மார்க்சியமும் மார்க்சியத்தை மறுக்கும் ஏகாதிபத்தி பிற்போக்கு தத்துவங்களும் அதை எதிர்த்த போராட்டத்தின் அவசியமும்

 லெனின் தனது நாட்டில் புரட்சிகர கம்யூனிஸ்ட்கட்சி உருவாக்கும் பொழுதுஇருந்த பல தடைகளான மார்க்சிய விரோதமான போக்குகளை அம்பலப்படுத்தி அவர்களை அப்புறப்படுத்தினார்.

சற்று புரிதலுக்கு....

தத்துவமும், நடைமுறையும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்படக் கூடாதவை. நடைமுறையில் பிரயோகிப்பதற்காகவே நாம் தத்துவத்தைப் படிக்கின்றோம். மாவோ சொன்னது போல, “மார்க்சிய-லெனினியம் என்பது அம்பு போன்றது. ஆனால், அது ஒவ்வொரு நாட்டினதும் ஸ்தூலமான புரட்சிகர நடைமுறை என்ற இலக்கை நோக்கி எய்யப்படவேண்டும். நாம் இலக்கின்றிச் சும்மா எய்தால், அம்பு சும்மா பறக்குமேயன்றி இலக்கை அடையாது. அதே வேளையில், அம்பு இல்லாமல், இலக்கையும் தாக்க முடியாது”. ஆகவே, தத்துவத்தையும் நடைமுறையையும் இயந்திரம் போல பிரித்து வைக்கக் கூடாது.

லெனின் ஒரு தத்துவ நிபுணர் மாத்திரமல்ல. அவர் ஒரு செயல் வீரரும் கூட, மார்க்சியக் களஞ்சியத்துக்கு அவர் வழங்கிய மிகப் பெரும் சாதனைகளில் ஒன்று யாதெனில் புதிய ரகக் கட்சி யொன்றை அமைப்பது பற்றிய அவருடைய தத்துவமாகும். இதன் அடிப்படையில் அவர் உருவாக்கிய போல்ஷ்விக் கட்சி,அக்டோபர் புரட்சியை நடத்தும் ஆயுதமாகச் சேவை செய்தது, இதுஉருக்குப்போன்ற கட்டுப்பாடுடைய, புரட்சிகர மார்க்சிய உண்மைகளால் ஆயுதபாணியாகிய, சந்தர்ப்பவாதத்திலிருந்து விடுதலை பெற்ற, ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடுகளால் வழிநடத்தப்படுகின்ற, சுயவிமர்சனத்தைஆயுதமாகக் கொண்ட பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்புகளை உடைய ஒருபுரட்சிகரக் கட்சியாகும்.

முதலாளித்துவ சமுத்திரத்தால் சூழப்பட்ட ஒரு நாட்டில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நிறுவி, பாதுகாப்பது சம்பந்தமான பல பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டார். இருந்தும் முன்நிகழ்ச்சி ஒன்றும் இல்லாத முதல் முயற்சியின் போக்கில் எழுந்த பல பிரச்சினைக்குத் தீர்வுகாண அவர் போதிய காலம் வாழவில்லை. இருந்தும், அவர் மார்ச்சியத்தை ஒரு புதிய மட்டத்திற்கு உயர்த்தி விட்டார். அது முதல், மார்க்சியம் என்பது மார்க்சிய-லெனினியம் என அழைக்கப்படுகிறது.

உலகின் முதல் சோசலிசக் குடியரசை அமைத்த பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் மறைந்து இத்தனை ஆண்டுகள் கடந்து விட்டன, இருந்தும் நாம்லெனினிடம் கற்க நிறையவே உள்ளது. லெனின் வழிகாட்டுதலில் சரியானஅடிப்படை மார்க்சிய புரிதலுக்கு வந்தடைய வேண்டும் என்பதே நமது இலக்கு.

ரசியாவில் ஜார் மன்னனின் கொடுங்கோல் ஆட்சியைத் தூக்கியெறிந்ததோடு முதலாளித்துவ சுரண்டலையும் துடைத்தெறிந்து பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை நிறுவினார் தோழர் லெனின் இதன் மூலம் உலகிற்க்கு கலங்கரை விளக்காக வழிகாட்டினார்.

மார்க்சிய சித்தாந்தத்தை ரஷ்ய நிலைமைகளுக்கு ஏற்றவாறு பருண்மையாகப் பிரயோகித்து புரட்சியை சாதித்தது மட்டுமல்லாது, ஒரு பாட்டாளி வர்க்கக் கட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதை இயங்கியல்பூர்வமாக அன்றைய நிலைமைகளையொட்டி வரையறுத்தவர் தோழர் லெனின்.

1905, ஜூன் - ஜூலை மாதங்களில் “ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயக வாதிகளின் இரண்டு செயல் தந்திரங்கள்” என்ற அறிக்கையை லெனின் எழுதினார். இதில் அவர் முதலாளிகளுடன் சமரசம் செய்து கொள்ளும் கொள்கையைக் கடைப் பிடித்த மென்ஷெவிக்குகளின் செயல்தந்திரத்துக்கு எதிராக, எதேச்சாதிகாரத்தை எதிர்த்துத் திட்டமான, விட்டுக் கொடுக்காத போராட்டத்தை நடத்து மாறும், அவசிய மேற்பட்டால் ஆயுதமேந்தியும் போரிடுமாறும், அறைகூவி அழைத்த போல்ஷெவிக்குகளின் செயல் தந்திரத்தை முன்வைத்தார்.

“மனிதகுலத்தின் அறிவு அனைத்தையும் பெற வேண்டும். இவ்வாறு பெறும்போது பொதுவுடைமை முறையை ஏதோ குருட்டுப் பாடமெனக் கற்கக் கூடாது; மாறாக அது நீங்களாகவே யோசித்த ஒன்றாக இருக்க வேண்டும்; நிகழ்காலக் கல்வியின் கண்ணோட்டத்திலிருந்து பார்க்கும்போது தவிர்க்க முடியாதபடி பெறப்பட்ட முடிவுகளை உட்கொண்ட ஒன்றாக இருக்க வேண்டும். இத்தகைய திறமையைப் பெறுவது அவசியம்” என்று லெனின் கூறினார்.

