ஜாதி அன்றும் இன்றும் மற்றும் தீட்டும் தீண்டாமையும் அதனை ஒழிபதற்கான போராட்டங்களும்-1

 ஜாதியின் தோற்றம் இன்றைய இருப்பு மற்றும் ஒழிப்பை பற்றி தெரிந்துக் கொள்ள மனித சமூக தோற்றம் வளர்ச்சி பற்றி அறிவியல் பூர்வமாக புரிந்துக் கொண்டால் விடைகாணுவது எளிதாக இருக்கும் என்பதற்கான என் தேடலே இந்த நூல்

மனிதன் தோன்றுவதற்கு முன் அவன் வாழ இடம் எப்படி வந்தது? ஆம் இந்த உலகம் எப்படி தோன்றியது? அதில் உயிர் எப்படி தோன்றியது? என்பதனையும் அறிந்துக் கொண்டால் அறிவியல் பூர்வமாக நாம் ஒவ்வொன்றையும் அணுக முடியும். பூமியின் தோற்றம் முதல் உயிரினங்களின் தோற்றம் இன்றைய சமூகம் வரை அதன் தோற்றம் வளர்ச்சியை நமக்கு விளக்கும் சமூக விஞ்ஞான அறிவும் சற்று பெற்றுக் கொண்டால் நம்மை அறிந்துக் கொள்வது எளிதே என்பேன்.இதனை ஏற்றுக் கொள்ளாதவன் நம்பிக்கைவாதி ஆம் கடவுள் பற்றாளன் அவனை பற்றி பேசி பயனில்லை.

உலகம் ஓர் எரியும் பந்தாக கோடிக்கணக்கான ஆண்டுகள் இருந்தது அக்காலத்தில் பூமி உள்ளிருந்து பல துண்டுகள் வெடித்து மேலே வந்து உலகத்தில் வெப்பத்தை மேலும் அதிகரிக்க செய்தது. இவ்வாறு மேலே வரும் துண்டுகள் மலைகளாயின.இவ்வாறு பூமியின் வரலாறை தேடும் நாம் மனித குல வரலாறு என்பது மிக அருகாமையில் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். சூரியமண்டலத்தில் பூமியானது 700 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவாகியதாக இருந்தாலும் பூமியின் உருவாக்கம் என்பது சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னர்தான் தோன்றியதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். தீகோளமான சூரிய மண்டலத்தில் பல்வேறு இயற்கை சூழல்கள் அதில் குறிப்பாக தொடர் மழை மீண்டும் நீர் ஆவியாக மாறி மேகக்கூட்டதிற்கு சென்று பெருமழை இடையராது பெய்த மழையால் பூமி குளிர்ந்தது, நீர்நிலைகள் பெருகின பின்னர் சூரியன், காற்று, நீர்நிலை போன்ற நிலநடுக்கம், எரிமலை, கண்டங்கள் பெயர்ச்சி மறுபடியும் மலைகள் உருவாதல். இவ்வாறாக பூமியின் பரப்பு மலைகள், மடுக்கள், குளங்கள், குட்டைகள், ஓடைகள், ஆறுகள், பரந்தகடல்கள், பனிபரப்புகள், பாலைவனங்கள் என உருமாறி சுருக்கமாக பூமி உருவானது. 450 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமி தோன்றியிருந்தாலும் இதில் உயிரினங்களின் வளர்ச்சி என்பது சுமார் 250 கோடி ஆண்டுகளுக்கு முன் அஸோயிக் (Azoic) காலகட்டம். 150 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் கடற்பாசி புழு, நுங்கு மீன் போன்ற புரோட்டோரோசாசிக்(Proterozoic) காலகட்டம் ஆகும். ஊர்வன இன்னும் பல்வேறு வகையான அதன் மூதாதையர்கள் 60-27 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றின. மிஸோஸோயிக் (Mesozoic) என அழைக்கப்படும் ஜுராசிக் டைனோசர் காலகட்டமானது 22.5 லிருந்து 4 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். மாடு, யானையின் முன்னோடி, குதிரைகளின் முன்னோடி, பன்றி, வாலற்ற குரங்குகளின் முன்னோடி, மலரும் தாவரங்கள், நாய், கரடி போன்ற விலங்குகளின் முன்னோடிகள் தோன்றி மறைந்த காலகட்டமானது 7 கோடி லிருந்து 2.5 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.

