அயோக்கியர்களின் பொய்

 அன்று லெனின் எதிர்பார்த்த அரசியல்மாற்றத்திற்கு "பொருள்முதல் வாதமும் அனுபவவாத விமர்சனமும்" என்ற நூல்  பயன்பட்டதுடன்,இன்றும் தத்துவத்துறையில் நீடித்து நிலைத்து நிற்கும் நூலாக விளங்குகிறது.

ஒருபுறம்ஏகாதிபத்திய பன்நாட்டு கம்பெனிகளின் சுரண்டல்,அதற்கு துணையாக நிற்கும் அரசு,அதிகாரம்,மறுபுறம்,சுரண்டலுக்கு ஆளாகிமனமொடிந்து,வறுமைக்கும்,வேதனைக்கும் ஆளாகும் உழைக்கும் வர்க்கங்கள் என கூறுபட்டு நிற்கும் இந்தச் சமுகம்.இது எதார்த்தம்.இந்த எதார்த்த நிலையிலிருந்து மாற்றத்திற்கான புரட்சிக்கான கருத்துக்கள் தோன்றுகின்றன. இதனை மார்க்சியம் போதிக்கிறது இங்கே தனிநபர்கள் அல்ல பிரச்சினை. சித்தாந்தம்தான் அடிப்படை. ஆம் எந்த கொள்கை கோட்பாட்டிற்காக செயல்பட்டனர் செயல்படுகின்றனர் அதன் அடிப்படையிலிருந்தே பரிசீலிக்க வேண்டும். ஆக நாம் இங்கு சிலர் வைக்கும் விமர்சனதிற்கு பதில் தேடுவோம். 

கருத்திலிருந்து பொருள் என்ற வகையில் பார்த்தால் உண்மை எதார்த்தம் கடவுளால் அல்லது ஹெகலின் சொற்றொடரில் முழுமுதல் கருத்தினால் படைக்கப்பட்டது.அது மாற்ற முடியாதது என்ற முடிவிற்குத்தான் வர வேண்டியிருக்கும்.முதலாளித்துவம் நிரந்தரமானது என்றும் அது விதிக்கப்பட்டது என்றும் முடிவிற்கு இட்டுச் செல்வது கருத்துமுதல்வாதம்உண்மை நிலையை மாற்றுவதற்கு இட்டுச் செல்வது பொருள்முதல்வாதம்இதனால்தான் இயக்கவியல் பொருள்முதல்வாத அடிப்படைகளை பாதுகாப்பது புரட்சிகர கடமை என்று போதித்தார் லெனின்.

இங்கே சிலர் நபர்களை அதுவும் புரட்சி நடத்தி அதனை தொடந்து நடத்த தன் வாழ்வை அர்பணித்தவர்களை குறை கூறி தன்னை முதன்மை படுத்த நினைப்போர் எந்த வர்க்க நலனுக்காக போராடுகின்றனர் என்பதே. ஆக விமர்சனம் என்பது ஆதாரத்தின் அடிப்படையில் அவை எந்த வர்க்க தேவைக்கானது என்றிருக்க வேண்டும்.

இருள் நீக்கீ என்கிற பிரகாஷ் தங்களை நான் லேகியம் விற்க சொல்லவில்லை நான் கேட்ட கேள்விக்கு பதில் தான் சொல்ல சொல்லி இருக்கேன் தங்களிடம் நான்கு கேள்விகள் கேட்டிருக்கிறேன் அந்த நான்குக்கும் தாங்கள் பொருள் முதல்வாத அடிப்படையில் பதில் சொல்ல வேண்டும்

முதல் கேள்வி ரஷ்யாவில் வர்க்கங்களை ஒழிக்க ஸ்டாலின் எடுத்த நடவடிக்கை என்ன?
காரல் மார்க்ஸ் எந்த இடத்திலாவது முதலாளித்துவ கட்சிகளோடு கூட்டணி வைக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறாரா?
முதலாளிகளும் முடிவெடுக்க முடியும் என்று சொல்லக்கூடிய ஐநா சபையில் பாட்டாளி வர்க்கத்திற்கு என்ன வேலை?
ரத்து அதிகாரம் முதலாளிகளுக்கும் இருக்கிறது தொழிலாளிகளுக்கும் இருக்கிறது என்றால்
இதற்கு பருத்தி மூட்டை குடோன்லயே இருக்கலாமே 🙄🙄?
இதற்கு தாங்கள் பதில் சொல்லலாம்

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்