மார்க்ஸ் எழுதியவற்றை மட்டும் லெனின் படிக்கவில்லை. முதலாளித்துவமுகாமிலுள்ள அவரது எதிரிகள் மார்க்ஸைப் பற்றியும் மார்க்சியத்தைப் பற்றியும்எழுதியவற்றையும் படித்தார். அவர்களுடன் ஏற்பட்ட தர்க்கத்தில் மார்க்சியத்தின் அடிப்படைகளை விளக்குகிறார் ஆக நாம் நமது நாட்டின் நிலைமையோடு மார்க்சியத்தை பொறுத்தி புரிந்துக் கொள்ள வேண்டும்.

மார்க்சியத்தை திருத்தும் பல்வேறு போக்குகள்

மார்க்சியம் – அது உருவான காலத்திலிருந்தே அதை எதிர்க்கும் கோட்பாடுகளோடு மட்டுமின்றி, அதை திரித்து புரட்டும் சக்திகளோடும் தொடர்ந்த போராட்டங்களின் மூலமாகவே தனது உயிர்த்துடிப்பான பொருத்தப்பாட்டை நிரூபித்து வருகிறது.

ரஷ்யாவில் 1905 புரட்சிக்குப் பிந்தைய நிலைமையில், மார்க்சியத்தை திரித்துபுரட்டும் முயற்சிகளை முறியடிக்கவும், அன்றைய அரசியல், பொருளாதாரசூழலை ஆய்வு செய்யவும் மார்க்சிய கோட்பாடுகளை எப்படி சரியாக பிரயோகிப்பது என்பது குறித்து லெனின் மார்க்சியமும் திருத்தல்வாதமும் என்றகட்டுரைகளில் விளக்குகிறார்.

இந்தக் கட்டுரைகள் காரல்மார்க்சின் போதனையின் முக்கிய சாரத்தைவெளிப்படுத்தி பல்வேறு வரலாற்றுக் காலகட்டங்களில் போதனையின் விதிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை காட்டுகின்றன. “மார்க்சின் போதனை மெய்யானது, அதனால்தான் அது எல்லாம் வல்ல தன்மை பெற்றிருக்கிறது. அது முழுமையான, உள்ளிணக்கம் கொண்ட போதனை. ஓர் ஒன்றிணைந்த உலகப் பார்வையை அது மக்களுக்கு அளிக்கிறது. எந்த வடிவத்திலும் மூடநம்பிக்கைகளோ, பிற்போக்கோ, முதலாளித்துவ ஒடுக்குமுறைக்கு ஆதரவோ இந்த உலகப் பார்வையுடன் ஒத்துவர முடியாது.மார்க்சியத்தின் வெற்றிகள், இதனுடைய எதிரிகளை மார்க்சியப் போர்வைக்குள் புகுந்து கொள்ளுமாறும், மார்க்சின் போதனையைத் திரித்துக் கொச்சைப் படுத்துமாறும் நிர்ப்பந்திக்கின்றன என்று லெனின் தன் கட்டுரைகளில் காட்டுகின்றார்.

"திருத்தல்வாதம் என்பது என்ன?

"திருத்தல்வாதம் என்பது தொழிலாளர் வர்க்க இயக்கத்துள் இருக்கும் முதலாளித்துவ போக்கேயாகும். திருத்தல்வாதம் முதலாளித்துவ சித்தாந்தத்தின் ஒரு வடிவமாகும்" என்று நமது மூலவர்கள் சொல்லியுள்ளனர் .

சரி நவீனதிருத்தல்வாதம் என்றால் என்ன ?

1960 களில் குருசேவ் கும்பலின் 3 சமாதான கோட்பாடுகள் ரசிய கம்யூனிஸ்ட்கட்சியின் 20ஆவது பேராயத்தில் கொண்டு வரப்பட்டவை, அவையே சோசலிசசோவியத்தை சிதைக்கும் மார்க்சிய லெனினிய விரோத நிலைப்பாட்டை கையில்எடுத்தது. இவை தனது நாட்டில் மட்டுமல்லாமல் உலக கம்யூனிச இயக்கத்தில்திருத்தல்வாதத்தைப் புகுத்தி; உலகில் உள்ள எல்லா நாட்டு கம்யூனிசஇயக்கங்களையும் புரட்சி நடவடிக்கையை கைவிட்டு முதலாளித்துவதுடன்கைகோர்க்கும் சமரசப் பாதையை வகுத்துக் கொடுத்தது. இவை சர்வதேசகம்யூனிச இயக்கத்துக்குள் பெரும் சிதைவை உருவாக்கியது. இவைதான் இன்றுள்ள பல்வேறு நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலை. சொல்லில்சோசலிசம் செயலில் முதலாளித்துவம். ஆக மார்க்சியத்தை கைவிட்டு விட்டுமார்க்சியத்திற்கு எதிரானவற்றைப் போதிக்கும் ஒரு கட்சி எப்படி மார்க்சியக்கட்சியாக இருக்க முடியும். மேலும் அத்தகைய மார்க்சியத்தை கைவிட்ட கட்சிஎப்படி மார்க்சியத்தை வளர்க்கும்?. ஆக ரஷ்யாவில் தோன்றிய நவீன திருத்தல்வாதம் என்பது ரஷ்ய நாட்டில் சோசலிசத்தை ஒழித்துக் கட்டியதோடு,உலக கம்யூனிச இயக்கங்களையும் மார்க்சியம் அல்லாத, மார்க்சியத்தை திரித்துப்புரட்டும் திருத்தல்வாத கட்சிகளாக ஆவதற்கு வழிகாட்டியதே வரலாறாகும்..

லெனின் இரண்டாம் அகில சந்தர்ப்பவாதிகளையும் மாவோ ரசிய குருசேவ் புரட்டல்வாதிகளையும் 'முதலாளி வர்க்கத்தினர்' என்றும் 'வர்க்க விரோதிகள்' என்றும் அடையாளம் காட்டினார்கள்."சோஷலிச நாடுகளில் திருத்தல்வாதிகள் முதலாளித்துவ பாதைக்காக போராடுகிறார்கள் மீண்டும் முதலாளித்துவத்தினை மீட்டெடுக்க முயல்கிறார்கள்" என்றார் மாவோ.

