சினிமா சின்னத்திரை ஊடகங்கள் விதைக்கும் நச்சு விதைகள்


தோழர்களே இந்த விமசனதிற்கு செல்லும் முன் நாம் வாழும் சமூகதிற்கும் இந்த சினிமா சின்னதிரையில் காட்டும் காட்சிகளுக்கும் உள்ள உறவுகளை புரிந்துக் கொண்டாலே அவை உண்மையில் எந்த வர்க்கத்தினருக்கு என்று புரிந்துக் கொள்வீர். இருந்தும் இன்று TV இல்லாத வீடுகளோ செல்போன் இல்லாதவர்களோ இல்லை எனலாம்(விதிவிலக்கு உண்டு). ஆக அவர்களின் மூளையில் தனிநபர்வன்முறை அபாசம், பிற்போக்கு முதலாளித்துவ மற்றும் ஏகதிபத்திய சிந்தனையின் ஊடே பழைய நிலவுடமை கலாச்சாரத்தையும் திணிப்பது அவர்களின் நோக்கமாக உள்ளது என்பேன்.

ஆளும் வர்க்கம் தனக்கு இருக்கும் கருத்தியல் ஆயுதங்களுடன் இராணுவ அடக்குமுறை கருவிகளுடன் பரந்துபட்ட மக்களின் வரலாற்று தேவைகளை அபகரிக்கிறது. தேவைகளை உணர்ந்து கொண்டு உண்மை நிலையை அறிந்து கொள்வதை தடுக்கிறது. மொத்தத்தில் வர்க்க சமூகத்தில் பரந்துபட்ட பெரும்பாலான மக்களின் தேவைகள் ஆளும் வர்க்கத்தால் மறுக்கப்படுகின்றன. ஒடுக்கப்படும் மக்களின் நியாயமான தேவைகளும், தேவைகளை நிறைவேற்றத் தடையாக இருக்கும் ஒடுக்குதல்களும் இடையிலான முரண்பாடு தீர்க்கப்படும் பொழுதே மனித சமூகம் வளர்ச்சி அடையும்.

இன்று உலகை சுரண்டுகிற ஏகாதிபத்தியம், உலக மக்களின் முன்னால் அதை மறைத்துக் கொள்ள பலவேசம் போடுகிறது. தன் ஆதிக்கத்தின் கீழ் பலவந்தமாக நாடுகளை அடிபணிய வைக்கிறது. அதேசமயம் பல நாடுகளின் பிரச்சினைகளைக் கணக்கில் கொண்டு காரிய சாத்தியமான முறையில் நடந்து கொள்கிற சித்தாந்த கயிறுகளை திரிக்கின்றது. இதற்காக எத்தனையோ விதமான உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள், கூட்டு அறிக்கைகள் தங்களை போல தனக்கேற்றது போல அந்த நாடுகளை மூலதனச் சக்கரத்துக்குள் இழுத்துக்கொள்ளும் ஏகாதிபத்தியம். அதற்காக இரட்டை வேஷம் போடவும் செய்கிறது. ஒன்று நாகரீகமான முகம் மற்றது கொடூரமான கிரிமினல் முகம். இப்படி பட்ட நமது சிந்தனை சீர்கெடுக்கும் இதை நாம் தினம் சந்தித்துக் கொண்டுதான் உள்ளோம் அதனை பற்றி பழைய தேடுதலே மீண்டும் ஒருமுறை புதிபிக்கிறேன் தோழர்களே. 

கலை இலக்கியம் பற்றிய கட்டுரை தொடரில் கலையின் வளர்ச்சி அதன் வரலாற்று போக்கில் அவை ஆளும் வர்க்கத்தை தூக்கி நிறுத்துவதை காணலாம். அதாவது நிலப்பிரபுத்துவ சமூகத்தில் நிலப்பிரபுக்களை விட குறைந்தவர்களாகவே கலைஞர்கள் மதிக்கப் பட்டனர். ஏனெனில் அவர்கள் நிலப்பிரபுக்களின் தயவில் வாழும் அடிமைகளாகவே இருந்தனர். இதனால் நிலப்பிரபுக்களின் தேவையை ஒட்டியே கலைகள் படைக்கப்பட்டன. கலைஞர் தன் சொந்த அனுபவ உணர்வுகளையோ,  பரவலான மக்களின் உணர்வுகளையோ, தன் கற்பனைகளையோ, தான் விரும்பியபடி கலைவடிவங்கள் மூலம் வெளிக்கொணர முடியா நிலையில் சுதந்திரமற்ற அடிமை நிலையில் இருந்தே கலை வடிவங்களைப் படைக்க நிர்ப்பந்திக்கப்பட்டான். இன்று நாம் வாழும் சமூகத்தில் ஆளும் வர்க்கத்தின் தேவைகளுக்காகவே சினிமா சின்னதிரை செயலாற்றிக் கொண்டிருக்கிறதென்றால் செல்போனோ நம்மை வேவுபார்பதோடு அதன் பல செயலிகள் பிறந்த குழந்தை முதல் எல்லா வயதினரையும் அடிமையாகவும் ஆக்கி உள்ளதென்றால் மிகையன்று.

ஆளும் வர்க்கம் தனக்கு இருக்கும் கருத்தியல் ஆயுதங்களுடன் இராணுவ அடக்குமுறை கருவிகளுடன் பரந்துபட்ட மக்களின் வரலாற்று தேவைகளை அபகரிக்கிறது. தேவைகளை உணர்ந்து கொண்டு உண்மை நிலையை அறிந்து கொள்வதை தடுக்கிறது. மொத்தத்தில் வர்க்க சமூகத்தில் பரந்துபட்ட பெரும்பாலான மக்களின் தேவைகள் ஆளும் வர்க்கத்தால் மறுக்கப்படுகின்றன. ஒடுக்கப்படும் மக்களின் நியாயமான தேவைகளும், தேவைகளை நிறைவேற்றத் தடையாக இருக்கும் ஒடுக்குதல்களும் இடையிலான முரண்பாடு தீர்க்கப்படும் பொழுதே மனித சமூகம் வளர்ச்சி அடையும்.

