வரலாற்றுப்‌ போக்கில்‌ தென்னகச்‌ சமூகம்‌ 1 சோழர்‌ காலம்‌ (850 - 1300) . நொபொரு கராஷிமா

பத்தொன்பதாம்‌  நூற்றாண்டின்பிற்பகுதியில்காரல்மார்க்சு, என்றி மெயின் ஆகியோர்எதிரான கருத்துக்களை வழங்கினர்‌. இவைஇந்தியாவில்தேக்க நிலை உருவாவதற்கு தலையாய காரணம்என்றனர்‌. நீண்ட காலமாக, பல ஆய்வாளர்கள்ஏற்றுப்பயன்படுத்தி வரும்இக்கருத்தோட்டத்தில்இரு மையக்கருத்துக்கள்உள்ளன :

 (1) கிராமங்களில்நிலவிய சமூக நில உடைமை ; 

(2)பொருளாதார மற்றும்சமூகத்தன்மை அல்லது கிராமத்தன்னிறைவு. உழவார்களோடு பிற தொழில்வகுப்பார்கிராமத்தில்தங்களை இணைத்துக்கொண்டதும்அவர்களிடம்இருந்த தொழில்பகிர்வும்கிராமத்தன்னிறைவை ஏற்படுத்தித்தந்தனஇவற்றில்முதல்கருத்தை பேடன்பாவெல்மறுக்கின்றார்‌.

இவரால்வெளியிடப்பட்ட ஆங்கிலேய இந்தியாவின்நிலவுடைமை முறைகள்பற்றிய சிறந்த நூலில்அதற்கானகாரணங்களைத்தருகின்றார்‌. இந்தியாவில்நீண்ட காலமாகநிலவி வரும்தனியார்நில உடைமையைச்சுட்டிக்காட்டிஅவற்றின்வரலாற்று முக்கியத்துவத்தையும்வலியுறுத்தினார்‌. இவரது கருத்துக்களை நாம்முழுமையாக ஏற்கஇயலாது. எனினும்சமூக நில உடைமை ,;இந்தியக்கிராமங்களில் மிகப்  பழங்காலத்திலிருந்து பத்தொன்பதாம்நூற்றாண்டு வரை நிலவி வந்தது என்ற கருத்து இவர்திரட்டிய சான்றுகளால்பொய்ப்பிக்கப்பட்டுவிட்டது.

இரண்டாவது கருத்தான,கிராமத்தன்னிறைவு பற்றிச்சில திறனாய்வுகளே இதுகாறும்வெளிவந்துள்ளன.இவற்றுள் உருப்படியான முதல்திறனாய்வு சமூக மானிடவியலரால்தரப்பட்டது. வட இந்தியக்கிராமங்களில்‌ “ஜஜ்மானியஎன்ற முறை இருந்ததை 1930களில்‌ 14.11. வைசர்என்பவர்கண்டறிந்தார்‌. இது சாதிப்பாகுபாட்டினை அடிப்படையாகக்கொண்டு,உள்ளூர்மக்கள்சமூக, பொருளாதாரக்கூட்டுச்சார்புத்தன்மைபெறும்முறையாகும்‌. கிராம எல்லைகளைக்கடந்தும்இம்முறைஇயங்கியது.1? இந்தியாவின்பல்வேறு கிராமங்களில்‌,1950களில்நடத்தப்பெற்ற கள ஆய்வுகள்பல ஊர்கள்இந்தப்பொருளாதார சமூகத்தன்னிறைவு பெறுவதற்குத்தேவையானஅனைத்து சாதிப்பிரிவுகளையும்பெற்றிருக்கவில்லை என்பதைத்தெளிவாக்கியது. பல ஊர்கள்அடங்கிய வட்டாரங்கள்அளவிலேயே பல சாதிகளிடையே தொழில்பகிர்வு நிகழமுடிந்தது. அதாவது ஒவ்வொரு கிராமமும்ஒரு குட்டிக்குடியரசு என்ற நம்பிக்கை பொய்த்துப்போனது1960களில்அலிகார்மற்றும்தில்வியைச்சார்ந்த முகலாயவரலாற்று ஆய்வாளர்களால், இரண்டாவது திறனாய்வுஉருவானது. உரைவிடப்பெரிய ஒரு நிலப்பரப்பின்முக்கியத்துவம்இங்கு வலியுறுத்தப்பட்டது.இப்பெரு நிலப்பரப்பு ஏறக்குறைய ஒரு தயாதிக்கூட்டத்தின்நிலப்பரப்பாகும்.2! மேற்கண்டகருத்தையே பர்டன்ஸ்டெயின்வலியுறுத்தினார். இவர்பண்டைய தென்னிந்திய உழவர்சமூக அமைப்பின்தன்மைகளைப்புரிந்து கொள்ள முயற்சிகள்மேற்கொண்டாலும்‌”கிராமசமூகம்பற்றிய முழுமையான ஓராய்வை மேற்கொள்ளவில்லை.

பல்லவசோழர்தமிழ்க்கல்வெட்டுக்களின்அடிப்படையில்கிருஷ்ணசுவாமி அய்யங்கார்முதலிய பலர்கிராம சமூகம்குறித்து விரிவான ஆய்வுகள்மேற்கொண்டனர். எனினும்,இவ்வாய்வுகள்தேக்கநிலை சமூகக்கொள்கையினைக்குறித்துஓத்த கருத்தினையோ எதிர்ப்பையோ தெரிவிக்க முற்படவில்லை. மாறாக பரம்பரையாக வரும்சமூக அமைப்பினைப்புகழ்ந்திடும்நோக்கில்பிரமதேய ௪ளர்களில்குடியாட்சி முறைநிலவியது என நிறுவ முற்பட்டனர்.

ஆகவே, மேற்குறிப்பிட்ட இரண்டு கருத்துக்களும்பழங்காலத்தென்னிந்தியக்கிராம நிலமைகளுக்குப்பொருந்திஇருந்தனவா என்பதைக்காண இதுவரை எந்த ஆய்வும்நடத்தப்பெறவில்லை. இவ்விரு கருத்துக்களில்இரண்டாவதுகருத்தான பொருளாதார சமூகத்தன்னாட்சி அல்லது தன்னிறைவு பெற்ற கிராமங்கள்பற்றிய ஆய்வு சோழர்காலக்கல்வெட்டுக்களின்அடிப்படையில்இங்கு மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு தஞ்சைப்பெரிய கோயிலின்இரண்டு பெரியகல்வெட்டுக்களும்(தெ. 11, எண்கள்: 4, 5)24, கங்கை கொண்டசோழபுரத்துக்கோயிலின்ஒரு கல்வெட்டும்(தெக. 11/, எண்:524)அடிப்படை ஆதாரமாகும்.இம்மூன்று கல்வெட்டுக்களும்நீண்ட கல்வெட்டுக்கள். மூன்றாவது மிகவும்சிதைந்துள்ளது.

