சாதி அரசியல்- வர்க்க அரசியலை மறுக்கும் போக்கு.

 சாதியானது இந்திய சமூக வளச்சிப் போக்கில் இயற்கையாய் கருக்கொண்டு சூழலுக்கேற்ப உருக்கொண்டு, உபரியை உறிஞ்சும் சுரண்டல் வடிவமாக உருபெற்றபோது அதற்கு கோட்பாட்டு நியாயம் வழங்கி சாதியத்தின் இருதலுக்கு பங்காற்றியது சனாதனமதமான பிராமணியமே. அதன் கொடிய அம்சம் சுரண்டல் வடிவில் அடங்கியுள்ளது. பிறப்பின் அடிப்படையில் தொழில்களை ஒழுங்கமைப்பதில் இச்சுரண்டல் அடங்கியுள்ளது. சாதி, தீண்டாமை நிலவுவதற்கு காரணம் உற்பத்தி முறைதான். இந்தியாவில் சாதிகள் பற்றி பல்வேறு அறிஞர்கள், களப்பணியாளர்கள், எழுத்தாளர்கள் ஆகியோரின் விவாதங்கள் இடைவிடாத போராட்டங்கள் மூலம் தினம் தினம் நமது செவிகளுக்கு கேட்ட வண்ணமே உள்ளது. ஆக இந்திய சமூகத்தில் சாதியின் பல்வேறு விளைவுகளையும் அதன் தோற்றத்திலிருந்து இன்று வரை அதன் பன்முக போக்குகளையும் அறிவதே ஒரு சரியான புரிதலை ஏற்படுத்தும்.