மாவோ, குருசேவ் திருத்தல்வாத கும்பலுக்கு எதிரான போராட்டத்தின் போது குட்டி முதலாளித்துவ வாழ்க்கை சூழ்நிலைகளில் புதிய முதலாளித்துவ மூல காரணங்கள் இடைவிடாது தாமாகவே உற்பத்தியாவது மற்றும் வளர்வது பற்றியும் முதலாளிய செல்வாக்கின் விளைவாகவும் குட்டி முதலாளிகளின் பரவலான தீங்கு பயக்கும் பிரச்சாரத்தின் விளைவாகவும் அரசியல் சீரழிவுவாதிகளும் புதிய முதலாளித்துவ கர்த்தாக்களும் சோசலிச சமுதாயத்தில் தொழிலாளி அணிகளிலும் அரசு நிர்வாகிகள் மத்தியிலும் தோன்றுவதை சுட்டிக்காட்டியுள்ளார்.

“கட்சி உறுப்பினர்கள் மத்தியில் உள்ள இவர்களைப் போன்ற குட்டிமுதலாளித்துவ சிந்தனையாளர்களில் பலர் தொடர்ந்து புரட்சியை நடத்த விரும்பவில்லை” என்பதை சுட்டிக்காட்டிய மாவோ, “அவர்கள் உயர் அதிகாரிகளாக இருக்கிறார்கள், தமது அதிகாரத்தைக் காத்துக் கொள்ள விரும்புகிறார்கள்” என்றார்.இன்னொருபுறம் மாவோ”நீங்கள் சோசலிசத்தை பாதுகாத்து வளர்ப்பதற்காகப் புரட்சியை தொடர்ந்து கொண்டு இருக்கிறீர்கள், ஆனால் முதலாளிகள் எங்கு இருக்கிறார்கள் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லை, அவர்கள் கட்சிக்குள்ளாகவே இருக்கும் முதலாளித்துவப் பாதையை தேர்ந்தெடுத்துவிட்ட வலதுசாரிகள் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

அவர்கள் அதிகாரத்தில் இருந்து கொண்டு முதலாளித்துவப் பாதையை மேற்கொண்டிருக்கிறார்கள்” என்று கலாச்சாரப் புரட்சியின் போது மாவோ சொன்னார்..

ரஷ்யாவின் குருசேவ் கும்பல் போல சீனாவின் டெங் கும்பல் உள்நாட்டில் வர்க்கப்போராட்டம் இனி தேவையில்லை என்றும் புரட்சிகர பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை கைவிட்டு அனைத்துலக சீர்திருத்தவாத திருத்தல்வாத கட்சிகளுடன் நட்பும் சகோதரத்துவமும், புரட்சிகர இயக்கங்களை கைவிட்டும் அதனுடன் உறவை துண்டித்துக் கொண்டும் முதலாளித்துவ பாதையில் சீரழிந்து புதிய முதலாளித்துவ வர்க்கத்தை பிரதிநிதித்துவப் படுத்தியது.

அதாவது காவுட்ஸ்கி தொடங்கி குருசேவ் டெங் வரையிலான திருத்தல்வாதிகள் சாராம்சத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் கைவிடுவதன் மூலம் முதலாளி வர்க்கத்துடன் கூட்டணி சேர்ந்து கொள்ளும் தொழிலாளி வர்க்கத்துக்குள் இருக்கும் முதலாளி வர்க்கமே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இவ்வாறு ரசிய சீன திருத்தல்வாதத்தால் மார்க்சியத்திற்கு ஏற்பட்ட தற்காலிகப் பின்னடைவை மீள முடியாத நிரந்தரமானது என்ற காட்டிக் கொள்வதற்கு ஏகாதிபத்தியப் பிரசாரம் பல முனைகளில் இருந்தும் ஏவப்படுகின்றது; அதனூடே உலகமயமாதல் திட்டங்களை முன்தள்ளியும் தனது சுரண்டலை நியாயப் படுத்த பல வகையான மூளைச் சலவையை ஏகாதிபத்திய எடுபிடிகளான எச்சில்காசுக்கு விலைபோன அறிவுத்துறையினர்களின் மூலமாக பிரச்சாரம் செய்யப்பட்டு மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறார்கள்..

இராட்சத பல்தேசியக் கம்பனிகள் மூலமான பாரிய மூலதன ஊடுருவல் நடத்தப்படுகின்றது. முதலாளித்துவ நிலைப்புக்கான கருத்தியல்களும் கலாசாரச் சீரழிவுகளும் வேகமாகப் புகுத்தப்பட்டு வருகின்றன. சமூகநலன் சார்ந்த சிந்தனைகளும் கருத்துக்களும் அவற்றுக்குச் சார்பான பொதுவுடைமை எண்ணங்களும் குறிவைத்து தாக்கப்படுகின்றன. போராட்டங்கள், எழுச்சிகள், சமூகமாற்றம் என்பன மறுக்கப்பட்டு பிற்போக்குதனமான பழைமைவாதம், முந்தைய சமுக அம்சங்களான மத சாதிய இழிவுகளை மீட்டெடுத்து நிலை நிறுத்தப்படும் போக்கு வலுவடைகின்றது. இவை நமது நாடு உட்பட மூன்றாம் உலக நாடுகளில் முனைப் படைந்திருக்கும் நிகழ்வுப் போக்குகளாகும். இன்றைய உலக மயமாக்கல் உலகை ஒரே குடையின் கீழ் சுருங்கியுள்ள நிலையில் கருத்து ஊடுருவல் என்பது ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு கடத்தப் படுவதும் ஏகாதிபத்திய சிந்தனைகளை மூன்றாம் உலக நாடுகள் மீது திணிப்பதை தவிர்க்க மற்றும் தடுக்க முடியாதவையே என்ற கருத்தை பிற்போக்காளர்கள் தொடர்ந்து பரப்பிக்கொண்டு இருக்கிறார்கள்..

