ஜாதியம் தோற்றம் வளர்ச்சி இன்று மற்றும் அதனை ஒழிப்பது பற்றி-3

 ஜாதியம் தோன்றுவதற்கு முன்

இதற்கு முந்தைய பகுதியை வாசிக்க இந்த இணைப்பை அழுத்தவும்

பண்டைய காலத்தில் மானுட சமூகம் சிறு சிறு குழுக்களாக வாழ்க்கை நடத்தியது. மக்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை தாங்களே தேடிக் கொண்டனர். உழைப்புப் பிரிவினை சமமாக இருந்தது. ஆண்கள் வேட்டையாடினார்கள் உணவுப் பொருட்களை சேகரித்தனர். பெண்கள் உணவு தயாரித்தனர் வீட்டை கவனித்தனர். அந்தந்த துறையில் அவர்கள் மேலோங்கிருந்தந்தனர். அவர்கள் பயன்படுத்தும் பொருள்கள் அவர்களுக்கு சொந்தமாக இருந்தன. வேட்டையாடிய பொருள்களையும் இயற்கை உணவுப் பொருளையும் சேகரித்து எல்லாவற்றையும் பொதுவில் அனுபவித்தனர். இதனை உணவு சேகரிக்கும் நிலை (Food Gathering stage) என்பர் மானிடவியல் அறிஞர்கள்.

காட்டில் விலங்குகளை கண்டான் தானும் வளர்க்கக் கற்றுக்கொண்டான் அதனால் அது ஒரு தொழிலாகியது. கால்நடை வளர்ப்பும் பொருள் உற்பத்தியாக கால்நடை மூலம் பலவிதங்களில் மனித தேவைகளை பயன்படுத்தும் ஒரு நிலையை உண்டாக்கியது.

ஆண்கள் வேட்டையாடுதலில் ஈடுபடும்போது பெண்கள் கால்நடைகளை பராமரித்தலும் அதனை மேம்படுத்தும் பணியிலும் ஈடுபட்டதால் சமுதாய பொருளாதார நிலையில் பெண்களுக்கான ஒரு நிலை இருந்தது.

கால்நடை கொள்ளையிட பல குழுக்களுக்கிடையே சண்டைகள் மூண்டது, பல தடவை தங்களது தொழிலான கால்நடைகளை சண்டையிட்டு மீட்டனர்.

கூட்டு சமுதாயத்தில் கால்நடையை கவர்ந்து களவாடி செல்ல நடந்த போர்கள் போல இப்பொழுது நிலங்களை அபகறிபதற்கான போர்கள் நடைபெற்றன. அதாவது உற்பத்தி சாதனமாகிய நிலத்தை கொள்ளையடிப்பதற்காக போர்கள் நடைபெற்றன.

கிமு 300 ஆண்டுகளில் இரும்பு பயன்படுத்தப்பட்டதாக அறிகிறோம். தமிழ்நாட்டில் அகழ்ந்தெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளும் இரும்பின் பயன்பாட்டுக்குசான்றுபகிர்கின்றன.அதிசநல்லூரில் அகழ்ந்தெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளில் இரும்பு கத்திகள் கூர்வாள்கள், தீட்டிய அம்புகள், சிறு கோடாரி, கதிர் அரிவாள்கள், உளி, கைப்பிடிப்புள்ள இருமுனை வாள்கள், இரும்புத்தூண்டில், நீள் கைப்பிடிக் கரண்டி, மரம் செதுக்கும் கருவிகள் ஆகியன கண்டுபிடிக்கப் பட்டுள்ளன இவை இன்றளவும் சென்னை அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

வேளாண்மையில் இரும்பு கருவிகளின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க உற்பத்தி பெருகிகொண்டு போயிற்று. இன்னும் திருத்தமான கருவிகளுடன் மனிதனின் உற்பத்தி திறனும் புதிதான நிலங்களும் சேர்ந்துகொண்டு உற்பத்தியில் ஒரு பாய்ச்சலை ஏற்படுத்தியது. இந்த பாய்ச்சல் சமுதாயமாற்றங்களையும் உள்ளடக்கிக்கொண்டு வெளிவரலாயிற்று. கால்நடைகளினால் தங்கள் இன்றியமையாத வாழ்க்கை ஆதாரமாக இருந்த நிலை மாறியது. விலங்குகளை சார்ந்து இருக்க வேண்டிய நிலையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டது.

பெரிய காட்டில் அலைந்து திரிந்து வேட்டையாடி சேகரிக்கும் பொருள்களையும் விட கால்நடைகளை மேய்த்து கிடைத்தவை பெரிதே அதனை விட சிறிய நிலத்தை திருத்தும் அளவில் சிறிய கருவிகளை வைத்துக் கொண்டு உழுது பெற்ற உற்பத்திப் பொருள்கள் அதுவும் ஒரே இடத்தில் நிறைய பொருள்கள் கிடைக்கப்பெற்றன.இது எண்ணிக்கை பெருகப்பெருக தன்மைரீதியிலேயே மாற்றம் பெற்ற சமூகத்திற்கு வேளாண்மை வழிகாட்டியது. கால்நடைகளை வளர்த்தல் என்பது வேட்டையாடி உணவு சேகரிக்கும் நிலையை விட சற்று முன்னேறிய நிலை என்றாலும் கூட இரண்டு தொழில்களுக்கும் இடம் விட்டு இடம் நகர்ந்து செல்ல வேண்டியிருந்தது.

