உட்கட்சி ஒற்றுமையை கட்டுவதற்கான இயக்கவியல் அணுகுமுறை- மாவோ

 உட்கட்சி ஒற்றுமையை கட்டுவதற்கான இயக்கவியல் அணுகுமுறை- மாவோ

தீவிர கம்யூனிஸ்ட் எதிரி கலகக்காரர் என்று அடையாளம் காணப்பட்டவர்களை தவிர ஒவ்வொரு தோழர்களும் ஒற்றுமை பேண வேண்டும் என்பது நமது அடிப்படை அணுகுமுறையாக இருக்க வேண்டும் -மாவோ  நவம்பர் 18,1957.

ஒரு சிறு தவறு கூட செய்யாத மனிதன் உலகில் ஒருவரை கூட காட்ட முடியாது -லெனின்.

கட்சிக்கு  விசுவாசமான சக தோழரையும் மார்க்சிய விரோதிகளோடும் போட்டுக் குழப்பிக்  கொள்ளக் கூடாது. சோவியத் யூனியனின் ட்ராட்ஸ்கி சீனாவின் சென்- டு- சியு காவ்காவ் போன்றவர்கள் வலதுசாரிகள் இவர்களுக்கான தலைவர்கள் ஹிட்லர் சியாங்க ஷேக் ஜார் போன்றவர்கள். இவர்களை திருத்த முடியாது இவர்களை வரலாற்றின் குப்பை கூடையில் தூக்கி எறிய வேண்டிய நபர்கள். ஆனால் இயக்கம் சார்ந்த தோழர்களை நாம் அணுகுமுறை வேறு விதமாக இருக்க வேண்டும்.

தோழர்களுக்கு இடையே தவறான புரிதல்  ஏற்படும் சூழ்நிலை வரலாம் அப்போது ஒருவருக்கொருவர் மனம் திறந்து பேசினால் பூசல்கள் தீரும் .

கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து விட்டால் போதும் ஒருவர் ஞானி ஆகிவிடுவார் தவறுசெய்யமாட்டார் என்று சிலர் நினைக்கின்றார்கள் கட்சியும் அப்படியே அது ஒரு பேரியக்கம்.. எல்லாவற்றையும் கடந்தது சோதனைக்கு அப்பாற்பட்டது என்றும் எனவே பேச்சு வார்த்தைகள் கருத்து பரிமாற்றங்கள் தேவையில்லை என்றும்கருதுகின்றார்கள்.மார்க்சியவாதிகளில் பல வகையாக உள்ளனர் . 100% மார்க்சியவாதி,90,80,70,60,50% மார்க்சியவாதிகள் இருக்கிறார்கள்  ஏன் 20%,10% மார்க்சியவாதிகளும் கூட இருக்கிறார்கள்.ஆக மார்க்சிய லெனினிய தத்துவத்திற்க்கு குந்தகம் ஏற்படாதவரை அடுத்தவர்களின் கருத்துக்களை நீங்கள் ஏற்றுக் கொள்வதில் தவறில்லை.அதே போல் உங்களிடம் உள்ள  வேண்டப்படாத கருத்துகளை விட்டொழிப்பதிலும் தவறில்லை ஆக தவறு செய்த ஒரு தோழரிடம் நீங்கள் இரண்டு விதமான அணுகுமுறைகளை கையாள வேண்டி உள்ளது .

முதலில் அவர் தனது தவறான சிந்தனையில் இருந்து வெளியே வர நாம் போராட்டத்தை துவக்க வேண்டும்.இரண்டாவது அவருக்கு நாம் உதவ வேண்டும்.ஒருபுறம் அவருடன் போராட்டமும் மறுப்பும் அவருடன் தோழமைஉணர்வோடு  நெருக்கமாகுதல் வேண்டும்போராட்டம் என்பது மார்க்சிய லெனினிய தத்துவத்தை உயர்த்தி பிடிப்பதற்கும் மேலும்  மார்க்சியத்தை சரியாக புரிய வைப்பதற்தானதாக இருக்க வேண்டும்.அவருடன் இணைந்து நிற்க வேண்டும் ஏனென்றால் அவரை இழந்துவிடாமல் இருக்கும் பொருட்டு அவருடன் சமரசமாக இணக்கமாக செல்ல வேண்டும். தத்துவமும் இணக்கமும் இணைந்து செல்வதும் மார்க்சிய தத்துவமே. அது எதிர்மறைக் கூறுகளின் ஒருங்கிணைவே.