இன்று உலகை சுரண்டுகிற ஏகாதிபத்தியம், உலக மக்களின் முன்னால் அதை மறைத்துக் கொள்ள பலவேசம் போடுகிறது. தன் ஆதிக்கத்தின் கீழ் பலவந்தமாக நாடுகளை அடிபணிய வைக்கிறது. அதேசமயம் பல நாடுகளின் பிரச்சினைகளைக் கணக்கில் கொண்டு காரிய சாத்தியமான முறையில் நடந்து கொள்கிற சித்தாந்த கயிறுகளை திரிக்கின்றது. இதற்காக எத்தனையோ விதமான உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள், கூட்டு அறிக்கைகள் தங்களை போல தனக்கேற்றது போல அந்த நாடுகளை  மூலதனச் சக்கரத்துக்குள் இழுத்துக்கொள்ளும் ஏகாதிபத்தியம். அதற்காக இரட்டை வேஷம் போடவும் செய்கிறது. ஒன்று நாகரீகமான முகம் மற்றது  கொடூரமான கிரிமினல் முகம்.

நாகரீகமான முகத்தால் மத்தியதர வர்க்கத்தை கவர்ந்து அவர்களுக்கு சமூக ஏணிப்படியில் உயரும் ஆசை கனவு காட்டுகிறது கவர்ச்சியாக அழைக்கின்றது. அனுபவிக்க விதவிதமான ஆடம்பர பொருட்கள் படிப்பு - படித்தவுடன் கை மேல் வேலை இவை அவர்களுக்கு ஓயாது விளம்பரப் படுத்தி அவர்களின் மனதை  ஆக்கிரமித்து விடுகின்றன. ஆனால் ஏழையான எளிய ஒடுக்கப்பட்ட பரந்துப் பட்ட மக்கள் இந்த ஒடுக்கும் அரசோடு மோதல் ஏற்படும் போது அவர்களுக்கும் ஆளும் வர்க்கத்திற்கும்  இடையிலான மோதல் கூர்மையடைகிறது, இங்கேதான் ஆளும் வர்க்கத்தின் மக்களுக்கு எதிரான ஜனநாயகம்(ஏன்ற பேசப்படும்) எதிரான ஒரு குரூரமுகம் வெளிப்படுகிறது.

இதனை அவர்கள் மக்கள் மீது எப்படி திணிக்கிறார்கள் என்றால்?

தனிநபர்கள் சினிமாவின் கதையோடு தமது வாழ்க்கை சம்பவத்தை இனங்கண்டு ஒன்றிவிடலாம். உதாரணமாக காதலில் தோல்வியுற்ற ஒருவர் சில சினிமாக்கள் ஒருதலை காதல், காதல் தோல்வி பேசும் படங்களோடு தன்னுடைய வாழ்க்கையோடு ஒன்றிபோவதை ஏற்று கொள்வதை போன்றே பல்வேறு ஒடுக்குமுறை ஆளாகும் பலரும் தன் மீது இழைக்கப்பட்ட குற்றங்களை சினிமாவில் பார்க்கும் பொழுது அந்த வலிகளை இதன் ஊடாக தன்னை உருவகப்படுத்திக் கொள்ளலாம் அதன் வடிகாலாக இதனை காணும் அவருக்கு நாம் என்ன சொல்வது?.

சினிமாவானது முதலாளித்துவ ஆதிக்கத்தின் விற்பனை பொருளாகவே இன்றும் உள்ளன. இங்கு நிலபிரபுத்துவ சிந்தனைகளும் மதிப்புகளும் இன்றும் ஆதிக்கம் பெற்று இருப்பதால் அவற்றை கலை இலக்கியம் மூலமாக முதலாளித்துவம் விற்பனை செய்து லாபம் சம்பாதிக்கிறது குறிப்பாக ஒளிபடங்களான சினிமா சின்னத்திரையை பயன்படுத்தி கொள்கிறது.

சமுதாய உணர்வை நோக்கி சமுதாயத்தில் மாற்றியமைக்கக்கூடிய புரட்சிகர சினிமா பிற கலை இலக்கியங்களை ஆக்கி மக்களுக்கு வழங்க கூடிய பொருளாதார வாய்ப்புகள் இன்னும் முன்னேறவில்லை. இந்த நிலையில் மக்கள் முதலாளித்துவ நினைவுப் பொருட்களை வாங்குவது போலவே முதலாளிகள் வழங்கும் கலை இலக்கியங்களை பணம் கொடுத்து நுகர்கின்றனர் அதன் ஊடே அதன் அடிமையாகவும் நேரிடுகிறது.

டால்ஸ்டாய் புரட்சிகர எழுத்தாளர் அல்ல ஆயினும் லெனின் ரஷ்ய நிலப்பிரபுத்துவக் கொடுமைகளை டால்ஸ்டாயின் எழுத்துக்கள் மூலமே அறிந்தேன் என்று கூறினார். இதுவே நாம் எதிர்பார்க்கும் விமர்சனப் போக்கு.

கலை இலக்கியம் கருத்தியல் சார்ந்தவை மேற்கட்டுமானத்தை சார்ந்த ஒன்று.  மதம் பற்றி மார்க்ஸ் கூறும் போது "மக்களின் அபினி " என்று மட்டும் கூறவில்லை "ஒடுக்கப்பட்ட மக்களின் பெருமூச்சு இதயமற்ற உலகின் இதயம்" "ஆத்மா அற்ற நிலையின் ஆத்மா" என்றும் கூறிய பின்னரே " மதம் மக்களின் அபின்" என்று சொன்னார்.

அபினி வெறும் மயக்கம் மட்டும் தருவதல்ல ஒரு பொய்மையான தற்காலிக சந்தோஷத்தையும் தருவதாகும் .இதை ஒழித்து எதார்த்தமான நிரந்தர மகிழ்வு ஏற்படுத்துவதற்கு பொய்மையின் தேவையை  விடுவிப்பதற்கேற்றசூழலை,  கடப்பாடுகளை மன நிலைமைகளை நாம் ஏற்படுத்த வேண்டும்.