முதுகெலும்புள்ள பல விலங்குகள் இன்றில்லாத வாழ்ந்த காலம் 0.3 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட காலமாகும். கற்கால மனிதன் (Pleistocene) காலக்கட்டம் 0.2 லிருந்து 0.3 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டவர்கள். 30 லிருந்து 20 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பணியுககாலம், பழைய கற்கால மனித வளர்ச்சி காலம் ஆகும்.உடற்கூறு ரீதியாக ஹோமோ சேப்பியன்ஸ் என்றழைக்கப்படும் நவீன மனிதர்கள் (அறிவுக் கூர்மையுடைய மனிதன்) ஆப்பிரிக்காவில் சுமார் 3,00,000 ஆண்டுகளுக்கு முன் தோன்றினர். இந்த நவீன மனிதர்கள் சுமார் 60,000 ஆண்டுகளுக்கு முன் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் தொடர் இடப்பெயர்வால் பரவியதாக நம்பப்படுகிறது. இவ்வாறு மனிதனின் வளர்ச்சி போக்கை அறியும் நாம் மனிதன் மூலம் பற்றி பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும் அவன் விலங்கினத்தை சேர்ந்தவன் என்பதில் ஐயமில்லை. அவன் ஹோமோ செபியன் (Homo sapien) எனும் இனத்தை சார்ந்தவன். ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் என்று அடிப்படையில் ஒரே இனத்தின் எந்த ஆணும் பெண்ணும் கூடி இனப்பெருக்கம் செய்ய முடியும். இயற்கையின் இந்த நியதிப்படி அனைத்து மனிதர்களும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் (உலகில் உள்ள எல்லோரும்).

விலங்கு இனங்களின் சில வகையினம் வேறு வகையினதுடன் சில வேளைகளில் இனபெருக்கதிற்கு சேரக்கூடும், ஆனால் அவ்வாறு சேர்ந்தால் அவற்றை வேறாகத் தெரிந்துகொள்ளலாம்; அத்துடன் அவை அநேகமாகக் கலந்த உருப்பெறுவதில்லை. ஆனால் மனித வகைகள் அல்லது இனங்கள் பொதுவாகக் கலந்து உருவாகக்கூடியன அப்படி உருவாகி வந்தவைதானே. இவ்வாறு இனங்கள் கலப்பதனால் மலட்டுத்தன்மை எங்காயினும் உண்டாவதாகத் தெரியவில்லை. இன்று தூயஇனவாதம் பேசும் பலர் மறந்தே போனயிடம் இன்று வெவ்வேறு இனமாக காணப்படும் இவர்கள் முந்தைய நகர்வுகளில் கலப்புற்றுப் பிறந்தவர்களேயென்பதை இதிலிருந்து தெளிவாக நாம் புரிந்துக் கொள்ள முடியும் மனிதகுலமான ஒரே தொப்பூல் கொடி உறவுதான் என்பதனை.

