தோழர்களுக்கு வணக்கம்... இன்றைய விவாதம் ஜாதியின் தோற்றம் இன்றைய இருப்பு அதனை ஒழிப்பது பற்றிய மார்க்சிய கண்ணோட்டம் ஆம் ஜாதி பற்றி பல்வேறு கோட்பாடுகள் உள்ளன அவை எல்லாம் ஆதரம் அற்ற நம்பிக்கையின் அடிப்படையிலானவையே ஆனால் மார்க்சியம் வரலாற்று பொருள்முதல்வாத அடிப்படையில் சமூகத்தை ஆய்வு செய்து அதன் வளர்ச்சி போக்கை விளக்குவதோடு அதன் ஒவ்வொரு நிலையையும் கண்ணாடிபோல் நம்முன் வைக்கிறது ஆக அதன் அடிப்படையில் தெளிவடைய விரும்புவோர் விவாதிக்கலாம் நம்மை சீர்படுத்திக் கொள்ளலாம் தோழர்களே... வாருங்கள் விவாதிக்க....
இதற்கு அடுத்த பகுதியை வாசிக்க இந்த இணைப்பை அழுத்தவும்
இதற்கு முன்னர் மார்க்சிய தத்துவஞானத்தின் தோற்றம் வளர்ச்சியும் வரலாற்று பொருள்முதல்வாதத்தின் ஆரம்பமும் அதன் பகுபாய்வுமுறையும் தெரிந்துக் கொண்டால் விவாதிக்க எளிதாக இருக்கும் தோழர்களே. மார்க்சிய தத்துவஞானம் அதன் காலத்து தத்துவம் என சிந்தனையை ஆதாரமாகக் கொண்டிருந்தது. பல நூற்றாண்டுகளாய் தத்துவஞானிகள் வகுத்தளித்த சீரிய முற்போக்கான கருத்துக்கள் அனைத்தையும் அது தொடர்ந்து விரிவு படுத்தியது. 19ஆம் நூற்றாண்டின் மூலச் சிறப்புள்ள ஜெர்மனிய தத்துவ ஞானத்தில் எல்லாவற்றிற்கும் மேலாக ஹெகல் ஃபாயர்பாஹ் ஆகியோருது தத்துவங்களில் இருந்த முற்போக்கு கருத்துக்கள் மார்க்சிய தத்துவம் ஞானத்தின் உடனடி தத்துவார்த்த தோற்றுவாய்கள் ஆகும்.
புரட்சிகரமான பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டில் இருந்து ஹெகலின் இயக்கவியலையும் ஃபாயர்பாஹின் பொருள் முதல்வாதம் ஆகியவற்றைப் பற்றிய விமர்சன ரீதியான பரிசீலனையின் போக்கில் தான் மார்க்ஸ் ஏங்கெல்சின் தத்துவஞான கருத்துகள் உருப்பெற்றன.
தங்களது இளமைக்காலத்தில் மார்க்சும் எங்கெல்சும் ஹெகலின் தத்துவஞானத்தில் மிகுந்த ஆர்வம் காட்டினர். ஹெகல் ஒரு புறநிலை கருத்துமுதல்வாதி, ஆனால் அவர் கருத்துமுதல்வாதத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்கவியலை ஆழமான முறையில் வளர்த்தார்.
ஹெகலின் இயக்கவியலின் பிரதான கோட்பாடுகள் விதிகள் மற்றும் வகையினங்களை வகுத்தளித்தார். கருத்துகள் கீழான வடிவங்களில் இருந்து உயர்ந்த வடிவங்களுக்கு முன்னேற்றகரமாக வளர்ச்சி அடைகின்றன இந்த வளர்ச்சி போக்கில் அளவு மாற்றங்கள் பண்பு மாற்றங்களாய் பரிணமிக்கின்றன. உள்முரண்பாடுகள் வளர்ச்சியின் தோற்றுவாய்கள் ஆகின்றன என்பதை அவர் எடுத்துக் காட்டினார். அவர் இயக்கவியலின் முக்கிய வகையினங்களில் உள்ள தொடர்புகளையும் பரஸ்பரம் மாறும் தன்மையின் எடுத்துக்காட்டினார். ஆனால் அவரது இயக்கவியல் கருத்துமுதல்வாதம் ஆகும். அது மனிதனுக்கும் பிரபஞ்சத்துக்கும் அப்பாற்பட்ட உணர்வின் அல்லது தனி முதல் கருத்து.
