சேகுவேவராவை தூக்கி பிடிப்போர் மார்க்சியத்தை விட்டு விலகி ஓடுமிடம்

சேகுவேராவின் வீரத்தையோ தியாகத்தையோ நான் குறைத்தோ தவறாக சுட்டிக்காட்டவில்லை தோழர்களே, அவை நமது மார்க்சிய ஆசான்களின் வழி காட்டுதளிலிருந்து விலகி மார்க்சிய லெனினியம் அல்லாத ஒரு கோட்பாட்டை முன் வைத்தது அதனை எதிர்த்து அதனை கொண்டாடுவோர் மார்க்சிய லெனினியத்தை உள்வாங்காமை கருத்தில் கொண்டு எழுதியுள்ளேன். மாற்று கருத்து இருந்தால் அவசியம் பகிருங்கள் தோழர்களே வரவேற்கிறேன் விவாதிப்போம்.

இன்று சேகுவாரை தூக்கிபிடிக்கும் போக்கு ஏன் நீடிக்கிறது அதனை புரிந்துக் கொள்வதற்கு முன் அவரை பற்றி புரிந்துக் கொள்வோம்.

நான் என்முகநூல் பகுதியில் சேகுவேராவை உதிரி என்று கூறியதால் இரண்டு தோழர்கள் முரண்பட்டு எழுதியிருந்தனர்அந்த வார்த்தை மீது எனது சுய விமர்சனத்தை பதிவு செய்கிறேன் அந்த வார்த்தைகான அர்த்தம் தவறாக புரிந்துக் கொண்டமையே புரிதல் அற்ற போக்கே அதற்கு வருந்தும் நான் அவர்கள் முன் வைக்கும் இந்த வாததிற்கு முகம் கொடுக்க தயாரா?. சேகுவாரா மற்றும் அவர் சார்ந்தவர்கள் ஏகாதிபத்தியத்தை எதிர்த்த தேச விடுதலைக்கான புரட்சியாளர்கள் அந்த வகையில் அவர்களுடைய செயல் ஆதரிக்கவும் மதிக்கவும் தகுந்தது ஆனால் உலக சோசியலிச புரட்சிக்காகவும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை உயர்த்தி பிடிக்கும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி அல்ல அவர்களின் கட்சி, புரட்சிகர மான ஒரு கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டியமைக்காமல், கட்சியின் தேவையை நிராகரிக்கும் போக்கு தனிநபர் சாகசவாத போக்கு கும்பல் கலாச்சாரம். ஆக இவரின் நிலைப்பாடு ஒரு குட்டி முதலாளித்துவ தன்மை கொண்டது இதனைத் தான் நான் சுட்டி காட்டி இருந்தேன்.
எனது கேள்வி இங்கு தியாகி சேகுவேராவை போற்றும் பல்வேறு இடதுசாரிகள் முற்போக்காளர்கள் என்போர் மார்க்சிய தத்துவ அடிப்படையில் பேச முடியுமா? லெனின் சொன்னவைதான்,"கம்யூனிஸ்டானவன் வெறும் பாட்டாளி வர்க்கம் மட்டும் பேசுபவன் அல்ல பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வரை கொண்டு செல்பவனே"என்பார்.

சிபிஎம் கட்சி சேகுவேராமை தூக்கி பிடிக்குது அதே நேரத்தில் இவர்கள்தான் மாவோஸ்ட்டுகளை தீவிரவாதி என்று கொன்று குவித்தனர் இவை முரணாக படவில்லையா? இவை ஏன்?
அப்படியெனில் அடிப்படையில் சேகுவேராவை தூக்கி பிடிக்கும் இருவேறு பகுதியினரும் முரண்படும் இடம் எது, எவை, ஏன்? சிந்தாந்த பிழை எங்கே உள்ளது தோழர்களே?. விளக்குங்கள்.
நானும் அறிந்துக் கொள்ளதான்...

"கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளர் வர்க்கத்துக்கு தலைமை தாங்கும் விஷயம்பற்றி, ஒரு சில பகுதியினர் மத்தியில் தவறான, குட்டி பூர்ஜுவா வர்க்கக் கருத்துக்களும், மார்க்சிய-லெனினியத்துக்கு விரோதமான கருத்துகளும் நிலவுகின்றன. இக் கருத்துகள் சேகுவேவராவின் பெயருடன் அல்லது வேறு பெயரில் சொன்னல் கியூபா மார்க்கத்துடன் சம்பந்தப்பட்டவையாகவும் காணப்படுகின்றன". ஆகவே, கம்யூனிஸ்ட் கட்சி தொழிலாளர் வர்க்கத்துக்கு தலைமைதாங்க வேண்டிய அவசியம்பற்றி தோழர் மாசேதுங் அவர்கள் கூறிய மேற்காணும் கருத்துகளை இன்றைய காலப் புரட்சி இயக்கம் நன்றகக் கிரகித்துக்கொள்வது அத்தியாவசியமாகும்.

சே குவேவராவின் அல்லது கியூபா மார்க்கத்துடன் சம்பந்தப்படுத்தப்பட்ட இந்தத் தத்துவத்தின் அடிப்படை நோக்கம் நாளிலும் பொழுதிலும் வளர்ந்துவரும் மாசேதுங் சிந்தனையின் செல்வாக்கை எதிர்ப்பதாகும். இந்தத் தத்துவம் ஒரு புரட்சிகரக் கட்சியின் தேவை, (புரட்சி இயக்கத்தில்) மக்களின் பங்கு இரண்டையும் எதிர்க்கின்றது. சில கம்யூனிஸ்ட் கட்சிகள் திரிபுவாதக் கட்சிகளாய் மாறிய உண்மையைக் காரணமாகக் கொண்டு, தொழிலாளர் வர்க்கத்துக்கு வழிகாட்ட புரட்சிகரக் கட்சி ஒன்று தேவை என்ற லெனினிய தத்துவத்தை நிராகரிப்பதற்கு எடுக்கும் முயற்சி இது, குழந்தையைக் குளிப்பாட்டிய அழுக்கு நீரை வீசும்போது, ஒருவர் குழந்தையையும் வீசியெறிவாரா? ஒருபோதும் எறிய மாட்டார். அதுபோல, குறிப்பிட்ட சில கம்யூனிஸ்ட்கட்சிகள் தீயவையாக அல்லது திரிபுவாதக் கட்சிகளாக மாறிய ஒரேகாரணத்துக்காக, கம்யூனிஸ்ட் கட்சியின் அவசியத்தை யாரும் நிராகரிக்க மாட்டார். எந்த ஒரு நாட்டிலாயினும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி திரிபுவாதக் கட்சியாய் மாறிவிட்டால், அந்த நாட்டுப் புரட்சிவாதிகளின் கடமை உண்மையான, புரட்சிகர மான ஒரு கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டியமைக்க வேண்டுமேயன்றி, கட்சியின் தேவையை நிராகரிப்பது அல்ல.

இந்த தவறான தத்துவம் குறிப்பாக ஒரு புதுமைவாத, குட்டி பூர்ஜாவா வர்க்க சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டது. இதன் சிறப்பியல்பு யாதெனில் பொதுமக்கள் மீது நம்பிக்கை இன்மையாகும். இது மிகப் பயங்கரமான நிலைமை களிலும் பெரும் சாதனைகளை செய்வர் என்று ஒரு கூட்டம் தான்தோன்றித் தனமான வீரசிகாமணிகள் மீது பிரதானமாக நம்பிக்கை வைக்கின்றது.

ஒரு நாட்டில் புரட்சிக்கான சூழ்நிலை இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, அச்சூழ்நிலை பக்குவப்பட்டிருந்தாலும் சரி, பக்குவப்படாதிருந்தாலும் சரி, அதாவது, ஒரு நாட்டு மக்கள் புரட்சிக்கு தயாராய் இருக்கிறார்களா இல்லையா என்பதை பாராமல், மக்களுக்குத் தலைமை தாங்க ஒரு புரட்சிகரக் கட்சி இல்லாமல், மனோதிடம் கொண்ட ஒரு சில புரட்சிவாதிகளால் அந்த நாட்டு அரசாங்க யந்திரத்தை தூக்கி எறிய முடியும், அதிகாரத்தைக் கைப்பற்றமுடியும், அதன்பின்னர் மக்களைத் தம்பக்கம் வென்றெடுக்க முடியும் என்ற கருத்தை இந்த சேகுவேவரா தத்துவம் ஜனரஞ்சமாக்க முயல்கின்றது.

