தத்துவம் என்றால் என்ன? (Thathuvam Endral Enna) – நூல் அறிமுகம்
No CommentsBook Releaseதத்துவம்:
கருத்து முதல்வாதம்:
பொருள் முதல்வாதம்:
தத்துவத்தின் பெயர்கள்:
பரபக்கம், சுபக்கம்
வைதீக, அவைதீகம்
ஏகம், அநேகம்
ஈஸ்வரவாதம், நிரீஸ்வரவாதம்
நியாயத் தத்துவம்
வைசேடிகம்
மீமாமிசம்
வேதாந்தம்
அத்வைதம்
துவைதம்
ஆசீவிகம்
கண நேரவாதம்
வடகலை, தென்கலை
பிரகிருதி
அனான்மவாதம்
சைவ சிந்தாந்தம்
வீர சைவம்
குலக்குறி
வருணாசிரமம்
மகாயானம்
அகவய ஆன்மீகவாதம்
விஞ்ஞானவாதம்
யக்ஞம்
சுயாக்கியானம்
அருட்பா, மருட்பா
கர்மா
ஆத்திகர், நாத்திகர்
வேதங்கள்:
இந்துக்கள்:
பகவத்கீதை:
கடைமைச்செய், பலனை எதிர்பார்க்காதே பகவத்கீதை சொல்கிறது.
பெளத்தம்- சமணம்:
சமண, பெளத்த, ஆசீவிகத் தத்துவங்கள் அறநெறிக் கோட்பாடுகளோடு, மனிதநேயமும் நிறைந்து இருந்தாகவும் கூறுகிறது. சிலப்பதிகாரம் சமணத்தையும், மணிமேகலை பெளத்தையும் குறித்ததாக வரலாறு இருக்கிறது.
பிராமிணியம்:
மதம் என்பது ஒடுக்கப்பட்டவர்களின் ஏக்கப் பெரூமூச்சு, இதயமற்ற உலகத்தின் இதயம், ஆன்மா இல்லாத நிலையில் ஆன்மா என்று மாயையான உலகத்தில் மகிழ்ச்சி தருகிறது என்கிறார் மார்க்ஸ்.
அணுக்கள்:
பொருள்முதல்வாதம் தான் இந்த நாட்டின் மிகச்சிறந்த தத்துவமாக இருப்பதாக நான் இந்தப் புத்தகத்தில் பார்க்கிறேன். “மாயையில் இருந்து விடுபட வேண்டும்” என்று மார்க்ஸ் கூறிய கருத்து இன்னும் காதுகளில் கேட்டுக்கொண்டே இருக்கிறது.
நன்றி தோழர்.சிசுபாலன்
நூலின் தகவல்கள் :
ஆசிரியர் : இரா.சிசுபாலன்
விலை : ரூ . 20
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
பாரதி புத்தகாலயம்
நூலைப் பெற : https://thamizhbooks.com/product/thathuvam-endral-enna/
நூல் அறிமுகம் எழுதியவர் :
தத்துவம் என்றால் என்ன? (Thathuvam Endral Enna) – நூல் அறிமுகம்
பொதுவாக தத்துவங்கள் என்று கூறும்போது நிறையக் கோட்பாடுகளையும், வித்தியாசமான வார்த்தைகள் முன்நிறுத்தி இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் எழுத்தாளர்.சிசுபாலன் இந்தப் புத்தகத்தில் கேள்வியும், அதற்கு பதிலும் என்ற அடிப்படையில் கூறுகிறார். தத்துவங்களைப் குறித்து படிப்பது கொஞ்சம் சிரமம்தான் என்று எழுத்தாளருக்கு புரிந்ததால், இப்படி ஒரு புத்தகத்தைக் கொடுத்திருக்க வாய்ப்பு இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.
தத்துவம் என்ற சொல்லைக் கேட்டவுடன் எனக்கு மார்க்ஸ் நினைவுகள்தான் வருகிறது. இவ்வுலகத்தைக் மனிதன் புரிந்து கொள்வது என்பது மிகவும் கடினமாக ஒன்றாக இருக்கிறது. உலகம் எப்படி தோன்றியது? உலகத்தை இயக்கும் சக்திகள் யாராக இருக்கும்? சமூகத்தின் சூழ்நிலைகளுக்கும், உணர்வுகளுக்கு எப்படி வேறுபாடுகள் இருக்கிறது என்று அறியும் புத்தகமாக இருக்கிறது.
இந்தியாவின் முதல் தத்துவம் என்பது வேதகாலத் தத்துவம் தான் சொல்கிறார்கள். சிந்துசமவெளியின் நாகரித்தில் இருந்து முதலில் தத்துவங்கள் வருகிறது என்று எழுத்தாளர் கூறுகிறார். ஆளும் வர்க்கம் தன் வர்க்க நலன்களைக் காக்க ஆன்மீக தத்துவத்தை முதலில் எடுக்கப்பட்டது. தத்துவத்தின் முதன்மையானது கருத்தா? பொருளா? என்பதுதான் அடிப்படை பிரச்சனையாக இருக்கிறது. தமிழகத்தில் தத்துவங்கள் சமணம், பெளத்தம், ஆசீவிகம், சித்த தத்துவம், சைவம், வைணவம் என்று செல்வாக்கு மிக்கத் தத்துவமாக இருந்ததாக இருக்கிறது.
எல்லாவற்றிற்கும் முதன்மையானது என்பது கருத்துதான் என்றும், ,கருத்தில் இருந்துதான் பொருள் தோன்றியது என்று அடிப்படையாகக் கொண்டு வருகிறது. இதை முழுவதும் ஏற்றுக்கொள்பவர்களாக ஆன்மீகவாதிகள் இருந்தார்கள். இந்த உலகத்தைப் படைத்தது மனிதனை மீறிய ஒரு சக்தியாகக் கூறுகிறார்கள். கருத்து முதல்வாதம் என்பது மதங்கள் பிடியில் இருந்து உருவாகிறது என்ற பார்வையும் நாம் பார்க்கலாம்.