அறிவியல் ஆய்வுகள் மனிதர்கள் விலங்கினத்தின் ஒரு வகை ஆனால் சில சிறப்பம்சங்கள் தனிவகை என்பதை உணர்த்துகின்றன. சுருக்கமாகச் சொல்வதானால், மனிதர்கள் விலங்குளிலும் பார்க்க எளிதாகவும், காலநிலைகள், மற்றும் காரணங்களால் ஓரிடத்திலிருந்து இன்னொரிடம் மிகஎளிதாக இடம்பெயர்ந்துவிடுவர்; மனிதர் தம் உணவு, உடைகள், உதவிக்கு வேண்டிய கருவிகள், மிருகங்கள் ஆகியவற்றைத் தேவைக் கேற்றவாறு மாற்றிக் கொள்வர். இத்தகைய திறமையும் வாய்ப்பும் விலங்குகளுக்கு இல்லை. அநேகமாக, வெவ்வேறு உபகரணங்களும் அமைப்புகளுமுள்ள தொகுதியான மனிதர் உலகில் ஆர்ட்டிக்கண்டம் தவிர்ந்த எனைய பகுதிகளிலெல்லாம் வசிக்கின்றனர். ஆதேபோல் விலங்குகளும் இவ்வாறு எங்கும் பரந்துள்ளன வென்று சொல்லமுடியாது. மனிதருடன் சென்ற ஒரு சில மிருகங்கள் மாத்திரம் பரந்துள்ளன. மிருகவகைகள் தனிப்பட்ட இயல்புகளுள்ள தாயகங்களில் மாத்திரம் வசிக்கின்றன. மனிதன் இடம் பெயர்ந்து செல்லும் ஆற்றல் காரணமாக, உலகமெங்கும் பரந்தும், ஒன்றுடன் ஒன்று சேர்ந்தும் கலந்தும் பின்னிப்பிணைந்து விடுகின்றன.இப்பொழுதுள்ள மனிதவகைகள் யாவும் மனித இயல்புகளையே பெற்றிருந்த ஒருவகைப் பூர்வீக மனிதரிலிருந்தே வந்தவை என்பதில் இப்பொழுது சந்தேகமில்லை; உலகில் இங்குமங்குமாக இவர்கள் இடம்பெயர்ந்து முறையாக அப்பூர்வீக மனிதவகையினரிலிருந்து தோன்றியவர்களே இப்பொழுதுள்ள மனிதவகையினர். அவ்வகையான நகர்வில் இப்பொழுதுள்ள ஆபிரிக்க நீக்ரோகள், ஐரோப்பிய வெள்ளையர்; வட சீனவிலுள்ள “மஞ்சள்’ நிற மக்கள், மற்றும் உலகெங்கும் சிதறுண்டுள்ள பல்வேறு வகையினர் எவ்வாறு பாதிக்கப்பட்டனர் என்பதை அறியக் கூடியவாறு அந்நகர்வுகள் பற்றி ஆராய்ந்தால் பல குழப்பங்களுக்கு விடை கிடைக்கும், ஆனால் இங்கு நமது தேடல் மனித இனம் ஆதியில் தோன்றியதிலிருந்து இன்றைய வளர்ச்சிவரை புரிதலுக்கே. (மனித இனங்கள் என்ற நூல் பயனுள்ளவை- மீர்‌ பதிப்பகம்‌ சோவியத்‌ நாடு , மாஸ்கோ 1974).இன்றைய இலவியல் கோட்பாட்டை ஏகாதிபத்திய சதியென்று UNSCO ஏற்றவையே.

இன்னும் தெளிவாக அண்மைய ஓர் ஆய்வாளரின் எழுத்தை பயன்படுத்தி கொள்வோம்.”மூதாதையரை தேடி”என்ற நூலின் அடிப்படையில் மனித குலம் வளர்ந்த கதை தெரிந்துக் கொள்ள முயலுவோம்.”உயிரினங்களின் தோற்றம் பற்றி எழுதிய சார்லஸ் டார்வின் மனித குல வரலாறு பற்றி வருங்காலத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் தனது முடிவுகளை மேலும் தெளிவுபடுத்தும் என்று கூறினார். ஆனால் டார்வின் மனிதன் குரங்கிலிருந்து உதித்தான் எனக் கூறியதாக அவசொல் பெற்றார். பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை தவறாக புரிந்து கொள்பவர்களே இதுபோல் அவர் மீது குற்றம் சுமத்துகின்றனர். நாம் குரங்கிலிருந்து பிறந்தவர்கள் அல்ல, குரங்கு நம் மூதாதையர் என்றால் ஏன் இன்னும் குரங்குகள் குரங்குகளாக இருக்கின்றன? அதாவது நாமும் நம் கொள்ளுப்பாட்டனும் எவ்வாறு சமகாலத்துவராக இருக்க முடியும்? குரங்குக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு தாத்தா பேரன் உறவு அல்ல பங்காளி உறவு. அதாவது சித்தப்பா மகன், பெரியப்பா மகன் உறவினாகும் ஒரே வம்ச விருத்தியில் பல கிளைகளில் இரு கிளைகள் குரங்குகளும் ஆதி மனிதர்களும் ஆகும்.