பெரும்பாலான மக்கள் சினிமாவின் பல்வேறு  கலை வடிவங்களில் மயங்கி விடுகின்றனர். தற்காலிக பொய்மை மகிழ்வில் மயங்கி  ஆர்ப்பரிக்கின்றனர்.

எப்படி கோயில் ஆராதனைகளில் கோயில் பூஜைகளில் தன்னை மறந்து ஏதேதோ வார்த்தைகளை கூறி அங்கே மயங்கிக் கிடப்பது போல சினிமாவில் காட்டப்படும் பல்வேறு கற்பனைகளில் மூழ்கி கிடப்பது மதம் கடவுள் போன்ற கற்பனைகளே.

மீண்டும் நாம் மார்க்சின் கூற்றுப்படி வருவோம் மதம் என்ற அபினி மூலம் மக்களை பிரித்தும் மோதவிட்டும் தற்காலிக திருப்தி பெறுவதிலேயே இன்றும் மதவாதிகளும் ஆளும் வர்க்கமும் குறியாக உள்ளனர். மக்களுக்கு இதை உணர்த்தி நிரந்தர மகிழ்ச்சியுடன் சேர்ந்து நல்வாழ்வு கிடைப்கேற்ற சூழலை கடப்பாடுகளை மன நிலைகளை ஏற்படுத்தி பொய்மைகளிலிருந்து அவர்களை விடுவிக்கும். முயற்சிகளில் மக்களை நாம் ஈடுபடுத்த முயல வேண்டும்.

மார்க்சியம் எல்லாத்துறைகளிலும் குறுகிய நோக்கத்திற்கு விரோதமானது. உலக நாகரிகம் என்னும் வளர்ச்சிப்பாதையில் மார்க்சியம் தோன்றி முன்னேற்றம் அடைகிறது. எல்லா காலங்களிலும் வாழ்ந்து மறைந்த மூளை கூர்மையுடையோர்  மூளைகள் எழுப்பி உள்ள வினாக்களுக்கெல்லாம் விடை கூறுவது மார்க்சியம்- லெனின் ( மார்க்சிய அழகியல்- பேரா. நா. வானமாமலை பக்கம் 6).

சரி நாம் எதிர் நோக்கும் பிரச்சினைகளை பார்ப்போம்

இன்று நம் கையில் உள்ள செல்போன் முதல் சின்னத்திரை சினிமா போன்றவை நமது சமூகத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகளை காண்போம் .

பண்பாட்டுத் துறையில் சினிமா ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் மிக கொடுமையாது. பண்பாட்டுத் துறையில் பாதிப்புகள் எனும்பொழுது ஆபாசத்தையும் வன்முறையையும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கிற காரியத்தை மட்டுமே பார்ப்பதோடு நிறுத்தி விடக்கூடாது. மக்களின் பண்பாட்டு உரிமைகளை பறித்து நசுக்கும் ஆளும் வர்க்கத்தின் பண்பாட்டு ஒடுக்குமுறை கருவியாகதான் சினிமாவும் சின்னத்திரையும் பயன்படுகிறது என்ற அவலத்தை நாம் முக்கியமாகக் கருத வேண்டும்.

இன்று ஊடகத்துறை என்பது நவீன தொழில்நுட்பத்தை பல்வேறு விதங்களில் மக்கள் தொடர்பு சாதனங்கள் மூலமாக மூலை முடுக்கெல்லாம் சென்று. மக்களின் சகல நேரத்தையும் கபளீகரம் செய்து  கொண்டுள்ளதை பார்க்கிறோம். செய்தித்தாள்களும் பல்வேறு விதமான  பத்திரிகைகளும் சினிமா நடிகைகள் சினிமா சம்பந்தமாக செய்திகளை அதீத முக்கியத்துவம் கொடுத்து மக்கள் மத்தியில் கடை பரப்புகிறது.

பெரும்பாலான மக்களின் ஓய்வு நேரத்தை பொழுது போக்கிற்க்காக சினிமா மட்டுமே இருந்த நாள் போய்; இன்று வீட்டிற்குள் சின்னத்திரையும் கைகளில் செல்போனும்; படித்தவர்கள்- படிக்காதவர்கள், ஆண்கள்- பெண்கள் கிராமவாசி- நகரவாசி ,இளைஞர் - முதியவர் என்ற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு எல்லோரரையும் ஏதோ ஒருவகையில் அவர்களை  ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது என்றால் மிகை அன்று.

பண்பாட்டுச் சீரழிவுகளை முன்னிலைப்படுத்துவது மூலம் இவர்களின் அநீதிக்கு எதிரான எதிர்ப்பு குணத்தை  மழுங்கடித்தும் அடிமை மனப்பான்மை விதைக்கவும் செய்கிறது, சமூகப் பொறுப்பை அழித்து சந்தர்ப்ப வாதத்தை முன்வைக்கிறது. தனிமனித சாகசங்களில்  நம்பிக்கை ஊட்டி கூட்டு செயல்பாடுகளை பின்தங்க வைக்கிறது.

சரி முதற்கண் நாம் இன்று பயன்படுத்தும் செல்போங்கள் பற்றி ஒரு பாமரன் பார்வையில் பார்ப்போம்.

அறிவியல் வளர்ச்சியே இன்றைய ’ஸ்மார்ட் போன்கள்’ அந்த வளர்ச்சியானது செல்போன்களின் பயன்பாட்டை பல மடங்கு அதிகரித்துவிட்டது.

விரல் நுனியில் உலகம்நினைத்த நேரத்தில் தொடர்புகருத்துப் பரிமாற்றம்பாதுகாப்புசெய்திகள்... என செல்போன்களால் பலவித நன்மைகள் இருக்கின்றன என்பதில் மாற்றுக் கருத்தே இல்லைஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற செயலிகளின் பதிலுக்காக பலரின் மனம் ஏங்கிக்கிடக்கின்றன’ என ஆய்வுகள் தெரிவிக்கின்றனஅழைப்பு ஒலிகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் வரவில்லையெனில்உடலுக்குள் பதற்றமான சூழ்நிலை (Anxiety) உருவாவதாகக் கூறப்படுகிறது.

