இந்திய கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஆம் கட்சி மீதான விமர்சன கட்டுரை தொடர்-1
CPI, CPM, CPI(ML) மற்றும் குழுக்கள் பற்றியும் அதன் உண்மையான செயல்பரப்பு பற்றியும் நேர்மையானவர்கள் விவாதிக்கலாம்.
இதில் எந்த போராட்டமும் உள்ள அமைப்புமுறையின் மாற்றம் புரட்சியின் மூலமாம சீர்திருத்தம் மூலமாக என்பதிலிருந்தும் ஆளும் வர்க்க எந்த உடமை சமூக தேவையை ஒட்டி நிகழ்கிறது என்பதிலிருந்தே ஒரு பொதுவுடமைவாதி புரிந்துக் கொள்வான்.
இந்தியாவில் ஆங்கிலேய காலனியாதிக்க ஒடுக்குமுறை அடக்குமுறைக்கு எதிரான போராட்டம் இருவேரு வர்க்க தேவையினை ஒட்டியே நடந்தேறியது என்றால் மிகையில்லையே... ஒருபுறம் அதுவரை இருந்த மன்னர்கள் நிலகிழார்கள் மற்றும் வசதிபடைத்த சீமான்கள் இவர்களிடையே தோன்றிய ஆங்கிலேய கல்வி பயின்ற புதிய ரக மேட்டுகுடிகள் கல்வியாலும் வசதியாலும் தங்களின் இருப்பை ஆங்கிலேய அரசின் பங்காளியாகவோ ஏவளாலியாக வாழும் நிலை இன்னொருபுறம் வாழ வழியற்ற அடிமைகளாக கூலிகளா அன்றாம் காட்சிகள் தன் வாழ்வாதர தேவைக்கு போரிட்டனர்... ஆக இங்கே வர்க்க ரீதியாக ஏதுமற்ற பிரிவினர் ஒருபக்கம் என்றால் உடைமை பறிக்கப்பட்ட இழந்தவர்களும் இவர்களுடன் வந்து சேரும் பொழுது அந்த போராட்ட களத்தில் சில முற்போக்கு பாத்திரம் ஆற்றுகின்றனர்.
இந்திய சுதந்திர போராட்டத்தில் இருவேறு பிரிவை பற்றி மேலே சுருக்கமாக உள்ளன, இருந்தும். முக்கியமாக உழைக்கும் மக்களை அணி திரட்டியிருந்த கம்யூனிஸ்ட் கட்சியானது அதன் பணியினை நாடுதழுவிய அளவில் முழுமையாக்க விட்டாலும் பிரதேச வாரியாக பல்வேறுவிதமான போராட்டங்களை முன்னெடுத்தன. ஆனால் அதன் தலைவர்கள் எப்படி இருந்தாலும் அணியின் கீழ்மட்ட தொண்டர்கள் முழு அர்பணிப்புடனும் எந்த போராட்டதிற்கும் தியாகதிற்கும் வித்திட்டவர்களாக இருந்தனர். அதன் வரலாற்று பக்கங்களில் வீரம் தியாகம் ஒருங்கே இருந்தது. அதன் தலைவர்கள் சரணடைந்தாலும் விட்டுக் கொடுக்காத போராட்ட குணந்த்தால் வளர்ந்த கம்யூனிச இயக்கம் இன்று பல பிரிவுகளாக அவை உண்மையில் யாரின் நலனுக்காக செயல்புரிகின்றன என்று தேடினாலே அதன் வர்க்க பாசம் அறிந்துக் கொள்ள முடியும். ஆக தொடர்ந்து விவாதிக்கவே....
No comments:
Post a Comment