பாலஸ்தீனத்தில் இரண்டாம் உலகப்போரில் உள்நுழைக்கப் பட்ட யூதர்கள் ஏகாதிபத்தியங்களின் துணையுடன் இன்று முக்கியமாக அமெரிக்காவின் துணையுடன் இஸ்ரேல் என்ற நாட்டின் பெயரில் அரபு நாடுகளை தன் கையில் வைத்திருக்க அமெரிக்காவின் கொள்ளைக்கார நோக்கத்திற்காக அப்பாவி பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டும் அகதிகளாகவும் வாழ்ந்துக் கொண்டுள்ளனர். இந்த அநீதி போரை எதிர்க்க வரலாற்று அடிப்படையில் சில புரிந்துக் கொள்ள இந்த தேடுதல்.
இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியில் நடந்த யூதப் படுகொலைகளில் இருந்து தப்பி, ஐரோப்பாவின் துன்புறுத்தலில் இருந்து தப்பி, இன்று ராமஜென்ம பூமி கதை போல பைபிள் பேசிய ஜெருசலம் யூதர்களின் தாயகமாக அதையையே அன்றைய பிரிட்டன் ஏகாதிபத்தியம் ஆட்சியில் இருந்தமையால் இந்தப் பகுதியில் குடியமர்த்தப்பட்டனர். சற்று புரிந்துக் கொள்வோம்.
1939 இல், இரண்டாம் உலகப் போர் தொடங்கியது மற்றும் 1941 வரை ஹிட்லர் ஐரோப்பா முழுவதையும் ஆக்கிரமித்தார் . 1941 ஆம் ஆண்டில், சோவியத் யூனியனின் படையெடுப்பைத் தொடர்ந்து , இறுதி தீர்வு தொடங்கியது.முன்னோடியில்லாத அளவில் ஒரு விரிவான ஒழுங்கமைக்கப்பட்ட நடவடிக்கை, யூத மக்களை அழிப்பதை நோக்கமாகக் கொண்டது, இதன் விளைவாக ஐரோப்பாவிலும் வட ஆபிரிக்காவிலும் யூதர்கள் துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர் . போலந்தில், மூன்று மில்லியன் பேர் அனைத்துவதைமுகாம்களிலும்எரிவாயுஅறைகளில் கொல்லப்பட்டனர் , ஆஷ்விட்ஸ் முகாம் வளாகத்தில் மட்டும் ஒரு மில்லியன் பேர் கொல்லப்பட்டனர். ஏறக்குறைய ஆறு மில்லியன்யூதர்கள்முறையாகஅழிக்கப்பட்ட இந்த இனப்படுகொலை ஹோலோகாஸ்ட் என்று அழைக்கப்படுகிறது .
ஹோலோகாஸ்டுக்கு முன்னும் பின்னும், ஏராளமான யூதர்கள் பாலஸ்தீனத்திற்கு குடிபெயர்ந்தனர். மே 14, 1948 இல், பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், டேவிட் பென்-குரியன் இஸ்ரேல் நாட்டை உருவாக்குவதாக அறிவித்தார் , இது எரெட்ஸ் இஸ்ரேலில் ( இஸ்ரேல் நிலம்) யூத மற்றும் ஜனநாயக நாடாகும் . உடனடியாக, அனைத்து அண்டை அரபு நாடுகளும் புதிதாக உருவாக்கப்பட்ட IDF எதிர்த்தது. 1949 இல், போர் முடிவடைந்தது மற்றும் இஸ்ரேல் அரசை உருவாக்கத் தொடங்கியது
அதன் பின் யூதர்களுக்கும், அரபு மக்களுக்கும் இடையேயும், பிரிட்டனுக்கு எதிராகவும் வன்முறைகள் வெடித்தன. 1947ஆம் ஆண்டு பாலத்தீனம் யூதர் பகுதி மற்றும் அரபு மக்களின் பகுதி என இரண்டாக மாற ஐநா வாக்களித்தது. அப்போது ஜெருசலேம் சர்வதேச நகரமானது.இந்த திட்டம் யூதத் தலைவர்களால் ஒப்புக் கொள்ளப்பட்டது. ஆனால் அரபு மக்கள் தரப்பில் இத்திட்டம் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.
