ஜாதி அன்றும் இன்றும்-ஜாதி தீண்டாமை ஒழிப்பு பற்றிய சில-3

ஜாதியம் தோற்றம்

பண்டைய காலத்தில் மானுட சமூகம் சிறு சிறு குழுக்களாக வாழ்க்கை நடத்தியது. மக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை தாங்களே தேடிக் கொண்டனர். உழைப்புப் பிரிவினை சமமாக இருந்தது. ஆண்கள் வேட்டையாடினார்கள் உணவுப் பொருட்களை சேகரித்தனர். பெண்கள் உணவு தயாரித்தனர் வீட்டை கவனித்தனர். அந்தந்த துறையில் அவர்கள் மேலோங்கிருந்தந்தனர். அவர்கள் பயன்படுத்தும் பொருள்கள் அவர்களுக்கு சொந்தமாக இருந்தன. வேட்டையாடிய பொருள்களையும் இயற்கை உணவுப் பொருளையும் சேகரித்து எல்லாவற்றையும் பொதுவில் அனுபவித்தனர். இதனை உணவு சேகரிக்கும் நிலை (Food Gathering stage) என்பர் மானிடவியல் அறிஞர்கள்.

காட்டில் விலங்குகளை கண்டான் தானும் வளர்க்கக் கற்றுக்கொண்டான் அதனால் அது ஒரு தொழிலாகியது. கால்நடை வளர்ப்பும் பொருள் உற்பத்தியாக கால்நடை மூலம் பலவிதங்களில் மனித தேவைகளை பயன்படுத்தும் ஒரு நிலையை உண்டாக்கியது.

ஆண்கள் வேட்டையாடுதலில் ஈடுபடும்போது பெண்கள் கால்நடைகளை பராமரித்தலும் அதனை மேம்படுத்தும் பணியிலும் ஈடுபட்டதால் சமுதாய பொருளாதார நிலையில் பெண்களுக்கான ஒரு நிலை இருந்தது.

கால்நடை கொள்ளையிட பல குழுக்களுக்கிடையே சண்டைகள் மூண்டது, பல தடவை தங்களது தொழிலான கால்நடைகளை சண்டையிட்டு மீட்டனர்.

கூட்டு சமுதாயத்தில் கால்நடையை கவர்ந்து களவாடி செல்ல நடந்த போர்கள் போல இப்பொழுது நிலங்களை அபகறிபதற்கான போர்கள் நடைபெற்றன. அதாவது உற்பத்தி சாதனமாகிய நிலத்தை கொள்ளையடிப்பதற்காக போர்கள் நடைபெற்றன.

கிமு 300 ஆண்டுகளில் இரும்பு பயன்படுத்தப்பட்டதாக அறிகிறோம். தமிழ்நாட்டில் அகழ்ந்தெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளும் இரும்பின் பயன்பாட்டுக்குசான்றுபகிர்கின்றன.அதிசநல்லூரில் அகழ்ந்தெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளில் இரும்பு கத்திகள் கூர்வாள்கள், தீட்டிய அம்புகள், சிறு கோடாரி, கதிர் அரிவாள்கள், உளி, கைப்பிடிப்புள்ள இருமுனை வாள்கள், இரும்புத்தூண்டில், நீள் கைப்பிடிக் கரண்டி, மரம் செதுக்கும் கருவிகள் ஆகியன கண்டுபிடிக்கப் பட்டுள்ளன இவை இன்றளவும் சென்னை அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

வேளாண்மையில் இரும்பு கருவிகளின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க உற்பத்தி பெருகிகொண்டு போயிற்று. இன்னும் திருத்தமான கருவிகளுடன் மனிதனின் உற்பத்தி திறனும் புதிதான நிலங்களும் சேர்ந்துகொண்டு உற்பத்தியில் ஒரு பாய்ச்சலை ஏற்படுத்தியது. இந்த பாய்ச்சல் சமுதாயமாற்றங்களையும் உள்ளடக்கிக்கொண்டு வெளிவரலாயிற்று. கால்நடைகளினால் தங்கள் இன்றியமையாத வாழ்க்கை ஆதாரமாக இருந்த நிலை மாறியது. விலங்குகளை சார்ந்து இருக்க வேண்டிய நிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டது.

