நேற்றிரவு கிளப் அவுஸ் விவாதமே தோழர்களே? பிரதான முரண்பாட்டை பேசாமல் குறிப்பான முரண்பாட்டை மட்டுமே பேசுவது எவ்வகையான மார்க்சிய லெனினியம் விவாதிப்போம் தெளிவடைவோம் வாருங்கள் தோழர்களே.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பிரதான முரண்பாட்டுப் பிரச்சினை தான் யாவற்றிலும் மிக முக்கியமானது.
இவைதான் யுத்ததந்திரம் நடைமுறைத் தந்திரம் அமைப்பு போன்றவற்றை தீர்மானிக்கிறது, ஆதிக்கம் செலுத்துகிறது.இவைதான் முரண்பாடுகள் வளர்ச்சி காரணத்தினை விளக்குகிறது. பிரதான முரண்பாட்டினை கிரகித்துக் கொண்டால் எல்லா பிரச்சினைகளையும் உடனடியாக தீர்க்க முடியும்.இந்த முறையைத்தான் முதலாளித்து சமூகத்தைப் பற்றிய தமது ஆய்வு மூலம் மார்க்ஸ் நமக்கு கற்பித்தார்.
இது போன்று தான் ஏகாதிபத்தியம் மற்றும் முதலாளிதுவ சமூகத்துக்கு ஏற்பட்ட பொதுவான நெருக்கடி பற்றியும் சோவியத் பொருளாதாரம் பற்றிய ஆய்வு நடத்தும் போது லெனின் ஸ்டாலினும் இந்த முறையை நமக்கு கற்பித்தனர்.
இதனைப் புரிந்து கொள்ளாத நமது செயல்வீரர்கள் இங்குள்ள புரட்சியின் பிரச்சனையின் கருவுக்கு போக முடிவதில்லை.முரண்பாடு பற்றிய மாவோ தனது நூலின் மிகத் தெளிவாக இதனை குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் பிரச்சினை எனும் மூடுபனிக்குள் அமிழ்துவிட்டனர். பிரச்சனையின் முரண்பாட்டை தீர்க்கும் வழி காண்பதற்கு அப்பிரச்னையின் மையத்திற்குள் செல்ல முடியாமல் தவிக்கின்றனர். முரண்பாட்டினை கிரகித்துக் கொள்ள தவறிவிட்டதை புரிந்து கொள்வதே இல்லை. நாமும் தெளிவடையதான் இந்த தேடல்.
பொருள்களின் வளர்ச்சிக்கான அடிப்படை காரணம் அப்பொருளுக்கு வெளியே இல்லை; ஆனால், அவற்றிற்குள்ளேயே அவற்றின் உள் முரண்பாடுகளிலேயே உள்ளது" என்று இயற்கை இயல் பொருள்முதல்வாதம் கூறுகிறது.
மூலதனத்துடனான உழைப்பின் மோதல், அவை இரண்டுக்கும் இடையிலான கடுமையான போராட்டத்தின் மூலம் தான் தீர்க்கப்படுகிறதே ஒழிய அவற்றிற்கு வெளியில் உள்ள சக்தியால் அல்ல.
