பொருள் முதல் வாதமும் அனுபவ வாத விமர்சனமும் 14-12-2024

முந்தைய வார விவாதத்தில் கேட்கப்பட்ட கேள்வி அதற்கான பதில் ...
தோழர் வாலறிவாளன் தன்னுடைய கேள்வியாக லெனினின் பொருள் முதல்வாதத்தை நிரூபிப்பதற்கான வழிமுறையை கேட்டிருந்தார் அதனைப் பற்றி....

மார்க்சிய தத்துவஞானம் அதன் காலத்து தத்துவம் என சிந்தனையை ஆதாரமாகக் கொண்டிருந்தது.பல நூற்றாண்டுகளாய் தத்துவஞானிகள் வகுத்தளித்த சீரிய முற்போக்கான கருத்துக்கள் அனைத்தையும் அது தொடர்ந்து விரிவு படுத்தியது.19ஆம் நூற்றாண்டின் மூலச் சிறப்புள்ள ஜெர்மனிய தத்துவ ஞானத்தில் எல்லாவற்றிற்கும் மேலாக ஹெகல் ஃபாயர்பாஹ் ஆகியோர்ந்து தத்துவங்களில் இருந்த முற்போக்கு கருத்துக்கள் மார்க்சிய தத்துவம் ஞானத்தின் உடனடி தத்துவார்த்த தோற்றுவாய்கள் ஆகும்.
புரட்சிகரமான பாட்டாளி வர்க்க நிலைப்பாட்டில் இருந்து ஹெகலின் இயக்கவியல் ஃபாயர்பாஹின்  பொருள் முதல்வாதம் ஆகியவற்றைப் பற்றிய விமர்சன ரீதியான பரிசீலனையின்  போக்கில் தான் மார்க்ஸ் ஏங்கெல்சின் தத்துவஞான கருத்துகள் உருப்பெற்றன.
தங்களது இளமைக்காலத்தில் மார்க்சும் எங்கெல்சும் ஹெகலின் தத்துவஞானத்தில் மிகுந்த ஆர்வம் காட்டினர்.  ஹெகல் ஒரு புறநிலை கருத்து முதல்வாதி ஆனால் அவர் கருத்து முதல் வாதத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்க வியலை ஆழமான முறையில் வளர்த்தார்.
ஹெகலின் இயக்கவியலின் பிரதான கோட்பாடுகள் விதிகள் மற்றும் வகையினங்களை வகுத்தளித்தார். கருத்துகள் கீழான வடிவங்களில் இருந்து உயர்ந்த வடிவங்களுக்கு முன்னேற்றகரமாக வளர்ச்சி அடைகின்றன இந்த வளர்ச்சி போக்கில் அளவு மாற்றங்கள் பண்பு மாற்றங்களாய் பரிணமிக்கின்றன. உள் முரண்பாடுகள் வளர்ச்சியின் தோற்றுவாய்கள் ஆகின்றன என்பதை அவர் எடுத்துக் காட்டினார் அவர் இயக்கவியலின் முக்கிய வகையினங்களில் உள்ள தொடர்புகளையும் பரஸ்பரம் மாறும் தன்மையின் எடுத்துக்காட்டினார். ஆனால் அவரது இயக்கவியல் கருத்து முதல் வாதம் ஆகும் அது மனிதனுக்கும் பிரபஞ்சத்துக்கும் அப்பாற்பட்ட உணர்வின் அல்லது தனி முதல் கருத்து.
உலக ஆன்மாவின் இயக்கவியல் மேலும் ஹெகல் கடந்த காலத்தைப் பற்றிய பகுப்பாய்வுக்கு மட்டுமே இயக்கவியலின் விதிகளை பயன்படுத்தினார் எதிர்காலத்துக்கு அவற்றை பயன்படுத்தவில்லை.
மார்க்சும் ஏங்கெல்ஸும் புரட்சிகரமான ஜனநாயக நிலமை பற்றி உழைக்கும் மக்களின் நன்களை உறுதியாக ஆதரித்தார்கள். அது மக்களிடையே உள்ள உறவுகளில் பொருளாதாரம் நலன்களின் தீர்மானகரமான பாத்திரத்தை புரிந்து கொள்வதற்கு அவர்களை இட்டுச் சென்றது. உற்பத்தி சாதனங்கள் தனியுடைமை தான் சமூக ஏற்றத்தாழ்வுக்கும் வர்க்க போராட்டத்திற்கு மூலகாரணம் என்று அவர்கள் உணர்ந்தனர். இவை அனைத்தையும் ஹெகலின் தத்துவஞானத்தில் உள்ள கருத்து முதல்வாத அடிப்படைகளை அரித்தழித்தன.