வேளாண்மைக்கு தேவையான கைவினைத் தொழில்கள் தோற்றம் பெறலாயின. இதை தொடர்ந்து ஏற்பட்ட உற்பத்தி மாற்றங்கள் மனிதனின் உழைப்பு சக்தியை பெருகியது. இப்போது மனிதன் தன்தன் தேவைகளுக்கு அதிகமாகவே உற்பத்தி செய்வதற்கான தன் உற்பத்தித் திறனை வளர்த்துக் கொண்டன. இந்நேரத்தில் வேளாண்மை, கைத்தொழில் என்று இரு மாபெரும் கிளைகள் உற்பத்தியில் பிரிவினையாக ஏற்பட்டதிலிருந்து, நேரடியாக பரிமாற்றத்துக்கான உற்பத்தி செய்யும் முறை அதாவது சரக்கு உற்பத்தி முறை பிறந்தது. அதன் உடன் நிகழ்வாகவே வியாபாரம் வந்து சேர்ந்தது. பணக்காரன் ஏழை என்ற வேறுபாடும் புகுந்தது.

புதிய வேலைப் பிரிவினைகளின் கீழே சமுதாயம் வர்க்கங்களாக பிரிந்தது, கூட்டு சமுதாயத்தில் இருந்த பல்வேறு குடும்பத் தலைவர்களின் சொத்துடமைகளில் ஏற்பட்ட மாறுபாடுகள் அதாவது மேலே மேலே ஏறி வரும் தனிச்சொத்து கூட்டுச் சமுதாய அமைப்பில் முதல் உடைப்பை ஏற்படுத்தியது. தொடக்ககால கைத்தொழில்கள் சரக்கு உற்பத்திமுறை இவற்றோடு மக்கள் தொகையும் பெருகியது, இத்துடன் செல்வ விசயத்தில் பெருத்த வேறுபாடுகள் சேர்ந்தன.

இதற்கு முன்னால் கூட்டுச் சமுதாய அமைப்புகுள் உயிரோட்டமாக நிலவிய ஜனநாயக முறைக்குள்ளேயே இச்செல்வவேறுபாடுகள் எல்லாம் ஒரு தனிப்பட்ட பிரபுத்துவ அம்சத்தை தோற்றுவித்தது. இன்னும் நன்கு விளையக்கூடிய முறையிலான உற்பத்தி சாதனங்களை நிலங்களை விஸ்தீரணம் செய்ய வேண்டியிருந்தது, எனவே இடத்தை அதாவது நிலத்தை பிரதேசத்தை மையமாகக் கொள்ள வேண்டிய அவசியம் வருகிறது.

இந்தக் காலத்தில் ஒரு நிலம் இன்னொரு நிலத்தோடு கலந்து வரலாற்று நிர்ப்பந்தமாக இணைக்கப்படும் போது பிரதேசமாய் வளர்கிறது. ஆக விவசாயம் பெருகவும் கைத்தொழிலும் வணிகமும் பல்வேறு பகுதிகளுடன் தொடர்பும் அவசியமாகிறது. இவைதான் பல்வேறு பிரிவுகள் நிலவுடமை சமூகத்தில் தோன்றியது பற்றி வரலாற்று வழி புரிதல்கள்.

lஜாதி அமைப்பு என்பது நன்கு வரையறுக் கப்பட்ட ஒரு நிறுவனம் அல்ல, இது ஒரே ஒற்றை வரலாற்று நிகழ்வில் உருவாகவில்லை. ஆனால் வெவ்வேறு சமூக தோற்றங்களைக் கொண்ட வளர்ச்சி போக்கில் ஒரு ஒழுங்கற்ற அமைப்பாகும், அவை அனைத்தும் காலப்போக்கில் கலந்தன.மனிதர்கள் ஆரம்பத்தில் அனைவரும் சிறிய குழுக்களிலோ அல்லது பழங்குடியினரிராகவோ இருந்துள்ளனர், மற்ற குழுக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கவில்லை.

நாம் ஜாதியை அதன் வேர்களை தேட பல ஆய்வு நூல்களை வாசித்தாலும் உலகில் பல பகுதிகளில் ஏற்ற தாழ்வான சமூக வர்க்க அமைப்பு போலவே இந்திய ஜாதி அமைப்பும் தோன்றியது என்பதில் மாற்று கருத்தேயில்லை. ஆனால் இந்த எல்லா நாடுகளிலும் இன்று (விதிவிலக்காக இந்தியா இலங்கை போன்ற நாடுகள் தவிர்த்து) ஜாதியின் வேர்கள் இல்லாமல் போய்விட்டது. இந்தியாவில் கோலோச்சுவது போலவே ஈழப்பகுதிகள் ஜாதியம் மீண்டெழுகிறது அவை ஏன் எப்படி என்பதனை இன்றைய ஏகாதிபத்தியம் தனது அவசியம் கருதி இவ்விதமான முரணை மக்கள் மத்தியில் விதைக்கிறது.

