முறை கொண்ட சித்தாந்தம் உலகை வேகமாக மாற்றக் கூடிய உந்து சக்தியாக விளங்குகிறது.பாட்டாளிகளுக்காகவே கண்டுபிடிக்கப்பட்ட இச்சித்தாந்தத்தைப் பாட்டாளிகளே விரைவில் கிரகித்துக் கொள்ளுகின்றனர் (அதற்கு கட்சி போதனை அவசியம் என்பதனை நாம் அறிவோம்). இச்சித்தாந்தத்தைக் கிரகித்துக் கொண்டதும் அது ஓர் உந்து சக்தி ஆகிறது. புரட்சிகர நடைமுறைக்குத் தூண்டுகிறது;வேகமாகப் பாட்டாளிகள் உலகை மாற்றி வருகின்றனர்,தம் விலங்குகளை ஒடித்து. மார்க்சின் சித்தாந்தத்தின் மிகப் பெரிய வெற்றி இதுவே ஆகும்.உலக சமூக அமைப்பை வேகமாக மாற்றுவதற்குரிய விஞ்ஞான நடை முறையைக்கண்டவர் மார்க்சே.அதேையே யுகயுகமாக அவரது பெயரும் சேவையும் நீடிக்கும் என்று எங்கெல்ஸ் கூறினர்.
நியூஸ்கிளிக்: மோடியின் சீன நாடகம்.
ஆங்கில செய்தியே வாசிக்க
18 முறை மோடி 2014 லிருந்து இதுவரை மோடி சீன அதிபரை 18 முறை சந்திதுள்ளார் செய்தி ஆதாரம்
twitter கணக்கில் sidd_sharma மோடி மற்றும் இது வரை சீன நிறுவனங்களின் இந்தியாவில் பங்கீடு பற்றி பேசியுள்ளார்
தன் twitter கணக்கில் sidd_sharma மோடி மற்றும் இது வரை சீன நிறுவனங்களின் இந்தியாவில் பங்கீடு பற்றியும் அதானி சீன நிறுவனங்களுக்கு இடையிலே நடந்துள்ள தொழில் பேரங்களை பற்றியும் பேசியுள்ளார்.
இந்த பகுதியை வினைசெய் என்ற பக்கதில் பகிரப்பட்டிருந்தது அதனை வாசித்த பின் அதன்மீது என் விமர்சனத்தை எழுதுவதோடு நமது இடதுசாரி சிந்தனையாளர்களின் மருள்சியை சுட்டிக்காட்டவும் விளைகிறேன் தோழர்களே.நேற்று பிரனாய் விஜயன் கேரள அமைச்சர் மோடி அரசின் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்தது, இங்குள்ள பல இடதுசாரிகள் முற்போக்குவாதிகளும் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். உண்மையில் இந்த செயல் கண்டிக்க தக்கதே அதேவேளையில் இன்றை புதிய காலனிய ஆட்சியில் ஏகாதிபத்திய தேவைகளை அறிந்தே செயல்படுவது இந்தியா போன்ற நாடுகளின் நிலையாக உள்ளதை மறந்து விட்டது எழுதுவதையும் மார்க்சியத்தை கைவிட்டு விட்ட இவர்கள் யாருக்காக இந்த அரசியல் பேசுகின்றனர்.? சரி இங்கே நம்முன் உள்ள கேள்வி நமது ஆசான் என்ன சொன்னார் நமது இடதுசாரிகள் இதுவரை அதை உள்வாங்கவே இல்லை என்பதுதானே.
"எல்லாச் சித்தாந்தவாதிகளும் உலகத்திற்குப் பலவேறுவகையாக விளக்கம் கூறியவர்களேஅதை எவ்வாறு மாற்றுவது என்பதே எமது வினா"என்றார் மார்க்ஸ். உலகை மாற்றியமைக்கக் கடியது அரசியல் செயற்பாடே. இது ஒரு புதிய வழமையான சித்தாந்தமல்ல. புதிய நடைமுறை கொண்ட சித்தாந்தம்.ஆகவே இயக்கவியல் பொருள்முதல்வாதம் என்பது அரசியற் செயற்பாடு."புரட்சிகர அரசியல்கோட்பாடின்றி புரட்சிகர இயக்கம் இருக்க முடியாது" என்றார் லெனின்.
மார்க்சினுடைய இப்புதிய நடைஇதை நமது இடதுசாரி பாராளுமன்ற கட்சியாக சீரழிந்ததோடு மறந்தே விட்டது என்பேன் அதனை கருத்தில் கொண்டே மேலே அந்த எழுத்தாளரின் நோக்கம் புரிந்துக் கொள்ள முடியும்.