பெரிய காட்டில் அலைந்து திரிந்து வேட்டையாடி சேகரிக்கும் பொருள்களையும் விட கால்நடைகளை மேய்த்து கிடைத்தவை பெரிதே அதனை விட சிறிய நிலத்தை திருத்தும் அளவில் சிறிய கருவிகளை வைத்துக் கொண்டு உழுது பெற்ற உற்பத்திப் பொருள்கள் அதுவும் ஒரே இடத்தில் நிறைய பொருள்கள் கிடைக்கப்பெற்றன.இது எண்ணிக்கை பெருகப்பெருக தன்மைரீதியிலேயே மாற்றம் பெற்ற சமூகத்திற்கு வேளாண்மை வழிகாட்டியது. கால்நடைகளை வளர்த்தல் என்பது வேட்டையாடி உணவு சேகரிக்கும் நிலையை விட சற்றுமுன்னேறிய நிலை என்றாலும் கூட இரண்டு தொழில்களுக்கும் இடம் விட்டு இடம் நகர்ந்து செல்ல வேண்டியிருந்தது.

வேளாண்மைக்கு தேவையான கைவினைத் தொழில்கள் தோற்றம் பெறலாயின. இதை தொடர்ந்து ஏற்பட்ட உற்பத்தி மாற்றங்கள் மனிதனின் உழைப்பு சக்தியை பெருகியது. இப்போது மனிதன் தன்தன் தேவைகளுக்கு அதிகமாகவே உற்பத்தி செய்வதற்கான தன் உற்பத்தித் திறனை வளர்த்துக் கொண்டன. இந்நேரத்தில் வேளாண்மை, கைத்தொழில் என்று இரு மாபெரும் கிளைகள் உற்பத்தியில் பிரிவினையாக ஏற்பட்டதிலிருந்து, நேரடியாக பரிமாற்றத்துக்கான உற்பத்தி செய்யும் முறை அதாவது சரக்கு உற்பத்தி முறை பிறந்தது. அதன் உடன் நிகழ்வாகவே வியாபாரம் வந்து சேர்ந்தது. பணக்காரன் ஏழை என்ற வேறுபாடும் புகுந்தது.

புதிய வேலைப் பிரிவினைகளின் கீழே சமுதாயம் வர்க்கங்களாக பிரிந்தது, கூட்டு சமுதாயத்தில் இருந்த பல்வேறு குடும்பத் தலைவர்களின் சொத்துடமைகளில் ஏற்பட்ட மாறுபாடுகள் அதாவது மேலே மேலே ஏறி வரும் தனிச்சொத்து கூட்டுச் சமுதாய அமைப்பில் முதல் உடைப்பை ஏற்படுத்தியது. தொடக்ககால கைத்தொழில்கள் சரக்கு உற்பத்திமுறை இவற்றோடு மக்கள் தொகையும் பெருகியது, இத்துடன் செல்வ விசயத்தில் பெருத்த வேறுபாடுகள் சேர்ந்தன.

இதற்கு முன்னால் கூட்டுச் சமுதாய அமைப்புகுள் உயிரோட்டமாக நிலவிய ஜனநாயக முறைக்குள்ளேயே இச்செல்வவேறுபாடுகள் எல்லாம் ஒரு தனிப்பட்ட பிரபுத்துவ அம்சத்தை தோற்றுவித்தது. இன்னும் நன்கு விளையக்கூடிய முறையிலான உற்பத்தி சாதனங்களை நிலங்களை விஸ்தீரணம் செய்ய வேண்டியிருந்தது, எனவே இடத்தை அதாவது நிலத்தை பிரதேசத்தை மையமாகக் கொள்ள வேண்டிய அவசியம் வருகிறது.

