உற்பத்தி சக்திகளை சிதரடிக்கும் மதவாதம்

வட இந்திய கும்பமேளா மற்றும் மத நிறுவனங்களின் செயலை வெறும் பார்பனியமாக பார்க்கும் தமிழக பகுதறிவாதிகள் இதற்கான சமூக அறிவை பெற்றார்களா தெரியவில்லை?
நேற்று (11-02-2025) திருவண்ணாமலையில் இலட்ச கணக்கில் கூடியதும் இதே பகுத்தறிவு பேசுபவர்கள் மண்ணில்தான்.
அப்படியெனும் பொழுது இந்த மத நிறுவனங்கள் பின் ஒன்றினையும் ஏதுமற்ற மக்கள் தொடங்கி வசதி வாய்ப்புகளை தேடி அழைந்து திரிவோர் வரை ஏதோ வகையில் இந்த சமூக மத அமைப்பு பின் அணி திரள்வதை காண்கிறோம்.
சற்று பார்ப்போம் சமூக விஞ்ஞான மார்க்சியம் என்ன சொல்கிறது?

நிலவுடமை சமூக அமைப்பில் நிலம்தான் பொருளாதார அடிதளம். அச் சமூக உற்பத்தி உறவானது அதன் அடிப்படையிலான உற்பத்தி சக்திகளும்- உற்பத்தி கருவிகளும் நிலவுடமை சமூக தேவையை பூர்த்தி செய்வதாக இருந்தது, அதற்கான கோட்பாடு நியமங்களை மத குருமார்களும் மத நிறுவனங்களும் உருவாக்கி வழி நடத்தியது. அதனை ஒழுங்கு படுத்தி நடைமுறை படுத்தும் வேலையை அரசின் அரசன் செய்தான். ஆக நிலவுடமையின் உச்சாணி கொம்பான அரசமைப்பு அதன் கருத்தியலான பண்பாடுகளையும் அதன் சடங்கா சாரங்களையும் கட்டி காத்து சமூகத்தில் நிலவ செய்தது. மக்களின் உழைப்பை சுரண்டும் இந்த கோட்பாடு இன்றைய புதிய காலனி ஆட்சிமுறைக்கு ஒவ்வாதவையே இருந்தும் இன்று அதனை காப்பது யார்? அதிகாரத்தில் உள்ளவர்கள்தானே?


உற்பத்தி சக்திகளினதும் உற்பத்தி உறவின் மீதும் தான் பொருளாதார அடித்தளம் கட்டமைக்கப்படுகின்றது. இதன் மீதுதான் மேற்கட்டுமானங்களான சமயம் (மதங்கள்) குடும்பம், அரசாங்கம், நீதிமன்றம், சிறை, இராணுவம் என்ற நிறுவனங்கள் அமைகின்றன.

இதோ ஊரில் தொட்டால் தீட்டு எனும் கூட்டம் ஒன்றாகுமிடம். இவை எப்படி?

போலியானவையே இந்த மத சாதிய அடையளங்கள் இன்று இருந்தும் ஆளும் வர்க்கம்  தன் சுரண்டலை மூடி மறைக்க இந்த அடையாளங்களை முதன்மை படுத்துகிறது என்றால் தவறோ?

நிலவுடமை சமூக அமைப்பில் நிலம்தான் பொருளாதார அடிதளம். அச் சமூக உற்பத்தி உறவானது அதன் அடிப்படையிலான உற்பத்தி சக்திகளும்- உற்பத்தி கருவிகளும் நிலவுடமை சமூக தேவையை பூர்த்தி செய்வதாக இருந்தது, அதற்கான கோட்பாடு நியமங்களை மத குருமார்களும் மத நிறுவனங்களும் உருவாக்கி வழி நடத்தியது. அதனை ஒழுங்கு படுத்தி நடைமுறை படுத்தும் வேலையை அரசின் அரசன் செய்தான். ஆக நிலவுடமையின் உச்சாணி கொம்பான அரசமைப்பு அதன் கருத்தியலான பண்பாடுகளையும் அதன் சடங்கா சாரங்களையும் கட்டி காத்து சமூகத்தில் நிலவ செய்தது. மக்களின் உழைப்பை சுரண்டும் இந்த கோட்பாடு இன்றைய புதிய காலனி ஆட்சிமுறைக்கு ஒவ்வாதவையே இருந்தும் இன்று அதனை காப்பது யார்? அதிகாரத்தில் உள்ளவர்கள்தானே?

