இலக்கு இணைய இதழின் எமதுநோக்கம்:- “புரட்சிகர ஜனநாயக சிந்தனையாளர் களுக்கான களமாக "இலக்கு" இணையஇதழ் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கிறோம். இதில் மார்க்சிய லெனினிய வழியிலான தத்துவ அரசியல் பொருளாதார கலை இலக்கிய மேம்பாட்டுக்கான புரிதலும் வளர்த்தெடுத்தலும் விவாதிபதற்கான தளமாக பயன்படுத்த நினைக்கிறோம். உங்களின் மேலான விவாதங்கள் மூலம் ஒரு சரியான மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் பாதையில் பயணிக்க முயற்சிக்கலாம் என்பதே எமது நோக்கம்.இன்றைய சமுதாயத்தில் நிலவும் அரசியல் பொருளாதார, கலாச்சார முரண்பாடுகளை விஞ்ஞான பூர்வ கண்ணேட்டத்தில் அணுகி மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனையின் அடிப்படையில் புரட்சிகர அரசியல் அதிகாரத்திற்கான தத்துவப்பயிரை நடுவதும், நடை முறை நீரை ஊற்றுவதும், வளர்ப்பதும், மா- லெ-மா அறிவியலை எளிமைப்படுத்தி புரட்சிகர அறிவு ஜீவிகளை வளர்ப்பதும், “சுரண்டலற்ற சமுதாயத்திற்கான புரட்சித் திசைவழியைக் காட்டுவதே யாகும்.”.
நமது வேலை திட்டம் என்ற பகுதியில் லெனின்,“நாம் முற்றிலும் மார்க்சிய தத்துவார்த்த நிலையிலே எமது அடிநிலையைக் கொண்டு நிற்கிறோம்:மார்க்சியம்தான் முதன்முதலில் சோசலிசத்தை கற்பனைவாதத்தில் இருந்து விஞ்ஞானமாக மாற்றி அமைத்து தந்தது; இந்த விஞ்ஞானத்துக்கு உறுதியான அடித்தளத்தை நிறுவிகொடுத்தது; இதை இதன் எல்லா கூறுகளிலும் மேலும் வளர்த்தும் விவரமாய் விரித்தமைத்தும் செல்வதற்கு பின்பற்ற வேண்டிய பாதையை சுட்டிக்காட்டுகிறது. அரசியல் சூழ்நிலைகள் புரியாப் புதிர்களான சட்டங்கள் கடும் சிக்கலான தத்துவங்கள் ஆகியவற்றாலாகிய புகை மூட்டத்தினுள் மறைந்திருக்கும் வர்க்க போராட்டத்தை பல்வேறு வகைப்பட்ட சொத்துடைத்த வர்க்கங்களுக்கும் சொத்துடமை அற்றோர் அனைவரின் தலைமையில் நிற்கும் சொத்திலா பெருந்திரளாகிய பாட்டாளி வர்க்கத்திற்கு இடையே நடைபெறும் இந்தப் போராட்டத்தை எப்படி கண்டறிந்து கொள்வது என்று அது நமக்கு கற்றுக் கொடுத்தது. புரட்சிகர கட்சியின் முன்னுள்ள மெய்யான பணியை அது தெளிவுப் படுத்திற்று: சமுதாயத்தை திருத்தி அமைப்பதற்கு திட்டங்களை வரைவது அல்ல தொழிலாளர்களுடைய நிலைமைகளை மேம்படச் செய்வது குறித்து முதலாளிகளுக்கும் அவர்களது அடிவருடிகளுக்கும் அறிவுரை அளிப்பதல்ல, சதிகள் புரிந்திடுவது அல்ல இப்பணி, பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்கப் போராட்டத்தை ஒழுங்கமைப்பு செய்வதும் பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தை வெல்வதையும் சோசலிச சமுதாய ஒழுகமைக்கப்படுவதையும் இறுதி குறிக்கோளாய் கொண்ட இந்த வர்க்க போராட்டத்துக்குத் தலைமை தாங்குவதுமே இப்பணிஎன்றுஅதுதெளிவுபடுத்திற்று.” என்கிறார் ஆசான் லெனின்.
உங்களை கேள்வி கேட்டாலே விவாதித்தாலே எதிரியாக பார்க்கும் உங்களின் நோய்க்கு பெயர் குறுங்குழுவாதம். நீங்கள் எங்கள் மீது வைத்துள்ளவை குற்றசாட்டு ஆண்டை தனமானது ஆணாதிக்க சமூகத்தில் பெண்ணை "தேவடியா" என்றால் கூனிக் குறுகி போய்விடுவால் அதுபோல் உங்களிடம் விவாதித்த ஒரே காரணதிற்காக "இலக்கு" இணைய இதழ் மீது காழ்புணர்ச்சி உண்மையில் திறன் இருந்தால் நாங்கள் கொண்டு வந்துள்ள 67 இதழ்களில் என்ன வர்க்க நிலைப்பாட்டில் எழுதப்பட்டுள்ளது ஆராய்ந்து சொல்ல முடியுமா? நாங்கள் உங்கள் எழுத்துகளை விமர்சித்த பொழுது காதை பொத்திக் கொண்டீர்களே நேபகம் உள்ளதா? வாருங்கள் விவாதிக்க இதோ எங்களின் 67 இதழ்களும் கீழ்காணும் இணைப்பில்
No comments:
Post a Comment