இந்திய கம்யூனிஸ்ட் இயக்கங்கள் ஆம் கட்சி மீதான விமர்சன கட்டுரை தொடர்-2

 இந்திய அரசியல் களத்தில் நக்சலிசம் என்று பிரபலமாக அறியப் படும் இந்த இயக்கம் தோன்றி இரண்டு தசாப்தங்கள் (1985-ல்) ஆகிவிட்டன. இன்று நக்சலிசத்தின் நிலை என்ன? நக்சல் இயக்கத்தை உருவாக்கிய குழுக்களின் கருத்தியலும் அரசியலும் என்னவாயின? நடப்புக் காலத்திற்கான பதில் ஏராளமான படிப்பினைகளைத் தருகிறது. ஏனெனில், இடது-குறுங்குழுவாதமும் தீவிரவாத சாகசவாதமும் வலது- சீர்திருத்தவாதம் மற்றும் திருத்தல்வாதத்தின் மறுபக்கமாகும் என்றும், இவை ஆளும் வர்க்கங்களின் நலன்களுக்கே சேவை செய்கின்றன என்றும் சர்வதேச கம்யூனிஸ்ட் இயக்கத்தின் காலம் சோதித்த அனு பவத்தை இது உறுதிப்படுத்துகிறது. நக்சலிசம் போன்ற எந்த வகையான தீவிரவாதமும் தன்னுள்ளேயே சிதைவு மற்றும் சுய-அழிவின் விதை களைக் கொண்டுள்ளது. நக்சல் இயக்கம் தோன்றி ஐந்தே ஆண்டுகளில் 1970களின் தொடக்கத்தில் பல குழுக்களாகவும் பிரிவுகளாகவும் சிதறிப்போனது என்பது நன்கு அறியப்பட்ட உண்மை. இந்த அமைப்பு ரீதியான சிதை வுக்கு முன்னரே, கருத்தியல் குழப்பமும் திசைதிருப்பலும் ஏற்பட்டிருந்தன. இந்தக் கட்டுரையில், இடதுசாரி சாகசவாத போக்கின் தொடர்ச்சியான தடம்புரளலுக்கு அடிப்படையாக அமைந்த கருத்தியல் தேக்கத்தை இந்தக் குழுக்கள் அடைந்துள்ளன என்பதே கவனம் செலுத்தப்படுகிறது.-

நக்சலிசம் இன்று!

இத்தாலிய, பிரஞ்சு மற்றும் ஜெர்மன் கம்யூனிஸ்ட்டுகளுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் லெனின் கூறியதாவது:
முதலாளித்துவவாதிகளின் நுகத்தடியின் கீழும்,கூலி-அடிமை முறையின் நுகத்தடியின் கீழும் நடைபெறுகின்ற தேர்தல்களில் பாட்டாளி வர்க்கம் முதலில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்ற வேண்டும் என்றும், அதற்குப் பின்னர்தான் அதிகாரத்தை வெல்ல முடியும் என்றும் அயாேக்கியர்களும், பாமரர்களும் மட்டுமே சிந்திக்க முடியும். இது முட்டாள்தனத்தின் அல்லது போலித்தனத்தின் உச்சபட்ச நிலையாகும்.
இது வர்க்கப் போராட்டம் மற்றும் புரட்சிக்கு மாற்றாகப் பழைய அமைப்பு மற்றும் பழைய அதிகாரம் ஆகியவற்றின் கீழ் தேர்தல்களை முன்நிறுத்துவதும் ஆகும்.”
லெனினை மீண்டும் மேற்காேள் காட்டுவாேமெனில்,மிகவும் ஜனநாயகம் வளர்ச்சியுற்ற முதலாளித்துவ குடியரசுகளும் கூட வர்க்க ஒடுக்குமுறை அமைப்புகளாகவே விளங்குகின்றன என்ற அவற்றின் உள்ளார்ந்த தன்மையைப் பாராளுமன்றவாதம் வெளிப்படுத்துகிறதேயன்றி ஒழித்து விடுவதில்லை.”
தற்பாேதைய அமைப்பின் கீழ் சீர்திருத்தவாதிகளுடனும், அது போன்று பிறருடனும் கூட்டணி அமைச்சரவை உருவாக்குவது தொடர்பாக லெனின் கூறியதாவது:மேற்கில் (மேற்கு ஐராேப்பாவில்) உள்ள சமூகச் சீர்திருத்தவாதிகளுடனும், ரஷ்யப் புரட்சியின் போது முற்பாேக்குச் சீர்திருத்தவாதிகளுடனும் (காடேட்டுகள்) ஏற்படுத்தப்பட்ட கூட்டணியின், முன்னணிகள், உடன்படிக்கைகள் ஆகியவற்றின் படிப்பினை அனைத்தும் இவ்வுடன்படிக்கைகள் வெகுமக்களுடைய உணவுர்களை மழுங்கடிக்கவே செய்யும் என்பதையும், போராடுவதற்கு திராணியற்ற, ஊசலாட்டம் மிக்க, துராேகச் சக்திகளைப் போராளிகளுடன் இணைப்பதன் மூலமாக, வெகு மக்களுடைய போராட்டத்தின் உண்மையான முக்கியத்துவத்தை அவை பலவீனப்படுத்துமே அல்லாமல் உயர்வடையச் செய்யாது என்பதையும் தெளிவாக எடுத்துக் காட்டியுள்ளன.”
