இலக்கு இணைய இதழ் 62

 இந்த இதழில் பேசப்பட்டுள்ள தலைப்பு

1). இடதுசாரி கம்யூனிசம் இளம்பருவக்கோளாறு. பாகம் 7.

2). டூரிங்குக்கு மறுப்பு எங்கெல்ஸ் பாகம் 1

3).தொழிற்சங்கங்கள் குறித்து மார்க்சிய ஆசான்கள் பாகம் - 2

4). பொதுவான கம்யூனிச கொள்கையின் அடிப்படைகளை மக்களிடம் பிரச்சாரம் செய்யக்கூடாது என்று கூப்பாடு போடும் கயவர்களை புரிந்துகொள்வோம்.

5). மார்க்சியமும் மார்க்சியத்தை மறுக்கும் ஏகாதிபத்தி பிற்போக்கு தத்துவங்களும்

6). திறந்தநிலை மார்க்சியம் ஓர் விமர்சனம்.

லெனின்,”முன்னேறிய முதலாளிய நாடுதளில்தான்‌ சோசலிசப்‌ புரட்சி ஏற்படும்‌ என்பதில்லை. பின்னடைந்த நாடுகளிலும்‌- பலவீனமான கண்ணியைப்‌ 'பொறுத்து ஏற்படலாம்‌. உற்பத்திச்‌ சக்திகள்‌ வளர்ச்சியடையாமல்‌ முதலாளி, தொழிலாளி என்று சமூதசக்திகள்‌ "துல்லியமாக அமையாமல்‌ இருப்பினும்‌ புதிய வகைப்பட்ட முதலாளிய ஜனநாயகப்‌ புரட்சியின்‌ ஊடே சோசலிசப்‌ புரட்சி சாத்தியமாகும்‌. 2. வெவ்வேறு நாட்டிலும்‌ வெவ்வறு காலங்களிலும்‌ சோசலிசப்புரட்சி சாத்தியம்‌. உலக முழுமையும்‌-- _ அல்லது ஒரு சில நாடுகளில்‌ முழுமையும்‌--ஒரே நேரத்தில்‌ சோசலிசப்‌ புரட்சி நடந்தாக்‌ வேண்டியதில்லை. தனி ஒரு நாட்டிலும்‌ சோசலிசப்‌ புரட்சி சாத்தியம்‌.”“சந்தேகத்துக்கு இடமின்றித் தம்மை மார்க்சியவாதிகளாய்க் கருதிக் கொள்வோர், மார்க்சியவாதிகளாகவே இருக்க விரும்புவோர், மார்க்சியத்தின் அடிப்படை உண்மைகளை மறந்துவிடுவதைக் காணும் போது வருத்தமாய் இருக்கிறது” என்றார் லெனின். இந்த உண்மையை நம்மில் பலர் உணர்ந்துகொள்ளவில்லை. ஒருவர் தன்னை மார்க்சியவாதி என்று சொல்லிவிட்டாலே அப்பாவித்தனமாக அவரை மார்க்சியவாதி என்றும்கம்யூனிஸ்ட் என்றும் நம்பிவிடுகிறோம். அதற்கு காரணம் நம்மில் பலருக்கு மார்க்சிய அடிப்படை உண்மைகள் தெரியாது. ஆகவேதான் மார்க்சிய அடிப்படை உண்மைகளை மறந்துவிடுபவர்களையும், அதனை மறுத்துவிட்டு பிற்போக்காளர்களாகிய சீர்திருத்தவாதிகள், அடையாள அரசியல்வாதிகள் போன்ற மார்க்சியத்துக்கு எதிரானவர்களின் கருத்துக்களை ஏற்று பரப்பிவருபவர்களையும் நாம் கம்யூனிஸ்டுகளாக கருதி பலகாலம் ஏமாந்துகொண்டிருக்கிறோம். லெனின் காலத்திலேயே கம்யூனிச அமைப்புக்குள் மார்க்சியத்தை மறுத்து அதற்கு எதிரான கருத்துக்கொண்டோர் இருந்தார்கள் என்றால் தற்காலத்தில் மார்க்சிய தத்துவ அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் திறந்தநிலை மார்க்சியம் போன்ற மார்க்சியத்துக்கு எதிரான கருத்துக்களை பிரச்சாரம் செய்யும் தலைவர்களைக் கொண்ட அமைப்புக்குள் மார்க்சியத்தை மறுத்து அதனை எதிர்ப்பவர்கள் எந்தளவுக்கு சுதந்திரமாக வளர்வார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆகவே தற்போதுள்ள ஒவ்வொரு கம்யூனிச அமைப்புகளிலுமுள்ள மார்க்சியத்துக்கு எதிராக உள்ள கருத்துக்களையும், அந்தக் கருத்துக்களை கொண்டவர்களையும் வீழ்த்தி விரட்டியடிக்காமல் இங்கு கம்யூனிச இயக்கம் முன்னேற முடியாது என்பதை உணர வேண்டும்.

