தலித்தியம்தான் என்ன சொல்கிறது ? ஜாதி ஒழிப்பு பற்றி புரிதலும்

இன்று தினம் தினம் நாம் பார்க்கும் செய்திகளும் செயல்களும் நாம் வாழும் சமூகத்தின் ஒரு பகுதியினருக்கு செத்துப் பிணத்தை கூட எடுத்து செல்ல பொது வழி இல்லை ஒன்றாக வாழ்வதற்கு இடமில்லை ஒற்றுமையாக வாழவழிவகையில்லை மக்களை பல்வேறு பிரிவினர்களாக பிரித்ததில்லாமல் இதில் ஒரு பிரிவினர் கீழானவர் தீண்டதாகதவர் என்று ஒதுக்கி வைக்கும் கீழான போக்கே இந்த பிரிவினையே ஜாதியம்,ஜாதிஇருதலுக்குகட்டியம்கூறுகிறது.இந்த தீண்டாமை மற்றும் பல ஒடுக்குமுறை ஆளாகும் ஜாதியினராகட்டும் ஆதிக்க ஜாதி எனக் கூறப்படும் உழைக்கும் மக்களும் உழைக்காமல் வாழும் கூட்டமும் இன்று வர்க்கமாக பிரிந்துள்ளது. ஜாதியின் உச்சியில் அமர்ந்துள்ள அந்தந்த ஜாதியில் மேலாண்மை புரிபவர்களுக்காக கடைநிலையில் உள்ள உழைப்பாளர்கள் தங்களுக்குள் மோதிக் கொண்டும் ஒருவரை கொன்று கொண்டும் வாழும் அவலம் இவை ஏன்?

தமிழகத்தில் ஜாதி குறித்து நமது புரிதலை பல வரலாற்று ஆசிரியர்கள் நமக்கு தொகுத்தறித்துள்ளனர். பல்லவர் காலம் தொட்டு இன்றைய ஆட்சியாளர்கள் வரை ஜாதியத்தை கையாண்டு விதமும் புரிதலும் ஆழமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.(நான் எழுதியுள்ள ஜாதியம் நூலிலிருந்து)

தலித் என்ற மராட்டிய சொல்லானது ஒடுக்கப்பட்ட ஜாதியின் தொகுப்பாக சொல்லப்பட்டாலும் இன்று தாழ்த்தப்பட்ட ஜாதியினரை  மட்டும் குறிப்பதாகஉள்ளது.

உலகில் தோன்றிய பல்வேறு விதமான பிரிவுகள்  மனித குல வளர்ச்சி போக்கி நாம் காண்கிறோம் அவற்றின் ஒரு போக்கு தான் ஜாதியும். ஜாதிக்குரிய தன்மைகள் குறிப்பிட்ட பல அம்சங்கள் தெற்காசிய சமூகத்தில் விரவிகிடப்பதாக அறிஞர்கள் கருதுகின்றனர்.

இந்தியா முழுவதிலும் ஜாதி பரவிகிடக்கிறது அது பொது தன்மையோடு இருப்பினும் அதில் பலவட்டார அடிப்படையிலான வேறுபாடு அம்சங்களையும் காணலாம்.நில உடமை உற்பத்தி முறையில் ஒவ்வொரு தொழிலும் முழுமையான ஒரு வித சுய உள்ளாற்றலையும் இயங்குதல்களையும் கொண்டிருந்தது. அதே நேரத்தில் ஒரு பொது பொருளாதார அமைப்பின் கட்டமைப்புக்குள்ளும் இயங்கிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு தொழிலும் தம்சுயேச்சைத் தன்மையை பேணிக் கொண்டிருப்பதோடு நிலவுடமை பொருளாதாரத்தில் ஒரு கண்ணியாகவும் உள்ளது.இதற்கு உகந்த விதத்தில் தொழில் வழி வகுப்புக்குள் அகமண முறை அழுத்தம் பெற்று சாதியமயமாயிற்று.

ஜாதி தோன்றியிலிருந்து இன்றுவரை பல்வேறு விதமான மாற்றங்களின் ஊடாக ஜாதியே வர்க்கமாக இருந்த காலம் மாறி இன்று ஒவ்வொரு ஜாதியிலும் ஒன்றுக்கு மேற்பட்ட வர்க்கங்கள் உள்ளதை காணலாம்.ஜாதிகளில் ஏற்பட்டு கொண்டிருக்கும்  வர்க்க மாற்றங்கள் நாம் வாழும் சமூகத்தில் சிறிது அசைவை கொடுத்துள்ளது. ஒரு ஜாதிக்குள் ஏற்பட்டால் வர்க்க மாறுதல்களை இயங்கியல் அளவில் காணும் பொழுது ஏகாதிபத்திய பொருளாதார நலன்களாலும் நில உடமை சமூகத்தாலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ள புறநிலை வர்க்கங்களாலும் உருவாகும் வர்க்க உணர்வை விட ஜாதி உணர்வு   மேலோங்கி உள்ளதுவர்க்கமாக ஒன்றிணைவதில் பல சமூக தடைகள் இருப்பதை காண்கிறோம்

இருந்தும்....

