அறிமுகம்:- தோழர்களே நமது மார்க்சிய தத்துவபோரட்டத்தை முன்னெடுத்து செல்ல நினைப்பவர்கள் அவசியம் எதிர்கொள்ளும் பிரச்சினையை குறிப்பாக தமிழகத்தில் நாம்காணும் மார்க்சியத்தை குழப்பியும் திரித்தும் பேசும் இந்த போக்கை புரிந்துக் கொள்வதும் அதனை அம்பலப்படுத்தி மார்க்சியம் அல்லாத போக்கை நிராகரிக்க ஒரு தத்துவ போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது என்பதனை முன்னெடுத்தே இந்த கட்டுரையை தொடங்குகிறேன் தோழர்களே, நிறைகுறைகளை சுட்டிக்காட்டுங்கள் படிப்பினைகளுடன் கற்று முன்னேற பயன்படும் என்பேன்.
இன்று எதிர்புரட்சிகர சக்திகள் எங்கும் நீக்கமற இருக்கும் காலத்தில்அவர்கள்அளிக்கும்சாட்சியங்கள் ஏகாதிபத்தியவாதிகள் புனைந்த பொய்க் கதைகளையும் எதிர்ப்பிரசாரத்தின் தாக்கத்தை இங்கே நம் முன் கொட்டிக் கடை சரக்காக நினைக்கிறனர் ஆகவே அவர்களுக்குபதிலளிக்கும்முகமாகவும் நேரில் கண்ட காட்சியூடாக நமக்கும் பல கேள்விகளுக்கு விடை கிடைக்கும் என்ற நோக்கிலும் இதனை எழுத நினைக்கின்றேன்.
வரலாறு பல திருப்பங்களைக் கண்டது.வர்க்கப்போராட்டத்தின் அகச் சான்றுகளாகப் பல நிகழ்வுகள் சம்பவித்துள்ளன.நிலவுடைமைசமுகத்தில்தன்நிலம் எங்கே இருக்கின்றது என்றே தெரிந்திருக்காத ஒருவன் தன்நிலத்தின் முழு பயனை அடையும் நிலப்பிரபு ஒருபுறம், தன் உழைப்பு சக்தியை கொடுத்து அவ்வுழைப்பின் பயன் கிடைக்காத நிலமற்றவன் மறுபுறம், சொகுசான அறையில் இருக்கையில் அமர்ந்தே தொந்தியை பெற்றெடுத்து அன்பே அறியாத முதலாளி ஒருபுறம்,அல்லும் பகலும் பயபக்தியுடன் உழைக்கும் பாட்டாளி மறுபுறம்: வர்க்க சமூகத்தில் சுரண்டுவோர் இன்ப வாழ்க்கை காணும் போது ஒடுக்கப் பட்ட வர்க்கம் வாழ வழியற்று முடங்கி கிடக்கிறது. இருமுரண்பாடானவர்க்கங்களுக்கிடையே ஆண்டாண்டு காலமாக நடைபெற்றுவந்த போராட்டத்தின் வரலாறே உலக சரித்திரம். இச்சரித்திரத்திலே 1917 மிக முக்கியுமான ஆண்டாகும். 1789 ஆம் ஆண்டில் பாரிஸ் மாநகர மக்கள் பஸ்டீல் சிறையைத் தகர்த்தெறிந்து பிரெஞ்சுப்புரட்சியைஆரம்பித்ததெனினும் இது பாட்டாளி வர்க்கப் புரட்சியென்று வரலாறு ஏற்கவில்லை. இது முதலாளித்துவ புரட்சியே.