மதுவைப்போல செல்போன்களும் போதைப் பொருளாக உருமாறி இருப்பதுஇன்றைய காலத்தில் குறிப்பிடப்படவேண்டிய ஒன்றுஇருபத்தி நான்கு மணி நேரமும் செல்போன்கள் நமது உடலோடு ஒட்டிக்கொண்டேதான் இருக்கின்றன.

வாட்ஸ்அப்ஃபேஸ்புக்மேலும் சில செயலிகளைப் பயன்படுத்திய பின்னர்நமது மனநிலையில் உண்டாகும் வித்தியாசமான மாறுதல்களை உணர்ந்திருப்போம்இவையெல்லாம் உடல்நிலையை பாதிக்காமல்மேம்படுத்தவா செய்கின்றனதொடர்ந்து இப்படிக் காதுகளையும் கண்களையும் அவதிக்குள்ளாக்கினால் இளம் வயதிலேயே அவை சோர்வடைந்துவிடும். ’செல்போனால் உடலும் மனமும் பாதிக்கப்படுகின்றன என்பதற்கு ஆதாரம் வேண்டும்’ என்று காத்துக்கிடந்தால்உங்கள் உடல்நிலையே விரைவில் உங்களுக்கு எதிராக சாட்சி சொல்லும்.

இன்று முழு நேரமும் செல்போன்களின் துணையுடனேயே வாழ்கிறோம்சிற்சில பாதிப்புகள் இருப்பது தெரிந்தும்அதற்குப் பழகிவிட்டது நமது வாழ்க்கை முறை. ’செல்போன் இல்லாமல் ஒரு நாள் நம்மால் நிம்மதியாக வாழ முடியுமா?’ என்பது நியாயமான கேள்விதான்.

இவை சில சதவீதம் மட்டுமே இன்னும் பல சதவீதம் செல்போனை பற்றி சாதரண மக்கள் புரிந்திருக்கவில்லை என்பேன் இதனை பற்றி வரும் தொடர்களில் விரிவாக விவாதிப்போம்.

இன்றைய சின்னதிரையானது மக்கள் பிரச்சினை பேசுவதை விட தனித்தனியான தனிநபர் பிரச்சினைகளை முன்னிறுத்தும் தொடர்கள் குடும்ப சிக்கலை பேச வரும் பல தொடர்கள் வெறும் நபர்களை மட்டுமே சூத்திரதாரியாக காட்ட முயல்கிறது. இவை மக்களை சமூகத்தில் இருந்து பிரித்து தனிநபர்களை பற்றி பேசும் சின்னதிரை தொடர்கள் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுக்கு காண்பதன் பெயரில் உண்மையில் வர்க்க சமூகத்தில் ஆளும் வர்க்கத்தை காபாற்றும் வேலையை திறமையாக செய்துக் கொண்டுள்ளது. மேலும் பல நிகழ்ச்சிகள் நகைசுவையின் பெயரிலும், நேரடி காட்சிகளிலும் அரங்கேறும் அபாசங்கள் சொல்ல தேவையில்லை.

உழைக்கும் மக்களுக்கு நாட்களை தள்ளுவது (கடந்து போதல்) பெரும்பாடாக உள்ள சூழலில் ஏகாதிபத்தியத்தின் ஏஜென்டுகளான ஆளும் வர்க்கத்தின் கருத்தாக்கங்களை சினிமாக்கள்/சின்னதிரைகள் வெளியிடுகின்றனர் கற்பனையில் வாழ சொல்கிறது.

ஒடுக்கப்பட்ட மக்களின் தின போராட்டமே பெரும்பாடாக உள்ளபோது சினிமா மற்றும் சின்னதிரையில் அவர்களின் போராட்டம் துணிச்சல் வாதமாக அரசியல் லாபத்திற்காக கூழைக் கும்பிடு போடுபவர்களாக அரசியல் இலாபத்துக்காக தனிநபர்களோடு  நேருக்கு நேர் மோதுவதாக; தன் குடும்பத்திற்க்கு தீங்கு செய்தவனை மீது பழி வாங்குவதாக, கிடைத்த பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுபவனாக, இச்சமூகத்தில் முன்னேறி சமூகப் பொறுப்பு உள்ளவனாக, கொள்ளைக்காரனாக, விவசாயியாக, நகரத்துப் பொறுக்கியாக காட்டும் காட்சிகள் சமுதாயத்தில் உள்ள முக்கிய முரணை மூடியே மறைக்கின்றது அவனின் சமூக பணியை மடைமாற்றுகிறது.

பணம் சம்பாதிப்பது, தனிநபர்கள் செல்வம் குவிப்பது இவைதான் இந்த ஊடக அடிப்படையான சமூக கோட்பாடுகளாக உள்ளது.

பெண்களுக்கு  இலக்கணமாக இவர்கள் காட்டுவது தெருவோர இளைஞர்கள் கிண்டலடிப்பதும், ரவுடிகள், குண்டர்கள், பெண்களை கேலி செய்யும் காட்சிகளும், ஆணுக்கு பெண் அடிமையாக காட்டுவதும், பெண்களை வெறும் பலாத்கார காட்சிக்கு பயன்படுத்துவதும். இவை அனைத்துமே பாட்டாளிவர்க்க குணங்களுக்கு எதிரானவை இவைதான் சினிமா சின்னதிரையின் அடிப்படையாக உள்ளபோது அவர்கள் உழைக்கும் மக்களுக்கானவர்கள் இல்லைதானே.