அரச ஆணையுடன்தொடங்கும்தஞ்சாவூர்க்கல்வெட்டுக்கள்முதலாம்இராஜராஜனின்29வது ஆட்சியாண்டில்வெளியிடப்பட்டவை. இவ்வரசன்தஞ்சைக்கோயிலுக்கு தேவதானமாகவழங்கிய ஊர்களிலிருந்து வசூலிக்கப்பட வேண்டிய நிலவருவாயான காணிக்கடன்குறித்த விவரங்களைத்தெரிவிக்கும்இக்கல்வெட்டுக்களைக்கோயில்சுவர்களில்பொறிக்கஆணையிட்டதை இவை பதிவு செய்கின்றன. இவற்றில்

கீழ்க்கண்ட விவரங்கள்தரப்பட்டுள்ளன: () உளரின்பரப்பளவு;(  இறையிலியாகக்கழிக்கப்பட வேண்டியநிலங்களின்விவரங்கள்மற்றும்அவற்றின்பரப்பளவு :()நிலவரி செலுத்த வேண்டி௰ எஞ்சிய பகுதிகளின்பரப்பளவு; ()நிலவரியாகச்செலுத்தவேண்டிய நெல்அல்லது பணத்தின்அளவு. இவ்வரசாணையைத்தொடர்ந்து சோழ மண்டலத்திலிருந்து கொடையாக அளிக்கப்பட்ட 40 ஊர்கள்பற்றிய விவரங்கள்மேற்குறிப்பிட்ட வரிசையில்தரப்பட்டுள்ளன . கங்கைகொண்ட சோழமபுரத்துக்கல்வெட்டு (இனிமேல். சோழபுரம்ஏழு பகுதிகளைக்கொண்டி ருக்கலாம்‌. ஒவ்வொரு பகுதியும்வீரராஜேந்திரனின்மெய்க்கீர்த்தியடன்தொடங்கு - கிறது. இவனாலும்இவனது முன்னோர்களாலும்அளிக்கப்பட்ட தேவதான ௫ஊஎர்களைப்பற்றி விவரிக்கிறது. கல்வெட்டு மிகவும்சிதைந்துள்ளதால்எத்தனை ர்கள்இக்கல்வெட்டில்விவரிக்கப்பட்டுள்ளன என்பதை அறிய இயலவில்லை. மேலும்சில கொடைகள்எவ்விதத்தில்கங்கை கொண்ட சோழபுரத்துக்கோயிலுடன்தொடர்புடையவை என்பதையும்தெரிந்து கொள்ள இயலவில்லை. எனினும். சோழபுரத்தில்குறிப்பிடப்பட்டுள்ள ஊர்கள்பற்றிய விவரங்கள்யாவும்தஞ்சைக்கல்வெட்டு வரிசையிலேயே உள்ளன. எனினும். சோழபுரத்தில்பலவகை இறையிலி நிலங்களின்பரப்பளவுகள்‌, பயிர்களின்தன்மைக்கு ஏற்ப இறை நிலங்களை வகைப்படுத்திமை ஆகியவை விளக்கமாகத்தரப்பட்டுள்ளன. ஊரின்மொத்தப்பரப்பளவிலிருந்து கழிக்கப்படவேண்டிய இறையிலி நிலங்களைக்குறிப்பிடும்பகுதியில்தான்கிராமப்பொருளாதார மற்றும்சமூகத்தன்னிறைவு பற்றிய முக்கிய விவரங்கள்அடங்கியுள்ளன . தஞ்சைக்கல்வெட்டு அரச ஆணையில்கீழ்க்கண்ட நிலங்கள்தரப்பட்டுள்ளன: ௨ர்நத்தம்‌ (ஊராரின்குடியிருப்புப்பகுதி,?? ஸ்ரீகோயில்கள்‌, குளங்கள்‌, ஊளடறுத்துப்போன வாய்க்கால்கள்‌, பறைச்சேசரி, கம்மாணச்சேரி மற்றும்சுடுகாடு. ஆயினும்அரச ஆணையில்தரப்பட்டுள்ள அனைத்து இறையிலி நிலங்களும்ஓவ்வொரு ௫ளரிலும்உள்ளதாகச்சொல்லப்படும்இறையிலி நிலங்களும்மாறுபடுகின்றன . அதாவது அரசாணையில்தரப்படும்எல்லாவகை இறையிலி நிலங்களும்தனித்தனி ஊர்களில்சொல்லப்படும்இறையிலி நிலங்களில்காணப்படவில்லை. மேலும்பல கிராமப்பதிவுகளில்வேறு சில வகையான நிலங்களைப்பற்றிய செய்திகள்தரப்பட்டுள்ளன. எல்லா ஊர்களிலும்விவரிக்கப்பட்ட இறையிலி நில விவரங்கள்குறித்துக்கீழ்வரும்அட்டவணையின்துணையோடு உன்றிப்பார்க்கலாம்‌. இவ்அட்டவணையில்தஞ்சைக்கல்வெட்டு ஊர்களில்‌ 40இல்ஒரு 7 ஊர்கள்தவிர்த்து எஞ்சிய 33 ஊர்களும். சோழபுரத்தில்‌ 7 ஊர்களும்சேர்த்து 40 ஊர்கள்பற்றிய விவரங்கள்பகுத்துத்தரபட்டுள்ளன

ஊர்வகைகளும்பரப்பளவும்

அரச ஆணையில்‌ “ஊர்‌:என்ற பொதுச்சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும்தஞ்சைக்கல்வெட்டில்கூறப்பட்டுள்ள 33 ஊர்களில்மூன்று களர்கள்‌ (எண்கள்‌ : 12, 33,40) 'நகரம்‌' என்ற வகையாகும்‌. வணிக களர்களே நகரம்‌:எனப்பட்டன. இவற்றுடன்ஐந்து ஊர்கள்‌ (34 - 38) ஒருநகரத்துடன்‌ (33) இணைக்கப்பட்டதாகச்சொல்லப்பட்டுள்ளது.