ஆனால் ரஷ்யாவில் 1917 இல் ஏற்பட்ட புரட்சியோ புதிய அமைப்பை ஏற்படுத்திற்று. உலகம் இதுவரை காணாத புதிய சமூக அமைப்பை உருவாக்கிக் காட்டிற்று. அக்டோபர் புரட்சியே சோசலிச வரலாற்றின் ஆரம்பம். ரஷ்யாவில் 1917இல் நடை பெற்ற மகத்தான அக்டோபர் புரட்சியுடன் ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து, பல நாடுகள் இவ்வழிச் சென்றன. முதலாளீத்துவ அரசியல் அமைப்புக்கு வரலாற்று ரீதியான எல்லைகள் உண்டு. எனவே புதிய முறையிலான ஒர் அமைப்பு,அதாவது சமத்துவமான சமூக பொருளாதார அடிப்படை யைக்கொண்ட சோசலிச அமைப்பு,உருவாகுதல் தவிர்க்க முடியாத நிகழ்வு என்றல்லவா மார்க்சியம் கூறிற்று1917இன் நிகழ்ச்சியும் 20ம் நூற்றாண்டிலே ஏற்பட்ட மாற்றங்களும் இதனை நிரூபித்தன. சோசலிச அரசியல் அமைப்பின் தோற்றமும், உலக சோசலிச அமைப்பின் உதயமும், நமது காலத்தில்தோன்றியது.காலனித்துவ அமைப்பு முறிந்து வீழ்ந்தது.தேசிய விடுதலை இயக்கம் வெற்றியுற்று பழையஅடிமைநாடுகள்சுதந்திரமடைந்தன.காலனித்துவம்விட்டுச்சென்றசிக்கல்களிலிருந்து வெளியேறி விட அரசியல் பொருளாதார ரீதியிலே பல நடவடிக்கைகளைஇவைமேற்கொண்டன.இத்தகைய அமைப்பிலே அரசாங்கத்தின்பங்களிப்புமுக்கியத்துவம் பெற்றது.பொருளாதார,அரசியல்,நீதித்துறை நிறுவனங்களையும் அமைப்புகளையும்மாற்றி அமைப்பதில் தீவிர கவனம் செலுத்தப்பட்டது.
எனவே மார்க்ஸியத்தை முதன் முதலில்செயல்முறைத்தத்துவமாக்கிய அக்டோபர் புரட்சியையும், இப்புரட்சி உருவாக்கிய சோவியத் யூனியனையும் ஏகாதிபத்தியவாதிகள் புனைந்தபொய்க் கதைகளையும் தீட்டிய அழகற்ற சித்திரங்களையும் நம்ப மக்கள் மறுக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
மார்க்சிய சித்தாந்தம்அரசியல் மற்றும் அமைப்பு ரீதியானது. இந்த இரண்டு அம்சங்களிலும் மார்க்சியத்திற்கும் திரிப்புவாதத்திற்கும் இடையிலும், பாட்டாளி வர்க்கத்திற்கும் அன்னிய வர்க்க போக்குகளுக்கும் இடையிலும் வேறுபாடுகள் வரையப்பட வேண்டும்.
சித்தாந்த அரசியல் ஆனது மார்க்சியத் தத்துவத்தை அதாவது மார்க்சிய லெனினியத்தை தூக்கிப் பிடித்தல் ஆகும்.இன்று உலகில் உள்ள முரண்பாடுகளில் முக்கியமானது ஏகாதிபத்தியத்திற்கும் ஒடுக்கப்படும் நாடுகள் மற்றும் மக்களுக்குமான முரண்பாடு பிரதான முரண்பாடு என்பதை உயர்த்திப் பிடித்தல்.மார்க்சியம் அல்லாத திரிபுவாதம் மற்றும் புதிய இடது போன்ற அந்நிய போக்குகளை எதிர்த்து உறுதியாக போராடுதல்.பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை தூக்கிப்பிடித்தல் மாற்றெல்லாதிருத்தலவாதபோக்குகளை தூக்கியெறிதல் இந்த மூன்று போக்குகளும் சித்தாந்த ரீதியானவை.
அமைப்புத்துறையில்கருத்துமுதல்வாத அராஜகவாத,குருங்குழுவாதபோக்குகளை முறியடித்து போல்ஷ்விக் பாணியில் இந்திய பாட்டாளி வர்க்க முன்னணிபடையாககட்சி அமைப்பதும், வர்க்க வெகுஜன அமைப்புகளை அமைப்பதும்,குறிப்பான நிலைமைக் கேற்றவாருமுறைகளை கையாளுவது இவைதான் இன்று புரிந்து கொள்ள வேண்டியவையே.
இதனைப் புரிந்து கொள்ளும் முன் சிறிது வரலாற்று வழியில் சென்று புரிந்து கொள்வோமே தோழர்களே.
ஏகாதிபத்தியத்தின் புதியகாலனி காலகட்டம் இருபதாம் நூற்றாண்டின் மத்திய காலப்பகுதியில் மாபெரும் மாற்றங்கள் நிகழ்ந்தன் விளைவாக ஏகாதிபத்தியவாதிகள் அவர்களுடைய பழையபாணிய ஆட்சிமுறையில் இருந்து முன்னால் காலணியில் தங்களால் உருவாக்கப்பட்டவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுமானசார்பாளர்களை சார்ந்து நின்று ஒடுக்குமுறையையும் சுரண்டலையும் மேற்கொள்ளும்முயற்சிகள்எடுத்தார்கள்.தேசியப் போராட்டங்களின் எழுச்சியும் சோசலிசசமூக தோற்றமும் அதன் படிப்படியான வளர்ச்சி ஏகாதிபத்தியங்களின் தகுதி மற்றும் அதிகாரம் கீழ்நோக்கி சரியத் தொடங்கியது.