எல்லாவற்றிற்கும் முதன்மையானது பொருள்தான் என்பதும், பொருளிலிருந்து கருத்து உருவானதாக சொல்வது தான் பொருள் முதல்வாதமாக இருக்கிறது. இவர்கள் இயற்கையே முதன்மையானது, அறிவியலை அடிப்படையாகக் கொண்டு உலகம் முழுவதும் இயக்குவதாக எடுத்துக்கொள்ளலாம்.
தரிசனம், அன்விக்சிகி
என்று தத்துவங்கள் கருத்தையும், பொருளையும் முதல் வாதமாக முன் வைத்து கொண்டு, ஒவ்வொரு வார்த்தைகளும் ஒரு அர்த்தங்களையும் கற்பித்து வருகிறார்கள். இவையனைத்தும் எழுத்தாளர் ஒரு வரியில் எளிதாகப் புரிந்து கொள்ளும்படி கூறுகிறார்.
பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது வேதங்கள் ரிக், யஜூர், சாம, அதர்வன மொத்தம் நான்கு வகைப்படும் என்று புத்தகம் படிக்கும்போது நியாபகம் வந்தது. இவை அனைத்தும் இந்தியாவிற்கு உள்ளே நுழைந்தது ஆரியர்கள் கொண்டு வைந்தது. அவர்கள் இயற்கையை கடவுளாக நினைத்துப் பாடிய பாடல்களாகவும் இருக்கிறது.
சிந்துநதிப்பகுதிகள் வாழ்ந்த மக்களை சிந்துகள் என்று அழைப்பார்கள். அவர்கள் நாளடைவில் அவர்களே இந்துக்கள் என்றும் அழைத்தார்கள். நம்பிக்கைகளும், சடங்களும் நிறைந்த மதமாகவும், வேறு எந்த மதத்திலும் இல்லாதவர்கள் இந்துக்கள் என்று அழைத்ததாகவும் புத்தகத்தில் கூறுகிறார்கள்.
இந்திய மக்களுக்கு பகவத்கீதையின் மீது மிகப்பெரிய நம்பிக்கை உள்ளது. கடவுளுக்கு பாடப்படும் பாடலாக பகவத்கீதா இருந்திருக்கிறது. மகாத்மா காந்தியும், அவரை சுட்டுக்கொன்ற நாதுரம் கோட்சேவும் பகவத்கீதையைத் தான் வழிகாட்டியாக எடுத்து கொண்டதாக வரலாறு இருக்கிறது.
பெளத்தமும், சமணம் பிராமண ஆதிக்கத்திற்கு எதிராகப் போராடியது. ஆசையே துன்பத்திற்கு காரணம் புத்தர் சொல்கிறார். சமணத் தத்துவத்தை மகாவீரர் உருவாக்கினார். கடவுளைக் மறுக்கும் சமணர்கள், ஆன்மாவை ஏற்றுக்கொள்வதாக இருக்கிறார்கள்.
பிராமணர்கள் மாமிசம் உண்டதாக மனுதர்மத்தில் இருந்தாகவும், வருணாசிரமுறையில் சாதியக் கட்டைமைப்பும், ஆணாதிக்க சமூகக் குடும்பமுறையும் வந்ததாகவும் புத்தகத்தில் இருக்கிறது. வைகுண்ட சுவாமிகள் பிராமிணியத்திற்கு எதிரான கருத்துகளை முன் வைத்து பேசியதாகவும், பெண்களுக்கு ஆதரவாகப் பேசியதாகவும் இருக்கிறது.
மதமும், மார்க்ஸ்:
நீர், நிலம், காற்று, நெருப்பு என்று நான்கு வகைப் பொருட்கள் அணுக்களின் இயக்கமே உலகம் செல்கிறது. இறைவன்தான் இந்த உலகைத்தைக் இயக்குவதாக கூறுவதைக் ஏற்க மறுக்கிறது.
தமிழர்கள் பொருள் முதல்வாதத்தையே முதன்மையாக எடுத்து வந்தார்கள். ஆனால் எதிர்வினையாக கருத்து முதல்வாதம் மதங்களால் வளர்க்கப்பட்டது. இப்படி பொருள் முதல் வாதத்தை முதலில் வைத்த தமிழர்களின் தத்துவத்தை சமஸ்கிருதமும், பிராமிணியமும் அழித்தாக இருக்கிறது.
இந்தப் புத்தகத்தில் ஆன்மீக கோட்பாடுகளுக்கும், அறிவு கோட்பாடுகளுக்கும் மனிதனுக்குள் நடக்கும் தத்துவம் போராட்டமாக இருக்கிறது.
மொத்தத்தில் இன்னும் நிறைய படிக்கவும்,தெரிந்து கொள்ள நிறைய தத்துவங்கள் இருக்கிறது என்ற புரிதலோடு முடிக்கிறேன்.
தோழர்.சிசுபாலன் சிறியப் புத்தகத்தில் நிறையக் கேள்விகளை மனதில் எழுப்பிவிட்டுச் செல்கிறார். தொடர்ந்து தத்துவங்களோடு நீ பயணிக்க இன்னும் நிறையதூரம் இருக்கிறதாக எழுத்தாளர் என்னிடம் சொல்வதுபோல் இருந்தது.
தத்துவங்களோடு பயணிப்போம்.
நூல் : தத்துவம் என்றால் என்ன?
சு.வினோத்குமார்
No comments:
Post a Comment