ஆனால் மிகவும் பிற்பாேக்கான தொழிற்சங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சி ஆற்றுகின்ற பணியினைப் போன்று பாராளுமன்றத் தேர்தல் பங்கேற்பை வர்க்கப் போராட்டக் குறிக்காேளுக்காகவும், புரட்சியின் குறிக்காேளுக்கு சேவை செய்வதற்காகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதை லெனின் போதித்தார்.
ஒரு உண்மையான கம்யூனிஸ்ட் கட்சி வாக்குகளைச் சேகரிப்பதற்காகவாே அல்லது தொகுதிகளைக் கைப்பற்றுவதற்காகவாே தேர்தலை பயன்படுத்தக் கூடாது, மாறாக, அரசியல் பிரச்சனைகள் குறித்து அறிந்து கொள்வதற்காக மக்கள் தீவிர ஆர்வத்தை வெளிப்படுத்தும் போது, அன்றாட வாழ்வில் கிடைக்கப்பெறும் அறிவை விட இது போன்ற கருத்துப் பரப்பலை அவர்கள் வரவேற்கும் போது, புரட்சிகர அரசியலைப் பரப்புவதற்காகத் தேர்தல்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பாராளுமன்றப் பாதையிலிருந்து (புரட்சிகரப் பாதையிலிருந்து மக்களைத் திசை திருப்புகின்ற பாதை), பாராளுமன்றத் தேர்தல்கள் பங்கேற்பு மூலம் புரட்சிகர அரசியலைப் பரப்புதல் மற்றும் புரட்சிகரப் பாதையின் ஊடாக மக்களை முன்னேறச் செய்தல் ஆகியவற்றை ஒருவர் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்.
லெனின் மிக மோசமான பாராளுமன்ற அமைப்பைக் கூடப் பயன்படுத்திக் கொள்வதற்கு ஆதரவாகவே இருந்தார். வர்க்கப் போராட்டம் மற்றும் புரட்சிக்கு மாற்றாக அல்ல; மாறாக அவற்றிற்கு உதவியாகப் பயன்படுத்திக் கொள்வதை அவர் ஆதரித்தார்.
அவர் கூறியதாவது:
எத்தனை பாராளுமன்றத் தொகுதிகளை வென்றாேம் என்பது நமக்கு முக்கியமல்ல; தொகுதிகளைக் கைப்பற்றுவது நமது நோக்கமல்ல
அவர் மேலும் எழுதியதாவது:
அவர்கள் (கம்யூனிஸ்ட்டுகள்) பாராளுமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றுவற்கு முயற்சிக்கக் கூடாது. மாறாக மக்களைச் சிந்திக்கத் தூண்டுவதற்கும், வெகு மக்களைப் போராட்டத்தில் இணைப்பதற்கும் முயற்சிக்க வேண்டும். தேர்தல் காலங்களைத் தவிர (இயல்பாகவே பெரும் வேலைநிறுத்தங்கள் நடை பெறும் காலகட்டங்களைத் தவிர்த்து) வேறெப்பாேதும் சாத்தியமல்ல (முதலாளித்துவ ஆட்சியின் கீழ்) என்னும் வகையில் அவர்கள் போல்ஷிவிசம் குறித்து மக்களுக்கு விளக்குவதற்கு முயற்சிக்க வேண்டும்
அவரை மேற்காேள் காட்டுவாேமெனில்,
நமக்கு காலாவதியாகிப் போனதாகத் தோன்றும் விசயத்தை ஒரு வர்க்கத்துக்கும், மக்கள் திரளுக்கும் காலாவதியாகிப்பாேன ஒன்றாக நாம் கருதக் கூடாது”.
புரட்சிகரத் தேவைகளுக்காகப் பிற்பாேக்குப் பாராளுமன்றங்களைப் பயன்படுத்திக் கொள்ளும் கடினமான பணியை த்தவிர்ப்பதன்மூலமாக, இந்த இடர்பாட்டைநேர்காெள்ளாமல் சுற்றி வளைத்துச்செல்ல முற்படுவது என்பது சிறுபிள்ளைத் தனமானது ஆகும்.
முதலாளித்துவ அமைப்பு உள்ளவரையில் கூட்டணி அரசாங்கங்களைக் கம்யூனிஸ்ட்டுகள் உருவாக்குவது பற்றி லெனின் கூறியதாவது:
சோசலிஸ்ட்டுகள்உள்ளிட்ட அனைத்து வகைப்பட்டகூட்டணிஅமைச்சரவைகள் என்ற பெயரில் அது எப்பாேதும் நடைபெறுகிறது. இந்த சோசலிஸ்ட்டுகள் மத்தியில் பல தனிநபர்கள் அப்பழுக்கற்ற நேர்மைக்குச் சொந்தக்காரர்களாக இருப்பினும், யதார்த்தத்தில் முதலாளித்துவ அரசாங்கத்தின் பயனற்ற அலங்கார ஆபரணமாக, அல்லது மூடுதிரையாக, அரசாங்கத்தின் மீதிருந்து மக்களுடைய கோபத்தைத் திசைதிருப்புகிற ஏதேனும் வகைப்பட்ட இடி தாங்கியாக, மக்களை ஏமாற்றுவதற்கு அரசாங்கத்தின் கைகளில் உள்ள கருவியாக மாறி விடுகிறார்கள்.