இன்று உலக மயமாக்கல் சூழலில் ஏகாதிபத்தியம் எதிர்புரட்சிகர கருத்துகளை திணிப்பதையும்; தங்களை மார்க்சியவாதி என்று கூறிக்கொள்வோரே மார்க்சிய விரோத போக்கில் செயல்படுவதையும் அவர்களது கொள்கை பிரச்சாரம் மற்றும் நடைமுறையிலிருந்து நாம் புரிந்துக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அதற்கு நாம் மார்க்சிய அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

இன்று இந்திய சமூகத்தில் மேலாதிக்கம் செய்யும் கலாச்சாரம் ஏகாதிபத்திய மற்றும் பழமைவாத மதவாத நிலவுடமை கலாச்சாரமாகும். அதில் குறிப்பாக அமெரிக்க ஏகாதிபத்தியம் இந்தியாவில் எப்படி மார்க்சிய விரோத போக்குகளை விதைக்கிறது என்று விரிவாக இல்லாமல் முதலில் ஒரு போக்கான மார்க்சியத்தை மறுக்கும் போக்கை பார்ப்போம். தன் சுரண்டலை நீட்டிக்க இங்குள்ள மக்களை அமெரிக்கர்களைப்போல வாழ நிர்பந்தித்து மக்களை அடிமைகளாக உருவாக்கும் போக்கை இப்பொழுது பேசப் போவதில்லை.ஆனால் உதட்டளவில் மார்க்சியம் பேசுவோர்களும் மார்க்சியம் பேசும் கட்சிகளும மார்க்சியத்தை மறுத்து மார்க்சியம் அல்லாத ஏகாதிபத்தியஆனால் உதட்டளவில் மார்க்சியம் பேசுவோர்களும் மார்க்சியம் பேசும் கட்சிகளும் மார்க்சியத்தை மறுத்து மார்க்சியம் அல்லாத ஏகாதிபத்திய கழிச்சடை சித்தாந்தங்களை மார்க்சியமாக மார்க்சிய கட்சியான CPI யின் NCBH நிருவனம்(பதிபகம்) வெளியிட்டுள்ள நூலான திறந்தநிலை மார்க்சியம் பற்றி நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவை எப்படி மார்க்சிய சித்தாந்தத்தையே மறுக்கிறதுஎன்பதோடு மார்க்சியம் முன் வைக்கும் சமூக மாற்றம் பற்றி அது என்ன சொல்கிறது என்பதனையும் இதனூடாக தெளிவாக நாம் புரிந்துகொள்ள வேண்டும். புதிய இடதுகள் என்ற போர்வையில் மார்க்சிய லெனின்யத்தைச் சிதைத்தல். (இந்த கருத்துகளை தன் தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும், உலகில் முதலாளிகளாக உயர முடியும் என்று மேல்தட்டு மக்களை வளைத்து போடும் அதே வேளையில் எல்லா மக்கள் மத்தியிலும் உள்ள குட்டிமுதலாளித்துவ பண்பை தூண்டிவிடும் செயலே புதிய இடது கருத்துக் கொண்டவர்களின் நோக்கமாகும். இவை நமது இன்றைய சமூக எதார்த்தத்தை ஊன்றி கவனித்தால புரிந்துகொள்ளலாம். .மற்றொரு பக்கம் முன்னால் சோசலிச நாடுகளான ரசியா, சீன ஏகாதிபத்தியமாக இன்று உருவெடுத்துள்ள நிலையில் அவைகள் தனது சுரண்டலை மூடிமறைக்க கம்யூனிச முகமூடி அணிந்து சிலகாலம் மார்க்சிய லெனினியத்தை திரித்தது.இன்றைய அறிவியலையும், தொழிற் நுட்ப வளர்ச்சியையும் (இன்றைய அதி நவீன) மார்க்சிய வழியில் வளர்தெடுக்காமல் மார்க்சியத்தை திரிப்பதற்கு இதனை பயன்படுத்துவது இவர்களின் வேலையாக இருந்து வருகிறது. இந்த திருத்தல்வாதிகளை இன்று கம்யூனிஸ்டுகள் என்று நம்பி வாழும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் உள்ளது.

அதாவது புரட்சிகர உள்ளடகமின்றி புரட்சி வார்த்தைகளை பயன்படுத்துதல்; புரட்சிகர உள்ளடக்கத்திலிருந்தே மார்க்சியத்தை பிரித்தல். இவ்வாறு பல்வேறு வடிவங்களில் இந்த ஏகாதிபத்தியங்கள் இந்தச் சமூகத்தின் மீது கருத்தியல் ரீதியான தாக்குதல்களை தொடுத்து கொண்டுள்ளது அவை மார்க்சியம் அல்லாத போக்கை மார்க்சியமாக போதிக்கிறது.

திருத்தல்வாதம் போன்ற மார்க்சியத்தை மறுக்கும் போக்குகளால் அதனை எதிர் கொள்ள திறன் அற்று அதனுடன் சமரசமோ அல்லது சீரழிவுக்கோ இட்டு செல்கிறது. இதிலிருந்து மாறுபட்டு மார்க்சியத்தை உயர்த்திப்பிடித்து நிற்கும் மிகச் சிலரும் இங்கே மக்களின் செல்வாக்கில்லாமல் சோர்வுற்ற நிலையிலேயே இருக்கிறார்கள். அல்லது அவர்களின் பங்களிப்பு கணக்கில் கொள்ளப்படுவதே இல்லை.

“சோஷலிசத்தை நோக்கிய அமைதியான மாற்றம் என்பதும் பாராளுமன்றப் பாதையைப் பின்பற்றி சோசலிசத்தை எட்டுவது என்பதும் வெறும் மாயாவாதமே. அதிகாரத்தைக் கைப்பற்றுவது மற்றும் பிற்போக்கு அரசு இயந்திரத்தை தூள் தூளாக்குவது ஆகியவைதான் முக்கிய பிரச்சினையாகும். அதாவது அரசு அதிகாரம் பற்றியப் பிரச்சினையே முக்கிய பிரச்சினையாகும்.அரசு அதிகாரத்தின் முக்கிய அங்கமாக ஆயுதப்படைகள் உள்ளன. புரட்சிகர வன்முறையின்ற சுரண்டும் வர்க்கங்களின் ஆயுதப்படைகளைத் தகர்க்க முடியாது. சுரண்டும் வர்க்கங்கள் தாமாகவே முன்வந்து அதிகாரத்தை ஒப்படைக்கப் போவதில்லை. இதுதான் வரலாறு கற்பித்த பாடமாகும்.” மார்க்சின் பிரபலமான சொற்களை மேற்கோள் காட்டுவது எனில், “பலாத்காரம் ஒன்றுதான் ஒவ்வொரு பழையசமுதாயத்திலிருந்து பிரசவிக்கின்ற புதிய சமுதாயத்தின் மருத்துவச்சியாகும்.” லெனின் கூறியதைப் போல திரிபுவாதம் என்பது “மார்க்சிய உண்மைகளை ஆற்றலிழக்கச்செய்யும் முதலாளித்துவக் கோட்பாடாகும்” திரிபுவாதிகள் என்போர் அறிந்தும் அறியாமல் உழைக்கும் வர்க்கத்தினரின் மத்தியில் வாழுகின்ற முதலாளித்துவப் பிரதிநிதிகளாகவே செயல்படுகின்றனர்.

