அரசதிகாரம் தீர்மானகரமானது

இதுவரை மனித சமூகம் கடந்து வந்த பாதையில் அரசு தோன்றிய பிறகு அதன் அதிகாரம் கொண்டு உலகையே ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து சுரண்ட எத்தனிக்கும் ஏகாதிபத்தியம் ஆகட்டும் அன்று நாடு பிடிக்க ஓடிய கூட்டம் ஆகட்டும் தங்களின் வாளின் வலிமையினால் எல்லோரையும் அடக்கி ஒடுக்கி சுரண்டினர். ஆக தேவை அரசதிகாரம்தான் அதனைதான் நமது ஆசான்கள் மிகத் தெளிவாக பேசியுள்ளனர்.

அரசை பற்றி பேசுவதுதான் அரசியல் எந்த அரசு உழைக்கும் மக்களுக்கு விடுதலை தரும் என்று நமது ஆசான்கள் பேசியுள்ளதை செவி மடுத்துள்ளீரா? அல்லது அதற்காக குரல் கொடுத்துள்ளீரா? உள்ள அமைப்பு முறையின் ஓர் அங்கமான பாராளுமன்ற அமைப்புமுறை மீறி என்ன பேசுகின்றீர்கள்? 

இதுகாறும்‌ மனிதகுலம் கடந்த பாதை‌ வேட்டை, கால்நடை ஆகிய சமூக அமைப்புகளைவிட வேளாண்‌ சமூக அமைப்பு அடிப்படையில்‌ வேறுபட்டது என்பதையும்‌, முந்தைய சமூகங்களில்‌ காணப்படாத அளவிற்கு இச்சமூக அமைப்பில்‌ தனிஉடமையும்‌, வர்க்க வேறுபாடும்‌ தோன்றிவிட்டன என்பதையும்‌ வர்க்கங்களுக்கிடையிலான உழைப்பும்‌, ஓய்வும்‌ வேறுபட்டன என்பதையும்‌ அறிகிறோம்‌.

முதன்முதலாக வர்க்கங்களின்‌ தோற்றத்தோடு அரசின்‌ தோற்றத்தையும்‌ ஒப்பிட்டு விளக்கியவர்கள்‌ மார்க்சும்‌, எங்கெல்சும்‌ ஆவர்‌. “வர்க்க பேதங்களைக்‌ கட்டுப்பாட்டலும்‌, தன்‌ ஆதிக்கத்திலும்‌ வைத்திருக்கவேண்டிய தேவையில்‌ கருவான அரசு, வர்க்க மோதல்களில்‌ செழுமை பெற்று உருவானது. பொருளாதார மேலாதிக்கமும்‌ அதனால்‌ அதிக வலிமையும்‌ பெற்ற வகுப்பார்‌ அரசியல்‌ நிலையிலும்‌ ஆதிக்கம்‌ செலுத்தத்‌ தொடங்கி, உடமைகளையும்‌ கருவிகளையும்‌ கையகப்படுத்தி வர்க்கச்‌சுரண்டலைத்‌ தோற்றுவித்தனர்‌.” எனும்‌ எங்கெல்சின்‌ கருத்து வர்க்க மோதலால்‌ அடக்குமுறை கருவியாக உருவான அரசின்‌ தோற்றத்தை விளக்குகிறது. தமிழகத்தைப்‌ பொருத்தவரையில்‌ குறிஞ்சி நிலத்தில்‌ அமைந்த வேட்டைச்‌ சமூக அமைப்பிலோ, முல்லை நிலத்தில்‌ ஏற்பட்ட கால்நடைச்‌ சமூக அமைப்பிலோ அரசுகள்‌ தோற்றம்‌ பெறவில்லை. மாறாக இனக்‌ குழுத்‌ தலைவர்கள்‌ பலர் தோன்றி மக்கள்‌ மத்தியில்‌ செல்வாக்கும்‌ பெற்றுள்ளனர்‌ ஆனால்‌ மருத நிலத்தில்‌ உருவான வேளாண்‌ சமூக அமைப்பிலேதான்‌ அரசுகள்‌ தோன்றியிருக்க வேண்டும்‌.