இன்று நமது சமூகத்தில் பேசப்படும் பல்வேறு விதமான சாதிய தலித்திய சிந்தனை முறைக்கு வேறாக அன்றைய ஏகாதிபத்திய காலகட்டத்தில் போராட்ட வடிவங்கள் இருந்தன. 1930-40க்கு நாட்டில் நடந்த நிலஉடமையாளர்களுக்கு எதிரான போராட்டங்களில் தாழ்த்தப்பட்டோரும் ஏனைய மக்களும் ஒன்று திரட்டப்பட்டு
 விவசாய சங்கங்களில் ஈடுபட்ட போராட்டங்கள். தேபாக இயக்கம், தெலுங்கானா 
இயக்கம், கீழ் தஞ்சை போராட்டங்கள் பொதுவுடைமைக் கட்சியின் கீழ் வழிகாட்டுதலில் செயல்பட்டதை வரலாற்றுப் பக்கங்கள் நமக்கு கூறுகின்றன. சாதி வேற்றுமைகள் தீண்டாமையும் ஆழமாக வேரூன்றி இருந்த கிராம நிலவுடமை சமூக அமைப்பில் உள்ளூர் நிலப்பிரப்புகளை எதிர்த்தும் அரசாங்கத்தை எதிர்த்தும் வர்க்க போராட்டம் நடைபெற்றன. இப்போராட்டங்களின் மூலம் மக்களிடையே இருந்த தீண்டாமை கொடுமைகளும்வேறுபாடுகளும் எதிர்த்துப்போராட்டங்களும் மேற்கொள்ளப் பட்டன. (சுந்தரய்யா சிந்தனை பக்கம்147) இத்தகைய
 போராட்டங்களின் ஊடேதாழ்த்தப்பட்டோர் சமூக அரசியல் பொருளாதாரப் போராட்டங்களில் ஈர்க்கப்பட்டனர். ஏனைய சாதிகளோடு ஐக்கிய அம்சங்களை கண்டுபிடிக்க முடிந்தது. அன்றைய கம்யூனிஸ்டுகள் சாதி கடந்து 
உழைக்கும் மக்களை ஒன்றினைப்பதில் போராட்ட களத்தில் முன்னணியில் திகழ்ந்தனர். பின்னர் அவர்களின் வழிமுறை மாறிய பின்னர் மக்களிடமிருந்து அன்னியபட்டுள்ளனர் அதனைதான் இன்றைய தலித்திய அரசியல்பேசுவோர் முன்னெடுக்கின்றனர். உண்மையில் வரலாற்று பக்கங்கள் வேறாக உள்ளன. இன்னொரு போராட்ட வடிவம்உழைக்கும் மக்களை ஒறிங்கிணைத்து இந்தியாளவில் நடந்தவற்றை பார்ப்போம்.சாதி தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் நக்சல்பாரிகள்-1970- களில் தொடங்கி 1980 வரை நக்சல்பாரி எழுச்சியும் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியால் வெகுஜன இயக்கம் முன்னெடுத்த தீண்டாமைக்கும் சாதிய பாகுபாட்டிற்கும் எதிரான போராட்டங்கள். உயர்சாதி வெறியர் பிரயோகித்த பிற்போக்கு பலாத்காரச் செயல்களை புரட்சிகர பலாத்கார செயல்களால் எதிர்கொண்டது. அத்துடன், சாதிப் பிரச்சினை என்பது தனியே சாதியால் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினைல்ல,அது ஒடுக்குமுறையும் சுரண்டலும் இணைந்த ஒரு வர்க்கப் பிரச்சினை என்றபடியால் முழுச் சமூகத்தினதும் பிரச்சினை என்பதை உணர்த்தி, அந்தப் போராட்டத்தில் சாதியால் தாழ்த்தப்பட்ட மக்களுடன் நீதியை விரும்பும் உயர்சமூக மக்களையும் ஈடுபடவைத்தது. முற்போக்கான மக்களையும் அந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக அணி திரட்டியது. அதன் காரணமாக அந்தப்போராட்டம் கணிசமானளவு ஒரு வெற்றியைப் பெற்றது. இந்தியளவில் அதன் எழுச்சியும் வீச்சும் தமிழகத்திலும் அதன் தாக்கத்தை காணலாம். இருந்தும் அதன் தொடர்ச்சி இன்றின்மையால் இளம்தலை முறையினர் அறியாமல் இருப்பது போலவே எதிரி வர்க்கம் அதன் உண்மை பொருளை மறைத்தேவிட்டது. அதன் அன்றைய இயக்கம் இன்றில்லை. 