சமூக உற்பத்தி கட்டமைப்பில் உற்பத்தியில் ஈடுபடும் கணிசமானோர் தாழ்த்தப்பட்டவகுப்பைச் சார்ந்தவரேதாழ்த்தப்பட்டோர் மீதான ஜாதிய ஒடுக்குதலும் ர்க்க சுரண்டலும் இன்றைய சமூக அமைப்பில் அத்தகைய சுரண்டலுக்குரிய காரணங்களை கொண்டிருப்பதால் அவற்றிலிருந்து விடுதலைப் பெறுதலுக்கான ஜனநாயக போராட்டங்கள் தேவைபடுகின்றன தலித் நலன்களை முன்னிலைப்படுத்தும் இயக்கங்கள் எதுவாயினும் இத்தகைய ஜனநாயக போராட்ட இயக்கங்களின் கூறுகளாக அவை புறநிலையில் அமைந்து விடுகின்றன என்றாலும் இன்று பலபோக்கு கொண்ட நிலையினையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வெண்டும்.

தலித்துகள் தம் அடிமை நிலையிலிருந்து மீள்வதையையே தலித் விடுதலை என்கிறோம். அதற்கான அரசியலை தலித் அரசியல் என்று குறிப்பிடுகின்றோம்.இங்குள்ள ஒடுக்கு முறையில் இருந்து பொருளாதார அரசியல் சமூக பண்பாட்டுத் தளங்களிலிருந்து விடுதலைப் பெறுவதையே சமூக விடுதலை என்கிறோம். அதாவது இங்கு தலித்துகள் அல்லாத சமூகத்தில் வேறு மக்களும் ஒடுக்கப்பட்டுள்ளனர். அவர்களும் இந்த சமூகத்தில் இருந்து விடுதலை பெறுவதே சமூக விடுதலை என்கிறோம்.தலித் விடுதலையை சமூக விடுதலை இருந்து பிரித்து தனித்து துண்டித்து காணும் போக்கு நாம் வாழும் சமூக அமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பைமுற்றாக மாற்றி அமைக்காமலேயே தலித்துகளுக்கு தனியான விடுதலை சாத்தியம் என்று இந்த போக்கு கூறுகின்றது.

உண்மையிலேயே சாதி ஒழிக்கப்பட்டு சமூக மாற்றம் வர வேண்டுமானால்சாதிக்கு ஆதாரமாக இருக்கிற சாஸ்திரங்களோடுஇந்து மதத்தையும் ஒழிக்க வேண்டும்இந்து மதம்எனவழங்கப்படுவதுஉண்மையில்ஒருமதமேஅல்லகட்டுப்பாடுகளையும்தடைகளையும் விதிக்கின்ற ஒரு சட்டங்களின் தொகுப்புதான்எனவே அதை ஒழிக்க வேண்டும் என்பதில் மதவிரோதம் என்று எதுவுமில்லைஎனவேநான் மதம் மாற முடிவு செய்து விட்டேன் என்று தனது உரையை முடிக்கிறார்.

(அம்பேத்கர் 1916 இல் எழுதியிருக்கிறார் ந்தப் பகுதி அம்பேத்கார் சாதியம் என்ற பகுதியிலிருந்து எடுத்தாளாப்பட்டுள்ளது).

சமூக விடுதலை என்பது வர்க்க  ரீதியாக மக்கள் சுரண்டப்பட்டு கொண்டுள்ளபோது இந்த சுரண்டலுக்கான அடித்தளத்தை முற்றாக மாற்றாமல் அரசுஅதிகாரத்தையும் உற்பத்தி முறையையும் கருத்துருவாக்கத்தையும் பற்றி பேசாமல் தலித் விடுதலை என்பது கானல் நீரே.இன்றைய சமூக உற்பத்தி முறையை அதாவது ஏகாதிபத்தியநலன்களுக்கான இந்நாட்டு பன்னாட்டு கம்பெனிகளின் நலன்களுக்கு உகந்தமுறையில் அரசு அதிகாரம் கோலோச்சும் பொழுது அதற்கு எதிராக போரடாமல் அதற்குள்ளேயே சில சீர்திருத்தங்கள் மூலம் விடுதலை என்பது கற்பனையானதே.