இந்தக் காலத்தில் ஒரு நிலம் இன்னொரு நிலத்தோடு கலந்து வரலாற்று நிர்ப்பந்தமாக இணைக்கப்படும் போது பிரதேசமாய் வளர்கிறது. ஆக விவசாயம் பெருகவும் கைத்தொழிலும் வணிகமும் பல்வேறு பகுதிகளுடன் தொடர்பும் அவசியமாகிறது. இவைதான் பல்வேறு பிரிவுகள் நிலவுடமை சமூகத்தில் தோன்றியது பற்றி வரலாற்று வழி புரிதல்கள்.

  • ஜாதி அமைப்பு என்பது நன்கு வரையறுக் கப்பட்ட ஒரு நிறுவனம் அல்ல, இது ஒரே ஒற்றை வரலாற்று நிகழ்வில் உருவாகவில்லை. ஆனால் வெவ்வேறு சமூக தோற்றங்களைக் கொண்ட வளர்ச்சி போக்கில் ஒரு ஒழுங்கற்ற அமைப்பாகும், அவை அனைத்தும் காலப்போக்கில் கலந்தன.மனிதர்கள் ஆரம்பத்தில் அனைவரும் சிறிய குழுக்களிலோ அல்லது பழங்குடியினரிராகவோ இருந்துள்ளனர், மற்ற குழுக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கவில்லை.

நாம் ஜாதியை அதன் வேர்களை தேட பல ஆய்வு நூல்களை வாசித்தாலும் உலகில் பல பகுதிகளில் ஏற்ற தாழ்வான சமூக வர்க்க அமைப்பு போலவே இந்திய ஜாதி அமைப்பும் தோன்றியது என்பதில் மாற்று கருத்தேயில்லை. ஆனால் இந்த எல்லா நாடுகளிலும் இன்று (விதிவிலக்காக இந்தியா இலங்கை போன்ற நாடுகள் தவிர்த்து) ஜாதியின் வேர்கள் இல்லாமல் போய்விட்டது. இந்தியாவில் கோலோச்சுவது போலவே ஈழப்பகுதிகள் ஜாதியம் மீண்டெழுகிறது அவை ஏன் எப்படி என்பதனை இன்றைய ஏகாதிபத்தியம் தனது அவசியம் கருதி இவ்விதமான முரணை மக்கள் மத்தியில் விதைக்கிறது. ஜாதியை அழிபதற்கு பதில் உயிர்பிக்கும் பணியை ஆளும் வர்க்கம் தொடர்ந்து செவ்வனே செய்துக் கொண்டே உள்ளது. ஏன் எதற்கு என்பதனை விளங்கிக் கொண்டலே ஜாதியின் கொடூரம் விரைவில் நம்மிடையே வெகுவிரைவில் காணாமல் போய்விடும்.

இந்து மதத்தில் பிராம்மணர், க்ஷத்ரியர், வைச்யர், சூத்ரர் என்று நான்கு வர்ணங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த வர்ணங்களை நாம் ஜாதி என்கிறோம். உண்மையில் ஜாதி வேறே, வர்ணம் வேறே, வர்ணங்கள் மேலே சொன்ன நாலுதான். இதற்குள்ளேயே ஒவ்வோன்றிலும் பல ஜாதிகள் இருக்கின்றன. நாம் இங்கு சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சினையும் தீண்டாமையின் ஒரு வடிவம் என்பதனையும் தெளிவடைய வேண்டும்.