அரசு ஒரு நிறுவன அமைப்பாதல்‌ சங்ககாலத்‌ தமிழகத்தில்‌ ஓயாது போர்‌, படையெடுப்பு, ஊர்‌ அழிப்பு அரசுரிமைச்‌ சண்டை ஆகியவற்றின்‌ அடிப்படையிலேயே மெல்லமெல்ல அரசுகள்‌ தோன்றின. இப்படித்‌ தோன்றிய அரசுகள்‌ காலப்போக்கில்‌ தம்மை நிலைநிறுத்திக்‌ கொண்டு விரிவுப்படுத்தத்‌ தொடங்கின. குறுநில மன்னர்களும்‌ ஆட்சிபுரிந்த வரலாற்றை மருதப்‌ பாடல்களால்‌ அறிகிறோம்‌. இவர்களை குலக்குழுச்‌ சமுதாயத்‌ தலைவர்களின்‌ எச்சங்களாகக்‌ கொள்ளலாம்‌. ஏனைய சமூகங்களைக்‌ காட்டிலும்‌ மருதநிலத்தில்‌ அமைந்த வேளாண் சமூகஅமைப்பில்‌ அரசு தோன்றிநிலை பெற்று விளங்குவதற்கு அனைத்து வாய்ப்புகளும்‌ இருந்த காரணத்தால்‌ நாகரிக அமைப்புடைய இச்சமூகத்தில்‌ மூவேந்தர்களின்‌ பேரரசுகள்‌ தோன்றின. அவை ஒன்றோடொன்று மாறுபட்டு மோதிக்கொண்டன. ஆங்காங்கே பல சிற்றரசர்களும்‌, ஆட்சிபுரிந்தனர்‌ அதில் மக்கள் பிரிவினர் வாழ்க்கையை ஊகித்தறிவது என்பது வரலாற்று ஆய்வுகளில் தெளிவுப்படுதப்பட்டுள்ளன.நம்மிடையே இன்று பேசு பொருளாக உள்ள சாதி மதம் தோற்றம் பற்றிய கருத்துகள் சமூக உருவாக்கத்தில் ஆம் வளர்ச்சி போக்கின் ஓர் அங்கமே. அவை எல்லா உலக சமூக அமைப்பிலும் பொதுவானவையே சில சமூகங்களில் தோன்றி வேகமாக மறைந்திருக்கலாம் அல்லது அதன் தேவை ஒட்டி வாழ்ந்துக் கொண்டும் இருக்கலாம். ஆகையால் நாம் சமூக வளர்ச்சி விதிகளை புரிந்துக் கொண்டால் இந்த சாதியானது எப்படி தோன்றியது ஏன் இன்றும் நம் மத்தியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது என்பதனை புரிந்துக் கொள்ள முடியும்.

ஆக சாதியை பற்றி பல்வேறு ஆதாரங்களை கொண்டு நாம் தேடும் பொழுது சாதியின் ஆதார தோற்றம் அதன் வளர்ச்சி மிகத் தெளிவாக வேளாண்மை உற்பத்தியில் மக்கள் சமூகம் ஈடுபடும் பொழுது தோன்றியதே. இந்த உழைப்பு பிரிவினை உலகிற்கே பொருந்தும். ஆனால் இந்தியா போன்ற நாட்டில் இன்றும் ஏன் உயிர்புடன் உள்ளது என்பதே நம் முன் உள்ள கேள்வி.அவை அரசின் அதிகார தேவைகாக உள்ளது.

இதற்கு பதில் ஒரு சாதரண நடைமுறையோடு பார்ப்போம். நம் நாட்டின் முதன்மை குடிமக்களாக கருதும் சனாதிபதி (President of India) சாதியின் காரணமாய் கோயில் சன்நிதியில் அனுமதிக்க படுவதில்லை என்ற பெரும் சர்ச்சை அடிக்கடி பார்க்கிறோம். அவை ஏன் எப்படி?

 இந்திய அரசதிகாரத்தில் பங்குபெரும் ஒவ்வொருவரும் இந்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ள சட்டதிட்டங்களை ஏற்க உறுதி ஏற்றுதான் ஆட்சி அதிகாரத்தில் செயல்படுகின்றனர். அதனால் இந்தியாவை ஆளுமை செய்யும் ஒவ்வொரு நிறுவனதிற்கும் அதற்கான சட்டதிட்டங்கள் உள்ளன. அதனை ஏற்று நடக்க வேண்டியது அதிகாரத்தில் உள்ளவர்களின் பணியாகும். அதன்படிதான் நீதிமன்றத்தின் செயலை அரசாங்கள் தலையிடாது. கோயில் நிர்வாகத்தின் செயலில் அரசிற்கு பணியில்லை. கலாச்சார அங்கமான எல்லா நச்சு விச கிருமிகளையும் பிற்போக்கையும் மத நிறுவனம் வளர்த்து மக்கள் மூளையில் ஏற்றும் வேலையை காலகாலமாக செய்கிறது ஆக அந்த நிறுவனத்தின் செயலில் எந்த ஆட்சியில் உள்ளவர்களும் தலையிடுவதில். மதத்தின் பெயரில் நடைபெறும் பித்தலாட்டங்கள் ஏன் தொடர்கதையாக உள்ளது. அதனை ஆளும் வர்க்கம் ஊற்றி வளர்க்கும் பிற்போக்கு பணியை திறம்பட செய்கிறது அதில் ஒன்றுதான் மத நிருவனங்களில் ஆட்சியாளர்கள் தலையிடுதலில்லை. ஆகையால் அதன் தன்னாட்சியின் வெளிபாடுதான் சனாதிபதியாக இருந்தாலும் சாதியின் அடிப்படையில் ஒடுக்கபட்ட பிரிவை சார்ந்தவராக இருப்பின் கோயிலில் நுழைவதை தடுக்கின்றனர். இதற்கான சட்டமுறை என்பது ஆளும் வர்க்க தேவைக்கானதே. அவை அடக்குமுறைக்கானதே அதன் ஒரு வடிவம்தான் இவை. 

