ஜாதி தீண்டாமை

விஞ்ஞான வளர்ச்சியும்,புதிய கண்டுபிடிப்புகளும் உலகத்தை மின்னல் வேகத்தில் முன்னெடுத்துச் சென்றுக் கொண்டுள்ளது. ஆனால் அவை அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளதா என்றால்? ஒடுக்கும் ஆளும் வர்க்க தேவைக்காக நாட்டில் பெரும் பகுதி மக்கள் ஜாதி, மத நம்பிக்கை மூடப்பழக்க வழக்கங்களின் காரணமாக அறியாமையில் மூழ்கடித்துள்ளுது என்பேன். சாதியம் கண்மூடி மௌனமாக இருந்து கொண்டே தனது எதிர்கால இருதலைப் பற்றி சிந்திக்கிறது. பல்வேறு காரணிகளை நாம் அறிந்தவைதான்சாதியம் தனிநபர்களை சார்ந்த பிரச்சினை அல்ல அவை சமூகம் சார்ந்த பிரச்சினை. அது சமூக அரசியல், பொருளாதார,கடவுள்கள், மதம் சார்ந்த நம்பிக்கைகள், பாரம்பரியம் பண்பாடு சார்ந்த பிரச்சினை ஆகும். இந்தப் பண்பாடு எல்லா ஜாதி குடும்பங்களுக்குள்ளும் இருக்கவே செய்கிறது இது தெற்காசிய பிராந்தியத்தின் முறுக்கேறி போனமனநோய். இந்த மனநோயால் சுயம் இழந்துகிடப்பவர்களை ஜாதிவேற்றுமை பாராட்டுபவர்களை விமர்சனம் செய்வதாலோ திட்டி தீர்ப்பதாலோ எந்த மாற்றமும் நன்மையும் ஏற்படப் போவதில்லை.பதிலாக ஜாதியத்தின் இருப்புக்கு காரணமான அடிப்படைகளை கேள்விக்கு உள்ளாக்குவதோடு மார்க்சிய புரிதலும் சமூக அறிவிலும் புரிந்துகொண்டு இதற்கான அடிப்படையோடு களமாடி சமூகத்தை புரட்டிப் போடவேண்டிய அவசியம் உள்ளது. சிந்தனை விடுதலையோடு சமூக விடுதலையும், ஒடுக்குபவனை தூக்கி எறிந்து ஒடுக்கப்படுபவர்களுக்கு விடுதலைதேடி ஏற்றத்தாழ்வுகளை களைந்திடுவதோடு அதற்கான பணியினையும் செய்ய வேண்டும்.
ஜாதியானது இன்றும் இந்திய சமூகத்தில் புதியபுதிய வடிவத்தில் பரிணமித்து வாழ்ந்துக் கொண்டுள்ளது. இந்தியாவில் நவீனமயமாதல், வளர்ச்சி, ஜனநாயக, நிர்வாகம் என்றுஎன்னதான் பேசிக் கொண்டிருந்தாலும் இன்றும் நம் சமூகத்தில் சமத்துவமின்மையும் சமூக விலக்குகளும் பெருமளவு தொடரத்தான் செய்கிறது.
சிலர் குறிபிடுவதுபோல் ஜாதியானது மனித சமூகம் தோன்றியபோதே தோன்றிய 
ஒன்றல்ல. அதேபோல் ஜாதியின் ஆதிக்கம் நிலவுடமை சமுகத்தில் கோலோச்சினாலும் அதன் தன்மைகள் இன்றும் அன்றுபோல் இல்லை. இன்று நாம் வாழும் சமூகத்தில் ஜாதி ஏன் உயிர் வாழ்கிறது என்பதனையும். அம்பேத்கார் பெரியார் ஜாதி ஒழிப்பிற்கு போராடினார்கள் என்பதோடு அவர்கள் எந்தளவிற்கு அதில் வெற்றிகண்டனர் என்பதனையும், உண்மையில் சமூகத்தில் இந்த ஏற்றதாழ்வான நிலைக்கு முடிவுகட்ட ஜாதியை கட்டிகாக்கும் அமைப்புமுறையை தகர்த்து ஒடுக்குமுறை அடக்குமுறை சுரண்டல்முறை அற்ற சமத்துவ சமூகத்தில் இந்த ஜாதிய தீண்டாமை கொடுமைக்கு தீர்வு காணப்படும் என்பதனையும் அதற்கான தீர்வு இந்த பிற்போக்கு அம்சங்களை தூக்கியெறிந்து சமத்துவ சமூகத்தில்தான் சாத்தியம் என்பதனையும் விளக்கியுள்ளேன்.
மனித சமூக ஆரம்பகாலம் முதல் நமது நாட்டில் இன்றைய மோதல்கள் வரை மார்க்சிய வரலாற்று பொருள்முதல்வாத பார்வையில் விளக்க முயற்சி செய்துள்ளேன்l  வரலாறு என்பது மக்கட்சமுதாயத்தின் அல்லது அதன் கூறுகளின் காலப்பதிவாகும்.அது வரலாற்று நிகழ்வுகளின் ஆவணத் தொகுதியாகவும் அமைகின்றது. அத்தோடு நாட்டையும் அம்மக்களையும் பற்றி நிற்பதோடு மானிடத்தையும் அதனோடு கூடியதானகால உறவினையும் தொடர்புபடுத்தும் பதிவேடாகவும் வரலாறு திகழவேண்டும்இதற்கான தேடல்கள் தவறான தரவுகளைக் கொண்டிருப்பின் அதுவே தவறான வழிகாட்டியாகவும் ஆகிவிடும். ஆகவேதான் அதற்கென குறிக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளின் அடிப்படையில் வரலாறுகள் எழுதப்படவேண்டிய அவசியம் உணரப்படுகின்றது.
21 ம் நூற்றாண்டில் வழமையான வரலாற்றுப் போக்கில் நாம் சிந்தித்துப் பார்க்கலாம். 
நாலேநூற்றாண்டின் முதலாளித்துவம் உலகத்தை முந்தைய ஆயிரமாண்டு காலவரலாற்று  
காலத்திலும் காட்டிலும் வேகமாக மாற்றியமைத்துள்ளது: மனிதசமூகத்தை பூமியோடும் 
பிறவாழ் விலங்கினங்களோடும் ஒப்பிடும்போது அளவற்ற விகிதத்தில் வளர்ந்துள்ளது
உலகமக்கள் தொகையாகட்டும், தனிநபர் பயன்படுத்தும் வளமும் வியப்புறும் வகையில் 
அதிகரித்துள்ளது. அதே வேகத்தோடு ஆயிரமாண்டு இயற்கைச் சூழலையும் சீர்செய்ய 
முடியாத அளவில் மோசமடைந்து வருகிறது. முதலாளித்துவ அமைப்பிலேயே இப்போக்கு
 வேரூன்றியுள்ளது. ஒவ்வொரு நூற்றாண்டுகளிலும், நிலைமை மேலும் மோசமடையும் 
போக்கையே காண்கிறோம்.