உலக ஆன்மாவின் இயக்கவியல் மேலும் ஹெகல் கடந்த காலத்தைப் பற்றிய பகுப்பாய்வுக்கு மட்டுமே இயக்கவியலின் விதிகளை பயன்படுத்தினார், எதிர்காலத்துக்கு அவற்றை பயன்படுத்தவில்லை.
மார்க்சும் ஏங்கெல்ஸும் புரட்சிகரமான ஜனநாயக நிலமை பற்றி உழைக்கும் மக்களின் நலன்களை உறுதியாக ஆதரித்தார்கள். அது மக்களிடையே உள்ள உறவுகளில் பொருளாதாரம் நலன்களின் தீர்மானகரமான பாத்திரத்தை புரிந்து கொள்வதற்கு அவர்களை இட்டுச் சென்றது. உற்பத்தி சாதனங்கள் தனியுடைமை தான் சமூக ஏற்றத்தாழ்வுக்கும் வர்க்க போராட்டத்திற்கு மூலகாரணம் என்று அவர்கள் உணர்ந்தனர். இவை அனைத்தையும் ஹெகலின் தத்துவஞானத்தில் உள்ள கருத்து முதல்வாத அடிப்படைகளை அரித்தழித்தன.
மார்க்ஸ் எங்கெல்ஸ்சின் கருத்துக்களை உருவாக்குவதில் ஃபாயபாஹின் பொருள் முதல்வாதம் முக்கியமான பாத்திரத்தை வகித்தது, ஃபாயர் பாஹ் கருத்து முதல்வாதத்தையும் மதத்தையும் உறுதியான முறையில் நிராகரித்த தத்துவஞானம். இயற்கையின் மனிதனையும் ஆராய்ந்து அறிய வேண்டும் என்று அவர் கூறினார்.இயற்கையின் நெடுங்காலத்திய வளர்ச்சியின் உற்பத்தி பொருளே மனிதன் என்று அவர் கருதினார். உணர்வு இயற்கையைப் பிரதிபலித்து அறிகிறது என்று அவர் நம்பினார். "தனி முதல் கருத்து" "உலக ஆன்மா" உலகத்தையே படைத்து ஒழுங்கு படுத்துகிறது என்கின்ற ஹெகலின் கருத்து மாயவாதம் என்று அவர் வர்ணித்தார். கடவுள் உலகத்தை படைக்கவில்லை மனிதர்கள்தான் தாங்கள் வாழ்கின்ற நிலைமைகளுக்கு ஏற்ற வகையில் தங்களுடைய சொந்த உருவங்களை போலவே கற்பனையில் கடவுளை படைக்கிறார்கள் என்று அவர் வாதிட்டார்.
கருத்து முதல்வாத தத்துவ ஞானத்தைப் பற்றிய ஃபாயர்பாஹின் விமர்சனம் மார்க்ஸ் எங்கெல்ஸை உறுதியான பொருள் முதல்வாத நிலையை கடைப்பிடிப்பதற்கு உதவி செய்தது. ஆனால் அவர்கள் ஃபயர் பார்க்கை அப்படியே பின்பற்றவில்லை ஏனென்றால் அவருடைய பொருள் முதல்வாதம் இயக்கம்மறுப்பியல் பால் பட்டது. மேலும் அவரது தத்துவஞானம் சமூக அரசியல் போராட்டங்களை உள்ளடக்கியது இல்லை நடைமுறை வகிக்கின்ற பாத்திரத்தை காட்ட வில்லை.
மார்க்சும் எங்கெல்சும் -ஹெகலின் இயக்கவியலை விமர்சனம் பூர்வமாக அணுகி அதிலிருந்த கருத்துமுதல்வாதத்தை அகற்றி யதார்த்தமான உலகை அறிவதற்கான புரட்சிகரமாக மாற்றி அமைத்தனர். அதேபோல ஃபாயர்பாஹின் பொருள் முதல்வாதத்தை விமர்சன ரீதியாக மறுபரிசீலனை செய்து அதிலிருந்து இயக்க மறுப்பியல் மற்றும் யூக சிந்தனை முறையை அகற்றி அதனை தொழிலாளி வர்க்கம் மற்றும் இதர உழைக்கும் மக்களின் விடுதலைப் போராட்டத்துடனும் வாழ்க்கையுடனும் தொடர்பு கொள்ளுமாறு செய்தனர் நமது ஆசான்கள்.