அந்த கட்டுரை கீழே:-
அதிகாரத்தில் இருக்கும் திருடர்கள் தங்களை உத்தமர்களாக உயர்த்திக் கொள்வதற்கு மற்றவர்களை திருடர்கள், ஊழல் வாதிகள் என்று அவ்வப்போது நடவடிக்கை
எடுத்துக்கொண்டே இருப்பார்கள். தேச விரோதிகள் தங்களை தேசப்பற்றாளர்கள் என்று காண்பித்துக் கொள்வதற்காக தேசப்பற்று உள்ளவர்களை தேச விரோதிகள் என்று நடவடிக்கை எடுப்பார்கள். அப்படித்தான் நியூஸ் க்ளிக் இணைய இதழ் மீது ஒன்றிய அரசின் நடவடிக்கை உள்ளது.
நியூஸ் கிளிக் இணைய இதழை தடை செய்வதற்கு ஒன்றிய அரசு பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தாலும், சீனாவிடம் இருந்து சட்டவிரோத பண பரிமாற்றம் செய்தவர்கள் என்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. காரணம் சமீப காலத்தில் நியூ கிளிக் ஒன்றிய அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை, ஊழல்களை மிகவும் பிரபலமான முறையில் அம்பலப்படுத்தி வருகின்றது. இதன் தாக்கம் க்கள் மத்தியில் வெளிப்படுவதால் ஒன்றிய அரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
மேற்கண்ட குற்றச்சாட்டை ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று நியூஸ் கிளிக் பத்திரிக்கை மறுத்துள்ளது. நியூஸ் கிளிக் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த ஒரு சீன நிறுவனம் அல்லது அதிகாரத்தின் உத்தரவின் பேரில் எந்த செய்தியும் தகவல்களையும் வெளியிடவில்லை. நியூஸ் கிளிக் சீனப் பிரச்சாரத்தை அதன் இணையதளத்தில் பரப்புவது இல்லை. நியூ கிளிக் மூலம் பெறப்பட்ட அனைத்து நிதியும் பொருத்தமான வங்கி வழிகள் மூலம் பெறப்பட்டு இந்திய ரிசர்வ் வங்கியால் உருவாக்கப்பட்ட விதிகளின்படி சட்டப்படியான முறையில் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லி உயர் நீதிமன்றத்திலும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு உண்மையான காரணம் டெல்லி கலவரம், விவசாயிகள் போராட்டம் போன்றவற்றில் ஒன்றிய அரசை அம்பலப்படுத்தியதில் இருந்து இந்த தாக்குதல் தொடங்குகிறது.
சீனாவின் கைக்கூலி என்ற அர்த்தத்தில் ஒன்றிய அரசு முத்திரை குத்துகிற பொழுது ஒன்றிய அரசு சீனாவுடன் எத்தகைய உறவை வைத்துள்ளது என்ற கேள்வி எழுகிறது?
2014 ஆம் ஆண்டு நரேந்திர மோடி அவர்கள் அதிகாரத்திற்கு வந்த பிறகு சீனாவின் ஜனாதிபதி ஜி சின் பிங் உடன் 18 முறை சந்திப்புகளை நடத்தி உள்ளார்.
2014 ஆம் ஆண்டு சீனா இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்த பொருட்களின் மதிப்பு 54.2 பில்லியன் அமெரிக்கன் டாலர் ஆகும். இதுவே 2022 ஆம் ஆண்டு 118.5 பில்லியன் டாலராக, அதாவது 118 சதவீதம் உயர்ந்துள்ளது.
2014ஆம் ஆண்டு சீனாவிற்கு இந்தியாவின் ஏற்றுமதி 16.4 பில்லியன் டாலர். இதுவே 2022 ஆம் ஆண்டு 17. 48 மில்லியன் டாலராக உயர்ந்தது.
இந்திய சீன வர்த்தக பற்றாக்குறை என்பது 2014 ஆம் ஆண்டு 37. 8 பில்லியன் டாலரில் இருந்து 2022 ஆம் ஆண்டு 100 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
ஒன்றிய அரசு சீனாவுடனான வர்த்தக உறவை எந்த விதத்திலும் குறைத்துக் கொள்ளவில்லை அதிகரித்துக் கொண்டே வந்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
நியூஸ் கிளிக் என்ற பத்திரிக்கை பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு சொல்லும் ஒன்றிய அரசு பி எம் கேர் நிதிக்காக சீன கம்பெனிகளிடம் இருந்து நிதி பெற்ற விஷயமும் அம்பலத்திற்கு வந்தாலும் அதன் மீது நடவடிக்கை இல்லை. சீனாவின் கம்பெனியான டிக் டாக் 30 கோடி, ஜியோமி 10 கோடி, ஹூவாய் 7 கோடி, ஒன் பிளஸ் 1கோடி, ஒப்போ 1 கோடி என 49 கோடி இந்திய பிரதமரின் பி எம் கேர் நிதிக்காக வாங்கப்பட்டுள்ளது. இந்த நிதி தணிக்கை செய்ய முடியாத, தகவல் உரிமைச் சட்டத்திலும் பெற முடியாத ஒரு நிதியாக பராமரிக்கப்படுவது அனைவரும் அறிந்தது தான்.