கற்கருவிகள் செய்வதற்கு வழவழப்பாக்கும், மெருகூட்டும் புதிய நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டதால் இது புதியகற்காலம் என்று அழைக்கப்படுகிறது. புதிய கற்கால மக்கள், பழங்கற்காலச் செதுக்கப்பட்ட கற்கருவிளையும் பயன்படுத்தினர். இடைக்கற்காலம் வரையிலும் மக்கள் தாம் நிலைத்திருப்பதற்காக வேட்டையாடுவதையும் உணவு சேகரிப்பதையும்தான் நம்பியிருந்தார்கள். வேட்டையிலும் உணவு சேகரிப்பிலும் மிகவும் குறைந்த அளவு உணவுதான் கிடைத்தது. இதன் விளைவாக, ஒரு குறிப்பிட்ட பகுதிக்குள் மிகச் சிறிய எண்ணிக்கையிலான மக்கள்தான் வாழ முடிந்தது.

பிறகு பயிர் விளைவித்தலும். விலங்குகளைப் பழக்கப்படுத்துதலும் அறிமுகமானது. இது ஏராளமான அளவில்தானியமற்றும் விலங்கு உணவை உற்பத்தி செய்வதற்கு இட்டுச் சென்றது. ஆறுகள் படிய வைத்த வளமான வண்டல் மண் வேளாண்மை அதிகரிக்க உதவியது. இது, சிறந்த இயற்கைத் தகவமைப்பாக இருந்ததால், மக்கள் நதிக்கரைகளில் வாழ்வதை விரும்பினர். இப்புதிய செயல்பாடுகள் உணவு உபரிக்கு இட்டுச் சென்றது. இந்த உணவு உபரிதான் பண்டைய நாகரிகங்களின் உருவாக்கத்துக்கு ஒரு முக்கியமான கூறு ஆகும். இக்காலத்தில் நிரந்தரமான வீடுகள் கட்டப்பட்டன. பெரிய ஊர்கள் உருவாகின. எனவே, இவை புதிய கற்காலப் புரட்சி என்றழைக்கப்படுகிறது.

நமது தேடலுக்கு இன்றைய விஞ்ஞான வளர்ச்சி பெரும் துணை புரிகின்றது

  • உயிரியல் பரிணாமம் குறித்த டார்வினின் கொள்கை

● மனிதன் மற்றும் விலங்குகளின் புதைபடிவங்கள், பண்டைய நாகரிகங்களின் கற்கருவிகள், செய்பொருள்கள் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டமை.

● தொடக்ககால எழுத்துகளை வாசிக்கத் தொடங்கியமை.

கடந்த காலத்தில் வாழ்ந்த விலங்குகள், தாவரங்களின் எச்சங்கள், தடங்கள், அடையாளங்கள் அப்படியே பாதுகாக்கப்பட்டிருப்பது புதைபடிவங்கள் (fossils) எனப்படும். கனிமமாக்கல் (Mineralization) காரணமாக விலங்கின் எலும்புகள் அப்படியே பாதுகாக்கப்பட்டுவிடும். புதைபடிவுகள் குறித்த ஆய்வு புதைபடிவ ஆய்வியல் (Palaeontology) என்று அழைக்கப்படுகிறது.