மூலதனத்தின் பிரதான சக்தி அதன் சொந்த பலத்தில் - அதாவது அரசு எந்திரத்தைத் தலையாய அங்கமாகக் கொண்டிருக்கிற அதன் ஒட்டுமொத்த அமைப்பின் பலத்தில் - அடங்கியுள்ளது. அதுபோலவே, உழைப்பின் சக்தியும் அந்த சொந்த பலத்திலேயே -அதாவது பாட்டாளி வர்க்கக் கட்சியைத் தலையாய அங்கமாக கொண்டுள்ள அதன் ஒட்டு மொத்த அமைப்பின் பலத்தில்- அடங்கியுளநடத்துவது ஆனால், இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில், உழைப்பாளரில் ஒரு பகுதியினரைக் கொண்டதே பொதுவுடைமைக் கட்சி. எனவே சமூதாயத்தை மாற்ற புரட்சி நடத்துவது என்பது கட்சி மட்டுமே செய்ய கூடியது அல்ல;உழைப்பாளர் அனைவரும் ஒட்டுமொத்தமாக செய்வதாகும்; பொதுவுடமைக் கட்சி புரட்சிக்கு சித்தாந்த தலைமை அளிக்கிறது. ஆனால், அது தனது சொந்த பலத்தை மட்டுமே வைத்துக் கொண்டு வெற்றி பெறுவது ஒருபோதும் முடியாது. எனவே பொதுவுடமைக் கட்சி என்ற தேர் ஆனது மக்கள் திரள் என்ற அச்சாணியை உறுதியாக கொண்டிருக்க வேண்டும் . ஒரு பொதுவுடமை கட்சி அல்லது மார்க்சிய குழு பரந்துபட்ட மக்களின் மக்களிடமிருந்து தனிமைப்பட்டு பணியாற்றுமானால் அது அச்சாணி அற்ற தேர் போன்றதாகும் , அதன் இதர பகுதிகள் எவ்வளவு அழகாக மிகச் சரியாக இருந்தாலும் உண்மையான பொருளில் அது தேர் ஆகாது. அதாவது, பரந்துபட்ட மக்களிடமிருந்து பிரிந்து தனிமைப்பட்ட ஒரு கட்சி பொதுவுடமைக் கட்சியே அல்ல.
மேலும்,
ரசிய புரட்சியின் 106 ம் ஆண்டை கொண்டாட உள்ள நாம் அதன் ஒளியில் கட்சி என்ன? புரட்சி என்ன என்றாவது புரிந்துக் கொண்டோமா என்பதில் கேள்வியாக உள்ளது.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அனுபவம், ”ரஸியப் போல்ஷ்விக்குகள் வெற்றி பெற்ற உயிருள்ள அனுபவத்திலிருந்தே சீன கம்யூனிஸ்ட் கட்சி கட்டப் பட்டது என்றும் லெனின் வகுத்து வைத்து போன கோட்பாடுகளிலிருந்து இம்மியும் பிறழாது நடந்துக் கொண்டோம்” என்று கூறுகிறது.
இங்கோ ஒருபக்கம் பொருளாதார போராட்டங்களும், முதலாளிய தேர்தலுக்கு மட்டுமே தயார் செய்பவை.
மற்றொன்று வர்க்கப் போரட்டத்தை அரசியல் அதிகாரத்திற்கானதாக இல்லாம வேறுபட்ட வெவ்வேறு கொள்கை முழக்கங்களின்பால் வழி நடத்துகின்றன. இது பாட்டளி வர்க்கத்திற்கு பலவீனத்தையும் சுரண்டும் வர்க்கத்திற்க்கு பலத்தையும் கொடுக்கிறது.
லெனினின் வாரிசாக மாற இன்னும் எத்தனை காலம் ஏங்குவது?
கீழ்காணும் பகுதி தோழர் லெனின் நமது கட்சி திட்டம் பகுதியில் கூறியுள்ளதே.
தற்போது சர்வதேச சமூக-ஜனநாயகம் சித்தாந்த ஊசலாட்டத்தால் பீடிக்கப்பட்ட ஒரு நிலையில் இருக்கிறது. இது காறும் மார்க்ஸ், எங்கெல்சின் போதனைகள் புரட்சித் தத்துவத்துக்குரிய உறுதி வாய்ந்த அடித்தளமாய்க் கருதப்பட்டு வந்தன; ஆனால் இப்பொழுது இந்தப் போதனைகள் குறைபாடானவை என்றும் பழமைப்பட்டுவிட்டவை என்றும் பறைசாற்றும் குரல்கள் நாற்புறமிருந்தும் எழுப்பப்படுகின்றன. சமூக-ஜனநாயகவாதியாய்த் தம்மை அறிவித்துக் கொண்டு, சமூக-ஜனநாயகக் கொள்கை முழக்க ஏடு ஒன்றை வெளியிட முன்வரும் எவரும், ஜெர்மன் சமூக-ஜனநாயக வாதிகளின் கவனத்தையும் அவர்கள் மட்டுமின்றி ஏனைய பலரின் கவனத்தையும் ஆட்கொண்டு வரும் ஒரு பிரச்சினை குறித்துத் தமது போக்கு என்ன என்பதைத் துல்லியமாய் வரையறுத்துக் கூறியாக வேண்டும்.
