ஜாதி என்றால் என்ன?

 எனது தேடுதலை எழுத்தாக்கி கொண்டுள்ளேன். அதன் சில பகுதிகளை உங்களுடன் விவாதிக்க இங்கே பகிர்கிறேன் தங்களின் மேலான கருத்துகளை பகிரும் படி கேட்டுக் கொள்கிறேன் தோழர்களே.


இன்று தினம் தினம் நாம் பார்க்கும் செய்திகளும் செயல்களும் நாம் வாழும் சமூகத்தின் ஒரு பகுதியினருக்கு செத்துப் பிணத்தை கூட எடுத்து செல்ல பொது வழி இல்லை ஒன்றாக வாழ்வதற்கு இடமில்லை ஒற்றுமையாக வாழவழிவகையில்லை மக்களை பல்வேறு பிரிவினர்களாக பிரித்ததில்லாமல் இதில் ஒரு பிரிவினர் கீழானவர் தீண்டதாகதவர் என்று ஒதுக்கி வைக்கும் கீழான போக்கே இந்த பிரிவினையே ஜாதியம், ஜாதி இருதலுக்கு கட்டியம் கூறுகிறது. இந்த தீண்டாமை மற்றும் பல ஒடுக்குமுறை ஆளாகும் ஜாதியினராகட்டும் ஆதிக்க ஜாதி எனக் கூறப்படும் உழைக்கும் மக்களும் உழைக்காமல் வாழும் கூட்டமும் இன்று வர்க்கமாக பிரிந்துள்ளது. ஜாதியின் உச்சியில் அமர்ந்துள்ள அந்தந்த ஜாதியில் மேலாண்மை புரிபவர்களுக்காக கடைநிலையில் உள்ள உழைப்பாளர்கள் தங்களுக்குள் மோதிக் கொண்டும் ஒருவரை கொன்று கொண்டும் வாழும் அவலம் இவை ஏன்?

 

தமிழகத்தில் ஜாதி குறித்து நமது புரிதலை பல வரலாற்றுஆசிரியர்கள் நமக்கு தொகுத்தறித்துள்ளனர். பல்லவர் காலம் தொட்டு இன்றைய ஆட்சியாளர்கள் வரை ஜாதியத்தை கையாண்டு விதமும் புரிதலும் ஆழமாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும். குறிப்பாக இன்று இன்நிலைக்கு காரணத்தை விரிவாக அலசுவோம்.

இங்கு வந்த பிரிட்டிஷார் தனது அதிகாரத்துக்கு ஜாதி மதம் பற்றிய தேவை புரிந்து கொண்டனர். அதற்கான ஆய்வுகளையும் சித்தாந்தத்தின் ஆரம்ப கட்டத்தையும் அவர்களின் அரசியல் தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு விதமான போக்குகளை இங்கே புகுத்தினார்கள் வரும் பகுதியில் ஆழமாக இதனை பற்றி பேசுவோம். ஜாதியை பற்றி விரிவாக ஆய்வோம்.                    

 

இந்தியாவில் ஜாதியின் தோற்றம்.

மனித குல வளர்ச்சிப் போக்கில் பல்வேறு நிகழ்வுகள் வரலாற்று அறிஞர்களின்  ஆய்வுகள் மூலம் நாம் அறிந்து கொள்ளும்  நிலையில் உள்ளோம். அதேபோல இன்று இந்தியாவில் ஜாதிய பற்றி பல்வேறு ஆய்வுகள் நடந்தேறி உள்ளன. அதன் துணை கொண்டு நாம் ஜாதியை பற்றி புரிந்து கொள்ள ஒரு முயற்சி தான் இந்த நூலின் அவசியம் என்று நினைக்கின்றேன்.

உலகில் தோன்றிய பல்வேறு விதமான பிரிவுகள்  மனித குல வளர்ச்சி போக்கி நாம் காண்கிறோம் அவற்றின் ஒரு போக்கு தான் ஜாதியும்.ஜாதிக்குரிய தன்மைகள் குறிப்பிட்ட பல அம்சங்கள் தெற்காசிய சமூகத்தில் விரவிகிடப்பதாக அறிஞர்கள் கருதுகின்றனர் (கோ.கேசவன் நூல் தொகுப்பு இரண்டு தலித்தியம் பக்கம் 230).

இந்தியா முழுவதிலும் ஜாதி பரவிகிடக்கிறது அது பொது தன்மையோடு இருப்பினும் அதில் பலவட்டார அடிப்படையிலான வேறுபாடு அம்சங்களையும் காணலாம்.