எனவே, இவ்வைந்து ஊர்களையும்நகரங்களாகக்கொள்ளலாம்‌. . சோழபுரத்தில்கூறப்பட்டுள்ள 7 ௪ளர்களில்'நகரம்‌' எவையும்இல்லை. மேலே குறிக்கப்பட்டுள்ளநகரங்களைத்தவிர தஞ்சைக்கல்வெட்டில்இரண்டு வகைஊர்கள்சொல்லப்பட்டூுள்ளன. அவற்றில்ஒன்று (39)சாலாபோகமாகும்‌.இஅறச்சாலைகளுக்கு கொடையாகத்தரப்பட்ட ௫௨ஊர்‌) ; மற்றொன்று (16) பள்ளிச்சந்த (பெளத்தஅல்லது சமணப்பள்ளிகளுக்கு மானியமாக அளிக்கப்பட்டஊர்‌) வகையிலிருந்து விடுவிக்கப்பட்டதாகும்‌.இவை தவிரஉள்ள பிற ஊர்களின்வகை பற்றிய குறிப்பு இல்லை.எனவேஅவைகளை இயல்பான ஊர்களாகக்கரத வேண்டும்‌.

அதாவது அவை வெள்ளான்வகை எர்களாகும்‌.2” இத்தரவுகள்எவையும்பிரமதேய ஊர்களைக்குறிப்பிடவில்லைஎன்பது இங்கு நோக்கத்தக்கது.

அட்டவணையில்குறிப்பிடப்பட்டுள்ள 40 ஊர்களுள்‌ 37உளர்களுக்குப்பரப்பளவு கிடைக்கிறது. அவற்றின்பகுப்புகீமுள்ள அட்டவணையில்காட்டப்படுகிறது.

அட்டவணை 5

நிலப்பரப்பு(வேலிகளில்‌) ஊர்களின்எண்ணிக்கை

1-10

11-20

21-30

31-40

41-50

51-60

61-70

81-90

111-120

131-140

 

151-160 Ql

மொத்தம்

அட்டவணைப்படி. 100 வேலிகளுக்கும்மேற்பட்டதாகச்சிலளர்கள்விளங்கினாலும்பெரும்பான்மையான எ௭ர்கள்‌ 60வேலிக்கும்குறைவான பரப்பு உடையன என்பது உறுதி.2எனினும்இவற்றுள்ளும்மிகுந்த வேறுபாடுகள்உள்ளன என்பதைக்கவனிக்க வேண்டும்‌. இறையிலி நிலங்களின்பரப்பளவுகளும்பெரிதும்வேறுபட்டுள்ளன .

ஊரிருக்கைப்பகுதிகீழ்க்கண்ட மூன்றுவகை அ௫ளரிருக்கைப்பகுதிகளை அரசஆணை குறிப்பிடுகிறது: ஊர்நத்தம்‌, பறைச்சேரி (பறையர்குடியிருப்புப்பகுதி, கம்மாணச்சேரி (கம்மாளர்குடியிருப்புப்பகுதி). இருப்பினும்தனித்தனி ஊர்களை விவரிக்கையில்வேறுசிலவகைக்குடியிருப்புப்பகுதிகளும்சொல்லப்பட்டுள்ளன .அவையாவன :குடியிருக்கை (குடிகள்வாழும்பகுதி), ஈழச்சேரி(கள்இறக்குவோர்வாழும்பகுதி), தீண்டாச்சேரி (தீண்டத்தகாதவர்என்போர்வாழும்பகுதி), தலைவாய்ச்சேரி (ர்செல்லும்தலைவாய்களைக்கட்டுப்படுத்துவோர்வாழும்பகுதி),தளிச்சேரி (கோயில்குடியிருப்பு). இறுதியில்கூறப்பட்ட மூன்றுகுடியிருப்புப்பகுதிகளும்சில ஊர்களில்மட்டுமேகாணப்படுவதால்அட்டவணையில்பிற என்ற தலைப்பில்வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும்‌ 8ஆம்எண்ணுடைய ஊர்ச்செய்திகள்கல்வெட்டில்சிதைந்துள்ளமையால்அட்டவணையில்சேர்க்கப்படவில்லை. இவ்வூரில்வண்ணாரச்சேரிவெளுப்போர்குடியிருப்பு) இடம்பெற்றுள்ளது. எனவே அரசஆணையில்கூறப்பட்டுள்ள மூன்று குடியிருப்பு வளாகங்களைத்தவிர, பிறவகைக்குடியிருப்புப்பகுதிகள்பலவும்ஊரில்இருந்துள்ளமை தெளிவு.