சமுதாயத்தில் ஏற்பட்ட ஒவ்வொரு மாற்றமும் உற்பத்தி உபகரணங்களில் ஏற்பட்ட மாற்றங்களால் வரையறுக்கப்பட்டும் அம்மாற்றங்களைத் தொடர்ந்துமே நிகழ்ந்துள்ளன என நாம் காணலாம். எனவே சமூகத்தின் வரலாறு என்பது பொருள் சார்ந்த மதிப்புக்களின் உற்பத்தியாளர்களது வரலாறேயாகும். 

விஞ்ஞான வளர்ச்சியும்,புதிய கண்டுபிடிப்புகளும் உலகத்தை மின்னல் வேகத்தில் முன்னெடுத்துச் சென்றுக் கொண்டுள்ளது. ஆனால் அவை அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளதா என்றால்? ஒடுக்கும் ஆளும் வர்க்க தேவைக்காக நாட்டில் பெரும் பகுதி மக்கள் ஜாதி, மத நம்பிக்கை மூடப்பழக்க வழக்கங்களின் காரணமாக அறியாமையில் மூழ்கடித்துள்ளுது என்பேன். சாதியம் கண்மூடி மௌனமாக இருந்து கொண்டே தனது எதிர்கால இருதலைப் பற்றி சிந்திக்கிறது. பல்வேறு காரணிகளை நாம் அறிந்தவைதான்சாதியம் தனிநபர்களை சார்ந்த பிரச்சினை அல்ல அவை சமூகம் சார்ந்த பிரச்சினை. அது சமூக அரசியல், பொருளாதார,கடவுள்கள், மதம் சார்ந்த நம்பிக்கைகள், பாரம்பரியம் பண்பாடு சார்ந்த பிரச்சினை ஆகும். இந்தப் பண்பாடு எல்லா ஜாதி குடும்பங்களுக்குள்ளும் இருக்கவே செய்கிறது இது தெற்காசிய பிராந்தியத்தின் முறுக்கேறி போனமனநோய். இந்த மனநோயால் சுயம் இழந்துகிடப்பவர்களை ஜாதிவேற்றுமை பாராட்டுபவர்களை விமர்சனம் செய்வதாலோ திட்டி தீர்ப்பதாலோ எந்த மாற்றமும் நன்மையும் ஏற்படப் போவதில்லை.பதிலாக ஜாதியத்தின் இருப்புக்கு காரணமான அடிப்படைகளை கேள்விக்கு உள்ளாக்குவதோடு மார்க்சிய புரிதலும் சமூக அறிவிலும் புரிந்துகொண்டு இதற்கான அடிப்படையோடு களமாடி சமூகத்தை புரட்டிப் போடவேண்டிய அவசியம் உள்ளது. சிந்தனை விடுதலையோடு சமூக விடுதலையும், ஒடுக்குபவனை தூக்கி எறிந்து ஒடுக்கப்படுபவர்களுக்கு விடுதலைதேடி ஏற்றத்தாழ்வுகளை களைந்திடுவதோடு அதற்கான பணியினையும் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்