இந்த பிரச்னைக்கு முடிவுகட்ட முடியாமல் தவித்த பிரிட்டன் ஆட்சியாளர்கள், 1948ஆம் ஆண்டு அந்த பகுதியைவிட்டு வெளியேறினர். இதையடுத்து யூத தலைவர்கள் இஸ்ரேல் என்ற புதிய நாடு உருவானதாக அறிவித்தனர்.
அதை பாலத்தீனத்தின் பெரும்பாலான மக்கள் எதிர்த்தனர். அண்டை நாடுகளை சேர்ந்த படைகள் படையெடுத்து வந்தன. ஆயிரக்கணக்கான பாலத்தீனர்கள் அந்த பகுதியை விட்டு பலர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். அல் நக்பமா அல்லது பேரழிவு என்று அவர்களால் இது அழைக்கப்படுகிறது.
போர் நின்ற ஒரு வருடத்திற்கு பிறகு அந்த பகுதியை பெரும்பான்மையாக இஸ்ரேல் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. ஜோர்டான் மேற்கு கரை என்னும் இடத்தை ஆக்கிரமித்தது. எகிப்து காசாவை ஆக்கிரமித்தது. ஜெருசலேத்தின் மேற்கில் இஸ்ரேலிய படைகள் கிழக்கில் ஜோர்டானிய படைகள் என பிரிக்கப்பட்டது.
ஏனென்றால் அங்கு அமைதி ஒப்பந்தம் ஒன்று ஏற்படவே இல்லை. ஒவ்வொரு தரப்பும் பிற தரப்பின் மீது குற்றம் சுமத்தியது. அடுத்த பல ஆண்டுகளுக்கு அங்கு போர்களும் சண்டைகளும் தொடர்ந்தன.
1967ஆம் ஆண்டு நடைபெற்ற மற்றொரு போரில், கிழக்கு ஜெருசலேத்தையும், மேற்கு கரையையும், சிரியாவின் கோலன் குன்றுகளின் பெரும்பான்மை பகுதியையும், காசா மற்றும் எகிப்திய சினாய் தீபகற்பத்தையும் இஸ்ரேல் ஆக்கிரமித்தது. பெரும்பாலான பாலத்தீனிய அகதிகள், அவர்களின் சந்ததியினர் காசா மற்றும் மேற்கு கரையிலும், அண்டை நாடுகளான ஜோர்டான், சிரியா மற்றும் லெபனானிலும் வசிக்கின்றனர்.
ஆனால் இந்த அகதிகளோ அல்லது அவர்களின் குடும்பத்தினரோ அவர்களின் வீடுகளுக்குத் திரும்ப இஸ்ரேல் அனுமதிக்கவில்லை. அப்படி அனுமதித்தால் இஸ்ரேல் யூத நாடாக இருப்பதற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என இஸ்ரேல் ஏமாற்றுகிறது. இஸ்ரேல் காசாவிலிருந்து வெளியேற்றப்பட்டாலும் மேற்குக் கரையை இன்றும் ஆக்கிரமித்துள்ளது. மேற்குக் கரையை ஐநா ஓர் ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியமாகவே இன்றும் பார்க்கிறது.
இஸ்ரேல் ஜெருசலேம் முழுவதையும் தனது தலைநகர் என்று கூறுகிறது. பாலத்தீனம் கிழக்கு ஜெருசலேத்தை தனது எதிர்கால பாலத்தீனிய நாட்டின் தலைநகராக கருதுகிறது. இஸ்ரேல் முழு நகரையும் உரிமை கொண்டாடுவதை அங்கீகரித்துள்ள வெகுசில நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. கடந்த 50 ஆண்டுகளில் இந்த பகுதிகளில் இஸ்ரேல் குடியிருப்புகளை நிறுவியது. தற்போது அங்கு 6 லட்சத்துக்கும் அதிகமான யூதர்கள் வசிக்கின்றனர்.
பாலஸ்தீனியர்களுக்கு சலுகைகளை வழங்க விரும்பாத வலதுசாரி இஸ்ரேலியர்கள், பாலஸ்தீன விடுதலை இயக்கத்துடனான (PLO) எல்லாவித உடன்படிக்கைகளுக்கும் எதிராக போராடத் துவங்கினர். PLO ஒரு "பயங்கரவாத அமைப்பு" என்று அவர்கள் முத்திரை குத்தினார்கள். இஸ்ரேலிய பகுதிகளிலிருந்து குடியேறிய மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்ற பெயரில் அவர்கள் வாழும் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்படுவதற்கே இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என்று அவர்கள் பீதியைக் கிளப்பினர்.