ஏகாதிபத்தியத்தின் கொள்கைகள் கோட்பாடுகள் மற்றும் திட்டமிடல் போன்ற பண்புகள் ஏகாதிபத்தியத்தில் அடி வருடிகளுக்கும் உண்டு இன்று மார்க்சிய சித்தாந்தத்தை திரித்து இதுதான் மார்க்சியம் என்று கடை விரிப்போரே, வர்க்கமாக அணி திரட்ட வேண்டியதை மறந்தே போய் விட்டீரே! உழைக்கும் மக்களை ஒன்றிணைப்பதை விடுத்து மார்க்சியம் அல்லாத உழைக்கும் மக்களை பிரிவினை செய்யும் முதலாளித்துவ ஏகாதிபத்தியத்தின் கொள்கைகோட்பாடுகளை உயர்தி பிடிப்போர் எப்படி மார்க்சியவாதி ஆவர். உழைக்கும் வர்க்கம் அனைத்து மதத்திலும் அனைத்து சாதியிலும் உண்டு அவர்களை ஒன்று திரட்ட கடமை உள்ளதுஅதனை செய்யாமல் ஆளுக்கொரு அமைப்பு ஆளுக்கொரு போராட்டம் இவைதானே ஏகாதிபத்தியபணி. 
உழைக்கும் மக்களை ஒன்றுபடுத்திய போராட்டமே வெற்றியடையும் வேங்கை வயல் 
பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பது என்பது உழைக்கும் மக்களைஅடிமைப்படுத்துள்ள
அரசை மாற்ற மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் அரசாங்கத்தை அல்ல! அவை சாதரண
பணி அல்ல அதற்கு ஒரு விசாலமான கட்சி வேண்டும் குழுக்கள் கோசம் போடுவதனால்
தன்னை பெருக்கிக் கொள்ள நினைக்கிறது. இங்கு இடதுசாரி கட்சிகளே செயல் இழந்து 
நிற்கிறது அதன் ஆளும் வர்க்க பாசம் மக்களுக்கு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
உங்களின் ஏகாதிபத்திய சார்பு அரசியல் கரைந்து போவதை தவிர வேறொன்றும் செய்யாது
சாதியானது இன்றும் இந்திய சமூகத்தில் ஏதோ ஒரு வடிவத்தில் வாழ்ந்துக் கொண்டுள்ளது.
இந்தியாவில் நவீனமயமாதல், வளர்ச்சி, ஜனநாயகம், நிர்வாகம் என்று என்னதான் பேசிக் 
கொண்டிருந்தாலும் இன்றும் நம் சமூகத்தில் சமத்துவமின்மையும் சமூக விலக்குகளும் பெருமளவு 
தொடரத்தான் செய்கிறது. சிலர் குறிபிடுவதுபோல் சாதியானது மனித சமூகம் தோன்றிய போதே
தோன்றிய ஒன்றல்ல. அதேபோல் சாதியின் ஆதிக்கம் நிலவுடமை சமுகத்தில் கோலோச்சினாலும்
அதன் தன்மைகள் இன்றும் அன்றுபோல் இல்லை. இன்று நாம் வாழும் சமூகத்தில் சாதி ஏன் உயிர் 
வாழ்கிறது என்பதனையும். அம்பேத்கார், பெரியார் போன்ற பல தலைவர்கள் சமூக வளர்ச்சி
முன்னணியில் இருந்தவர்கள் சாதி ஒழிப்பிற்கு போராடினார்கள் என்பதோடு அவர்கள் எந்தளவிற்கு 
அதில் வெற்றி கண்டனர் என்பதனையும், உண்மையில் சமூகத்தில் இந்த ஏற்றதாழ்வான நிலைக்கு
முடிவுகட்டவும் இந்த சாதி தீண்டாமை கொடுமைக்கு தீர்வு காணப்படவும் அதற்கான தீர்வை 
நோக்கிய போராட்டங்கள், நமக்கான படிப்பினைகளோடு மார்க்சிய கண்ணோட்டத்தில் 
சாத்தியமானவற்றை விளக்கியுள்ளேன். சாதியின் வேர் நிலவுடமை சமூக உற்பத்திமுறையின்
ஓர் அம்சமே. ஆக சாதியின் அழிவு என்பதுச் சமுக மாற்றதில்தான் உள்ளன.