இன்று புரட்சிக்கு சாதகமான சூழ்நிலை இருக்கிறது. அதே சமயம் குப்பை சினிமாக்களும் மக்களை முடமாக்கும் சின்னதிரை தொடர்களும் பெருகி இருக்க காரணம் மக்களின் சிந்தனை புரட்சிகரமாக்க படவில்லை என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். அதற்கு தயார் செய்யக்கூடிய புரட்சிகர அணி மக்கள் மத்தியில் ஓரணியில் இல்லை மேலும் பிளவுபட்டுள்ளது.  இங்குள்ள புரட்சிகர இயக்கங்கள் தன்னார்வக் குழுக்களாலும் பல்வேறுவிதமான மார்க்ச்சிய விரோத  திருத்தல்வாத சந்தர்ப்பவாத போக்குகளாலும் பிளவுட்டு கிடக்கின்றன. முன்னணிப் படையாக ஒரே கட்சியாக வடிவெடுக்க வில்லை, அது வடிவெடுக்க வேண்டிய தேவை இன்றுள்ளது அதனை சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்று அவர்கள் சிந்தித்தால் சிறப்பு.

இன்று சினிமா சந்தையானது அரசாங்கத்தின் கலாச்சார கொள்கைகளில் மூடிமறைந்துள்ளது அவை ஆளும் வர்க்க பிற்போக்குதனங்களை முழு வேகத்தோடு பிரசாரம் செய்கிறது. ஆளும் பாசிசக் கரங்கள் மக்களை கலாச்சார ரீதியில் அடிமையாக்க சினிமாவை மற்றும் சின்னதிரையை ஒரு வலுவான கருவியாக பயன்படுத்துகின்றன .மேலும் மேலும் அவர்களை சமூக பொருளாதார அரசியல் சித்தாந்த ரீதியில் அடிமைப்படுத்துகின்றன.

குரூரமான சுரண்டலின் விளைவாக மக்களிடம் கொப்பளிக்கும் எதிர்ப்புணர்வுக்கு வடிகால் தான் இத்தகைய திரைப்படங்கள் செயலாற்றுகின்றன அவை மக்களின் சமூக தேவையை முன்நிறுத்தவில்லை முன்னெடுக்க வேண்டிய கட்டாயமும் சமூக பொறுப்புள்ள முற்போக்குவாதிகளும் இதனை உணர்ந்து செயல்படுவார்கள் என்ற நோக்கத்தோடு.

தொடரும்………..

கலையின் தோற்றம்மாவோ சொல்கிறார்:“எம்முடைய இலக்கியமும் கலையும் அடிப்படையாகத் தொழிலாளர்கள்விவசாயிகள்படைவீரர் களுக்கானவைபரவலாக்குதல் என்பதன் பொருள் அவர்களிடம் பரவலாக்குதல்தராதரங்களை உயர்த்துதல் என்பதன் பொருள் அவர்களுடைய தற்போதைய நிலையிலிருந்துஅந்த மட்டத்திலிருந்து முன்னேற்றுவது என்பதாகும்அவர்களுக்குச் சாதகமானதும்அவர்களால் உடனே ஏற்றுக் கொள்ளக் கூடியதும் எதுவோ அதையே நாம் பரவலாக்க வேண்டும்எனவேஅவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்கு முன்அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளும் பணி இருக்கிறதுதராதரங்களை உயர்த்துவதற்கு இது இன்னும் அதிகமாகப் பொருந்தும்” அதாவது இலக்கியமும் கலையும் எந்த அடித்தளத்திலிருந்து உயர்த்தப்படுவதுபரந்துபட்ட தொழிலாளர்விவசாயிகள்படை வீரர்களின் அடித்தளத்திலிருந்தே

தன் அனுபவங்களை சமுதாயத்தோடு பகிர்ந்து கொள்வதன் மூலமே அறிவியல் வளர்ச்சியும் ஆராய்ச்சியும் நாம் இன்று வளர்ந்து நிற்பதற்க்கு சாட்சியங்கள்.

ஒவ்வொரு மனிதனிடமும் படைப்பாற்றல் உள்ளதுஅது அவனது உழைப்போடு ஒன்றியதுதன் உள்ளுணர்வுகளுக்கு - அனுபவம் மூலம் ஏற்பட்ட உணர்வுகளுக்கு - வடிவம் தரும் ஆற்றல் அவனுக்கு உண்டுஅதே வேளை மற்றவர்களது படைப்புகளை புரிந்து சுவைக்கும் அழகுணர்வும் மனிதனிடம் மட்டுமே உள்ள குணமாகும்.

சமுதாயம் பல உள் முரண்பாடுகளைக் கொண்டது. இம் முரண்பாடுகள் சமுதாயத்தை மாற்றத்தை நோக்கி இயக்கிக் கொண்டேயிருக்கும். இச் சித்தாந்தத்தைத் தாங்கி நிற்பதுவே இயக்கவியல் பொருள்முதல்வாதமாகும்: சமுதாயம் இயக்கமற்றது, நிலையானது என்று கருதுவது கற்பனைவாதமாகும் இவை கருத்துமுதல்வாதிகளின் வேலையே.

அழகுணர்வின் கோட்பாடுகள் யாவும் பொருள் விற்ப்னையை நோக்கியே வளர்க்கப்படுகின்றன. வாணிபக் கலைக்கே (Commercial Arts) முதலிடம் தரப்படுகிறது. கலைக் கல்லூரிகளிலிருந்து வெளியேறியதும் மாணவர்கள் கூலியடிமை வேலைக்கே தேடி அலைகின்றனர். முதலாளித்துவத்தில் கலைஞன் கூலியடிமையாகி பரந்த சந்ததியை நோக்கி கலைப்படைப்பை படைக்கும் படி நிர்ப்பந்திக்கப் படுகிறான். இதனால் அவன் கலை உணர்வை மிகவும் படுமோசமாக்க முயற்சிக்கிறான், கற்பனையை நாடுகிறான் சமூக எதார்த்ததை விட்டு ஆபாசத்தையும் வன்முறையையும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கிற காரியத்தை மட்டுமே செய்கிறான். இவை மக்களின் பண்பாட்டு உரிமைகளை பறித்து நசுக்கும் ஆளும் வர்க்கத்தின் பண்பாட்டு ஒடுக்குமுறை கருவியாகதான் சினிமாவும் சின்னத்திரையும் பயன்படுகிறது என்ற அவலத்தை நாம் முக்கியமாகக் கருத வேண்டும் (இன்றைய சமூகத்தில் சினீமா சின்னத்திரையின் சீரழிவு கட்டுரையில் விரிவாக பார்ப்போம்).