குறிப்பாக இரண்டாம் உலக யுத்தத்தின் முடிவில் அதுவரையில் உலகக் காட்சி படத்தில்ஆதிக்கம்செலுத்திய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியமானது பின்வரிசைக்கு தள்ளப்பட்டுஅமெரிக்கஏகாதிபத்தியமானது உலக ஏகாதிபத்திய தலைவனாக முன்னுக்கு வந்தது.புதிய காலனி முறையில் ராணுவம், பொருளாதாரம், அரசியல் போன்றவற்றில் தனது மேலாதிக்கத்தைஅமெரிக்கஏகாதிபத்தியம் நிலைநாட்டியது.அதுவரை மேலாதிக்கம் நிலை நாட்டிய பிரிட்டன் உட்பட பழைய ஏகாதிபத்திய சக்திகள் அதனுடைய ஆதிக்கத்தின் கீழ் இருந்த காலனிகளில் நேரடியான அரசியல் கட்டுப்பாட்டைகைவிட்டார்கள்.இதனால்அமெரிக்க உள்ளடக்கியஏகாதிபத்திய மூலதனத்தின் நலன்களுக்காகவும் சுரண்டலுக்காகவும் இந்த நாடுகள் திறந்து விடப்பட்டன அதுவரை பழைய காலனிகொள்கைகள் மூலம் ஆதிக்கம் செலுத்திய பிரிட்டன் வீழ்ச்சி அமெரிக்காவின் புதிய காலனி கொள்கை உலகமயமாக்குதலுக்கு துணை புரிந்தது.
அரசியல் துறையில் ஐநாவும் பாதுகாப்புகவுன்சிலும்அமெரிக்கஏகாதிபத்தியத்தால் ஒடுக்கப்பட்ட நாடுகள் மீது அரசியல் நிர்பந்தம் செலுத்தும் கருவியாகியது. சி ஐ ஏ என்ற உளவுத்துறை ஒடுக்கும் கருவி இவற்றுடன் கூடுதலாக இந்த முன்னாள் காலணி நாடுகளில் இருந்த மத அடிப்படை வாதிகள், தேசிய வெறியர்கள் ஜாதிய வெறியர்கள் மற்றும் பல பிற்போக்கு சக்தியுடன் ஏகதிபத்திய பணத்தால் ஊக்க மூட்டப்படும் பல்வேறு தன்னார்வ குழுக்களும்அவர்களதுபிற்போக்குத்தனமான சித்தாந்தங்களுடன் தொழிலாளி வர்க்கம் மற்றும் பரந்துபட்ட மக்களை பிளவுபடுத்தவும் குழப்பவும் அவர்களை எதிர்ப்பு பாதையிலிருந்து திசை திருப்பவும் பயன்படுத்தப்பட்டனர், பயன்பட்டுத்திக் கொண்டுள்ளனர்.
சுருங்கக் கூறின் இத்தகைய பிரதான கூறுகள்தான் இரண்டாவது உலக யுத்தத்திற்கு பிறகு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தலைமையில் ஏகாதிபத்தியத்தால் உருவாக்கப்பட்ட நவீனகாலனிஆதிக்கத்தின்கொடூரமான கபடத்தனமான காலனி வடிவம் என்று மாபெரும் விவாதம் நடந்த போது சீன கம்யூனிஸ்ட்கட்சியாலும்மாவோவாலும் குறிப்பிடப்பட்டது.
இன்னும் சில கருத்துக்கள் மார்க்சிய தத்துவமானது அறிவியலோடு உண்மையோடுநெருக்கமாகபிணைக்கப்பட்ட ஒன்றானது என்பதை அறிவோம்.இன்றுஉலகில் எங்கேயுமே சோசலிச நாடுகள் இல்லாத நிலையில் மார்க்சியதத்துவம்தோற்றுப்போய்விட்டது என்று பிரசாரம் செய்கிறார்கள் உலகெங்கும். மார்க்சியத்தை மறுத்து திருத்தி புரட்டி ஏராளமான நூல்கள் கட்டுரைகள் வெளியிடுகின்றனர். வர்க்கப் போராட்டத்தை மறுத்து ஜாதி, மத, இனப் பிரதேச போராட்டங்களை பெருமளவில்ஊக்கிவிக்கப்படுவதற்காக. தத்துவ அடிப்படையில் நூல்கள் கட்டுரைகள் எழுதிக் குவிக்கின்றனர்.