ஆக இன்று நம் முன்னுள்ள மார்க்சியம் அல்லாத போக்குகளை புரிந்து கொள்வதோடு சரியான வகையில் மார்க்சியத்தை கற்று தேறுவதும், அந்தக் கண்ணோட்டத்திலிந்து பிரச்சனைகளை புரிந்துகொண்டு அதனை தீர்ப்பதற்கான கொள்கையை வகுத்து செயல்படுவதும்தான் ஒரு மார்க்சியவாதியின் இலட்சியமாக இருக்க வேண்டும்.

நமது ஆசான் லெனின் என்ன செய்ய வேண்டும் என்ற நூலில் பேசியுள்ள வாசகத்தை கொஞ்சம் ஆழ்ந்து பாருங்கள் நமது நிலை புரியும், “1890-களின் இறுதியில் மட்டுமின்றி மத்தியிலுங்கூட சிறு கோரிக்கைகளுக்கான போராட்டத்தைத் தவிர வேறு வேலை செய்வதற்கான எல்லா நிலைமைகளும் – (தலைவர்களின் போதிய பயிற்சி நீங்கலாக) இருந்தன, சித்தாந்திகளும் தலைவர்களுமாகிய நமக்குப் போதிய பயிற்சி இருக்கவில்லை என்று மனந்திறந்து ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக – “நிலைமைகள் அப்படி இல்லை” என்று சொல்லி எந்தச் சித்தாந்தியாலும் இயக்கத்தைத் திசை திருப்பிவிடக்கூடாது என்பதற்கு மாறாக, பொருளாயத சூழ்நிலையின் பாதிப்பின் மீது, முற்றாகப் பழி சுமத்தி சரியான பாதையை நாம் தீர்மானிக்க முடியாது என்று சொல்லி அதற்குப்“பொருளாதாரவாதிகள் முயல்கிறார்கள். இது தன்னியல்பின் முன் அடிமைபோ பணிந்து கெஞ்சுவது தவிர வேறென்ன”, சித்தாந்திகள் தமது சொந்த குறைபாடுகளின் மீது மோகம் கொண்டிருப்பது தவிர வேறென்ன? ஆக மார்க்சியத்தை மார்க்சிய ஆசான்களிடமிருந்து தெளிவாக சரியாக கற்று தேறுவது ஒவ்வொரு மார்க்சியவாதியின் தேவை என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும் மாவோ கூறுகிறார், “நமது தோழர்களிடம் பொதுவாகக் காணப்படும் குறைகளை இப்படிப் பட்டியலிடலாம். சுயதிருப்தி, தற்பெருமை; மார்க்சிய இயக்கவியல், பகுப்பாய்வு அணுகுமுறை - அதாவது ஒன்றை இரண்டாகப் பகுத்து ஆய்தல் (சாதனைகள், குறைபாடுகள் என இரண்டாக) இவற்றை தமது செயல்பாடுகளில் பொருத்திப் பார்க்கத் தவறுதல்; தமது தளத்தில் என்ன வேலை உண்டோ அதை மட்டும் செய்வது; சாதனைகளை மட்டுமே முன்னிறுத்திப் பேசுவது, குறைபாடுகளையும் தவறுகளையும் கண்டுகொள்ளாமல் இருப்பது; முகஸ்துதியை விரும்புவது, விமர்சனங்களை வெறுப்பது; உயர், நடுத்தர கட்சி ஊழியர்களை அவர்களது மாகாணங்கள், நகரங்கள், ஊர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த துறைகளில் மட்டும் அல்லாது, பிற மாகாணங்கள், நகரங்கள், ஊர்கள், பிறதுறைகளிலும் களப்பணி ஆற்றச் செய்து தமது அனுபவங்களை தமது பிரதேசம் மற்றும் துறைகளிலும் பொருத்திப் பார்த்து ஒப்பீடு செய்து தமது பணிகளை மேலும் கூர்மைப்படுத்துவது ஒரு சிறந்த அணுகுமுறை. ஆனால் இத்தகையகளப்பணிகளில் ஆர்வமின்றி இருப்பது; தமது மாவட்டத்தில், தனது துறையில் மட்டும் கவனம் செலுத்துவது (குறுகிய பிரதேசமான) அங்கே தனது பணிகளைப்பற்றித் தானே பீற்றிக் கொண்டு அகங்காரம் கொள்வது,இதனால் ஒரு குறுகியவட்டத்துக்குள்ளேயே சுற்றிவருவது, வெளியே இருக்கும் ஒரு மிகப்பரந்த உலகைப் பற்றிய பார்வையோ அறிவோ இன்றி இருப்பது; மத்தியக் குழுவால்ஆங்காங்கே அனுப்பப்படுகின்ற வெளிநாட்டு விருந்தினர்கள், நாட்டின் பிற பகுதிகளிலிருந்து வரும் விருந்தினர்களுக்கு, தத்தமது சாதனைகளைப் பற்றி மட்டுமே பெருமையாக எடுத்துக் கூறுவது, குறைகளை மறைப்பது, தமது பணிகளைப் பற்றியே கூட மேம்போக்காகப் பேசுவது, ஆர்வமின்றி இருப்பது”.(மாவோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள் - தொகுதி ஒன்பது -பக்கம் 56 குறுங்குழுவாதம் பற்றி மாவோ கூறியவையே).

