மார்க்சியத்தை மறுக்கும் பிழைப்புவாதிகளும் மார்க்சிய விரோதிகளும்

 இன்றைய தமிழக சூழலில் சிலர் ஏன் சில புரட்சிகர அமைப்புகளே மார்க்சியத்தை எதிர்த்து கொண்டே தாங்கள் ஏதோ மார்க்சியவாதியாக நடித்துக் கொண்டிருப்பது எப்படி அறிந்து கொள்ள இந்தப் பதிவு அவர்களின் நிலையை ஆய்வு செய்ய பயன்படும் என்று நினைக்கிறேன்....

ஒடுக்கும் வர்க்கம், ஒடுக்கபடும் மக்களுக்காக போராடிய கம்யூனிச இயகங்களை அரசியல் ரீதியாக நேர் கொள்ள முடியவில்லை, இதனை நிறைவு செய்ய வந்தவர்களே ஏகாதிபத்திய காவலர்களாகி போன ட்ராட்ஸ்கியவாதிகள்  இப்படி மார்க்சிய பெயரில் ஏமாற்றி திரியும் ஒரு பெருங்கூட்டமுள்ளது.
இவர்களின் பணி, “இடதுசாரி அறிவாளிகளை களத்தில் தோற்கடிப்பதைவிட அவர்களின் இலட்சியத்தில் இருந்தும், அமைப்பில் இருந்தும் விலக்கி இழுத்து செல்வதுதான் இந்த ஏகாதிபத்திய ஏவலர்களின் நோக்கம்.
இரண்டு உலக போரின் பின் பல நாடுகள் சோசலிச முகாமை நோக்கி சென்று கொண்டிருந்தது, அமெரிக்காவின் உள்ளேயும் பெரும் நிறுவனங்களால் சக்கையாகப் பிழியப் பட்ட அனைத்து தொழிலாளர்களிடமும் முதலாளித்துவத்துக்கு எதிரான தொழிற்சங்கங்களுக்கு ஆதரவு பெருகி கொண்டிருந்தது. இவை அமெரிக்க ஏகாதிபத்தியதிற்கு அச்சுறுத்தலாக இருக்கவே, கம்யூனிச விரோத கோட்பாடுகளை உருவாக்கி உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதோடு மட்டும் அல்லாமல் தங்களது பல்கலைக்கழகங்கள் மூலம் கம்யூனிசத்துக்கு மாற்றான தத்துவத்தை உருவாக்க முனைந்தன, அங்கிருந்தே உலக நாடுகளுக்கு பல அறிவுஜீவிகளை உற்பத்தி செய்து உலகை தன் சுரண்டலுக்கு ஏதுவாக வைத்து கொள்ள கொணர்ந்த தத்துவமே மார்க்சியத்தையே கேள்வி கேட்கும் புதிய வகை தத்துவங்கள், இவை அமெரிக்காவில் இருந்து பிரான்ஸில் புகுந்து ”தெரிதோ,பூக்கோ” பெயர் தாங்கி சற்று வளர்ச்சி பெற்று இலங்கை மூலம் இந்தியாவை அடைந்தது.  இன்றோ ஏகாதிபத்திய ஏவலர்கள் மார்க்சிய போர்வையில் தமிழக பல மா-லெ அமைப்புகளில் ஊடுருவி உள்ளதை தொடர் நிகழ்வுகள் நிருபித்து கொண்டுள்ளன, ஏகாதிபத்திய கைகூலிகளுடன் பல புரட்சிகர அமைப்புகள் சேர்ந்து நடத்தும் நிகழ்ச்சி நிரல் என்ன சொல்கின்றது??? .
இதோ லெனின் என்ன சொல்கிறார்...
சோசலிச புரட்சி என்றால் என்ன அது எங்கே நடந்தது என்று? ஒரு அறிவார்ந்த கேள்வியை கேட்டிருந்தார் தனக்குதானே மார்க்சிய அறிவாளியாகவும் எந்த மார்க்சிய நூலையும் படிக்காமலே சுயம்புவாக மார்க்சியத்தை போதிக்கும் இவரை பற்றி இவரின் நோக்கம் பற்றி எழுதுவதை விட; இவர் மார்க்சியமே இல்லாதவற்றை மார்க்சியம் என்று கடை விரித்துள்ளார் என்பதை... லெனின் நூலின் அடிப்படையில் விளக்க சிறிய முயற்சி ....இவர்களை அம்பலப்படுத்தி அப்புறப்படுத்தி விட்டாலும் இவர்கள் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குழப்பம் பலரை ஆட்கொண்டுள்ளது அதனை புரிந்தே நாம் செயலாற்ற வேண்டியுள்ளது.