இன்று தினம் தினம் நாம் பார்க்கும் செய்திகளும், செயல்களும் நாம் வாழும் இச்சமூகத்தின் ஒரு பகுதியினருக்கு செத்தப் பிணத்தை கூட எடுத்து செல்ல பொது வழி இல்லை, ஒன்றாக வாழ்வதற்கு இடமில்லை, ஒற்றுமையாக வாழவழிவகையில்லை இப்படி மக்களை பல்வேறு பிரிவினர்களாக பிரித்ததில்லாமல் இதில் ஒரு பிரிவினர் கீழானவர், தீண்டதாகதவர் என்று ஒதுக்கி வைக்கும் கீழான போக்கே இந்த பிரிவினையே ஜாதியம், ஜாதி இருதலுக்கு கட்டியம் கூறுகிறது. இந்த தீண்டாமை மற்றும் பல ஒடுக்குமுறைக்கு ஆளாகும் ஜாதியினராகட்டும், ஆதிக்க ஜாதி எனக் கூறப்படுவராகட்டும். உழைக்கும் மக்களும் உழைக்காமல் வாழும் கூட்டமும் இன்று வர்க்கமாக பிரிந்துள்ளது. ஜாதியின் உச்சியில் அமர்ந்துள்ள அந்தந்த ஜாதியில் மேலாண்மை புரிபவர்களுக்காக கடைநிலையில் உள்ள உழைப்பாளர்கள் தங்களுக்குள் மோதிக் கொண்டும் ஒருவரையொருவர் கொன்று கொண்டும் வாழும் அவலம் இவை ஏன்?

தமிழகத்தில் ஜாதி குறித்து நமது புரிதலை பல வரலாற்று ஆசிரியர்கள் நமக்கு தொகுத்தழித்துள்ளனர். பல்லவர் காலம் தொட்டு இன்றைய ஆட்சியாளர்கள் வரை ஜாதியத்தை கையாண்டு விதமும் புரிதலும் ஆழமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக இன்று இன்நிலைக்கு காரணத்தை விரிவாக அலசுவோம்.

இங்கு வந்த பிரிட்டிஷார் தனது அதிகாரத்துக்கு ஜாதி மதம் பற்றிய தேவை புரிந்து கொண்டனர். அதற்கான ஆய்வுகளையும் சித்தாந்தத்தின் ஆரம்ப கட்டத்தையும் அவர்களின் அரசியல் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு விதமான போக்குகளை இங்கே புகுத்தினார்கள் வரும் பகுதியில் ஆழமாக இதனை பற்றி பேசுவோம். ஜாதியின் தோற்றம், வளர்ச்சி மற்றும் இன்றுள்ள போக்குகள் பற்றி விரிவாக ஆய்வோம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் பொதுக்கல்விமுறை துவங்கப்பட்டது. இதனால் ஆங்கிலக் கல்வி பெற்ற உயரடுக்கு இந்தியர்கள் உருவானார்கள். இவர்கள் பெரும்பாலும் மத்தியதர வர்க்கத்தை சார்ந்தவர்களாகவும், உயர் சாதியை சார்ந்தவர்களாகவும் இருந்தனர். பெரும்பாலான அரசாங்க வேலைகள் முதல் பெருவியாபாரம் வரை ஆங்கிலேயர்களின் ஆதிக்கம்தான் நீடித்தது. இந்த நடுத்தர வர்க்க நுண்ணறிவு உள்ளவர்களின் எண்ணிக்கை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பல மடங்காக உயர்ந்தது. அவர்கள் பெரும்பாலும் இந்தியா முழுவதிலும் இருந்த தலைநகரங்களில் காணப்பட்டனர். இந்த நடுத்தர வர்க்க நுண்ணறிவு உள்ளவர்களின் அபிலாசைகள்தான் பிழைப்புவாத ஆங்கிலேய அடிவருடிதன பல போக்குகள்.இந்திய விடுதலை என்பது ஆங்கில ஏகபோக முதலாளித்து வர்க்கத்திற்கும், இந்திய நிலப் பிரபுக்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே நடந்த ஒரு சமரசம் ஆகும். இந்திய முதலாளிகள் ஆட்சிமாற்றதிற்குப் பிறகும் நாட்டின் பொருளாதார, அரசியல், சமுதாய, கலாச்சார வளர்ச்சியை முதலாளித்துவப் பாதையிலேயே உருவாக்க விரும்பினர். அதற்காக பிரிட்டிஷ்ஆட்சியாளர்களின் பாதையிலேயே நிலப்பிரபுத்துவத்தையும் முதலாளித்து வத்திற்கு முந்தைய நிறுவனங்களையும் அடிப்படையாகக் கொண்டு, அப்பொழுது மேலோங்கியிருந்த பிற்போக்கான ஆதிக்க வர்க்கங்களின் ஆட்சி அமைக்கப்பட்டது. இந்த நிலைமை உருவானதற்கான காரணத்தை அறிய சுதந்திர போராட்டத்தின் துவக்க காலங்களுக்கு செல்ல வேண்டும்.