அன்று பண்ணையார் எந்த பெண்ணையும் தன் இச்சைக்குட்படுத்தியது போல் எந்த ஆணையும் தன்னை மதிக்காவிட்டால் எதுவும் செய்ய முடியும் ஏனென்றால் அவன்தான் கொடுக்கும் தெய்வம் ஆனால் இன்று எந்த பண்ணையாரவது இப்படி செயல்பட சட்டம் அனுமதி இருக்கட்டும் எந்த ஆணும் பெண்ணும் தன்னை இதுபோன்ற இழிநிலைக்கு உட்படுத்துவார்களா? மாட்டார்கள் ஏனென்றால் அவர்கள் வாழ்வியலுக்கானவர்கள் அவர்கள் இல்லை ஆக யாரும் பணிந்து போக வேண்டிய நுர்பந்தம் இல்லை. ஆக இன்றைய சாதியையும் மதத்தையும் கட்டிக் காப்பது நம்மை ஆளும் அரசும் அதன் சட்ட திட்டங்களும்தான். ஆகையால் உழைக்கும் மக்கள் அறியாமையால் இந்த பழைமைகளில் மூழ்கி கிடக்கின்றனர், அவர்களை விடிவிக்க வேண்டியவர்கள் அவர்களின் வாழ்வியல் தேவையை எப்படி பூர்த்தி செய்ய போகிறோம் என்பதிலிருந்தே தொடங்க வேண்டும்.

முதலாளித்துவ சமூகத்தில் உபரி உருவாக்கமானது ஒரு தொழிலாளி தன்னுடைய உழைப்புச் சக்தியினை விற்கின்றார். (யார் உற்பத்திச் சாதனங்களை வைத்துக் கொள்வார்களோ அவர்களிடம்) தொழிலாளி குறிப்பிட்ட நேரதிற்கான உழைப்பை தன்னுடையதும், தனது குடும்பத்திற்கான வாழ்வியலுக்கு தன் உழைப்பு சக்தியை விற்கிறான். இங்கே அவன் நிலவுடமை சமூகத்தில் விலங்குபோல் வேலை செய்தாலும் அதற்கான கூலியானது நிலவுடமையாளனின் அறுவடையில் கிடைக்கும் தானியமே. அங்கே நிலவுடமையானன் (நிலபிரப்பு) நினைப்பதை செய்யும் அதிகாரம் படைத்திருந்ததால்தான் எந்த கூலி தொழிலாளியையும் எதையும் செய்யும் அதிகாரமும் தன் அதிகார வரம்பால் யாரையும் எதையையும் செய்யும் அதிகாரம் இருந்தது. இன்று பணமிருந்தால் எதையும் வாங்கும் நிலைக்கு வளர்ந்துள்ளோம்.

இங்கே இன்றைய சமுதாயத்தில் உபரியில் ஒரு பகுதியை தொழிலாளி வர்க்கத்திடம் இருந்து பிரித்து மற்றவர்களுக்கு அதிகமாக ஊதியத்தை வழங்கி அதிகார வர்க்கத்தை உருவாக்கிக் கொள்கின்றது. இந்த அதிகார வர்க்கமே உழைக்கும் வர்க்கத்தை அடக்குபவர்களாவும், கண்காணிப்பவர்களாவும் இருக்கின்றார்கள். பாதுகாப்பு நிறுவனத்தை ஆளும் வர்க்கமானது தன்னைப் பாதுகாக்கும் பொருட்டு வேலையில்லா இளைஞர்களைத் திரட்டி தன்பாதுகாப்பிற்காக இராணுவத்தை உருவாக்கின்றது. இதன் மூலம் எதிரான எதிர்ப்புகளைக் கையாள்கின்றனர். தொலைத்தொடர்புதகவல்சாதனங்கள் ஊடாக சிந்தனைச் சிதைவை மேற்கொள்கின்றார்கள்.