1928-இல் கூடிய கம்யூனிச அகிலத்தின் ஆறாம் மாநாடு ”இந்தியாவில் பொதுவுடைமைக் கட்சி உறுப்பினர்கள் காங்கிரசுக் கட்சியிலிருந்து விலகி, எல்லாப் பொதுவுடைமைக் குழுக்களும் தனிநபர்களும் இணைந்து ஒன்றுபட்ட சட்டவிரோதமான கட்சியைக் கட்ட வேண்டும்” என்று அறிக்கை நிறைவேற்றியது. ஆனால் அதை அப்போதைய சி.பி.ஐ நிராகரித்து விட்டது. 1930 இல் மீண்டும் அகிலத்தின் அதிகார பூர்வ பத்திரிக்கை இந்தியாவுக்கான விமர்சனமும் செயல்திட்டமும் எழுதியது. இதை கல்கத்தா மையம் ஏற்ற போதும் டாங்கே தலைமையிலான பம்பாய் மையம் ஏற்கமறுத்து, காந்தி – காங்கிரசு தலைமையிலான இயக்கங்ளில் இணைந்து செயல்பட்டது.

ரணதிவே(வலது) மற்றும் A.K.கோபாலன்
ரணதிவே(வலது) மற்றும் A.K.கோபாலன்

இந்தியாவில் குடியேறி செயல்பட்டு வந்த பிரிட்டன் பொதுவுடைமையாளர்களும், கல்கத்தா மையமும் அகிலத்துக்கு அனுப்பிய அறிக்கையின் அடிப்படையில் 1932-இல் இ.பொ.க.வின் தவறுகளைக் கடுமையாக விமர்சித்து பிரிட்டன், சீனா, ஜெர்மனிப் பொதுவுடைமைக் கட்சிகள் ஒரு பகிரங்கக் கடிதம் அனுப்பின. 1933-இல் மீண்டும் சீனப் பொதுவுடைமைக் கட்சி, இ.பொ.கவின் அமைப்பு – நடைமுறைகள் மீது விமர்சன அறிக்கை அனுப்பியது.

வெளியிலிருந்து வந்த இத்தகைய இடையறாத முயற்சிகளின் விளைவாக 1933-இல் கூடிய இ.பொ.க வின் இரகசிய மாநாடு, பொதுவுடைமை அகிலத்தில் இணைவது என்றும் அதன் வழிகாட்டுதல்களை ஏற்பது என்றும் முடிவு செய்தது. டாங்கே தலைமையிலான காந்திய – காங்கிரசுக் கம்யூனிஸ்டுத் திட்டத்துக்கு மாற்றாக ஒரு புதிய புரட்சிகர அறைகூவலை அந்த மாநாடு அமைத்த மத்தியக் குழு விடுத்தது.

ஆனால், ஆறாவது மாதமே கட்சியையும் அதன் துணை அமைப்புகளையும் ஏகாதிபத்திய அரசு தடை செய்தது. டாங்கே போன்ற ”மண்ணுக்கேற்ற மார்க்சியவாதிகள்” எல்லாம் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமையில் காங்கிரசு சோசலிசக் கட்சி என்கிற அமைப்பை காங்கிரசுக்குள்ளாகவே நிறுவி, அதில் இணைந்தனர். சிங்காரவேலருக்குப் பிறகு தமிழ்நாட்டில் பொதுவுடைமை இயக்கத்தின் பொறுப்பேற்ற ஜீவா தலைமையிலான மண்ணுக்கேற்ற மார்க்சியவாதிகளும் அவர்களைப் பின்பற்றினர்.

மார்க்சியமோ, தனிச்சிறப்பான கூறுகளுக்கும், பருண்மையான நிலைமைகளுக்கும் ஒருங்கிணைந்த வழியையையும் தீர்வையும் கோருகிறது. அதற்கு மாறாக, சந்தர்ப்பவாத அரசியலையே நடைமுறையாகக் கொண்டவர்கள் வெவ்வேறு பிரச்சினைக்கு வெவ்வேறு தீர்வுகளைக் கூறும் தத்துவங்களைக் கலவையாக்கி, இதுதான் “மண்ணுக்கேற்ப மார்க்சியம்” என்கின்றனர். இந்த வகையில் தமிழின, தலித்தியவாதிகள் மட்டுமல்ல, இந்துமதவெறி பாசிச- பார்ப்பன சனாதனிகள் கூட “மண்ணுக்கேற்ற மார்க்சியம்” பேசமுடியும் என்பதுதான் சமீபத்திய முன்னேற்றம்!.


 

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்