அன்று தாழ்த்தப்பட்ட மக்கள் மீது தாக்குதல் நடந்தால் அதை எதிர்த்து போராடுபவர்களில் ஆதிக்கசாதியை

 சார்ந்த வாட்டாக்குடி இரணியன்கள், சீனிவாசராவுகள் போன்ற தலைவர்களும் தோழர்களும் தான் முன்ணனியில்
 நிற்பார்கள். என்றைக்குமே அனைத்து சாதியிலுமுள்ள ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டி, உயர்சாதி திமிர்
 ஒழித்து, உழைக்கும் மக்களாய் அனைவரும் ஒன்று சேர்ந்தால்தான் இழந்த உரிமைகளை பெறமுடியும் என 
அப்போது அவர்களுக்கு தெரிந்திருந்தது. அதை வென்றும் காட்டினார்கள். கம்யூனிஸ்ட்டுகள்தான் உழைக்கும் 
மக்களின் நண்பர்கள், உண்மையான சாதிஎதிர்ப்பாளர்கள் என்று அனுபவபூர்வமாக உணர்ந்திருந்தததால் 
அவர்கள் புரட்சியாளர்களை நம்பினார்கள். நக்சல்பாரி இயக்கத்தில் திரண்டார்கள். பிறப்பால் தலித்தாகவே 
இருந்தாலும், பிழைப்புவாதிகளை நிராகரித்தார்கள். நக்சல்பாரிகளும் அவர்களை அப்போது அரவணைத்து 
முன் செல்ல முயன்றனர். இன்று பாருங்கள். நிலைமை அப்படியே தலைகீழ். ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொருகட்சி.
தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் எந்த ஊரிலும் ஏன் கம்யூனிஸ்ட் கட்சி செல்வாக்கு செலுத்துவதில்லை
அந்த இடத்தில் தன்னார்வதொண்டு நிறுவனுங்களும், அடையாள அரசியலை உயர்த்திபிடிக்கும் அமைப்புகளும்,
தினம்தினம் பிறக்கும் ஏகாதிபத்திய கள்ளகுழந்தைகள் அவர்கள் எந்த சாதியாக இருந்தாலும் அவர்களின் ஆண்டை 
ஒருவனே அண்மை சம்பங்கள் நமக்கு புலப்படுத்துகிறது. ஏனென்றால் எதை, எப்போது, யாரை எப்படி ஒடுக்கப்பட்ட 
மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என அரசுக்கும் தெரியும். தொண்டு நிறுவனங்களுக்கும் தெரியும். சாதிவெறி
அமைப்புகளுக்கும் தெரியும். ஒடுக்கப்பட்ட மக்கள் கொஞ்சம் விழிப்புணர்வு பெறுகிறார்களா உடனே அவர்களை 
ஆண்ட பரம்பரை பெருமை கொள்ளவை, ஒவ்வொருத்தரையும் தனக்கு கீழ் இருப்பவர்களை ஒடுக்கவை. சண்டை 
மூட்டு. குடிசையை கொழுத்து, பின் கொஞ்சம் சலுகைகொடு. தேவையற்ற தத்துவங்களை, அமைப்புகளை தலையில் 
ஏற்றிவிடு. தேர்தல் அரசியலுக்குள் இழு. மீண்டும் பழைய நிலைக்கே கொண்டு செல்.இதுதான் 1980ளுக்கு பின்
நக்சல்பாரிகள் பின்னடவை சந்தித்ததிலிருந்து இப்போதுவரை தமிழகத்தில் நடக்கும் நடைமுறையாக இருக்கிறது. 
இதில் தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் மத்தியில் இயங்கி கொண்டிருக்கும் பல்வேறு அமைப்புகள், அவர்கள் 
அவர்களது எல்லைக்குள்தான் இயங்க முடியும் பிறப்பால் தலித்தாகவே இருந்தாலும், பிழைப்புவாதிகளை 
நிராகரித்தார்கள்.சாதியெனும் கட்டமைப்புக்கு சம்மட்டி அடி கொடுத்தவர்கள் அன்றைய கம்யூனிஸ்ட்டுகள்.
உன்னதமான தனது வர்க்க அரசியல் மூலம் சாதி கடந்து உழைக்கும் மக்களை ஓரணியில் இணைத்துக் காட்டிர். 
தனித் தேனீர் குவளைக்கு எதிரானப் போரட்டம்,  சாதித் தீண்டாமைக்கு எதிரான பிரதான போரட்டமாகும். 
பிறப்பால்தானே உயர்ந்தவன் எனும் மமதையில், சேரிக்காரன் வாய்வைத்த கிளாசில் நான் டீ குடிக்கமாட்டேன் 
என்ற உயர்சாதி ஆதிக்க அடையாளங்களை, தீவைத்து எரித்தது. டீ டம்ளர் உடைப்புப் போராட்டம் எந்த குறிப்பிட்ட 
சாதி ஆதிக்கத்தை எதிர்த்து எழுந்ததோ அதே சாதியினரின் தலைமையில் நடந்ததே அதன் வெற்றிக்குக் காரணம்.
இன்று ஏன் இவை நடக்கவில்லை கேள்வி எழுப்பியதுண்டா நீங்கள்? உங்களிடம் அந்த சாதியனர் உள்ளனர் ஆனால் உங்களின் இயக்கம் மக்களுக்கானவையாக இல்லை அவை அதன் வடிவம் பலம் பெறும் பொழுதே அதற்கான பங்களிப்பை மக்கள் புரிந்துக் கொள்வர்!

கம்யூனிச போராளிகள் தியாகிகளான தோழர் அப்பு, பாலன் தமிழரசன், சந்திரகுமார் சந்திரசேகர், மாடக்கோட்டை
 சுப்பு என நீளும் பட்டியல்... அரசின் அராஜக செயல்பாடுகளால் கொல்லப்பட்டவர்கள் பட்டியல். ஆனால் இத்தனை 
ஆண்டுகளில் சாதி தீண்டாமை குறைந்தபாடில்லை. அவர்களின் செயலும் வழிகாட்டுதலும் அவசியமாக உள்ளது.
அந்த ஒற்றுமை இன்று கானல் நீராக உள்ளது. அன்றைய சாதிக் கொடுமைக்கு எதிராக போரிட்ட மண் இன்று 
சாதியச் சகதியில் மூழ்கித் திளைக்கிறது. கம்யூனிஸ்டுகள் பல்வேறு கவர்ச்சியான பெயர்களில் சிதறி சின்னா
பின்னமாகியிருக்கின்ற சூழலில். சாதியவாத சக்திகள் அந்த இடத்தை கச்சிதமாக ஆக்கிரமித்திருக்கின்றன. 
சாதியத்தின் இருப்பு சாதிய சங்கங்களின் வாழ்வாதாரத்துக்கு அடிப்படை என்பதற்கு ஏற்ப சுயநலக் கூட்டமான 
சாதி கட்சிகள் விஷப் பிரச்சாரங்களுக்கு பின்னால் இன்று கம்யூனிஸ்ட் புரட்சியாளர்கள் வீழ்த்தப்பட்டுள்ளனர். 
இதில் தலித்தியம் பேசுகின்ற கட்சியினரும் ஒன்றும் விதிவிலக்கில்லை. வர்க்க ஒற்றுமைகளை கூறுபோட்டு 
விட்டதான ஆத்ம திருப்தி அவர்களின் எழுத்துக்களில் மிளிர்கின்றன. இன்றைக்கு ஒவ்வொரு ஆதிக்கசாதி 
இளைஞனுக்கும் தலித் எதிரியாக்கப்பட்டிருக்கலாம். இருதரப்பினரின் வாழ்வியல் நெருக்கடி யாவற்றுக்கும் 
இன்னொரு தரப்பே காரணம் என்ற கற்பிதம் பெரும் தலைவர்களால் போதிக்கப் பட்டிருக்கலாம். ஆனால் 
மானுடம் நிலைக்க வேண்டுமானால், மக்களின் அன்றாடத் தேவைகள் பூர்த்தியாக வேண்டுமானால்
அவர்களின் வறிய வாழ்நிலையிலிருந்து மீண்டெழ வேண்டுமானால் நிச்சயம் நாம் அன்றைய புரட்சிக்கு வித்திட்ட தியாகிகளின் படிப்பினைகள் எதிகால சந்ததி கற்றுதேற வழிவகை செய்யும்.