மார்க்சும் எங்கெல்சும் உருவாக்கிய தத்துவம் தத்துவஞான வரலாற்றில் ஒரு அடிப்படையான புரட்சியை விஞ்ஞான வளர்ச்சியில் ஒரு மெய்யான புரட்சி ஏற்படுத்தியது.அந்தப் புரட்சியின் சாராம்சத்தை எடுத்துக் கூறுவது மார்க்சும் எங்கெல்சும் தத்துவஞான சிந்தனையில் அறிமுகப்படுத்திய புதிய கூறுகளையும் அவர்களுடைய போதனைக்கும் முந்திய தத்துவ ஞானங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளையும் குறிப்பிடுவதாகும்.
நடைமுறையோடு உழைக்கும் மக்களில் மிகப் பெரும்பான்மை யினருடைய நலன்களுக்காக உலகத்தையே புரட்சிகரமாக மாற்றி அமைப்பதோடு நெருங்கிய இணைப்பு மார்க்சும் எங்கெல்சும் வளர்த்த தத்துவ ஞானத்தின் முக்கியமான பிரத்தியேக அம்சமாகும். "தத்துவஞானிகள் உலகத்தைப் பற்றி பல்வேறு வழிகளில் வியக்கியானம் மட்டுமே செய்தனர், முக்கியம் என்னவென்றால் அதை மாற்றி அமைப்பது தான் என்று மார்க்சிய பிரத்யேகமாக கூறினார். ஆனால் உலகத்தை மாற்றியமைப்பதற்கு அதன் வாழ்நிலை மற்றும் வளர்ச்சியின் விதிகளை நன்கு அறிந்து அவற்றை பயன்படுத்துவதற்குரிய திறமை வேண்டும். அது ஒரு கரரான விஞ்ஞான தத்துவ ஞானத்தை ஒரு ஆழ்ந்த விஞ்ஞான உலக கண்ணோட்டத்தை கோருகிறது.
முதலாவதாக இயக்கவியலையும் பொருள்முதல் வாதத்தையும் ஒன்றிணைத்தனர் .
இயக்க மறுப்பில் ரீதியான பொருள் முதல்வாதத்தையும் கருத்து முதல்வாத ரீதியிலான இயக்கவியலையும் ஆக்கபூர்வமான முறையில் பொருள் முதல்வாதத்தை இயக்க மறுப்பிலிருந்து விடுவித்தும் இயக்கவியலை கருத்து முதல்வாதத்திலிருந்து விடுவித்தும் லெனின் குறிப்பிட்டது போல் "பொருள் முதல் வாதத்தை இயக்கவியலோடு சேர்த்து சேழுமைப் படுத்தி இயக்கவியலை ஒரு உண்மையான அடிப்படையில் வைத்தனர். இயக்கவியல் பொருள் முதல்வாதத்தின் தோற்றம் என்பது ஒரு உண்மையான விஞ்ஞான உலக கண்ணோட்டத்தில் மிக ஆழமான அறிவியல் தத்துவஞானத்தின் தோற்றம் என பொருளாகும்".
இரண்டாவதாக மார்க்சும் எங்கெல்சும் பொருள்முதல் வாதத்தையும் இயக்கவியலையும் சமூக வாழ்க்கை கற்று அறிந்து அதற்கு விளக்கம் அளிப்பதற்கு ஏற்ப விரிவு படுத்தினர். முந்தைய பொருள் முதல்வாதிகள் முரண்பாடான நிலையில் இருந்தனர். இயற்கை நிகழ்வுகளுக்கு மட்டுமே பொருள் முதல்வாத விளக்கம் அளித்தனர் சமுதாய புலப்பாடுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் போக்குகளுக்கும் விளக்கம் அளிப்பதில் கருத்து முதல்வாதிகளே மேலோங்கி இருந்தனர். சமுதாயத்தை பொருள் முதல்வாத ரீதியில் விளக்குகின்ற பொழுது பொருள் முதலாக விஞ்ஞான ரீதியாக மட்டுமல்லததாகவும் முழு நிறைவானதாகவும் ஒரே சமயத்தில் இயக்கவியல் ரீதியிலும் வரலாற்றில் ரீதியிலும் உள்ளது.