வெகுஜன ஆதரவில்லாமல் ஒரு சில தனிநபர்கள் எடுக்கக் கூடிய நடவடிக்கைகளை, பாட்டாளி வர்க்க வெகுஜனங்களின் ஆதரவைப் பெருமல் எதிரிக்கு நஷ்டம் விளைவிக்கக்கூடிய நடவடிக்கைகளை இத்தத்துவம் ஆதரிக்கின்றது. ‘இதுதான் குட்டி பூர்ஜ”வாக்கள் பிரியப்படக்கூடிய ஒரு ரகப் போராட்டமாகும். இது அவர்களுடைய தனிநபர்வாத இயல்பையும், பாட்டாளி வர்க்கம் போராட்டத்தில் பங்குபற்றி அவர்கள் கொண்டுள்ள தவறான கண்ணோட்டங்களையும் பிரதிபலிக்கின்றது.”

இந்தத் தத்துவத்துக்கும், பொதுமக்களைப் பூரணமாகச் சார்ந்திருப்பதை அடிப்படையாகக் கொண்ட மக்கள் போராட்டாளை பற்றிய தோழர் மாசேதுங் அவர்களின் தத்துவத்துக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. மாசேதுங் அவர்களின் மக்கள் யுத்தம் பற்றிய தத்துவம் வெகுஜனங்கள் மத்தியில், சிறப்பாக விவசாயிகள் மத்தியில் சென்று வேலை செய்யும்படி புரட்சிவாதிகளைத் தூண்டுகின்றது. வெகுஜனங்களுடன் ஒன்றிணைந்து, கிராமியத் தளப் பிரதேசங்களை ஸ்தாபித்து, மக்கள் படை ஒன்றைக் கட்டி வளர்த்து, நீண்டகால மக்கள் யுத்தத்தை நடத்தி, இறுதியில் நாட்டுப் புறங்களைக்கொண்டு நகரங்களைச் சுற்றி வளைத்து, விடுதலை செய்யும்படி புரட்சிவாதிகளைத் தூண்டுகின்றது.

தோழர் மாசேதுங் அவர்கள், ‘புரட்சி யுத்தம் என்பது பொதுமக்களின் யுத்தம். பொதுமக்களைத் தட்டியெழுப்பி, அவர்களைச் சார்ந்திருந்தால்தான் இந்த யுத்தத்தை நடத்தமுடியும்’ என்று தெட்டத் தெளிவாகக் கூறியுள்ளார். இவ்வாறு, மக்கள் யுத்தம் பற்றிய தத்துவம் ஒரு மார்க்சிய-லெனினியக் கட்சியின் தலைமையில், பொதுமக்களைப் புரட்சிகரமான முறையில் தட்டியெழுப்புவதை அடிப்படையாகக் கொண்ட, அதிகாரத்தைக் கைப்பற்றுவதைக் குறிக்கோளாகக் கொண்ட ஒரு தத்துவமாகும். இத்தத்துவம் மக்களைத் தட்டியெழுப்புவதை விரும்புகின்றது. அவர்களை ஸ்தாபனப்படுத்தி, அணிதிரட்ட உதவுகின்றது. ஆரம்பத்தில் வெகு பலம்வாய்ந்த எதிரியுடன் துணிந்து போராடவும், அப்போராட்டத்தின் போக்கில் எதிரியை தீர்க்கமாகத் தோற்கடிக்கக் கூடிய பல மேம்பாடு பெறும்வரை தமது படைகளை வளர்க்கவும் போதனை அளிக்கின்றது.