நாம் முற்றிலும் மார்க்ஸியத் தத்துவார்த்த நிலையையே எமது அடிநிலையாய்க் கொண்டு நிற்கிறோம்: மார்க்ஸியம் தான் முதன்முதல் சோஷலிசத்தைக் கற்பனாவாதத்திலிருந்து விஞ்ஞானமாய் மாற்றியமைத்துத் தந்தது; இந்த விஞ்ஞானத்துக்கு உறுதியான அடித்தளத்தை நிறுவிக் கொடுத்தது; இதை இதன் எல்லாக் கூறுகளிலும் மேலும் வளர்த்தும் விவரமாய் விரித்தமைத்தும் செல்வதற்குப் பின்பற்ற வேண்டிய பாதையைச் சுட்டிக் காட்டிற்று.
தொழிலாளியை வேலைக்கு அமர்த்திக் கொள்வதானது, அதாவது உழைப்புச் சக்தியை விலைக்கு வாங்குவதானது, சொத்துடைமையற்ற லட்சோப லட்சக் கணக்கானோரை நிலம், ஆலைகள், சுரங்கங்கள் முதலானவற்றின் உடைமையாளர்களாகிய விரல்விட்டு எண்ணக் கூடிய ஒருசில முதலாளிகள் அடிமை செய்து விடுவதை எப்படி மூடிமறைக்கிறது என்பதை விளக்கியதன் மூலம், நவீன கால முதலாளித்துவப் பொருளாதாரத்தின் தன்மையை அது வெளிப்படுத்திக் காட்டிற்று. நவீன கால முதலாளித்துவ வளர்ச்சி அனைத்துமே, பெருமளவான பொருளுற்பத்தியானது சிற்றளவான பொருளுற்பத்தியைக் கழித்துக் கட்டிவிடும் போக்கினை வெளிப்படுத்திச் செல்வதையும், சோஷலிசச் சமுதாய அமைப்பை சாத்தியமும் அத்தியாவசியமும் ஆக்கும் நிலைமைகளைத் தோற்றுவிப்பதையும் அது தெளிவுபடுத்திக் காட்டிற்று. வேர்விட்டு வளர்ந்துள்ள பழக்க வழக்கங்கள், மற்றும் அரசியல்சூழ்ச்சிகள், புரியாப் புதிர்களானசட்டங்கள், கடுஞ்சிக்கலான தத்துவங்கள் ஆகியவற்றாலாகிய புகை மூட்டத்தினுள் மறைந்திருக்கும் வர்க்கப் போராட்டத்தை, பல்வேறு வகைப்பட்ட சொத்துடைத்த வர்க்கங்களுக்கும் சொத்துடைமை யற்றோர் அனைவரின் தலைமையில் நிற்கும் சொத்தில்லாப் பெருந்திரளாகிய பாட்டாளி வர்க்கத்துக்குமிடையே நடைபெறும் இந்தப் போராட்டத்தை எப்படிக் கண்டறிந்து கொள்வதென்று அது நமக்குக் கற்றுக் கொடுத்தது.
புரட்சிகர சோஷலிஸ்டுக் கட்சியின்முன்னுள்ள மெய்யான பணியை அது தெளிவுபடுத்திற்று: சமுதாயத்தைத் திருத்தியமைப்பதற்குத் திட்டங்கள் வரைவதல்ல, தொழிலாளர்களுடைய நிலைமையை மேம்படச் செய்வது குறித்து முதலாளிகளுக்கும் அவர்களது அடிவருடிகளுக்கும் அறிவுரை அளிப்பதல்ல, சதிகள் புரிந்திடுவதல்ல இப்பணி, பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்கப் போராட்டத்தை ஒழுங்கமைப்பு செய்வதும், பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரம் வெல்வதையும் சோஷலிசச் சமுதாயம் ஒழுங்கமைக்கப் படுவதையும் இறுதிக் குறிக்கோளாய்க் கொண்ட இந்த வர்க்கப் போராட்டத்துக்குத் தலைமை தாங்குவதுமே இப்பணி என்று அது தெளிவுபடுத்திற்று.
- லெனின்
லெனின் நூல்திரட்டு 1, பக்கம் 51,52
தொடரும் ....
No comments:
Post a Comment