எந்த மாதிரியான உலகமானாலும் எந்த மாதிரியான வர்க்க சமூகமானாலும் அது முரண்பாடுகளின் குவியலாக தான் இருக்கும்.  முரண்பாடுகளை தேடி நீங்கள் அலைய வேண்டாம் அது இருக்கவே செய்கின்றது.  முரண்பாடுகள் இல்லாத இடம் எது நீங்கள் சொல்லுங்கள்?.அதேபோல்  புரிந்து கொள்ள முடியாத மனிதர்கள் இவர்கள் என்று யாரையாவது நீங்கள் காட்ட முடியுமா ஒருவரை திருத்தவே முடியாது என்று நீங்கள் முடிவு கட்டினால் அது கருத்தியல் வாத அணுகுமுறையாகும். அணு என்பது என்ன எதிர்மறை கூறுகளின் ஒருங்கிணைவு தானே?  எலக்ட்ரான் என்பது எதிர் மின்னோட்டம் கொண்டது,புரோட்டான் என்பது நேர் மின்னூட்டம் கொண்டது இது எதிர்மறைக்  கூறுகளின் ஒருங்கிணைவு தானே.இயக்கவியல் தத்துவம் ஏதோ அறிஞர்களின் தொடர்புடையது அவர்களுக்கு மட்டுமே புரியும் என்று நினைப்பது தவறு; அது ஒரு விஞ்ஞான தத்துவம் சாமானிய மக்களிடம் சென்று சேர வேண்டிய தத்துவம். இந்த விஷயம் விவாதம் பரந்த அளவுக்கு செல்ல வேண்டும். அரசியல் தலைமை குழு மத்திய குழு கூட்டங்களிலும் கீழ்மட்ட கமிட்டி குழு கூட்டங்களிலும் இது பற்றி விவாதிக்க வேண்டும்.கட்சி கிளை செயலாளர்கள் இயக்கவியலை குறித்து புரிதல் உள்ளவர்கள் தான் என்பதை பதிவு செய்ய விரும்புகின்றேன்.கட்சிகிளை கூட்டங்களில் அவர்கள் சமர்ப்பிக்கும் அறிக்கைகளில் இரண்டு விஷயங்களை முக்கியமாக பதிவு செய்வார்கள் ஒன்று சாதனைகள்  மற்றது குறைபாடுகள்.

 அதற்கு முற்றிலும் விசுவாசமாக இருப்பவர்களை அதை ஆழமாக புரிந்து கொண்டு வெற்றிகரமாக நடைமுறைப் படுத்துவதற்கு போரிட உறுதிபூண்டு அவர்களை கட்சியின் முன்வைக்கப்பட வேண்டும் அனைத்து கடமைகளை நிறைவேற்றுவதற்கு உறுதியானவர்களைகட்சியின் வழி அல்லது கோட்பாட்டு அடிப்படையில் திடசித்தத்துடன் மதிநுட்பத்துடன் ஆக்கபூர்வமான முறையில் கையாளும்திறமை உள்ளவர்களை ஊழியர்கள் பெரும் தொகையில்பெற்றிருப்பதுஅவசியமானதாகும் ஒரு நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி கட்டுவது என்பது அந்தந்த நாட்டின் சமூக பொருளாதார நிலைமைகளுடன் புரட்சியின் யுத்த தந்திரத்துடன் இணைக்கப்பட்ட விஷயமாகும். . நாடுமுழுவதும் அதற்கான அரசியல் தயாரிப்பு கட்டம் ஒன்று தேவைப்படுகிறது.

உட்கட்சி இயங்கியலும் ஜனநாயக மத்தியத்துவமும்.பாட்டாளி வர்க்கம் பிறரை இடையறாது மாற்றி அமைத்துக் கொண்டு தன்னையும் மாற்றி அமைத்துக் கொள்கிறது.விமர்சனம் சுயவிமர்சனம் இரண்டில் ஒவ்வொரு நேரங்களில் ஒவ்வொன்று முதன்மையாக இருக்கும் எனினும் கட்சி என்ற விதத்தில் புரட்சியின் அகசக்தி என்ற விதத்தில் சுய விமர்சனமே முதன்மையானது இதுவே மாற்றி அமைப்பது பற்றிய உட்கட்சி இயங்கியல் அணுகுமுறை .

