இலக்கு 66 இணைய இதழ் உங்கள் முன்

 இந்த இதழில் பேசப்பட்டுள்ள தலைப்புகள்

1).மார்க்ஸ் முதல் மா சேதுங் வரை. ஜார்ஜ் தாம்ஸன். பாகம் - 2.

2).சிறந்த கம்யூனிஸ்டாவது எப்படி? பாகம் - 6

3). இந்திய கம்யூனிஸ்ட்டுகளும் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் சில போக்குகளும்.

இதற்கான சிறிய அறிமுகம் கீழே:-

1). முதலாளிவர்க்க ஜனநாயகத்தை கம்யூனிஸ்டுகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பலரும் பேசுவதை நாம் பார்க்கிறோம். இது ஒரு சரியான கருத்தே ஆகும். மார்க்சிய ஆசான்களாலும் இந்தக் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டதுதான். இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தை எந்தவகையான உணர்வோடு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது பற்றி ஜார்ஜ் தாம்சன் கூறும்போது, மிகவும் உறுதியாகவும், தீர்மானகரமாகவும், புரட்சிகரமான ஜனநாயக உணர்வோடும் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிறார். அதன் பொருள் என்ன? பாட்டாளி வர்க்கம் வெறுமனே சில சலுகைகளைப் பெறுவதற்காகவும், சீர்திருத்த உணர்வோடும் முதலாளித்துவ ஜனநாயகத்தை பயன்படுத்துவதால் உழைக்கும் மக்களுக்கான பலன் கிடைக்காது என்றும், மேலும் இந்தப் பாராளுமன்ற வழிமுறையையிலேயே பாட்டாளிவர்கம் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி ஆட்சியமைக்க முடியாது என்பதையும் கம்யூனிஸ்டுகள் உழைக்கும் மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். ஒரு புரட்சியின் மூலம் மட்டுமே பாட்டாளி வர்க்கம் ஆட்சி அதிகாரத்தை வென்றெடுக்க முடியும் என்று லெனின் சொன்னார், இந்த லெனினிய கொள்கையைத்தான் கம்யூனிஸ்டுகள் பின்பற்ற வேண்டும்.

மிக உறுதியான, தீர்மானகரமான, புரட்சிகர ஜனநாயக உணர்வோடு (லெதொநூ - 21, 409) முதலாளி வர்க்க ஜனநாயக உரிமைகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு தொழிலாளிகளிடம் வற்புறுத்தி கூறிய அதே வேளையில், லெனின் பாராளுமன்ற வழிமுறைகள் கொண்டு அவர்கள் அதிகாரத்தை வென்றெடுக்க முடியும் என்று நினைப்பது ஒரு பிரமை என்றும் எச்சரித்தார். இதுதான் அவருக்கும் அவர் காலத்திய திருத்தல்வாதிகளுக்கும் இடையே இருந்த முதன்மையான பிரச்சனையாகும்.

2).கட்சி உறுப்பினர் ஒருவர், மார்க்சிய லெனினியத் தத்துவத்தையும் சிந்தனை மற்றும் வேலை முறையையும் கற்றுத் தேர்வதற்கும், உறுதியானதும் தூய்மையானதுமான பாட்டாளி வர்க்க நிலைபாட்டை எடுப்பதற்கும் இடையில் எத்தகைய தொடர்பும் இருக்க வேண்டிய அவசியமில்லை என்ற கருத்தோட்டம் நமது கட்சியினுடைய சில உறுப்பினர்கள் மத்தியில் இப்போது நிலவுகிறது. ஒருவருடைய பாட்டாளி வர்க்க நிலைபாடு உறுதியாக இல்லாமற் போனாலும், சித்தாந்தத் தூய்மை இல்லாமற் போனாலும் (அதாவது, பாட்டாளி வர்க்கமல்லாத சிந்தனையின் மீதமிச்சங்களால் அவர் கறை படிந்தவராக இருந்தாலும்) ஒருவர் மார்க்சிய- லெனினியத் தத்துவத்தை முற்று முழுவதாகவும் உண்மையாகவும் புரிந்து கொள்வதும், மார்க்சிய லெனினிய சிந்தனை மற்றும் வேலை முறைகளில் தேர்ச்சி பெறுவதும் முற்றிலும் சாத்தியமே என்று சிலர் நம்புகின்றனர். வெறுமனே புத்தகங்களைப் படிப்பதன் மூலமாகவே மார்க்சிய லெனினியத் தத்துவத்தையும், அதன் சிந்தனை மற்றும் வேலை முறையை முழுமையாக கற்றுத் தேர்ந்து விடலாம் என்று அவர்கள் நம்புகின்றனர். இந்தக் கருத்தோட்டம் மிகவும் பிழையானது. (சிறந்த கம்யூனிஸ்டாவது எப்படி? பக்கம் - 34)

3).இன்றைய பல்வேறு மார்க்சிய விரோத கருத்துகளை பரப்பும் கம்யூனிச கட்சிகள் அதன் இயக்கம் சார்ந்த தனி நபர்கள் அல்லது இயங்கிக் கொண்டிருக்கும் பிரபலங்கள் மார்க்சிய ஆய்வுமுறையை கொச்சைபடுத்தியும் கேள்விக்குள்ளாக்கியும் மார்க்சிய ஆய்வுமுறையை மறுத்து, உள்ள அமைப்புமுறையில் உள்ள கருத்துகளை அல்லது தத்துவங்களை மார்க்சியத்தோடு சேர்க்கும் கலைப்புவாத செயலில் ஈடுபடும் கலைப்புவாதிகளாகும். இவர்களின் பணி எந்த வர்க்க தேவைக்கானது என்பதனை புரிந்துக் கொள்ளவே இந்தப்பகுதி.

அரசை இடதுசாரிகள் எப்படி பயன்படுத்துவது என்று தெரியாமலே இந்த தலைவர்கள் அதன் அணிகளை தங்களின் பிழைப்புக்காக ஆளும் வர்க்க கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து உழைக்கும் மக்களை ஏய்பதும், மார்க்சியத்தையே மறுத்து விட்டு ஆளும் வர்க்க கூட்டாளிகளாக மாறி விட்டனர்.இன்னொறு போக்கு மார்க்சியம் அல்லாத மார்க்சியதை மறுக்கும் போக்குகளை முன்னெடுத்துச் செல்லுவோர். சில உதிரிகளாக வலம் வரும் கம்யூனிச வேடதாரிகளும் மற்றும் கட்சியே ஆசிர்வதித்துள்ள அந்த கழிச்சடைகளை வளர்த்தெடுக்கும் போக்கையும் காணலாம். அதில் ஒன்று அண்மையில் மார்க்சுக்கு மார்க்சியம் தெரியவில்லை என்றும், மார்க்ஸ் இயக்க மறுப்பியலாளர், இயங்காநிலை வாதி இத்தியாதி இத்தியாதி... அதில் ஒரு சிலரின் போக்கை விமர்சித்தே கீழ் வருவன.

முதலில் ஆசியபாணி உற்பத்தி முறை.

இரண்டாவது பாராளுமன்றத்தை ஏற்பதா மறுப்பதா? நமது ஆசான் லெனின் எழுத்துகளிலிருந்தே.

இந்த இரண்டையும் விரிவாக அலசி உள்ளன மூன்றாம் பகுதி வாசிக்க விவாதிக்க வாருங்கள் தோழர்களே.

இலக்கு 66 இணைய இதழ் PDF வடிவில் இந்த லிங்கை அழுத்தி பெற்றுக் கொள்ளுங்கள் தோழர்களே



No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்