ஆனால் இங்கு நாம் பேசும் நிலை வேறாக உள்ளது இவர்கள் மார்க்சியஆசான்களின் போதனைகளையே மறுக்கின்றனர்.நமமிடையே உள்ள இடதுசாரிகளின் நிலை யானையைப் பார்த்த கண்ணில்லாதவர்கள் நிலை போல் உள்ளது. மார்க்சியத்தின் இயங்கியலையும் அதன் வளர்ச்சி நிலையில் புரிந்துக் கொள்ளாதவர்களாக உள்ளவர்களே இவர்கள்!!!

இவர்கள் மார்க்சியவாதியாக இருந்தாலும் மார்க்சியத்தை முழுமையாக புரிந்துக் கொள்ளாமல் இருபதற்கான காரணம்! அவர்கள் சார்ந்த கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சியத்தை சரியாக போதிக்காமையே இவர்களின் குறைபாட்டிற்கு காரணம்ஆகும்.

சற்று இதனை பற்றி புரிந்துக் கொள்ள முயலுவோம்.

விஞ்ஞான சோசலிச சமூகத்தின்‌ அரசியல்‌, பொருளாதாரம்‌ ஆகியவை பற்றிய கோட்பாட்டு உருவாக்கத்தையும்‌ சோசலிசப்‌ புரட்சி நடைபெறவிருக்கும்‌ சாத்தியமுள்ள நாடுகள்‌ பற்றிய கருதுகோள்‌களையும்‌ மார்க்சும்‌ ஏங்கெல்சும்‌ விளக்கினர்‌.

பல்வேறுவகைப்பட்ட சோசலிசங்கள்‌ பற்றிய, கருத்துகள்‌ நிலவிய-சூழலில்‌, பாட்டாளி வர்க்க சோசலிசம்‌ பற்றிய கருத்தை நிறுவி, சோசலிசம்‌ என்பது :பொதுவுடைமைக்கு மாறிச்‌செல்லும்‌ இடைக்கட்டம்‌ என்றும்‌ பொதுவுடைமையின்‌ முதல்‌கட்டம்‌ என்றும்‌ விளக்கியதே மார்க்சின்‌ பங்களிப்பில்‌ முதன்மை வாய்ந்ததாகும்‌. 1845 முதற்‌ கொண்டு வெளிவந்த மார்க்சியப்‌ படைப்புகளில்‌ காணக்‌கிடைக்கும்‌ குறிப்புகளை வைத்து பின்வருமாறு தொகுக்கலாம்‌.

சோசலிசக்‌ கோட்பாட்டு உருவாக்கம்‌

1. பொருளாதாரம்

அ) உற்பத்தி சாதனங்களின்‌ சமூகவுடைமை, இவற்‌றின்‌ மீதான தனியுடைமையை ஒழித்தல்‌. மூலதன இயல்பிலிருந்து இவற்றை விடுவித்தல்‌.

ஆ) திறமைக்கு ஏற்ப உழைப்பு, உழைப்புக்கு ஏற்ற‌ ஊதியம்‌. இதனால்‌ சமத்துவமற்ற நிலை ஒழிக்கப்பட்டு சமத்துவ நிலை தொடரும்

2. அரசியல்‌

அ) வர்க்கங்கள்‌ நீடிப்பதால்‌ அரசு தேவைப்‌படுகிறது. இதன்‌ வடிவம்‌ பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம்‌. ஆ) புரட்சிக்குப்பின்‌ அரசை ஒழிக்க வேண்டும்‌ என்பதுஅராஜக அபத்தம்‌. முதலாளி வர்க்க எதிரிகளை அடக்கி வைக்க பாட்டாளி வர்க்கசர்வாதிகார அரசு இல்லையெனில்‌ மொத்த பாட்டாளிவர்க்கத்தின் வெற்றியுமேதோல்வியில்‌ போய்‌ முடியும்‌.

3. கருதுகோள்‌

இத்தகைய சோசலிசப்புரட்சி, மிகவும்‌ முன்னேறிய நாடுகளில்‌--குறிப்பாக இங்கிலாந்து, ஜெர்மனி , பிரான்சு ஆகியவற்றில்‌--ஏற்படும்‌. முன்னேறியநாடுகள்‌ அனைத்தும்‌ ஒரே நேரத்தில்‌ தாக்கப்படலாம்‌. ஒரு தனி நாட்டில்‌சோசலிசப்புரட்சி சாத்தியமில்லை. - மார்க்சியக்‌ கோட்பாடு உருவாக்கமும்‌கருதுகோளும்‌ உதித்த சூழல்‌ முக்கியமானது. முதலாளிகட்கு இடையில்‌சுதந்திரமான போட்டி இருந்த காலத்தில் மார்க்ஸ் எங்கெல்சால் முன்வைக்கப்பட்ட கொள்கைகள்தான் இவை.‌.

19ஆம்‌ நூற்றாண்டு இறுதி முதல்‌ உள்ள குறிப்பான நிலைகளை ஆராய்ந்து இதுஏகாதிபத்திய சகாப்பதம் என்றும், இந்த ஏகாதிபத்திய சகாப்தத்திலும்‌ “சோசலிசப்புரட்சி சாத்தியம்‌” என லெனின்‌ கருதுககோளை உருவாக்கினார்‌. போட்டி என்பது இப்போது முதிலாளிகட்கு இடையில்‌ இல்லாமல்‌ ஏகபோகங்களுக்கு இடையிலானதாக மாறிவிட்டது என்றும்‌ உலகநாடுகள்‌ உலகப்பொருளாதாரச்‌ சங்கிலியின்‌ கண்ணிகளாக மாறி, சமனற்ற வளர்ச்சி நிலையில்‌ உள்ளன. என்றும்‌ லெனின்‌ முடிவுகண்டார்‌. இந்தப்‌ பொதுவான ” அரசியல்‌ பொருளாதார சூழலில்‌ சோசலிசப்‌ புரட்சியின்‌ சாத்தியம்‌ குறித்து லெனின்‌ தம்‌ கருதுகோள்களை முன்‌ வைத்தார்‌.

