கள் தாமாகவே முடிவெடுக்கும் உரிமையிது. ஒரு தேசிய இனம் ஒரு அரசிலிருந்து பிரிந்து செல்ல விரும்பினால் அவ்வாறு பிரிந்து செலவதற்கு அதற்கு சுதந்திரம் இருக்க வேண்டும் என்ற ஜனநாயக உரிமையிது. சுயநிர்ணய உரிமை என்றால் பிரிந்து செல்லும் உரிமையே. பல இனங்கள் ஒரே அரசின் கீழ் வாழ்வதால் அங்கு பிரிந்து செல்லும் உரிமை நிலவும் போதுதான் இன சமத்துவத்தை ஏற்படுத்த முடியும். இத்தகைய இன சமத்துவம் என்ற இடைக்கட்டத்தின் மூலம்தான் தேசங்களின் பரிபூரண ஐக்கியத்தை நோக்கி முன்னேறமுடியும். அனைத்து இனங்களின் சமத்துவத்திற்காகப் போராடுவது முதலாளி வர்க்கத்தின் நோக்கமல்ல. அது தனது 'தேசிய உரிமைகளைப் பற்றி மட்டுமே கவலைப்படும். பாட்டாளிவர்க்கம் மட்டுமே அனைத்து இனங்களின் சமத்துவத்தை, முரண்பாடற்ற ஜனநாயகத்தை நோக்கமாகக் கொண்டது. எந்த அரசின் கீழ் இருப்பது என்பது மக்களின் விருப்பங்களின்படி தீர்மானிக்கபடுவதாகவும் விரும்பினால் பிரிந்து போகவும் உரிமை இருக்கக்கூடிய நிலையில்தான் தேசியஒடுக்குமுறைகளை ஒழிப்பதற்கான வாய்ப்புகள் யதார்த்தமாகின்றன. அத்தகைய ஜனநாயக ரீதியில் அமையப்பெற்ற அரசு நிறுவப்படுவது ஜனநாயக புரட்சியை பூர்த்தி செய்து சோசலிசத்திற்கு முன்னேறுவதற்கு கூட முன்னிபந்தனையாகும். ஆகவே பாட்டாளிவர்க்கம் புரட்சிக்கு முன்பு மட்டுமல்ல. புரட்சிக்கு பின்பும் சோசலிசத்தின் கீழும்கூட சுயநிர்ணய உரிமையை உயர்த்திப் பிடிக்க வேண்டும்; இனசமத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் அத்துடன் இது ஏகாதிபத்திய சகப்தமாகியிருப்பதால், பழைய வகைப்பட்ட உலக முதலாளித்துவ ஜனநாயக புரட்சிக்காலம் ஏற்கனவே முடிந்துவிட்டு உலகப் பாட்டாளிவர்க்க புரட்சிக்காலம் தொடங்கிவிட்ட படியால் தேசிய இனப் பிரச்சனை உலக பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் நடைபெறும் புரட்சிகளின் பகுதியாக ஆகிவிட்டது.
இதனை முழுமையாக உள்வாங்க அரசு பற்றியும் இன்றைய ஏகாதிபத்திய தன்மை பற்றியும் தெளிவும் நமக்கான போராட்ட களத்தை அமைக்க திறனும் வேண்டும்.
அடுத்த பகுதிக்கு போவோம் தாய் மொழியான தமிழ் மொழிகான போராட்டம்
தமிழை முழுமையாக ஆட்சிமொழியாக, பயிற்றுமொழியாக மாற்றுவதற்கு எந்த ஒரு கட்டத்திலும் முயற்சிசெய்யப்படவில்லை. மாறாக, ஆங்கிலத்தின் ஆதிக்கம் தொடர்வதற்காகத்தான் இங்குள்ள திராவிடக் கட்சிகள் அரும்பாடுபட்டன.