இயக்கவியல் மற்றும் வரலாற்று பொருள்முதல்வாதத்தை படைத்தளித்ததன் மூலம் மார்க்ஸ் எங்கெல்ஸ் தத்துவஞானத்தில் ஒரு புரட்சி நிகழ்ச்சியை காட்டினார்கள். உலகத்திற்கும் அதன் மாறுதல் மற்றும் வளர்ச்சி விதிகளுக்கும் ஒரு விஞ்ஞான விளக்கம் அளிக்க இயக்கவியல் மற்றும் வரலாற்று பொருள் முதல்வாதம் ஒரு விஞ்ஞான உலக கண்ணோட்டம் மட்டுமின்றி யதார்த்தத்தை புரட்சிகரமாக மாற்றி அமைக்கின்ற வழியும் ஆகும்.
வரலாற்று பொருள் முதல்வாதம் வளர்ந்து கொண்டே செல்வதற்கு காரணம் அது தொழிலாளி வர்க்கம் மற்றும் இதர உழைக்கும் மக்களின் கைகளில் அவர்களது புரட்சிகர போராட்டத்தில் ஒரு தத்துவாயுதமாக விளங்குகிறது. விஞ்ஞான ரீதியாக அறிதல் மற்றும் உலகத்தை புரட்சிகரமாக மாற்றி அமைப்பதில் சக்தி மிக்க கருவியாக விளங்குகிறது. இந்த பாத்திரத்தை நிறைவேற்றுவதற்கு அது வாழ்க்கையோடு புரட்சிகர நடைமுறையோடு எப்பொழுதும் தொடர்பு வைத்திருக்க வேண்டும். அனைத்து நடைமுறை வினாக்களுக்கும் விடையளித்து அனைத்து புதியவற்றிலும் தாமதம் இன்றி கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஆக நம்மை புரிந்துக் கொள்ள நம்மிடையே உள்ள மார்க்சியம் அல்லாத போக்கை தெளிவாக புரிந்துக் கொள்ள வேண்டும் நாம்.
மேற்கு ஐரோப்பாவில் 1848-1871 காலப்பகுதி முற்போக்குப் பாத்திரம் வகிந்திருந்த முதலாளித்துவத்திற்கும் பின்னைய ஏகாதிபத்திய வளர்நிலை காலத்தில் ஏற்பட்ட மாறுபாடுகளை கவனத்தில் கொள்கின்றார். 1882- 1904 காலகட்டமானது மேற்கில் முதலாளித்துவ சனநாயகத்தின் அடிப்படை உரிமைகள் நடைமுறைப் படுத்தப்பட்டன. தொழிற்சங்கம், சட்டரீதியாக கட்சி, பிரச்சாரங்கள் மேற்கொள்ளக் கற்றுக் கொண்டனர். மார்க்சிசமும் பல நாடுகளில் பரவிக் கொண்டது. இந்தக் காலத்தில் நாடாளுமன்ற சனநாயகத்தை நம்பவும், முதலாளித்துவ சனநாயகத்தை நம்பவும், அமைதி வழியில் உரிமையை பெறமுடியும் என்று கற்பிக்கப்பட்டது என்கின்றார் தோழர் லெனின். இன்றும் அமைதி வழியில் உரிமை பெற முடியும் என்று ஆளுவர்க்கத்தின் எடுபிடிகள் கருத்துரைத்துக் கொண்டு வருகின்றார்கள். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ("liberty, equality, fraternity") என்ற பிரெஞ்சு வகை சுதந்திரம் இன்று வரையில் உயர்ந்ததாக பேசப்பட்டே வருகின்றது. யுத்தங்கள், ஆக்கிரமிப்புகள், சந்தைக்கான போட்டி என்று நடைபெற்றே வந்துள்ளது. உலகப் போர்கள் தொடக்கம் இன்றைய யுத்தங்கள் வரையில் அவ்வாறே. “இப்போது முழுநிறைவாக அம்பலமாக்கப்பட்டுவிட்ட முதலாளித்துவ சுதந்திரம், முதலாளித்துவ சமத்துவம், முதலாளித்துவ ஜனநாயகம் ஆகியவற்றின் சுரண்டும் தன்மையை மக்களிடமிருந்து மூடிமறைக்க முடியாது. (ப175-9தே.நூ) வரலாற்றுப் போக்கில் அம்பலப்பட்ட முதலாளித்துவ ஜனநாயகத்தைக் கொண்டு பிரச்சனையை தீர்க்க முயற்சிக்கப்படுகின்றது. முதலாளித்துவமே தன்னை நிலைநிறுத்தப் போராடுகின்றது. மார்க்சியர்கள் முதலாளித்துவம் வளர்ச்சியடையாத நாடுகளில் ஏற்படுகின்ற முரண்பாடுகளை தீர்த்துக் கொள்வதற்கான போராட்ட முறை, தீர்வுகள் பற்றிய நிலைப்பாட்டினை காலச் சூழலை, வரலாற்றை அறிய வேண்டும்.