கலையின் தோற்றம்:-

கலைஞன் சமுதாயத்தை விட்டு அதீதக் கற்பனையில் தன் படைப்புகளே ஆக்க நேரிட்டதுஇதனாலேயே நிலப்பிரபுத்துவ கலைகள்இலக்கியங்கள் யாவும் கற்பனாவாத (Romantism) நிலையில் படைக்கப்பட்டன.

நடுவிலே வேட்டையாடப்பட்ட புலிஅதைச் சுற்றிவந்து ஆடுகின்றனர்அவர்களது கரங்களிலே அம்புவில்லுஈட்டிதடிகள்ஆதி மனிதனது ஆயுதங்கள்புலியைச் சுற்றி வந்து குரல் எழுப்புகின்றனர்ஆட்டத்திலேஉடல் அசைவிலே ஒரு ஒழுங்குஅமைதி குரல் ஒசையிலேயேயும் ஒருவித ஒழுங்கு அமைதிகுகைகளின் முன்னே நடை பெறும் அந்த ஆட்டத்திலும் ஒசையிலும் பெண்கள்குழந்தைகள் கூட பங்கு பற்றுகின்றனர்குரலிலே  .ஒலிகளேசொற்கள் ஏதும் பிறக்கவில்லை.குறிப்பிட்ட நேரத்தில்குறிப்பிட்ட இடத்தில்குறிப்பிட்டவர்களால் நடாத்தப்பட்ட கலை நிகழ்ச்சியல்ல இதுவெற்றிக்களிப்பு உணர்வினுல் உந்தப்பட்ட ஆதி மனிதனின் ஆட்டம்இசைஇயற்கையானதுஇயல்பானதுகலை உணர்வு மனிதனேடு பிறந்தது.

புலியை வேட்டையாடி விட்டனர்அன்றைய உணவுப் பிரச்சனை தீர்ந்துவிட்டதுகைகளில் அவர்கள் வேட்டையாட எடுத்துச் சென்ற கருவிகள்அவைகள் வெற்றியைத் தந்தனமனிதர்களிடை தேவைகள் அதிகரித்து வேலைப் பிரிவினை ஏற்படாத காலம்சுதந்திரமான ஆதி மக்கள்சுதந்திரமாக ஆடிப்பாடினர்அவர்களது உடலசைவிலே ஒருவித ஒழுங்குமுறைகால்களைத் தூக்கி வைப்பதில் ஒருவித அமைதியைக் கண்டோம் . காலப்போக்கில் இதுவே கூத்துநடனம்இன்றைய பலவித நடனம் இங்கிருந்து வந்தவையே  உடலசைவுக்கலை வடிவங்களாக வளர்ந்தனகுரலிலே ஏற்பட்ட ஒலிநயம்ஓசை அமைதிவார்த்தைகள் தோன்றிய பின் கவிதையாகபல்வேறு இசை வடிவங் களாக வளர்ந்து வந்துள்ளனஅன்றைய புலி வேட்டையின் வெற்றிக்களிப்பும் , ஆட்டமும்அக்கணக் குழுவினரது ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் வலுப்படுத்துகிறதுதாம் தயாரித்த ஆயுதங்களின் (உற்பத்திக் கருவிகளின்வளர்ச்சியையும் வன்மையையும் பறைசாற்றுகிறதுமறுநாள் யாவரும் மேலும் ஆர்வத்தோடு வேட்டைக்குச் செல்வதற்கு அக்கலை நிகழ்ச்சி மேலும் உந்து சக்தியாக விளங்குகிறது.ஆகவே அவர்களது புலி வேட்டை ஆகிய உழைப்பின் வெற்றியிலிருந்து இயல்பாகப் பிறந்த கலை நிகழ்ச்சி ஒரு உந்து சக்தியாகி மீண்டும் உழைப்பில் ஒற்றுமையையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தி விடுகிறதுஉற்பத்திக் கருவிகளின் வெற்றியையும் அவற்றை மேலும் வளர்த்தெடுப்பதில் ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது.உழைப்பும் கலையும் இணைந்தவை;-மனிதன் சுதந்திரமாக வாழ்ந்தபோது உழைப்பும் கலையும் வாழ்வோடு ஒன்றிணைந்திருப்பதை காணலாம்உற்பத்திக் கருவிகள் வளர்ச்சியடையாத போதும் உற்பத்தி றவு சுமுகமாக அன்று இருந்தது.