மார்க்ஸ் எங்கெல்ஸ்சின் கருத்துக்களை உருவாக்குவதில் ஃபாயபாஹின்  பொருள் முதல்வாதம் முக்கியமான பாத்திரத்தை வகித்தது, ஃபாயர் பாஹ்கருத்து முதல்வாதத்தையும் மதத்தையும் உறுதியான முறையில் நிராகரித்த தத்துவஞானம் இயற்கையின் மனிதனையும் ஆராய்ந்து அறிய வேண்டும் என்று அவர் கூறினார்.இயற்கையின் நெடுங்காலத்திய வளர்ச்சியின் உற்பத்தி பொருளே மனிதன் என்று அவர் கருதினார். உணர்வு இயற்கையைப் பிரதிபலித்து அறிகிறது என்று அவர் நம்பினார். "தனி முதல் கருத்து" "உலக ஆன்மா" உலகத்தையே படைத்து ஒழுங்கு படுத்துகிறது என்கின்ற ஹெகலின் கருத்து மாயவாதம் என்று அவர் வர்ணித்தார் . கடவுள் உலகத்தை படைக்கவில்லை மனிதர்கள் தான் தாங்கள் வாழ்கின்ற நிலைமைகளுக்கு ஏற்ற வகையில் தங்களுடைய சொந்த உருவங்களை போலவே கற்பனையில் கடவுளை படைக்கிறார்கள் என்று அவர் வாதிட்டார்.
கருத்து முதல்வாத தத்துவ ஞானத்தைப் பற்றிய ஃபாயர்பாஹின்  விமர்சனம் மார்க்ஸ் எங்கெல்ஸை உறுதியான பொருள் முதல்வாத நிலையை கடைப்பிடிப்பதற்கு உதவி செய்தது. ஆனால் அவர்கள் ஃபயர் பார்க்கை அப்படியே பின்பற்றவில்லை ஏனென்றால் அவருடைய பொருள் முதல்வாதம் இயக்கம் மறுப்பியல் பால் பட்டது. மேலும் அவரது தத்துவஞானம் சமூக அரசியல் போராட்டங்களை உள்ளடக்கியது இல்லை நடைமுறை வகிக்கின்ற பாத்திரத்தை காட்ட வில்லை.

மார்க்சும் எங்கெல்சும் -ஹெகலின் இயக்கவியலை விமர்சனம் பூர்வமாக அணுகி அதிலிருந்த கருத்து முதல்வாதத்தை அகற்றி யதார்த்தமான உலகை அறிவதற்கான புரட்சிகரமாக மாற்றி அமைத்தனர். அதேபோல ஃபாயர்பாஹின் பொருள் முதல்வாதத்தை விமர்சன ரீதியாக மறுபரிசீலனை செய்து அதிலிருந்து இயக்க மறுப்பியல் மற்றும் யூக சிந்தனை முறையை அகற்றி  அதனை தொழிலாளி வர்க்கம் மற்றும் இதர உழைக்கும் மக்களின் விடுதலைப் போராட்டத்துடனும் வாழ்க்கையுடனும் தொடர்பு கொள்ளுமாறு செய்தனர் நமது ஆசான்கள். 
மார்க்சும் எங்கெல்சும் உருவாக்கிய தத்துவம் தத்துவஞான வரலாற்றில் ஒரு அடிப்படையான புரட்சியை விஞ்ஞான வளர்ச்சியில் ஒரு மெய்யான புரட்சி ஏற்படுத்தியது.
அந்தப் புரட்சியின் சாராம்சத்தை எடுத்துக் கூறுவது மார்க்சும் எங்கெல்சும் தத்துவஞான சிந்தனையில் அறிமுகப்படுத்திய புதிய கூறுகளையும் அவர்களுடைய போதனைக்கும் முந்திய தத்துவ ஞானங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளையும் குறிப்பிடுவதாகும்.
