ஜனநாயம், தத்துவ அரசியல் - வர்க்க புரிதலுக்கு

 ஓர் விவாதத்தில் வினவியதே ஒருவர் (கீழே படமாக)

மதிப்பிற்கும் அன்புக்கும் உரிய தோழரே! உண்மைதான் ஆனால் மார்க்சிய உலகளாவிய வர்க்க சிந்தனை இந்திய தத்துவ கட்டமைப்பில் ஜனநாயக சட்ட அரசியலமைப்பு ரிதியிலான செயல்பாடு என்பது ஆழமான சமூக சிந்தனைகளும் உட்பகுதி செயல்படத்த வேண்டிய கடமையை சிந்திக்க வேண்டும் அல்லவா தோழரே...
என்ன சொல்கிறீர் அதனை தெளிவாக சொல்வீரா? இந்திய தத்துவ கட்டமைப்பு என்றால் என்ன? ஜனநாயக சட்ட அரசியல் என்றால் என்ன? அதாவது விளக்கம் தெரிந்தால் விளக்குங்கள் இல்லையேல் குழப்பாதீர்!?!!! ஆம் உலகளாவிய மார்க்சிய தத்துவம் ஒன்றேதான் அவை ஒவ்வொரு நாட்டின் குறிப்பான (எவ்வகையான உற்பத்திமுறை நிலவுகிறது) சூழல் வேறுபடும் அதற்கேற்ப மார்க்சியத்தை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு னாட்டிற்கும் தனித்தனியான மார்க்சியம் இல்லை மார்க்சியம் பொதுவானது முதலில் அதை புரிந்துக் கொள்ளுங்கள் ஆம் அதாவது காலுகேற்ற செருப்பைதான் தேடுவர் - செப்பலுக்காக காலை வெட்டி குறைத்து அடைத்துக் கொள்ள முடியாது மேலும் ஜனநாயம் சட்டம் அரசியல் மூன்றும் வர்க்க ரீதியாக பார்க்க சொல்கிறது மார்க்சியம் நீங்கள் கூட்டாம் சோறை அல்லவா இங்கே படையல் செய்கிறீர்! சற்று அறிந்து பதிலளியுங்கள் தோழர் கருதுகிறேன்...
நேரமிருந்தால் லெனிந்தான் நீண்ட விளக்கம் கொடுத்துள்ளார் ஓடுகாலி காவுட்த்ஸ்கியும் பாட்டாளிவர்க்க ஜனநாயகமும் கட்டுரையில் வாசிக்க
ஜனநாயகம் என்றால் என்ன? ஜனநாயகவாதிகள் என்றால் என்ன? என்பதை நாம் தெரிந்துகொள்வது மிகவும் அவசியமாகும்.பொதுவான ஜனநாயகம் என்பது உலகில் எங்கும் இருந்ததில்லை, இனினிமேலும் இருக்கப்போவதும் இல்லை. ஜனநாயகம் இரண்டு வகைப்பட்டது. ஒன்று முதலாளித்துவஜனநாயகம்,மற்றொன்று பாட்டாளிவர்க்க ஜனநாயகம் ஆகும். இவ்விரண்டு ஜனநாயகமும் ஒன்றல்ல. இரண்டும் வெவ்வேறானது மட்டுமல்ல, இரண்டும் எதிர் எதிரானதாகும். ஜனநாயகவாதிகளிலும் இதேபோல் இரண்டு வகையினர் உண்டு. ஒன்று முதலாளித்துவ ஜனநாயகவாதிகள், மற்றொரு பிரிவினர் பாட்டாளிவர்க்க ஜனநாயகவாதிகள் ஆவார்கள். இந்த வேறுபாட்டை மார்க்சிய லெனினிய ஆசான்களது போதனைகளை ஏற்றுக் கொண்டு செயல்படுபவர்கள் நிச்சயமாகப் புரிந்துகொள்வார்கள். இந்த வேறுபாட்டை புரியாதவர்கள் மார்க்சிய லெனினியவாதிகளாக அதாவது கம்யூனிஸ்டாக இருக்க முடியாது.
மேலும்
ஜனநாயகம் என்பது பேச்சு சுதந்திரம் எழுத்து சுதந்திரம் போன்ற சுதந்திரத்தை வழங்கும் அதே வேளையில் சர்வாதிகாரத்தை செலுத்துவதாகவும் இருக்கிறது. தற்கால வர்க்க சமூகத்தில் ஜனநாயகமானது முதலாளித்துவ ஜனநாயகம் என்றும் பாட்டாளி வர்க்க ஜனநாயகம் என்று இரண்டு வகையாக இருக்கிறது. முதலாளித்துவ ஜனநாயகம் முதலாளிகளுக்கு ஜனநாயகத்தை வழங்குகிறது,ஆனால்,அதே வேளையில் பாட்டாளிகள் மீது (உழைக்கும் பக்களின் மீது) சர்வாதிகாரத்தை செலுத்துகிறது. இதற்கு நேர் எதிராக பாட்டாளி வர்க்க ஜனநாயகமானது உழைக்கும் மக்களுக்குஜனநாயகத்தை வழங்குகி றது, அதே வேளையில் முதலாளிகளின் மீது சர்வாதிகாரத்தை செலுத்துகிறது. முதலாளித்துவ ஜனநாயகவாதிகள் முதலாளிகளுக்கு ஜனநாயகத்தை வழங்குவதும் உழைக்கும் மக்களின் மீது சர்வாதிகாரத்தை செலுத்தும் கொள்கை வகுத்து செயல்படுகிறார்கள். ஆகவே அவர்களை வலதுசாரிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் பெயரளவுக்கு உழைக்கும் மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கியபோதும், சாரத்தில் உழைக்கும் மக்களின் மீது சர்வாதிகாரத்தை செலுத்துகின்ற