ஹமாஸ் அமைப்பின் வரலாறு என்ன?
ஹமாஸ் என்ற இந்தப் பெயர் இஸ்லாமிய கிளர்ச்சி இயக்கம் என்பதன் அரேபியச் சுருக்கத்தில் இருந்து பெறப்பட்டது. மேற்குக் கரையையும் காசா நிலப் பகுதியையும் ஆக்கிரமிக்கும் இஸ்ரேலிய முயற்சிக்கு எதிரான முதல் பாலத்தீன எழுச்சி தொடங்கிய பிறகு 1987-ஆம் ஆண்டில் உருவானது ஹமாஸ். இஸ்ரேலை அழிப்பதே தங்களது நோக்கம் என இதன் சாசனம் கூறுகிறது.
ஹமாஸ் இரு வேறு பணிகளைச் செய்து வருகிறது. ஒன்று இஸ் அட்-டின் அல்-காசம் என்ற தனது ராணுவப் பிரிவின் மூலம் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதல்களை நடத்துவது. மற்றொன்று நலத்திட்டங்கள் மூலம் சமூகப் பணிகளைச் செய்வது.
ஆனால் 2005-ஆம் ஆண்டில் காசா பகுதியில் இருந்து இஸ்ரேலியப் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு ஹமாஸ் இயக்கம் அரசியல் நடவடிக்கைகளில் இறங்கியது. 2006-ஆம் ஆண்டு நடந்த பாலத்தீன தேர்தலில் ஹமாஸ் இயக்கம் வெற்றி பெற்றது. கூட்டணி அரசிலும் பங்கேற்றது. அதிபர் முகமது அப்பாஸின் ஃபதா இயக்கத்தைப் பகைத்துக் கொண்டதால் அரசில் இருந்து வெளியேற்றப்பட்டு காசாவுக்குள் முடங்கியது.
அதன் பிறகு இஸ்ரேலுடன் மூன்று பெரிய போர்களில் காசா ஈடுபட்டிருக்கிறது. இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும் இடையே அடைபட்டிருக்கும் காசா பகுதிக்குள் ஹமாஸ் இயக்கத்தை தனிமைப்படுத்துவதற்காகவும் தாக்குதல்களைத் நிறுத்தவதற்காகவும் இஸ்ரேல் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
ஹமாஸ் இயக்கத்தை முழுமையாகவும், சில நேரங்களில் அதன் ராணுவப் பிரிவை மட்டும் பயங்கரவாத இயக்கமாக இஸ்ரேலும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் ஆகிய நாடுகள் பட்டியலிடுகின்றன.
கீழ்காணும் பகுதி https://senthalam.com/730 தளத்திலிருந்து எடுத்து கையாளப்பட்டுள்ளது.
2018 செப்டம்பர் 13 அன்றோடு, இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே "வரலாற்றுச் முக்கியத்துவம் பெற்ற" ஒஸ்லோ அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு 25ஆண்டு நிறைவடைந்தது. ஒஸ்லோ II என்ற துணை ஒப்பந்தம் 1995 இல் மேற்குக் கரையை மூன்று பகுதிகளாகப் பிரித்து கையெழுத்தானது. 1993 ஆம் ஆண்டு வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் ஒஸ்லோ ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் விழா நடைபெற்றது. முதன்முறையாக, இஸ்ரேலிய பிரதமர் யிட்சாக் ராபின் மற்றும் பாலஸ்தீன தலைவர் யாசர் அராபத் ஆகியோர் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டனின் முன்னிலையில் கைகுலுக்கினர். இஸ்ரேலியர் மற்றும் பாலஸ்தீனிய தலைவர் ஒருவரின் முதல் பொது கைகுலுக்கல் இதுவாகும். இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன விடுதலை அமைப்புக்கும் (பிஎல்ஓ) இடையே இரகசிய பேச்சுவார்த்தைகள் அமெரிக்க மேற்பார்வையின் கீழ் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நடந்தது. அதனால் அப்பெயரால் இந்த ஒப்பந்தங்கள் அழைக்கப்பட்டன. 1979 ஆம் ஆண்டு முதலே நார்வே அரசாங்க அலுவலகங்களைப் பயன்படுத்தி இஸ்ரேலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அராபத் முயன்றார், ஆனால் அவற்றை இஸ்ரேலிய அரசாங்கங்களால் நிராகரித்தன. 1987 இல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிரான பாலஸ்தீனிய "இன்டிபாடா" (பெரும் எழுச்சி) வெடித்த பிறகுதான், இஸ்ரேலிய அரசாங்க வட்டாரங்களில் இந்த பிரச்சினையில் மறுபரிசீலனை செய்யப்பட்டது.