புற உலகானது மனிதர்களது  நிபதனைக்குஅப்பாற்பட்டுமாறிக்கொண்டே இருக்கிறது. அடிப்படை சமூக மாற்றமான புரட்சிக்கு தலைமை தாங்க முன்வரும் கட்சி அடிப்படை சமூக அமைப்பு மாறாமல் இருக்கும் போதே சூழ்நிலைகள் மாறி வருவதை கணக்கில் எடுத்துக்கொண்டு அவ்வப்போதைய குறிப்பான கடமைகளை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.பொருளானது என் நேரமும் மாறிக் கொண்டே இருக்கின்றது என்ற விதத்தில் புரிந்து கொள்வதே சரியான பொருள் முதல்வாத கண்ணோட்டம்.வளர்ச்சியின் விதிகளோடு சேர்த்தே பொருளைப் புரிந்து கொள்வதே இயங்கியல் பொருள்முதல்வாதம்.இயங்கியல்பார்வையும்பொருள்முதல்வாத சித்தாந்தமும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க இயலாதவை;ஒன்றைஒன்று நிறைவு செய்பவை.இயங்கியல் பார்வையற்ற மாறா நிலையில் இருந்து பொருளை பரிசீலிக்கும் போது நாம் புறப்பொருளைசரியாகபுரிந்துகொள்ளாததுடன் புறவய விதிகளில் இருந்து இல்லாமல் நமது அகவய விருப்பங்கலிருந்து கட்சியை கட்டுவது முதல் கடமைகளை வகுத்து கொள்வதுவரை நடக்கின்றன .இது தத்துவத்துறையில் கருத்துமுதல் வாதத்திற்கு இடம் கொடுக்கிறது .

அதேபோல் பொருள்முதல்வாத அடிப்படையில் இருந்து பிரித்து இயங்கியலை பிரியோகிப்பதால் அது மாறாநிலை கண்ணோட்டத்தையே பலப்படுத்துகிறது . இது கட்சிக்குள் நிகழும் மாற்றங்கள் பற்றியது. கட்சியின் வழியை செயல்படுத்துவதில் வளர்ச்சியும் பின்னடைவும் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி கிடைக்கின்றன. இவை பின்னிப்பிணைந்து வெளிப்படுகின்றன.இவற்றை சரியாக பரிசீலித்து ஆய்வு செய்து அனுபவத்தை தொகுக்க வேண்டுமெனில் கீழே இருந்து மேல் வரை தகவல்கள் அளிக்கும் முறையும் மேலிருந்து கீழ்வரை கமிட்டி முறையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.அப்போதுதான் நிஜ விவரங்களிலிருந்து உண்மைகள் காண இயலும்.

நிஜ விபரங்களில் இருந்து உண்மையை கண்டறிய பொருள்முதல்வாத அடிப்படையில் தான் கட்சியில் நிகழும் மாற்றத்தைப் புரிந்து கொள்ள முடியும்.இல்லையேல் கட்சி ஆய்வின்றி முடிவிற்க்குசெல்லும் அனுபவத்திலிருந்து படிப்பினையைதொகுத்துகொள்ளாமையும் கட்சியில் நிகழும்  மாற்றத்தைப் புரிந்து கொள்ளாமையும் பார்வை என்ற விதத்தில் மாறாநிலைவாதத்தை கொண்டதாகவும் ஆகிவிடுகிறது .

இது நம்மை ஜனநாயக மத்தியத்துவ பிரச்சினைக்கும்அமைப்புகோட்பாடுகளுக்கும் இட்டுச்செல்கிறது. கம்யூனிஸ்ட் கட்சியும் ஒரு பொருள் என்ற விதத்தில் இயங்கு இயல் பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தில் கட்சி அமைப்பிற்கான கோட்பாடுகளைவகுப்பதுஅவசியமாகிறது .

ஜனநாயக மத்தியதுவ கோட்பாட்டின் நான்கு விதிகளான.

1). தனிநபர்  கமிட்டிக்கு கட்டுப்படல்.

2).சிறுபான்மைபெரும்பான்மைகட்டுப்படல்.

3). கீழ் கமிட்டி மேல் கமிட்டிக்கு கட்டுபடல்.

4).அனைத்தும் மத்திய கமிட்டிக்கு கட்டுப்படல்.

என்பவற்றை நாம் அறிவோம் இவற்றை எப்படிப் பார்ப்பது ஜனநாயக மத்தியத்துவம் என்றால் என்ன? ஜனநாயகத்திற்கும் மத்தியதுவத்திற்கும் உள்ள உறவு யாது ?

