அரசு பற்றி பல்வேறு கருத்துகள்

நேற்றைய கிளப் அவுஸ் விவாதம் ஒலி வடிவில் கேட்க இந்த லிங்கை அழுத்தவும் தோழர்களே 

அரசுபற்றிய நேற்றைய விவதத்தில் நான் மட்டுமல்ல பல தோழர்கள் பேசினர் அதில் தோழர் கே.பி. சுதிர் அவர்களின் முடிவுரை சிறப்பு, " செந்தில் பாலாஜிக்காக போராடிய உ.பி.கள் ஆசிரியர்கள் மீது நடதப்பட்ட மக்கள் விரோத நடவடிக்கையை ஏன் கண்டிக்கவில்லை?" இங்கே இவர்களின் அரசின் பாசமா அடிமை மனோபாவமா? என்று கேள்வி வைத்தார்.

வகுப்பு தொடங்கிய உடன் அரசு, அரசும் புரட்சி நூலை லெனின் எழுதியவிதம் மற்றும் அரசு தோன்றுவதற்கு முன்னர் குல சமூகம் இதனை பற்றி நான் பேசி முடித்த பின்னர் தோழர் ரவீந்திரன் பேசினார் அதனை அடுத்து தோழர் வேலன் பேசினார்.
இடையில் கெட்ட கேள்விகளுக்கு பதிலளீக்கும் பொழுது அம்பேத்கார் பெரியாரை முன்னிறுத்தி பேசப்பட்டதை ஏற்க முடியாது ஏனென்றால் அவர்கள் எந்த வர்க்கத்தின் பிரதிநிதிகள் அவர்கள் செய்த பணி சில சீர்திருத்தம் மக்களுக்கு பயனளித்தாலும் சமூக விடுதலைக்கு அவர்களிடம் எவ்வகையான திட்டம் இல்லை என்பதே.
ஆக மார்க்சியம் எல்லா அடக்குமுறை ஒடுக்குமுறை சுரண்டல்முறைக்கு முடிவு கட்டுகிறது என்பதே. ஆக மார்க்சிய லெனினியம் மட்டுமே ஏழை எளிய உழைக்கும் மக்களின் விடுதலைக்கான தத்துவம்.
அதற்கு முன் அரசும் புரட்சி நூலில் சில பகுதிகளை கீழே குறிப்பிட்டுள்ளேன்....
லஸ்ஸால் என்ற அன்றைய சோசலிசவாதியை மார்க்ஸ் விமர்சித்துள்ளவற்றை இங்கு நாம் பார்க்கலாம்.
அரசும் புரட்சியும் நூலிலிருந்து பக்கம் 130-133
சோசலிசதில் தொழிலாளிக்கு அவனுடைய உழைப்பின் "குறைக்கப்படாத" அல்லது "முழுமையான பலன்" கிடைக்கும் என்று லஸ்ஸால் கூறிய கருத்து தவறென்பதை நிரூபிக்க கோத்தா வேலை திட்டத்தின் விமர்சனத்தில் மார்க்ஸ் விபரமான பரிசீலனைக்கு இறங்குகிறார்.
லஸ்ஸாலின் தெளிவற்ற, குழப்படியான பொதுத் தொடர்புக்கு பதிலாய் மார்க்ஸ் சோசலிஸ சமுதாயம் அதன் விவகாரங்களை உண்மையில் எப்படி நிர்வாகித்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்பதனை நிதானித்து மதிப்பீடு செய்கிறார்.முதலாளித்துவம் இல்லாது ஒழிந்து விடும் ஒரு சமுதாயத்தின் வாழ்க்கை நிலைமைகளை மார்க்ஸ் ஸ்தூலமான முறையில் பகுத்தாராய முற்படுகிறார். அவர் கூறுவதாவது:- "இங்கு நாம் ஆராய வேண்டி இருப்பது தனது சொந்த அடித்தளங்களின் மீது வளர்ந்தெடுந்துள்ள ஒரு கம்யூனிஸ்ட் சமுதாயம் அல்ல; மாறாக முதலாளித்துவ சமுதாயத்தில் இருந்து வெளிதோன்றுவதும் ஆகவே தான் உதித்த அந்த பழைய சமுதாயத்தினிடமிருந்து பெறப்பட்ட பிறவிக்குறிகள் ஒவ்வொரு வழியிலும் பொருளாதார வழியிலும்,-தார்மீக வழியிலும் -அறிவு வழியிலும் இன்னமும் பதிந்திருப்பதற்கான கம்யூனிச சமுதாயத்தையே இங்கு நாம் ஆராய்கிறோம்".
உற்பத்தி சாதனகள் இப்பொழுது தனியாட்களது தனி உடமையாக இல்லை உற்பத்தி சாதனகள் சமுதாய அனைத்தின் உடமையாகி விட்டன .
(அரசும் புரட்சி நூல் பக்கம் 130- 131)

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்