இந்த அரசுதான் இந்த வடிவத்தை காக்கிறது. இவை ஏற்றதாழ்வை கற்பித்து சாதிய மனோபவத்தை மக்கள் மத்தியில் துளிர்ப்புடன் வைத்துள்ளது. இந்த அரசையும் மத நிறுவனங்களையும் இல்லாதொழிக்க மற்றதெல்லாம் காணமல் போகும் கால போக்கில்…  

புரட்சி மற்றும் சுரண்டல் இதுபற்றி  மார்க்சிய லெனினியவாதிகள் கூறுவதும் மற்றவர்கள் பேசுவதற்க்கும் 
வித்தியாசம் இருக்கிறது. திமுக கூட சோசலிசம் மண்ணுக்கேற்ற மார்க்சியம் எல்லாம் பேசுனாங்க.
 

வர்க்க விடுதலை என்பது புரட்சிகர கோட்பாடு புரட்சிகர நடைமுறை புரட்சிகர திட்டம் முக்கியமாக சோசலிச அரசியல் பொருளாதார கட்டுமானத்தோடு தொடர்புடையது. இவை அனைத்தும் சுரண்டலிலிருந்து ஒடுக்குமுறையிலிருந்து விடுதலையாகும். அதற்கான நீண்ட பணி செய்ய வேண்டும். 

 இந்தியர்கள் யாருக்கும் ஹிந்தி தாய் மொழியே அல்ல.*

தமிழ்நாடு- தமிழ்
கேரளா- மலையாளம்
ஆந்திரா-தெலுங்கானா- தெலுங்கு
கர்நாடகா- கன்னடம்
மகாராஷ்டிரா- மராத்தி
குஜராத்- குஜராத்தி
பஞ்சாப்- பஞ்சாபி
ராஜஸ்தான்- ராஜஸ்தானி, மார்வாரி, மேவாரி
ஹரியானா-ஹரியானி
இமாசலப்பிரதேசம்-
மஹாசு பஹாரி, மண்டேலி,
காங்கிரி-பிலாஸ்புரி,சாம்பேலி
ஜம்மு-காஷ்மீர்- காஷ்மீரி, டோக்ரி,பாடி,லடாக்கி.
உத்தர்காண்ட்-கடுவாலி, குமோனி
உத்திரப்பிரதேசம்- பிரஸ்பாஷா, கரிபோலி,அவதி,கன்னோஜி,போஜ்புரி, பந்தேலி,பகேலி.
பீஹார்- போஜ்புரி, மைதிலி
ஜார்கண்ட்- சந்தாலி
சத்தீஸ்கர்-கோர்பா
மத்தியப் பிரதேசம்- மால்வி,நிமதி, பகேலி
மேற்கு வங்கம்- வங்காளி
ஒடிசா- ஒரியா
வட கிழக்கு மாநிலங்கள்-அப்பகுதி மூத்த குடிகளின் தாய்மொழிகள்.
இந்தியாவில் உள்ள 135 கோடி மக்களில் ஒருவருக்கு கூட ஹிந்தி தாய்மொழி அல்ல.
ஹிந்தியும் அந்நிய மொழி தான்.
தாய்மொழிகளை அழித்து ஐரோப்பியர்களால் உருவாக்கப்பட்டதே ஹிந்தி என்பது வரலாறு.
இந்துஸ்தானி என்ற மொழியை உடைத்து,
ஹிந்தி இந்துக்களுக்காகவும்,
உருது இஸ்லாமியர்களுக்கென்று 180 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டதே ஹிந்தி வரலாறு.*🔺இந்தியர்கள் யாருக்கும் ஹிந்தி தாய் மொழியே அல்ல.*




















No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்