தோழர் மாசேதுங் அவர்களின் இத் தத்துவத்துக்கும், தொழிலாளர் வர்க்கக் கட்சியின் பாத்திரத்தையும் பொது மக்களின் பாத்திரத்தையும் நிராகரித்து, ஒரு சில தனி நபர்கள் மீது அல்லது ஒரு சில தனிநபர்க் கும்பல்கள் மீது நம்பிக்கை வைக்கும் கியூடன் மார்க்கத்துக்கும் சம்பந்தா சம்பந்தமே கிடையாது.

மார்க்சிய-லெனினியவாதிகள் அனைவரும் சித்தாந்த ரீதி யில் சர்வசதா விழிப்போடிருக்க வேண்டும்; உண்மையான கருத்துகளையும் நவீன திரிபுவாதிகள் விற்பனை செய்ய முயலும் போலிச் சரக்குகளையும் வேறுபடுத்திப் பார்க்கக் கூடியவர்களாக, இருக்கவேண்டும்.

தமக்கு முன் லெனின் அவர்கள் செய்ததுபோல, தோழர் மாசேதுங் அவர்களும், கம்யூனிஸ்ட் கட்சி என்பது நமது சகாப்தத்தின் மிக முன்னேறிய புரட்சிகரத் தத்துவத்தால்மார்க்சிய-லெனினிய-மாசேதுங் சிந்தனையால் ஆயுதபாணியாக்கப்பட வேண்டும் என்ற உண்மையை பெரிதும் வலியுறுத்தி யுள்ளார். ஒரு வீட்டுக்கு உறுதியான ஒரு அத்திவாரம் எப்படி அவசியமோ, அப்படி ஒரு புரட்சி இயக்கத்துக்கு – ஒரு கட்சிக் கும் கூட ஒரு உறுதியான சித்தாந்த அடிப்படை அவசியம், இல்லாவிட்டால், அந்த வீடு தகர்ந்துவிடும். ‘புரட்சிகர தத்துவம் இல்லாவிட்டால் புரட்சிகர நடைமுறையே இருக்க முடி யாது’ என்று லெனின் நமக்குப் போதித்துள்ளார்.

தோழர் மாசேதுங் அவர்கள் போதித்ததாவது: ‘நமது நாட்டில் புரட்சியும் நிர்மாணமும் ஈட்டிய வெற்றிகள் மார்க்சிய-லெனினியத்தின் வெற்றிகள் ஆகும். நமது கட்சி இடை விடாது பின்பற்றி வரும் சித்தாந்தக் கோட்பாடு யாதெனில், சீன புரட்சியின் உடன் மார்க்சிய-லெனினிய தத்துவத்தை நெருக்கமாக இணைப்பதாகும்.’ஆகவேதான், கம்யூனிஸ்ட் கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரும் மார்க்சிய-லெனினிய-மாசேதுங் சிந்தனையால் தம்மை ஆயுதபாணிகள் ஆக்கிக்கொள்ள வேண்டும். பல கம்யூனிஸ்ட் கட்சிகள் திரிபுவாத கட்சிகளாக சீரழிந்ததற்கு அநேக காரணங்கள் உண்டு. அவற்றில், பிரதான காரணங்களில் ஒன்று என்ன வென்றால், அவற்றின் உறுப்பினர்களுக்கு சரியான சித்தாந்தப் பயிற்சி இன்மையாகும், கம்யூனிஸ்ட் கட்சி என்ற பெயர்ப் பலகையைத் தொங்கவிட்டால் மட்டும் போதாது. இதை யாரும் செய்யலாம். முக்கியமானது யாதெனில், ஒவ்வொரு கட்சி உறுப்பினரையும் சரியான மார்க்சிய-லெனினிய-மாசேதுங் சிந்தனை தத்துவத்தால் ஆயுதபாணியாக்கி, அவர்கள் அனைவரையும் உண்மையான புரட்சிவாதிகள் ஆக்கவேண்டும். மார்க்சிய-லெனினிய-மாசேதுங் சிந்தனைப் படிப்பில் நாம் கடைப் பிடிக்கும் மனோபாவம் கட்சியை கட்டி வளர்ப்பதில் முக்கியமான ஒரு அம்சம். இப்படிப்பு யந்திரீக முறையில் செய்யப்படக் கூடாது. எந்த ஒரு குறிப்பிட்ட கட்டத்திலும் நின்றுவிடக் கூடாது. நமது தத்துவம் மனப்பாடம் செய்து, மீண்டும் மீண் டும் உச்சாடனம் செய்யும் சூத்திரம் அல்ல, இது செயலுக்கு ஒரு வழிகாட்டி, மார்க்ஸ் அவர்கள், ‘இன்று வரையில் தத்துவஞானிகள் உலகை வியாக்கியானம் மட்டுமே செய்துள்ளனர், நமது கடமை அதை மாற்றுவதாகும்’ என்று கூறினர்.