உழைப்போடு கலை உணர்வு இணைந்து உந்து சக்தியாக விளங்கு வதை ஒடம் வலிக்கும்போது மீனவர் கூட்டமாக இசை எழுப்புவதிலிருந்தும் வயலில் உழைக்கும்போது விவசாயிகள் பாடுவதிலிருந்தும் காணலாம்.உணவுதற்காப்பு இரண்டுமே ஆதி மனிதனது அடிப்படைத் தேவைகளாக இருந்தனஇவற்றில் வெற்றி பெறுவதற்கு மனிதன் கூட்டாகஒரே சமூகமாக வாழவேண்டி நேரிட்டதுமனிதனின் தனிச்சிறப்பு சமூக வாழ்வும் சமூக உழைப்புமாகும்இவற்றின் மூலமே இயற்கையின் நுட்பங்களை சிறிது சிறிதாக அறிந்துஅதை வெற்றிகொண்டுதன் தேவைக்கேற்ப இயற்கையை அடிமைப்படுத்த மனிதன் ஆரம்பித்தான்இப்பெரியநீண்ட போராட்டத்திலும் பயணத்திலும் அவனுக்குத் துணையாக நின்றவை அவனது (1) பயிற்சி அல்லது நடைமுறை (2) அனுபவம் அல்லது அனுபவத்தின் தொகுப்புஉணவிற்கும் தற்காப்பிற்குமாக இயற்கையில் கண்ட கல்லை எடுத்து வீசிய மிருகம் காலப்போக்கில் தன் தேவைகளுக்காக (உணவுதற்காப்புகல்லை கல்மேல் தேய்த்து கூராக்கத் தொடங்கியபோதே மனிதனாக மாறத் தொடங்கினான்.  உற்பத்திக் கருவிகளை உற்பத்தி செய்யும் மிருகமே மனிதன் ஆவான் தன் புறத்தேவைகளுக்காக உற்பத்திக் கருவிகளை கூர்மையாக்கிய மனிதன் அக உணர்வு வெளிப்பாடுகளை வெளிப்படுத்த பல்வேறு இசைக்கருவிகளையும் ஆக்கத் தவறவில்லை.புறம்அகம்:- அனுபவ உணர்வு இரு சக்திகளாக வெளிப்படுகிறது. (1) உற்பத்திக் கருவிகள் (2) கலை வடிவங்கள்உற்பத்திக் கருவிகள் அவனது புறத்தேவைகளான உணவுபாதுகாப்புஉடைவீடு நுகர்பண்டங்கள்ஆகியவற்றை ஆக்கிமேலும் படைக்க உதவுகின்றனகலை வடிவங்கள் அவனது அக உணர்வுத் தேவைகளை பூர்த்தி செய்து அவனது ஆக்க சக்திக்கு மேலும் உந்து சக்தியளிக்க உதவுகின்றன.மனிதர் ஒவ்வொருவரிடமும் இயல்பாகவே படைப்பாற்றல் உள்ளதுஅதன்மூலமே உற்பத்திக் கருவிகளைக் கூர்மையாக்கிதன் புறநிலைத் தேவைகளுக்காக உற்பத்தியைப் பெருக்குகிறான்அக நிலையைஅக உணர்வுகளைஅனுபவ உணர்வுகளை கலை வடிவமாக வெளிக்கொணர்கிறான்இது அவனது உற்பத்தித் திறனோடு ஒட்டியது; அவற்றிற்கு உந்துசக்தி ஆவதுஆதி மனிதனது வேட்டை ஆடிய வெற்றிக்களிப்பின் ஆட்டத்தில் இதனையே கண்டோம்வேலைப்பிரிவினை ஏற்பட்ட பின்னர் உற்பத்திக் கருவிகளை செய்வதும்கலை வடிவங்களைப் படைப்பதும் ஒருசிலரின் ஆதிக்கத்தில் எவ்வாறு வந்தது என்பதனை பின்னர் பார்ப்போம்.உற்பத்திக் கருவிகள் போலவே கலை வடிவங்களும் நுண்கலைக் கருவிகளும் வானத்திலிருந்து வந்தவையல்லமனிதனாலேயே படைக்கப்பட்டவைதோலிசை (மத்தளம்), நரம்பிசைகள் (மிருகதசைநார்மனிதனது உணவு வேட்டையிலிருந்து பிறந்த கருவிகளேவண்டு துளைத்த மூங்கில் குழாயின் ஒலியைக் கேட்டே புல்லாங்குழலைக் கண்டான் மனிதன்பானை வனையத் தொடங்கியதும் கடம் என்ற கருவி தோன்றியதிலும் வியப்பில்லை.

தன் சுற்றுபுறம் ஒட்டிய மிருகம்பறவைபொருட்களுக்கு குறியீட்டு வடிவமைத்து தந்த மனிதன் காலப்போக்கில் அதை ஓவியக்கலையாக வளர்த்தான்ஒவியம் இரு பரிமாணங்களைக் கொண்ட கலை வடிவமேபின் அவற்றிற்கு முழு உருவம் தரமுயன்றன்பானை வணையத் தொடங்கியதோடு கழிமண்ணில் உருவங்களை செய்தான்பின்னர் மரம்கல்பளிங்குக்கல்பித்தளை ஆகியவற்ருல் முப்பரி மாண உருவங்களை செதுக்கினன்சிற்பக்கலை வளர்ச்சியடைந்தது.உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சியோடுதான் கலைகளும் வளர்ச்சியடைந்தனகூர்மையான கருவிகள் இன்றி சிற்பக்கலை வளர்ச்சிஉற்பத்தி கருவிகள் வளர்ச்சிபெற மனிதனல் உபரியாக (அடிப் படைத் தேவைக்கு மேலதிகமாகஉற்பத்தி செய்ய முடிந்தது அன்றாட உணவுப் போராட்டம் நீங்க ஓய்வு கிடைத்ததுஅவ்வேளை உற்பத்திக் கருவிகளோடு கலைகளையும் வளர்க்கத்தக்க வாய்ப்பு ஏற்பட்டதுஅதோடு மனித சமுதாய வளர்ச்சியும் வேகம்பெற்றதுஆயினும் உபரி உழைப்பு பறிக்கப்படும் நிலையில் உழைப்பிலும் கலையிலும் எவ்வாறு பாதிப்பு(ஏற்பட்டன என்பவை பற்றி பின்னர் ஆராய்வோம்.வெறும் கலை வடிவங்களில் அழகுணர்வு மட்டுமல்லமனிதன் தன் தேவைக்காக பண்டங்களைப் படைக்கும்போதும் தன் படைப் பாற்றலையும் கலையுணர்வையும் வெளிப்படுத்துகிறான்பானை வனை வதிலிருந்து பறக்கும் விமானத்தைப் படைக்கும்போதும் அவற்றில் அழகைப் படைத்துக் காட்டுகிறான்சேலைகள்குவளைகள்கூடைகள்விளக்குகள்மேசைகள்நாற்காலிகள்எழுதும் பேணுக்கள் ஆகிய பண்டங்களைப் படைக்கும்போதெல்லாம் புதுமையாகவும்அழகாகவும் மனிதன் படைப்பதை காண்கிறோம்கடைத்தெருவிற்குச் சென்று பண்டங்களை துணிகளை வாங்கும்போது நீங்கள் எவ்வாறெல்லாம் கவரப்படுகிறீர்கள்தேர்ந்தெடுக்க சிரமப்படுகிறீர்கள்காரணம் பண்டங்களை ஆக்குவதில் செலுத்தப்பட்ட கலை உணர்வுக்கும் உங்களது அழகுணர்வுக்கும் ஏற்படும் முரண்பாடாகும்.ஆகவே கலைகளை நாம் இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தலாம்.நுண் கலைகள்ஒவியம்சிற்பம்கூத்துநடனம்பல்வேறு இசை வடிவங்கள் (தோல்நரம்புகுழல்கருவிகுரல் முதலியனமுதலானவை.பயன்படு கலைகள்சேலைகள்கார்கண்ணுடி வகைகள்வீடுதளபாடங்கள்நுகர் பண்டங்கள் ஆகியவற்றை படைக்கும்போது காட்டப்படும் தொழில் நுட்பத்தோடு இணைந்த அழகுணர்வு.நுண்கலைகள் மனித உணர்வுகளோடு ஒட்டியவைபயன்படு கலைகள் அன்றாடம் நாம் காணும்பயன்படுத்தும் பண்டங்களோடுபண்ட உற்பத்தியோடு சம்பந்தப்பட்டவை۔கலை என்பது வேறுகலை வடிவங்கள் என்பது வேறு உள்ளடக்கமும் உருவமும் கொண்டதே கலைகூத்துநடனம்இசைக்கருவி இசைகளுக்கும் (வீணைமேளம் முதலியனஉள்ளடக்கம் உள்ளதுநுண்கலைகளைச் சார்ந்த இவையும் உள்ளடக்கத்தின் மூலமே “கலை என்ற நிலையைப் பெறுகின்றன.