அரச அணையில்பறைச்சேரி சொல்லப்பட்டிருந்தாலும்தஞ்சையின்‌ 33 ஊர்களில்‌ 19 ஊர்களில்மட்டும்பறைச்சேரிகள்இருந்துள்ளன. ஆனால். சோழபுரத்தில்‌ 7 ஊர்களில்ஒருஊரில்மட்டுமே பறைச்சேரி காணப்படுகிறது. தஞ்சையில்‌ 7ஊளர்களில்மட்டுமே கம்மாணச்சேரி இருந்துள்ளது. .சோழபுரத்தில்ஒரு ஊரில்கூட இது இல்லை. மூன்றில்இருபங்கு ஊர்களில்ஊர்நத்தமும்மற்றவற்றில்ஊரிருக்கையும்காணப்படுகின்றன. தஞ்சைக்கல்வெட்டில்ஒர்ஊரில்‌ (எண்‌:23) இவ்விரு சொற்களும்சேர்க்கப்பட்டு ஊரிருக்கை நத்தம்என்ற சொல்லால்அப்பகுதி குறிக்கப்பட்டுள்ளது. இவ்விரண்டுசொற்களுக்கும்உள்ள முக்கியப்பொருள்மாறுபாடு தெளிவாகஇல்லை”? என்றாலும்இவ்விரு பகுதிகளையும்ஊராரின்குடியிருப்புப்பகுதிகளாகக்கொள்ளலாம்‌. எனினும்‌,தஞ்சையில்இரண்டு ஊர்களில்ஊர்நத்தமோ ஊரிருக்கையோஅல்லது வேறு வகைக்குடியிருப்போ காணப்படவில்லை. இவ்விரண்டு ஊர்களின்பரப்பளவும்மிகக்குறைவானதாக முறையே 6,3 வேலிகள்‌) உள்ளதும்இதற்குக்காரணமாகலாம்‌. மேலும்இவ்வுூர்கள்வேறொரு ஊரின்பிடாகையாக இருக்கலாம்‌. அப்பெரிய ஊரில்ஊர்நத்தம்அல்லது ஊரரிருக்கை இருந்திருக்கலாம்‌. தஞ்சையில்மூன்று ஊர்களில்‌ “குடி யிருக்கை: காணப்படுகிறது. “குடி. என்ற சொல்லுக்கு உமுகுடி,, ஒரு குடும்பம்அல்லது மக்கள்தொகுதி என்று பல வகையில பொருள்கொள்ளலாம்‌. மேற்கூறப்பட்ட மூன்று ௫௪ளர்களில்குடி யிருக்கையுடன்உளர்நத்தமும்பறைச்சேரியும்இருந்துள்ளன. எனவே இவ்விடத்தில்குடி என்பது குத்தகைதாரராக உள்ள உ.முகுடிகளைக்குறிப்பிடலாம்‌. இவர்கள்பொருளாதார, சமூக நிலைகளில்ஊராரிலிருந்தும்பறையர்களிலிருந்தும்வேறானவர்கள்‌. சோதிடர்களுக்கு அளிக்கப்பட்ட 'கணிமுற்றூட்டு' என்ற பகுதி ஊர்க்குடியிருப்பு வளாகத்தில்எப்பகுதியில்இருந்தது? என்று கல்வெட்டில்குறிப்பிடவில்லை. எனினும்௪ளர்ப்பரப்பில்இது உள்ளடங்கியதாக தஞ்சை ஊர்எண்‌ : 1 தெரிவிக்கிறது. இதேபோன்று உர்எண்‌ :2இல்மருத்துவர்களுக்கு அளிக்கப்பட்ட மருத்துவப்பேறு என்ற பகுதி இருந்தது. இதிலிருந்து சோதிடர்‌, மருத்துவர்ஆகியோர்அவவுர்களில்வசித்தனர்‌, என்றாலும்அவர்களுக்கெனத்தனிக்குடியிருப்பு வளாகங்கள்இல்லை என அறியலாம்‌. ஊர்எண்‌ :28இல்பறைச்சேரி உழப்பறையரிருக்கும்கீழைச்சேரி' என்றும்‌ “உழப்ப்றையரிருக்கும்மேலைப்பறைச்சேரி' என்றும்குறிப்பிடப்படுகிறது. அவ்வுரில்வாழ்ந்த பறையர்கள்உழமுதொழிலில்ஈடுபட்டி ருந்தனர்என்பதை இது தெளிவாகக்காட்டுகிறது . நீர்ப்பாசன வசதிகள்தஞ்சை அரச ஆணையில்குளம்‌, வாய்க்கால்என்ற இரு சொற்கள்நீர்ப்பாசன வசதிகளுக்குப்பயன்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும்ஊர்க்குடியிருப்புப்பகுதிகளைப்போன்று இச்சொற்களும்அனைத்து ஊர்களிலும்காணப்படவில்லை. தஞ்சையின்‌ 22 ஊர்களிலும். சோழபுரத்தின்‌ 7 ஊர்களிலும்குளம்இருந்துள்ளது. மேலும்சில ஊர்களில்உள்ள நீர்நிலைகள்சில அடைகளோடு : விவரிக்கப்பட்டுள்ளன: புலத்திற்குளம்‌ (உழு நிலங்களின்நடுவில்உள்ள குளம்‌); கழனிக்குளம்‌ (நெல்பயிரிடப்பட்ட நிலத்தில்உள்ள குளம்‌) ; ஊருணிக்குளம்‌ (ஊருக்குப்பொதுவாக அமைந்த குடிநீர்க்குளம்‌);திருமஞ்சனக்குளம்‌ (புனிதக்குளம்‌); பறைக்குளக்குழி பறையர்கள்பயன்படுத்தும்நீர்க்குட்டை3‌. எனவே தேவையான அடைமொழி இல்லாத 'குளம்‌' வேளாண்மைக்காகவா அல்லது குடி நீருக்காகவா அல்லது பிற வசதிகளுக்கானதா என்பது குறித்துத்தெளிவாகக்கூற முடியாது. எனினும்‌ 23, 28 எண்ணு டைய உஊளர்களில்குடி நீர்க்குளம்மட்டும்குறிப்பிடப்பட்டுள்ளது. உளர்எண்‌ :22இல்ஒரு கோயில்குளம்கூறப்பட்டுள்ள;. இந்த மூன்று ஊர்களிலும்பாசனக்குளங்கள்குறித்து ஒன்றும்சொல்லப்படவில்லையாதலால்அதனைக்காட்ட அட்டவணை யில்முக்கோணக்குறியீடு இடப்பட்டுள்ளது. “கரை: என்ற சொல்‌ 11 ஊர்களில்காணப்படுகிறது. இச்சொல்‌ 9 இடங்களில்‌ “குளம்‌' என்பதையடுத்து வந்துள்ளது. எனவே, இங்குக்கரை என்பது குளக்கரையைக்குறிப்பிடலாம்‌. பிற இடங்களில்இச்சொல்வாய்க்கால்அல்லது ஆற்றின்கரை எனக்கொள்ளலாம்‌. அரச ஆணையில்வாய்க்கால்களைப்பற்றிய சொற்றொடரில்ஊடறுத்துப்போன வாய்க்கால்கள்எனக்குறிப்பிடப்பட்டுள்ளன. எனினும்‌, ளர்கள்பகுதியில்வாய்க்கால்களைக்குறிப்பிடும்பொழுது இவ்வுர்நிலத்தை ஊடறுத்துப்புற ஊர்களுக்கு நீர்பாயப்போன வாய்க்கால்‌: என விவரிக்கப்பட்டுள்ளது. 16ஆம்எண்ணுடைய எஉஊஊரில்‌ “கீழ்நாட்டுக்கு நீர்பாயப்போன: என்று விவரிக்கப்பட்டுள்ளது. மற்றவகை நீர்வழிகள்ஆறு, வாய்‌, ,நீரோடு கால்என்பனவாகும்‌. மூன்று சளர்களில்‌ (தஞ்சை எண்‌ : 16, 26; . சோழபுரம்‌ 212) ஆறு பற்றியும்‌, இரண்டு ஊர்களில்‌ (தஞ்சை எண்கள்‌ 10, 21) வாய்பெரிய வாய்க்கால்‌) பற்றியும்‌, ஒரு ஊரில்‌ (தஞ்சை எண்‌ :27), நீரோடு கால்‌: (சிறிய வாய்க்கால்பற்றியும்கூறப்பட்டுள்ளன. மேற்கூறப்பட்ட இந்த ஆறு அளர்களில்இரண்டில்வாய்க்கால்பற்றிக்கூறப்படவில்லை. இது அட்டவணையில்முக்கோணம்இட்டு காட்டப்பட்டுள்ளது. மீதமுள்ள நான்கு ௪ஊளர்களில்குறைந்தது ஒரு வாய்க்காலாவது உள்ள ஊர்கள்வட்டம்மற்றும்கத்திக்குறியுடன்அட்டவணையில்காட்டப்பட்டுள்ளன. பெரிய பரப்பளவு கொண்ட மற்றொரு ஊரில்கிணறும்தொட்டியும்கூறப்பட்டுள்ளன . கோயில்கள்அரச ஆணையில்இவை பொதுவாக 'ஸரீகோயில்கள்‌' எனக்குறிப்பிடப்பட்டுள்ளன . எனினும்ஒவ்வொரு ஊரிலும்இப்பகுதியில்மூலவர்பற்றியும்விளக்கமாகக்கூறப்பட்டுள்ளது. அவற்றுள்சொல்லப்பட்ட தெய்வங்களாவன : மகாதேவர்‌,பிடாரி, காளாபிடாரி, அய்யன்‌, காடுகசேட்டை. அட்டவணையில்கோயில்கள்என்ற தலைப்பில்அனைத்துக்கோயில்களும்சேர்க்கப்பட்டுள்ளன. கீழே உள்ளபட்டியலில்கோயில்களின்பகுப்பு தரப்பட்டுள்ளது.30