லெனின் கூறுகிறார்,"முதலாளித்துவ சமூகத்தில் மிகவும் முன்னேறிய வர்க்கமான பாட்டாளி வர்க்கத்திற்கு அறிவொளி ஊட்ட வேண்டும். பாட்டாளி வர்க்கம் செய்ய வேண்டிய கடமைகளை அவர்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டும். தற்போதுள்ள இந்த முதலாளித்துவ அமைப்பு, பொருளாதார வளர்ச்சிக் காரணமாக, தவிர்க்க முடியாமல் வீழ்த்தப்பட்டு, அந்த இடத்தில் புதிய சோஷலிச சமூக அமைப்பு நிறுவப்பட வேண்டும் என்பதை நிரூபிப்பதே மார்க்சிய கோட்பாடாகும்".
பொலிவியாவில் சேகுவேரா கொல்லப்பட்டதும் புரட்சியை ஏற்றுமதி செய்யும் கியூப முறை செல்வாக்கிழந்தது.
கியூப திரிபுவாதமே காஸ்ட்ரோயிசம் ஆகும்.1959 கியூப புரட்சியை அடிப்படையாகக் கொண்டது.காக்கை உட்கார பனம்பழம் விழுந்ததுபோல் கியூப சர்வாதிகாரி பாடிஸ்டாவை விரட்டும் அமெரிக்க திட்டம் அரங்கேறிய வேலையில் காஸ்ட்ரோவின் கொரில்லாதாக்குதல் நடைபெற்றது என்பதை மறந்துவிட்டு,மறைத்துவிட்டு அதனையே இலத்தீன் அமெரிக்காவிற்கு முன்மாதிரியாக வைக்கும் திட்டம்தான் அது.
ஒரு டசன் போராளிகளால் கியூபாவையே விடுதலை செய்ய முடிந்தபோது ,கியூப நாடே போராடினால் இலத்தீன் அமெரிக்கா முழுமையுமே விடுதலை அடைந்துவிடும் என்பதே அதன் அடிப்படைத் தத்துவம்.அதன் மற்ற மைய்யக்கருத்துகளாகக் கருதப்படுவன :
1. மற்ற திரிபுவாதங்களைப்போல் மார்க்சிய லெனினியத் திலிருந்து திரிந்துபோன திரிபுவாதமல்ல. காஸ்ட்ரோயிசம் மார்க்சிய லெனினிய கொள்கைகளுக்கு வெளியிலிருந்து தோன்றியது.
2. இலத்தீன் அமெரிக்கப் புரட்சிக்கு முன்னோடி தேவை என்றாலும் அது மார்க்சிய லெனினியக்கட்சியாகத்தான் இருக்கவேண்டுமென்ற அவசியமில்லை.
3. கட்சியிலிருந்து கொரில்லாப்படை கட்டப்படுவதற்கு பதிலாக கொரில்லாப்படையிலிருந்து தானே கட்சி உருவாகும்.
4. புரட்சிக்கான சூழல் உருவாகும்வரை காத்திருக்க வேண்டியதில்லை. புரட்சியே சூழலை உருவாக்கிவிடும்.
5. முதலாளித்துவத்திலிருந்து முதல்கட்டமாக சோசலிசத்திற்கு செல்லவேண்டும்.முதலாளித்துவ கூறுகள் பலமாக இருப்பதால் இக்கட்டத்தில் அவரவர் திறமைக்கேற்ற வேலை,வேலைக்கேற்ற ஊதியம் தரப்படவேண்டும்.உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியினால் மிதமிஞ்சிய உற்பத்தி ஏற்பட்டவுடன் திறமைக்கேற்ற வேலை ,தேவைக்கேற்ற ஊதியம் என்ற இரண்டாம் கட்டத்தை கம்யூனிசத்தை வந்தடையவேண்டுமென்பது மார்க்சிய கருத்து.ஆனால் மாற்றுவழி இருப்பதாக காஸ்ட்ரோவும்,சே குவேரா வும் கருதினர். சோவியத் உதவியுடன் முதற்கட்டத்தை தவிர்த்து நேரடியாக கம்யூனிசக்கட்டத்திற்குள் நுழையப்போவதாகக் கூறினர். நடைமுறையில் இது தொழிலாளர்களின் கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் வசதிகளையும் பறித்து ,ஊதிய வெட்டு, கட்டாய இலவச வேலை,அடிப்படை வசதிகள் குறைப்பு ,ஊக்கத்தொகைக்குப்பதில் பாராட்டுக்கள் என்று ஏமாற்றுவதற்கே இந்தக்குறுக்குவழித் தத்துவம் பயன்பட்டது.அதன் விளைவாக உற்பத்தி விகிதமும் கடுமையாக சரிந்தது.
6. புரட்சியில் தேசிய முதலாளித்துவத்தின் பங்கு தேவையற்றதாகக் கருதப்பட்டது.
7. வர்க்கப்பிரிவுகளே கணக்கில் கொள்ளப்படாததால் பாட்டாளிவர்க்கம் ,பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்பதற்கெல்லாம் காஸ்ட்ரோயிசத்தில் இடமே இல்லை.பொலிவியாவில்மட்டுமல்லாது எந்த இலத்தீன் அமெரிக்க நாட்டிலும் காஸ்ட்ரோயிசம் வெற்றுபெறவில்லையென்றாலும் .
மார்க்சிய லெனினியத்திற்கு மாற்றாக காஸ்ட்ரோ திரிபுவாதத்தை முன்வைக்கும் முயற்சியும் மீண்டும் தலைதூக்கி வருகிறது.ஏமாற்றுப்பேர்வழிகள் ஒரே பொய்யை வேறு வேறு காலங்களில் வேறு வேறு பெயர்களில் கொடுக்க முனைகிறார்கள்.அவற்றில் ஒன்றுதான் இந்த காஸ்ட்ரோயிசம்.

பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்றால் என்ன?.

பாரிஸ் கம்யூன் படிப்பினைகளிலிருந்து மார்க்ஸ் எங்கெல்ஸ்  கருத்துக்கள் கீழே,  தொழிலாளர்கள் முதலாளித்துவ வர்க்கத்தின் சர்வாதிகாரத்தை தமது புரட்சிகர சர்வாதிகாரத்தினால் மாற்றீடு செய்யும் போது..... முதலாளி வர்க்கத்தின் எதிர்ப்பை உடைப்பதற்காக ..... தொழிலாளர்கள் அரசுடன் ஒரு புரட்சிகரமான மற்றும் இடைமாற்றமான  வடிவத்தை இணைவிக்கிறார்கள் ..... 

மேலும் எங்கெல்ஸ் கூறுகிறார்,... தமது விரோதிகளை பலப் பிரயோகம் மூலம் அடக்கி வைக்க வேண்டும் என்பதற்காக போராட்டத்தில்,  புரட்சியில் பயன்படுத்தப்படும் ஓர் இடைக்கால நிறுவனமே அரசு என்பதால் .... பாட்டாளி வர்க்கத்திற்கு ஓர் அரசு தேவைப்படும் வரையில் அதற்கு அரசு தேவைப்படுகிறது சுதந்திரத்தின் நலங்களுக்காக அல்ல மாறாக அதன் விரோதிகளை அடக்கி வைப்பதன் பொருட்டே ஆகும். ...