அரபாத்தின் செயல்தந்திரப் பிழை
அரபாத் மற்றும் பிஎல்ஓ ஐக்கிய நாடுகளின் தீர்மானங்கள் 242 மற்றும் 338ஐ ஏற்றுக்கொண்டது, இது 1967 அரபு-இஸ்ரேல் போருக்கு முன்பு இருந்த எல்லைகளை விலக்கிக் கொண்டால் இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிப்பதாக தெரிவித்தது. தீர்மானங்கள் இஸ்ரேல் மேற்குக் கரையில் ஆக்கிரமித்திருந்த "யுத்ததந்திர ரீதியிலான முகாம்கள்" என அழைக்கப்படும் சிலவற்றை தற்காலிகமாக வைத்திருக்கவும் அனுமதித்தன. ஒஸ்லோவில் இரகசியப் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்த நேரத்தில், அராஃபத் சில முக்கிய வளைகுடா அரசுகள் உட்பட அப்பிராந்தியத்தில் உள்ள தனது கூட்டாளிகள் பலரிடமிருந்தும் கூட தனிமைப்படுத்தப்பட்டார். முதல் வளைகுடாப் போரில், அராபத் மற்றும் பாலஸ்தீனியர்கள், பொதுவாகவே, ஈராக்கின் அமெரிக்காவிற்கு எதிரான நிலைபாடு காரணமாக அதன் மீது அனுதாபம் கொண்டிருந்தனர், குவைத் உட்பட வளைகுடா அரசுகள், பாலஸ்தீனத்திற்கு மிகப்பெரிய நிதி ஆதரவாளர்களாக இருந்தனர். பாலஸ்தீனியப் போராட்டத்தின் மிகப் பெரிய ஆதரவாளர்களில் ஒன்றான சோவியத் யூனியனும் சரிந்தது. எகிப்தும் ஜோர்டானும் இஸ்ரேலுடன் தனித்தனியாக சமாதான ஒப்பந்தங்களைச் செய்து கொண்டன. இதன் காரணமாக இஸ்ரேல் பேச்சுவார்த்தையை இம்முறையும் நிராகரிப்பதை தவிர்க்க பிஎல்ஓவின் பல உடனடி கோரிக்கைகளை (ஜெருசலேமின் உணர்வுப்பூர்வமான பிரச்சினைகள், மில்லியன் கணக்கான பாலஸ்தீனியர்களை மேற்கு கரையில் மீள்குடியேற்றம் செய்தல்) கைவிட்டு ஒரு சந்தர்ப்பவாத ஒப்பந்தத்தின் மூலம் ஒஸ்லோவில் கையெழுத்திட்டு அராஃபத் மாபெரும் தவறு செய்தார்.
ஒஸ்லோ உடன்படிக்கையின் கீழ், இஸ்ரேலை பிஎல்ஓ அங்கீகரித்ததற்கு பதிலீடாக பிஎல்ஓ வின் ஆட்சி பகுதியை இஸ்ரேல் அங்கீகரித்தது. அதுவரை, பாலஸ்தீனியர்களின் தாயகத்தில் கட்டப்பட்ட யூத அரசின் சட்டபூர்வமான தன்மையை பிஎல்ஓ அங்கீகரிக்கவில்லை. இஸ்ரேல் PLO ஐ ஒரு பயங்கரவாத அமைப்பாக தடை செய்ததுடன் அதனுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள மறுத்தது. ஒப்பந்தத்திற்குப் பிறகு, உலகத் தலைவர்கள் “இது நீண்டகாலமாக அவதிப்படும் பாலஸ்தீனிய மக்களுக்கு அவர்களின் சொந்த அரசை அனுமதிக்கும் ஒரு முக்கிய ஒப்பந்தம்” என்று விரைந்து பாராட்டு அளித்தனர். ராபின் மற்றும் அராபத் ஆகியோர் கதாநாயகர்களாகக் கருதப்பட்டனர், அத்துடன் மற்றொரு இஸ்ரேலிய தலைவரான ஷிமோன் பெரஸுடன் சேர்த்து இவர்களுக்கும் அமைதிக்கான நோபல் பரிசும் வழங்கப்பட்டது.