கட்டாய ஆட்சிமொழியாக ஆங்கிலத்தையும் இந்தியையும் தேசிய இனங்களின் மீது திணிக்கிறது. மாநில ஆட்சிகளும் மாநில அளவிலான தரகுமுதலாளியக் கட்சிகளும் கட்டாய ஆட்சிமொழியாக ஆங்கிலமே இருக்கவேண்டும் என வலியுறுத்தின. இனச் சமத்துவத்தையும், மொழிச் சமத்துவத்தையும் மறுத்து, மைய அரசு செயல்படுத்திவரும் தேசிய இன ஒடுக்கு முறைகளை ஏற்றுக் கொண்டே மாநில ஆட்சிக்கு அதிக அதிகாரம் கோருவதோடு தம்மைக் குறுக்கிக் கொண்டன. தமிழகத்திலும் இதுதான் நிலை.
இங்கு தோழர்கள் என்ன பேசுகின்றனர் அவர்களுக்கே தெரியும்!!!!
அதற்கான அறிவு நமக்கு இல்லையேல் நாம் எப்படி மார்க்சியவாதியாக முடியும் தோழர்களே?
இந்தியாவில் அரசு பற்றிய மார்க்சிய அறிவில்லாதவர்கள்தான் மார்க்சிய அரசியல்வாதிகளாக இங்கே வலம் வருகிறார்கள். இவர்கள் உண்மையில் மார்க்சிய அரசியல்வாதிகள் இல்லை. மாறாக இவர்கள் பிற்போக்கு முதலாளித்துவ அரசியல்வாதிகளைப் போன்ற ஒரு வகையான அரசியல்வாதிகளே ஆவார்கள். ஏனெனில் இவர்கள் எப்போதும் மார்க்சியம் சொல்வதைப் போல் பாட்டாளி வர்க்க அரசைப் பற்றி சிந்திக்கவோ அத்தகைய அரசை உருவாக்குவதற்காக நடைமுறையில் செயல்படவோ மாட்டார்கள். இதற்கு மாறாக சட்டமன்றம், பாராளுமன்றத்தையே சுற்றி சுற்றி வருவார்கள். ஆகவே தோழர்களே நாம் மீண்டும் மீண்டும் அரசு பற்றிய மார்க்சிய கோட்பாடுகளை படிக்க வேண்டும், விவாதிக்க வேண்டும், இந்த பாராளுமன்ற ஆட்சிக்கு பதிலாக நமக்குத் தேவையான அரசு எப்படி இருக்க வேண்டும் என்று சிந்தித்து அது பற்றி மீண்டும் மீண்டும் விவாதிக்க வேண்டும். அரசு பற்றிய கொள்கையை மேலும் மேலும் வளர்த்துக்கொள்ள முயற்சிப்பவர்களால் பல்வேறு வகையான பிரச்சனைகளை தீர்ப்பதற்கான கொள்கை முடிவெடுப்பதில் ஒன்றுபட முடியும். மக்கள் சந்திக்கும் எந்தப் பிரச்சனையாயினும் அரசின் மூலமே தீர்க்க முடியும். ஆகவே அரசானது மக்களின் விருப்பத்தை நிறைவேற்றவும் மக்களால் கண்காணிக்கப்பட்டு கட்டுப்படுத்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும். அத்தகைய அரசின் மூலமே மக்களின் எல்லாவிதமான பிரச்சனைகளையும் தீர்க்க முடியும். அதற்கான அரசு உழைக்கும் மக்களுக்கு வேண்டும் அதனை பற்றி பேசுவோரே மார்க்சியவாதி.
மனித சமூகம் உயிர் வாழ மற்றும் வளர்ச்சியடைய வேண்டுமானால், அதற்கு உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அதற்கு மனிதர்கள் உற்பத்தியில் ஈடுபடவேண்டும். ஆகவே மனித சமூகத்தின் வரலாற்றை புரிந்து கொண்டு சமூகத்தை மாற்றியமைப்பதற்கு நமது ஆய்வானது உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும் என்று நமக்கு மார்க்சிய சமூக விஞ்ஞானம் போதிக்கிறது. இவ்வளவு விரிவாக விளக்குவதன் நோக்கம் நம் சமூகத்தில் உள்ள ஏற்றதாழ்வான வர்க்க அமைப்பே சாதியின் இருப்பிற்கு காரணமாக உள்ளது. அதனை புரிந்து, மாற்ற மார்க்சிய அறிவை பெற வேண்டும். மார்க்சிய போதனையை நாம் உள்வாங்கிக் கொள்ள வேண்டும்.