மேலும் மார்க்ஸ் எங்கெல்ஸே விளக்கம் தருகிறார்கள்.

= முதலாளித்துவ வர்க்கத்தின் எதிர்ப்பை உடைப்பதற்காக 

=பிற்போக்காளர்களுக்கு அச்சம் ஊட்டுவதற்காக

=முதலாளித்துவ வர்க்கத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்திய மக்களின் அதிகார பலத்தை கட்டி காப்பதற்காக.

=பாட்டாளி வர்க்கம் பல பிரயோகம் மூலம் தனது விரோதிகளை அடக்கி வைப்பதற்காக. 

தெளிவாக புரிந்து கொள்வதற்கு ...

ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தால் சுரண்டுப்படுவதற்கான சாத்திய கூறுகள் யாவும் முற்றாக அழித்தொழிக்கப்பட்டால் ஒழிய மெய்யான நடைமுறையில் உள்ள சமத்துவம் இருக்க முடியாது.

சுரண்டலாளர்களை ஒரே அடியில் அழித்துவிட முடியாது. எந்த ஒரு பெரிய நாட்டிலும் எல்லா நிலப்பிப்புகளையும் முதலாளிகளையும் ஒரே அடியில் உடைமை நீக்கம் செய்வது என்பது சாத்தியமல்ல . உடைமை நீக்கம் மட்டுமே ஒரு சட்டப்பூர்வ அல்லது அரசியல் நடவடிக்கை என்ற முறையில் இந்த விவகாரத்தை வெகு தொலைவுக்கு தீர்த்து விடாது. காரணம் நிலப்பிரப்புக்களையும் முதலாளிகளையும் உண்மையிலேயே  உயர்நிலையில் இருந்து அகற்ற வேண்டும்.... புரட்சிக்குப் பிறகு நீண்ட காலம் சுரண்டலாளர்கள் பல மாபெரும் நடைமுறை சாதகங்களை தவிர்க்க முடியாதபடி நீடித்து வைத்து இருப்பார்கள் : அவர்களிடம் பணம் மற்றும் பதவி அனுபவம் கல்வி அனுபவம் பல்வேறு மட்டங்களில் உள்ள தொடர்பு ... ஆக ஏக காலத்தில் பல்வேறு நாடுகளில் புரட்சி நடந்து சுரண்டலாளர்களை ஒடுக்கினால் மட்டுமே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் பயனுள்ளதாக இருக்கும்...

இவை நமக்கு நமது மார்க்சிய ஆசான்கள் காட்டிய வழி தோழர்களே

மேலே கூறியது போல ஒவ்வொரு நாட்டிலும் பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர இயக்கம் வளர்ச்சி அடைந்து வருவதை கண்டு முதலாளித்துவ வர்க்கத்தினரும் தொழிலாளர் அமைப்புகளில் இருக்கும் அவர்களது கை ஆட்களும் சுரண்டலாலர்களின் ஆதிக்கத்தை தாங்கி ஆதரிப்பதற்கான சித்தாந்த மற்றும் அரசியல் விவாதங்களை இடதுசாரி இயக்கங்களுகுள் மூர்க்கமான முயற்சிகள் செய்து வருகின்றனர்.

பொதுவான ஜனநாயகத்தை ஆதரிப்பதும் பொதுவாக சர்வாதிகாரத்தை பற்றி பேசுவதும் வர்க்க சார்பில்லாத வர்க்கத்துக்கு மேலானதாக சோசலிசத்தின் ஆதாரத் தத்துவத்தை கேலி வர்ணனை செய்வதும் இவர்களின் போக்காக உள்ளது.