அட்டவணை 6

கோயில்ஊர்களின்எண்ணிக்கை

ஸ்ரீ கோயில்‌ 11+

மகாதேவர்ஸ்ரீ கோயில்‌ 4

காளாபிடாரி ஸ்ரீ கோயில்‌ 2

பிடாரி ஸ்ரீகோயில்‌ 2+

பிடாரி கோயில்‌ 8

அய்யன்கோயில்‌ 5+

காடுகாள்கோயில்‌ 2

துர்க்கையார்கோயில்

 

சேட்டைக்கோயில்‌ 1

22 ஊர்களில்குறைந்தபட்சம்ஒரு கோயிலாவது உள்ளது.இவற்றுள்‌ 14 ஊர்களில்ஒன்றுக்கு மேற்பட்ட கோயில்கள்உள்ளன. எட்டு ஊர்களில்ஸ்ரீ கோயில்அல்லது ஸ்ரீ கோயில்கள்என்று மட்டும்காணப்படுகிறது குஞ்சையில்மூன்றும்.சோழபுரத்தில்ஐந்தும்‌. மற்ற 14 ஊர்களில்ஸ்ரீ கோயில்என்றசொல்நான்கு ஊர்களில்இடம்பெறவில்லை; பத்து ஊர்களில்பிற கோயில்களுடன்அல்லது பிற கடவுளர்களுடன்இணைத்துக்கூறப்பட்டுள்ளது.

பத்து ஊர்களில்பிடாரி ப்ரீ கோயில்அல்லது பிடாரிகோயில்காணப்படுகிறது.இரண்டு ௪ளர்களில்பிடாரி கோயில்மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. மேலும்மூன்று பிடாரிகோயில்கள்ஓரே ௪௭ரில்இருந்துள்ளன (எண்‌ 31). ஐந்துஊர்களில்அய்யன்கோயில்கள்இருந்துள்ளன. எல்லாஇடங்களிலும்இக்கோயில்பிற கோயில்களுடன்இணைத்தேசொல்லப்பட்டுள்ளது. காளாபிடாரி ஸ்ரீ கோயிலும்காடுகாள்கோயிலும்இரண்டிரண்டு ஊர்களில்இருந்துள்ளன.துர்க்கையார்கோயிலும்சேட்டைக்கோயிலும்ஓர்ஊரில்மட்டுமே இருந்துள்ளன.பல உஊளர்களில்கோயிலோடு சேர்த்துத்திருமுற்றம்(கோயிலின்முன்உள்ள திறந்த வெளி) குறிப்பிடப்பட்டுள்ளது.