சுதந்திர போராட்டத்தின் ஆரம்பகட்டத்தில் (துவக்ககால மதப்பழமைவாத) தீவிரவாத தேசியவாதம் என்பது, உண்மையில் ஒரு பழமைவாத சக்தி. அவர்கள் நாட்டினுடைய காலாவதியான அனைத்து சமுதாய கலாச்சார விஷயங்களையும் பாதுகாக்க முற்பட்டனர். நவீனத்துவத்தின் உந்து சக்தியாக இருக்க வேண்டியே முதலாளித்துவ வளர்ச்சி அன்றைய ஆட்சியாளர்களுடன் சமரசத்தை ஏற்படுத்திக் கொண்டது” என்கிறார் இ.எம்.எஸ்.

அன்றைய காங்கிரஸ் தலவர்கள் நாட்டில் காலாவதியான அரசியல் மற்றும் சமூக கலாச்சார நிறுவனங்களை பிற்போக்கான சமூக அம்சங்கள் மறையாமல் பாதுகாக்கப்பட்டன. இதுவே ஆங்கிலேயே ஏகபோக முதலாளித்துவத்திற்கு, இந்திய நிலப்பிரபுக்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே சுதந்திர இந்தியாவில் உருவான சமரசத்திற்கான அடிப்படை என்கிறார் இ.எம்.எஸ். அந்த பழைய பிற்போக்கின் ஒரு வெளிப்பாடே ஜாதி என்றால் மிகையல்ல...

இன்று நம்மத்தியில் பிரச்சாரம் செய்யப்படும் பல்வேறுவிதமான கருத்தியல்கள் உள்ள அமைப்புமுறையினை வலிந்து கட்டிக்காக்கதான். அதனை பற்றி புரிந்துக் கொள்ள வேண்டும்.

உலகில் தோன்றிய பல்வேறு விதமான பிரிவுகள் மனித குல வளர்ச்சி போக்கில் நாம் காண்கிறோம். அவற்றின் ஒரு போக்கு தான் ஜாதியம். ஜாதிக்குரிய தன்மைகள் குறிப்பிட்ட பல அம்சங்கள் தெற்காசிய சமூகத்தில் விரவிகிடப்பதாக அறிஞர்கள் கருதுகின்றனர் (கோ. கேசவன் நூல் தொகுப்பு இரண்டு தலித்தியம் பக்கம் 230.)இந்தியா முழுவதிலும் ஜாதி பரவிகிடக்கிறது அது பொது தன்மையோடு இருப்பினும் அதில் பலவட்டார அடிப்படையிலான வேறுபாடு அம்சங்களையும் காணலாம். தமிழகத்திற்கு உள்ளே காணப்படும் சில ஜாதிகள் வடப்பகுதிக்கும் தென்பகுதிக்கும் இடையில் ஒற்றுமை இல்லாமையும் இதே போல தென் மாநிலங்களான ஆந்திரா, தமிழக, கர்நாடகா, கேரளாவில் ஜாதிகள் ஒன்றோடு ஒன்று இணைந்தும் காண முடியவில்லை. ஆந்திராவில் உள்ள ஜாதிகள் கர்நாடகத்திலோ கர்நாடகாவில் உள்ள ஜாதிகள் தமிழகத்திலோ இல்லை. மொழிவழி மாநிலங்களான இவைகளுக்கிடையே கூட ஒன்றுபட்ட ஜாதிகள் இல்லாதது போலவே வட இந்திய இந்தி பேசும் மாநிலங்களுக்கிடையிலே கூட ஜாதியில் ஒற்றுமை இல்லை. பல்வேறு பிரதேசங்களுக்கான தனித்தனியான ஜாதிகள் உள்ளதை காணலாம். இந்த வேறுபாடுகளை கணக்கில் எடுக்க வேண்டும். ஆக பல்வேறு வட்டார வேறுபாடுகள் உடன் ஜாதி இங்கு இருக்குமாக காணப்படுகிறது. மேலேகுறிப்பிட்டது போல் பகுதிவாரியாக இருந்த பழங்குடிகளுக்குள் ஏற்பட்ட தொழிற்பிரிவினை அவர்களுகிடையில் குலங்களின் பெயரில் ஜாதிகளாக பின்னர் மாறியது போலவே அந்த தொழ்குடிகளே அந்தந்தப் பகுதியின் ஆதிக்கவாதிகளா உயர்ந்தோங்கினர். இவையே பகுதிவாரியான ஜாதியின் பெயர்கள் புரிந்துக் கொள்ள.வேளாண்மை சமூகத்தில் பிரதான உற்பத்தி சாதனமாக நிலம் விளங்கியது. வேளாண்மை சார்ந்த உற்பத்தி ஈடுபடும் பல்வேறு விதமான போக்குகள்தொடங்கியது. தொழில் வகுப்புகளும், மூளை உழைப்பு, உடல் உழைப்பு என உழைப்புத் திறன் இரண்டாகப் பிரிக்கப்பட்டு இருந்தாலும் இரண்டும் அதற்கான தனித்தனியான திறனை கோருகின்றன.