சாதியக் கட்டமைப்பை விளங்கிக் கொள்ளல், அதனை எவ்வாறு சமூகத்தில்
இருந்து களைவது என்பது பற்றிய புரிதலில் பற்றாக் குறையுள்ளது. அதிலும் குறிப்பாக இலங்கை சாதியம் பற்றிய விடயத்தில் தமிழகத்தவர்களுக்கு
சரியான வகையில் விளக்கம் கொடுக்க வேண்டிய கடமை உள்ளது. ஈழத்தின் சாதியக் கட்டமைப்பு, அது கடந்து வந்த பாதை, போராட்டங்கள், அதனால் ஏற்பட்ட
பண்பு, அளவு மாற்றம் என்பதை சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது. ஏனெனில் சமூகக் கட்டமைப்பு
ஒன்றின் மீது ஒன்று புரிந்த எதிர்வினைகள் அவை ஏற்படுத்திய விளைவுகள், செலுத்திய எதிர்வினைகள்
நிறையவே உள்ளது.
மேற்கு நாடுகளில் வளர்ந்த முதலாளித்துவம் அவர்களின் பொருளியல் சிந்தனைமுறையையும் முற்போக்காக வளர செய்தது ஆனால் நம் போன்ற நாடுகளில் நிலை என்னே? மேற்கு நாடுகளிலும் நமது நாட்டிலும் மார்க்சியம் முழுமையாகத் தத்துவார்த்த வெற்றி பெற்றுவிட்ட சூழ்நிலையில் நம் நாட்டில் நடைபெற்று வருகின்றது. எனவே இப்போராட்டத்தின் வடிவமானது மார்க்சியத்துகான போராட்டம் என்று கூறுவதை விட “கிட்டத்தட்ட மார்க்சியச்" சொற்றொடர்களுக்குப் பின்னால் ஒளிந்து வைக்கப்பட்டுள்ள குட்டி பூர்சுவா தத்துவங்களுக்கு ஆதரவாகவும் எதிராகவும் நடத்தப்படும் போராட்டம் என்று கூறுவது பொருத்தமாகும் என்கிறார் எமது தோழர் வேலன்.
சமூகத்தின் குறிப்பான சூழல், வர்க்கங்களின் வளர்ச்சிப் போக்கில்
மார்க்சியத்தை உள்வாங்குவதிலும் சிக்கல்கள் உண்டு.
ஆனால் மூலவர்களின் வழிகாட்டலை மீள மீள கற்றுக் கொள்ளத் தயாராக இல்லாத அறிவுத் தேடல் சோம்பேறிகள் நிறைந்த உலகமாக இருக்கின்றது. மூன்றாவது பாதை (177-9) இல்லை என்பதை அறிந்து கொள்ளாது இருக்கின்றார்கள். இதனை ஏகாதிபத்தியவாதிகள் சிறப்பாக விளங்கிக் கொண்டுள்ளார்கள். ஆனால் போலி மார்க்சியர்களின் வியாக்கியானம் என்பது மூலவர்களின் உலகக் கண்ணோட்டம், திறனாய்வில் இருந்து நழுவியே உள்ளது.
சரி இனி விவாதிக்க செல்வோம்....
அடுத்த பதிவிற்கு செல்ல இந்த இணைப்பை அழுத்தவும்
No comments:
Post a Comment