இவை நமது சமூக அறிவை அறிவியல் பூர்வமாக அணுக பயன்படும் ஆகையால் ஒவ்வொரு அறிவுத்துறையையும் நாம் அறிந்து புரிந்து எளிதாக இங்கே கட்டப்பட்டுள்ள சமுக முடிச்சை அவிழ்க்க எளிதாக இருக்கும் என்று இதனை உங்கள் முன் வைத்துள்ளேன்.

உலகில் தோன்றிய எல்லா சித்தாந்தகளும் மனிதகுலத்தை விளக்க செய்தது மார்க்ஸ் மட்டுமே அதனை அடிப்படைகளை விளக்கி அதனை மாற்றுவதற்கான வழி கூறினார். “எவ்வாறு டார்வின் உயிர்ப் பொருள் இயல்பின் வளர்ச்சி விதியைக் கண்டறிந்தாரோ அவ்வாறே மனித வரலாற்றின் வளர்ச்சி விதியை மார்க்ஸ் கண்டறிந்தார்; அரசியல், விஞ்ஞானம், கலை, மதம் ஆகியவற்றில் ஈடுபடுவதற்கு முதல் உண்ண,உடுக்க இருக்க வேண்டும் என்ற எளிய உண்மையை மத சித்தாந்தங்களால் மறைக்கப்பட்டிருந்த உண்மையை மார்க்ஸ் வெளிச்சமிட்டு காட்டினார் எனவே மனித வாழ்க்கைக்கு உடனடியாக அவசியமான பொருள் சார்ந்த வகைமுறைகளின் உற்பத்தியும் அதன் விளைவாக ஒரு காலப்பரப்பில் பெறப்பட்ட பொருளியல் வளர்ச்சியுமே அரச நிறுவனங்களதும், சட்டக் கருத்தாக்கங்களதும் கலைகளதும் ஏன் மதங்கள் பற்றிய சிந்தனைகளதும் அஸ்திவாரமாக அமைந்தன எனவும் முன்னையவற்றின் அடிப்படையிலேயே பின்னவை விளக்கப்பட வேண்டுமேயன்றி இதுவரை இருந்துவந்தது போல மறுவிதமாக அல்ல என்பதையும் கண்டறிந்தார்.

இயற்கையில் ஏற்படும் மாற்றங்கள் தற்செயலானவை அல்ல. அவை சில நுண்ணிய விதிகளின் அடிப்படையிலேயே மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை இயற்கை பற்றிய விஞ்ஞானங்கள் நமக்கு தெளிவு படுத்துகிறது. அது போலவே சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களும் சில நூண்ணிய விதிகளின் அடிப்படையிலேயே ஏற்படுகிறது என்றும் அந்த பொதுவான விதிகளை மார்க்சியம் கண்டறிந்து சமூகத்தை மாற்ற விரும்புபவர்களுக்கு முன்னால் வைத்துள்ளது. சமூக மாற்றத்திற்கான பொதுவான காரணம் என்ன? எந்த அடிப்படையில் இந்த மாற்றங்கள் நிகழ்கின்றன என்ற பொதுஉண்மையை, பொதுவான வழிகாட்டுதலையை, பொதுவான கண்ணோட்டத்தை மார்க்சியம் வழங்குகிறது. இந்தபொதுவான கண்ணோட்டத்தை உள்வாங்கி அதன் அடிப்படையில் குறிப்பான சமூகத்தின் அல்லது குறிப்பான நாட்டின் சூழல்களை ஆய்வு செய்து குறிப்பாக சமூக மாற்றத்திற்கான கொள்கை திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று மார்க்சியம் வலியுறுத்து கிறது. ஆகவே மார்க்சியமானது நிரந்தரமான வறட்டுசூத்திரங்களை முன்வைக்கவில்லை மாறாக குறிப்பான பிரச்சனைகளை ஆராய்ந்து முடிவெடுப்பதற்கான பொதுவானவழிகாட்டுதலையும் கண்ணோட்டத்தையும் வழங்குகிறது. ஆகவே குறிப்பான சமூக மாற்றத்திற்கு தீர்வுகளை அறிந்திட அந்த நாட்டின் குறிப்பான சூழல்களை புறக்கணித்துவிட்டு மார்க்சியத்தை மட்டும் பேசிக்கொண்டிருப்பதோ அல்லது ரஷ்யா மற்றும் சீனாவில் நடந்த மாற்றங்களைப் பற்றி மட்டும் பேசிக் கொண்டிருப்பதால் பயன் இல்லை. அதே போல் மார்க்சியம் வழிகாட்டும் பொது உண்மையையும் கண்ணோட்டத்தையும் மறுத்து விட்டு மேலும் ரஷ்ய, சீனப் புரட்சிகளின் அனுபவத்தையும் புறக்கணித்து விட்டு சொந்த நாட்டு சூழல்களையும் அதன் அனுபவங்களை மட்டும் பார்த்து குறிப்பான சமூகத்தை மாற்றுவதற்கான விஞ்ஞானப் பூர்வமான முடிவை எடுக்க முடியாது. ஆகவே மார்க்சிய கண்ணோட்டத்தையும் குறிப்பிட்ட நாட்டின் சமூக இயக்கத்தையும் இணைத்து