இது இறையிலி நிலமாகும்‌.சுடுகாடு தஞ்சையின்‌ 19 ஊர்களிலும். சோழபுரத்தின்‌ 5 ஊளர்களிலும்ஒன்று அல்லது இரண்டு சுடுகாடுகள்இருந்துள்ளன. எனவே மொத்தம்‌ 40 ஊர்களில்‌ 24 ஊர்கள்மட்டுமே சுடுகாடுகளைப்பெற்றிருந்தன. இச்சுடுகாடுகள்ஊரின்பரப்பளவு வீதத்தைப்பொறுத்து அமைந்திருந்தன வாகத்தெரியவில்லை. ஏனெனில்‌ 2,5 எண்ஊர்கள்‌ 51 வேலிக்கும்அதிக நிலப்பரப்பை உடையன. எனினும்‌, சுடுகாடுகள்அவ்வுர்களில்இல்லை. ஆனால்‌ 10, 30 எண்ஊர்கள்‌ 10 வேலிக்கும்குறைவான பரப்புடைய சிற்றூர்கள்‌. இவை சுடுகாடுகளைப்பெற்றிருந்தன . சுடுகாடுகளைக்கொண்ட 24 ஊர்களில்‌ 8 ஊர்களில்வேளாளருக்கும்பறையருக்கும்தனித்தனியான சுடுகாடுகள்சொல்லப்பட்டுள்ளன. இதனால்அவ்வுர்ச்சமூகத்தில்வேளாளரும்பறையரும்ஒதுங்கி வாழ்ந்தனர்என்பதைக்காட்டுகிறது. இந்த எட்டு ஊர்களும்முக்கோணம்இட்டு காட்டப்பட்டுள்ளன . பறைச்சேரியினைக்கொண்டிருந்த எல்லா அளர்களிலும்பறைச்சுடுகாடு இருந்ததாக நம்மால்கூற இயலவில்லை. தீண்டாச்சேரி இருந்த இரண்டு ஊர்களிலும்ஈழச்சேரி இருந்த ஆறு ஊளர்களிலும்அவர்களுக்கெனத்தனிச்சுடுகாடுகள்இருந்தன என்று கல்வெட்டு. கூறவில்லை. 7 ஊர்களில்கம்மாளர்கள்குடியிருப்பு உள்ளதைக்குறித்து அரச ஆணையில்குறிக்கப்பட்டாலும்எந்த ஊரிலும்அவர்களுக்குத்தனியாகச்சுடுகாடு இருத்தமை பற்றிக்குறிப்பு இல்லை. பிறவகை இறையிலி நிலங்கள்மேலே ஆய்வு செய்யப்பட்டவைகளுடன்கீழ்க்கண்டவைகளும்இறையிலியாக அவ்வவ்கிராமப்பகுதியில்கூறப்பட்டுள்ளன . இவ்விவரங்கள்அரச ஆணையில்கூறாது விடுபட்டுள்ளன. அவையாவன : ஐந்து ஊர்களில்ஊர்க்களம்தானியம்அடிக்கும்களம்‌, oor எண்கள்‌ : 21, 26, 27, 29, 32) ; நான்கு களர்களில்கொட்டகாரம்கூனியக்களஞ்சியம்‌, எண்கள்‌ : 23, 25, 30, 32) ; ஓர்ஊளரில்கன்று மேய்பாழாய்க்கிடந்த நிலம்மேய்ச்சல்நிலம்‌, எண்‌ :28) ; இரண்டு ஊர்களில்வழி (எண்‌ : 15, 28) ; மூன்று ஊர்களில்திருநந்தவனம்‌ (எண்கள்‌ 17, 29, 39) ; மற்றும்ஓர்கரில்இருந்த கற்கிடை (கற்களின்குவியல்‌, எண்‌ : 21). தரவுகளின்நம்பகத்தன்மை மேற்கூறப்பட்ட அனைத்துச்சான்றுகளையும்பகுப்பாய்வு செய்வதற்கு முன்இவற்றின்நம்பகத்தன்மையைக்கண்டறியவேண்டும்‌. மேலும்‌, முடிவுகளை எவ்வளவு தூரம்பொதுமைப்படுத்தலாம்என்பதையும்கருத வேண்டும்‌. முதலில்‌, அரச ஆணை, தனித்தனி சர்விவரணை ஆகியவற்றுக்கிடையே உள்ள முரண்பாடு பற்றிக்கவனிக்க வேண்டும்‌. ஏழு வகையான இறையிலி நிலங்களை அரசாணை தெரிவிக்கின்றது. ஆயினும்‌, இவை அனைத்தும்ஒவ்வொரு ஊளரினையும்பற்றிக்குறிப்பிடும்பகுதியில்இடம்பெறவில்லை. எடுத்துக்காட்டாக மொத்தம்‌ 40 ஊர்களில்‌ 6 ஊர்களில்மட்டுமே கம்மாணச்சேரி கூறப்பட்டுள்ளது. இதற்கு மாறாக, அரச ஆணையில்தெரிவிக்கப்பட்ட ஏழு வகை இறையிலி நிலங்கள்அல்லாத பிற வகை இறையிலி நிலங்களும்ஊர்களின்விளக்கப்பகுதியில்சொல்லப்பட்டுள்ளன . எனவே அரசாணை யில்குறிப்பிடப்பட்ட இறையிலி நிலங்கள்எடுத்துக்காட்டாகச்சொல்லப்பட்டன என்று தெரிகிறது. மேலும்ஒவ்வொரு ஊளரிலும்இறையிலி நிலங்கள்குறித்துத்தரப்படும்விவரங்கள்அவ்வவ்வுரில்நிலவிய உண்மை நிலைமைகளைப்பிரதிபலிப்ப. தாகக்கொள்ள வேண்டும்என்றாகிறது. இறையிலி நிலங்கள்பற்றிய விவரங்கள்ஊருக்கு ஊர்மாறுபடுகின்றன என்ற உண்மையையும்இங்கே குறிப்பிட வேண்டும்‌. இதுவரை நாம்கண்ட முடிவுகளை எந்த அளவு பொதுமைப்படுத்த முடியும்‌? இக்கேள்விக்கு விடைகாண வேண்டின்அந்த 40 ஊர்களின்வருவாய்த்தீர்வை மற்றும்அவவுர்களின்இடப்பரவல்ஆகியவற்றை இங்கு ஆய்வு செய்ய வேண்டும்‌. தஞ்சையின்‌ 26 களர்களில்நிலவரி அல்லது காணிக்கடன்வேலிக்கு! 95 - 100 கலம்என்ற குறுகிய விகித எல்லைக்குள்உள்ளது. ஓர்களரில்மட்டுமே இத்தீர்வை 1 வேலிக்கு 77 கலம்நெல்லாக விதிக்கப்பட்டுள்ளது. எனினும். சோழபுரத்தில்கூறப்பட்ட 7 ஊர்களில்காணிக்கடன்தீர்வை வேலிக்கு 16 கலத்திலிருந்து 52 கலம்வரை மாறுபடுகிறது. தஞ்சையின்ஊளர்களையும். சோழபுரத்தின்ஊர்களையும்கூர்ந்து நோக்கினால்வேலிக்கு 95 கல நெல்லுக்கு மேல்விதிக்கப்பட்ட ஊரர்நிலங்கள்யாவும்நெல்விளையும்இரு பூ (இரு போகம்‌) நிலங்களாகும்‌. ஒரு வேலிக்கு சுமார்‌ 50 கலம்வசூலிக்கப்படும். சோழபுரத்தின்இரண்டு ஊர்களில்ஒரு பூ மற்றும்இரு பூ நிலங்கள்கலந்து கிடந்தன. 30 கலத்துக்குக்கீழ்ப்பட்ட தீர்வை வழங்கிய 5 உஊரர்களில்வரகு விளைச்சல்இருந்தது. இதிலிருந்து ௧. சோழபுரத்தின்‌ 7 ஊர்களின்இயற்கைச்சூழலும்தஞ்சை ஊர்களின்சூழலும்வேறுபட்டவை என்று தெரிகிறது. முப்பத்து மூன்று ஊர்களின்இடப்பரவல்நிலப்படம்‌ 3இல்காட்டப்பட்டுள்ளது. இப்படத்தில்தஞ்சைக்கல்வெட்டில்கூறப்பட்டுள்ள 26 ஊர்கள த1, 2, 3, 4, 6 என்றும். சோழ புரத்தின்‌ 7 ஊர்கள்3, 7 என்றும்காட்டப்பட்டுள்ளன . மீதமுள்ள தஞ்சையின்‌ 8 ஊர்களில்நெல்லுக்கு மாறாகப்பொன்னாக வரி விதிக்கப்பட்டுள்ளது. இதில்மூன்று ஊர்கள்நகரங்களாகும்‌. மற்றவை இம்மூன்று நகரங்களில்ஒன்றுடன்இணைந்த அஉளர்களாகும்‌. இங்கு வரிவீதம்‌ 1 வேலிக்கு 5.32 கழஞ்சு பொன்னிவிருந்து 9.92 கழஞ்சு பொன்வரை உள்ளது. இந்த 8ஊர்களும்நிலப்படத்தில்1, 4, 5 