நில உடமை சமூக அமைப்பின் தொடக்கத்தில் வேளாண்மை, வேளாண்மை சார்பு கைவினை ஆகியவை மட்டுமின்றி தொண்டூழியத் தொழிலும் இருந்தன. ஒவ்வொரு தொழில் பிரிவினையும் அவர்கள் சார்ந்த தொழில்நுட்ப அறிவு அந்தக் குறிப்பிட்ட தொழில் பிரிவினருக்கே உரியதாக இருந்தது. மேலும் நிலஉடமை உற்பத்தி முறையில் ஒவ்வொரு தொழிலும் முழுமையான ஒரு சுய உள்ளாற்றல்களையும் இயங்குதல்களையும் கொண்டிருந்தது. அதே நேரத்தில் பொதுவான அமைப்புக்குள் இயங்கிக் கொண்டும் இருந்தது. ஒவ்வொரு தொழிலும் தன் சுயேச்சை தன்மையை பேணிக் கொண்டிருந்ததோடு நிலஉடமை பொருளாதாரத்தில் ஒரு கண்ணியாகவும் இருந்தது.

பொது சமூகத்தில் அங்கமாக உள்ளது, தொழில் வகுப்புகள் தொழில் ரீதியாக சுயேச்சையான தங்களுக்கான தனித்தனி தொழில் வகுப்பின் அடிப்படையில் தொழில் ரீதியாக ஒன்று கலக்கவே இயலாது. ஆனால் ஒரு தொழில் வகுப்பின் உற்பத்தி திறனில் உருவான முழு பொருளும் இன்னொரு தொழில் வகுப்பு நுகர்வு பொருளாக அல்லது அதன் உற்பத்திக்கு ஆதாரப்பொருளாக அமைய இயலும். கலப்பை செய்ய தச்சர் ஈடுபடும் போது வேளாளர் அதில் ஒன்று செய்ய முடியாது ஆனால் தச்சரின் கலப்பையை வேளாளர் வேளாண்மை விளைபொருளுக்கு பயன்படுத்த முடியும். அதே நேரத்தில் வேளாளர் விளைச்சலை தச்சரும் பயன்படுத்த முடியும்.

தொழில்முறையில் தச்சரின் ஏர் கலப்பையை ஒரு குயவர் நேரடியாக நுகரமுடியாது ஆனால் தச்சரின்கலப்பை பயன்படுத்தி வேளாண்மையால் விளைவிக்கப்பட்ட விளைப் பொருளை குயவரும் நுகரமுடியும்.

நில உடமை சமூகத்தில் வேளாண்மை வகைப்பட்ட கிராமங்களில் வேளாளர்கள் உடல் உழைப்பாளர்களாகவும் நிர்வாகிப்பவராகவும் இருந்தனர்.