இன்றுநாட்டில்ஏற்பட்டுள்ளசமூகவளர்ச்சிமுதலாளிய மாற்றங்களை மேலும் கீழும் குறுக்கும் நெடுக்குமாக ஆழப்படுத்தி முழுமை அடைய செய்து நிலவுடமை உறவுகளை முற்றாகச் சிதைப்பதற்கான போராட்டத்துடன் சாதிய பண்பாட்டு மதிப்புகளை எதிர்த்துப் போராட்டங்களைஇணைப்பதன் மூலமே தலித் மக்கள் உழைக்கும் வர்க்கத்தின் வர்க்க உணர்வோடு ஒன்றிணைந்த போராட்டத்திற்கு ஒன்றுபடுவர்.

ஒடுக்கப்பட்ட தொழிலாளர்கள், கூலி விவசாயிகள், ஏழை எளிய மக்கள் ஒன்று திரண்டு போராடாமல் கிளர்ந்தெழாமல் எவ்வகையான புரட்சியும் விடுதலையும் சாத்தியம் அல்ல.ஜாதிகளை கடந்து உழைக்கும் ர்க்கமாக ஒன்றிணைந்து போராட வேண்டும் ஒற்றுமை கட்டப்பட்ட ஆக வேண்டியுள்ளது

தலித் மக்கள் அனைவரும் ஒடுக்கப்படும் ஜாதியினர் என்பது சரி சமூகப் புரட்சி என்பது ஜாதிய ஒழிப்பை உள்ளடக்கியதே  தவிர அது ஒன்றை மட்டும்கொண்டதல்ல. உற்பத்திமுறை மாற்றம், அரசு அதிகாரம் கைப்பற்றுதல் எனபல தளங்களில் இயங்கி  சமூக அரசியல் பொருளாதார பண்பாட்டு கூறுகளோடு நெருங்கியதாகும்.இங்குள்ள சூழலில் பாட்டாளி வர்க்கத்திற்கு நாம் இதற்கு முன்னர் கொடுத்த விளக்கத்தோடு இணைந்து காணும் பொழுது பாட்டாளி வர்க்கத்தில் தலித் மக்கள் பெருந்திரளாக உள்ளனரே தவிர தலித் மக்கள் மட்டுமே பாட்டாளி வர்க்கத்தினர் இல்லை. பிற ஜாதிகளிலும் பாட்டாளி வர்க்கத்தினர் உண்டு. இங்கு தலித் தலைமை என்பது பிற ஜாதிகளின் பாட்டாளிகளையும் ஜனநாயகபுரட்சிகர அரசியல் சக்திகளையும் நிராகரித்து விடுகிறது.அனைத்து ஜாதிகளின் பாட்டாளி வர்க்கம் மற்றும் ஜனநாயக புரட்சிகர அரசியல் சக்திகள் ஆகியோரின் தலைமையில் சமூக புரட்சி நடை பெற இயலும்இதில் தலித்துகளும் உள்ளடங்கி உள்ளனர்.

லும் அது ஜாதி எதிர்ப்பு போராட்டமாயினும் சமூக பிரச்சனையில் குறிப்பிட்ட எல்லைக்குள் தலைமை கொடுக்க முடியும்.வர்க்கப் பிரச்சனைக்கு சமூகப்பிரச்சனைக்கு எல்லை விரிவாக்கம் படும் பொழுது பாட்டாளிகளுக்கு புரட்சிகர சக்தி தான் தலைமை கொடுக்க முடியும். திட்டவட்டமான வழிமுறையும் புரட்சிகரமான செயல் ஊக்கமும் உள்ள முன்னணியர் மட்டுமே தலைமை கொடுக்க முடியும் அவை தான் புரட்சிகரமான பாட்டாளி வர்க்க கட்சி.மார்க்சிய லெனினியத்தை வழிகாட்டியாக கொண்ட  புரட்சிகர கட்சியால் மட்டுமே தலைமை தாங்க முடியும்.

இன்னும் பின்னர்...