நடைமுறையோடு உழைக்கும் மக்களில் மிகப் பெரும்பான்மையினருடைய நலன்களுக்காக உலகத்தையே புரட்சிகரமாக மாற்றி அமைப்பதோடு நெருங்கிய இணைப்பு மார்க்சும் எங்கெல்சும் வளர்த்த தத்துவ ஞானத்தின் முக்கியமான பிரத்தியேக அம்சமாகும். "தத்துவஞானிகள் உலகத்தைப் பற்றி பல்வேறு வழிகளில் வியக்கியானம் மட்டுமே செய்தனர் முக்கியம் என்னவென்றால் அதை மாற்றி அமைப்பது தான் என்று மார்க்சிய பிரத்யேகமாக கூறினார். ஆனால் உலகத்தை மாற்றியமைப்பதற்கு அதன் வாழ்நிலை மற்றும் வளர்ச்சியின் விதிகளை நன்கு அறிந்து அவற்றை பயன்படுத்துவதற்குரிய திறமை வேண்டும். அது ஒரு கரரான விஞ்ஞான தத்துவ ஞானத்தை ஒரு ஆழ்ந்த விஞ்ஞான உலக கண்ணோட்டத்தை கோருகிறது.
முதலாவதாக இயக்கவியலையும் பொருள்முதல் வாதத்தையும் ஒன்றிணைத்தனர் .
இயக்க மறுப்பில் ரீதியான பொருள் முதல்வாதத்தையும் கருத்து முதல்வாத ரீதியிலான இயக்கவியலையும் ஆக்கபூர்வமான முறையில் பொருள் முதல்வாதத்தை இயக்க மறுப்பிலிருந்து விடுவித்தும் இயக்கவியலை கருத்து முதல்வாதத்திலிருந்து விடுவித்தும் லெனின் குறிப்பிட்டது போல் பொருள் முதல் வாதத்தை இயக்கவியலோடு சேர்த்து சேழுமைப் படுத்தி இயக்கவியலை ஒரு உண்மையான அடிப்படையில் வைத்தனர். இயக்கவியல் பொருள் முதல்வாதத்தின் தோற்றம் என்பது ஒரு உண்மையான விஞ்ஞான உலக கண்ணோட்டத்தில் மிக ஆழமான அறிவியல் தத்துவஞானத்தின் தோற்றம் என பொருளாகும்.

இரண்டாவதாக மார்க்சும் எங்கெல்சும் பொருள்முதல் வாதத்தையும் இயக்கவியலையும் சமூக வாழ்க்கை கற்று அறிந்து அதற்கு விளக்கம் அளிப்பதற்கு ஏற்ப விரிவு படுத்தினர். முந்தைய பொருள் முதல்வாதிகள் முரண்பாடான நிலையில் இருந்தனர். இயற்கை நிகழ்வுகளுக்கு மட்டுமே பொருள் முதல்வாத விளக்கம் அளித்தனர் சமுதாய புலப்பாடுகளுக்கும் நிகழ்வுகளுக்கும் போக்குகளுக்கும் விளக்கம் அளிப்பதில் கருத்து முதல்வாதிகளே மேலோங்கி இருந்தனர். சமுதாயத்தை பொருள் முதல்வாத ரீதியில் விளக்குகின்ற பொழுது பொருள் முதலாக விஞ்ஞான ரீதியாக மட்டுமல்லவாததாகவும் முழு நிறைவானதாகவும் ஒரே சமயத்தில் இயக்கவியல் ரீதியிலும் வரலாற்றில் ரீதியிலும் உள்ளது. 
இயக்கவியல் மற்றும் வரலாற்று பொருள் முதல் வாதத்தை படைத்தளித்ததன் மூலம் மார்க்ஸ் எங்கெல்ஸ் தத்துவஞானத்தில் ஒரு புரட்சி நிகழ்ச்சியை காட்டினார்கள்.  உலகத்திற்கும் அதன் மாறுதல் மற்றும் வளர்ச்சி விதிகளுக்கும் ஒரு விஞ்ஞான விளக்கம் அளிக்க இயக்கவியல் மற்றும் வரலாற்று பொருள் முதல்வாதம் ஒரு விஞ்ஞான உலக கண்ணோட்டம் மட்டுமின்றி யதார்த்தத்தை புரட்சிகரமாக மாற்றி அமைக்கின்ற வழியும் ஆகும்.