சோவியத்தின் தகர்வோடு சோசலிச நாடுகள் முதலாளித்துவ மீட்சி ஏற்படுத்தியதியதை சோஷலிசதின் தோல்வியாகவும் மார்க்சியத்தின் தோல்வியாகவும் முன் வைக்கின்றனர். சோசலிச புரட்சிக்கு பின்பு முதலாளி வர்க்கம்முழுமையாகஒழிக்கப்படுவதில்லை. பின்பு தொடர்ச்சியான வர்க்க போராட்டங்கள் மூலமாக வர்க்கங்கள் ஒழிந்து சோசலிசம் உறுதிப்படும் வரை வர்க்கப் போராட்டத்தின் அவசியத்தை நமது பேராசான்கள் தெளிவுபடுத்தி உள்ளனர். சூழலியல் கூறுக்களின் இடமாற்றத்திற்கு முதலாளி மீட்சி வாய்ப்புண்டு என்பதை லெனின் தெளிவுபடுத்தி உள்ளார். இன்றைய மார்க்சியஇயக்கங்களும்தத்துவங்களும் தற்காலிக பின்னடைவை ஏற்பட்டுள்ளது மறுப்பதற்கில்லை. ஆனால் உலகையே ஒரேகுடைக்குள் கொண்டுவரநினைக்கும்ஏகாதிபத்தியத்தின்சுரண்டலைதற்காலிகமாகபல்வேறுநிதிஆதாரங்களுடனும் நிதி மூலதன அதிகத்தின் மூலமும் மக்களின் போராட்டங்களை திசை திருப்பிக் கொண்டிருக்கலாம்ஆனால்இவற்றுக்கெல்லாம் விடிவு என்பது மார்க்சிய தத்துவத்தின் அடிப்படையில் தான் என்பது கண்கூடாக நாம் கண்டவை தான்.
நிதிமூலதனஆதிக்கத்தால்ஏகாதிபத்தியங்கள் ஏகாதிபத்திய சூழ்நிலை மறுப்பதற்கு மார்க்சியத்தை புரட்டுவதும் ஏகாதிபத்திய சேவை செய்ய கருத்தியல் ரீதியாக பல்வேறு விதமான தாக்குதலை மார்க்சியத்தின் மீது தொடுத்துக் கொண்டுள்ளனர். ஏன் இன்று மார்க்சியம் பேசும் கட்சிகளும் புரட்சி பேசும் மார்க்சிய லெனினிய குழுக்களும் மார்க்சியம் பேசிக் கொண்டுஏதாவதுஒருவகையில்இந்தஏகாதிபதிவாதிகளுக்கு சேவகம் செய்ய நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். இச்சூழலில் மார்க்சிய லெனினிய கல்வியானது புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பது நம் கண் முன் உள்ள உண்மைதானே.
இன்றைய உலக மயமாக்கல் உலகே ஒரே குடையின் கீழ் சுருங்கியுள்ள நிலையில் கருத்து ஊடுருவல் என்பது ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு கடத்தப் படுவதும் ஏகாதிபத்திய சிந்தனைகளை மூன்றாம் உலக நாடுகள் மீது திணிப்பதை தவிர்க்க தடுக்க முடியாதவையே அதனை அறிந்து அதன் தவறுகளை விமர்ச்சிக்கும் அளவு வளர்ச்சி மட்டுமே ஒரு தத்துவ தலைமைக்கு அழகு அவையின்றி அரசியல் ஓட்டையாண்டிகளாகி போனவர்கள் இதனை எதிர்த்து போராட திறன் அற்றவர்களே.
இந்திய சமூகத்தில் மேலாதிக்கம் செய்யும் கலாச்சாரம் ஏகாதிபத்திய- நிலவுடமை கலாச்சாரமாகும்.இன்றைய நிலையில் இருவேறு ஏகாதிபத்திய கலாச்சாரம் இந்திய மக்களை ஆட்டிப் படைக்கிறது.
அமெரிக்க உள்ளிட்ட மேற்கு ஏகாதிபத்திய நாடுகள் தம் கலாச்சாரத்தை எப்படி பரப்புகின்றது என்று பார்ப்போம்.