தமிழகத்திற்கு உள்ளே காணப்படும் சில ஜாதிகள் வடப்பகுதிக்கும் தென்பகுதிக்கும் இடையில் ஒற்றுமை இல்லாமையும் இதே போல தென் மாநிலங்களான ஆந்திரா தமிழககர்நாடகா கேரளாவில் ஜாதிகள் ஒன்றோடு ஒன்று இணைந்தும் காண முடியவில்லை. ஆந்திராவில் உள்ள ஜாதிகள் கர்நாடகத்திலோ கர்நாடகாவில் உள்ள ஜாதிகள் தமிழகத்திலோ இல்லை.மொழிவழி மாநிலங்களான இவைகளுக்கிடையே கூட ஒன்றுபட்ட ஜாதிகள் இல்லாதது போலவே வட இந்திய இந்தி பேசும் மாநிலங்களுக்கிடையிலே கூட ஜாதியில் ஒற்றுமை இல்லை பல்வேறு பிரதேசங்களுக்கான தனித்தனியான ஜாதிகள் உள்ளதை காணலாம். இந்த வேறுபாடுகளை கணக்கில் எடுக்க வேண்டும். ஆக பல்வேறு வட்டார வேறுபாடுகள் உடன் ஜாதி எங்கு இருக்குமாக காணப்படுகிறது.

வேளாண்மை சமூகத்தில் பிரதான உற்பத்தி சாதனமாக நிலம் விளங்கியது. வேளாண்மை சார்ந்த உற்பத்தி ஈடுபடும் பல்வேறு விதமான போக்குகள் தொடங்கியது. தொழில் வகுப்புகளும் மூளை உழைப்பு உடல் உழைப்பு என உழைப்புத் திறன் இரண்டாகப் பிரிக்கப்பட்டு இருந்தாலும் இரண்டும் அதற்கான தனித்தனியான திறனை கோருகின்றன. நில உடமை சமூக அமைப்பின் தொடக்கத்தில் வேளாண்மை வேளாண்மை சார்பு கைவினை ஆகியவை மட்டுமின்றி தொண்டூழியத் தொழிலும் இருந்தன. ஒவ்வொரு தொழில் பிரிவினைப்பும் அவர்கள் சார்ந்த தொழில்நுட்ப அறிவு அந்தக் குறிப்பிட்ட தொழில் பிரிவினருக்கே உரியதாக இருந்தது.மேலும் நில உடமை உற்பத்தி முறையில் ஒவ்வொரு தொழிலும் முழுமையான ஒரு சுய உள்ளாற்றல்களையும் இயங்குதல்களையும் கொண்டிருந்தது.அதே நேரத்தில் பொதுவான அமைப்புக்குள் இயங்கிக் கொண்டும் இருந்தது.ஒவ்வொரு தொழிலும் தன் சுயேச்சை தன்மையை பேணிக் கொண்டிருந்ததோடு நில உடமை பொருளாதாரத்தில் ஒரு கண்ணியாகவும் இருந்தது.

பொது சமூகத்தில் அங்கமாக உள்ளது தொழில் வகுப்புகள் தொழில் ரீதியாக சுயேச்சையான தங்களுக்கான தனித்தனி தொழில் வகுப்பின் அடிப்படையில் தொழில் ரீதியாக ஒன்று கலக்கவே இயலாது ஆனால் ஒரு தொழில் வகுப்பின் உற்பத்தி திறனில் உருவான முழு பொருளும் இன்னொரு தொழில் வகுப்பு நுகர்வு பொருளாக அல்லது அதன் உற்பத்திக்கு ஆதாரப்பொருளாக அமைய இயலும்.கலப்பை செய்ய தச்சர் ஈடுபடும் போது வேளாளர் அதில் ஒன்று செய்ய முடியாது ஆனால் தச்சரின் கலப்பையை வேளாளர் வேளாண்மை விளைபொருளுக்கு பயன்படுத்த முடியும்.அதே நேரத்தில் வேளாளர் விளைச்சலை தச்சரும் பயன்படுத்த முடியும்.

தொழில்முறையில் தச்சரின் ஏர் கலப்பையை ஒரு குயவர் நேரடியாக  நுகரமுடியாது ஆனால் தச்சரின்கலப்பை பயன்படுத்தி வேளாண்மையால் விளைவிக்கப்பட்ட விளைப் பொருளை குயவரும் நுகரமுடியும்.