ஆய்வு செய்வதன் மூலம் மட்டுமே சமூக மாற்றத்திற்கான கொள்கை முடிவுகளை நாம் விஞ்ஞானப்பூர்வமாக எடுக்க முடியும். ஒரு நாட்டில் சமூக மாற்றத்திற்கான கொள்கை முடிவுகளை ஆய்வுசெய்து எடுக்க விரும்புபவர்கள், அந்தநாட்டின் மாவீரர்களையோ, அரசியல் தலைவர்களையோ அடிப்படையாகக் கொள்ளக் கூடாது, மேலும் அங்குள்ள மதங்களையோ, மதத்தலைவர்களையோ அடிப்படையாகக் கொள்ளக்கூடாது மாறாக அந்த நாட்டில் வாழும் மக்களையேதான் அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்று மார்க்சியம் நமக்கு வழிகாட்டுகிறது. ஏனென்றால் இயற்கை மாற்றங்கள் சூழ்நிலை சாதகமாக இருந்தால் தானாகவே மாற்றம் ஏற்பட்டுவிடும், அதுபோல சமூக மாற்றங்கள் நடக்காது ,மாறாக சமூகத்தை மக்களின் முயற்சி மற்றும் செயல்பாடுகளின் மூலம்தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். அதாவது சமூக மாற்றத்தில் மனிதர்களுக்கு முக்கியமான பங்கு இருக்கிறது. ஆகவேதான் சமூகமாற்றத்திற்கான கொள்கை திட்டம் வகுப்பதற்கு மனிதர்களின் வாழ்நிலை உணர்வுநிலை, அவர்களின் தயார்நிலை போன்ற அம்சங்களை அடிப்படையாகக் கொள்ள வேண்டும் என்று மார்க்சியம் வழிகாட்டுகிறது. மனிதசமூகம் உயிர்வாழ மற்றும்வளர்ச்சியடைய வேண்டுமானால், அதற்கு உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். அதற்கு மனிதர்கள் உற்பத்தியில் ஈடுபடவேண்டும். ஆகவே மனித சமூகத்தின் வரலாற்றை புரிந்து கொண்டு சமூகத்தை மாற்றியமைப்பதற்கு நமது ஆய்வானது உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டிருக்கவேண்டும் என்று நமக்கு மார்க்சிய சமூகவிஞ்ஞானம் போதிக்கிறது.