மனிதர்கள்
உற்பத்தியில் ஈடுபடும்போது உற்பத்திச் சாதனங்களின் துணைக் கொண்டே
உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள். மனித சமூகம் உற்பத்தியில் ஈடுபடலான
தொடக்கக் காலங்களில் இந்த
உற்பத்திச்சாதனங்கள் சமூகத்தின் பொதுச்சொத்தாக இருந்தது. அதனால் மக்களிடையே வர்க்கப் பிரிவுகளோ ஏற்றத்தாழ்வுகளோ இல்லை. உற்பத்தியின்
வளர்ச்சிப் போக்கில் பல்வேறு வேலைப் பிரிவினைகள் தோன்றியது.
அதன் தொடர்ச்சியாக மனிதர்களிடையே உடமையுள்ளவர்கள் மற்றும் உடமையற்றவர்கள் உருவாகினார்கள்.
மேலும் சமூகத்தின் தேவைக்கு அதிகமான உற்பத்தி நடந்தது. இந்த உபரியையும் உற்பத்திச்
சாதனங்களையும் திறமையானவர்கள் கைப்பற்றிக் கொண்டு பலரை உடமையற்றவர்களாக மாற்றியதோடு
அவர்களை சுரண்டியும்
வாழ ஆரம்பித்தனர். இப்படித்தான் வர்க்கங்கள் தோன்றின. இதன் பின்பு சமூக
உற்பத்தியானது மனிதர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட இந்த
வர்க்கங்களுக்கு இடையிலான உறவின் அடிப்படையிலேயே நடக்கிறது. இதனைத் தான்
உற்பத்தி உறவு
என்கிறோம். இந்த உற்பத்தி உறவுதான் சமூகத்தின்
அடித்தளமாக இருக்கிறது. இதனை ஆய்வு செய்து மாற்றியமைப்பதன் மூலமே சமூகத்தை
மாற்றியமைக்க முடியும். வர்க்க சமூகத்தில்
பல்வேறு உடமை வர்க்கப் பிரிவுகள் இருந்தாலும் எந்த வர்க்கங்களின் கைகளில்
அரசியல் அதிகாரம் இருக்கிறதோ அந்த வர்க்கங்கள்தான் அந்த சமூகத்தின் ஆளும்வர்க்கமாகும். இந்த
அதிகாரத்தை பயன் படுத்தியே
ஆளும்வர்க்கம் சமூகத்திலுள்ள
பிற அனைத்து வர்க்கங்களையும் கட்டுப்படுத்தி சுரண்டி உற்பத்தி நடத்துகிறது. இந்த
வகையில் தனது சுரண்டலை நியாயப்படுத்தவும் தொடர்ந்து சுரண்டலை நடத்துவதற்கான
கருத்துக்களை உருவாக்கி அதனை மக்களிடம் பிரச்சாரம் செய்வதற்கான அரசியல் கட்சிகள்
மற்றும் சாதி மத நிறுவனங்களையும் கலை இலக்கியங்களையும் மற்றும் வன்முறை கருவியான
அரசையும் உருவாக்குகிறார்கள். இவ்வாறு அடித்தளத்திலுள்ள தனது உற்பத்தி உறவை
பாதுகாக்கவும் பலப்படுத்துவுமான இந்த அமைப்புகளையும்
சித்தாந்த நிறுவனங்களையும் மேல்தளம் (மேல்கட்டுமானம்) என்கிறோம். மேலும்
சுருக்கமாக அறிவோம். மனிதகுலம் தோன்றியதிலிருந்து இதுவரை 5 விதமான
சமுக அமைப்பு தோன்றியுள்ளது.