கம்யூனிஸ்ட் கட்சி பாட்டாளி வர்க்கத்தின் தலைசிறந்தமுன்னோடிகள்மனப்பூர்வமாக இணைந்து கூட்டு நடவடிக்கையில் ஈடுபடுகின்ற அமைப்பாதலால் கொள்கை வழிப்பட்ட அரசியலால் வழி நடத்தப்படுவது அவசியமாகிறது.உறுப்பினர்களின்புரட்சிகரநடவடிக்கைகளை மையப்படுத்தி ஒருமுகப்படுத்துவதே ஜனநாயக மத்தியதுவம்  அல்லது மத்தியதுவப் பட்டஜனநாயகம்.நடவடிக்கையில் இயங்குவதற்கான ஜனநாயகமும்  ஒருமுகப்படுத்தபடுகின்றமத்தியதுவமும் இணைந்துஒருமுழுமையாகின்றது.இரண்டும்ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்க இயலாதது ஒன்று மற்றொன்று நிறைவு செய்கின்றது.மத்தியதுவம் என்பது உண்மையிலே நிலவ வேண்டுமெனில் அந்த மையப்படுத்தப்பட்ட தலைமை கட்சியின் பரந்துபட்ட உறுப்பினர்கள் தமது கூட்டு நடவடிக்கையில் போராட்டங்களில் மிகவும் சிறப்பாகபயன் தருகின்ற கருவியாக உணரும்போதே தாமும் கூட மக்களுக்கு சிறப்பாக தலைமை அளிக்க இயலும். அப்போது தான் உண்மையான அரசியல் மத்தியதுவம் இருக்கும். இது உறுப்பினர்களுக்கு உட்கட்சி ஜனநாயகத்தை உறுதிப்படுத்தும் போதே சாதிக்க முடியும். ஜனநாயகத்தில் இருந்து பிரிக்கப்படாமல் மத்தியதுவம்  தனது உயிர் பண்பான வழிகாட்டும் திறனை இழந்துவிடுகிறது. அப்போது அது பாட்டாளி வர்க்க மத்தியதுவமாக இராமல் உத்தரவு போடுகின்ற  அதிகாரவர்க்கமுறையாக முதலாளித்துவ எதேச்சதிகாரமாக அதீத மத்தியதுவமாக  மாறிவிடுகிறது. அதேபோல உட்கட்சி ஜனநாயகம் என்பது உண்மையிலே நிலவ வேண்டுமெனில் நிலைமைகளை புரட்சிகர திசையில் மாற்றிக்கொண்டே நெளிவு சுளிவாகவும் செயலாற்றும் திறன் மிக்க வலுவான தலைமை உருவாகி கட்சியின் நடவடிக்கைகளில் ஒருமுகப்படுத்துவது அவசியம். திட்டவட்டமான ஒரு கொள்கை வழிப்பட்ட அரசியல் வழி காட்டப்படும் போது உறுப்பினர்கள் தமது நடவடிக்கைகளில் முன் முயற்சியை கை கொள்வதும் நடைமுறையில் எழுகின்ற பிரச்சினைகளை கோட்பாட்டின் அடிப்படையில் வரையறுத்து தீர்ப்பதும் சாத்தியமாகிறது. இதுதான் பாட்டாளிவர்க்க ஜனநாயகம் ஆகும்.எந்த கருத்து வேண்டுமானாலும் கொண்டு இருக்கலாம் என்று சம்பிரதாயமாக கூறுகின்ற பூர்சுவா ஜனநாயக நடைமுறையில் கட்சியின் அடிப்படைக் கொள்கைக்கு எதிரான கருத்தை கொண்டிருக்கும் .உண்மையான ஜனநாயக மத்தியதுவம் தொடர்ச்சியான கூட்டு நடவடிக்கைகளில் தொடர்ச்சியான கூட்டுப் போராட்டத்திலும் தான் அடைய முடியும் .

இதை எவ்வாறு உறுதிப்படுத்துவது? கட்சியினுள் இயங்கும் அமைப்புகளுக்கும் உறுப்பினர்களுக்கும் இடையேயும் மற்றும் கட்சிக்கு வெளியில் உள்ள மக்கள் திரளுக்குமிடையேயும் உயிருள்ள இணைவுகளையும் பரஸ்பர உறவுகளை வளர்த்து பராமரிப்பது இதனை உறுதிப்படுத்துவதற்கான அவசியமும் நிபந்தனைகள் ஆகும்.என அகிலத்தால் நிறைவேற்றப்பட்ட கட்சி அமைப்பு கோட்பாடுகள் கூறுகின்றது. இதைத்தான் கட்சியினுள் வெகுஜன மார்க்கம் என மாவோ பெயரிடுகிறார்                  -  

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்