என்ற பகுதிகளாகக்காட்டப்பட்டுள்ளன. இவ்வுர்களின்அமைவிடம்மூலமே இவவுர்களின்நிலத்தன்மையை ஊகிக்க முடியும்‌. மேற்கூறப்பட்ட 40 ஊர்களும்கீழ்க்கண்ட மூன்று வகைகளில்வேறுபட்டுள்ளன: (1) தஞ்சைக்கல்வெட்டு ஊர்கள்பெரும்பாலும்சமமான செழிப்புத்தன்மை கொண்டவை எனினும்மாறுபட்ட இயற்கைச்சூழல்கொண்ட கஊரர்களைக கொண்டிருந்தன. (2) இவ்வூர்கள்சோழ மண்டலத்தில்நன்கு பரவிக்கிடந்தன. (3) இவ்வூர்களின்பரப்பளவு ஒன்றுக்கொன்று வேறுபட்டுள்ளன. எனவே, இங்கு முடிவுகள்சோழமண்டல ஊர்களை, குறிப்பாக சோழமண்டலத்து மையப்பகுதி ஊர்களைப்பிரதிபலிப்பதாகக்கொள்ளலாம்‌. எப்படியும்இத்தரவுகளில்ஒரு சார்புத்தன்மை இல்லை எனலாம்‌. பிரமதேய ஊர்கள்ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பதைக்குறிக்க வேண்டும்‌. அரசரின்கொடைகளால்ஏற்படுத்தப்பட்ட இவை சிறப்புச்சலுகைகளைப்பெற்ற ளர்கள்‌, பொருளாதார வளர்ச்சி மிக்க பகுதியுமாகும்‌. எனவே, பிரமதேயங்களை இவ்ஆய்விலிருந்து விலக்கியதால்ஆய்வு முடிவுகளில்குறைபாடு ஏதும்ஏற்படாது. மாறாக, அக்கால இயல்பான ஊர்களின்நிலைமைகளை அறிய முற்படும்இவ்ஆய்விற்கு கூடுதல்வலிவு கிடைக்கும்‌. பகுப்பாய்வு பல உஎளர்களில்பலவேறு குடியிருப்புப்பகுதிகள்இருந்தமையை நாம்காண்கிறோம்‌. அரசாணையில்தரப்பட்ட குடியிருப்புப்பகுதிகள்உளர்நத்தம்‌ (ஊரிருக்கை), கம்மாணச்சேரி மற்றும்பறைச்சேரி என்பன. வண்ணாரச்சேசரி, ஈழச்சேரி, தீண்டாச்சேரி, தலைவாய்ச்சேரி மற்றும்தளிச்சேரி ஆகிய குடியிருப்புப்பகுதிகளும்அமைந்திருப்பதிலிருந்து அவ்வவ்ரில்பல வகுப்பார்உண்மையாகவே வாழ்ந்திருந்தனர்என்று அறியலாம்‌. மேற்கண்ட வகுப்பாரது பெயர்களிலிருந்து இவர்கள்பல்வேறு தொழில்களில்ஈடுபட்டி ருந்தனர்என்பதும்தெளிவு. அதாவது வேளாண்மை, கருவிகள்செய்தல்‌, வெளுத்தல்‌, கள்இறக்குதல்மற்றும்இதுபோன்ற பல்வேறு தொழில்களில்ஈடுபட்டி ருந்தனர்‌. சிற்சில வகுப்பார்சேர்ந்து வாழ்ந்த இவ்வூர்களில்சாதி அடிப்படையில்தொழில்பகிர்வு இருந்தது என்பது இதிலிருந்து விளங்கும்‌. ஒரு வகையில்இச்சான்றுகள்இந்திய அஉர்கள்குட்டிக்குடியரசுகளாக இருந்தன; அவற்றுள்வேளாண்மையும்கைவினைத்தொழிலும்பிணைந்து சமூக உற்பத்திக்கு வழி வகுத்தன என்ற கொள்கைக்கு உரம்கூட்டுகின்றன . உளரில்அனைத்து வகையான குடியிருப்பு வளாகங்களும்அமைந்திருக்கவில்லை என்னும்முக்கிய உண்மை ஈண்டு நோக்கத்தக்கது. எடுத்துக்காட்டாக, கம்மாணச்சேரி சில ஊர்களில்மட்டுமே இருந்துள்ளது; இவ்வாறே பறைச்சேரியும்‌; ஆராய்ந்த 40 ஊர்களில்பாதி ஊர்களில்மட்டுமே இருந்துள்ளது... மாறாக ஊர்நத்தம்அல்லது ஊரிருக்கை தான்பல ஊர்களில்இருந்த ஒரே குடியிருப்புப்பகுதியாகும்‌. கோயில்கள்‌, சுடுகாடுகளின்பரவல்தன்மையும்மேலே கண்ட கருத்தையே நமக்குத்தெளிவுறுத்துகின்றது. பல ஊர்களில்வாழ்ந்த மக்கள்வேறு ஒரு ஊரிலிருந்த கோயிலிலோ அல்லது சுடுகாடுகளிலோ கூடி முறையே நன்மை தீமைச்சடங்குகளைச்செய்திருக்க வேண்டும்‌. மேற்சென்ற கருதல்நம்மைக்கீழ்க்கண்டவாறு சொல்லத்தாண்டுகிறது. சமூகப்பெருக்கம்நிலை .பெற்ற முதன்மை மையங்களாகக்கிராமங்கள்விளங்கவில்லை. மேலும்அவற்றுக்குள்ளேயே கிராம மக்களின்இயக்கம்முடங்கி -யிருக்கவில்லை; கிராமத்தைவிட ஒரு பெரிய நிலக்கூறிலேயே சமூகப்பெருக்கம்நடை பெற்றிருக்கக்கூடும்‌. மற்றுமொரு கருதல்நீர்ப்பயன்பாடு ஆகும்‌. மழை நீரைத்தேக்கி வைக்க உயர்ந்த கரைகள்கொண்ட குளங்கள்பெரும்பாலான உஊர்களில்இருந்துள்ளமை. வேளாண்மை ஊர்கள்எனினும்குளங்கள்பற்றிய தகவல்களைக்கூர்ந்து நோக்கும்பொழுது இக்குளங்களில்சில வெறும்குடிநீர்அல்லது நீராடும்குளங்களாகவே இருந்தன; பாசனத்துக்குப்பயன்படவில்லை எனத்தெரிகிறது. மேலும்பாதி ஊர்களில்அவற்றினூடே சென்ற வாய்க்கால்கள்பிற ச௪ளர்களுக்குப்பாசனத்தைக்கொடுத்தன; கீழுள்ள' வேறு நாட்டுக்குக்கூட அவை பாய்ந்தன. ஆகவே நீர்ப்பங்கீட்டின்பொருட்டு ஒர்ஊரின்மக்கள்பிறிதொரு ௨ர்மக்களோடு மட்டுமன்றி, பக்கத்து நாட்டு மக்களுடனும்இணைந்து செயல்பட்டி GSS வேண்டும்‌. ஆய்ந்தவற்றில்பாதி ஊர்களில்மட்டுமே ஆறு அல்லது வாய்க்கால்கள்ஊரின்குறுக்கே செல்கின்றன. இதனால்பிற ஊர்களில்எவ்வித நீர்வழிகளும்இல்லை என்று கூற இயலாது. ஊர்களின்அல்லது நாடுகளின்எல்லைகளாக விளங்கும்வாய்க்கால்களோ அல்லது ஆறுகளோ பொதுவாகவரிவிலக்களிக்கப்படுவதில்லை. ஆகவே, நீர்ப்பயன்பாட்டு முறைகள்ஊரைவிடப்பெரிய நிலப்பரப்பில்வாழ்ந்த மக்களின்கூட்டுறவினால்வேளாண்மை உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது எனக்காட்டும்‌. அதாவது சமூகப்பெருக்கம்உளரைவிட பரந்துபட்ட நிலப்பகுதியில்நடைபெற்றது என்பது உறுதியாகிறது. முடிவாக, நிர்வாக அலகு என்ற வகையில்கிராமத்தின்முக்கியத்துவத்தைப்புறக்கணிக்க முடியாது.3£ ஆயினும்சமூகப்பெருக்கத்தைப்பொறுத்தவரை மெயினும்‌, மார்க்சும்இவர்கள்வழி வந்த வரலாற்றாசிரியரும்கருதியதற்கு மாறாக சோழராட்சியின்இடைப்பகுதியில்சோழமண்டலத்திலிருந்த கிராமங்கள்தன்னிறைவு பெற்றுத்தனித்தியங்கவில்லை என்பது மேற்கண்ட நாற்பது ஊர்கள்பற்றிய உண்மைகளிவிருந்து போதரும்‌.ப்ப்ஆஆ