 

உபரியின் விளைவாகத் தோன்றியதே வர்க்க பேதங்கள். வர்க்கத்திற்கு அடிஅத்திவாரம் சொத்தாகும், சொத்து இல்லையெனில் வர்க்கம் இல்லை. வரலாறுகளும் வர்க்கத்தினால் உருவாகின்றதேயன்றி தனிமனிதர்களால் அல்ல. இதையே கம்யூனிசக் கட்சி அறிக்கையில் 'இதுநாள் வரையிலான சமுதாயங்களின் வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்டங்களது வரலாறேயாகும்” என்றனர். பழையவை அழிதலும் புதியவை உருவாகலும் நடைபெறுகின்றன. ஒவ்வொரு வரலாற்றுக் காலகட்டத்திலும் ஒவ்வொரு வர்க்கத்துக்கு எதிர் வர்க்கம் இருந்து கொண்டே தான் வருகின்றது.

லெனின் வர்க்கங்களைப் பற்றிக் கூறும் போது வர்க்கங்கள் என்பவை வரலாற்று வழியில் நிர்ணயிக்கப்பட்ட சமூகப் பொருளுற்பத்தி அமைப்பில் வகிக்கும் இடத்தாலும் உற்பத்தி சாதனங்களுடன் அவற்றிற்குள்ள உறவாலும், (மிகபெரும்பாலும் இது சட்டத்தால் நிலை நிறுத்தப்பட்டு வரையறுக் கப்பட்டிருக்கிறது) உழைப்பின் சமூக ஒருங்கமைப்பில் அவற்றிற்குள்ள பாத்திரத்தாலும், ஆகவே சமூகச் செல்வத்தின் அவற்றின் செயலாட்சிக்கு உட்பட்ட பங்கின் பரிமாணங்களாலும் இந்தப் பங்கை அவை சுவீகரித்துக் கொள்ளும் முறையிலும் ஒன்றுக்கொன்று வேறுபடும் போது மக்கள் பகுதிகளாகும். வர்க்கங்களானவை சமூகப் பொருளாதாரத்தின் குறிப்பிட்ட ஒர் அமைப்பில் தாம் வகிக்கும் வெவ்வேறு இடங்களின் காரணியாய் ஒன்று மற்றொன்றின் உழைப்பைக் கைப்பற்றிக் கொள்ள முடியும் படியான மக்கள் பகுதிகளாகும்”  உபரியின் இன்னொரு பகுதி மூலதனத் திரட்சியாகின்றது. மூலதனத் திரட்சியானது உற்பத்திச் சாதனங்களை கொள்வனவு செய்வதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இன்றைய நவீன உலகிலே மனித வலுவிற்குப் பதிலாக இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்படுகின்றன. உபரியை உரிமையாகக் கொள்கின்ற வர்க்கமானது மென்மேலும்  தனது சொத்தைத் திரட்டுகின்றது. இதன் காரணமாக சிறுவுடமையாளர்கள் பெரும் மூலதனத்திற்கு இரையாகின்றனர். 



லகில் உள்ள 1விதமான பணக்காரர்களே உலகின் 50 வீதமான சொத்தை உரிமையாகக் கொண்டுள்ளார்கள்.  (https://www.theguardian.com/inequality/2017/nov/14/worlds-richest-wealth-credit-suisse) பொருளாதாரம் ஏற்றத் தாழ்வை ஏற்படுத்துகின்றது. பெரும்பான்மையான மக்கள் தெரிவுச் சுதந்திரம், வேலை வாய்ப்பின்மை, வறுமை, கல்வியின் பின்னடைவு என பல்வேறு பிரச்சனையை எதிர்க் கொள்ளும் மக்கள் கூட்டம் நகர்ப்புறத்தை நோக்கி படையெடுக்கின்றார்கள். உற்பத்திச் சக்தியை விற்க தயாராக இருக்கும் பாட்டாளிகளையும் உருவாக்குகின்றது. அதே வேளை இயற்கையுடனும், நிலத்துடன், சாதிய ஒடுக்குமுறையுடன் பிணைக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் வெளியேற்றம் அடைகின்றனர்.   

 எந்த 

மதமும் மக்களை காப்பற்றது 

உழைக்கும் மக்கள் தாங்கள் வாழ தகுந்த சமூகத்தை உருவாக்குவதே அவசியமான ஒன்று

இன்னும் பின்னர்  .....

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்