இந்த கிராம உற்பத்தி முறையில் மூளை உழைப்பாளர்களும் உடல் உழைப்பாளர்களும் ஆகிய இரு பிரிவினர் கொண்டதாக இருந்தது. கிராம நிர்வாகத்தையும் பொருளாதாரத்தையும் ஒழுங்கமைக்க புரோகிதர்களாக இருந்தனர். அதேபோல தொழில் பிரிவினை அடிப்படையில் கைவினைஞர்களும் சேவை பிரிவினரும் இதே நிர்வாக அமைப்பில் கட்டுண்டு கிடக்க வேண்டிய தேவை இருந்தது. அரசியல் அதிகாரம் கையில் இருந்த புரோகிதர்களும், வேளாளர்களும் கைவினைஞர்களின் உழைப்பையும் சேவை பிரிவினர் உழைப்பையும் ஒரு வகையில் குத்தகை என்ற பெயரில் அபகரிக்க தொடங்கினர். புரோகிதரும் வேளாளரும் தமக்கான உரிமை பாதுகாப்பது போலவே தொழில் பிரிவினர் தமக்குரிய தொழில் பிரிவின் ரகசியத்தையும் தனக்கான தேவையாக ரகசியமாக காக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நிலஉரிமை கொண்ட பிரிவினர் பெண்கள் உற்பத்தியில் இருந்து ஒதுக்கப்பட்டனர். சேவை தொழில் செய்பவரும் கைத்தொழில் செய்வதும் பெண்களை உற்பத்தியில் ஈடுபடுத்தினர். ஆக தங்களின் தொழில் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் தொழில் ரீதியான மேலாண்மையை தங்களுக்குள் நிர்வகித்துக் கொள்வதற்காகவும் இக்குழுவுக்குள்ளே தங்களுக்கான தொழில் வகுப்புகள் அகமண முறையைக் கட்டிக் காத்துக் கொண்டன.நிலஉரிமை வகுப்புகளான புரோகிதர்களுக்கும், வேளாளர்களுக்கும் தங்களுக்கான சந்ததிகளுக்கு காப்புரிமைக்காக அகமணமுறையை தேர்ந்தெடுத்தனர். நிலஉரிமை வகுப்புகளான புரோகிதர்களுக்கும், வேளாளர்களுக்கும் தங்களுக்கான சந்ததிகளுக்கு காப்புரிமைக்காக அகமணமுறையை தேர்ந்தெடுத்தனர். இதை கைவினை பிரிவினருக்கும் சேவை பிரிவினருக்கும் தேவைப்பட்டது.

இங்கே நாம் புரிந்து கொள்வது புரோகித பிரிவினரின் அகமனமுறை மட்டுமல்ல இதற்கு மேலாக உற்பத்திசாதனம் உரிமைகாப்பு தொழில்நுட்ப ரகசியகாப்பு கருத்துருவ மேலாதிக்கம் கொண்டிருந்தனர். இவ்வாறாக தொழில்வழி வகுப்புகள் அகமணமுறை அமைய வேண்டியதேவை ஏற்பட்டது, சாத்தியமாகியது. இவ்வாறு ஏற்பட்ட தொழில்பிரிவினை தொடர்ச்சிதான் ஜாதிகளாகவும் வர்ண நெறிமுறையிலும் வர்க்கக சமூக அமைப்பிலும் இதன் அடிப்படையில் புரிந்து கொள்ள முடியும்.

கிராம சமூகத்தில் புரோகிதர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலதானங்கள் பொருள்தானங்கள் ஆதாரங்கள் மனதில் கொண்டால் புரோகிதர்களான பார்ப்பனர்கள் அந்த சமூகத்தில் உச்சத்தில் இருந்தனர். கருத்துப் பரப்புவதன் மூலமாக உள்ள அரசுஅதிகாரத்தை கட்டி காப்பதற்கு சாத்திர தத்துவசேவை செய்வதிலும் ஈடுபட்டதால் மேம்பட்டு விளங்கினர். எல்லாவித வசதிவாய்ப்புகளையும் பெற்றுள்ள புரோகிதர்கள்; அதேநேரத்தில் எவ்வித உற்பத்தி சாதனங்களும் இன்றி, வெறும் உற்பத்தியில் மட்டும் ஈடுபட்டுள்ள உழைப்பு பிரிவினையான சேவை பிரிவினர் ஒடுக்கப்பட்டு கடைநிலைக்கு தள்ளப்பட்டனர்.