 இப்பொழுது தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் உள்ள சிலர் வர்க்க பேதத்தையும் புறம்தள்ளிவிட்டு, வெறுமனே சாதியத்துக்கு எதிரான போராட்டத்தை மட்டும் நடத்த எத்தனிக்கின்றனர். எனவே இதுவும்முழுமையான ஒரு போராட்டம் இல்லை என்றபடியால் வெற்றி பெறும் சாத்தியம் இல்லை. ஆளும் வர்க்க சூழ்சியால் வர்க்க முரணை கைவிட்டு சாதி முரணை கையில் எடுத்து மக்களை இந்தசுரண்டல் அமைப்புகுள்ளே கட்டிக்காத்துக் கொண்டே அவர்களுக்கு ஒடுக்குமுறையிலிருந்து தீர்வென்பது சாத்தியமில்லை. உண்மையில்
சாதியப் பிரச்சினை என்பது பொருளாதார ஏற்றத்தாழ்வுடன், வர்க்கசமுதாயத்துடன் வேர்கொண்டு கிடப்பதால் மதம் மாறுவதால்மட்டும் இப்பிரச்சினை தீர்ந்துவிடவில்லை. சாதிய ஒடுக்கு முறையிலிருந்துதப்புவதற்காக கிறிஸ்தவத்தில் சேர்ந்தோரின் நிலை அறிந்ததுதான். அதுமட்டுமின்றி ஒருலட்சம் மக்களுடன் பௌத்தமதத்தில் இணைந்த போதும் அம்பேத்கரால் இந்தியாவின்சாதியமைப்பை ஒரு அங்குலமும் அசைக்க முடியவில்லை.


கடந்தகால அனுபங்கள் சொலவது, "தீண்டாமைக்கும் சாதியமைப்புக்கும் எதிரான போராட்டங்கள்
நடத்தின. இந்தப் போராட்டம் உயர்சாதி வெறியர் பிரயோகித்த பிற்போக்கு பலாத்காரச் செயல்களை புரட்சிகர பலாத்கார செயல்களால் எதிர்கொண்டது. அத்துடன், சாதிப் பிரச்சினை என்பது தனியே தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினை அல்ல, அது ஒடுக்குமுறையும் சுரண்டலும் இணைந்த ஒரு வர்க்கப் பிரச்சினை என்றபடியால் முழுத் தமிழ் சமூகத்தினதும் பிரச்சினை என்பதை உணர்த்தி, அந்தப் போராட்டத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுடன் நீதியை விரும்பும் உயர் சமூக மக்களையும் ஈடுபட வைத்தது. அதுமட்டுமின்றி நாட்டின் ஏனைய பாகங்களில் வசிக்கும் முற்போக்கான மக்களையும் அந்தப் போராட்டத்துக்கு ஆதரவாக அணிதிரட்டியது. அதன் காரணமாக அந்தப் போராட்டம் கணிசமானளவு ஒரு வெற்றியைப் பெற்றது:".  இன்று வர்க்க பேதத்தை புறம் தள்ளிவிட்டு, வெறுமனே சாதியத்துக்கு எதிரான போராட்டத்தை மட்டும் நடத்த எத்தனிக்கின்றனர். எனவே இதுவும் முழுமையான ஒரு போராட்டம் இல்லை என்றபடியால் வெற்றி பெறும் சாத்தியம் இல்லை. எனவே, முற்போக்கு சக்திகள்  ஒன்றிணைந்த

போராட்டம் இந்த அரசமைப்பை, அரசினை அம்பலப்படுத்தி ஆட்சி அதிகாரதிற்கான வழிமுறையோடு அமையாத எந்த போராட்டமும் உழைக்கும் மக்களை திசைத் திருப்பும் வேலையே.