“மார்க்சைப் போலவே எங்கெல்ஸ், அரிதிலும் அரிதான ஆசிரியர்களில்ஒருவர். இவ்வாசிரியர்களின் அடிப்படையான நூல் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வாக்கியமும் பிரமாதமான ஆழ்ந்த உள்ளடக்கம் கொண்டுள்ளது”என்றார் லெனின். மார்க்ஸ், எங்கெல்ஸ் போன்ற மார்க்சிய ஆசான்களால் எழுதப்பட்ட ஒவ்வொரு நூலிலும் அவர்கள் எழுதிய ஒவ்வொரு வாக்கியத்திலும் . ஆழ்ந்த உள்ளடக்கம் உள்ளது என்றார் லெனின். ஆகவே மார்க்சிய ஆசான்களின் நூல்களை நாம் படித்து சமூகத்தைப் பற்றியும் சமூக மாற்றத்தைப் பற்றியும் நாம் ஆழ்ந்த அறிவைப் பெற வேண்டியதன் முக்கியத்துவத்தை நாம் உணர வேண்டும். ஆனால் இங்குள்ள சிலர் தங்களை கம்யூனிஸ்டுகள் என்று சொல்லிக்கொண்டு நாம் மார்க்சியத்தின் அடிப்படை உண்மைகளை அறிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்கிறார்கள். மேலும் அவர்களது அமைப்புகளில் உள்ளோரை மார்க்சிய அடிப்படை உண்மைகளை புரிந்துகொள்ளாத மூடர்களாகவே வைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

அதாவது காவுட்ஸ்கி தொடங்கி குருசேவ் டெங் வரையிலான திருத்தல்வாதிகள் சாராம்சத்தில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் வர்க்கப் போராட்டத்தையும் கைவிடுவதன் மூலம் முதலாளி வர்க்கத்துடன் கூட்டணி சேர்ந்து கொள்ளும் தொழிலாளி வர்க்கத்துக்குள் இருக்கும் முதலாளி வர்க்கமே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

திருத்தல்வாதம் போன்ற மார்க்சியத்தை மறுக்கும் போக்குகளால் அதனை எதிர் கொள்ள திறன் அற்று அதனுடன் சமரசமோ அல்லது சீரழிவுக்கோ இட்டு செல்கிறது. இதிலிருந்து மாறுபட்டு மார்க்சியத்தை உயர்த்திப்பிடித்து நிற்கும் மிகச் சிலரும் இங்கே மக்களின் செல்வாக்கில்லாமல் சோர்வுற்ற நிலையிலேயே இருக்கிறார்கள். அல்லது அவர்களின் பங்களிப்பு கணக்கில் கொள்ளப்படுவதே இல்லை.

இவைகளைதான் கட்டுரை வடிவில் கொணர்ந்துள்ளோம் நீங்கள் வாசித்து கருத்திடுங்கள் தோழர்களே....

இலக்கு 62 இணைய இதழை இந்த இணைப்பை அழுத்தி பெற்றுக் கொள்ளலாம்



No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்