வரலாற்று பொருள் முதல்வாதம் வளர்ந்து கொண்டே செல்வதற்கு காரணம் அது தொழிலாளி வர்க்கம் மற்றும் இதர உழைக்கும் மக்களின் கைகளில் அவர்களது புரட்சிகர போராட்டத்தில் ஒரு தத்துவாயுதமாக விளங்குகிறது. விஞ்ஞான ரீதியாக அறிதல் மற்றும் உலகத்தை புரட்சிகரமாக மாற்றி அமைப்பதில் சக்தி மிக்க கருவியாக விளங்குகிறது. இந்த பாத்திரத்தை நிறைவேற்றுவதற்கு அது வாழ்க்கையோடு புரட்சிகர நடைமுறையோடு எப்பொழுதும் தொடர்பு வைத்திருக்க வேண்டும். அனைத்து நடைமுறை வினாக்களுக்கும் விடையளித்து அனைத்து புதியவற்றிலும் தாமதம் இன்றி கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். 
இனி நமது நூலில் இருப்பதை புரிந்துக் கொள்ள மறுப்பவரை சற்று அறிவோம்.

பொருள் முதல் வாதம் கருத்து முதல் வாதம் இரண்டையும் மறுத்து மூன்றாவதாக அறிவியல் பூர்வமான தத்துவத்தை படைக்க கிளம்பிய எர்னெஸ்ட் மாக், ரிச்சர்ட் அவெநேரியஸ், போக்தனோவ் இவர்களின் தத்துவம் என்பது விஞ்ஞானத்தின் அடிப்படையில் கருத்து முதல்வாதம் பொருள் முதல்வாதம் இரண்டையும் சாராமல் சுத்த அனுபவத்தின் மூலம் உலகைப் பற்றி ஒரு இயல்பான கருத்தை உருவாக்க வேண்டும் என்று கூறும் இவர்கள் புலன் உணர்வுகள் மூலம் கிடைக்கும் அனுபவத்தையே அடிப்படையாய் கொண்டவர்கள். அவற்றையும் புலன் உணர்வுகள் தான் ஆக்க கூறுகள் என்று புதிய பெயரிட்டு குழப்பினார்கள். இறுதியாக அனுபவவாத விமர்சனம் என்ற தனது தத்துவத்தை பொருள் முதல்வாதம் அனுபவ வாதம் இரண்டிலிருந்தும் விடுபட முடியாமல் இறுதியில் பல்வேறு விதமான கருத்து முதல்வாத பிற்போக்கு சித்தாந்தத்தின் பின்னணியில் போய் சேர்ந்தனர்.

பொருள் முதல்வாதம் பற்றி லெனின் கூறியவை தான் ... "பொருள் என்பது ஒரு தத்துவ வகையினம் இது மனிதனது புலன் உணர்வு மூலம் அவனுக்கு கிட்டும் புறவய எதார்த்தமாகும். இதனை புலன் உணர்வு பிரதி செய்கிறது; படமாக்குகிறது;பிரதிபலிக்கிறது இந்தக் கருத்தானது பழமையானது என்றும் இது தவறு என்றும் கூறுவது பிற்போக்கான தத்துவம் ஆகும்".
ஆக இங்கு மாக்கியர்களை புரிந்துக் கொள்ள இதுவே போதும் இருந்தாலும்... 
அடுத்து மாக்கியர்கள் எண்ணம் தான் பொருள் என்று கூறுகின்றனர். இதனை லெனின் மறுத்துவிட்டு பொருள் முதல் வாதம் கூறும் அறிவு தோற்றுவியலை விளக்குகிறார் அதன்படி அடிப்படைகளைக்  கூறுகிறார். முதலாவது நமது எண்ணம் அல்லது நனவை சாராமல் பொருள்கள் உள்ளன.இரண்டாவது நிகழ்விற்கும் பொருளுக்கும் வேறுபாடு ஏதுமில்லை. வேறுபாடு எதில் உள்ளது என்றால் இதுவரை தெரிந்தது தெரியாது என்பதில் தான் உள்ளது. மூன்றாவது நாம் இயங்கியல் முறையில் சிந்திக்க வேண்டும் அதாவது நமது அறிவு என்பது மாறாதது என்றோ ஆயத்தமானது என்றோ கருதக்கூடாது. அறிவானது அறியாமையில் இருந்து (தெரியாமையில் இருந்து) எவ்வாறு உருவாகிறது என்பதை காண வேண்டும். இவற்றின் மூலம் தான் நாம் ஒரு முடிவுக்கு வர முடியும் அதாவது நமது அறிவு என்பதெல்லாம் புறவுலகின் பிம்பம் தான் என்பதாகும். இதற்கு மாறாக மாக்கியர்கள் பொருள் என்பது புலன் உணர்வின் தொகுப்பு என்று கூறுகிறார்கள் இது பொருளை மறுப்பதாகும்.