(1) தனி நபர்வாதத்தை தூக்கி நிறுத்துகிறது.
(2)வரைமுறையற்ற ஆபாசத்தை பர்ப்புகிறது.
(3)விரக்தியைதூண்டும் நடவடிக்கைகள்.
(4)உதிரிதனமாக வன்முறையை பரப்புகிறது.
(5)அறிவியல் கலந்த மூட நம்பிக்கையை பரப்புவது.
(6) மேட்டிமைதனத்தை பரப்புதல்.
(7)புதிய இடதுகள் என்ற போர்வையில் மார்க்சிய லெனினியத்தைச் சிதைத்தல். இதைதான் படத்தில் குறிபிட்டுள்ளேன்.
மார்க்சிய லெனினியத்தை திரித்து, இங்குள்ள பண்டைய இந்திய இதிகாசங்களுடன் இன்றைய அறிவியலையும், தொழிற்நுட்ப வளர்ச்சியை (இன்றைய அதி நவீன) மார்க்சிய வழியில் வளர்தெடுக்காமல் மார்க்சியத்தை திரிப்பது இவர்களின் வேலையாக உள்ளது. அதாவது புரட்சிகர உள்ளடகமின்றி புரட்சி வார்த்தைகளை பயன்படுத்துதல்;புரட்சிகரஉள்ளடக்கத்திலிருந்தே மார்க்சியத்தை பிரித்தல்.
இவ்வாறு பல்வேறு வடிவங்களில் ஏகாதிபத்தியம் இந்தச் சமூகத்தின் மீது தாக்குதல்களைதொடுத்து கொண்டுள்ளது, அதனை எதிர் கொள்ள திரன் அற்று அதில் சமரசமோ அல்லது சீரழிவுக்கோ இட்டு செல்கிறது இதிலிருந்து மாறுபட்டு நிற்க்கும் அந்தச் சொற்பர்கள் இங்கே பிரதிபலிப்பதில்லை அல்லது அவர்களின் பங்களிப்பு கணக்கில் கொள்ளப்படுவதே இல்லை....
NGOகளின் பணி
ஏகாதிபத்தியங்களும், ஃபோர்டு பவுண்டேஷன்களும், கிருத்துவ திருச்சபைகளும், பின்நவீனத்துவ பின்புலமும் கொண்ட தலித் இயக்கங்களின் வரலாறு ஒரு கிரைம் த்ரில்லர் கதைக்கு ஒப்பானதாகும்.
ஃபோர்டு பவுண்டேசனும் - தலித்தியமும் ஓர் அங்கமாக புரிதலுக்காக:- அமெரிக்காவின் மாபெரும் கார்ப்பரேட் நிறுவனமான ஃபோர்டு மோட்டார்ஸ் ‘சமூக சேவைக்கென'தொடங்கிய தன்னார்வத் தொண்டு நிறுவனம்தான் ஃபோர்டு பவுண்டேசன். இது முதன் முதலாக கால்பதித்த வெளிநாடு இந்தியாதான். 1950களின் தொடக்கத்தில் இவ்வாறு இந்தியாவுக்குவந்தபோதுபவுண்டேசனின் தலைவர் பால்ஹர்ப்மேன் ‘சீனாவை இழந்து விட்டோம். இந்தியாவை இழக்கமாட்டோம்'எனவெளிப்படையாக அறிவித்தார்.
அப்போது சீனா கம்யூனிச நாடாக மாறியிருந்தது. இந்தியாவில் வீரம் செரிந்த தெலுங்கானப் போராட்டம் நசுக்கப்பட்டிருந்தாலும் கம்யூனிசம் வளருவதற்கானகூறுகள்நிறைந்திருந்தது. இந்தியாவின் சமூகச் சூழல்களை ஆய்வு செய்த பவுண்டேசன் தலித்துகள்,பெண்கள்,பழங்குடியினங்கள் ஆகிய பிரிவினரிடையே கம்யூனிசம் எளிதாக காலூன்றும் என அனுமானித்தது. ஆளும் வர்க்கத்தை தூக்கியெறியும் கம்யூனிசத்துக்கு மாறாக, இவர்களிடையே ஆளும் வர்க்கத்துக்குசேவைபுரியும் சீர்த்திருத்த அரசியலையும்,அதற்கானஇயக்கங்களையும் கொண்டு சேர்க்க முடிவு செய்தது.