முதலாளித்துவ அமைப்பிலிருந்து சோசலிச அமைப்புக்கு மாறிச் செல்வதும் முதலாளித்துவ நுகத்தடியிலிருந்து தொழிலாளிவர்க்கம் விடுதலையடைவதும் மெதுவாக ஏற்படும் மாறுதல்கள் மூலமாக - சீர்திருத்தங்கள் மூலமாக சாத்தியமில்லை

அதற்கு மாறாக முதலாளித்துவ முறையில் குணாம்ச ரீதியான மாறுதலை உண்டாக்குவதன் வழியாகத்தான், புரட்சியின் வழியாகத்தான் அவை சாத்தியமாகும். கொள்கையில் தவறிழைக்காமல் இருக்க வேண்டுமென்றால் நாம் புரட்சியாளனாக இருந்து தீரவேண்டும், சிர்திருத்தவாதியாக அல்ல. மூலதனத்தின் ஆதிக்கத்தை ஒழிப்பதும், முதலாளித்துவத்தின் சொத்துக்களை சமூக சொத்தாக மாற்றுவதும், சமாதான முறைகளினால் சாதிக்க முடியாது. பாட்டாளிவர்க்க புரட்சியின் மூலம், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை நிறுவுவதனால் மட்டும்தான் இவற்றை சாதிக்க முடியும்.

முதலாளித்துவ தத்துவம், அல்லது சோசலிச தத்துவம் இவ்விரண்டில் ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க முடியும். இவ்விரண்டிற்கு நடுவே வேறு வழி கிடையாது. ஆகவே எந்த விதத்திலாவது சோசலிச தத்துவத்தை குறைத்து மதிப்பிட்டாலும், அதிலிருந்து ஒரு மாத்திரை அளவு விலகி சென்றாலும் முதலாளித்துவ தத்துவத்தை பலப்படுத்துவது என்றே அர்த்தம்.

தொழிலாளி வர்க்கம் அரைகுறை அற்பசொற்ப கோரிக்கைகளுக்காக போராடவில்லை, சீர்த்திருத்தங்களுக்காக போராடவில்லை, ஜார் ஆட்சியில் இருந்து சகல ஜனங்களையும் விடுதலை செய்வதற்காக போராடிக் கொண்டிருக்கிறது என்று போல்ஷ்விக்குகளால் நடத்தப்பட்ட புரட்சிகரமான வேலை நிறுத்த இயக்கமும், ஆர்பாட்டங்களும் காட்டின. ஒரு புதிய புரட்சியை நோக்கி தேசம் முன்னேறிக் கொண்டிருந்தது.

ஆனால் இரண்டாம் அகிலத் தலைவர்கள் உள்நாட்டில் தொழிலாளருக்கும், முதலாளிகளுக்கு மிடையே வர்க்கப் போராட்டத்திற்கு பதில் 'வர்க்க சமாதானம்' நிலவ வேண்டுமென்றும் வெளிநாட்டில், மற்ற தேசங்களுடன் யுத்தம் நடக்க வேண்டும் என்றும் இந்த பேர்வழிகள் பிரச்சாரம் செய்தனர். உண்மையான பொறுப்பாளி யார் என்பதை மறைத்தனர், மக்களை ஏமாற்றுவதற்கு இரண்டாவது அகிலத்தை சேர்ந்த சந்தர்ப்பவாதிகள் முதலாளிகளுக்கு உதவிபுரிந்தனர்.

(லெனின் தேர்வு நூல்கள் 9 பக்கம் 11 முதல் 51 இதன் சாரம்தான் இவை).

உலக மக்களின் விரோதிகளாக உள்ள  உலக முதலாளிகள் என்ற உண்மையை எடுத்துகாட்டி வலியுறுத்தி ஏகாதிபத்திய யுத்தத்தை உள்நாட்டு யுத்தமாக மாற்றி, ஒவ்வொருவரும் தத்தம் ஆயுதங்களை தத்தம் முதலாளிகளுக்கு எதிராக முதலாளிகளின் மார்பில் திருப்பவேண்டும். இதன் மூலம்தான் யுத்தத்தை முடிக்க முடியும் என்று விளக்கி கூறினர் போல்ஷ்விக்குகள்.யுத்தத்தை எதிர்த்து போல்ஷ்விக்கட்சியின் மத்திய குழு அறிக்கை வெளியிட்டது,  

இன்னும் பிறகு தோழர்களே







No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்