நில உடமை சமூகத்தில் வேளாண்மை வகைப்பட்ட கிராமங்களில் வேளாளர்கள் உடல்உழைப்பாளர்களாகவும்  நிர்வாகிப்பவராகவும் இருந்தனர்.

இந்த கிராம உற்பத்தி முறையில் மூளை உழைப்பாளர்களும் உடல் உழைப்பாளர்களும்ஆகிய இரு பிரிவினர் கொண்டதாக இருந்தது.கிராம நிர்வாகத்தையும் பொருளாதாரத்தையும் ஒழுங்கமைக்க புரோகிதர்களாக இருந்தனர் அதேபோல தொழில் பிரிவினை அடிப்படையில் கைவினைஞர்களும் சேவை பிரிவினரும் இதே நிர்வாக அமைப்பில் கட்டுண்டு கிடக்க வேண்டிய தேவை இருந்தது.அரசியல் அதிகாரம் கையில் இருந்த புரோகிதர்களும் வேளாளர்களும் கைவினைஞர்களின் உழைப்பையும் சேவை பிரிவினர் உழைப்பையும் ஒரு  வகையில் குத்தகை என்ற பெயரில் அபகரிக்க தொடங்கினர். புரோகிதரும் வேளாளரும் தமக்கான உரிமை பாதுகாப்பது போலவே தொழில் பிரிவினர் தமக்குரிய தொழில் பிரிவின் ரகசியத்தையும் தனக்கான தேவையாக ரகசியமாக காக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.இந்த நேரத்தில் கணக்கு கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் நில உரிமை கொண்ட பிரிவினர் பெண்கள் உற்பத்தியில் இருந்து ஒதுக்கப்பட்டனர் சேவை தொழில் செய்பவரும் கைத்தொழில் செய்வதும் பெண்களை உற்பத்தியில் ஈடுபடுத்தினர் ஆக தங்களின் தொழில் காப்பாற்றிக் கொள்வதற்காகவும் தொழில் ரீதியான மேலாண்மையை தங்களுக்குள் நிர்வகித்துக் கொள்வதற்காகவும் இக்குழுவுக்குள்ளே தங்களுக்கான தொழில் வகுப்புகள் அகமண முறையைக் கட்டிக் காத்துக் கொண்டன.

நில உரிமை வகுப்புகளான புரோகிதர்களுக்கும் வேளாளர்களுக்கும் தங்களுக்கான சந்ததிகளுக்கு காப்புரிமைக்காக அகமண முறையை தேர்ந்தெடுத்தனர்.இதை கைவினை பிரிவினருக்கும் சேவை பிரிவினருக்கும் தேவைப்பட்டது.

இங்கே நாம் புரிந்து கொள்வது புரோகித பிரிவினரின் அகமனம் முறை மட்டுமல்ல இதற்கு மேலாக உற்பத்தி சாதனம் உரிமை காப்பு தொழில்நுட்ப ரகசிய காப்பு கருத்துருவ மேலாதிக்கம் இவ்வாறாக தொழில் வழி வகுப்புகள் அகமண முறை அமைய வேண்டிய தேவை ஏற்பட்டது சாத்தியமாகியது.இவ்வாறு ஏற்பட்ட தொழில்பிரிவினை தொடர்ச்சி தான் ஜாதிகள் ஆகவும் வர்ண நெறிமுறையிலும் வர்க்கக சமூக அமைப்பிலும் இதன் அடிப்படையில் புரிந்து கொள்ள முடியும்.

கிராம சமூகத்தில் புரோகிதர்களுக்கு கொடுக்கப்பட்ட நில தானங்கள் பொருள் தானங்கள் ஆதாரங்கள் மனதில் கொண்டால் புரோகிதர்களான பார்ப்பனர்கள் அந்த சமூகத்தில் உச்சத்தில் இருந்தனர்.கருத்துப் பரப்புவதன் மூலமோ உள்ள அரசு அதிகாரத்தை கட்டி காப்பதற்கு சாத்திர தத்துவ சேவை செய்வதிலும் ஈடுபட்டதால் மேம்பட்டு விளங்கினர். எல்லாவித வசதி வாய்ப்புகளையும் பெற்றுள்ள பார்ப்பனர்களும் எவ்வித உற்பத்தி சாதனங்களும் இன்றி வெறும் உற்பத்தியில் மட்டும் ஈடுபட்டுள்ள இன்னொரு உழைப்பு பிரிவினையான சேவை பிரிவினர் ஒடுக்கப்பட்டு கடைநிலைக்கு தள்ளப்பட்டனர்.