உடன்படிக்கையின் உள்ளார்ந்த நோக்கங்களை அவிழ்த்தல்
அமெரிக்க தரகு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது பாலஸ்தீனியர்கள் பல கோரிக்கைகளை இழந்துள்ளனர். மேற்குக் கரை ஏற்கனவே சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றங்களால் ஆக்கிரமிக்கப்பட்ட அதே நேரத்தில் காசா திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றப்பட்டிருந்தது. "அமைதிக்கான நிலம்" என்ற வெளித்தோற்ற கருத்தாக்கத்தின் கீழ், ஓஸ்லோ ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. சில வருடங்களில் அதன் மாயை வெளிபட்டது. இந்த உடன்படிக்கைகள் மேற்குக்கரை நகரமான ரமல்லாவில் தலைமையகமாக கொண்ட இடைக்கால பாலஸ்தீனிய அதிகார சபை (P.A.) உருவாக்க வழிவகுத்தது. 1999 ஆம் ஆண்டுக்குள் ஒரு விரிவான - முழு அளவிலான பாலஸ்தீனிய அரசை உருவாக்குவதே ஒப்பந்தங்களின் இலக்கு என்று கூறப்பட்டது. ஆனால், சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்ட முதல் நாளிலிருந்தே இஸ்ரேல் அதற்கு குழிபறிக்க தொடங்கிவிட்டது. அமைதிப்புறா ராபின், 1995ல் ஜியோனிச இனவெறிக் குழுவால் படுகொலை செய்யப்பட்டார். 2004ல் அராஃபத் இஸ்ரேலியர்களால் ரமல்லாவில் உள்ள அவரது குடியிருப்புக்குள் அடைத்து வைக்கப்பட்டு மர்மமான முறையில் இறந்தார். அவரது தலைமையகத்தையும் இஸ்ரேலிய ராணுவம் குண்டுவீசி சுற்றி வளைத்தது.
காசா மற்றும் மேற்குக் கரையில் அப்பாவி பொதுமக்கள் மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் மற்றும் சட்டவிரோத குடியேற்றங்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பரிந்துரைப்பது என்ற P.A.யின் முடிவு டிரம்ப் அரசை ஆத்திரமூட்டியுள்ளது. அமெரிக்கா அல்லது இஸ்ரேல் போன்ற அதன் நெருங்கிய கூட்டாளிகளின் போர்க்குற்றம் தொடர்பான வழக்குகளை விசாரிக்கத் துணிந்ததற்காக தடைகள் விதிக்கப்படும் என ஐசிசியை கூட அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் அச்சுறுத்தினார். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் செய்த அட்டூழியங்கள் தொடர்பான போர்க்குற்ற வழக்குகளையும் விசாரிக்க ஐசிசி திட்டமிட்டுள்ளது.
பாலஸ்தீனியர்களுக்கான அனைத்து உதவிகளையும் நிறுத்தி வாஷிங்டனில் உள்ள P.A அலுவலகத்தை மூடும் அமெரிக்க முடிவுக்கு பிறகு பாலஸ்தீனத்தின் தலைமை தூதரான சயீத் எரேகாட், அமெரிக்காவின் மற்றொரு சமாதான உடன்படிக்கையை மேற்கொள்வதற்காக இனி எமது மக்கள் கொடுமைப்படுத்தப்பட மாட்டார்கள் என்று கூறினார். மேலும் “பாலஸ்தீன மக்களின் உரிமைகள் விற்பனைக்கு இல்லை; நாங்கள் அமெரிக்காவின் அச்சுறுத்தல்கள் மற்றும் கொடுமைப்படுத்துதலுக்கு அடிபணிய மாட்டோம்; நீதி மற்றும் சுதந்திரத்திற்கான எங்கள் நியாயமான போராட்டத்தை நாங்கள் தொடர்வோம்; சாத்தியமான அனைத்து சட்ட மற்றும் அரசியல் வழிமுறைகளை கையாள்வோம் என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம்" என்றார்.
No comments:
Post a Comment