எனவே முதலாளித்துவ அமைப்பு நீடிக்கின்ற வரையிலும், பழைய முதலாளித்துவ, அதிகாரவர்க்க அரசு இயந்திரம் நிலைத்திருக்கும் வரையிலும், அது எப்பாேதும் அவ்வாறே இருந்து வருகின்றது; அது போலவே நீடிக்கும்”. பாராளுமன்றச் செல்லப்பிராணிகளானசமூக ஜனநாயக வாதிகளின் வெற்று ஆரவாரப் பேச்சுக்களைப் பற்றி அவர் கூறியதாவது:
கிராமப்புறப் பாமரர்களை மூழ்கடிப்பதற்கு புரட்சிகர-ஜனநாயகச் சொற்றாெடர்கள்; முதலாளித்துவவாதிகளின்இதயங்களைக் குளிர்விப்பதற்குஅதிகார வர்க்கமும், விதியாெழுங்கு முறையும்- இதுதான் நேர்மையான கூட்டணியின் சாரமாக உள்ளது”.
லெனினை மீண்டும் மேற்காேள் காட்டுவாேமெனில்,
இந்த கட்சியின் (போல்ஷிவிக் கட்சியின்) பாராளுமன்றப் பிரதிநிதிகள், முதலாளித்துவ அரசாங்கத்தில் உள்ள அமைச்சரவைப் பொறுப்புகளுக்கு இட்டுச் செல்லும் பாதையில் பயணிப்பதை விடச் சைபீரியாவுக்கு நாடு கடத்தப்படுவதை விரும்புகிறார்கள்.”
லெனினிடமிருந்து மேலும் ஒரு பத்தி:
அரசாங்கத்தின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளதை உணர்ந்த அவர்கள் (முதலாளித்துவவாதிகள்) தொழிலாளர்களை முட்டாள்களாக்கி, அவர்களைப் பிளவுபடுத்திப் பலவீனப்படுத்தும் பொருட்டு, 1848- முதலாகப் பல்லாண்டுகளாகப் பிற நாடுகளிலுள்ள முதலாளித்துவவாதிகளால் பின்பற்றப்பட்டு வரும் முறையைக் கையாளத் தொடங்கியுள்ளார்கள். இந்த முறைதான்கூட்டணிஅரசாங்கம் என்று, அதாவது முதலாளித்துவ வர்க்கத்தினரையும், சோசலிசத்திலிருந்து விலகிய கட்சிமாறிகளையும் உறுப்பினர்களாகக் கொண்டு அமைக்கப்பட்ட கூட்டு அமைச்சரவை என்று அறியப்படுகிறது. “சோசலிசத்தலைவர்கள் முதலாளித்துவ அமைச்சரவைக்குள் நுழைந்த பிறகு பெயரளவிலான தலைவர்களாகவும், பொம்மைகளாகவும், முதலாளித்துவவாதிகளின் மூடுதிரையாகவும், தொழிலாளர்களை ஏமாற்றுவதற்கான கருவிகளாகவுமே எப்பாேதும் இருந்து வந்துள்ளார்கள்
தேர்தல்கள் பற்றிய தீர்மானத்தை நாம் மேற்காெள்வதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பாகச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மையக்கழுவானது சோவியத் கட்சியின் மையக்குழுவுக்குக் கடிதம் எழுதியிருந்தது.
அதில் கூறியிருந்ததாவது:
பாட்டாளி வர்க்கம் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினரைப் புரட்சியில் வழிநடத்தும் பொருட்டு மார்க்சிய, லெனினியக் கட்சிகள் அனைத்துப் போராட்ட வடிவங்களையும் பயன்படுத்துவதில் நன்கு தேர்ச்சியுற்று, போராட்டச் சூழல்களில் ஏற்படும் மாற்றத்திற்கேற்ப ஒரு வடிவத்திற்கு பதிலாக மற்றாெரு வடிவத்திற்கு விரைவாக மாறக் கூடிய திறன் படைத்திருக்க வேண்டும்.
அமைதியான போராட்டம் மற்றும் ஆயுதப் போராட்டம், வெளிப்படையான போராட்டம் அல்லது இரகசியப் போராட்டம், சட்டப்பூர்வமான போராட்டம் மற்றும் சட்டவிராேதமான போராட்டம், பாராளுமன்றப் போராட்டம் மற்றும் வெகுமக்கள் போராட்டம் போன்ற அனைத்துப் போராட்ட வடிவங்களையும் கற்றுத் தேர்ந்தால் மட்டுமே பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படை அனைத்துச் சூழ்நிலைகளிலும் வெல்லப்பட முடியாத ஒன்றாக விளங்கும்.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்