நமது மூதாதையரை தேடி

 மனித குலம் வளர்ந்த கதை

தோழர்களே,

நேற்றைய விவாதம் ஆரிய திராவிட மாயையில் மயங்கி கிடக்கும் முட்டாள்தனத்தை புரிந்துக் கொள்ள முடியவில்லை மேலும் தாங்கள் பகுத்தறிவாதிகள் என்பவர்கள் எங்கே தங்களின் அறிவை அடகு வைத்து விட்டனர்?
சற்று சிந்தியுங்கள்...

இனங்களின் தோற்றம் பற்றி எழுதிய சார்லஸ் டார்வின் மனித குல வரலாறு பற்றி வருங்காலத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் தனது முடிவுகளை மேலும் தெளிவுபடுத்தும் என்று கூறினார். ஆனால் டார்வின் மனிதன் குரங்கிலிருந்து உதித்தான் எனக் கூறியதாக அவசொல் பெற்றார். பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டை தவறாக புரிந்து கொள்பவர்களே இதுபோல் அவர் மீது குற்றம் சுமத்துகின்றனர்.

நாம் குரங்கிலிருந்து பிறந்தவர்கள் அல்ல! குரங்கு நம் மூதாதையர் என்றால் ஏன் இன்னும் குரங்குகள் குரங்குகளாக இருக்கின்றன?

அதாவது நாமும் நம் கொள்ளுப்பாட்டனும் எவ்வாறு சமகாலத்துவராக இருக்க முடியும்?

குரங்குக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு தாத்தா பேரன் உறவு அல்ல பங்காளி உறவு.

அதாவது சித்தப்பா மகன் பெரியப்பா மகன் உறவினாகும் ஒரே வம்சவ விருத்தியில் பல கிளைகளில் இரு கிளைகள் குரங்குகளும் ஆதி மனிதர்களும் ஆகும் .

மனிதர், ஆதி மனிதர், மனிதக் குரங்குகள் மற்றும் இதர வாளில்லா குரங்குகள் இவற்றை ஹோமினாய்டியா (Hominoidea)என்ற பேரினத்தை சேர்ந்தவை. இன்னும் சில ஆய்வுகள் சில வேறுபட்ட கருத்துக்களை முன் வைத்துள்ளது.? இவைநான் சுகி ஜெய்கரன் அவர்களின் மூதாதையரை தேடிய நூலிலின் அடிப்படையில் பேசியுள்ளேன்.


ஒரே இனத்தை சேர்ந்தவர்கள் என்ற அடிப்படையில் ஒரே இனத்தின் எந்த ஆணும் பெண்ணும் கூடி இனப்பெருக்கம் செய்ய முடியும். இயற்கையின் இந்த நியதிப்படி அனைத்து மனிதர்களும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள். அறிவியல் ஆய்வுகள் மனிதர்கள் விலங்கினத்தின் ஒரு வகை ஆனால் சில சிறப்பம்சங்கள் தனி வகை என்பதை உணர்த்துகின்றன.

30 லிருந்து 20 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பணியுக காலம் பழைய கற்கால மனித வளர்ச்சியும் காலம் ஆகும். இவ்வாறு மனிதனின் வளர்ச்சி போக்கை அறியும் நாம் மனிதன் மூலம் பற்றி பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும் அவன் விலங்கினத்தை சேர்ந்தவன் என்பதில் ஐயமில்லை. அவன் ஹோமோ செபியன் ( Homo sapien) எனும் இனத்தை சார்ந்தவன்.
மூதாதையரை தேடி- பூமியின் வரலாறு பூமியின் வயது 700 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதாக இருந்தாலும் சுமார் 450 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தான் பல புவியியல் நிகழ்வுகள் கோர்வையாக காணலாம். உலகம் ஓர் எரியும் பந்தாக கோடிக்கணக்கான ஆண்டுகள் இருந்தது அக்காலத்தில் பூமி உள்ளிருந்து பல துண்டுகள் வெடித்து மேலே வந்து உலகத்தில் வெப்பத்தை மேலும் அதிகரிக்க செய்தது இவ்வாறு மேலே வரும் துண்டுகள் மலைகளாயின.இவ்வாறு பூமியின் வரலாறை தேடும் நாம் மனித குல வரலாறு என்பது மிக அருகாமையில் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் .
சூரிய மண்டலத்தில் பூமியானது 700 கோடிஆண்டுகளுக்கு முன் உருவாகி இருந்தாலும் பூமியின் உருவாக்கம் என்பது 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னோர் தான் தோன்றியதாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். தீகோளமான சூரிய மண்டலத்தில் பல்வேறு இயற்கை சூழல்கள் அதில் குறிப்பாக தொடர் மழை மீண்டும் நீர் ஆவியாக மாறி மேகக்கூட்டதிற்கு சென்று பெருமழை இடை யராது பெய்த மழையால் பூமி குளிர்ந்தது, நீர்நிலைகள் பெருகின பின்னர் சூரியன் காற்று நீர்நிலை போன்ற நிலநடுக்கம் எரிமலை கண்டங்கள் பெயர்ச்சி மறுபடியும் மலைகள் உருவாதல். இவ்வாறாக என்ற பூமியின் பரப்பு மலைகள் மடுக்கள் குளங்கள் குட்டைகள் ஓடைகள் ஆறுகள் பரந்த கடல்கள் பனிபரப்புகள் பாலைவனங்கள் என உருமாறி சுருக்கமாக பூமி உருவானது.
450 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமி தோன்றியிருந்தாலும் இதில் உயிரினங்களின் வளர்ச்சி என்பது சுமார் 250 கோடி ஆண்டுகளுக்கு முன் அஸோயிக் (Azoic) காலகட்டம். 150கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் கடற்பாசி புழு நுங்கு மீன் போன்ற புரோட்டோரோசாசிக்(Proterozoic) காலகட்டம் ஆகும். ஊர்வன இன்னும் பல்வேறு வகையான அதன் மூதாதையர்கள் 60-27 கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றின. மிஸோஸோயிக் (Mesozoic) என அழைக்கப்படும் ஜுராசிக் டைனோசர் காலகட்டமானது 22.5 லிருந்து4 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். மாடு யானையின் முன்னோடி குதிரைகளின் முன்னோடி பன்றி வாழற்ற குரங்குகளின் முன்னோடி மலரும் தாவரங்கள், நாய் ,கரடி போன்ற விலங்குகளின் முன்னோடிகள் தோன்றி மறைந்த காலகட்டமானது 7லிருந்து 2.5 கோடிஆண்டுகளுக்கு முன் பட்டதாகும்.
முதுகெலும்புள்ள பல விலங்குகள் வாழ்ந்த காலம் 0.3 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட காலமாககும். கற்ககால மனிதன் (Pleistocene) காலக்கட்டம் 0.2 லிருந்து 0.3 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டவர்கள்30 லிருந்து 20 லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பணியுக காலம் பழைய கற்கால மனித வளர்ச்சியும் காலம் ஆகும். இவ்வாறு மனிதனின் வளர்ச்சி போக்கை அறியும் நாம் மனிதன் மூலம் பற்றி பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும் அவன் விலங்கினத்தை சேர்ந்தவன் என்பதில் ஐயமில்லை. அவன் ஹோமோ செபியன் ( Homo sapien) எனும் இனத்தை சார்ந்தவன்.





No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்