கல்வெட்டுக்களை வரலாற்று ஆய்வுக்குப்பயன்படுத்துவதில்முந்தைய வரலாற்றாசிரியர்கள்எந்த முறையையும்பின்பற்றியதாகத்தெரியவில்லை. இத்தகைய நெறிசாராப்போக்கினால்தென்னிந்திய வரலாற்றுப்படைப்புக்களில்தேக்கம்ஏற்பட்டுவிட்டது. இந்தத்தேக்கத்தை நீக்கப்புதிய அணுகு முறைகள்கையாளப்பட வேண்டும்‌. இந்த நோக்கத்தில்சோழர்காலக்கல்வெட்டுக்களில்காணப்படும்ஆஅள்பெயர்‌, பட்டம்‌, பதவிநிலைகளைப்பற்றிய தரவுகளைத்தொகுத்துப்புள்ளியியல்முறையில்ஆராயும்ஒரு திட்டம்‌ 1973-75இல்தோக்கியோ ஆசிய, ஆஃப்ரிக்க மொழிகள்மற்றும்பண்பாடுகள்ஆய்வு நிறுவனத்தில்மேற்கொள்ளப்பட்டது.33 சோழர்காலத்தின்சமூக அமைப்பைப்பற்றியும்அக்கால நிர்வாக முறையைப்பற்றியும்கண்டறிதல்இத்திட்டத்தின்முதன்மை நோக்கங்களாக இருந்தன. இத்திட்டத்தின்வழி கண்‌ .டறிந்த சில முக்கிய முடிவுகள்மட்டும்‌, சுருக்கமாகக்கீழே தரப்படுகின்றன . சோழராட்சியின்முக்கிய இரு மண்டலங்களான சோழ மண்டலம்‌ (தோராயமாக, தஞ்சாவுர்‌, திருச்சிராப்பள்ளி, தென்ஆர்க்காடு மாவட்டங்கள்‌), ஜெயங்கொண்ட சோழ மண்டலம்‌ (செங்கல்பட்டு, வட ஆர்க்காடு, சித்தூர்‌, நெல்லூர்மாவட்டங்கள்‌) ஆகிய நிலப்பகுதிகளிலிருந்து தொகுத்து பாடத்தோடு வெளியிடப்பட்ட 3543 கல்வெட்டுக்கள்இத்திட்டத்துக்கு அடிப்படைச்சான்றுகளாகப்பயன்படுத்தப்பட்டன. இக்கல்வெட்டுக்களிலிருந்து மொத்தம்‌ 9590 பெயர்கள்தொகுக்கப்பட்டு அவை முதலில்துளைபிரி அட்டைகளைக்‌ (hole-sort cards) கொண்டும்‌, இரண்டாம்நிலையில்கணிப்பொறி உதவி கொண்டும்பகுப்பாய்வு செய்யப்பட்டன.

above pages are from 6 chapter up to pages 70

 

 

No comments:

Post a Comment

இலக்கு இதழின் கட்டுரைகள்

செய்தியை சார்ந்த அலசல்