3 comments:

  1. தலித் அடையாளத்திற்கும் தலித்திய கருத்தியலுக்கும் அர்த்தம் புரியாமல்; ஜனநாயக அமைப்பாய் திரள்வது குறித்து தலைவர் திருமா எழுதிய கருத்துக்களை மட்டுமே பரிசீலனையில் எடுத்து அதை பாட்டாளி வர்க்க அமைப்பு முறையோடு ஒப்பிட்டு தானும் குழம்பி அடுத்தவரையீம் குழப்பும் அர்த்தமற்ற புரிதலற்ற பதிவு

    ReplyDelete
    Replies
    1. முதற்கண் கருத்திட்டமைக்கு நன்றி.“தலித் என்ற பெயரில் அணிதிரள்வது முற்போக்கானது சமூகவிடுதலைக்கு அவசியமானது. உயர்சாதியை எதிர்க்க உதவுகின்றது’’ எனப் பலவாக தலித்திய வாதிகள் குறிப்பிடுகிறார்கள்.
       இந்தியாவிலும் தமிழ் நாட்டிலும் ஏகாதிபத்திய எடுபிடிகளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட ''தலித்தியத்'' தைத்தான் இன்று மார்க்சியவிரோதிகள் உயிர்மூச்சாக உயர்த்திப்பிடிக்கிறார்கள். தலித்திய வரலாறும் அதன் உருவாக்கமும் ஏகாதிபத்திய கிறிஸ்தவ நிறுவனங்களால் அமெரிக்க கருப்பின மக்களுக்குள் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்பதும் தலித்திய வரலாறாகும்.
      தலித் என்பது தனக்குள் சாதி ஒடுக்குமுறையை பேணியபடி, ஒடுக்கப்பட்ட மக்களாக அணிதிரள முயன்றவர்களுக்குள் பிளவுகளை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட சமூகப்பிளவே தலித்தியம். தலித்தியம் மூலம் எப்படி விடுதலையடைய முடியும.; அதன் கோட்பாடு என்ன? அதிலுள்ள முரண்பாட்டுப்பிரிவின் அரசியல் நிலை என்ன? எதுவுமற்ற சமூகமாற்றத்திற்கு அணிதிரள்வதைத் தடுக்க தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட அமைப்பே ' தலித்' என்ற சவக்குழி. தீண்டத்தகாதவர்களை காந்தி என்ற சாதித்திமிர் பிடித்த உயர்சாதிக்காரன் ‘அரிசனன்’ என்று அழைத்தது எப்படி இந்தியப்புரட்சியை தடுத்து தாழ்த்தப்பட்டவர்களை தனியாக அடையாளப்படுத்தி பிளவுபடுத்தி தடுத்தது போல், இன்று உலகமயமாக்கத்திற்கு எதிரான புரட்சியைத் தடுக்க ஏகாதிபத்திய முன்வைப்புத்தான் தலித்தியம் என்ற இனிப்புத் தடவிய சாதி பேசும் சாதி அமைப்பு. 

      Delete
  2. தலித்தியம் தாழ்த்தபட்ட மக்கள் பெற்றுக்கொள்ள எதையுமே பெற்றுக் கொடுக்காது. ஆனால் மார்க்சியவிரோதிகள் இதை முன்னெடுப்பதன் மூலம் சாதியை ஒழிக்கமுனையும் ஒரு வர்க்கப்புரட்டசியைத் தடுப்பதன் மூலம் தமது எஜமானர்களான ஏகாதிபத்தியத்திற்கு சேவை செய்கின்றனர்.
    உயர்சாதிக்காரன் சாதிசங்கம் வைத்திருந்தால் நான் ஏன் வைத்திருக்க முடியாது என்று கேட்பது சமன்பாட்டிற்குள் சிக்கிக் கொண்டு சாதியை வேறு ஒரு வடிவில் பாதுகாப்பது என்பது உண்மையாக சமூக அக்கறை கொண்டவர்கள் வெட்கப்படவேண்டிய ஒன்றாகும்.
    மாறாக சாதி ஒடுக்குமுறைக்கு எதிராக ஒடுக்கப்பட்ட மக்கள் (வர்க்கமாக) அணிதிரண்டு பதிலடி கொடுப்பதன் மூலம் தான், நாம் சாதியை கடந்து ஒரு பரந்து பட்ட விடுதலையை அடையமுடியும். இதைவிடுத்து தலித்தாகவோ அல்லது ஏதோ ஒரு சாதியின் பெயரால் அணிதிரள்வது என்பது எப்படி ஒரு சாதியைக் கடந்து விடுதலை அடையமுடியும் என்ற ஒரு அற்ப கேள்வியைக் கூட கேட்கமுடியாத இந்த ஆய்வு அறிவாளிகளின் நோக்கத்தை நாம் அறிவற்றவர்களாக நின்று தான் உயர்த்த முடியும்.

    ReplyDelete

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்