விலங்கு பூட்டிய அடிமைச் சமுதாயத்திலே கலை உணர்வுகளே வெளிப்படுத்தவோவளர்க்கவோ அடிமைகளுக்கு வாய்ப்புக்கிட்ட வில்லைஎஜமானர்களுக்கு மட்டுமே சுதந்திரம் அனைத்தும் இருந்ததுஎஜமானர்கள் தம் பொழுது போக்கிற்கு பல்வேறு விளையாட்டுகளை வளர்ந்தனர்அடிமைகளை சிங்கம்புலிஎருதுகளுடன் போரிடச் செய்து பொழுது போக்குவதுஅடிமைகளை போரிட்டு மடியும் வரை மோதச் செய்து வேடிக்கை பார்ப்பதுஅடிமைகளின் இரத்தம் பீறிடுவதைக் கண்டு களித்து ஆர்ப்பரிப்பது ஆகியன அடிமைச் சமுதாயத்தில் வழமையாயிருந்தனஅடிமைகளின் உழைப்பு முழுவதும் எஜமானர்களால் பறிக்கப் பட்டதுஅவர்களது உழைப்போடு ஒன்றிய கலை உணர்வுகள் கட்டுப் படுத்தப்பட்டதுஇவற்றல் உற்பத்தி குன்றியதுமக்களின் தேவையை ஒட்டி உற்பத்தி இருக்கவில்லை

எஜமானர்களின் தேவையை ஒட்டி மட்டுமே உற்பத்தி இருந்தது உற்பத்திக்கு மேலாக நுகர முற்பட்டனர்மதுகேளிக்கை ஆடம்பரங்களில் எஜமானர்கள் பொழுதை களித்தனர்அடிமை நிலையில் மக்களுக்கு உற்பத்தியில் ஆர்வமிருக்க வில்லைஆகவே விலங்கு அடிமைச் சமுதாயம் வீழ்ச்சியுற்றதுமக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யாத இத்தகைய சமுதாயமும் வீழ்ச்சியடைவது வரலாற்று நியதியாகும்.

நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் அடிமைச் சமுதாயத்திலும் பார்க்க உற்பத்தி வளர்ச்சியடைந்ததுநிலப்பிரபுக்கள் (தம் வர்க்க நலனை முன் வைத்துகலைகளை வளர்க்கும் பொறுப்பை ஏற்றனர்கலைகள் யாவும் தெய்வாம்சம் பொருந்தியவைதெய்வத்திற்கே கலைகள் என்றனர்இதற்கு தமிழ் நாட்டையே நாம் நல்ல உதாரணமாகக்காணலாம்சிற்பிகளைக் கொண்டு கோவில்களைக் கட்டினர் தேவதாசி என்ற ஒரு சாதியினரை கோவில் களில் நடனமாடுவதற்கு என கோவில்களோடு பொட்டுக் கட்டி வைத்தனர். (இத்தேவதாசிகள் வேண்டிய வேளையெல்லாம் நிலப்பிரபுக்களின் ஆசைநாயகிகளாக வாழவேண்டிய அடிமை நிலையில் இருந்தனர் என்பது யாவரும் அறிந்ததேமேளம்மத்தளம்நாதஸ்வரம் ஆகிய இசைக் கருவிகளுக்காக நட்டுவனுர் என்ற ஒரு சாதி மரபையே ஏற்படுத்தினர்.நிலப்பிரபுக்களுக்கு குறைந்தவர்களாகவே கலைஞர்கள் மதிக்கப் பட்டனர்ஏனெனில் அவர்கள் நிலப்பிரபுக்களின் தயவில் வாழும் அடிமைகளாகவே இருந்தனர்இதனல் நிலப்பிரபுக்களின் தேவையை ஒட்டியே கலைகள் படைக்கப்பட்டனகலைஞரால் தன் சொந்த அனுபவ உணர்வுகளையோ பரவலான மக்களின் உணர்வுகளையோதன் கற்பனைகளையோதான் விரும்பியபடி கலைவடிவங்கள் மூலம் வெளிக்கொணர முடியா நிலையில் சுதந்திரமற்ற அடிமை நிலையில் இருந்தே கலை வடிவங்களைப் படைக்க நிர்ப்பந்திக்கப்பட்டான்.

தொடரும்

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்