//ஆதிக்க சாதிவெறி கும்பல்களின் கூடாரமாகத் திகழும் "திராவிட மாடல்" பாசிச ஆட்சியை வீழ்த்த அனைத்து சாதி உழைக்கும் மக்களும் அணிதிரள்வோம்!// எப்படி என்று இவர்கள் விளக்க வேண்டியது அரசாங்கமா? அரசா? ஆக சாதியை நீடிக்க செய்வது இந்த அரசின் வேலையாக உள்ளது அதனை அம்பலபடுத்தும் அதே வேளையில் அதற்கு மாற்றை செயல்முறைக்கு வைக்க வேண்டும் வெறும் கோசங்கள் தீர்வல்ல?

இன்று தமிழகத்தில் சாதி தீண்டாமை சம்பங்கள் வேங்கைவயல் சம்பவம் நமக்கான படிப்பினை என்ன?

சாதி ஒதுக்கீடுகேற்ற கல்வி வேலை வாய்ப்போ அரசு வழங்க முடியாத நிலையில் புதிய காலனிய உலகமய கொள்கையால் விழிபிதுங்கி நின்றுள்ளது. ஆனால் மக்களோ தன் சாதிகேற்ற இட ஒதுக்கீடு படி கல்வியும் வேலை வாய்ப்பும் கிடைக்கும் என்ற அடிப்படையில் சாதிகட்சிகளை பெருக்கிக் கொண்டும் சாதி கட்சிகளில் இணந்துக் கொண்டும் தங்களின் வாழ்க்கை தேவைக்காக வாழும் கட்டாயத்தில் உள்ளனர். ஆனால் அரசோ அந்தந்த சாதிக்குரிய இடஒதுக்கீட்டை கொடுப்பதை விட அவர்களை சாதி ரீதியாக பிரித்து வைத்து மோத செய்வதிலும் அதனையே தனக்கு கிடைத்த வாய்பாகவும் பயன்படுத்திக் கொள்கிறது. உண்மையில் வேங்கை வயல் போன்ற இடங்களில் நடப்பது அரசின் தேவைக்கானதே.

சாதியால் தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டும் தனியாக ஒன்றுதிரண்டு சாதி ஆதிக்கத்தைச் சேர்ந்த சுரண்டும் வர்க்கங்களை எதிர்த்துப் போராட முடியாது. இந்தியாவில் அனைத்து சாதி மதத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்களின் எண்ணிக்கைதான் 90 சதவீதத்திற்கும் மேல் உள்ளார்கள். இந்த மிகப்பெரிய எண்ணிக்கையிலான உழைக்கும் மக்கள் ஒன்று திரண்டு போராடுவதன் மூலமே மிகச் சிறிய எண்ணிக்கையிலுள்ள அனைத்துச் சாதியைச் சேர்ந்த சுரண்டும் வர்க்கங்களை போரில் வெல்ல முடியும். மேலும் இத்தகைய ஒற்றுமையின் மூலம் மட்டுமே  சாதியால் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் உள்ளிட்ட அனைத்து உழைக்கும் மக்களுக்கும் தகுந்த பாதுகாப்பை கொடுக்க முடியும். ஆகவே சாதியால் தாழ்த்தப்பட்ட உழைக்கும் மக்களின் விடுதலைக்காகவும், அவர்களின் பாதுகாப்பிற்காகவும் ஆளும்வர்க்க கட்சிகளையும், ஆட்சிகளையும் நம்பாமல் அனைத்து சாதிகளைச் சேர்ந்த உழைக்கும் மக்களை ஓர் அணியில் திரண்டால் மட்டுமே இந்த அவலங்களுக்கு முடிவுகட்ட முடியும். அதற்கான நீண்ட பணி நம்மிடையே உள்ளது அதனை பற்றி தொடர்ந்து உரையாடுவோம்...

*தாழ்தபட்டவர்கள் என்பதனை சாதியால் தாழ்த்தபட்டவர் என்று வாசிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்


No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்