தமிழக வரலாற்றிலும் 7 ஆம் நூற்றாண்டுகளில் சோழர் ஆட்சிக் காலத்தில் பரவலாக புகுத்தப்பட்ட நிலமானிய முறை இங்கு முதன்முதலாக சாதி அமைப்பை உருவாக்கி திடப்படுத்தியது. மேற்கண்ட பொருளியல் அடித்தளத்தின் மாற்றமும், வளர்ச்சியும் அதற்கான மேற்கட்டுமானத்தை உருவாக்கியது என்பதை பார்க்க முடியும். இந்த வரலாற்று ஆய்வுகள் சமூக வடிவத்தை, சாதியைப் பற்றிய சரியான ஆய்வுகளை வைக்க உதவியது. அதாவது “பரம்பரைத் தொழில் பிரிவினை அடிப்படையில் சாதிமுறை தன் நிலைப்பிற்கு ஆதாரம் கொண்டிருக்கிறது. சாதி மற்றும் தீண்டாமையின் சமூக வேர்கள் நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையில் அடங்கியிருக்கிறது. சாதியும், தீண்டாமையும் நிலைத்து நிற்பதற்கு உத்தரவாதம் செய்யும் பிற அம்சங்களான அகமணமுறை, பரம்பரை சடங்குகள் ஆகியவற்றிற்கு நிலப்பிரபுத்துவ பண்பாடே காரணம்.
எங்கெல்ஸ் கூறியது, “மத்திய காலத்தின் உலகக் கண்ணோட்டம் பெரும்பான்மையாக இறையியல் கண்ணோட்டம்தான். ஒரு பொது எதிரியான சராசன்களுக்கு மாற்றாக ஐரோப்பிய நாடுகளை கிருஸ்துவம் ஒருமைப்படுத்தியது. கத்தோலிக்கம் இதைச் செய்தது. கருத்தளவில் மட்டும் இந்த இணைப்பு நின்று விடவில்லை. உண்மையிலேயே இந்த இணைப்பு இருந்தது. போப்பாண்டவரை மையமாகக் கொண்டு நிலப்பிரபுத்துவ ரீதியில் அமைக்கப்பட்டிருந்த தேவாலய அமைப்பில் அது காணப்பட்டது. நிலஉடமையாளர் என்ற முறையில் உள்ள தேவாலயம் பல்வேறு நாடுகளுக்கிடையிலான இணைப்பாக விளங்கியது. மடாதிபதிகளின் அமைப்பு, பிரபுத்துவ அரசாங்க முறைக்கு ஒரு மத அங்கீகாரத்தை அளித்தது. மேலும் மத ஆச்சாரிகள் மட்டுமே படித்த வர்க்கத்தினர். எல்லா சிந்தனைகளுக்கும் தேவாலயம் ஆரம்பமாகவும், அடிப்படையாகவும் விளங்கியது”. பண்டைய இந்திய சமூக அமைப்புமுறை உருவாக்கத்தில் இந்து மதமும், வர்ணமும் ஆற்றிய பங்கையும், மத்திய கால இந்தியாவில் இந்துமதமும், சாதியும் ஆற்றிய பங்கையும் அதாவது மேற்கட்டுமானம் ஆற்றிய பங்கை தெளிவாக பார்க்க முடியும். உற்பத்திமுறையிலும், உற்பத்தி உறவுகளிலும் ஏற்படும் மாற்றம்தான் அதன் மேற்கட்டுமானத்தில் மாற்றத்தை கொண்டுவருகிறது. “சாதி
என்பதை
நிலஉடமை
உற்பத்திமுறை
அல்லது
முதலாளித்துவத்துக்கு
முந்தைய
உற்பத்தி
முறை
கொண்ட
ஒரு
சமூகத்தின்
மேல்
கட்டுமானமாக” மார்க்சிய அறிஞர் டி.டி. கோசாம்பி கருதுகிறார்.
சமூகத்தின் வளர்ச்சி போக்கில் ஒரு கட்டத்தில் தோன்றிய உழைப்பு பிரிவினை அதனில் தோன்றிய உழைப்பை சுரண்டி வாழும் ஒட்டுண்ணி கூட்டம். அதன் தேவையில் தோன்றிய ஒரு சமூக நிகழ்முறையானவை சாதி. உலகில் பல நாடுகளில் தோன்றி மறைந்து இல்லாமல் ஒழிந்துவிட்ட பின்னரும். இங்கே உழைப்பு சுரண்டலின் வடிவான சாதி ஒட்டுண்ணிதனம் ஆளுவோரின் தேவைக்காக தொடரத்தான் செய்கிறது.