வர்க்க சமூகத்தில் கூட படிநிலை என்பது குறிப்பிட்ட காலத்திய உற்பத்தி முறையில் குறிப்பிட்ட வர்க்கங்கள் பெறும் இடத்தை பொறுத்து உள்ளது. உற்பத்தி சாதனங்களின் உரிமை, உற்பத்தி திறன் மற்றும் உற்பத்தி பொருள் பங்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் உள்ளது.

இந்தியாவில் நிலஉடமை முறையை ஆராய்ந்த மார்க்சிய அறிஞர் கோசாம்பி மேலிருந்து நிலவுடமை முறை கீழிருந்து நிலவுடமை முறை என இரண்டு விதங்களாக காண்கிறார். பிராமணர்களுக்கும் படைத்தலைவர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கு நிலங்கள் வழங்கப்பட்ட பகுதியில் இருந்ததை மேலிருந்து நில உடமை முறை என்றும் மேலும் அரசுக்கும் கிராம மக்களுக்கும் இடையில் உறவில் கேந்திர கண்ணியாக இருந்த கிராம நிர்வாகத் தலைவர்கள் காலப்போக்கில் உருவாக்கிக் கொண்டது கீழிருந்து நிலவுடமை முறை என்பர்.

ஆற்றங்கரைப் பகுதிகளில் நீர்ப்பாசனப் பகுதிகளும் முதலாம் வகை நிலவுடமை இருந்தது. இரண்டு வேளாண்மைமயமாக்கலிலும் பல புதிய தொழில்கள் உருவாகின. வேளாண்மை, வேளாண்மை சார்பு கைவினை தொழில்கள் ஆகியவற்றுடன் கோயிலை ஒட்டியும் பல தொழில்கள் உருவாக்கின.

இவ்வாறாக ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாகிய தொழில் பிரிவின் அடிப்படையில் தோன்றிய பல்வேறு பிரிவுகள் பின்னர் ஜாதிகளாக பல்வேறு வகைப்பட்ட வகைகளாக பிரிந்து போயின. இவற்றை அடையாளப்படுத்தவும் இவற்றை பாதுகாக்கவும் பிரிட்டிஷ் அரசானது தனக்கான ஒரு வகைப்பட்ட வேலையை செய்தது. அவை தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு ஜாதி வாரி பிரதிநிதித்துவம். விரிவாக இதனைப் பற்றி பிறகு பார்ப்போம்.

நிலஉடமை சமூக அமைப்பின் தொடக்கத்தில் வேளாண்மை வேளாண்மை சார்ந்த கைவினை ஆகியோர் மட்டுமின்றி தொண்டு ஊழிய தொழிலும் இருந்தன, இவை பாரம்பரியமாக கையளிக்கப்பட்டன. இவற்றிற்குரிய தொழில்நுட்பம் ஒரு கலையாக மட்டுமின்றி அந்த தொழில் வகுப்பு மட்டுமே தெரிந்ததாக இருந்தது. இதில் கூட ஆணாதிக்கத்தை உற்பத்தி சாதனஉரிமை சாதிகளோடு இணைத்து காண வேண்டும். நிலஉரிமை கொண்ட சாதிகளில் பெண்கள் முற்றாக சமூக உற்பத்தியில் இருந்து விலக்கப்பட்டனர். ஆனால் கைவினை ஜாதிகள், சேவை ஜாதிகள் ஆகியவற்றில் குடும்ப உழைப்பு இருந்ததனால் அங்கு சமூக உற்பத்தில் பெண்கள் ஓரளவு ஈடுபட நேர்ந்தது.

இன்னும் தொடரும் நாளை...












No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்