வர்க்க சமூகத்தில் கூட படிநிலை என்பது குறிப்பிட்ட காலத்திய உற்பத்தி முறையில் குறிப்பிட்ட வர்க்கங்கள் பெறும் இடத்தை பொறுத்து உள்ளது.உற்பத்தி சாதனங்களின் உரிமை, உற்பத்தி திறன் மற்றும் உற்பத்தி பொருள் பங்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் உள்ளது.

இந்தியாவில் நிலஉடமை முறையை ஆராய்ந்த மார்க்சிய அறிஞர் கோசாம்பி மேலிருந்து நிலவுடமை முறை கீழிருந்து நிலவுடமை முறை என இரண்டு விதங்களாக காண்கிறார்.பிராமணர்களுக்கும் படைத்தலைவர்களுக்கும் அரசு அதிகாரிகளுக்கு நிலங்கள் வழங்கப்பட்ட பகுதியில் இருந்ததை மேலிருந்து நில உடமை முறை என்றும் மேலும் அரசுக்கும் கிராம மக்களுக்கும் இடையில் உறவில் கேந்திர கண்ணியாக இருந்த கிராம நிர்வாகத் தலைவர்கள் காலப்போக்கில் உருவாக்கிக் கொண்டது கீழிருந்து நிலவுடமை முறை என்பர்.

ஆற்றங்கரைப் பகுதிகளில் நீர்ப்பாசனப் பகுதிகளும் முதலாம் வகை நிலவுடமை இருந்தது. இரண்டு வேளாண்மைமய  மாக்கலிலும் பல புதிய தொழில்கள் உருவாகின. வேளாண்மை,வேளாண்மை சார்பு கைவினை தொழில்கள் ஆகியவற்றுடன் கோயிலை ஒட்டியும் பல தொழில்கள் உருவாக்கின.

நில உடமை சமூக அமைப்பின் தொடக்கத்தில் வேளாண்மை வேளாண்மை சார்ந்த கைவினை ஆகியோர் மட்டுமின்றி தொண்டு ஊழிய தொழிலும் இருந்தன, இவை பாரம்பரியமாக கையளிக்கப்பட்டன. இவற்றிற்குரிய தொழில்நுட்பம் ஒரு கலையாக மட்டுமின்றி அந்த தொழில் வகுப்பு மட்டுமே தெரிந்ததாக இருந்தது. இதில் கூட ஆணாதிக்கத்தை உற்பத்தி சாதனஉரிமை சாதிகளோடு இணைத்து காண வேண்டும். நிலஉரிமை கொண்ட சாதிகளில் பெண்கள் முற்றாக சமூக உற்பத்தியில் இருந்து விலக்கப்பட்டனர். ஆனால் கைவினை ஜாதிகள், சேவை ஜாதிகள் ஆகியவற்றில் குடும்ப உழைப்பு இருந்ததனால் அங்கு சமூக உற்பத்தில் பெண்கள் ஓரளவு ஈடுபட நேர்ந்தது. எனவே அத்தகைய தொழில்நுட்பத்தை அந்த தொழில் வகுப்பு மட்டுமே தெரிந்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது.இதற்கு தமக்குத்தானே ஒரு வேலியிட்டுக் கொள்ள வேண்டியுள்ளது.இந்த விதத்தில் தொழில் வகுப்புகள் அகமண முறையில் இறுக்கத்தோடு ஜாதியம் நிறுவனம் ஆகியது.மேலும் நில உடமை உற்பத்தி முறையில் ஒவ்வொரு தொழிலும் முழுமையான ஒரு வித சுய உள்ளாற்றலையும் இயங்குதல்களையும் கொண்டிருந்தது. அதே நேரத்தில் ஒரு பொது பொருளாதார அமைப்பின் கட்டமைப்புக்குள்ளும் இயங்கிக் கொண்டிருந்தது. ஒவ்வொரு தொழிலும் தம்சுயேச்சைத் தன்மையை பேணிக் கொண்டிருப்பதோடு நிலவுடமை பொருளாதாரத்தில் ஒரு கண்ணியாகவும் உள்ளது. இதற்கு உகந்த விதத்தில் தொழில் வழி வகுப்புக்குள் அகமண முறை அழுத்தம் பெற்றுசாதியமயமாயிற்று. ஒவ்வொரு தொழில்களிலும் வகுப்பும் உற்பத்தியில் தனித்தன்மை சுயேட்சியை பேணிக் கொண்டு ஒரு ஜாதியாக இருக்கவும். பொது பொருளாக அமைப்பில் உள்ள ஜாதி சமூகத்தில் ஓர் அங்கமாக இருக்கவும் முடிகிறது.ஒரு தொழில் வகுப்பு இன்னொரு தொழில் வகுப்பில் தொழில் ரீதியில் ஒன்று கலக்க இயலாது.ஆனால் ஒரு தொழில் வகுப்பின் உற்பத்தி திறனில் உருவான முழு பண்டமும் இன்னொரு தொழில் வகுப்புக்கு நுகர் பொருளாகவோ அல்லது அதன் உற்பத்தி ஆதார பொருளாகவோ அமைய இயலும்.