சாதி அமைப்பு என்பது நன்கு வரையறுக்கப்பட்ட ஒரு நிறுவனம் அல்ல, இது ஒரே ஒற்றை வரலாற்று நிகழ்வில் உருவாகவில்லை. ஆனால் வெவ்வேறு சமூக தோற்றங்களைக் கொண்ட வளர்ச்சி போக்கில் ஒரு ஒழுங்கற்ற அமைப்பாகும், அவை அனைத்தும் காலப்போக்கில் கலந்தன. மனிதர்கள் ஆரம்பத்தில் அனைவரும் சிறிய குழுக்களிலோ அல்லது பழங்குடியினரிராகவோ இருந்துள்ளனர், மற்ற குழுக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கவில்லை. அந்த வடிவம் வட்டார வழக்கில் குல பெயர்கள் சாதியில் திரிந்து நிற்பதை காணலாம்.சாதியை குறித்து முதலாளிய ஆய்வாளர்கள் ஆங்கிலேய கள ஆய்வுகளை மேற்கொண்ட அறிஞர்களில் பலர் சாதியை உற்பத்தி முறையோடு தொடர்புபடுத்தி காணவில்லை. இந்தியாவில் சாதி குறித்த பல விவரங்களை ஏகாதிபத்திய ஆட்சி அதிகாரிகள் திரட்டிக் கொண்டிருந்த அதே காலகட்டத்திலேயே இந்திய சமூக பொருளாதார நிகழ்வுகளை ஆராய்ந்த காரல் மார்க்ஸ் உற்பத்தி முறையோடு தொடர்புபடுத்தி காண்கிறார் (கோ.கேசவனின் சாதியம் நூலில்) சாதியத்தை இந்திய கிராமங்களில் அடிப்படை அம்சங்களை பற்றி மார்க்ஸ் கருத்துரைக்கையில் சில சாதிகளின் கைவினைஞர்களும் சேவையாள்களும் ஒட்டுமொத்தமாக கிராமத்துக்கு தாங்கள் ஆற்றும் கடமைகளுக்காக பண்டமாக அல்லது நிலஒதுக்கீடுகளாக பெரும்மரபுவழியிலான உரிமைகளை குறிப்பிட்டு அவர்களின் வேலை பிரிவினை பற்றி குறிப்பிடுகின்றார் மார்க்ஸ் மூலதனம் முதல் தொகுதியில் பக்கம் 331(ஆங்கில பதிப்பை குறிப்பிட்டுள்ளார் கோ.கேசவன்).
சாதியின் தோற்றதில் அரசின் பங்கு தன் அதிகாரத்தை காக்க தனக்கான கோட்பாட்டு நியமங்களை பின்பற்றி தன் தேவையை ஒட்டி அடக்கி ஒடுக்கியும் அவர்களை அரவணைத்தும் சென்றதை வரலாற்றில் காணலாம். அதில் அரச அதிகார மையங்களில் இருந்தோர் உயர்ந்தும், அவர்களுக்கு சேவகம் செய்வோர் தாழ்ந்தும் போயினர். இந்த சமூக வளர்ச்சியில் அரசதிகாரம் ஆம் அரசின் பங்கு மிக முக்கியமானது. அரசின்றி ஓர் அசைவும் இல்லை. அதன் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதே சமூகம். ஆகையால் சமூக பிரிவான சாதியினை கட்டிக்காப்பதில் அரசின் முக்கிய பணி உள்ளது. ஆசிய பாணி உற்பத்தி முறையால்தான் சாதி உள்ளது அல்லது இந்தியாவில் சாதி உள்ளது அதனால் சாதியை ஒழிக்காமல் புரட்சிக்கு அணி சேர முடியாது என்பதெல்லாம் மார்க்சியம் அல்ல அடையாள அரசியலே....
இன்னுமும் பின்னர்.....
No comments:
Post a Comment