இதற்காக ஆளும் வர்க்கத்துக்கு சேவை செய்யும் அறிவுஜீவிகளை உருவாக்கும்பணிமுதன்மையாக்கப்பட்டது. இந்தியப் பல்கலைகழகங்கள் அமெரிக்கப் பல்கலைகழகங்களோடு இணைக்கப்பட்டன. ஃபோர்டு பவுண்டேசனின் தயவில் ஏராளமான இந்திய மாணவர்கள் அமெரிக்கப் பல்கலைக் கழகங்களுக்கு படிக்க அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களில் பலர் தலித் மாணவர்களாவர். வேறு வழியில்லாத இவர்கள் இந்த உதவிகளை ஏற்றுக் கொண்டனர் என்று அருந்ததிராய் எழுதுகிறார். இம்மாணவர்களில் பலரும் பின்பு எவாஞ்சலிக்கல்திருச்சபை உதவியால் முன்னிறுத்தப்பட்ட தலித் அரசியலின், பின் நவீனத்துவ அரசியலின் மையமாக மாறினர்.1980-களில் பவுண்டேசன் தனது பணியை மாற்றியமைத்துக் கொண்டது. நேரடியாக இல்லாமல் தொண்டு நிறுவனங்களை நிறுவி அவைகளுக்கு ஏராளமாக நிதியுதவிகள் செய்தது. தொண்டு நிறுவனங்கள் தங்களை தனி அமைப்புகளாக, அரசுசாரா நிறுவனங்களாக காட்டிக் கொண்டன. இது குறித்து இஜாஸ் அகமது தனது 'ஆன் போஸ்ட்மார்டனிசம்' என்ற நூலில்‘இந்தியாவில் பின்நவீனத்துவம் சமூகஇயக்கங்கள், சிவில் சொஸைட்டி அமைப்புகள், பணம் பெறும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகிய வடிவங்களில் இயங்கியது. அரசியல் என்ற சொல்லுக்குப் பதிலாக சமூகம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. பெரும்பாலும் இவை அனைத்தும் தங்களை அரசு சாரா நிறுவனங்கள் என அழைத்துக் கொண்டன. ஃபோர்டு பவுண்டேசன் உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களிடம் இவை நிதி உதவிகள் பெற்றன' எனத் தெளிவாக கூறுகிறார்.
அடுத்து ஃபோர்டு பவுண்டேசனுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள ஓர் அமைப்பு தமிழ்நாடு தியாலாஜிகல் செமினரி (Tamilnadu Theological Seminary TTS) ஆகும். இந்த எவாஞ்சலிக்கல் கிருத்துவ நிறுவனம், தலித் ஆதார மையங்களை உருவாக்கியது. 1989-ல் மதுரையில் அரசரடியில் ஒரு தலித் ஆதார மையம் உருவாக்கப்பட்டது
தலித் ஆதார மையத்திற்கு பவுண்டேசன்வாரிவழங்கும் நிதியினை அறிந்து கொள்ள Ford Foundation என இணையத்தில் தொடர்பு கொண்டால் போதும். முடிவில்லா நீண்ட பட்டியல் படையெடுத்து நம்மை மிரட்டும். இப்படி கிருத்துவதிருச்சபையால்உருவாக்கப்பட்ட ஒரு போலி புரட்சிகர இயக்கம்தான் பாதர் சேவியர் அருள்ராஜ் நடத்திய உழைக்கும் மக்கள் இயக்கமாகும். என்.ஜி.ஒவான இந்த அமைப்பு தன்னை ஒரு அரசியல் கட்சி போலக் காட்டிக் கொண்டது.
தலித் ஆதாரமையத்தைப் போலவே World Vision என்ற N.G.O. அமைப்பும் தலித் மக்களை குறி வைத்து செயல்பட்டு வருகிறது. இது அமெரிக்க உளவுத்துறை C.I.A-வுக்காகவியத்நாமில் செயல்பட்டதை தாமே ஒத்துக் கொண்டுள்ளது. C.I.A-வுக்கும் ஃபோர்டு பவுண்டேசனுக்கும் உள்ள நெருங்கிய உறவை ஜேம்ஸ் பெட்ராஸ் என்ற அமெரிக்க எழுத்தாளர் ஆதாரத்துடன் ஏராளமாக எழுதியுள்ளார்.
மார்க்சியத்தை மறுக்கும் போக்குகளை புரிந்துக் கொள்ள ஒரு முயற்சியே இவை. இன்னும் பின்னர் சிபி
++++++++++++++++++++++++++++++++++++++++
No comments:
Post a Comment