ஜாதிபற்றி பல்வேறு கோட்பாடுகள்

ஜாதியம் என்பது மக்கள் தோன்றிய காலம் தொட்டே இருந்த ஒன்று அல்ல. இவை தனி உடமை தேவையை ஒட்டி சொத்து சேர்க்கும் ஒரு கூட்டம் தோன்றிய பொழுது அடுதவர்களின் உழைப்பை சுரண்ட தேவையான பல வகை சுரண்டல் முறை உலகெங்கும் காண முடியும். அதில் இந்திய துணை கண்டத்தில் அந்த சுரண்டல் முறையின் ஒரு வடிவம் ஜாதியாக உருதிரண்டு நிலவுடைமை சமூகத்தில் அவை உருபெற்றது.

அதாவது உலகில் உள்ள மற்றச் சமூகஅமைப்பு போலவே இந்தியச் சமுக அமைப்பும் வர்க்க அமைப்பே. அதில் சில தனிச் சிறப்புகள் உண்டு (வரலாற்று பொருள்முதல்வாத கண்ணோட்டத்தில்).இந்தியச் சமூகத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளாக ஜாதி நிலவி வந்தாலும் அதன் செயல்பாடும் வடிவமும் எல்லா காலங்களிலும், ஒரே மாதிரியாய் இருந்ததில்லை.

நிலபிரப்புத்துவ அமைப்பு முறையில் தொழிற் பிரிவினை அடிப்படையில் ஜாதியம் உறுதியாக செயல்பட்டது. இன்றோ நடைமுறையில் அவை இருந்தாலும் அதன் தேவையின்றி போய்விட்டது எனலாம்.

  • ஜாதியானது இந்திய சமூக வளச்சிப் போக்கில் இயற்கையாய் கருக்கொண்டு சூழலுக்கேற்ப உருக்கொண்டு, உபரியை உறிஞ்சும் சுரண்டல் வடிவமாக உருபெற்றபோது அதற்கு கோட்பாட்டு நியாயம் வழங்கி ஜாதியத்தின் இருதலுக்கு பங்காற்றியது (சனத்தன இந்து மத) பிராமணியமே, அதன் கொடிய அம்சம் சுரண்டல் வடிவில் அடங்கி உள்ளது. பிறப்பின் அடிப்படையில் தொழில்களை ஒழுகமைப்பதில் இச்சுரண்டல் அடங்கியுள்ளது.

நிலப்பிரபுத்துவத்திற்கு முந்தைய உற்பத்தி முறையிலேயே ஜாதி கருக்கொண்டிருந்தாலும் அவை திடமாக நிலபிரபுத்துவத்தில்தான் உருக் கொண்டது.

நிலப்பிரபுத்துவ அமைப்பில் நிலத்தின் மேல் பரம்பரையாக உரிமை கொண்டவர் தம்மை உயர்ந்த ஜாதியாக்கிக் கொண்டனர். நிலவுடமை சமூகத்தில் நிலத்தில் உழைப்பவர்கள் நிலம் சார்ந்த உழைபிற்கான பிற சேவைகளை கவனித்தவர் யாவரும் சேவையின் அத்தியாவசியத்தை ஒட்டி பல்வேறு சமூக அமைப்பினராக பல படிகளில் பிரிக்கப்பட்டனர். நிலமுடையவர்க்கு உயர்ந்த மதிப்பும் உழைக்க வேண்டியதில்லை, உடல் உழைப்பாளர்கள் மதிபற்றவர்களாக கருதுகின்ற இந்த ஜாதி அமைப்பின் அடிப்படை நோக்கம் உழைப்புச் சுரண்டலே. கிராமங்களில் தொழில்பிரிவில் உள்ள எல்லோரும் உற்பத்தி சாதனங்களை கொண்ட நிலப்பிரபுக்களின் தயவில் வாழ நேரிட்டது.

இன்றை சமூகத்தில் நிலப்பிரபுத்துவம் அதிகாரத்தில் இல்லாமல் இருந்தும்; தனியுடமை சமூக அமைப்பு ஜாதிகளை கட்டிக் காத்து அதன் முரண்பாடுகளை மக்கள் மத்தியில் விதைத்து பிரித்தாளும் சூழ்ச்சியால் ஆளும் வர்க்கம் தொடர்ந்து பாதுகாக்கிறது. உழைக்கும் ஏழை எளிய மக்கள் ஜாதியின் பெயரால் அடக்கி ஒடுக்கப் படுகின்றனர்.

தொடரும்....

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்