அவை:1. முன்னேறிய முதலாளிய நாடுதளில்தான்‌ சோசலிசப்புரட்சி ஏற்படும்‌ என்பதில்லை. பின்னடைந்த நாடுகளிலும்‌-பலவீனமான கண்ணியைப்‌ பொறுத்தும் ஏற்படலாம்‌. உற்பத்திச்‌ சக்திகள்‌ வளர்ச்சி அடையாமல்‌ முதலாளி-தொழிலாளி என்று சமூதசக்திகள்‌ (துல்லியமாக அமையாமல் ‌இருப்பினும்‌)புதிய வகைப்பட்ட முதலாளிய ஜனநாயகப்‌ புரட்சியின்‌ ஊடே சோசலிசப்‌ புரட்சிசாத்தியமாகும்‌.

2. வெவ்வேறு நாட்டிலும்‌ வெவ்வேறு காலங்களிலும்‌சோசலிசப்புரட்சிசாத்தியம்‌. உலகில்‌ முழுமையும்‌ அல்லது ஒரு சில நாடுகளில்‌ முழுமையும் ஒரே நேரத்தில்‌ சோசலிசப்‌ புரட்சி நடந்தாக வேண்டியதில்லை. தனி ஒரு நாட்டிலும்‌ சோசலிசப்‌ புரட்சி சாத்தியம்‌. இந்த மார்க்சிய -லெனினியக்‌ கருதுகோள்கள்‌, இதற்கு முந்தைய மார்க்சியக்‌ கருதுகோள்களை நிராகரித்து அல்ல, முன்னேறிய தன்மையுடையது... இந்த நிராகரிப்பின்றி வளர்ச்சி இல்லை.

சோசலிசம்‌ குறித்த மார்க்சியக்‌ கோட்பாடுகளை நிராகரிக்க முயன்ற முதலாளிய அறிவாளிகள்‌ முன்னிலையில்‌, மார்க்சியக்‌ கருதுகோள்‌களை வளர்சியடைந்த விஞ்ஞான சோசலிசக்‌ கோட்பாடாக லெனின்‌ உயர்த்திப்பிடித்தார்‌. இவைஏகாதிபத்தியமும் உலக‌ சோசலிசப்‌ புரட்சிகளும்‌ கொண்ட லெனினியசகாப்தத்தின்‌ கருதுகோள்களாகும்‌. (சாரம் முனைவர் கோ.கேசவனின் சோசலிச வீழ்ச்சி முன்னுரையிலிருந்து). இந்த மார்க்சிய லெனினியக்‌ கருதுகோள்கள்‌ இருபதாம்‌ நூற்றாண்டில்‌ நிரூபிக்கப்பட்டு, அரசியல்‌ யதார்த்தமாயின.

சோசலிசத்தை வரலாற்றுப்பிழை என நிரூபிக்க முயன்‌ற முதலாளிய அறிவாளிகள்‌ , மீண்டும்‌ ஒருமுறை தோற்றுப்‌ போயினர்‌. ரசியா, சீன, கிழ க்குஐரோப்பிய நாடுகள்‌ இந்த வரையறையின்படி சோசலிச நாடுகளாயின இன்றைக்கும்‌ உலகம்‌ லெனினது வரையறையில்‌ ஏகாதிபத்திய சகாப்தத்தில்‌ இயங்குவதால்‌ உலகில்‌ சோசலிசப்‌ புரட்சிகள்‌ சாத்தியம்‌ என்பதைக்‌ கோட்பாட்டு அளவில்‌ மறுக்க இயலாது...ஆக மார்க்சியத்தின் வளர்ச்சி போக்கை புரிந்துக் கொள்ளாத மார்க்சியவாதிகள் எப்படி மார்க்சியவாதிகளாக இருக்க முடியும் நீங்களே சிந்தியுங்கள் தோழர்களே!? மார்க்சியம் லெனினியமாக வளர்ந்துள்ளதை மறுத்து டிராட்ஸ்கியத்தை முன்நிறுத்துபவர்களே ஏகாதிபத்திய சகாப்தத்தில் ஒரு நாட்டில் புரட்சியின் சாத்தியத்தை மறுப்பார்கள். அதே போல் ஏகாதிபத்தியங்களை மிகையாக மதிப்பிட்டு மக்களை அச்சுறுத்துவார்கள்.

தன் முன்னோடிகள் தன் கட்சி கூறியவற்றை மட்டுமே மார்க்சியமாக நினைத்துகம்யூனிச அமைப்பிலுள்ள அப்பாவி கட்சி உறுப்பினர்கள் செயல்படுகின்றனர்.மார்க்சியம் ரசிய புரட்சியின் ஊடாக லெனினியமாகவும் சீனப் புரட்சியின் ஊடாகமாவோ சிந்தனையாகவும் வளர்ச்சியுற்றதை புரிந்துக் கொள்ளாதவர் எப்படிமார்க்சிய இயக்கவியலை புரிந்துக் கொள்வர்?

மார்க்சியமும் திருத்தல்வாதமும் என்ற நூல் 1908 ஆம் ஆண்டு லெனினால்எழுதப்பட்டது. 1905 இல் இருந்து 1907 இடைப்பட்டகட்டத்தில் ரஷ்ய புரட்சிதோல்வியடைந்ததால் பல்வேறு மார்க்சிய விரோத போக்குகள் ரசியாவில்தலைவிரித்தாடியது.

மார்க்சியம் இரு தரப்புகளில் இருந்து தாக்குதலுக்கு உட்படுத்தப்படுகிறது என்கிறார் லெனின். ஒன்று மார்க்சியத்தை மறுக்கும் போக்கு முதலாளித்துவதத்துவவாதிகளின் இப்போக்கு, இன்னொன்று மார்க்சியத்தை மறைமுகமாகதிருத்தம் செய்யும் போக்கு இவை மார்க்சிய போதனைகளில் திருத்தம் செய்தல் மார்க்சியத்தை ஆராய்கிறேன் என்று மார்க்சியத்தை குழப்புதல்.மார்க்சியத் தத்துவத்தின் சாரத்தையும், பொது விதிகளையும் செரித்துக்கொண்டு அவற்றை அந்தந்த நாட்டின் பருண்மையான, தனிச்சிறப்பான குறிப்பான நிலைமைகளுக்குப் பிரயோகிக்க வேண்டும் என்றுதான் மார்க்சியம் போதிக்கிறது. ஆனால்“மண்ணுக்கேற்ற மார்க்சியம்” என்ற கோசத்தின் அடிப்படையில் திராவிட –தமிழினவாதிகளும் மார்க்சியவாதிகள் என்ற அங்கீகாரத்தைப் பெறுவதற்குமுயலுகின்றனர். ஆனால் இவர்கள் ஒருபோதும் மார்க்சியவாதிகளாகஆகமாட்டார்கள். மாறாக இவர்கள் மார்க்சியத்துக்கு எதிரான குழப்பவாதிகளேஎன்பது விரைவில் நடைமுறையில் அம்பலமாவார்கள்..