அதானி சீன கம்பெனிகளுடன் வணிகம் செய்து சட்ட விரோதமான முறைகளில் செயல்படுவதாக தகவல்களும் குற்றச்சாட்டுகளும் உள்ளது. குறிப்பாக குடாமி இன்டர்நேஷனல் என்ற கம்பெனியின் இயக்குனரும், அதானி சகோதரர் வினோத் அதானி நடத்தும் நிறுவனமும் ஒரே முகவரியில் இருந்து செயல்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதானி இந்தப் பெயரில் பல ஊழல்களில் ஈடுபட்ட செய்திகளும் வெளியாகி உள்ளது.
இந்தியாவை சீர்குலைக்க சீனா நியூஸ் க்ளிக் பத்திரிக்கையை பயன்படுத்துகிறது என்று குற்றச்சாட்டு சுமத்தப்படுகிற பொழுது ஒன்றிய அரசு ஏன் மேலும் மேலும் சீனாவுடன் வர்த்தக உறவை பலப்படுத்துகிறது?
சீனா இந்தியாவின் நிலைத்த தன்மையை சீர்குலைக்க முயற்சிக்கிறது என்று ஏன் பகிரங்கமாக ஒன்றிய அரசு அறிவிக்கவில்லை?
சீன கம்பெனிகளுடன் வணிகம் செய்து சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபடுவதாக வெளிவந்துள்ள தகவலின் அடிப்படையில் அதானி கம்பெனிகள் மீது ஏன் ரெய்டு நடத்தவில்லை?
இந்தியாவின் நிலைத்த தன்மையை சீர்குலைக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டி நியூ கிளிக் மீது நடவடிக்கை எடுக்கும் ஒன்றிய அரசு சீன கம்பெனிகளிடமிருந்து ஏன் பி எம் கேர் நிதிகளை பெற வேண்டும்?
இந்தியாவில் ஒன்றிய அரசின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக நியூ கிளிக் பத்திரிக்கை அம்பலப்படுத்தி வருவது தான் இந்த கைதுக்கு முக்கியமான காரணமே தவிர மற்றவை மக்களை திசை திருப்ப சொல்லப்படும் பொய் குற்றச்சாட்டு ஆகும்
உலகின் புவிசார் அரசியலில் அமெரிக்கா இந்தியாவை தன் பக்கம் நிறுத்துவதற்கு நிர்பந்தம் கொடுத்து வருகிறது. மிரட்டி வருகிறது என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். மறுபுறத்தில் மோடி தான் வளரும் நாடுகளுக்கு தலைவன் என்ற முறையில் போலி பட்டங்களை சூட்டி மோடியை குளிப்பாட்டுகிறது.
ஆனால் உலக நிலைமை வேறு விதமாக இருக்கிறது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி உலக நாடுகள் முழுவதும் வின் வின் (Win Win) என்ற கோட்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்படுகிறது. அமெரிக்காவைப் போன்று ராணுவ ஆதிக்கத்தின் மூலமாக பொருளாதார கொள்கைகளை மாற்றி அமைத்து சுரண்டலில் ஈடுபடுவது இல்லை. உள்நாட்டு ஆட்சி கவிழ்ப்பு சீனா ஈடுபடுவதில்லை. ராணுவ தளங்களை அமைப்பதில்லை. அமெரிக்காவின் மேலாதிக்கத்தை எதிர்த்து சீனா, ரஷ்யா, பிரேசில், தென்னாப்பிரிக்கா என பல்வேறு நாடுகள் ஒன்று திரளுகிறார்கள். அமெரிக்காவின் தலைமையில் ஒற்றை உலகம் என்பதற்கு மாற்றாக பன்முக உலகை முன்வைத்து முன்னேறுகிறார்கள்.
இந்தியா ஒரு தெளிவான முடிவெடுத்து வளரும் நாடுகளுடன் அணிசேராமல் தத்தளித்துக்கொண்டு இருக்கிறது. அமெரிக்காவை நம்பி அண்டை நாடுகளை எல்லாம் பகைத்துக் கொண்டு நட்பு உறவை இழந்து வருகிறது. உள்நாட்டில் தனது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு பாசிச சக்திகள் கடைபிடிக்கும் போலி தேசப்பற்றை கடைப்பிடித்து வருகிறார்கள். இதன் விளைவு தான் எதிர் கருத்து விமர்சனம் ஆகிவிட்டது மிகக் கடுமையான தாக்குதலை நடத்துவது.
இந்திய பத்திரிகைகளின் அதிலும் குறிப்பாக ஒன்றிய அரசின் அடக்குமுறைகளை எதிர்க்கக் கூடிய பத்திரிக்கைகளுக்கு ஆதரவாக அணி திரள்வது எதிர்கால இந்தியாவின் முக்கிய கடமையாக மாறி உள்ளது.
No comments:
Post a Comment