இதற்கு அடுத்தபடியாக உண்மை எது என்பதை பற்றி விவாதம் ... மார்க்சியம் உண்மையை இருவிதமாக காண்கிறது ஒன்று முழு உண்மை மற்றொன்று சார்பு உண்மை ...பின்னர் பார்ப்போம் இதனை...
ஐயுறவுவாதம் - புறநிலை யதார்த்தத்தை அறிவதற்கான சாத்தியத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தும் ஒரு தத்துவப் போக்கு. இது பண்டைய கிரேக்கத்தில் கிமு 4 முதல் 3 ஆம் நூற்றாண்டுகளின் முற்பகுதியில் எழுந்தது (பைரோ, ஏனெசிடெமஸ், செக்ஸ்டஸ் எம்பிரிகஸ்). பண்டைய ஐயுறவுவாதத்தைப் பின்பற்றியவர்கள், புலனுணர்வின் அடிப்படையிலிருந்து அறியொணாவாத முடிவுகளுக்கு வந்தனர். புலனுணர்வின் அகநிலைத் தன்மையை முழுமையானதாக ஆக்கிய ஐயுறவுவாதிகள், பொருள்களைப் பற்றிய திட்டவட்டமான முடிவுகளிலிருந்து விலகியிருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர். மனிதன் தனது உணர்வுகளுக்கு அப்பால் சென்று அவற்றின் உண்மையை தீர்மானிக்க முடியாது என்று அவர்கள் கருதினர். பதினெட்டாம் நூற்றாண்டில், ஐ-ஃபியூம் ஆன் கான்ட்டின் அறியொணாமைவாதத்தில் ஐயுறவுவாதம் புத்துயிர் பெற்றது; பண்டைய ஐயுறவுவாதத்தை நவீனப்படுத்தும் முயற்சியை காட்லீப் ஷூல்ஸ் (அனெசிடினஸ்) மேற்கொண்டார். ஐயுறவுவாத வாதங்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியிலிருந்து இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை மாகிஸ்டுகள், நவ-கான்ட்டியர்கள் மற்றும் பிற கருத்துவாத மெய்யியல் பள்ளிகளால் பயன்படுத்தப்பட்டன.
"சமீபத்திய விஞ்ஞானம்" மற்றும் "சமீபத்திய நேர்க்காட்சிவாதம்" ஆகியவற்றால் மறுக்கப்பட்டதாக கூறப்படும் கருத்துரு விடயத்தை இன்னமும் பற்றிக்கொண்டிருக்கும் "வறட்டுவாதவாதிகளின்" "பழமையான" கண்ணோட்டங்கள் குறித்து மாக்கியர்கள் இகழ்ச்சியுடன் தோள்களைக் குலுக்கிக் கொள்கின்றனர். பருப்பொருளின் கட்டமைப்பு பற்றிய புதிய இயற்பியல் கோட்பாடுகளைத் தனியாகப் பேசுவோம். ஆனால், மாக்கியர்கள் செய்வதைப் போல, பருப்பொருளின் கட்டமைப்பு குறித்த எந்தக் குறிப்பிட்ட கோட்பாட்டையும் அறிவியல் வகையினத்துடன் குழப்பிக் கொள்வதும், பருப்பொருளின் புதிய அம்சங்களின் (எடுத்துக்காட்டாக எலக்ட்ரான்கள்) புதிய பண்புகள் பற்றிய சிக்கலை அறிவுக் கோட்பாட்டின் பழைய சிக்கலோடும், நமது அறிவின் மூலங்கள் பற்றிய பிரச்சினையோடும் குழப்பிக் கொள்வது முற்றிலும் மன்னிக்க முடியாததாகும்.  புறவய உண்மை முதலியவற்றின் இருப்பு...சிவப்பு, பச்சை, கடினமான, மென்மையான, உரத்த குரலில், நீளமான உலகத் தனிமங்களை மாக் கண்டுபிடித்தார் என்று நமக்குச் சொல்லப்படுகிறது. நாம் கேட்கிறோம், ஒரு மனிதன் சிவப்பு நிறத்தில் ஒன்றைப் பார்க்கும்போது அல்லது கடினமான ஒன்றை உணரும்போது புறநிலை யதார்த்தம் வழங்கப்படுகிறதா, இல்லையா? இந்த பழமையான தத்துவ வினாவை மாக் குழப்புகிறார். அது கொடுக்கப்படவில்லை என்று நீங்கள் கருதுவீர்களானால், நீங்கள், மாக் உடன் சேர்ந்து, தவிர்க்க முடியாதபடி அகநிலைவாதம் மற்றும் அறியொணாமைவாதத்தில் மூழ்கி, உள்ளார்ந்த வாதிகளின், அதாவது தத்துவார்த்த மென்ஷிகோவ்களின் அரவணைப்பில் தகுதியுடையவர்களாக வீழ்கிறீர்கள். அது கொடுக்கப்பட்டுள்ளது என்று நீங்கள் கருதினால், இந்த புறநிலை யதார்த்தத்திற்கு ஒரு தத்துவக் கருத்து தேவைப்படுகிறது, மேலும் இந்த கருத்தாக்கம் நீண்ட காலத்திற்கு முன்பே உருவாக்கப்பட்டுள்ளது.இந்த கருத்து பருப்பொருள். (ப 160).