இங்குள்ள அதிகாரபூர்வ கம்யூனிசக் கட்சிகள் தேசிய இனம், சாதியப்பிரச்சினைகளை, (தமிழின, மற்றும் தலித்தியவாதிகள் தோன்றுவதற்கு) பல ஆண்டுகள் முன்பு கம்யூனிஸ்டுகள் கைவிட்டதைப் பயன்படுத்தி இனவாதிகளும் தலித்திய சாதிவாதிகளும் இப்பொழுது அவர்கள் அதனை சந்தர்ப்பவாதமாகக் கையிலெடுத்து வர்க்கப் போராட்டத்தை திசைதிருப்பி நிலவுகின்ற அரசிடம் சலுகை கேட்டுக் கெஞ்சும் நிலைக்கு மக்களை தள்ளிவிட்டு விட்டு, உழைக்கும் மக்களை சாதிகளாகவும் இனங்களாகவும் பிரித்து அவர்களின் ஒற்றுமையை சீர்குலைத்துவிட்டு ஏகாதிபத்தியங்களுக்கு சேவை செய்து வருகிறார்கள். இதற்குக் காரணம் கம்யூனிச இயக்கத்திற்குள் தோன்றிய திருத்தல்வாதமே ஆகும். இதனை எதிர்த்துப் போராடி முறியடிக்க வேண்டியதுகம்யூனிஸ்டுகளின் கடமையாகும்.

மார்க்சியமோ, தனிச்சிறப்பான கூறுகளுக்கும், பருண்மையான நிலைமைகளுக்கும் ஒருங்கிணைந்த வழியையையும் தீர்வையும் கோருகிறது. அதற்கு மாறாக, சந்தர்ப்பவாத அரசியலையே நடைமுறையாகக் கொண்டவர்கள் வெவ்வேறு பிரச்சினைக்கு வெவ்வேறு தீர்வுகளைக் கூறும் தத்துவங்களைக் கலவையாக்கி,இதுதான் “மண்ணுக்கேற்ப மார்க்சியம்” என்கின்றனர்.இது பிரச்சனைகளைதனித்தனியாகப் பிரித்துப் பார்க்கும் இயங்காவியல் கண்ணோட்டமே ஆகும்.ஆனால் பிரச்சனைகள் ஒன்றுக்கொன்று தொடர்பானதே என்பதை இவர்கள் பார்க்கமறுக்கிறார்கள். சாதிக்கும் பொருளாதாரத்துக்கும் தொடர்புள்ளது, சாதிக்கும் வர்க்க ஒடுக்குமுறைக்கும் தொடர்புள்ளது, சாதிக்கும் நிலவுகின்ற அரசுக்கும் தொடர்புள்ளது இந்தத் தொடர்புகளையெல்லாம் பார்க்க மறுத்து, சாதிப்பிரச்சனை மட்டும் தனித்துப் பார்த்து அதற்கென தனியான தீர்வை முன்வைத்து செயல்படும் போது அதோடு தொடர்புள்ள மற்ற பிரச்சனைகள் முன்னுக்கு வரும்போது இவர்களால் ஒன்றும் செய்ய முடியாமல் மக்களை நடுத்தெருவில்விட்டுவிடுவதை நாம் காணலாம்.

இந்த வகையில் தமிழின, தலித்தியவாதிகள் மட்டுமல்ல, இந்துமதவெறி சனாதனிகள் கூட “மண்ணுக்கேற்ற மார்க்சியம்” பேசமுடியும் என்பதுதான சமீபத்திய முன்னேற்றம்!

மாவோ ஒரு முறை சொன்னதுபோல் மார்க்சியம் என்பதே பொதுத் தன்மையைக் குறிப்பானதன்மையுடன் இணைப்பதாகவும். அந்தந்த நாடுகளில் உள்ள குறிப்பான தன்மைகளுக்கு ஏற்ப பொதுவான தன்மைகள் பொருத்தப்பட வேண்டுமே தவிர, குறிப்பான தன்மைகளுக்கு முதன்மை கொடுத்து பொதுத்தன்மைகளை மறந்து விடக்கூடாது. அதே போலவே பொதுத்தன்மைக்கு முதன்மை கொடுத்து குறிப்பானம்தன்மையை புறக்கணிப்பதும் தவறே ஆகும். ஆகவே மார்க்சியம்ன்பொதுவானதையும் குறிப்பானதையும் இணைக்க வேண்டும் என்றே சொல்கிறது.எதனையும் நாம் விட்டுவிடக்கூடாது என்றே மார்க்சியம் வலியுறுத்துகிறது.

 ஆனால் மண்ணுக்கேத்த மார்க்சியவாதிகள் குறிப்பானவற்றை முன்வைத்துபொதுவான மார்க்சிய விஞ்ஞானத்தை மறுக்கும் விதமாக மண்ணுக்கேத்த மார்க்சியம் என்று நம்மை குழப்புகிறார்கள்ஆனால் இங்குள்ள சிலர் இதுபோன்ற பொதுத்தன்மைகளை அதாவது பொதுஉண்மைகளை புறக்கணித்துவிடுகின்றனர். அதன் மூலம் பொதுத்தன்மையை குறிப்பான தன்மையுடன் பொருத்திப்பார்த்து விஞ்ஞானப்பூர்வமான முடிவிற்கு வராமல் அகவயமான முடிவிற்குச் செல்கின்றனர்.ஆனால் இங்கு நாம் பேசும் நிலை வேறாக உள்ளது இவர்கள் மார்க்சிய ஆசான்களின் போதனைகளையே மறுக்கின்றனர்.தொடரும் அடுத்த இதழில்....

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்