வலதுசாரிகளே. இதற்கு நேர் எதிராக பாட்டாளிவர்க்க ஜனநாயகவாதிகள் முதலாளிகளின் மீது சர்வாதிகாரத்தை செலுத்துவதும், உழைக்கும் மக்களுக்கு ஜனநாயகத்தை வழங்கும்கொள்கையை கடைபிடிப்பவர்களாக இருக்கும் காரணத்தால் இவர்களை இடதுசாரிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். மார்க்சிய லெனினியத்தை பின்பற்றும் கம்யூனிஸ்டுகளே இடதுசாரிகள் ஆகிறார்கள். இந்த கண்ணோட்ட த்திலிருந்து நாம் இடதுசாரிகளையும் வலதுசாரிகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
முதலாளித்துவ ஜனநாயகம் என்றும் பாட்டாளி வர்க்க ஜனநாயகம் என்றும் இரண்டுவகையான ஜனநாயகம் இருந்த போதும், பொதுவாக ஜனநாயகம் என்ற சொல்லையே நாம் பயன்படுத்துகிறோம். அதன் மூலம் இரண்டுவகையான ஜனநாயகத்தை நாம் வேறுபடுத்தி புரிந்துகொள்ள தவறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இந்த வேறுபாட்டை மார்க்சிய லெனினிய தத்துவ மற்றும் அரசியல் அறிவுள்ளவர்களால் மட்டுமே தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும். ஆனால் இத்தகைய அறிவை வளர்த்துக் கொள்ளாத அப்பாவிகளால் இந்த வேறுபாட்டை புரிந்துகொள்ள முடியாது. இந்த குறைபாடானது அவர்களின் திட்டமிட்ட தவறாகாது.
இதற்கு மாறாக சிலருக்கு இந்த வேறுபாடு தெரியும். எனினும் இந்த வேறுபாட்டை மூடிமறைத்துவிட்டு பொதுவாக ஜனநாயகம் என்று பேசி பாட்டாளிவர்க்க ஜனநாயகம் தான் மிகவும் உயர்ந்த ஜனநாயகம் என்ற உண்மையை மக்களுக்கு புரியவிடாமல் முதலாளித்துவ ஜனநாயகத்தையே உயர்ந்த வகையானதாக காட்டுவார்கள். இந்த முறையில் இவர்கள் பொதுவாக ஜனநாயகம் என்றே பேசுவார்கள். எனினும் பாட்டாளிவர்க்கஜனநாயகத்தையே உயர்ந்த வகையான ஜனநாயகம் என்று மார்க்சிய ஆசான்கள் போதித்துள்ளார்கள். ஆகவே பாட்டாளிவர்க்க ஜனநாயகத்தை பின்பற்றுபவர்கள் கம்யூனிஸ்டாக அதாவது இடதுசாரிகளாக இருப்பதால், பாட்டாளி வர்க்க ஜனநாயகவாதிகளை நாம் கம்யூனிஸ்டு என்றும் இடதுசாரிகள் என்றுமே அழைக்கலாம். அதே வேளையில், முதலாளித்துவ ஜனநாயகத்தைப் பின்பற்றுபவர்களை ஜனநாயகவாதிகள் என்றும் வலதுசாரிகள் என்றும் அழைக்கலாம். அதாவது ஜனநாயக வாதிகள் என்று நாம் சொல்லும் போது அது முதலாளித்துவ ஜனநாயகவாதிகளையே குறிப்பதாக எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது அவர்களை வலதுசாரிகள் என்றே நாம் கருத வேண்டும். பாட்டாளிவர்க்க ஜனநாயகவாதிகளை நாம் கம்யூனிஸ்டு கள் என்றும் இடதுசாரிகள் என்றுமே குறிப்பிடலாம். இதன் மூலம் இந்த குழப்பத்தை தவிர்க்கலாம். இதனை நாம் அடிப்படையாகக் கொண்டால், இடதுசாரி களும் ஜனநாயகவாதிகளும் ஒன்றுபட வேண்டும் என்று நாம் சொல்வதன் பொருள் இடதுசாரிகளும் வலதுசாரிகளும் (முதலாளித்துவ ஜனநாயகவாதிகளான வலதுசாரிகள்) ஒன்றுபட வேண்டும் என்பதாக நாம் புரிந்துகொள்ள வேண்டும். கம்யூனிஸ்டுகளும் ஜனநாயகவாதிகளும் ஒன்றுபட வேண்டும் என்ற கொள்கையை நாம் எப்படி புரிந்துகொள்வது என்பதை பிறகு பரிசீலிப்போம்.
முதலாளித்துவ ஜனநாயகவாதிகள் என்று சொல்லப்படும் வலதுசாரிகளிடையே இரண்டு பிரிவுகள் உண்டு. ஒரு பிரிவினர் முதலாளித்துவ ஜனநாயகத்தைப் பின்பற்றி உழைக்கும் மக்களுக்கு பெயரளவிலான ஜனநாயகத்தை வழங்கி உழைக்கும் மக்களை ஏமாற்றி சுரண்டுவார்கள். அதே வேளையில் உழைக்கும் மக்கள் போராடும் போது சட்டத்தைக் காட்டி உழைக்கும்மக்களை அடக்குவார்கள். இதற்கு மாறாக சில வலதுசாரிகள் இந்த முதலாளித்துவ ஜனநாயகத்தையும் உழைக்கும் மக்களுக்கு கொடுக்க மறுத்துவிட்டு பாசிசத்தை செயல்படுத்து வார்கள்.
இன்னும் பின்னர்...




No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்