பருப்பொருள் என்பது புறவய யதார்த்தத்தைக் குறிக்கும் ஒரு தத்துவ வகையினமாகும். அது மனிதனுக்கு அவனது புலனுணர்வுகளால் அளிக்கப்படுகிறது. நமது உணர்வுகளால் நகலெடுக்கப்பட்டு, புகைப்படம் எடுக்கப்பட்டு, பிரதிபலிக்கப்படுகிறது. அதே சமயம் அவற்றிலிருந்து சுயேச்சையாக அது இருக்கிறது. ஆகவே, அத்தகைய கருத்தாக்கம் "பழமையானது" ஆக முடியும் என்று கூறுவது சிறுபிள்ளைத்தனமான பேச்சாகும், நவநாகரீக பிற்போக்கு தத்துவத்தின் வாதங்களை அர்த்தமற்ற முறையில் திரும்பத் திரும்ப கூறுவதாகும். பொருள்முதல்வாதத்துக்கும் கருத்துமுதல்வாதத்துக்கும் இடையிலான போராட்டம், தத்துவத்தில் பிளேட்டோ, டெமோக்ரிடஸ் ஆகியோரின் போக்குகள் அல்லது வரிகளுக்கு இடையேயான போராட்டம், மதத்துக்கும் விஞ்ஞானத்துக்கும் இடையிலான போராட்டம், புறநிலை உண்மையையும் அதை வலியுறுத்தலையும் மறுப்பது, புலனுணர்வுக்கு அப்பாற்பட்ட அறிவைப் பின்பற்றுபவர்களுக்கும் அதன் எதிரிகளுக்கும் இடையிலான போராட்டம் தத்துவத்தின் வளர்ச்சியின் இரண்டாயிரம் ஆண்டுகளில் காலாவதியாகியிருக்க முடியுமா?(ப 161)
பருப்பொருள் என்ற கருத்தாக்கத்தை ஏற்பது அல்லது நிராகரிப்பது என்பது மனிதன் தனது புலன் உறுப்புகளின் சான்றுகளின் மீது வைக்கும் நம்பிக்கையைப் பற்றிய கேள்வியாகும்; நமது அறிவின் மூலாதாரம் பற்றிய கேள்வி. தத்துவத்தின் தொடக்கத்திலிருந்தே இந்தக் கேள்வி கேட்கப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது; பேராசிரியர் கோமாளிகளால் ஆயிரம் வெவ்வேறு வேடங்களில் மறைக்கப்படலாம்; ஆனால் மனித அறிவின் ஆதாரம் பார்வையும் தொடுதலும் தானா என்ற கேள்வியைப் போலவே இது பழமையானதாக மாற முடியாது.  குணப்படுத்துதல் மற்றும் வாசனை. நமது புலனுணர்வுகளை புற உலகின் பிம்பங்களாகக் கருதுவது, புறவய உண்மையை அங்கீகரிப்பது, அறிவு பற்றிய பொருள்முதல்வாதக் கோட்பாட்டைப் பிடிப்பது - இவை அனைத்தும் ஒன்றே. இதை விளக்குவதற்கு ஃபாயர்பாக்கிடமிருந்தும் தத்துவத்தின் இரண்டு பாடநூல்களிலிருந்தும் மட்டும் மேற்கோள் காட்டுகிறேன், அப்போதுதான் இந்தக் கேள்வி எவ்வளவு அடிப்படையானது என்பதை வாசகர் தீர்மானிக்க முடியும்.....(ப 162)

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்