மனிதர்கள் உற்பத்தியில் ஈடுபடும்போது உற்பத்திச் சாதனங்களின் துணைகொண்டே உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள். ஆரம்பகாலங்களில் இந்த உற்பத்திச் சாதனங்கள் சமூகத்தின் பொதுச் சொத்தாக இருந்தது. அதனால் மக்களிடையேவர்க்கப்பிரிவுகளோஏற்றத்தாழ்வுகளோஇல்லை. உற்பத்தியின் வளர்ச்சிப் போக்கில் பல்வேறுவேலைப் பிரிவினைகள் தோன்றியது. அதன் தொடர்ச்சியாக மனிதர்களிடையே உடமையுள்ளவர்கள் மற்றும் உடமையற்றவர்கள் உருவாகிறார்கள் மேலும் சமூகத்தின் தேவைக்கு அதிகமான உற்பத்தி நடந்தது. இந்த உபரியையும் உற்பத்திச் சாதனங்களையும் திறமையானவர்கள் தனியுடமையாக கைப்பற்றிக் கொண்டு பலரை உடமையற்றவர்களாகமாற்றி அவர்களை சுரண்டி வாழ ஆரம்பித்தனர். இப்படித்தான் வர்க்கங்கள் தோன்றின. இதன் பின்பு சமூக உற்பத்தியானது மனிதர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்ட இந்த வர்க்கங்களுக்கு இடையிலான உறவின் அடிப்படையிலேயே நடக்கிறது. இதனைத்தான் உற்பத்தி உறவு என்கிறோம். இந்த உற்பத்தி உறவுதான் சமூகத்தின் அடித்தளமாக இருக்கிறது. இதனை ஆய்வு செய்து மாற்றி யமைப்பதன் மூலமே சமூகத்தை மாற்றியமைக்க முடியும்.

வர்க்க சமூகத்தில் பல்வேறு உடமை வர்க்கப்பிரிவுகள் இருந்தாலும் எந்த வர்க்கங்களின் கைகளில் அரசியல் அதிகாரம் இருக்கிறதோ அந்த வர்க்கங்கள்தான் அந்த சமூகத்தின் ஆளும் வர்க்கமாகும். இந்த அதிகாரத்தை பயன்படுத்தியே சமூகத்திலுள்ள பிற அனைத்து வர்க்கங்களையும் கட்டுப்படுத்தி சுரண்டி உற்பத்தியை நடத்துகிறது. இந்த வகையில் தனது சுரண்டலை நியாயப்படுத்தவும் தொடர்ந்து சுரண்டலை நடத்துவதற்கான கருத்துக்களை உருவாக்கி அதனை மக்களிடம் பிரச்சாரம் செய்வதற்கான அரசியல் கட்சிகள் மற்றும் சாதி மத நிறுவனங்களையும் கலை இலக்கியங்களையும் மற்றும் வன்முறை கருவியான அரசையும் உருவாக்குகிறார்கள். இவ்வாறு அடித்தளத்திலுள்ள தனது உற்பத்தி உறவை பாதுகாக்கவும் பலப்படுத்துவுமானஇந்த அமைப்புகளையும் சித்தாந்த நிறுவனங்களையும் மேல்தளம் என்கிறோம். மேலும் சுருக்கமாக அறிவோம். மனித குலம் தோன்றியதிலிருந்து இதுவரை 5 விதமான சமுக அமைப்பு தோன்றியுள்ளது. அவை அதன் சமுக உற்பத்தி முறையின் அடிப்படையில் அதனை ஒவ்வொன்றாக மேலோட்டமாக பார்ப்போம். இவ்வாறு ஜாதியின் தோற்றம் இன்றைய இருப்பு அதனை ஒழிப்பதை பற்றி பல்வேறு போக்குகளை அலசி ஆராய்ந்ததோடு ஒழிபதற்கான வழி எவை எது எப்படி ஏன் என்பதனை ஆணித்தரமாக விளக்க முயற்சித்துள்ளேன்.

இன்னும் பின்னர்




No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்