ஒரு தச்சர் கலப்பை செய்து தர இயலும் ஒரு வேளாளர் இதில் தலையிட இயலாது. ஆனால் தச்சரின் கலப்பையைவேளாளரும் வேளாளரின் விளைச்சலை தச்சரும் பயன்படுத்த இயலும்.ஒரு தச்சரின் ஏர் கலப்பையை ஒரு குயவர் நேரடியாக நுகர முடியாது. ஆனால் கலப்பை பயன்படுத்தி உருவான  வேளாண்மை விளைச்சல் நுகர இயலும்.

(ஆதாரம் THE HINDU JAJMANI SYSTM A SOCIO-ECONOMIC SYSTEM INTERRELATING MEMBERS OF A HINDU VILLAGE COMMUNITY IN SERVICES WILLIAM HENRICKS WISER, M. A., Ph. D. (Co-author “Behind Mud Walls in India”)  LUCKNOW PUBLISHING HOUSE Lucknow, U. P. India 1936.

வேதங்களும் வேத சாஸ்திரங்களும் இரு வேறு மக்களை முன்னிறுத்துகிறது ஒருபுறம் வேதத்தை பரப்புவதை ஏற்கும் கூட்டம் இன்னொருப்புறம் வேதத்தை அறியாத கூட்டம் வேதம் ஓதுவோர்கள் வேதத்தை பேசுவார்கள் இன்னொரு பிரிவினரை தங்களின் எதிரியாகவும் அவர்களை மனிதர்களை விட கீழாகவும் வைத்தே பேசி உள்ளனர். இன்றைய ஏற்றத்தாழ்வு தீண்டாமை மனிதர்களுக்கிடையிலான பிறப்பால் உயர்வு தாழ்வு இந்து வேதங்களும் சாஸ்திரங்களும் தூக்கி நிறுத்துகிறது இவை உழைக்கும் மக்களை ஏமாற்றி அவர்களின் உழைப்பு சுரண்டலை பயன்படுத்திக் கொள்ளும் வேலையே.

நேற்று என்பது படிப்பினைக்குரிய வரலாறு. இன்று என்பது நாளை படைக்க போகும் புதிய சமுதாயத்தின் செயல்பாடு . நாளை என்பது சமைக்கவிருக்கும் செயல்பாட்டிற்கான லட்சியத் திட்டம்.

ஆட்சியாளர்களும், பெரும்முதலாளிகளும், மடாதிபதிகளும், ஆதீனங்களும், மதவாதிகளும், சாதிமத அரசியல்வாதிகளும் ஓரணியில் திரளுகின்றனர். இவர்களுக்கு பின்புலமாக நவீன காலனிய  ஏகாதிபத்தியவாதிகள் இருக்கிறார்கள். இந்த சுரண்டலாளர்களுக்கு ஜாதி மத கலவரங்கள் அவசியமாகிறது. மக்கள் ஜாதியாகவும் மதமாகவும் பிரிந்து கிடப்பது அவர்களின் சுரண்டலுக்கு ஏதுவாக உள்ளது. வர்க்கமாக மக்களை அணி திராளாமல் இருக்க இதுவும் ஒருவகை சூழ்ச்சியே.

மனிதனுக்கு மனிதன் அடிமை. ஆணுக்கு பெண் அடிமை. பிறப்பில் உயர் ஜாதிக்காரன், பிறப்பில் கீழ் ஜாதிக்காரன் இத்தகைய அடிமை முறையை பழங்குடி மக்களிடம் வேத சாஸ்திரங்கள் மூலம்புகுத்திய தத்துவம் தான் பிராமணியம். இந்திய சமுதாயத்தில் இந்து சமுதாய எனும் பிறப்பில் சாதிய உயர்வு தாழ்வு எனும் ஒரு ஜாதி முறையை (Caste System) , ஜாதியை தத்துவத்தை புகுத்தி வளர்த்து வருவது பிராமணியமே.

இன்னும் பின்னர்....

















No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்